அமராவதி சிவன் கோவில்- Part 17 (Post No.13,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,501

Date uploaded in London – 2 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

அமராவதி சிவன் கோவில்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 17

அமராவதி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் 17

எங்கே இருக்கிறது?

ஆந்திர மாநிலத்தில் குண்டூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது .

விஜயவாடா , குண்டூர்  நகரங்களிலிருந்து பஸ்ஸில் செல்லலாம்; விஜய வாடாவிலிருந்து கிருஷ்ணா நதி படகு சர்வீஸில் அமராவதிக்குச் செல்லலாம்

சிறப்பு என்ன?

அமராவதி லிங்கம் 15 அடி உயரம் இருப்பதால் அர்ச்சகர்கள் தஞ்சசைப் பெருவுடையார் கோவில் போல ஏணிப்படிகளில் ஏறி நின்றுதான் அபிக்ஷேக ஆராதனைகளை செய்கிறார்கள்.

ஆந்திரத்திலுள்ள ஐந்து பஞ்சாரம சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று  ஆண்டுக்கு சிவராத்திரி விழாவின் போது 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை உண்டியல் வசூல் வருகிறது.

சிவராத்திரியின் போது பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் கோவிலில் சிவன், அம்பிகாவைத் தவிர எல்லா பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் உண்டு.

2200 ஆண்டுக்கும் மேலான வரலாறு உள்ள இடம் அமராவதி. புத்தமதத்தின் முக்கிய தலம் .இந்து மதப் பேரரரசர்களாகிய சாதவாகன அரசர்களின் தலை நகரம்.

ஸ்ரீமுக சாதவாகன அரசன் தலைமையில் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி தென்னிந்தியாவில் அசைக்கமுடியாத ஆட்சியை அமைத்து 400 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்தனர்.

தமிழர்கள் அறியாத ரகசியம் !

இமயத்தில் சோழன் கொடி நட்டான்; சேரன் கொடி நட்டான்; பாண்டியன் கொடி நட்டான் என்றெல்லாம் எழுதுவோர் ஒரு முக்கிய ரகசியத்தை மறைக்கின்றனர்; அல்லது கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றனர். தமிழர்களின் மிகப்பெரிய நண்பர்கள் சாதவாஹனர்கள் . இந்துப் பேரரசர்கள் என்பதால், யாரெல்லாம் புனித கங்கையில் நீரெடுக்க (கன்வர் யாத்ரா), அல்லது ஸ்நானம் செய்யப் போகிறார்களோ,  யாரெல்லாம் புனித இமய மலைக்கு கல் சேகரிக்க செல்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுப்பார்கள். இதனால் வட இந்திய மன்னர்கள் இவர்கள் மீது கைவைக்க அஞ்சுவார்கள் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவன் இரண்டு முறை கங்கைக்குச் சென்றான் என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் செப்புகிறார். சாதகர்ணி — நூற்றுவர் கன்னர் — என்னும் சாதவாஹன பேரரசன் உதவி செய்ததை இளங்கோ அடிகள் நன்றியுடன் பகர்கிறார் .

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவர்கள் உதவி இல்லாமல் தமிழர்கள் வேங்கடத்தைத் தாண்டிச் செல்ல முடியாது.

xxxx

இந்துக் கடவுளர்களின் இளிச்சவாயன் சிவபெருமான்தான். யார் கொஞ்சம் புகழ்ந்தாலும், நம்பினாலும், ஓடி வந்து உதவி செய்வார். இதனால் அவருக்கு ஆசுதோஷ் என்று பெயர். இதன் பொருள் விரைவில் சந் தோஷம் அடைபவர். இதனால் எல்லா அசுரர்களும் முதலில் வணங்கி  வரம் பெறுவது சிவனிடம் தான் . பஸ்மாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும். அது போல தாரகாசுரன் என்பவனும் யாராலும் வெல்ல முடியாத வரம் வாங்கி ஆட்டப்பாட்டங்களைத் தொடங்கவே நல்லோர் அனைவரும் நடுங்கினர். அவர்கள் சிவனை வேண்டவே அவர் மகன் குமரனை அனுப்பினார்;.தாராகசுரன் அணிந்து  இருந்த மாலையை அவர் உடைத்தபோது அதில் இருந்த சிவலிங்கம் கீழே  விழுந்து வளர்ந்தது. அதை இந்திரன் வாணங்கவே  இந்த இடம் அமராவதி எனப் பெயர் பெற்றது . கடவுளரின் இருப்பிடம்  என்பது அர்த்தம்; அமரர்களான தேவர்கள்  வாழ்விடம், இருப்பிடம் என்பது பொருள். தாரகாசுரனை முருகன் வதம் செய்தார்.

