Post No. 13.557
Date uploaded in London – —18 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் – 1
ச. நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் கதை ஓட்டத்தில் ஏராளமான வரங்களைப் பற்றிய விவரங்களைக் காண்கிறோம்.
வரங்களைப் பற்றி சுமார் 81 விவரங்கள் தரப்படுகின்றன.
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கும் தொடர் இது.
பால காண்டத்தின் இரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘பிரம்மதேவரின் வரவு’ என்ற ஸர்க்கம்.
வேடன் ஒருவன் கிரௌஞ்ச மிதுனத்தில் காமத்தால் மயங்கி இருந்த ஒன்றை கொன்று விட்டான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி முனிவார்
“மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: சமா |
யத் க்ரௌஞ்சமிதுனாதேக,அவதீ: காம மோஹிதம் ||
என்று கூறுகிறார்.
மாநிஷாத – ஶ்ரீநிவாஸ!
க்ரௌஞ்ச மிதுனாம் – ராக்ஷஸ மிதுனத்தில்
காம மோஹிதம் – காமத்தால் புத்திகெட்ட
ஏகம் – ஒருவனை
அவதீ: – கொன்றீர்
யத் – அதனால்
த்வம் – நீர்
சாஸ்வதீ – நீடித்த
சமா: – ஆண்டுகளில்
ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை
அகம: – அடைந்தீராக
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 4
இது என்ன, என் வாயில் சாபம் போல இது வந்துள்ளதே என்று சிந்திக்கிறார் அவர். ஆனால் அதே சமயம் பாதங்களோடமைந்த எழுத்து ஒத்த ஸ்லோகமாக அமைந்துள்ளதே என்றும் அவர் நினைக்கிறார்.
பிரம்மா அவரை நேரில் பார்த்து, “ நீர் செய்தது ‘ஸ்லோகமே. ஶ்ரீ ராமரது சரித்திரத்தை முழுதுமாக செய்யும்” என்று கூறி அருள்கிறார்.
அத்தோடு மேலும் கூறுகிறார்:
குரு ராமகதாம் புண்யாம் ஸ்லோகேஷு மனோரமாம் |
புண்யாம் – புண்ணியமான
ராமகதாம் – ஶ்ரீ ராம கதையை
மனோரமாம் – மனதிற்கு இனிமையான
ஸ்லோகபத்தாம் – ஸ்லோகங்களால் அமைந்ததாக
குரு – செய்வீர்
யாவத் ஸ்வாஸ்யந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே |
தாவத்ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி |\
மஹீதலே – உலகத்தில்
கிரய: – மலைகளும்
சரிதஸ்ச – நதிகளும்
யாவத் – எதுவரை
ஸ்தாஸ்யந்தி – இருக்குமோ
தாவத்- அது வரை
ராமாயண கதா – ராமாயண கதை
லோகேஷு – உலகத்தில்
ப்ரசரிஷ்யதி – விளங்கப் போகிறது
யாவத்ராமஸ்ய ச கதா த்வத்க்ருதா ப்ரசரிஷ்யதி |
தாவத்தூதர்வமதஸ்ச த்வம் மல்லோகேஷு நிவத்ஸ்யஸி ||
ச – மேலும்
த்வத்க்ருதா – உம்மால் சொல்லப்பட்ட
ராமஸ்ய – ஶ்ரீ ராமருடைய
கதா – கதை
யாவத் – எதுவரையில்
ப்ரசரிஷ்யதி – விளங்குகிறஹோ
தாவத் – அதுவரையிலும்
மல்லாகேஷு – என்னுடைய உலகங்களில்
அத: ஊதர்வ: – கீழே மேலே
ச – எங்கும்
த்வம் நிவத்ஸ்யஸி – நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர்
பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 36,37,38
இவ்வாறு பிரம்மா வால்மீகி முனிவரைப் பார்த்துக் கூறுகிறார்.
இந்தக் கூற்று வரமாக அளிக்கப்படவில்லை என்றாலும் கூட ஆசீர்வாதமாக அளிக்கப்படும் ஒரு வரமாகக் கருதலாம்.
பிரம்மாவின் இந்த வசனத்தைக் கேட்டு ராமாயணத்தை வால்மீகி இயற்றினார்.
**