Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)
We celebrated Janmashtami, Lord Krishna’s Birth Day, in the Northwick Hospital in Greater London area last week. It was celebrated six days before Janmashtami, because devotees will be very busy near the actual day.
It was part of our weekly prayers in the chapel in the hospital. About 100 devotees from the hospital, both patients and staff, took part in it. Volunteers from Swaminarayan temple and Harekrishna temple came and sang the songs glorifying Lord Krishna.
We did singing with dance in the last 15 minutes . Volunteers from the ISKCON, Hare Krishna Temple led the group. All the devotees joined them enthusiastically. Prasad was distributed at the end. The function went on for two hours.
Wednesday is allocated for Hindu Prayers. And we do celebrate major festivals including Diwali.Hospital Hindu Chaplain V V Swaminathan leads the prayer every week.
Please see my pictures taken on the day.
Picture of Hospital Hindu Chaplain V V Swaminathan with the Swaminarayan Temple Bhajan Group.
–subham–
tags- Janmashtami Celebrations in London Hospital , Northwick Park Hospital
மனோ ஜவம் மாருத துல்ய வேகம் என்ற ஸ்லோகத்தில் அனுமனின் வேகம் மருத் என்னும் காற்றின் வேகம் என்றும் மனத்தின் வேகம் என்றும் முதல் வரி சொல்கிறது. இதில்தான் ஐன்ஸ்டைன் இந்துக்களிடம் தோற்றுப்போனார்; ஒளியின் வேகத்தில் யாரும் பயணம் செய்ய முடியாது அப்படிப்போனாலும் அருகிலுள்ள ஆல்பா செண்ட்டாரை நட்சத்திரத்துக்குப் போகவே நாலரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது ஐன்ஸ்டைன் கூற்று. ஆனால் இந்துக்கள் சொர்க்கத்துக்குப் போகவே ஒரே நாள் தான் செலவி ட்டனர் என்று பாகவதமும் நம்மாழ்வாவர் பாசுரமும் சொல்கிறது; தேவர்கள் ஒளி ரூபத்தில் வாழ்வதால் தான் அவர்களுக்கு தேவர் என்றே பெயர்! அவர்கள் மனத்தின் வேகத்தில் சென்றனர். நான் அண்டார்டிகாவில் இருப்பதாக நினைக்க ஒரே நொடிப்பொழுது போதுமே? தேவர்கள் இப்படித்தான் செய்தனர். ஒளி ரூபத்தில் செல்லவும் செய்தனர்.
இலங்கையிலிருந்து அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருவதற்கு ராமன் ஒரே நாள்தான் செலவிட்டான் ; அதுவும் நடுவில் தங்கித் தங்கி வந்தான். அதனால் அனுமன் பறந்து போய் பரதன் தீக்குளிப்பதைத் தடுத்தான் இப்பொழுது கம்பனும் அனுமன் புஷ்பக விமானம் போல பறந்தான் என்கிறார்.
Another wonder is about the speed of Anjnaeya. True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley. “ How fast do monkeys fly? It was a matter of scholarly reasoning for the commentators!”, said Prof. Goldman. Some of them worked it down to a speed of roughly 660 km an hour considering Hanuman first brought mountain to Lanka and then flew back all the way to put it back in its place. Prof. Goldman gave a lecture in Delhi in 2004.
இதை அமெரிக்க பேராசிரியர் கோல்டுமேன் R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley கணக்குப்போட்டு அனுமன் மணிக்கு 660 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக டில்லியில் ஒரு சொற்பொழிவில் சொன்னார்.
11 Jun 2013 — True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of …
23.உங்களிடமுள்ள தேஜஸ் / ஒளி மகத்தானது.அதைத் தங்களைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது .உங்களுடைய ஹூம் கார கர்ஜனை மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்கிறது
24.மஹாவீரனே ! உனது பெயரைச் சொன்ன மாத்திரத்தில் பூதம், பேய் , பிசாசுகள் நடுங்கி ஓடுகின்றன ; உன் பெயர் சொல்லும் எவனையும் அவை நெருங்காது
25.வீர அனுமனே ! உன் பெயரை இடைவிடாது ஜபம் செய்வோருக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
26.உண்மை, வாய் மை , மெய்மை என்னும் மனோ வாக் காய — திரிகரண சுத்தியுடன் , உங்களிடம் ஈடுபட்டவர்களின் எல்லாத் துன்பங்களையும் அகற்றி விடுவிக்கிறீர்கள்
27.பரம் பொருளான, தவசீலர்களில் சிறந்தவரான ராமபிரானின் பணிகள் அனைத்தையும் நீங்களே நிறைவேற்றினீர்கள்.
இந்தக் கண்ணிகளில் உள்ள கருத்தின் சுருக்கம் -உடம்பிலும் புகழிலும் ஒளி வீசுபவர், பூதப் பிசாசுகளை விரட்டுபவர் ; அனு மனை நம்பினோர்க்கு துன்பமே இல்லை;; யார் தூய்மையுடன் பக்தி செலுத்துகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அருளுபவர்; .இதற்கெல்லாம் காரணம் நீர் ராம பிரானுக்கு ஆற்றிய சேவைதான் .
ராமனைப் புகழும் எல்லோரும் அனு மனைச் சேர்க்காமல் இருப்பதில்லை; அநுமானைப் புகழும் எல்லோரும் ராமனைச் சேர்க்காமல் இருப்பதில்லை . இது போன்ற பிணைப்பை வேறு எங்கும் காண முடியாது.
ராமனின் புகழை முழு அளவில் யாரும் எழுத்தால் வருணிக்கவில்லை; ஏனெனில் 3000 இடங்களிலிருந்து எடுக்க வேண்டும். இன்னும் அன்னமாச்சார்யா, தியாகராஜர் கிருதிகளில் உள்ள ராமன் புகழை மட்டும் கூட யாரும் ஒப்பிட்டு ஆராயவில்லை; எந்தக் காலத்தில் ஏனைய 3000 ராமாயணங்களில் உள்ளதை ஒப்பிட முடியும்?
