
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,583
Date uploaded in London – 25 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 7

அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும் கும்பகோணத்தில் அற்புத சிற்பம்!
அனுமனை வீணையுடன் காட்டும் சிற்பம் ஒன்று கும்பகோணம் ராமசாமி கோவிலில் இருக்கிறது ; ராம நாமம் இசைக்கும் அனுமன் அதை ராகத்துடன் பாடி இருப்பதில் வியப்பில்லை. சிலர் நாரதருக்கும் அனுமனுக்கும் இசை பற்றி விவாதம் நடந்ததாகவும் அப்போது அனுமன் வீணை வாசித்தவுடன் பாறையே உருகிப்போயிற்று என்றும் சொல்கிறார்கள் இந்தக் கதை பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட 27 சர்க்கங்களைக் கொண்ட அத்புத ராமாயணத்தில் அனுமன்- நாரதன் பேரில் உள்ளது .
உண்மையில் அது அகத்தியருக்கும் ராவணனுக்கும் நடந்த வீணைப்போட்டி
; 700 ஆண்டுகளுக்கு முன்னர் உச்சிமேற் புலவர் கொள்
, மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பார்ப்பான் நச்சினார்க்கினியர் எழுதியது .
இராவணன் அகத்தியர் வீணைப்போட்டி : ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை என்ற எனது 2014-ம் ஆண்டுக்க கட்டுரையில் இதே பிளாக்கில் உள்ளது.
இந்த சிற்பம் பற்றி வெளியான ஆங்கிலக் கட்டுரையில் அனுமனுக்கு இசையில் உள்ள புலமையை தியாகராஜரும் அவருக்கு முன்னர் புரந்தரதாசரும் பாடியிருப்பதை விளக்கியுள்ளார் கட்டுரை ஆசிரியர்; . தமிழில் முதல் முதலில் வீணை பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை என்ற வரிகளில் வருகிறது ; கும்ப கோணம் கோவில் சிற்பமும் சுமார் 500 ஆண்டு வரலாறு உடையதுதான் ! ஆக இது மேலும் ஆ ராய ப்படவேண்டிய விஷயம் .
xxxxx

அனுமன், சிவ பெருமானே ! மேலும் சில சான்றுகள் !
அனுமன் சிவனின் அவதாரம் என்று துளசிதாசர், அருணகிரிநாதர், ஏக நாதர் ஆகிய மூவரும் பாடியதை முன்னரே கண்டோம். அவர்கள் மட்டுமின்றி தியாக ராஜரும், ஆவார்களும் பாடியது டாக்டர் G.T . கோபால கிருஷ்ண நாயுடு எழுதிய நூலில் உள்ளது.
எந்த ரானி எந்த போனி எந்த கிருதியில் தியாகராஜர் சிவனே அனுமன் என்கிறார்.
ப. எந்த ரானி தன(கெ)ந்த போனி நீ
செந்த விடு3வ ஜால ஸ்ரீ ராம
அ. அந்த(கா)ரி நீ செந்த ஜேரி
ஹனுமந்துடை3 கொலுவ லேதா3 (எ)
ச1. ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 லக்ஷ்மண
வேஷியை கொலுவ லேதா3 (எ)
ச2. ஸி1ஷ்டுடு3 மௌனி வரிஷ்டு2டு3 கொ3ப்ப
வஸிஷ்டு2டு3 ஹிதுடு3கா3 லேதா3 (எ)
ச3. நர வர நீகை ஸுர க3ணமுலு
வானருலை கொலுவக3 லேதா3 (எ)
ச4. ஆக3(மோ)க்தமகு3 நீ கு3ணமுலு ஸ்ரீ
த்யாக3ராஜு பாட3க3 லேதா3 (எ)
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
நமன் பகைவன் உனதண்மையடைந்து
அனுமனாகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
1. சேடன், சிவனுக்கு அணிகலன், இலக்குவனின்
வேடமணிந்து சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
2. அறிஞன், முனிவர்களில் சிறந்தோன், உயர்
வசிட்டன் நல்லதுரைப்போனாக இல்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
3. மனிதரில் உத்தமனே! உனக்காக வானோர்கள்
வானரராகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
4. ஆகமங்களுரைக்கும் உனது குணங்களை
தியாகராசன் பாடவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!— தியாகராஜர்
Xxxxx

