அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-1 (Post No.13,613)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,613

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அவ்வையார் யார் ?

சங்க காலம் முதல் நமது காலம் வரை ஆறு அவ்வையார்கள்  இருந்தார்கள்; இன்னும் சிலர் மூன்று அவ்வையார்கள்தான் இருந்தனர் என்று வாதிடுவர்; ஆத்திச்குடி எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் இல்லை என்பது மொழி நடையைப் பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். அவர் யாராக இருந்தாலும் அவர் சொல்லும் அறிவுரைகள் ஆயிரம் பொன் பெறும் ; அவரைப் பின்பற்றி நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியும் புதிய ஆத்திச்சூடி எழுதினார் ; அதிலும் நல்ல மருத்துவ, உடல் நலம் பேணும் செய்திகள் உள .

முதலில் அவ்வையாரின் ஆத்திச்சூடியை எடுத்துக் கொள்வோம் ஆத்தி சூடிய சிவனை வணங்கி அகர வரிசைப்படி பாடியுள்ளார்.

13.அஃகம் சுருக்கேல்

13.DO NOT RAISE THE PRICE OF GRAIN/ DO NOT ALLOW YOUR KNOWLEDGE TO DIMINISH/ DO NOT ALLOW YOUR RELATIVES TO DIMINISH

இதற்கு அறிஞர்கள் இரண்டு மூன்று விளக்கங்களைத் தருகிறார்கள்

1.தானியங்களின் விலையை உயர்த்தாதீர்கள்

2.அறிவு பெறுவதைச் சுருக்காதீர்கள்

3.உங்கள் உறவினர்களை வாடும்படி விட்டுவிடாதீர்கள்

வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு, முதல் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளுவோம். நமது உணவில் பலவகை தானியங்கள் இருக்கவேண்டும். அரிசியும், கோதுமையும் இந்தியர்களின் அடிப்படை உணவு; அவை தவிர புரத்தைச் சத்து மிக்க பயறு வகை தானியங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் தான் அவ் வையும்  விலைவாசி பற்றி விளம்பினார் போலும்!

xxxx

16.சனி நீராடு

16.BATHE ON SATURDAY (WITH OIL)’ ; BATHE THE BODY IN SPRING WATER,  BATHING THE DEFILED MIND IN TRUTH.

இதற்கும் மூன்று விளக்கங்கள் உண்டு

1.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.

2.ஊற்று நீ ரில் குளியுங்கள் .

3. உண்மை எனும் நீரில் அழுக்கு மனத்தை அலசுங்கள்

இதில் முதல் பொருளே சரி; தமிழர்கள் ஆண்களுக்கு புதன், சனிக்கிழமைகளை ஆண்களுக்கும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை பெண்களுக்கும் எண்ணெய்க் குளியலுக்கு ஒதுக்கினார்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம, நகர மக்கள் அனைவரும் இதைச் செய்தனர் ; காலப்போக்கில் சுருங்கி விட்டது; அதன் விளைவு தலை முடி விரைவில் நரைக்கிறது ; வேர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்கு வெளியேறாமல் தோல் நோய்கள் வருகின்றன

xxxx

இரண்டு சுவையான விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன .

மதுரை அ வைத்தியநாதய்யர் மிகவும் புகப்பெற்ற மனிதர்; சுதந்திரப்போராட்ட தியாகி; தாழ்ததப்பட்ட ஜாதி மக்களையும் மதுரை மீனாட்சி கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்தார் . அவர் வாரம்  தோறும் சேரிகளுக்குச் சென்று ஹரிஜன சிறுவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவாராம் .