–SUBHAM—
TAGS- அனுமன் பறந்த வேகம், ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 9, ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர் ,சுந்தர காண்டம், அனுமர் கடல் தாண்டப் பாய்தல்
சுவாமி விவேகானந்தர் 1902–ம் ஆண்டில் (1863-1902) சமாதி ஆகிவிட்டார் ; அதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் சத்ய சாய் பாபா (1926-2011) தோன்றினார் . ஆயினும் பாபா செய்யப்போகும் அற்புதங்களுக்கு சுவாமி விவேகானந்தர் , அதற்கு முன்னரே விளக்கம் கொடுத்துவிட்டார் எதைக் கண்டு பிடித்தாலும் இந்துக்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே! மொபைல் போன், ஐ பேட் , இன்டர்நெட் , கம்ப்பூட்டர் , யூ ட்யூப் இவை எல்லாம் இந்து மதத்தில் உள்ளதா ? என்ற கேள்விகள் நியாயமானவைதான் . இவைகளுக்கு விளக்கம் தரும் பேசசு இதோ!
நான் முன்னர் எழுதியதுபோல நவக்கிரக ஸ்தோத்திரத்திலுள்ள விஷயங்களை நாஸா NASA கண்டுபிடிக்கவில்லை; நாடி ஜோதிட விஷயங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; பாபா போன்றோர் செய்யும் அற்புதங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; அஷ்டமா சித்திகளை நாஸா கண்டுபிடிக்கவில்லை; இந்து மதம் சொல்லும் வெளி உலகங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; கனவுகள் பற்றி இந்துக்கள் சொல்லும் செய்திகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை; ஒளி ரூபத்தில் நமக்கு மேலே சஞ்சரிக்கும் ககன சித்தர்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை (குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயருக்குத் தெரிந்தது கூட அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியாது ; கம்பன் கூட ஆகாயவாசிகள் பற்றிக் கவிதை பாடினான் . நிற்க
XXXX
THE POWERS OF THE MIND
(Delivered at Los Angeles, California, January 8, 1900)
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 1900-ஆம் ஆண்டில் மனத்தின் சக்திகள் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.
“உலகம் முழுதும், வரலாற்றுக்காலம் முழுதும், மனதிற்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பற்றிய நம்பிக்கை இருந்து வருகிறது வழக்கத்திற்கு மாறான அபூர்வ சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்; நம்மில் பலருக்கு நேரிலும் அத்தகைய அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்த சில விஷயங்களைச் சொல்லி இந்த தலைப்பு பற்றிப் பேசுகிறேன்
மனதில் எதை நினைத்துக்கொண்டு போனாலும் உடனே அதைக் கண்டுபிடித்து விடைதரும் ஆள் பற்றி ஒருமுறை கேள்விப்பட்டேன். .எனக்கும் ஆர்வம் மேலிடவே சில நண்பர்களை அழைத்துக்கொண்டு போனேன் எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிக் கேட்கத் தோன்றியது; ஆயினும் தவறுகள் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதை எழுதி அவரவர் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டோம் ; எங்களைப் பார்த்தமாத்திரத்தில் அந்த ஆசாமி எங்கள் கேள்விகள் என்னவென்று கூறி அதற்குப் பதிலும் தந்தார் .
பின்னர் அவர் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி, அதை மடித்து , இதை பிரித்துப் பார்க்காமல் உன் பைக்குள் வைத்துக் கொள் ; நான் கேட்கும்போது அதைக்கொடு என்றார்; பின்னர் எந்த மொழியானாலும் சரி; ஒரு வாக்கியத்தை நினைத்துக்கொள் என்றார் ; நாங்கள் பார்க்கப்போன நபருக்கு சம்ஸ்க்ருத வாசனையே கிடையாது என்பது எனக்குத் தெரியும்; ஆகையால் ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.
இப்பொழுது நான் முன்னர் கொடுத்த தாளை பைக்குள்ளிலிருந்து எடுத்துக் படி என்றார் ; நான் நினைத்த சம்ஸ்க்ருத வாக்கியம் அதில் இருந்தது !அது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எழுதப்பட்டது; என்னுடன் வந்த வேறு ஒருவர் அராபிய மொழியில் குரான் வாசகத்தை எழுதி வைத்திருந்தார் ; அதையும் அவர் முன் கூட்டியே எழுதிக்கொடுத்து இருந்தார்
எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் டாக்டர்; அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவ விஷயத்தைநினைத்து இருந்தார் ; அதையும் அந்த ஆள் கண்டுபிடித்து முன்கூட்டியே எழுதி இருந்தார்
எனக்கு மனதில் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது; இந்த ஆள் நம்மை மயக்கி ஏமாற்றி இருப்பாரோ என்று நினைத்து, பல நாட்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு முறை அவரைப் பார்க்கப்போனேன் இந்த தடவை வேறு சில நண்பர்களை அழைத்துச் சென்றேன்; முன்னர் போலவே அவர் அற்புதங்களை செய்தார். அற்புதம்! ஒரு பிழையும் இல்லை..