மேலுலகத்திலும் இந்திரன் தலை நகர் அமராவதி . பூலோக அமராவதி நகர் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது. அமரேஸ்வரர் என்பது சுவாமியின் திருநாமம். நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. இங்கு கிருஷ்ணா நதியில் புனித நீராடி சிவனை வணங்கினால் காசிக்குச் சென்று கங்கையில் குளித்து விஸ்வநாதனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கர்ப்பக் கிரகத்தில் உள்ள லிங்கம் மிக உயரமானது ( 15 அடி உயரம் ) ;அருகில் பால சாமுண்டா அம்பிகாவின் சந்நிதியும்  இருக்கிறது .

இப்போதுள்ள கோபுரங்கள் சுமார் 800 ஆண்டுகள் பழமையானவைதான். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி கேட ராஜா என்பவர் திருப்பணி செய்தார்.

1796-ம் ஆண்டில் வட்டார சிற்றரசர் வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு தனது தலைமையகத்தை அமராவதிக்கு மாற்றி , வாழ்நாள் முழுதும் நிறைய கட்டிடங்களை எழுப்பினார்.

xxxx

கோவிலில் நிறைய புத்த மத தாக்கமும் தெரிகிறது. தமிழ்நாட்டைப்போலவே புத்தர்களும் சமணர்களும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்க, அவர்களை சைவர்கள் விரட்டியடித்தனர் . இந்து விரோதிகள், இதை மாற்றி நாம் புத்த மத இடத்தை ஆக்ரமித்ததாக கதை எழுதுவார்கள் .ஆனால் இந்தப் பொய்க்கதைகளுக்கு இலக்கியச் சான்றுகளோ கல்வெட்டுச் சான்றுகளோ இல்லை. இப்படிப் பொய்க்கதை எழுதிய பயல்கள் ஒரு சான்றினையும் கொடுப்பதில்லை. இதே போல அயோத்தியா, மதுரா, காசி ஆகிய இடங்களில் மத வெறியர்கள் நம் கோவில்களை ஆக்ரமித்ததை வடக்கில் காண்கிறோம்.

xxxx

ஆந்திரத்தின் புதிய தலை நகரம்

ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆந்திரம், தெலுங்கானா என்று பிரித்த பின்னர் அமராவதி நகரை ஆந்திரத்தின் தலைநகராக அறிவித்தனர்.

அமராவதியில் நிறைய புத்த சமய  சின்னங்கள், சிலைகள், கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன. இவைகளில் முக்கியமானவைகளை பிரிட்டிஷார் திருடி, லண்டலிலுள்ள  பிரிட்டிஷ் மிஸியத்தில்  காட்சிக்கு வைத்துள்ளனர். ராபர்ட் கிளைவ் முதல் மவுண்ட்பேட்டன் காலம் வரை திருடிய பொருட்களை பிரிட்டன் முழுதும் எல்லா மியூசியங்களிலும் காணலாம் ( நான் லண்டலிலுள்ள எல்லா மியூசியங்களையும் ஆக்ஸ்போர்டிலுள்ள மியூசியங்களையும் பார்த்திருக்கிறேன்).

இவை தவிர, இன்று வரை இந்தியத் திருடர்கள் உலகப் புகழ்பெற்ற ஏல  நிறுவனங்களுக்கு  இவைகளைக் கடத்தி விற்பனை செய்வதையும் பத்திரிகைகளில் படிக்கிறோம்.

அமராவதியில் 2000  ஆண்டுப் பழமையான புத்த ஸ்தூபி உள்ளது. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட 125 அடி உயர தியான புத்தர் சிலையும் மியூசியமும், பெளத்த கல்வி நிறுவனமும் இருக்கிறது. இதனால் சாஞ்சி , சாரநாத், புத்த கயா போல இங்கும் நிறைய வெளி நாட்டுப் பயணிகள் வருகின்றனர்.

