அனுமார் மூலம்  எனக்குக் கிடைத்த நண்பர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 11

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,605

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 11

‘ஹனுமான் சாலீஸா’ பற்றி எழுதத் துவங்கியவுடன் லண்டன் யுனிவர்சிட்டி SOAS லைப்ரரிக்குச் சென்று அனுமன் பற்றிய புஸ்தகங்களைத் தேடினேன்; இரண்டு மூன்று புஸ்தகங்கள்  இருந்தன.ஆ னால் இதுவரை பார்த்திராத ஏ 4 சைசுள்ள இரண்டு பெரிய வால்யூம்களைப் பார்த்து எடுத்துக்கொண்டு, அனுமதி பெறும் ‘டெஸ்க்’குக்கு வந்தேன்.அங்கு புஸ்தகங்களின் பார்கோட் – ஐ ஸ்கேன் செய்வதற்கு முன்னர் எதற்கு ஒரே புஸ்தகத்தை இரண்டு காப்பி எடுக்கிறீர்கள்? என்று கேட்டார்; அவை இரண்டும் ஒரே அட்டைப்படத்துடன் இருந்தாலும் வால்யூம் 1, 2 என்றேன். அவரது தயக்கத்துக்குப் பின்னர்தான் கா ரணம் புரிந்தது. அவருக்கும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது போலும் ! மெதுவாக என்னிம் ட பேச்சுக்  கொடுத்தார் . நீங்கள் ஹநுமானை பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம், ஹனுமான் சாலீஸாவுக்கு எனது தமிழ் மொழியில், மொழிபெயர்ப்பு உண்டு; ஆனால் ஆங்கிலத்தில் இருப்பது போல வியாக்கியானங்கள் இல்லை; நான் அந்த  வழியில் விளக்கவுரை எழுதுகிறேன் என்றேன். அப்படியா ! நானும் தினமும் ஹனுமான் சாலீஸா படிக்கிறேன் என்றார் ; எனக்கு உடனே மகிழ்ச்சி.

அட, எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? என்றேன்; நேபாளத்திலிருந்து வருவதாகச் சொன்னார். சென்ற முறை நேபாளம் சென்றபோது இதைப்  படித்தால் நல்லது என்று பலர் சொன்னார்களாம் ; நானும் சொன்னேன் . உண்மை தான் ; குறிப்பாக ஜாதகத்தில் புதன், சனி கிரகம் மூலம் தொல்லை வரும் காலத்தில் படிப்பது நல்லது. நான் தினமும் யூ ட்யூபில் கேட்பேன்; வாரம் ஒரு முறை லண் டன் நார்த்விக் பார்க் ஆஸ்பத்திரியில் எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிராத்தனை செய்கையில் நானும் அதைப்  படிப்பேன் என்றேன். பின்னர் நன்றி சொல்லி விடைபெற்றேன் நான் கால் நூற்றா ண்டாக லண்டன் பல்கலைக்கழக நூலகத்துக்குப் போனபோதும் அவரை சந்த்தித்தது முதல் தடவை. அனுமன் புஸ்தகம் எடுத்திராவிடில் அந்த நண்பர் கிடைத்திருக்க மாட்டார். வாழ்க அனுமான் ; ஜெய் ஹனுமான் ; நிற்க .

xxxx

ஹனுமான் சாலீஸா— விலிருந்து மேலும் ஐந்து கண்ணிகளை பார்ப்போம்:

33.தும்ஹரே பஜ⁴ன ராமகோ பாவை ।
ஜன்ம ஜன்ம கே து³க² பி³ஸராவை ॥ 33 ॥

34.அந்த கால ரகு⁴பதி புர ஜாயீ ।
ஜஹாம் ஜன்ம ஹரிப⁴க்த கஹாயீ ॥ 34 ॥

35. ஒளர் தே³வதா சித்த ந த⁴ரயீ ।
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக² கரயீ ॥ 35 ॥

36. ஸங்கட கடை மிடை ஸப³ பீரா ।
ஜோ ஸுமிரை ஹனுமத ப³ல வீரா ॥ 36 ॥

37. ஜை ஜை ஜை ஹனுமான் கோ³ஸாயீ ।
க்ருபா கரஹு கு³ருதே³வ கீ நாயீ ॥ 37 ॥

MEANING

33.யார் உங்களை வழிபடுகிறார்க்ளோ அவர்கள் ஸ்ரீ ராமனை அடைகின்றனர். பல பிறவிகளில் ஏற்பட்ட துக்கங்கள்/ பாவங்கள் அகன்று விடும்.

34.மரணத்துக்குப் பின்னர், அவர்கள் ரகுவீரனுடைய பரமபதத்தை அடைகிறார்கள்; இந்தப் பிறவியில் ஹரி பக்தன் என்ற பட்டமும் கிடைக்கிறது

35.வேறு தேவதைகளை நினையாமல் அனுமனை மட்டுமே வழிபடுவோருக்கு  எல்லா வகையான சுகங்களும் கிடைக்கின்றன.

