Indonesia is the largest Muslim country in the world. It has 13,000 islands including large islands like Java, Sumatra and Borneo. Borobudur and Prambanan are famous for their Buddhist and Hindu sculpture. Borobudur Buddhist stupa was constructed in Sri Chakra shape. Though it is a Buddhist monument it has a lot of Mahabharata and Ramayana sculptures. I will publish them in batches—about 125 pictures.
The pictures are from 100 year old German book.
Hindus ruled South East Asia for 1500 years until 16th century; but in Indonesia influence of Sanskrit and Hindu epics can be seen even today. They have regular dramas and puppet shows on Hindu stories.
to be continued…………………………………………
—subham—
Tags– Ramayana Sculptures from Indonesia, Batch 1, . Borobudur , Buddhist stupa, Prambanan
Following is the list of 130 German Sanskrit and Indology scholars including Max Muller . Those who have heard about Max Muller may not know these names. Theodore Goldstucker has done tremendous research on Panini. Many others have done great work in translating the Upanishads.
Here is the list from the book which has got a brief biography on each one of them.
INDEX
—subham—
Tags– List of, 130 German Sanskrit Scholars, Indologists list
பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்
இதோ ஒரு கதை :
ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில் லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :
ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?
விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?
என்று வினவினார் விபீஷணன் ..
ஜாம்பவான் பதில் சொல்கிறார் :
அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்
xxxxxx
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இயற்றிய கிருதிகளில் சுமார் 700, இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு இசை நாடகங்களும் உள்ளன.
அவர் ராமரைப் பற்றிப் பாடும்போது அனுமனையும் குறிப்பிடுகிறார். இது பற்றி ஒரு கதை சொல்கிறார்கள்
ஒரு நாள் தியாகராஜரின் பாட்டில் மயங்கிய ராமபிரான் , மாறுவேடத்தில் தியாகராஜர் வீட்டுக்கு வந்தாராம். அவருடன் ஹனுமானும் சீதாதேவியும் மாறு வேடத்தில் வந்தனர். அவர்களை நன்றாக அறியாதபோதிலும் விருந்து உண்டபின்னரே விடைபெற வேண்டும் என்று வேண்டினார். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது வழக்கம்போல, அனுமன் அவர்களுக்கு சுவையான உணவுகளைப் பரிமாற ஆயத்தமானார் ; தியாகராஜரோ , விருந்தாளிகளுக்குத் தானே பரிமாற வேண்டும் என்று எண்ணி அநுமானைப் புறக்கணித்தார் உடனே ராமன் தலையிட்டு அனுமனைத் தடுத்து நிறுத்தி, தியாகராஜரே பரிமாறட்டும் என்றாராம். அப்போது தன்னிடத்தில் தியாகராஜருக்கு எவ்வ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு பக்தி அனுமானிடத்திலும் உண்டு என்று இராமபிரான் சொன்னாராம் ; அது உண்மை என்பதை தியாராஜரின் கிருதிகளில் காண்கிறோம்.
xxxx
சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில் கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும் பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள், இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் , இன்னும் வியப்பாக இருக்கும்; பல நாட்டுத் தமிழ் மாணவர்களின் பரீட்சைத் தாள்களைத் திரு த்தியபோது இந்த விநோதத்தைக் கண்டேன். மாரி முத்து என்பது மர்டர் முத்து ஆகியிருந்தது ; தேவி என்பது தீவை ஆகியிருந்தது; பாவம் அவர்களுக்கு பெயர்களின் பொருளும் தெரியாது . நிற்க
xxx
அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .
தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப் பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .
இன்னுமொரு கதை :
ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில் இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.
இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.
xxxx
இதோ அனுமான் சாலீஸா வரிகளும் , திருப்புகழும்:
அனுமன் சிவனின் அவதாரம்
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே
xxxx
கருவடைந்து … கருவிலே சேர்ந்து
பத்துற்ற திங்கள் வயிறிருந்து … பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
இருந்து
முற்றிப்ப யின்று … கரு முற்றிப் பக்குவம் அடைந்து
கடையில்வந்து தித்து … கடைசியில் பூமியில் வந்து பிறந்து
வித்³யாவான கு³ணீ அதி சாதுர । ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
பொருள்
7. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள் விளக்கியுள்ளனர்.
8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.
xxxx
ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.
to be continued……………………………….