ஹைதராபாத்தில் ஒரு சம்பவம்
இந்தியாவில் ஹைதராபாத்தில் நான் இருந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது .ஒரு பிராமணன், யாரும் அறியாத இடத்திலிருந்து மாயமாகப் பொருள்களைக் கொண்டுவருவார் என்பதைக் கேட்டு அங்கே போனேன். அவர் வியாபாரம் செய்துவரும் வணிகர்; சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர் ; உங்கள் அற்புதங்களைக் காண வந்தேன் என்று சொன்னவுடன் தனக்கு உடம்பு சரியில்லை; காய்ச்சல் ; நீங்கள் என் தலையில் கையை வையுங்கள்; என் ஜுரம் அகன்றுவிடும் என்றார்
(நோயாளிகளை சாது சந்யாசிகள் தொட்டு ஆசிர்வதித்தால் நோய் போய்விடும் என்ற நம்பிக்கை இந்திய முழுதும் உண்டு; 1400 ஆண்டுகளுக்கு முன்னர், கூன் பாண்டியனுக்கு விபூதி கொடுத்த சம்பந்தர் அவனது வயிற்று நோயைப் போக்கியதோடு அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்; அப்பருக்கு , அவருடைய சகோதரி திலகவதி, விபூதி கொடுத்து சூலை நோயை நீக்கினார் )
நான் தொட்டவுடன் அவருக்கு உடம்பு குணமாகிவிட்டது ; நீங்கள் ப்ராமிஸ் செய்தபடி உங்கள் அற்புதத்தை இப்பொழுது காட்டுங்கள் என்றேன். அவர் வெறும் துண்டு மட்டுமே அணிந்து இருந்தார்; எல்லா உடைகளையும் தள்ளி வைத்தார்; மிகவும் குளிராக இருந் ததால் நானே அவர் மீது ஒரு கம்பளத்தைக் போர்த்தினேன் நாங்கள் 25 பேர் அங்கே இருந்தோம்; நீங்கள் உங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று அவர் சொன்னவுடன் நாங்கள் அங்கு விளையாத திராட்சை, ஆரஞ்சு பழவகைககளை எழுதினோம்; அவர் ஒரு மூலையில் உடகார்ந்து இருந்தார்.அந்தக் காகித துண்டுகளை அவரிடம் கொடுத்தோம்; அவர் போர்வையை விலக்கினார் ; நாங்கள் எழுதிய பழங்கள் அங்கே இருந்தன!
அவரே மாயமாக பெரிய ரோஜா மலர் பூங்கொத்துக்காளைக் கொண்டுவந்தார் ; அவை அப்பொழுதுதான் பறித்தவை; கசங்க வில்லை; பனித்துளிகளும் இருந்தன இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது எல்லாம் கை அசைவில் வரும் என்று பதில் கொடுத்தார்.
கை அசைவில் அவ்வளவு பொருட்களைக் கொண்டுவரமுடியாது; பின்னர் அவை எங்கிருந்து வந்தன? இது மட்டுமல்ல; இது போல பல விஷயங்களை நான் பார்த்து இருக்கிறேன் இதுபோல எல்லா நாடுகளிலும் ஆட்கள் உள்ளனர். இந்த நாட்டிலும் (அமெரிக்கா) நீங்கள் நிறைய பார்க்கிறீர்கள் ஆனால் நிறைய மோசடிப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் உண்மைச் சம்பவத்தை காப்பி அடிக்கிறார்கள்.ஆனால் அப்படி மோசடி செய்ய அவர்களுக்கும் உண்மையான சம்பவம் தேவை; அப்போதுதான் அதைக் காப்பி அடிக்கலாம்; நடவாத ஒன்றிலிருந்து எதையும் செய்ய முடியாது; ஆதாரம் இருந்தால் அதைவைத்து இமிடேஷன் செய்யலாம்.”
xxxx
MY COMMENTS
( நான் பார்த்த அதிசயம் : சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பத்துடன், பத்து கார்களில் ஆட்கள் புடை சூழ மதுரையிலிருந்து புட்டப்பார்த்திக்குச் சென்று பிரசாந்தி நிலைய பஜனைகளில் கலந்து கொண்டோம்; அப்போதெல்லாம் பெரும் கூட்டம் கிடையாது; பெண்கள் மட்டும் தங்குவதற்கு ஷெட்டுகள் இருந்தன. நாங்கள் எல்லோரும் கார்களிலும் அதற்கு அருகிலும் படுத்துக்கொண்டோம் ; மதுரையிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே பாபாவின் பக்தர்கள் ; நாங்களோ புது முகங்கள்; ஆயினும் மறுநாள் பாபா வலம் வருகையில் முதல் முதலில் என தாய் தந்தையரை அழைத்து பல விஷயங்களை சொன்னார்; கையை அசைத்து விபூதி வரவழைத்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்; ஒரு (பாபா) போட்டோவையும் உண்டாக்கி அதை என் தந்தையிடம் ( V.SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) கொடுத்தார்; அது அவரது பர்ஸில் 1998-ல் அவர் இறக்கும் வரை இருந்தது; நான் 198-7ல் லண்டனுக்கு வந்துவிட்டதால் போட்டோ என்ன ஆனது என்பது தெரியாது; ஒரு வேளை என் தாயாரிடம் சென்றிருக்கலாம்; அது மறைந்து போகவில்லை என்பதற்காக இவ்வளவு விஸ்தாரமாக எழுதினேன் ; என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி பரீட்சையில் பாஸ் என்றார்; பள்ளி மாணவனுக்கு அதை வீட வேறு என்ன வேண்டும்; அதற்குப் பின்னர் 4,5 முறை புட்டபர்த்திக்குச் சென்றபொழுது நிறைய பேருக்கு கை அசைவில் விபூதியை வரவழைத்துக் கொடுத்ததையும் பார்த்து இருக்கிறேன் )
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இதற்கான விளக்கத்தையும் சுவாமி விவேகானந்தர் கொடுக்கிறார் ; அதையும் காண்போம் .
உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம்; செலவில்லாமல், எளிதில் பரமபதம்- வைகுண்டம்- கைலாசம் அடைய வழிகளை சொல்லித் தருகிறது.
