

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,587
Date uploaded in London – 26 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
காந்திஜி ஒரு ஹனுமான்: ரமணர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 8
அநுமன் பற்றி முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.காந்திஜியை அனுமானுக்கு உவமித்து ரமணர் சொன்னதை காலஞ்சென்ற பேராசிரியர் கே. சுவாமிநாதன் எழுதுகிறார்
Bhagavan often equated Gandhi with Hanuman, the humble and heroic servant of Sri Rama. He once said: We say that Hanuman is chiranjivi (immortal). It does not mean that a certain monkey goes on living forever and ever. It only means that there will always be on earth someone who serves Rama as your Gandhi does now.
பகவான் ரமணர் அடிக்கடி காந்தியையும் அனுமனையும் ஒப்பிட்டுப் பேசுவார். பணிவும் வீரமும் உடையவன் அனுமன். அனுமான் ஒரு சிரஞ்சீவி — என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்— என்று நாம் சொல்கிறோம் இதன் பொருள் என்ன தெரியுமா? ஏதோ ஒரு குரங்கு எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. இப்போது நாம் காணும் உங்கள் காந்திஜியைப் போல யாரோ ஒருவர் இந்த பூமியில் ராமபிரானுக்கு சேவை செய்து கொண்டிருப்பார் .
xxxx

எனது கருத்து
அஸ்வத்தாமா பலீர் வியாஸோ ஹனுமான் ச விபீஷணஹ
க்ருப பரசுராமஸ் ச சப்த்தை தே சிரஞ்ஜீவினஹ
“Aswathama Balir Vyaso Hanumanash cha Vibhishana Krupacharya cha Parashuramam Saptatah Chirjeevanam”
“अश्वत्थामाबलिर्व्यासोहनुमांश्च विभीषण:कृपश्चपरशुरामश्च सप्तैतेचिरंजीविन:।”
Which means that Aswathama, King Mahabali, Veda Vyasa, Hanuman , Vibhishana , Krupacharya and Lord Parashuram are death-defying or imperishable personalities.
நல்ல விளக்கம் ! இந்துக்கள் 7 புராண புருஷர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தினமும் காலையில் ஸ்லோகம் சொல்லுவார்கள்
அஸ்வத்தாமா பலீர் வியாஸோ ஹனுமான் ச விபீஷணஹ
க்ருப பரசுராமஸ் ச சப்த்தை தே சிரஞ்ஜீவினஹ
அஸ்வத்தாமன்,பலி சக்ரவர்த்தி, வியாஸர் ,ஹனுமான், விபீஷணன், பரசுராமன் சிரஞ்சீவிகள் என்று.
அதன் உண்மைப்பொருளை ரமணர் விளக்கிவிட்டார்.
xxxxx

நிற்க ஹனுமான் சாலீஸாவிலிருந்து அடுத்த ஐந்து கண்ணிகளை/ ஸ்லோகங்களை எடுத்துக் கொள்வோம்:
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 1
மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
கஞ்சன வரண விராஜ ஸுவேஶா ।
கானந குண்ட³ல குஞ்சித கேஶா ॥ 4 ॥
ஹாத²வஜ்ர ஔ த்⁴வஜா விராஜை ।
கான்தே² மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ॥ 5॥
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா ।
ராமலக²ன ஸீதா மன ப³ஸியா ॥ 8॥
ஸூக்ஷ்ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா ।
விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா ॥ 9 ॥
பீ⁴ம ரூபத⁴ரி அஸுர ஸம்ஹாரே ।
ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே ॥ 1௦ ॥
லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே ।
ஶ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே ॥ 11 ॥
ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ (ஈ) ।
தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ ॥ 12 ॥
ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஶகா³வை ।
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வை ॥ 13 ॥
ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா ।
நாரத³ ஶாரத³ ஸஹித அஹீஶா ॥ 14 ॥
யம குபே³ர தி³க³பால ஜஹாம் தே ।
கவி கோவித³ கஹி ஸகே கஹாம் தே ॥ 15 ॥
தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா ।
ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா ॥ 16 ॥
தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா ।
லங்கேஶ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா ॥ 17 ॥
18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
18. ஈராயிரம் யோசனைக்கு அப்பால் இருந்த சூரியனைத் தங்கள் இனிய பழம் என்று கருதி அதை விழுங்கச் சென்றுவிட்டீர்கள்
19.ராமச்சந்திர பிரபுவின் கணையாழியை — மோதிரத்தை — உங்கள் வாயில் வைத்துக்கொண்டு சமுத்திரத்தை எளிதில் கடந்தத்தில் வியப்பதற்கு ஒன்றுமே இல்லை.
