WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,592
Date uploaded in London – 27 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
சுவாமி விவேகானந்தர் 1902–ம் ஆண்டில் (1863-1902) சமாதி ஆகிவிட்டார் ; அதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் சத்ய சாய் பாபா (1926-2011) தோன்றினார் . ஆயினும் பாபா செய்யப்போகும் அற்புதங்களுக்கு சுவாமி விவேகானந்தர் , அதற்கு முன்னரே விளக்கம் கொடுத்துவிட்டார் எதைக் கண்டு பிடித்தாலும் இந்துக்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே! மொபைல் போன், ஐ பேட் , இன்டர்நெட் , கம்ப்பூட்டர் , யூ ட்யூப் இவை எல்லாம் இந்து மதத்தில் உள்ளதா ? என்ற கேள்விகள் நியாயமானவைதான் . இவைகளுக்கு விளக்கம் தரும் பேசசு இதோ!
நான் முன்னர் எழுதியதுபோல நவக்கிரக ஸ்தோத்திரத்திலுள்ள விஷயங்களை நாஸா NASA கண்டுபிடிக்கவில்லை; நாடி ஜோதிட விஷயங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; பாபா போன்றோர் செய்யும் அற்புதங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; அஷ்டமா சித்திகளை நாஸா கண்டுபிடிக்கவில்லை; இந்து மதம் சொல்லும் வெளி உலகங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; கனவுகள் பற்றி இந்துக்கள் சொல்லும் செய்திகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை; ஒளி ரூபத்தில் நமக்கு மேலே சஞ்சரிக்கும் ககன சித்தர்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை (குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயருக்குத் தெரிந்தது கூட அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியாது ; கம்பன் கூட ஆகாயவாசிகள் பற்றிக் கவிதை பாடினான் . நிற்க
XXXX
THE POWERS OF THE MIND
(Delivered at Los Angeles, California, January 8, 1900)
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 1900-ஆம் ஆண்டில் மனத்தின் சக்திகள் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.
“உலகம் முழுதும், வரலாற்றுக்காலம் முழுதும், மனதிற்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பற்றிய நம்பிக்கை இருந்து வருகிறது வழக்கத்திற்கு மாறான அபூர்வ சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்; நம்மில் பலருக்கு நேரிலும் அத்தகைய அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்த சில விஷயங்களைச் சொல்லி இந்த தலைப்பு பற்றிப் பேசுகிறேன்
மனதில் எதை நினைத்துக்கொண்டு போனாலும் உடனே அதைக் கண்டுபிடித்து விடைதரும் ஆள் பற்றி ஒருமுறை கேள்விப்பட்டேன். .எனக்கும் ஆர்வம் மேலிடவே சில நண்பர்களை அழைத்துக்கொண்டு போனேன் எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிக் கேட்கத் தோன்றியது; ஆயினும் தவறுகள் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதை எழுதி அவரவர் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டோம் ; எங்களைப் பார்த்தமாத்திரத்தில் அந்த ஆசாமி எங்கள் கேள்விகள் என்னவென்று கூறி அதற்குப் பதிலும் தந்தார் .
பின்னர் அவர் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி, அதை மடித்து , இதை பிரித்துப் பார்க்காமல் உன் பைக்குள் வைத்துக் கொள் ; நான் கேட்கும்போது அதைக்கொடு என்றார்; பின்னர் எந்த மொழியானாலும் சரி; ஒரு வாக்கியத்தை நினைத்துக்கொள் என்றார் ; நாங்கள் பார்க்கப்போன நபருக்கு சம்ஸ்க்ருத வாசனையே கிடையாது என்பது எனக்குத் தெரியும்; ஆகையால் ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.
இப்பொழுது நான் முன்னர் கொடுத்த தாளை பைக்குள்ளிலிருந்து எடுத்துக் படி என்றார் ; நான் நினைத்த சம்ஸ்க்ருத வாக்கியம் அதில் இருந்தது !அது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எழுதப்பட்டது; என்னுடன் வந்த வேறு ஒருவர் அராபிய மொழியில் குரான் வாசகத்தை எழுதி வைத்திருந்தார் ; அதையும் அவர் முன் கூட்டியே எழுதிக்கொடுத்து இருந்தார்
எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் டாக்டர்; அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவ விஷயத்தைநினைத்து இருந்தார் ; அதையும் அந்த ஆள் கண்டுபிடித்து முன்கூட்டியே எழுதி இருந்தார்
எனக்கு மனதில் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது; இந்த ஆள் நம்மை மயக்கி ஏமாற்றி இருப்பாரோ என்று நினைத்து, பல நாட்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு முறை அவரைப் பார்க்கப்போனேன் இந்த தடவை வேறு சில நண்பர்களை அழைத்துச் சென்றேன்; முன்னர் போலவே அவர் அற்புதங்களை செய்தார். அற்புதம்! ஒரு பிழையும் இல்லை..