அருகம் புல் , எருக்கம் பூ, வில்வ இலை , துளசி இலை அல்லது ஏதாவது பூ அல்லது தண்ணீர் இவைகளை கடவுளுக்கு அளித்தால் போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும்.
பிராமணர்கள் தினமும் மூன்று வேளை வெறும் தண்ணீரைத்தான் இறைவனுக்குக் கொடுக்கிறார்கள். அதுவும் விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீரை அல்ல; எந்த நதி அல்லது குளம் அல்லது கிணற்றடியில் இருக்கிறார்களோ அதையே எடுத்து அப்படியே கொடுப்பதால் செலவே இல்லை.
பகவத் கீதையில் உள்ள இந்த விஷயத்தை சங்க கால பார்ப்பனப் புலவன் கபிலன் அப்படியே புறநானூற்றில் சொன்னான்
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.-– திருமந்திரம்
இறைவனுக்கு எளிமையாகப் பச்சிலை சூட்டி வணங்கினாலே போதும். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். நாம் உண்ணும்போது உண்கிற உணவில் ஒரு கைப்பிடி எடுத்து பசித்தோருக்குக் கொடுத்தாலும் போதும். இவை அனைத்தையும் விட, யாருக்கும் இன்னுரை சொன்னாலே கூட போதும் என்கிறார் தமிழ்ச் சான்றோரான திருமூலர். எளிமையும் சிரத்தையும் தான் நமது ஹிந்து வாழ்வியல் அறத்தின் அடிப்படைகள்.
xxxx
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!-திருவருட்பா
xxxx
பஞ்சமஹா யக்ஞம்
இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —
1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,
2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,
3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,
4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,
5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.
எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.
வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)
பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.
மனு ஸ்மிருதியில் 3-70 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.
XXXX
மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?
வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் -மனு ஸ்ம்ருதி
पञ्च सूना गृहस्थस्य चुल्ली पेषण्युपस्करः ।
कण्डनी चौदकुम्भश्च बध्यते यास्तु वाहयन् ॥ 3-६८ ॥
பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷன் யுபஸ் கரஹ
கண்டனீ செளத கும்பஸ்ச பத்யதே யாஸ்து வாஹயன் 3-68
இல்லறத்தானுக்கு ஐந்து கொலைக்களங்கள் உள்ளன ; அவையாவன- அடுப்பு, மாவரைக்கும் அம்மி , ஆட்டுரல் உரல் /உலக்கை , அருவா மனை/கத்தி போன்றவை 3-68 மனு
நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?
பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ் ட்ரெவெல்யன் 1913-ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-
“என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!”
உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்கவல்ல நடைப்பயிற்சியை, இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும். ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!
தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஓர் அற்புதப் பயிற்சி!
‘ஆர்ச்சிவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’ நடத்திய ஒரு ஆய்வில், உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தமும் உடையவை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பதானது, உங்கள் ஆயுலை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதயநோய் இல்லாமல் ஆக்குகிறது.
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகை தனது தலையங்கத்தில் நடைப்பயிற்சியைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து, தினமும் முப்பது நிமிடங்கள் நடந்தால் 1.3 ஆரோக்கிய வருடங்களைப் பெறலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது! அதிக ஆற்றலைத் தருவதோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் நடைப்பயிற்சி உறுதிப்படுத்துகிறது.
தினமும் நடைப்பயிற்சி செய்யும் மாணவன் நன்கு படிப்பதோடு, படித்ததை உடனுக்குடன் நினைவுக்குக் கொண்டு வரும் ஆற்றலையும் பெறுகிறான். எங்கும் வாகனம்; எப்போதும் வாகனம் என்ற இந்த வேகயுகத்தில் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று அலுவலகம் மற்றும் இதர இடங்களில் அமர்ந்து பணி செய்வோர் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் மதிய உணவு இடைவேளையில் ஒரு அரை. மணி நேரம் நிச்சயம் நடக்க வேண்டும்.
வாகனங்களைச் சற்று அதிக தூரத்தில் நிறுத்திவிட்டு, பணியிடங்களுக்கு நடக்கும் வாய்ப்பை இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். லிப்டை உபயோகிக்காமல் படிகளில் ஏறவும், இறங்கவும் செய்யலாம். மாடியில் பணிபுரிவோர் அதே பகுதியில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்காமல், அடுத்த தளத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் விதமாகச் சற்று தூரம் நடந்து மாடிப்படிகளில் ஏறலாம், இறங்கலாம்.
இப்படி நடப்பதை சிறு சிறு வழிகள் மூலம் சிரத்தையுடன் மேற்கொண்டால், உடல் எடை அல்லது பருமன் அதிகமாவது தடுக்கப்பட்டு, சரியான எடையுடன் கூடிய அழகிய மேனியை உருவாக்கிக் கொள்ளலாம். அழகிய மேனி உடையவர்கள் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு என்றும் இளமையோடு இருக்கலாம். நடப்பதால் உடல் இளைக்கும்; அதிக சுறுசுறுப்படையும்.
அழகிப்போட்டியைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் வென்றவர்களைச் சற்று கவனியுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த
நடிகர் அல்லது நடிகை உங்களை ஏன் கவர்கிறார் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவர்கள் முகமும் அங்க லாவண்யங்களும் ஒருபுறம் இருக்க, அவர்கள் நடக்கும் நடை அழகே, அவர்களது பொலிவை எடுப்பாக எடுத்துக் காட்டுவதை நிச்சயமாக நீங்கள் உணர முடியும்.
அவர்களிடம் உள்ள இரண்டு டாக்டர்களையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, ஆடிப்பாடி இடைவிடாது நடைபயின்று உடலை ‘சிக்’கென்று பாதுகாப்பதால், அவர்கள் கவர்ச்சி உடையவர்களாக உங்கள் முன் தோன்றுகிறார்கள்!
தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம். ஆகவே, உங்களுடன கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களை சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!
**
சினேகிதி மாத இதழில் 2007, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.
Tirumuar is one of the traditional eighteen Siddhas. He came to Tamil Nadu from the Himalaya region. When he saw the dead body of a cowherd named Mulan (muulan) and the grieving cows around him, he used his magical power and entered the body of the cowherd. The cows were happy now. He sat in meditation and composed 3000 poems and it is known as Tirumanthiram. Saivites who follow the Agamas, never recognised the Siddhas, who were iconoclasts. But Tirumathiram was given a place in the Saivite literature that is made up of 12 sections. And Tirumanthiram forms the Tenth Section.
Periya puranam gives the stories of 63 Saivite saints called Nayanmars (naayanmaars) including the story of Tirumular (muular).
Here are some pictures which illustrate his teachings or his similes:
Charity is Within Reach of All Easy to all to offer in worship a green leaf to the Lord, Easy to all to give a mouthful to the cow, Easy to all to give a handful, sitting down to eat, Easy to all, good, kind words on others to bestow.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
– திருமந்திரம்
xxxx
Share Your Food With Others
Give freely to all; discriminate not o’er much; See food served to others ere sitting down to eat; Heap not perishing gold, eat not in greedy haste; The crow calls its brood to share its food, howe’er sweet
ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 1
From Tiru Valluvar to Bharati, all poets insisted that we should share our food. They said that there should not be any starving person on earth. Bhagavad Gita said that one who eats alone is a sinner. Hospitality, that is entertaining the guests, is one of the essential virtues recommended in Hinduism. Valluvar cursed the Creator God Brahma for creating beggars in the world. Greatest of the modern Tamil poets Bharati also said that we will destroy the earth even if there is one beggar on earth. All these came from Panchabhuta Yajna found in Hindu Law Books called Smriti.
For the householder there are five slaughter-houses: the hearth, the grinding-stone, household implements, mortar and pestle and water-jar;—by using which he becomes stricken.—(68)
For the purpose of expiating all these in their course, the five great sacrifices have been ordained by the great sages, for householders (to be performed) daily.—(69)
Teaching is the ‘offering to Brahma;’ the Tarpaṇa is the ‘offering to Pitṛs;’ the Homa is ‘offering to Gods;’ the Bali is ‘offering to elementals;’ and the honouring of Guests is ‘offering to men.’—(70)
Tamil poets always quote the crows to show that no one eats alone.
–Subham—
Tags: Tirumular, Tirumanthiram. Panchamaha Yajnas, Hospitality, Manu Smriti, food for all,Bharati, Valluvar, Learn Tirumanthiram through Pictures- 1
காந்திஜி ஒரு ஹனுமான்: ரமணர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 8
அநுமன் பற்றி முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.காந்திஜியை அனுமானுக்கு உவமித்து ரமணர் சொன்னதை காலஞ்சென்ற பேராசிரியர் கே. சுவாமிநாதன் எழுதுகிறார்
Bhagavan often equated Gandhi with Hanuman, the humble and heroic servant of Sri Rama. He once said: We say that Hanuman is chiranjivi (immortal). It does not mean that a certain monkey goes on living forever and ever. It only means that there will always be on earth someone who serves Rama as your Gandhi does now.
பகவான் ரமணர் அடிக்கடி காந்தியையும் அனுமனையும் ஒப்பிட்டுப் பேசுவார். பணிவும் வீரமும் உடையவன் அனுமன். அனுமான் ஒரு சிரஞ்சீவி — என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்— என்று நாம் சொல்கிறோம் இதன் பொருள் என்ன தெரியுமா? ஏதோ ஒரு குரங்கு எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. இப்போது நாம் காணும் உங்கள் காந்திஜியைப் போல யாரோ ஒருவர் இந்த பூமியில் ராமபிரானுக்கு சேவை செய்து கொண்டிருப்பார் .
xxxx
எனது கருத்து
அஸ்வத்தாமா பலீர் வியாஸோ ஹனுமான் ச விபீஷணஹ
க்ருப பரசுராமஸ் ச சப்த்தை தே சிரஞ்ஜீவினஹ
“Aswathama Balir Vyaso Hanumanash cha Vibhishana Krupacharya cha Parashuramam Saptatah Chirjeevanam”
Which means that Aswathama, King Mahabali, Veda Vyasa, Hanuman , Vibhishana , Krupacharya and Lord Parashuram are death-defying or imperishable personalities.
நல்ல விளக்கம் ! இந்துக்கள் 7 புராண புருஷர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தினமும் காலையில் ஸ்லோகம் சொல்லுவார்கள்
18. ஈராயிரம் யோசனைக்கு அப்பால் இருந்த சூரியனைத் தங்கள் இனிய பழம் என்று கருதி அதை விழுங்கச் சென்றுவிட்டீர்கள்
19.ராமச்சந்திர பிரபுவின் கணையாழியை — மோதிரத்தை — உங்கள் வாயில் வைத்துக்கொண்டு சமுத்திரத்தை எளிதில் கடந்தத்தில் வியப்பதற்கு ஒன்றுமே இல்லை.
20. உலகத்தில் எவ்வளவு கடினமான காரியங்கள் இருந்தாலும், தங்கள் அருளினால் அவை எளிதாகவே நடந்துவிடுகின்றன.
