ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் நிறைவு -12 (last part) Post No.13,608

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,608

Date uploaded in London – 30 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 12 (last part)

ஹனுமான் சாலீசாவின் கடைசி மூன்று கன்னிகளைப்ப பார்ப்போம்

38. ஜோ சத பார் பாட கர கோயீ ।
சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா

ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா

கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

****

(தோ³ஹா)

பவன தனய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்

ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்

****

(வாழ்த்து கோஷங்கள்)

ஸியாவர ராமசந்த்ரகீ ஜய் ! பவனஸுத ஹனுமான்கீ ஜய்!

போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய்!

XXXXX

38. யார் ஒருவர் இந்த ஹனுமான் சாலீசாவை நூறு தடவை படிக்கிறார்களோ அவர் ஆசை எனும் பாச வலையிலிருந்து விடுபடுவார்;  பேரானந்த நிலையை அடைவார் .

39. இந்த ஹனுமான் சாலீசாவைப் படிப்பவருக்கு நிச்சய வெற்றி கிடைக்கும் என்பதற்கு கெளரி சங்கரரான பரமேஸ்வரனே சாட்சி.

40. துளஸி தாஸர் சொல்கிறார் :ஹே அனுமனே ! நான் என்றும் ராமாபிரானையே புகலிடமாகக் கொண்டுள்ளேன்; சீதா ராம லெட்சுமணர்களுடன் தங்கள் என் என்னுடைய இருதயத்தில் என்றும் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இத்துடன் 40= சாலீஸா முடிந்துவிட்டது.

****

பின்னர் முத்தாய்ப்பாக வரும் தோஹா :

பவன குமாரனே! தேவர்களுக்குத் தலைவனே; சங்கடங்களைத் தீர்ப்பவனே; மங்களங்களை அருள்பவனே !சீதா ராம லெட்சுமணர்களுடன் என்னுடைய இருதயத்தில் என்றும் வசிப்பீர்களாகுக !

XXX

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ஹனுமான் சாலீஸா  மற்றும் ரத்தன் மோஹன் சர்மா பாடிய ஹனுமான் சாலீஸா ஆகியவை  கேட்பதற்கு இனிமையானவை; சுமார் 11 நிமிடங்கள் பிடிக்கும் . யூ ட்யூபில் தினமும் கேட்கலாம்.

தமிழில் ஹனுமான்  சாலீஸா:

வீரா என்பதை பீரா என்றும் சிலர் உச்சரிப்பர்; உலகம் முழுதும் ப=வ மாற்றத்தைக் காணலாம்  அதே போல ‘ப்’, ‘ய்’ என்று மெய் எழுத்துக்களில் முடிவதை ப , ய என்ற உயிர் மெய் எழுத்துகளாகவும்  சிலர் சொல்வர் ; வித்யா என்பதை பித்யா என்பர்; துளசிதாஸர் , தான் வாழ்ந்த பகுதியில் பேசிய வட்டார ஹிந்தி மொழியில் (அவதி) எழுதினார்.

  ஸ்ரீகுரு சரண ஸரோஜ் ரஜ நிஜ மன முகுர ஸுதார்

பரணோம் ரகுவர விமல ஜச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானிகே, ஸுமிரௌம் பவன குமார்

பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

1.ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர

ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா

அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸம்வாரே

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ ஜச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திக்பால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரோம்  யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ்வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹோ  ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட கடை  மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தன்ய ஸங்கட ஹரன மங்கள மூரத்தி ரூப்

ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப்

*****

ஸியாவர ராமசந்த்ரகீ  ஜய்  பவனஸுத ஹனுமான்கீ  ஜய்

போலோ பாயீ ஸப ஸந்தனகீ  ஜய்

xxx

 வேகமாக ஹனுமான் சாலீசாவைப் படித்தால் ஐந்து அல்லது ஆறு  நிமிடங்கள் போதும். 100 தடவை படித்தால் 500 நிமிடங்கள் ; அதாவது சுமார் ஒன்பது மணி நேரம்; இதைத் தனியாகச் செய்வது கடினம்; இதற்காக பெரிய கோவில்கள், மண்டபங்களில் 100 தடவை படிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ( நானே லண்ட னில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்; ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பேசவும் அழைத்திருந்தார்கள்; நான் ஹனுமனை சூப்பர்மேன் பேட் மேன் ஸ்பைடர் மேன் சித்திரப் படக்கதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினேன் ; என் பேச்சு எடுபடவில்லை ; ஏனேனில் அவர்கள் ஹநுமானை சர்வ சக்தி வாய்ந்த கடவுளாகப் பார்க்கிறார்கள் ; நானும் அதை நம்பினாலும், அங்குள்ள இளைஞர்களைக் கவர்வதற்காக அந்த எடுத்துக் காட்டினைச் சொன்னேன்; லண்டனில் ஸ்ரீ ராம் பாபா நடத்தும் 100 முறை ஹனுமான் சாலீஸா பாராயணம் அடிக்கடி நடந்து வந்தது..

இறுதியாக, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும் என்ற திருவாசக சிவபுராண வரிகளை நினைவிற்கொள்ள வேண்டும் ; அதற்கும் மேலாக த்ரி கரண சுத்தியுடன் – மனம் மொழி, உடல் தூய்மையுடன் சொல்லவேண்டும்; அதற்கும் மேலாக தனக்கு மட்டுமின்றி சமுதாயத்துக்காக சொல்லுவது அதிக பலன்  தரும் ; எங்கெங்கெல்லாம் சாது, சந்யாசிகள், நால்வர் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் அற்புதங்களை நடத்தினார்களோ , அங்கெங்கெல்லாம் அவை எல்லாம் பிறருக்காக , சமுதாயத்திற்காக செய்யப்பட்டிருப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். .

இத்துடன் ஹனுமான் சாலீஸா நிறைவு பெறுகிறது ; ஹனுமான் பற்றிய அதிசய விஷயங்கள் , உலகெங்கிலும் உள்ள கோவில்கள் , பல நாட்டு ராமாயணங்களில் ஹனுமானின் வருணனை முதலியவற்றைத் தனித்தனியாகக் காண்போம்.

கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள கோவில் சுவர்களில் பல நூற்றுக் கணக்கில் ஹனுமான் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன; பெரும்பாலானவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை ; உப்புக் காற்றினாலும்; ஈரப்பதத்தினாலும் பொலிவு குன்றிவருகின்றன ; அரசாங்கம் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியாது; ஆர்வமுள்ளோர் அவைகளைப் புகைப்படம் எடுத்து வெளியிடுவதோடு வண்ண ஓவியங்களாகத் தீட்ட வேண்டும் . ஹனுமான் கதைகளை மதத்தின் நோக்கம் அழியாதபடி கார்ட்டூன்களாக, வீடியோ கேம்களாக எடுத்துக் குழந்தைகளிடம் பரப்பவேண்டும். ஸ்லோகங்களையும் கம் ப ராமாயணப் பாடல்களையும் பரப்பவேண்டும் ..

ஜெய் ஹனுமான் !

–subham—

Tags- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள், Part 12 , (last part)

Leave a comment

Leave a comment