இன்னும் ஒரு  செய்தி ; நான் லண்டனில் பி.பி.சி.யில் வேலை பார்த்த காலத்தில் ஒரு நாள் எனக்கும் தமிழ் ஓசை ஒலி பரப்புத் தலைவர் சங்கர் அண்ணாவுக்கும் இடையே எண்ணெய்க்  குளியல்  பற்றி பேச்சு வந்தது. நன் சொன்னேன்: லண்டனுக்கு வந்த பின்னர் எண்ணெய் முழுக்கை விட்டுவிட்டேன்; இந்தக் குளிர்தேசத்தில் எவன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான்? என்று ஏக வசனத்தில் பேசிக்கொண்டே போனேன் ; இல்லை, தம்பி , நான் வாரம் தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்துக் குளிக்கிறேன் என்றார் . எனக்கு ஒரே வியப்பு ! லண்டனிலும் எண்ணெய்க்  குளியல்!

xxxx

26.இலவம் பஞ்சில் துயில்

26.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

துயில் = உறங்கு, தூங்கு= SLEEP

நல்ல அறிவுரை! தலையணைகளை பலவகையாகத் தயாரிக்கிறார்கள் ; பிளாஸ்டிக், ரப்பர் தலகாணிகளும் வந்துவிட்டன ; உள்ளுக்குள் பஞ்சுக்குப் பதிலாக தேங்காய் நார் , வெட்டிவேர், ரப்பர், போம் , பல வகை நார்கள் ஆகியன கொண்டும் தயாரிக்கிறார்கள் ; ஆனால் இந்தியா போன்ற , நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் வெப்ப நாடுகளுக்கு இலவம் பஞ்சு தலையணைதான் சிறந்தது. சங்க காலத்தில் அன்னத்தின் இறகுகளைக் கொண்டு பஞ்சு மெத்தை கள் , தலையணைகள் செய்ததாகப் பாடல்கள் உள்ளன! அதற்கு மிகவும் பொருட் செலவு ஆகும் ; பறவைகளைக் கொல்லும் பாவமும் வரலாம் ! ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை இலவம் பஞ்சு தான் .

XXXX

31.அனந்தல் ஆடேல்

31.DO NOT SLEEP TOO LONG; DONT BE LAZY

இரண்டு பொருள்களை ஆன்றோர் பகர்வர்.

நீண்ட நேரம் தூங்காதே அல்லது  சோம்பேறி போலத் தூங்காதே

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு ஆறு மணி நேரம் தூக்கம் போதும்; நோயாளிகளுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் போதும். பளிச் சிறுவர்களுக்கு பத்து மணி நேரம் தூக்கம் தேவை.

அனந்தல் என்பது இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட தூக்கம்.

திருப்பாவை பாடிய ஆண்டாள் ஒரு டீன் ஏஜ் கேர்ள் ; பருவக் குமரி .

அவள் என்ன சொல்கிறாள் ?

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று

நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

********

Mansion studded with pure precious stones

Wicks of light all around gleaming

Asleep a couch perfume afloat;

Thou, uncle’s daughter , unlock the door bedecked

Auntie, would you arouse her ?

Is your daughter dumb, deaf, lazy and dreaming ?

Accurs’d to a grand sleep with a sentry ?

Extol Him as Madhava,

Great hypnotist Mukuntha

And so forth chant the Vaigunta;

Listen and consider our damsel

(Translation by Dr Chenni Padmanabhan)

குறட்டை விட்டுத் தூங்குவோரின் ஆயுள் குறையும் என்று மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் செப்புகின்றன. எது எப்படியாகிலும், எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்குவது தேவை இல்லை..

ஏனெனில் அவ்வையார்  இத்தோடு  நிறுத்தவில்லை; வைகறையில் துயில் எழு என்கிறார் ; அதையும் ஆராய்ச்சிக் கண்களோடு நோக்குவோம்.

To be continued………………………..

Tags- துயில் , அனந்தல் , அவ்வையார்,  ஆத்திச்சூடி,   மருத்துவ அறிவுரைகள், பகுதி -1 , சனி நீராடு , எண்ணெய்க் குளியல் , எ.வைத்தியநாதய்யர், ஆண்டாள், திருப்பாவை, அஃகம் ,இலவம் பஞ்சு

Leave a comment

Leave a comment