21. நீங்கள் ராமபிரானின் வாயிற்காப்பாளர்; ராமனுடைய அருளை பெறுவதற்கு முதலில் உங்கள் அருளைப் பெறவேண்டும்
22.தங்களுடைய பாத கமலங்களை யார் வந்து அடைந்தாலும் அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது தாங்கள் எங்களைப் பாதுகாக்கும்போது நாங்கள் எதைக் கண்டு பயப்படவேண்டும்?
xxxx
இதில் துளசிதாஸர் நமக்கு இரண்டு முக்கிய செய்திகளை அளிக்கிறார்; இதை படிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்கிறார். 1.அனுமனை நினைத்தால் எல்லா காரியமும் வெற்றி அடையும். 2.அனுமனை வேண்டு வோருக்கு எப்போதும் ஆனந்தம்; துன்பமே இல்லை.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை — என்ற அப்பர் சுவாமிகளின் தேவார வரிகளை நினைவுபடுத்தும் வரிகள்; அப்பர் சிவனைப் பற்றி இதைச் சொன்னார்; அனுமனும் சிவனின் வடிவம் என்பதை சென்ற இரண்டு கட்டுரைகளில் கண்டோம்.
xxxx
அனுமனும் சூரியனும் ; விஞ்ஞான விளக்கம்
அனுமன் சிறுவயதில் சூரியனை பழம் என்று கருதி விழுங்கப்போனதாகவும் அப்போது இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கியதாகவும் , தாடை உடைந்ததால் அவனை ஹனுமான் என்று அழைத்ததாகவும் ஒரு கதை உள்ளது. உண்மையில் இதை விளக்கமாகச் சொல்லும் கதைகளில் ஒரு சூரிய கிரகணத்தின்போது விலங்குகள் எப்படி நடந்து கொள்ளுமோ அந்த வருணனை அப்படியே உள்ளது ஆக அனுமன் காலத்தில் நடந்த சூரிய கிரகணத்தையே இப்படி வருணித்துள்ளனர்; அப்போது நடந்த விபத்தில் அவர்க்குத் தாடையில் சேதம் ஏற்பட்டதே சரியான விளக்கம். ரிக் வேதத்திலும் முழு சூரிய கிரகணத்தை ஒரு அற்புதம் போல வருணித்துள்ளனர். மகாபாரதத்திலும் கிருஷ்ணன் , தனது சு தர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்ததாகச் சொல்வதும் முழு சூரிய கிரகணம் ஆகும்.
அனுமனுக்கு அப்போது எல்லா தெய்வங்களும் வரம் கொடுத்தன
பிரம்மா கொடுத்த வரம் – பிரம்மா வாழும் காலம் வரை நீ வாழ்வாயாகுக.
மஹாவிஷ்ணு – இறைவனின் தொண்டனாக நீ நீடூழி வாழ்க.
இந்திரன் — உன்னை எந்தவித ஆயுதமும் தாக்காது.
அக்கினி — தீயினால் உனக்குத் தீங்கு நேராது.
காலன்/யமன் – உனக்கு மரணம் என்பதே இல்லை;
ஸர்வ தெய்வங்களும் – பலத்திலும் வேகத்திலும் உனக்கு ஈடு இணை எவருக்கும் வராது.
அனுமன் பற்றி இந்தோனேஷிய ராமாயணம் வேறு கதை சொல்லும். சூரியனை விழுங்கச் சென்ற அனுமனை சூரியன் எரித்துச் சாம்பலாக்கியவுடன் அது கடலில் விழுந்ததாம்; அஞ்சனையின் வேண்டுகோளின்படி பின்னர் அவர் உயிர்ப்பிக்கப்பட்டாராம் ; இராமாயண, மஹாபாரதக் கதைகளை நாடகமாகவும், தோல்கூத்து காட்சிகளாகவும் நடிக்கும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்கள், கதையில் திகிலூட்ட இப்படிப் பல புதுமைகளை செய்துள்ளனர் ; இந்தோ னேஷியா ராமாயணத்தின் பெயர் சேரி ராமாயணம் ; சேரி= ஸ்ரீ
அனுமனும் பலமும்
அனுமனின் பெயர் சொன்னாலே பலம் வரும்; இதனால் மகாராஷ்டிரத்தில் குஸ்தி பயிலும் பள்ளிக்கூடங்களில் அனுமன் பெயரில் பஜ்ரங் தளம் என்ற அ மைப்புகள் தோன்றின. அவை முஸ்லீம் படையெடுப்பு, மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் இந்துக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின. அனுமனுக்கு பஜ்ரங் பலி என்றும் பெயர்.
xxxx
கணையாழி தரிசனம்
கணையாழியை அனுமன் வாயில் கவ்விக்கொண்டு சென்று சீதைக்கு கொடுத்ததை துளசிதாசர் பாடுகிறார். ராமாயணத்தில் இது ஒரு முக்கிய கட்டம்.
தேடிய பொருள்கள் கிடைத்து விடும்; நாடிய பொருள்களை அடைந்துவிடலாம் என்ற உப சகுனம் தெரிவிக்கும் படலம் இது. தென்னிந்தியாவில் அந்த தினம் இதைச் சொல்லும் உபன்யாசகருக்கு மோதிரத்தையும் பரிசாக அளிப்பது சம்பிரதாயம்
சீதைக்கு ராமன் கொடுத்து அனுப்பிய மோதிரத்தை அனுமன் கொடுப்பதை கம்பன் சுந்தர காண்டம் உருக்கா ட்டு படலத்தில் வர்ணிக்கிறான் ;அதைப் படித்தால் கணையாழியின் பெருமை புரியும். இது போல மோதிர உத்தியை, பிற்காலத்தில்காளிதாசன் போன்றோர் நாடகத்தில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
xxxx
இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி
கம்பராமாயணக் காட்சிகள்:
‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர் தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே, நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால், காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63 ‘
இன்னும் நான் என்ன சொல்வது,
இராமன் நாமம் தீட்டியது, யாராலும்
மீண்டும் செய்ய முடியாத அரியவேலைப்பாடு
நிறைந்தது, உங்களிடம் தரச்சொல்லி,
இராமன் என்னிடம் தந்தது‘
என்று சொன்னான்,
தன் நீண்ட கையால் அந்த மோதிரத்தைக்
காண்பித்தான்,
சீதை தன் கூரிய கண்களைத் திறந்து
அதைக் கண்டாள்.
xxxx
‘பாழிய பணைத் தோள் வீர !
துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே ! யான் மறு
இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும்,
இன்று என இருத்தி’ என்றாள்.
‘பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய
வீரனே!
துணையின்றித் தவித்த என் துயர் தீர்த்த
கொடையாளனே, நீ வாழ்க !
நான் களங்கமற்ற மனதுடையவள் என்பது
உண்மையெனின்,
ஒரு யுகத்தை ஒரு பகல் என்று கருதும்
பதினான்கு உலகங்களும் அழியும்
பிரளய காலத்திலும்
இன்று போல் நீ என்றும் இருப்பாயாக‘
என்று ஆசி வழங்கினாள்.
xxxx
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்; பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்; குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65
அம்மைக்கு மோதிரம் கிடைத்தது, பாம்பு, தவறவிட்ட மணியைப் பெற்றது போலவும், வறுமையாளன் இழந்த செல்வத்தை மீளப் பெற்றதைப் போலவும், மலடி குழந்தையைப் பெற்றது போலவும், குருடன் விழி பெற்றது போலவும் இருந்தது. பிராட்டியைப் பாம்பு என்று கூறலாமா ? அமுதமான அம்மை தீயர் செய்கையால் நஞ்சு ஆனாள். நஞ்சுதான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் என்று பெரிய திருமொழி பேசும் (பெரிய 10-2-4) வால்மீகம், சீதை மகா சர்ப்பம் போன்றவள். அவள் கவலை கொண்டு முகத்தை வைத்திருக்கும் ஐந்து விரல்களே அதன் ஐந்து தலைகள் என்று பேசும். (கம்ப. 7351) கவிச் சக்கரவர்த்தி, ‘திட்டியின் விடமன கற்பின் செல்வி‘ என்று கும்பகர்ணன் வாயிலாகப் பேசுவான். இங்கு மணியிழந்த நாகம் மீண்டும் மணிபெறும் தன்மைக்கே ஒப்பீடு என்பதை அறிந்தால் சீதை நாகமா என்ற வினாவுக்கே இடம் இல்லை என்பதையும் அறிக.
வாங்கினள் –எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில் வைத்தனள் –தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் –தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை ஒற்றினள் –மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள் வீ்ங்கினள் –பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் –இளைத்தாள்; குளிர்ந்தனள் –குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் – வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் –பெரு மூச்சு விட்டாள்; இது (பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ –இன்ன மெய்ப்பாடு என்று கூற முடியுமா.
மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர் நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம் நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்; மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67
ஒளிர் நல்நீர் – ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி – அதைத்
துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் – நீ்ண்ட பறவைக் கூட்டைப்
பார்ப்பாள்;நுவலக் கருதும் – (பறவைக் கூட்டால் வந்த நினைவை)
கூறநினைப்பாள்;ஒன்றும் நுவல்கில்லாள் – ஒன்றும் கூற முடியாமல்; மேக்கு
– மிகுதியாக; நிமிர் விம்மிலள் – கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய்;
விழுங்கல்உறுகின்றாள் – அதை அடக்க முயல்கின்றாள். xxxxx
நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம் பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே! ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68
நீண்ட கண்களையும் அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின் மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி, முற்றும் விளங்குகின்ற பொன்னை ஒத்த பொலிவுடைய நிறத்தைப் பெற்றது. இந்த மாற்றம் உண்மையே! ஆதலால் ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின் மோதிரமானது தன்னைச்சார்ந்த எல்லாப் பொருள்களையும் தொட்ட மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத்தன்மை பெற்ற ரசக் குளிகையோ? xxxx இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும் விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69
பசித்தவர்க்கு அமுதமாகவும், அறவோர்க்கு நல்விருந் தாகவும், இறந்த உயிரை மீட்கும் மருந்தாகவும் இம் மணி யாழி உள்ளதே! இது வாழ்க! ‘இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது; அறத்த ரை அண்மும் விருந்தெனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது; வாழி மணி ஆழி’ (69),
இந்தப் பாடல்கள் கணையாழியின் முக்கியத்துவத்தை நமக்கு நன்கு உணர்த்தும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 2
ச. நாகராஜன்
சீன ஆக்கிரமிப்பு, இந்தியா- பாகிஸ்தான் போர்
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும்: போர் உருவாகும் என 1962-ல் அவர் முன்னதாகவே உரைத்தது அப்படியே மெய்யானது.
அதே போல இந்திய- பாகிஸ்தான் போர் பற்றி 1965-லும் 1973-லும் அவர் எழுதியது அப்படியே பலித்தது. பங்களா தேஷ் விடுதலை, அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனின் வீழ்ச்சி, சுகர்ணோவின் வீழ்ச்சி, அயூப்கானின் ராணுவ ஆட்சி, கென்னடி சுடப்பட்டது, மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விவரங்களைத் துல்லியமாகக் கணித்து அவர் முன்னதாகவே எழுதியதும் உரைத்ததும் உலக மக்களை வியக்க வைத்தது.
அரபு – இஸ்ரேல் போர்
1973 ஜனவரி மாதம் அராபிய – இஸ்ரேல் வரப்போவதை அவர் எழுதி விட்டார். அதாவது பத்து மாதங்களுக்கு முன்பே கூறி விட்டார்.
ஜோதிடருக்கான தகுதிகள்
ஒரு நல்ல ஜோதிடருக்கான தகுதிகளை நமது அறநூல்கள் விவரிக்கின்றன.
இந்தக் கலை அகன்றது; ஆழமானது; நுட்பமானது. ஆகவே இதை தகுந்த வல்லுநர் ஒருவரிடமிருந்து முறையாகக் கற்க வேண்டும்.