ஹைதராபாத்தில் ஒரு சம்பவம்
இந்தியாவில் ஹைதராபாத்தில் நான் இருந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது .ஒரு பிராமணன், யாரும் அறியாத இடத்திலிருந்து மாயமாகப் பொருள்களைக் கொண்டுவருவார் என்பதைக் கேட்டு அங்கே போனேன். அவர் வியாபாரம் செய்துவரும் வணிகர்; சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர் ; உங்கள் அற்புதங்களைக் காண வந்தேன் என்று சொன்னவுடன் தனக்கு உடம்பு சரியில்லை; காய்ச்சல் ; நீங்கள் என் தலையில் கையை வையுங்கள்; என் ஜுரம் அகன்றுவிடும் என்றார்
(நோயாளிகளை சாது சந்யாசிகள் தொட்டு ஆசிர்வதித்தால் நோய் போய்விடும் என்ற நம்பிக்கை இந்திய முழுதும் உண்டு; 1400 ஆண்டுகளுக்கு முன்னர், கூன் பாண்டியனுக்கு விபூதி கொடுத்த சம்பந்தர் அவனது வயிற்று நோயைப் போக்கியதோடு அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்; அப்பருக்கு , அவருடைய சகோதரி திலகவதி, விபூதி கொடுத்து சூலை நோயை நீக்கினார் )
நான் தொட்டவுடன் அவருக்கு உடம்பு குணமாகிவிட்டது ; நீங்கள் ப்ராமிஸ் செய்தபடி உங்கள் அற்புதத்தை இப்பொழுது காட்டுங்கள் என்றேன். அவர் வெறும் துண்டு மட்டுமே அணிந்து இருந்தார்; எல்லா உடைகளையும் தள்ளி வைத்தார்; மிகவும் குளிராக இருந் ததால் நானே அவர் மீது ஒரு கம்பளத்தைக் போர்த்தினேன் நாங்கள் 25 பேர் அங்கே இருந்தோம்; நீங்கள் உங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று அவர் சொன்னவுடன் நாங்கள் அங்கு விளையாத திராட்சை, ஆரஞ்சு பழவகைககளை எழுதினோம்; அவர் ஒரு மூலையில் உடகார்ந்து இருந்தார்.அந்தக் காகித துண்டுகளை அவரிடம் கொடுத்தோம்; அவர் போர்வையை விலக்கினார் ; நாங்கள் எழுதிய பழங்கள் அங்கே இருந்தன!
அவரே மாயமாக பெரிய ரோஜா மலர் பூங்கொத்துக்காளைக் கொண்டுவந்தார் ; அவை அப்பொழுதுதான் பறித்தவை; கசங்க வில்லை; பனித்துளிகளும் இருந்தன இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது எல்லாம் கை அசைவில் வரும் என்று பதில் கொடுத்தார்.
கை அசைவில் அவ்வளவு பொருட்களைக் கொண்டுவரமுடியாது; பின்னர் அவை எங்கிருந்து வந்தன? இது மட்டுமல்ல; இது போல பல விஷயங்களை நான் பார்த்து இருக்கிறேன் இதுபோல எல்லா நாடுகளிலும் ஆட்கள் உள்ளனர். இந்த நாட்டிலும் (அமெரிக்கா) நீங்கள் நிறைய பார்க்கிறீர்கள் ஆனால் நிறைய மோசடிப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் உண்மைச் சம்பவத்தை காப்பி அடிக்கிறார்கள்.ஆனால் அப்படி மோசடி செய்ய அவர்களுக்கும் உண்மையான சம்பவம் தேவை; அப்போதுதான் அதைக் காப்பி அடிக்கலாம்; நடவாத ஒன்றிலிருந்து எதையும் செய்ய முடியாது; ஆதாரம் இருந்தால் அதைவைத்து இமிடேஷன் செய்யலாம்.”
xxxx
MY COMMENTS
( நான் பார்த்த அதிசயம் : சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பத்துடன், பத்து கார்களில் ஆட்கள் புடை சூழ மதுரையிலிருந்து புட்டப்பார்த்திக்குச் சென்று பிரசாந்தி நிலைய பஜனைகளில் கலந்து கொண்டோம்; அப்போதெல்லாம் பெரும் கூட்டம் கிடையாது; பெண்கள் மட்டும் தங்குவதற்கு ஷெட்டுகள் இருந்தன. நாங்கள் எல்லோரும் கார்களிலும் அதற்கு அருகிலும் படுத்துக்கொண்டோம் ; மதுரையிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே பாபாவின் பக்தர்கள் ; நாங்களோ புது முகங்கள்; ஆயினும் மறுநாள் பாபா வலம் வருகையில் முதல் முதலில் என தாய் தந்தையரை அழைத்து பல விஷயங்களை சொன்னார்; கையை அசைத்து விபூதி வரவழைத்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்; ஒரு (பாபா) போட்டோவையும் உண்டாக்கி அதை என் தந்தையிடம் ( V.SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) கொடுத்தார்; அது அவரது பர்ஸில் 1998-ல் அவர் இறக்கும் வரை இருந்தது; நான் 198-7ல் லண்டனுக்கு வந்துவிட்டதால் போட்டோ என்ன ஆனது என்பது தெரியாது; ஒரு வேளை என் தாயாரிடம் சென்றிருக்கலாம்; அது மறைந்து போகவில்லை என்பதற்காக இவ்வளவு விஸ்தாரமாக எழுதினேன் ; என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி பரீட்சையில் பாஸ் என்றார்; பள்ளி மாணவனுக்கு அதை வீட வேறு என்ன வேண்டும்; அதற்குப் பின்னர் 4,5 முறை புட்டபர்த்திக்குச் சென்றபொழுது நிறைய பேருக்கு கை அசைவில் விபூதியை வரவழைத்துக் கொடுத்ததையும் பார்த்து இருக்கிறேன் )
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இதற்கான விளக்கத்தையும் சுவாமி விவேகானந்தர் கொடுக்கிறார் ; அதையும் காண்போம் .
தொடரும் ……………………………….
TAGS- பாபா செய்த, அற்புதங்கள் , மனத்தின் சக்தி, விவேகானந்தர் விளக்கம், விஞ்ஞானிகள் அறியாத மனம் ,