நிற்க . அனுமனை சாலீஸாவிலிருந்து மேலும் சில ஸ்லோகங்களைக் காண்போம்.
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 1
மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
கஞ்சன வரண விராஜ ஸுவேஶா ।
கானந குண்ட³ல குஞ்சித கேஶா ॥ 4 ॥
ஹாத²வஜ்ர ஔ த்⁴வஜா விராஜை ।
கான்தே² மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ॥ 5॥
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா ।
ராமலக²ன ஸீதா மன ப³ஸியா ॥ 8॥
ஸூக்ஷ்ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா ।
விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா ॥ 9 ॥
பீ⁴ம ரூபத⁴ரி அஸுர ஸம்ஹாரே ।
ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே ॥ 1௦ ॥
லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே ।
ஶ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே ॥ 11 ॥
Xxxxx
12 முதல் 17 வரையுள்ள ஸ்லோகங்களைக் காண்போம்
ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ (ஈ) ।
தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ ॥ 12 ॥
ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஶகா³வை ।
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வை ॥ 13 ॥
ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா ।
நாரத³ ஶாரத³ ஸஹித அஹீஶா ॥ 14 ॥
யம குபே³ர தி³க³பால ஜஹாம் தே ।
கவி கோவித³ கஹி ஸகே கஹாம் தே ॥ 15 ॥
தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா ।
ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா ॥ 16 ॥
தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா ।
லங்கேஶ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா ॥ 17 ॥
இந்த வரிகளில் அனுமானைப் புகழும் துளசிதாசர், அவன் சுக்ரீனுவனுக்கு அரசாட்சியை வாங்கித் தந்ததாகவும் அதை சுக்ரீவன் ஏற்றதையும் புகழ்கிறார். உலகிலேயே முதல் எக்ஸைல் கவர்ன்மென்ட் அமைந்தது இந்தியாவில்தான் . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய மண்ணில் இருந்தவாறே விபீஷணனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. ராமாயணத்தில் காணும் பல புதுமைகளில் இதுவும் ஒன்று .
அதற்கு முன்னதாக, அனுமனை துளசிதாசர் பரதனுடன் ஒப்பிடுவதாகும் ; கம்ப ராமாயணத்தில் குகன் வாயின் வழியாகவும் பரதன் புகழப்படுகிறான் ; ஆயிரம் ராமர்களும் பரதனுக்கு ஈடாக மாட்டான் என்கிறான் கம்பன். அதை நினைவு கூறும் வகையில் இந்த பரதன் வரிகள் உ ள்ளன. துளசிதாசரையும் அதையே சொல்கிறார். ஏனெனில் ஆதிசேடனுக்கு ஆயிரம் தலைகள் . ஆதி சேடன் உன் புகழ் பாடுகிறான் என்றால் 1000 தலைகள் / 1000 பேர் உன் புகழ்பாடு கின்றனர் என்று பொருள்.
சனகர் தலைமையிலுள்ள நால் வரும், எண்திசைக் காவலரும் உண்னைப் புகழ்கின்ற்னர் என்கிறார்.
xxxxxx

பொருள்
ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து பரதனைப் போல நீ உடனுறை என்றார்!
(12) ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன் பெருமையைப் புகழ்வதாய் உன்னைக் கட்டிஅணைத்து சொன்னார்!
(13) சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும் ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்
(14) எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும் உன் பெருமை தனை சொல்ல முடியுமோ?
(15) சுக்ரீவனுக்கு அரசை அளித்திட ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!
(16) உன் அறிவுரையை வீடணன் கொண்டதால் அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்! (17)
Xxxx
(குகன் பரதனைப் புகழ்ந்ததை நினைவு கூறுவோமாக)
தாய் உரை கொண்டு, தாதை
உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
ஆவரோ? தெரியின் அம்மா
To be continued………………………………………
Tags– ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 7, அனுமனுக்கு வீணை,
வாசிக்கத் தெரியும், கும்பகோணத்தில் அற்புத சிற்பம்