அத்துடன் உள்ளுணர்வு இருப்பவர்களே இதைத் திறம்பட கற்று பலன்களைச் சொல்ல முடியும்.
மனிதர்களின் பலஹீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து வருவதாக பயமுறுத்தி பரிகாரம் செய்கிறேன் என்று பணம் பறிப்பவர்களால் ஜோதிடம் ஒரு இழிநிலையை அடைந்தது.
இப்படி ஒரு இழிநிலை இருந்த காலத்தில் தோன்றி அதை புகழோங்கச் செய்தவர் வராஹமிஹிரர்.
அதே போலவே தாழ்ந்து கிடந்த ஜோதிடக் கலையை உயர ஏற்றியதால் பி.வி.ராமனுக்கு நவீன வராஹமிஹிரர் என்ற பொருளில் அபிநவ வராஹமிஹிரர் என்ற கௌரவப் பட்டப் பெயர் அளிக்கப்பட்டது.
இது தவிர ஏராளமான விருதுகள் அவரை வந்தடைந்தன. 1947-ல் பிதகோரியன் பல்கலைக்கழகம் அவருக்கு பிஹெச்.டி அளித்து அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. 1947-ல் ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியில் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ல் ஜூன் மாதம் குமாவோன் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.
ஐ,நா.வில் உரை
ஜோதிட மேதையின் புகழ் பெருகப் பெருக அவருக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் ஜோதிட மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றார். நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு ஜோதிட மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹாலந்து கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சங்கங்களும் பல்கலைக் கழகங்களும் அவரை உரையாற்ற அழைத்தன. ஜோதிஷ ரத்னா, ஜோதிஷ பானு, ஜோதிஷ விஞ்ஞான மார்த்தாண்ட போன்ற பல பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.
1970-ம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ஜோதிடம் பற்றி அவர் ஆற்றிய உரை பன்னாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றது. ஜோதிடமும் ஒரு அறிவியல் துறையே என்ற அவரது ஆணித்தரமான சொற்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை அவர் பால் ஈர்த்தது.
ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர்
ஜோதிட இலக்கியத்திற்கு ஒரு புது மெருகு ஊட்டினார் பி.வி.ராமன். ஆங்கிலத்தில் எழுதி, பேசினால் மட்டுமே உலக அரங்கில் வேத ஜோதிடத்திற்கு ஒரு தனி இடத்தைப் பெற முடியும் என்று கணித்த அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையைப் பெற்றார். அவரது ஆங்கில உரைகள் அனைவரையும் கவர்ந்தன.
ஏராளமான புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதினார். அவை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.
அவரது பத்தொன்பது புத்தகங்களில் அவரது சுயசரிதையான ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர் புகழ் பெற்ற ஒன்றாகும். வடமொழியில் இருந்த பல ஜோதிட நூல்களை அவர் ஆங்கிலத்தில் அழகுறத் தரவே ஜோதிட ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அவற்றை வரவேற்றனர்.
குடும்பம்
மிக இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
ஆறு மகன்களும் இரு மகள்களும் கொண்ட பெரிய குடும்பத்தைத் திறம்பட இவரது மனைவி ராஜேஸ்வரி ராமன் நிர்வகித்ததோடு தானே யோகா பள்ளி ஒன்றையும் நிறுவி யோகா பயிற்சியையும் அளித்து வந்தார்.
ராமன் கடுமையான உழைப்பாளி. காலை முதல் நள்ளிரவு வரை தினமும் சுமார் 18 மணி நேரம் அவரது பணி தொடர்ந்தது.
கர்நாடக இசை மற்றும் நடனத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகாவும் டென்னிஸும் அவர் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க உதவின.
மறைவு
பிறருக்குப் பலன்களைத் துல்லியமாக உரைத்த ஜோதிட மேதை தன் இறுதி பற்றியும் சரியாகக் கூறி விட்டார். 1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தனக்கு இறுதி நெருங்கி விட்டதை அவர் அறிவித்தார். அது போலவே முதல் நாள் ஏற்பட்ட மாரடைப்பால் மறுநாள் 1998, டிசம்பர் மாதம் 20-ம் நாள் அவர் மறைந்தார்.
ஜோதிடம் உண்மையா, பொய்யா?
நவீன யுகத்தில் பெரிதும் கேட்கப்படும் ஒரு கேள்வி ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற கேள்வி.
இதற்கு உலகமே போற்றும் ஜோதிட மேதையின் பதில் இது தான்:-
ஹிந்துக்களின் வானவியல் மற்றும் ஜோதிடக் கலை அற்புதமானது. உதாரணத்திற்கு கிரகணத்தைச் சொல்லலாம். எவ்வளவு துல்லியமாக அது கணிக்கப்பட்டு வந்தது!
போலி ஜோதிடர்களாலும், கத்துக்குட்டிகளாலும், பிதற்றல் பேர்வழிகளாலும் அது தன் மஹிமையை இழந்து கூலிக்கு மாரடிக்கும் இழிநிலையை அடைந்து விட்டது.
பலன்களைத் துல்லியமாகக் கூறும் ஹிந்துக்களின் ஜோதிடம் மிக பிரமாதமானது. துல்லியமான சரியான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்பதை அதன் எதிரிகளும் கூட உணர்ந்து அது அறிவியல் பூர்வமானது என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
நவீன வராஹமிஹிரர்
ஜோதிடத்தை அறிவியல் ரீதியானது என்பதை சுட்டிக்காட்டி அதை அறிவியல் அங்கீகாரம் பெற வைத்த மாமேதை டாக்டர் பி.வி.ராமன் அவர்களை நவீன வராஹமிஹிரர் என்று கூறுவது பொருத்தம் தானே!