20. உலகத்தில் எவ்வளவு கடினமான காரியங்கள் இருந்தாலும், தங்கள் அருளினால் அவை எளிதாகவே நடந்துவிடுகின்றன.
21. நீங்கள் ராமபிரானின் வாயிற்காப்பாளர்; ராமனுடைய அருளை பெறுவதற்கு முதலில் உங்கள் அருளைப் பெறவேண்டும்
22.தங்களுடைய பாத கமலங்களை யார் வந்து அடைந்தாலும் அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது தாங்கள் எங்களைப் பாதுகாக்கும்போது நாங்கள் எதைக் கண்டு பயப்படவேண்டும்?
xxxx

இதில் துளசிதாஸர் நமக்கு இரண்டு முக்கிய செய்திகளை அளிக்கிறார்; இதை படிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்கிறார். 1.அனுமனை நினைத்தால் எல்லா காரியமும் வெற்றி அடையும். 2.அனுமனை வேண்டு வோருக்கு எப்போதும் ஆனந்தம்; துன்பமே இல்லை.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை — என்ற அப்பர் சுவாமிகளின் தேவார வரிகளை நினைவுபடுத்தும் வரிகள்; அப்பர் சிவனைப் பற்றி இதைச் சொன்னார்; அனுமனும் சிவனின் வடிவம் என்பதை சென்ற இரண்டு கட்டுரைகளில் கண்டோம்.
xxxx
அனுமனும் சூரியனும் ; விஞ்ஞான விளக்கம்
அனுமன் சிறுவயதில் சூரியனை பழம் என்று கருதி விழுங்கப்போனதாகவும் அப்போது இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கியதாகவும் , தாடை உடைந்ததால் அவனை ஹனுமான் என்று அழைத்ததாகவும் ஒரு கதை உள்ளது. உண்மையில் இதை விளக்கமாகச் சொல்லும் கதைகளில் ஒரு சூரிய கிரகணத்தின்போது விலங்குகள் எப்படி நடந்து கொள்ளுமோ அந்த வருணனை அப்படியே உள்ளது ஆக அனுமன் காலத்தில் நடந்த சூரிய கிரகணத்தையே இப்படி வருணித்துள்ளனர்; அப்போது நடந்த விபத்தில் அவர்க்குத் தாடையில் சேதம் ஏற்பட்டதே சரியான விளக்கம். ரிக் வேதத்திலும் முழு சூரிய கிரகணத்தை ஒரு அற்புதம் போல வருணித்துள்ளனர். மகாபாரதத்திலும் கிருஷ்ணன் , தனது சு தர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்ததாகச் சொல்வதும் முழு சூரிய கிரகணம் ஆகும்.
அனுமனுக்கு அப்போது எல்லா தெய்வங்களும் வரம் கொடுத்தன
பிரம்மா கொடுத்த வரம் – பிரம்மா வாழும் காலம் வரை நீ வாழ்வாயாகுக.
மஹாவிஷ்ணு – இறைவனின் தொண்டனாக நீ நீடூழி வாழ்க.
இந்திரன் — உன்னை எந்தவித ஆயுதமும் தாக்காது.
அக்கினி — தீயினால் உனக்குத் தீங்கு நேராது.
காலன்/யமன் – உனக்கு மரணம் என்பதே இல்லை;
ஸர்வ தெய்வங்களும் – பலத்திலும் வேகத்திலும் உனக்கு ஈடு இணை எவருக்கும் வராது.