—subham–

Tags–அமராவதி, புத்த ஸ்தூபி, ஆந்திரம், அமரேஸ்வரர் , சிவன் கோவில், ஆந்திர மாநிலம் , 108 புகழ்பெற்ற கோவில்கள் , பகுதி-17

ராமாயணத்தில் சாபங்கள் (60)  சுக்ராசாரியர் தண்டக வனம் அழியுமாறு சபித்தது (Post No.13,500)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.500

Date uploaded in London – 2 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (60) 

ராமாயணத்தில் சாபங்கள் (60சுக்ராசாரியர் தண்டக வனம் அழியுமாறு சபித்தது! 

ச. நாகராஜன் 

உத்தர காண்டத்தில்  எண்பத்தோராவது ஸர்க்கமாக அமையும்  தண்டமஹாராஜனின் சாபம் என்ற ஸர்க்கத்தில் சுக்ராசாரியர் தண்டனுக்குக் கொடுத்த சாபத்தைப் பார்த்தோம்..

தண்டமஹாராஜனுக்கு சாபத்தைக் கொடுத்த சுக்ராசாரியர் அடுத்து தண்டகவனம் அழியுமாறு சாபத்தையும் கொடுத்தார்.

ஸமந்தாத்யோஜனசதம் விஷயம் சாஸ்ய துர்மதே: |

தக்ஷயதே பாம்ஸுவர்ஷேண மஹதா பாகஷாஸன: ||

 பாகஷாஸன: – இந்திரன்

அஸ்ய – இந்த

துர்மதே: – துஷ்டனுடைய

விஷயம் – தேசத்தை

ஸமந்தாத் – எல்லாப் பக்கங்களிலும்

யோஜனசதம் ச – நூறு யோஜனை வரைக்கும்

பாம்ஸுவர்ஷேண – மண்மாரியால்

தக்ஷயதே – அழித்து விடுவான்

 சர்வசத்த்வானி யானீஹ ஸ்தாவராணி சராணி ச |

மஹதா பாம்ஸுவர்ஷேண விலயம் சர்வதோகமன் |\

இஹ – இவ்விடத்தில்

சர்வசத்த்வானி – சகல ஜீவன்களும்

சராணி – சரங்களும்

ஸ்தாவராணி ச – அசரங்களும்

யானி – எவைகளோ அவைகள்

மஹதா – கொடிய

பாம்ஸுவர்ஷேண – மண்மாரியால்

சர்வத: – முற்றிலும்

விலயம் – நாசத்தை

அகமன் – பெறும் 

தண்டஸ்ய விஷயோ யாவத்த்காவத்சர்வசமுச்சயம் |

பாம்ஸுவர்ஷமிவாலக்ஷ்யம் சப்தராத்ரம் பவிஷ்யதி ||

தண்டஸ்ய – தண்டனது

விஷய: – தேசம்

யாவது – எவ்வளவோ

தாவத் – அவ்வளவும்

பாம்ஸுவர்ஷ – மண்மாரி

ஆலக்ஷ்யம் – பிரத்யக்ஷமாய்

சர்வசமுச்சயம் இவ – முழு விரோதியென

சப்த ராத்ரம் – ஏழு ராத்திரிகள்

பவிஷ்யதி – பொழியும் 

இத்யுக்த்வா க்ரோததாம்ராக்ஷஸ்ததாஸ்ரமநிவாஸினம் |

ஜனம் ஜனபதாந்தேஷு ஸ்தீயதாமிதி சாப்ரவீத் |\

க்ரோததாம்ராக்ஷ – கோபத்தால் சிவந்த கண்களையுற்றவராக இருந்த அவர் (சுக்ராசாரியார்)

இதி உக்த்வா – இப்படிச் சபித்து விட்டு

ததாஸ்ரம நிவாஸிதம் – அந்த ஆசிரமத்தில் குடியிருந்த

ஜனம் ச – ஜனங்களையும் பார்த்து

ஜனபதாந்தேஷு – தேசத்திற்கு வெளிப்பிரதேசங்களில்

ஸ்தீயதாம் – குடியேற வேண்டியது

இதி – என்று

அப்ரவீத் – விதித்தருளினார்

         உத்தரகாண்டம், எண்பத்தோராவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 8  முதல் 11 முடிய.

 இப்படி சபித்த சுக்ராசாரியார் அங்கு வசித்த அனைவரும் வெளிப் பிரதேசங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்று விதித்தருளினார்.

 உடனே அங்கிருந்த ஜனங்கள் அங்கிருந்து வெளியேறினர்.

தானும் அங்கிருந்து வெளியேறி வேறிடத்தில் அவர் வசிக்கலானார்.

