பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; PART-3 (LAST PART)- Post No.13,602

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,602

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பகுதி-3 (கடைசி பகுதி)

THE POWERS OF THE MIND- SWAMI VIVEKANANDA

(Delivered at Los Angeles, California, January 8, 1900)

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;  விஞ்ஞானிகள் அறியாத மனம் –PART 3, LAST PART

(இனி வரும் பகுதிகள் சுருக்கித் தரப்படுகின்றன ).

மனிதனை மனிதனாக உருவாக்கும்  குறிக்கோள் உடையது கல்வி; ஆனால் நாமோ வெளியே பளபளப்பாக்குகிறோம் ஏனையோர் மீது செல்வாக்கு உண்டாக்கும் மனிதன் ஒரு டைனமோ- DYNAMO சக்திக் கேந்திரம்.

இந்த  பெர்சனாலிட்டிPERSONALITYயை இரசாயன, பெளதீக முறையில் பகுத்துச் சொல்ல முடியுமா? எவ்வளவு ஆக்சிஜன், ஹைட்ரஜன்  மூலக்கூறுகள் என்று ? பெரிய பெரிய தத்துவ ஞானிகள் புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்கள்; ஆனால் உலகில் தோன்றிய மஹான்கள் தேசங்களையே மாற்றிவிட்டார்கள்; தத்துவ ஞானிகள் அதைச் செய்யவில்லை. காரணம் மகா புருஷர்களின் பெர்சனாலிட்டிPERSONALITY. தனித்துவ ஆளுமை.

யோகம் என்னும் விஞ்ஞானம் மனிதனை / பெர்சனாலிட்டியை / உருவாக்குவதற்கான விதி களைக் கண்டுபிடித்துவிட்டது அந்த விதிகளை முறையாகப் பயின்று பின்பற்றுவோர் தங்களுடைய ஆளுமையை வலுப்படுத்தலாம்.இது அனைவருக்கும் கிடைக்கும்; ஏழை , பணக்காரர் என்ற வேறுபாடு இல்லை  இல்லறத்தாருக்கும் கிடைக்கும்.

உடல், மனம், ஆன்மீக உலகங்கள் வெவ்வேறு அல்ல; அவை ஒன்றே; போகப் போக சுருங்கிக் கண்டே போகிறது மிகவும் நேர்த்தியான பகுதியை ஆவி என்றும் பெரிய பகுதியை உடல் என்றும் சொல்கிறோம். பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்  உளது  நேர்த்தியாக, ஆக அது கடவுள் நிலையை அடைகிறது.

ஒரே மனதுதான் எங்குமுளது; தன்னுடைய மனதை கட்டுப்படுத்த அறிந்தவன் மற்றவர்கள் மனதையும் கட்டுப்படுத்த முடியும். தூய்மையும் அறநெறிகளைப் பின்பற்றும் குணமும் தேவை என்று மதம் வலியுறுத்துகிறது ஒரே களிமண்ணால் தான் இந்தப் பிரபஞ்சம் உண்டாக்கப்பட்டுள்ளது . இதை அறிவதன் மூலம் கவலைகளைத் தூக்கி எறியலாம் ;தொல்லைகளைத் தவிர்க்கலாம். அதையும் விட  உயர்ந்த பலனும் கிடைக்கும்.

ஒரு முடிவான விஷயத்தைச் சொல்கிறேன்; பல ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து முதிர்ந்து இந்த நிலைக்கு ஒவ்வொரு இனமும் வந்துள்ளது; ஆனால் இன்று பிறக்கும் குழந்தைகள் அந்த அனுபவத்தை சில ஆண்டுகளில் பெற்றுவிடுகிறது இதே போல சிலர் நீண்ட காலம் காத்திராமல் குறுகிய காலத்தில் பூரணத்தை அடையும் வழியைக் கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வளரவேண்டிய அவசியம் இல்லை; நாம் காணும் சமயத் தலைவர்கள், மகான்கள் இப்படி ஒரே பிறப்பில் முழுதான பக்குவத்தை/ பரிபூரண நிலையை அடைந்தவர்கள் ஆவர்.