அனுமன் பற்றி இந்தோனேஷிய ராமாயணம் வேறு கதை சொல்லும். சூரியனை விழுங்கச் சென்ற அனுமனை சூரியன் எரித்துச் சாம்பலாக்கியவுடன் அது கடலில் விழுந்ததாம்; அஞ்சனையின் வேண்டுகோளின்படி பின்னர் அவர் உயிர்ப்பிக்கப்பட்டாராம் ; இராமாயண, மஹாபாரதக் கதைகளை நாடகமாகவும், தோல்கூத்து காட்சிகளாகவும் நடிக்கும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்கள், கதையில் திகிலூட்ட இப்படிப் பல புதுமைகளை செய்துள்ளனர் ; இந்தோ னேஷியா ராமாயணத்தின் பெயர் சேரி ராமாயணம் ; சேரி= ஸ்ரீ
அனுமனும் பலமும்
அனுமனின் பெயர் சொன்னாலே பலம் வரும்; இதனால் மகாராஷ்டிரத்தில் குஸ்தி பயிலும் பள்ளிக்கூடங்களில் அனுமன் பெயரில் பஜ்ரங் தளம் என்ற அ மைப்புகள் தோன்றின. அவை முஸ்லீம் படையெடுப்பு, மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் இந்துக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின. அனுமனுக்கு பஜ்ரங் பலி என்றும் பெயர்.
xxxx
கணையாழி தரிசனம்
கணையாழியை அனுமன் வாயில் கவ்விக்கொண்டு சென்று சீதைக்கு கொடுத்ததை துளசிதாசர் பாடுகிறார். ராமாயணத்தில் இது ஒரு முக்கிய கட்டம்.
தேடிய பொருள்கள் கிடைத்து விடும்; நாடிய பொருள்களை அடைந்துவிடலாம் என்ற உப சகுனம் தெரிவிக்கும் படலம் இது. தென்னிந்தியாவில் அந்த தினம் இதைச் சொல்லும் உபன்யாசகருக்கு மோதிரத்தையும் பரிசாக அளிப்பது சம்பிரதாயம்
சீதைக்கு ராமன் கொடுத்து அனுப்பிய மோதிரத்தை அனுமன் கொடுப்பதை கம்பன் சுந்தர காண்டம் உருக்கா ட்டு படலத்தில் வர்ணிக்கிறான் ;அதைப் படித்தால் கணையாழியின் பெருமை புரியும். இது போல மோதிர உத்தியை, பிற்காலத்தில்காளிதாசன் போன்றோர் நாடகத்தில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
xxxx

இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி
கம்பராமாயணக் காட்சிகள்:
‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63 ‘
இன்னும் நான் என்ன சொல்வது,
இராமன் நாமம் தீட்டியது, யாராலும்
மீண்டும் செய்ய முடியாத அரியவேலைப்பாடு
நிறைந்தது, உங்களிடம் தரச்சொல்லி,
இராமன் என்னிடம் தந்தது‘
என்று சொன்னான்,
தன் நீண்ட கையால் அந்த மோதிரத்தைக்
காண்பித்தான்,
சீதை தன் கூரிய கண்களைத் திறந்து
அதைக் கண்டாள்.
xxxx
‘பாழிய பணைத் தோள் வீர !
துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே ! யான் மறு
இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும்,
இன்று என இருத்தி’ என்றாள்.
‘பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய
வீரனே!
துணையின்றித் தவித்த என் துயர் தீர்த்த
கொடையாளனே, நீ வாழ்க !
நான் களங்கமற்ற மனதுடையவள் என்பது
உண்மையெனின்,
ஒரு யுகத்தை ஒரு பகல் என்று கருதும்
பதினான்கு உலகங்களும் அழியும்
பிரளய காலத்திலும்
இன்று போல் நீ என்றும் இருப்பாயாக‘
என்று ஆசி வழங்கினாள்.