 விந்தியாசலமலைக்கு மத்தியில் இருக்கும் தண்டனது தேசம் சபிக்கப்பட்டு அழிந்தது. அன்று தொட்டு இது தண்டகாரண்யம் என்ற பெயரால் அழைக்கப்படலாயிற்று.

இங்கு தபஸ்விகள் வாசம் செய்த காரணத்தால் இதற்கு ஜனஸ்தானம் என்ற பெயரும் உண்டு.

 இப்படி விரிவாக அகஸ்தியர் ராமருக்கு தண்டகாரண்யம் பற்றி முழுவதுமாகக் கூறியருளினார்.

 ***

 அடுத்த அத்தியாயத்துடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

Cartoons are Historical Records 1-8-2024

Kerala is called God’s Own Country

Cartoons are Historical Records 1-8-2024

Posted by London Swaminathan

Following cartoons are from Deccan Chronicle Newspaper. They are records of current affairs; may help future researchers.

–subham–

tags- cartoons, 182024

Mirror in Viveka Chudamani Tirumular, R K Paramahamsa, Tolkappiar; Research Notes -28 (Post.13,499)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,499

Date uploaded in London – 1 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In Hinduism mirror is considered one of the auspicious objects. As soon as they get up in the morning, they look at their right-hand palm or a mirror. Young girls are invited to houses and mirror, comb and Kumkum are distributed to them during Navratri festival period. On the new year day, they look at the mirror when they wake up. When the god’s statue is taken in palanquin procession through the city streets, a mirror is placed in front of the idol so that people can see it from different angles. If mirror is broken by fall, they consider it as an ill omen.

Mirror is also used by all the saints to teach us about illusion, desire and reflection of the world etc. Lord Krishna started this , and we read in the Gita,

धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च |
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् || 38||

dhūmenāvriyate vahnir yathādarśho malena cha
yatholbenāv
ito garbhas tathā tenedam āvitam

dhūmena—by smoke; āvriyate—is covered; vahni—fire; yathājust as; ādarśhamirrormalena—by dust; cha—also; yathā—just as; ulbena—by the womb; āvita—is covered; garbha—embryo; tathā—similarly; tena—by that (desire); idam—this; āvitam—is covered

dhumenavriyate vahnir yathadarsho malena cha
yatholbenavrito garbhas tatha tenedam avritam

Translation

BG 3.38: Just as a fire is covered by smoke, a mirror is masked by dust, and an embryo is concealed by the womb, similarly one’s knowledge gets shrouded by desire.

xxxx

Kalidasa

In the Raghu vamsa, Kalidasa imagines the face of Indumati (7—68) to be like a mirror. The face of Indumati shone with joy when freed from the sadness arising from the adversary. The mirror also resumes its brightness by the disappearance of moisture. 

When the wind, charged with rain drops blows, a mist like moisture gathers on the surface of the mirror which obscures in transparency, similarly the infamy of the acceptance of Vaidehi who had dwelt in the house of Ravana which is a stain now come upon the royal family sprung from the sun and pure by virtues of good conduct (Raghu vasa 14-37).

in Sakuntam drama also Kalidasa used this image (AS 7-32) 

xxxx

Adi Shankara says in his Viveka Cudamani (291):-

यत्रैष जगदाभासो दर्पणान्तः पुरं यथा ।
तद्ब्रह्माहमिति ज्ञात्वा कृतकृत्यो भविष्यसि ॥ २९१ ॥

yatraiṣa jagadābhāso darpaṇāntaḥ puraṃ yathā |
tadbrahmāhamiti jñātvā kṛtakṛtyo bhaviṣyasi || 291 ||

291. That in which there is this reflection of the universe, as of a city in a mirror – that Brahman art thou; knowing this thou wilt attain the consummation of thy life.

This refection of a big city or some object in a small mirror has been used by Tamil Poets Kapilar, Tolkappiar and Tiruvalluvar. It looks like it is popular imagery.

 Famous Tamil poet Kabilar, in the laudatory verse Tiruvalluva malai, praised the book Tamil Veda Tirukkural and compared it to a small dew drop on a grass tip reflecting a big tree nearby. Every couplet of Tirukkural reflects big things like this.

xxxx

Ramakrishna Paramahmsa’s Quote on Mirror.