இந்த அறிவியலின் பலன் என்ன? நீங்கள் கடலில் அலைக்கழிக்கப்படும் மரக்கட்டை போல தவிக்க வேண்டியதில்லை;  பயிற்சி மூலம் இதைப்பெறலாம். இந்த அறையில் உள்ளவர் மனதில் நினைப்பதை அறிய முடியுமானால் அடுத்த அறையில் தொலைவில் உள்ளவர் மனதையும் அறியலாம். எல்லைதான் உண்டா? நாம் அறியோம். ஒரு மனிதன் பெறக்கூடிய சக்திக்கு எல்லையே இல்லை; இந்தியர்களின் மனம் எப்படிப்பட்டதென்றால்  ஒன்றில் இறங்கினால் அதில் ஆழ அமிழ்ந்துவிடுவார்கள்; எத்தனை வகையான அறிவியல் இந்தியாவில் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கணிதம் இங்கேதான் உதயமானது. இன்று நீங்கள் எண்ணும் 1,2,3, 0 எல்லாம் இங்கே தோன்றியதுதான்; நியூட்டன் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஈர்ப்பு விசை பற்றியும் அறிந்து இருந்தார்கள்

இந்திய யோகிகளும் இதில் பல ஆராய்சசிகளைச் செய்தார்கள் . எந்த கலர் உடையை அணிவது, எந்த வகை உணவினைச் சாப்பிடுவது  என்றெல்லாம்;  பூரண நிலையை அறிவதைக் கண்டார்கள். எனக்கு அதிக விஞ்ஞானம் தெரியாது; இந்தக் கலை பற்றி 6 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன்; அதை அறிய 30 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். இது ஒரு நல்ல துறை என்று அறிந்தவுடன் இந்தத் துறையில் மோசடிக்காரர்கள் , மந்திரவாதிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் , ஜாலவித்தைக்கார்கள் ஆகியோரும் நுழைந்தனர் .

மிகப்பெரிய உடையின் ஒரு நூல் இழையை மட்டுமே தொட்டேன். ஆயினும் பரந்த அற்புதமான இடம் இருப்பதை அறிந்தேன். உங்களில் எவருக்கேனும் இதை மேலுமறிய ஆவல் இருந்தால் சொற்பொழிவுகளைக்  கேட்பது மட்டும் போதாது  நான் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்-  என்று கூறி சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவினை முடித்தார்.

XXXX

என் கருத்து

நீண்ட சொற்பொழிவின் சுருக்கம்தான் என்ன ? அற்புதங்களை , பிறர் எண்ணங்களை அறியும் சக்தியை எவரும் பெறலாம்; இவைகளுக்கும் இறைவனை அடைவதற்கும் தொடர்பு இல்லை; கடுமையான, முறையான ராஜ யோகப் பயிற்சி மூலம் சித்திகளை அடையலாம்; விஞ்ஞான விதிகளைப்போல இவைகளும் , சில விதிகளுக்கு ட்பட்டே செயல்படுகின்றன  . ஒவ்வொருவர் மனமும் தனிப்பட்டதல்ல; பிரபஞ்சம் முழுதும் பரந்த  ஒரே மனத்தின் பகுதிதான் நம்முள்ளும் உளது; இதை அறிந்துவிட்டால் நீங்களும் பிறர் எண்ணுவதைச் சொல்லலாம்; அவர்கள் மனதிலும் நுழையலாம் ;

சுவாமி விவேகானந்தர் எழுதிய ராஜ யோக நூலில் மேல் விவரங்கள் உள்ளன; மிக முக்கியமான விஷயம்; அற்புத சக்திகள் வந்தவுடன் பெண்கள், பண விஷயத்தில் தப்புத் தண்டா  செய்யும்  எண்ணங்களும் வரும். அந்தக்  குழிகளில் விழுந்தால் விமோசனம் இல்லை என்பது மட்டுமல்ல; சிறைச் சாலையும் உண்டு!

–சுபம் —

TAGS- சுவாமி விவேகானந்தர் , ராஜ யோக நூல், பாபா செய்த அற்புதங்கள்  விவேகானந்தர் விளக்கம்;  விஞ்ஞானிகள் அறியாத மனம்- PART 3, LAST PART

Leave a comment

Leave a comment