
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,593
Date uploaded in London – 27 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
அனுமன் பறந்த வேகம் ;ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9
முதலில் அனுமன் இலங்கைக்குச் சென்ற வேகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சுவையான விஷயத்தைக் காண்போம்:
விமானம் போல பறந்தான் – கம்பன் வருணனை
கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24-
சுழன்றுசுழன்று செல்கின்ற குதிரைமேல் உள்ள;
தெய்வத் தன்மை பெற்ற கூரிய நுனியையுடைய;
வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரனுக்கும்;
கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத வேகமுடைய
கடலும் கடலாற் சூழ்ந்த உலகமும்;
தன்னுள் ஒடுங்கும்படி (பேருருக் கொண்டவனாய்);
அண்டத்தின் உச்சியானது மோதும்படி; செல்கின்ற
பயணத்தால்; ஒப்பற்ற புட்பக விமானம்;
இலங்கை மாநகருக்குப் போவதை
ஒத்திருந்தான். (FLIGHT TO SRI LANKA)
xxxxx

Speed of Hanuman- 660 kilometers per hour
மனோ ஜவம் மாருத துல்ய வேகம் என்ற ஸ்லோகத்தில் அனுமனின் வேகம் மருத் என்னும் காற்றின் வேகம் என்றும் மனத்தின் வேகம் என்றும் முதல் வரி சொல்கிறது. இதில்தான் ஐன்ஸ்டைன் இந்துக்களிடம் தோற்றுப்போனார்; ஒளியின் வேகத்தில் யாரும் பயணம் செய்ய முடியாது அப்படிப்போனாலும் அருகிலுள்ள ஆல்பா செண்ட்டாரை நட்சத்திரத்துக்குப் போகவே நாலரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது ஐன்ஸ்டைன் கூற்று. ஆனால் இந்துக்கள் சொர்க்கத்துக்குப் போகவே ஒரே நாள் தான் செலவி ட்டனர் என்று பாகவதமும் நம்மாழ்வாவர் பாசுரமும் சொல்கிறது; தேவர்கள் ஒளி ரூபத்தில் வாழ்வதால் தான் அவர்களுக்கு தேவர் என்றே பெயர்! அவர்கள் மனத்தின் வேகத்தில் சென்றனர். நான் அண்டார்டிகாவில் இருப்பதாக நினைக்க ஒரே நொடிப்பொழுது போதுமே? தேவர்கள் இப்படித்தான் செய்தனர். ஒளி ரூபத்தில் செல்லவும் செய்தனர்.
இலங்கையிலிருந்து அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருவதற்கு ராமன் ஒரே நாள்தான் செலவிட்டான் ; அதுவும் நடுவில் தங்கித் தங்கி வந்தான். அதனால் அனுமன் பறந்து போய் பரதன் தீக்குளிப்பதைத் தடுத்தான் இப்பொழுது கம்பனும் அனுமன் புஷ்பக விமானம் போல பறந்தான் என்கிறார்.
Another wonder is about the speed of Anjnaeya. True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley. “ How fast do monkeys fly? It was a matter of scholarly reasoning for the commentators!”, said Prof. Goldman. Some of them worked it down to a speed of roughly 660 km an hour considering Hanuman first brought mountain to Lanka and then flew back all the way to put it back in its place. Prof. Goldman gave a lecture in Delhi in 2004.
இதை அமெரிக்க பேராசிரியர் கோல்டுமேன் R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley கணக்குப்போட்டு அனுமன் மணிக்கு 660 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக டில்லியில் ஒரு சொற்பொழிவில் சொன்னார்.
Maruti Miracle: 660 Kms per hour!
Tamil and Vedas
https://tamilandvedas.com › 2013/06/11 › maruti-mirac…
11 Jun 2013 — True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of …
xxxx

ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்
சுந்தர காண்டம்
அனுமர் கடல் தாண்டப் பாய்தல்
விருத்தம்-1
பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொருதினம் மாங்கனி ஆமெனவே
காய்ந்திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித்
தோய்ந்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான்
நாம்துதி பேசும்ம யேந்திரம்ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே.
நாதநாமக்கிரியை ராகம் ஆதிதாளம்
பல்லவி
பாய்ந்தானே அனுமான் – மயேந்திரம் ஏறிப்
பாய்ந்தானே அனுமான். (பாய்ந்)
அநுபல்லவி
பாய்ந்தொரு மூவுல கேந்தியராவணன்
மாய்ந்திடமேவுகு லாந்தகன் எனவே (பாய்)
சரணங்கள்
1. கேசவ ராகவ பூசித னேஎனும்
வாசக மானது நேசம் விடாமல்
மோச நிசாசரர் நாசம் தாய்விட
வீசியவால் எம பாசம தாகப் (பாய்)
2. வட்ட நெடுங்கடல் முட்ட உரங்கிழி
பட்டு மறைந்திடு திட்டுகள் தெரிய
நெட்டை நெடுங்கிரி எட்டுமறும் பொடி
பட்டுதி ரும்பிடி நட்டணை ஆகப் (பாய்)
298
3. எடுத்தொரு ராகவன் கொடுத்தகை மோதிரம்
இடுக்கிய காதிலே மடற்குளே யடக்கி
மிடுக்குள ராட்சதர் நடுத்தலை மேல் விழும்
இடிக்கிணை யாகவே திடுக்கென ஓடிப் (பாய்)
4. அண்டர்கள் முனிவர்கள் கண்டதிசயமொடு
மண்டிய மருமலர் கொண்டனர் பொழிய
வீண்டல ரவி சசி மண்டலம் இருசிறு
குண்டலம் எனமுக மண்டலம் அசைய (பாய்)
5. சுமந்திடு தாயுரை சுமந்தவன் ஈரடி
சுமந்து விசுவரூபம் சமைந்ததி னாலே
அமிழ்ந்திய கடல்படு திமிங்கில மொடுதிமி
திமிங்கிலம் விவையினில் மிதந்திட மேலே (பாய்)
6. அந்தமலையில் உள தந்தி கரடிபுலி
நொந்து திசைதிசைபி ரிந்த அவை வெருள
முந்து கொடி முடிபி ளந்து பளபளென
உந்து இணையடிகள்உ தைந்து கிளம்பி (பாய்)
xxxxx

ஹனுமான் சாலீசாவின் அடுத்த ஐந்து கண்ணிகளை எடுத்துக் கொள்வோம் :
ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை ।
தீனோம் லோக ஹாங்க தே காம்பை ॥ 23 ॥
பூ⁴த பிஶாச நிகட நஹி ஆவை ।
மஹவீர ஜப³ நாம ஸுனாவை ॥ 24 ॥
நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா ।
ஜபத நிரன்தர ஹனுமத வீரா ॥ 25 ॥
ஸங்கட ஸே ஹனுமான சு²டா³வை ।
மன க்ரம வசன த்⁴யான ஜோ லாவை ॥ 26 ॥
ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா ।
தினகே காஜ ஸகல தும ஸாஜா ॥ 27 ॥
23.உங்களிடமுள்ள தேஜஸ் / ஒளி மகத்தானது.அதைத் தங்களைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது .உங்களுடைய ஹூம் கார கர்ஜனை மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்கிறது
24.மஹாவீரனே ! உனது பெயரைச் சொன்ன மாத்திரத்தில் பூதம், பேய் , பிசாசுகள் நடுங்கி ஓடுகின்றன ; உன் பெயர் சொல்லும் எவனையும் அவை நெருங்காது
25.வீர அனுமனே ! உன் பெயரை இடைவிடாது ஜபம் செய்வோருக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
26.உண்மை, வாய் மை , மெய்மை என்னும் மனோ வாக் காய — திரிகரண சுத்தியுடன் , உங்களிடம் ஈடுபட்டவர்களின் எல்லாத் துன்பங்களையும் அகற்றி விடுவிக்கிறீர்கள்
27.பரம் பொருளான, தவசீலர்களில் சிறந்தவரான ராமபிரானின் பணிகள் அனைத்தையும் நீங்களே நிறைவேற்றினீர்கள்.
இந்தக் கண்ணிகளில் உள்ள கருத்தின் சுருக்கம் -உடம்பிலும் புகழிலும் ஒளி வீசுபவர், பூதப் பிசாசுகளை விரட்டுபவர் ; அனு மனை நம்பினோர்க்கு துன்பமே இல்லை;; யார் தூய்மையுடன் பக்தி செலுத்துகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அருளுபவர்; .இதற்கெல்லாம் காரணம் நீர் ராம பிரானுக்கு ஆற்றிய சேவைதான் .
ராமனைப் புகழும் எல்லோரும் அனு மனைச் சேர்க்காமல் இருப்பதில்லை; அநுமானைப் புகழும் எல்லோரும் ராமனைச் சேர்க்காமல் இருப்பதில்லை . இது போன்ற பிணைப்பை வேறு எங்கும் காண முடியாது.
ராமனின் புகழை முழு அளவில் யாரும் எழுத்தால் வருணிக்கவில்லை; ஏனெனில் 3000 இடங்களிலிருந்து எடுக்க வேண்டும். இன்னும் அன்னமாச்சார்யா, தியாகராஜர் கிருதிகளில் உள்ள ராமன் புகழை மட்டும் கூட யாரும் ஒப்பிட்டு ஆராயவில்லை; எந்தக் காலத்தில் ஏனைய 3000 ராமாயணங்களில் உள்ளதை ஒப்பிட முடியும்?
–SUBHAM—
TAGS- அனுமன் பறந்த வேகம், ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 9, ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர் ,சுந்தர காண்டம், அனுமர் கடல் தாண்டப் பாய்தல்