Tirumular in his Tirumanthiram says,

1681. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 

1681 They seek Worldly Pleasures

From out of mind, mirror of illusion rises

Think of it, even its shadows they see not

And nothing they do for the fruits of Karma to drop;

The temptations of the backyard drain, they go after.

xxxx

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

603: Look Within in Dhyana
Well may they practise Yoga eight-thousand year
Still they see not Lord,
Sweet as ambrosia
And dear unto apple of eye;
But if within you seek Him enlightened
He within you is,
Even unto reflection in the mirror.

xxxx

 பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5

2986: He is Seen in the Mind-Mirror

He appears not in the glasses of the fleshly eye;

He is in the Lotus of the Heart;

He appears in the glass of Vedic Jnana;

He is in the mind-glass of the righteous that think of Him,

Him I saw in the glass of songs

Listening to that Divine Music,

I enraptured stand.

xxxx

உண்ணாடும் ஐவர்க்கு மண்டை யொதுங்கிய
விண்ணாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற்
கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.

223 God is Inward Where the Five Sense Controlled Meet

If you ask,

How the Heavenly Space within the cranium is,

Where the inward looking Five abide,

Verily it is,

Unto gazing upward into a mirror

(Seeing the self-reflected in crystal purity)

At a junction

Where the Five, in control, meet.

xxxx

Mirror in Early Tamil Literature

Tiruvalluvar himself used the mirror image in his work Tirukkural:-

The mirror reflects nearby objects; even so the face indicates emotions throbbing in the mind (Kural 706). 

Tolkapiyam, oldest Tamil book, also used similar image. When the author Tolkappiyar explained what a Sutra (an aphorism) is he used this beautiful simile (1425)

A sutra is like a big mountain reflected In a mirror, shows/explains everything.

There are innumerable works where we come across mirror or looking glass in Tamil and Sanskrit works. I have already written about the Mirror Temple constructed by Sri Narayana Guru, a social reformer of Kerala. Big temples in Tamil Nadu has a beautiful mirror room for god where the idol is reflected thousands of times. Though God is one we see him in 330 million ways- that is the message these mirror rooms convey.

xxxx

Some Mirror Stories

Parrot and Mirror

The method by which a parrot is taught to speak is unique. The trainer places a big mirror in front of the newly caught parrot and talks to it from behind the mirror. The parrot thinks that another parrot is teaching it to talk and imitates the voice of the trainer. Trained in this manner, the parrot, picking up the language of the trainer, begins to talk fluently in the human language.

This is how a saint teaches his disciples. Apparently it is human being who is instructing them, but, verily, it is God hidden in the Guru that gives illuminating advice to the disciples. So, whenever the aspirant receives instructions from the Guru, he should consider that such instructions come from God himself. Truly, God and Guru are one.

Freedom is the Goal

In a war in Europe, a sailor was captured by the enemy and was put into prison. After fifteen years he was released, as the warring countries contracted an alliance through a treaty. On the day of release, a friend placed in his hands a purse containing £50/- When the sailor was passing through the streets, he saw a shop in which he saw various species of birds in cages kept for sale. He went up to the shop and bought all the cages from the money he possessed and, by opening the trap doors of the cages, set free the imprisoned birds one by one. The shop man was astounded at this. He asked why the sailor having bought the birds at such high prices, released them all.

—-subham—

Tags- Mirror , Viveka Chudamani, Tirukkural, Tirumular, Tirumanthiram, Bhagavd Gita, Tolkappiam, VC part 28, Paramahamsa

ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு செய்த அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16 (Post.13,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,498

Date uploaded in London – 1 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு செய்த அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16

ஆந்திரப்பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள பெருமாள் கோவில் ஆந்திர மஹாவிஷ்ணு கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில். விஜய நகர சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்தவர் கிருஷ்ணதேவ ராயர் (1509-1529); இந்து மதத்திற்கு மகாராஷ்டிர வீர சிவாஜி போல புத்துயிர் ஊட்டியவர் . 500 ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பதி பாலாஜி கோவிலுக்கு மட்டுமே பத்து முறை விஜயம் செய்ததை கல்வெட்டுகள பறைசாற்றுகின்றன . அவரது கனவில் ஆந்திர விஷ்ணு தோன்றி, ஆண்டாளின் பெருமையை  தெலுங்கு மொழியில் எழுதுமாறு பணித்தார். உடனே கிருஷ்ண  தேவராராயர் தெலுங்கு மொழியில் ‘ஆமுக்த மால்யத’  என்ற பெயரில் திருப்பாவை போலவே 30 பாடல்களில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரெங்கநாதருக்கும் நடந்த திருமண வைபவத்தை மொழிபெயர்த்தார். இதன் பொருள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி (ஆண்டாள்). ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவையுடன் ஒப்பிடவல்லது.