xxxx

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்;
உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65
அம்மைக்கு மோதிரம் கிடைத்தது, பாம்பு, தவறவிட்ட மணியைப்
பெற்றது போலவும், வறுமையாளன் இழந்த செல்வத்தை மீளப் பெற்றதைப்
போலவும், மலடி குழந்தையைப் பெற்றது போலவும், குருடன் விழி பெற்றது
போலவும் இருந்தது. பிராட்டியைப் பாம்பு என்று கூறலாமா ? அமுதமான
அம்மை தீயர் செய்கையால் நஞ்சு ஆனாள். நஞ்சுதான் அரக்கர் குடிக்கு
என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் என்று பெரிய திருமொழி
பேசும் (பெரிய 10-2-4) வால்மீகம், சீதை மகா சர்ப்பம் போன்றவள். அவள்
கவலை கொண்டு முகத்தை வைத்திருக்கும் ஐந்து விரல்களே அதன் ஐந்து
தலைகள் என்று பேசும். (கம்ப. 7351) கவிச் சக்கரவர்த்தி, ‘திட்டியின் விடமன
கற்பின் செல்வி‘ என்று கும்பகர்ணன் வாயிலாகப் பேசுவான். இங்கு
மணியிழந்த நாகம் மீண்டும் மணிபெறும் தன்மைக்கே ஒப்பீடு என்பதை
அறிந்தால் சீதை நாகமா என்ற வினாவுக்கே இடம் இல்லை என்பதையும்
அறிக.
வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 66
(பிராட்டிமோதிரத்தை)
வாங்கினள் –எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில்
வைத்தனள் – தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால்
தாங்கினள் – தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை
ஒற்றினள் – மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள்
வீ்ங்கினள் – பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் – இளைத்தாள்;
குளிர்ந்தனள் – குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் –
வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் – பெரு மூச்சு விட்டாள்; இது
(பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ – இன்ன
மெய்ப்பாடு என்று கூற முடியுமா.
மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67
(பிராட்டிமோதிரத்தை)
மோக்கும் -மோந்துபார்ப்பாள் (அதை); முலை வைத்து –
தனங்களிலே வைத்து; உற முயங்கும் – நன்றாகத் தழுவிக் கொள்வாள்;
ஒளிர் நல்நீர் – ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி – அதைத்
துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் – நீ்ண்ட பறவைக் கூட்டைப்
பார்ப்பாள்;நுவலக் கருதும் – (பறவைக் கூட்டால் வந்த நினைவை)
கூறநினைப்பாள்;ஒன்றும் நுவல்கில்லாள் – ஒன்றும் கூற முடியாமல்; மேக்கு
– மிகுதியாக; நிமிர் விம்மிலள் – கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய்;
விழுங்கல்உறுகின்றாள் – அதை அடக்க முயல்கின்றாள்.
xxxxx
நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68
நீண்ட கண்களையும் அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின் மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி, முற்றும் விளங்குகின்ற பொன்னை ஒத்த பொலிவுடைய நிறத்தைப் பெற்றது. இந்த மாற்றம் உண்மையே! ஆதலால் ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின் மோதிரமானது தன்னைச்சார்ந்த எல்லாப் பொருள்களையும் தொட்ட மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத்தன்மை பெற்ற ரசக் குளிகையோ?
xxxx
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69
பசித்தவர்க்கு அமுதமாகவும், அறவோர்க்கு நல்விருந் தாகவும், இறந்த உயிரை மீட்கும் மருந்தாகவும் இம் மணி யாழி உள்ளதே! இது வாழ்க! ‘இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது; அறத்த ரை அண்மும் விருந்தெனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது; வாழி மணி ஆழி’ (69),
இந்தப் பாடல்கள் கணையாழியின் முக்கியத்துவத்தை நமக்கு நன்கு உணர்த்தும்
To be continued
Tags- காந்திஜி , அனுமன், ரமணர், கணையாழி, சீதை, மோதிரம், உருக்காட்டு படலம், கம்பன் வருணனை, ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள், பகுதி 8, அஸ்வத்தாமா பலீர் வியாஸோ, ஏழு சிரஞ்சீவிகள்
Athmanathan Seetharaman
/ August 26, 2024Ramana Maharshi was politically correct while comparing Gandhi with
Hanuman. Even Mahaperiyava was politically correct and never once
criticised Gandhi or muslims for their atrocities on Hindus during and
after Indian independence.