36. வீரம் மிக்க அனுமனை நினைப்போருக்கு எல்லாத்  துன்பங்களும் அழிகின்றன ; கஷ்டங்களும் ஓடிவிடும் .

37. கருணைக் கடலாகிய ராம தூதரே !போற்றி போற்றி போற்றி ;தங்களுடைய கருணைமிக்க குருவைப்போல எங்களுக்கு அருள் புரியுங்கள்.

இந்த கடைசி கண்ணியை  பலரும் மூன்று முறை  , கூப்பிய  கைகளுடன்   சொல்வார்கள்; சிலர் கைகளை தலைக்கு  மேலே உயர்த்திய வாறு சொல்லுவார்கள்.

xxxx

இன்னும் மூன்று கண்ணிகளும், ‘முடிவுரை’-யும்தான் உள .

துளசிதாஸ் சொல்லாத விஷயங்கள் : கடலைத்தாண்டும் பொழுது ஏற்பட்ட தடைகள் மற்றும் சீதையைச் சந்தித்த காட்சிகளை இதில் காணவில்லை.  துளசி ராமாயணத்தில் செப்பிவிட்டதால் இங்கு சொல்லாமல் விட்டார் போலும்.

xxxx

அசீரியாவில், ஹீப்ருமொழியில் அனுமான்

நான் லண்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த 2 வால்யூம் புஸ்தகத்தை எழுதியவர் சாந்திலால் நகர் ஆவார் ; இரண்டு தொகுதிகளும் சேர்த்து 600 பக்கங்கள் அவர் சில சுவையான செய்திகளை சொல்கிறார்;

ரிக்வேதத்தில் வ்ருஷா கபி என்ற குரங்கு வருகிறது; இது அனுமானாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து; இன்னும் ஒரு விஷயம் இந்திரனை கபீ ந்திர — குரங்கின் தலைவன் — என்பதாகும் ; இந்திராணிக்கும் வ்ருஷா கபிக்கும் ஏற்பட்ட சண்டை பற்றிய  கவிதைக்கு மேல் அதிக தகவல் வேதத்தில் இல்லை; ஆயினும் வ்ருஷா என்ற சொல்லுக்கே பலம், வீர்யம் என்று பொருள் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. இது தவிர யஜுர் வேத சம்ஹிதைகளில் மயு என்ற குரங்கு பற்றியும் வருகிறது.

xxx

அசீரியாவில்ஹீப்ருமொழியில் அனுமான்

காடக சம்ஹிதையில் லுசா கபி என்ற குரங்கினைக் காணலாம். ; அசீரியாவில் உள்ள கல்வெட்டில் இந்தச் சொல் இருக்கிறது. மேலும் எபிரேய மொழியில் குரங்குக்கு கோப் என்று பெயர். அதுவும் கபி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்ததே. கபி , மற்கடம் என்ற சொற்க  ள்  வேத  இலக்கியம் முழுதும் பரவலாகக் காணப்படுகிறது இது பற்றி பர்ஜிட்டர் , கெல்ட்னர் போன்றோர் நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளனர் அவர்கள் ஆராய்ச்சி முடிவுகளை ஏற்காவிடிலும் குரங்குகள் பற்றி — வேதத்தின் தெய்வீக துதிகளில் வருவதால் அப்போதிலிருந்தே அவை வணங்கப்பட்டது தெரிகிறது .

xxx

எனது ஆராய்ச்சி- கபி என்பது எபிரேயத்தில் இருப்பது போல , தமிழ்ச் சொல்லான மந்தி ஆங்கிலத்தில் MONKEY ‘மங்கி’ ஆனதோ என்றும் ஆராய வேண்டும்!

கபி என்ற சம்ஸ்க்ருத சொல், தமிழில் கவி என்று மருவியுள்ளது  (ப=வ என்பது உலகில் பல மொழிகளில் இருக்கிறது)

“மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்று திரிகூடப்பக் கவிராயர் குற்றாலக்  குறவஞ்சியில் பாடுகிறார்.

கபி என்ற சொல்லில் முதல் ‘க்’ ஒலி குறைந்து ‘ஏப்’ APE என்ற சொல் ஐரோப்பா முழுதும் பரவியுள்ளது.

குரங்கு வெப்ப மண்டலப் பிராணி; குளிர் மிகுந்த ஐரோப்பாவில் கிடையாது. இந்துக்கள் குரங்கு, மயில் ஆகியவற்றை பாபிலோனியாவுக்குக் கொண்டு சென்று வித்தைகளைக் காட்டினார்கள்; அந்த நாட்டு மன்னர்கள் அவைகளைக் கண்டு மயங்கிப் போய்  விலைக்கும் வாங்கினார்கள் ; அங்கிருந்து அவை ஐரோப்பிய நாடுகளில் நுழைந்தன ; உலகின் மிகப்பழைய புஸ்தகமான ரிக்வேதத்தில்தான் முதலில் குரங்கினைக் காண்கிறோம்.

–subham—

Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 11, அனுமார் , நண்பர் அசீரியாவில், ஹீப்ருமொழியில், அனுமான், கவி, கபி , வ்ருஷா கபி, லுசா கபி

Leave a comment

Leave a comment