கிருஷ்ண தேவராயர் பன்மொழி வித்தகர்; ஏன் தெலுங்கு மொழியில் எழுத வேண்டும்? என்று வினவினார் . உடனே விஷ்ணுவும் விடை பகர்ந்தார்; தெலுங்கு மொழி இனிமையனது; சிறந்த ஒரு மொழி; ஆகவே தெலுங்கினால் எம்மைப்பாடுக என்று பணித்தார். இது சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்ற பாரதியார் வரிகளை நமக்கு நினைவூட்டும்.

ஆந்திர விஷ்ணு கோயிலின் முன் காட்சி; விக்கிபீடியா

Teluga dēla yenna dēśambu delugēnu
telugu vallabhuṇḍa telugokaṇḍa
yella nr̥pulu goluva nerugavē bāsāḍi
dēśabhāṣalandu telugu les’sa

If you ask, ‘Why Telugu?’ It is because this is Telugu country and I am a Telugu king. Telugu is sweet. After speaking with all the kings that serve you, didn’t you realize – amongst all the languages in the country, Telugu is the best!

இந்தக் கோவிலின் பெருமாளுக்குப் பல பெயர்களை கல்வெட்டுகள் செப்புகின்றன. அவை – ஆந்திர அல்லது தெலுகு வல்லப ராய ஸ்ரீகாகுளேஸ்வர , மது சூதன . இதை தமிழ் நாட்டின் ஒரு பகுதியையும் ஆண்ட சம்புவ வராய மன்னர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பெயராகப் பயன்படுத்தினர் . மன்னர் சுசீந்திரனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஆந்திர வல்லப ராஜா மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றும் அவர் ஸ்ரீகாகுள வட்டாரத்தை ஆண்டார் என்றும் 17ஆம் நூற்றாண்டுக் கவிஞர் கோதண்டராம கவி பாடியிருப்பதால் ,இதன் வரலாறு சாத வாஹனர் /சதகர்ணி காலத்துக்குச் செல்கிறது.

xxxx

இனி கோவிலை தரிசிப்போம்

ஸ்ரீகாகுளம் விஷ்ணு கோவில்

இப்போது கர்ப்பக்  கிரகத்தில் விஷ்ணுவை தரிசிக்கலாம்  அர்த்த மண்டபம், மஹா மண்டபங்களில் இரு புறங்களில் ராஜ்ய லெட்சுமி, சென்ன கேசவப்பெருமாளை சேவை சாதிக்கலாம். கோவில் வளாகத்தில் கணபதி, மகிஷாசுர மர்த்தனி , ஜனார்த்தனர் , வேணு கோபால சுவாமி, வராஹ அவதார உருவங்கள் சிலை வடிவில் உள்ளன  .ராஜ கோபுரத்திலும் கொஞ்சம் சிற்பங்களைக் காணலாம். தாமரையில் உள்ள இளம் வயது விஷ்ணு/அல்லது கிருஷ்ணர் சிற்பம் குறிப்பிடத்தக்கது.

கோவிலின் தெய்வம் ஆந்திர மகா விஷ்ணு அல்லது ஸ்ரீகாகுளந்திர மகா விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் . பிரதான கருவறை சாதவாகனப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டது. சாதவாகனர்கள் எந்த தெய்வத்துக்காக இக்கோவிலைக் கட்டினார்கள் என்பது தெரியவில்லை. முஸ்லிம் தாக்குதல்களால் சேதமைடைந்த பிறகு சல்லப்பள்ளியைச் சேர்ந்த எர்லகட மன்னர்கள் இதைச் செப்பனிட்டனர்

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் தனது கலிங்கப் பயணத்தின்போது விஜயவாடா வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இக்கோவிலைப் பற்றி அறிந்து ஸ்ரீகாகுளம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் அவர் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். ஆந்திர விஷ்ணு கிருஷ்ண தேவராயனுக்கு , அதிகாலை நேரத்தில் தனது கனவில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளான்.

இவை அனைத்தும் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்

முஸ்லீம் படையெடுப்புகளால் கோவில் அழிந்துவிட்டதால் பழைய கோவில் பற்றிய தகவல்களை கல்வெட்டுகளிலிருந்து மட்டுமே அறிய முடிகிறது. 1132-ஆம் ஆண்டு முதல் சுமார் 32 க ல்வெட்டுக்கள் உள்ளன. ஏராளமான தெலுங்கு நூல்கள் இந்தக் கோவிலைக் குறிப்பிடுகின்றன .கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலில் தங்கியபோது இருந்த மரத்தினாலான மண்டபத்தைத் தகர்த்து கான்க்ரீட் கட்டிடத்தை எழுப்பிவிட்டனர் வரலாறு தெரியாத அறிவிலிகள்.  பின்னர் முஸ்லீம் ஆட்சிக்காலத்தில்  கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது . ஒரு தெலுங்குக் கவிஞர் கோவிலின் பரிதாப நிலை பற்றிக் கவி பாடியவுடன் வட்டார மன்னன் கோவிலைப் புதுப்பித்தான். இன்று நாம் காண்பதெல்லாம் பழைய வழித்தடத்தில் எழும்பின புதிய கட்டிடங்கள் தான்.

தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள்  மன்னரைக் கடவுள் என்றே போற்றுகின்றன. அதே போல கல்வெட்டுகளும் தெலுங்கு கவிதைகளும் ஹரியின் புதல்வனாக அறிவித்த மன்னர்கள் இந்தக் கோவிலை எழுப்பியதைக்  கூறுகின்றன. கோவிலுக்கு வெளியே, இந்த வட்டாரத்திலுள்ள கல்வெட்டுகள் இதை சாதவாகன மன்னன் கட்டியதாகச் சொல்லுவதால் 2000 ஆண்டுப பழமையை அறிய முடிகிறது. புகழ்பெற்ற வைணவ ஆசார்யர் காஞ்சீபுர வேதாந்த தேசிகனின் மகன் வரத தேசிகனும் ஆந்திர விஷ்ணு மீது துதி பாடியதால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தலம் சீரும் சிறப்புடனும் விளங்கியதை அறிய முடிகிறது. இங்குள்ள 32 கல்வெட்டுகளும் வரலாற்றை அறிய பெரும் துணை புரிகிறது .

ஆங்கிலத்தில் Srinivas Sistla, Associate Professor, Department of Fine Arts, Andhra University, Visakhapatnam;(sistlasrini@gmail.com) எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் (May, 2022) மேலும் பல விவரங்கள் இருக்கின்றன.

விசாகப்பட்டிணம் விமான நிலையத்திலிருந்து 116 கி.மீ. தொலைவில் ஸ்ரீகாகுளம் உள்ளது. இப்பொழுது இது தனி மாவட்ட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது 

—subham—

Tags-ஸ்ரீகாகுளம், ஆந்திர விஷ்ணு, அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16, ஆமுக்த மால்யத, கிருஷ்ணதேவ ராயர், திருப்பாவை

ராமாயணத்தில் சாபங்கள்  (59) சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது! (Post.13,497)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.497

Date uploaded in London – 1 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (59) 

ராமாயணத்தில் சாபங்கள் (59சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் எண்பத்தோராவது ஸர்க்கம் ‘தண்டமஹாராஜனின் சாபம்’ என்ற ஸர்க்கம்.

இந்த ஸர்க்கத்தில் தண்டகவனத்தில் ஏன் யாருமே இல்லை என்ற ஶ்ரீ ராமரின் கேள்விக்கு அகஸ்திய முனிவர் பதில் கூறுகிறார்.

தண்டன் பெற்ற சாபத்தைப் பற்றி அகஸ்திய முனிவர் ராமருக்கு விளக்கலானார்.

முன்னொரு காலத்தில் தண்டன் சுக்ராசாரியரது ஆசிரமத்தில் உலாவினான்.

அப்போது சுக்ராசார்யரின் புதல்வியான மிக்க அழகுடைய அரஜையைக் கண்டான். காமவசப்பட்டு அவளை ஸம்போகம் செய்யப் போவதாகக் கூறினான்.

உடனே அரஜை, “நான் சுக்ராசாரியாரது மூத்த புதல்வி. என் பெயர் அரஜை. என் தந்தையை அணுகி நேர்வழியை அணுக வேண்டும். இல்லையேல் கொடிய துன்பத்திற்கு ஆளாவாய்” என்றாள்.

ஆனால் காமவசப்பட்ட தண்டன் அவளை வலுக்கட்டாயமாக கற்பழித்தான்.

பின்னர் அவன் மதுமந்தம் என்கின்ற நகருக்குச் சென்று சேர்ந்தான்.

அரஜை அழுது கொண்டே தந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தையான சுக்ராசாரியர் வந்தவுடன் நடந்ததைக் கூற அவர் மிகுந்த கோபம் கொண்டார்.

பின்னர் தன் சீடர்களைப் பார்த்து கோபாவேசத்துடன் கீழ்க்கண்ட சொற்களை மொழிந்தார்:

பச்யத்வம் விபரீதஸ்ய தண்டஸ்யாவிஜிதாத்மன: |

விபர்தி கோரசங்காஷாம் க்ரூரத்தாமக்னிஷிகாமிவ |\

அவிஜிதாத்மன: – மனப்போக்கை அடக்காது

விபரீதஸ்ய – அதர்மத் தொழிலில் துணிந்து விட்ட

தண்டஸ்ய – தண்டனுக்கு

க்ரூரத்தாம் – மஹா கடுமையான கொழுந்து விட்டெரியும்

அக்னிஷிகாம் – அக்னி ஜ்வாலையை

இவ – போன்ற

கோரசங்காஷாம் – பயங்கரமான

விபர்தி – ஆபத்தை

பச்யத்வம் – இதோ பாருங்கள்

க்ஷமோஸ்ய துர்மதே: ப்ராப்த: ஸானுகஸ்ய துராத்மன: |

ய: ப்ரதீப்தாம் ஹுதாஷஸ்ய ஷிகாம் வி ஸ்ப்ருஷ்டுமிச்சதி |\

ய: – எவன்

ஹுதாஷஸ்ய – அக்னியினது

ப்ரதீப்தாம் – கொழுந்து விட்டெரியும்

ஷிகாம் – ஜ்வாலையை

ஸ்பருஷ்டும் – கையால் தீண்ட

இச்சதி வை – துணிந்து விட்டானோ

துர்மதே – அப்படிப்பட்ட மூடனும்

துராத்மன: – துஷ்டனும்

ஸானுகஸ்ய – பரிவார ஜனங்களுடனும் இருப்பவனுமான

அஸ்ய – அவனுக்கு

க்ஷய: – நாசம்

ப்ராப்த: – வந்து விட்டது

யஸ்மாத்ஸ க்ருதவான் பாபமீத்ருஷம் கோரஸம்ஹிதம் |

தஸ்மாத்ப்ராப்ஸ்யதி துர்மேதா: பலம் பாபஸ்ய கர்மண: |\

ஸ: – அந்த

துர்மேதா: – மூடன்

மீத்ருஷம் – இப்படிப்பட்ட

கோரஸம்ஹிதம் – அசஹ்யமான

பாபம் – பாபச் செயலை

க்ருதவான்  – செய்து விட்டான்

யஸ்மாத் தஸ்மாத் – என்கின்றபடியால்

பாபஸ்ய  – பாவ

கர்மண: – செயலின்

பலம் – பயனை

ப்ராப்ஸ்யதி: – இதோ அடையப் போகிறான்

சப்தராத்ரேண ராஜாசௌ சப்ருத்யபலவாஹன: |

பாபகர்மசமாசாரோ வதம் ப்ராப்ஸ்யதி துர்மதி: ||

அசௌ – இந்த

துர்மதி: – மூடனும்

பாபகர்மசமாசார: – பாவத் தொழிலைப் புரிந்துவிட்டவனுமான

ராஜா – மன்னன்

சப்ருத்யபலவாஹன: – மிருத்யர்கள், சைன்யங்கள் இவைகளோடும் வாஹனங்களோடும் கூடியவனாய்

சப்தராத்ரேண – ஏழு தினங்களுக்குள்

வதம் – மரணத்தை

ப்ராப்யதி – அடைவான்

இப்படி சாபத்தைக் கொடுத்த சுக்ராசாரியர் மேலும் கூறினார்:

“இந்திரன் இந்த துஷ்டனுடைய தேசத்தை எல்லாப் பக்கங்களிலும் நூறு யோஜனை வரைக்கும் பிரம்மாண்டமான மண்மாரியால் அழித்து விடுவான்.

இவ்விடத்தில் ஸகல ஜீவன்களும், சரங்களும், அசரங்களும், எவைகளோ அவைகள் கொடிய மண்மாரியால் முற்றிலும் நாசத்தைப் பெறும்.

தண்டனது தேசம் எவ்வளவோ அவ்வளவும் மண்மாரி பிரத்யக்ஷமாய் முழு விரோதி என ஏழு ராத்திரி பொழியும்.” என்றார்.

பின்னர் நடந்ததை அடுத்துக் காணலாம். 

***