—subham–
Tags- அனுமன் சிவனின் அவதாரம், ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 5
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 2
ச. நாகராஜன்
புதிய கண்டுபிடிப்பு
உலகப் போர் மும்முரமான போது தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒன்றாக ஆனது. ஹிட்லர் எனிக்மா என்கோடிங் மெஷின் என்ற ரகசிய சங்கேதம் அனுப்பும் மெஷினை வைத்தே தனது ரகசிய திட்டங்களையும் ஆணைகளையும் அனுப்பி வந்தான். டைப்ரட்டர் அளவே உள்ள அந்த சிறிய மெஷின் பதினைந்து லட்சம் கோடி சங்கேத முறைகளில் வேறு வேறாகச் செய்திகளை அனுப்பும் திறன் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவம் இந்த சங்கேதங்களை இடைமறித்துக் கேட்டாலும் அது என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் நேச நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.
நேசநாட்டு ராணுவத்தினருக்கு ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து ஆணைகளை விரைவாக அனுப்புவது இன்றியமையாத தேவையாக ஆகி விட்டது முக்கியமாக கடற்படையினருக்கு விரைவாக அனுப்பும் தகவல் தொடர்பு முக்கியமானதாக ஆனது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் லமார் உச்சகட்ட புகழில் இருந்த போது பிரபல இசையமைப்பாளரான ஜார்ஜ் அன்தெய்லுடன் இணைந்து ஒரு ரகசிய தகவல் தொடர்பு அமைப்பைக் கண்டுபிடிப்பதில் முனைந்தார். லமார் ஒரு கணித நிபுணி. அன்தெய்லின் உதவியுடன் பியானோவை இசைக்கும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ப்ஃரீக்வென்ஸி ஹாப்பிங் எனப்படும் அலைவெண் தத்தலைக் கண்டுபிடித்து உரிய பேடண்டையும் எடுத்தார். இதன் மூலம் ரேடியோ மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தி, ஏவி எதிரிகளை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்க கடற்படையை அணுகி தனது கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார்.
பியானோவை வைத்து அதில் 88 வெள்ளை மற்றும் கறுப்பு கீ- கள் இருப்பதால் அதை வைத்து அலைவெண்களுக்கு இடையே மாற்றுகின்ற ஒரு புதிய உத்தியை அவர் கண்டு பிடித்தார். இதன் மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தலாம் என்று அவர் கூறினார்.
அவரை புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இவராவது டார்பிடோ குண்டுகளை ஏவுவதாவது என்று எண்ணிச் சிரித்தனர். அவரது கண்டுபிடிப்பின் பெருமை பற்றி அறிய அவர்கள் முற்படவில்லை. ஆனால் 1962ஆம் ஆண்டு தான் இதைப் பற்றி கடற்படைநன்கு அறிந்து அதை அமுல்படுத்தியது.
என்ன நடந்தது என்பதை அவர் ‘பாம்ப்ஷெல்: தி ஹெடி லமார் ஸ்டோரி’ என்ற ஒரு பதிவில் தானே பேசி இருக்கிறார்.
பெரிதும் நிராசையடைந்த லமார் ஒரு விதமாக அங்கீகாரமும் கிடைக்காமல் போக, பேடண்ட் உரிமையும் காலாவதி ஆகவே முயற்சியையும் கை விட்டார்; நம்பிக்கையையும் இழந்தார்.
ஆனால் இன்றைய கணினி யுகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள செல் போன், ப்ளூ-டூத், மற்றும் வை-ஃபி போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு விதை ஊன்றியவரே அவர் தான். அவருக்கு அதற்கான புகழ் கிடைக்கவில்லை.1997இல் தான் அவர் பெருமை உலகிற்கு தெரிய வந்தது.
அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மட்டுமல்ல, மிக பிரம்மாண்டமாக வரவேண்டிய கண்டுபிடிப்பு தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கான உத்தேச காப்பீட்டுத் தொகை மட்டும் சுமார் 3000 கோடி டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.
லமார் பற்றிய படங்களும், புத்தகங்களும்
லமார் பற்றி ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும், கூட வெளி வந்து விட்டன. அவரது சுயசரிதை பற்றி அவர் கூறுகையில், “இது சரியான சுயசரிதை இல்லை. இதை என் சார்பாக எழுதியவர் தனக்குத் தோன்றியதை எழுதி விட்டார். உண்மை சரிதத்தை நானே எழுதுகிறேன்” என்றார். ஆனால் அதை எழுதுவதற்குள் அவரது இறுதி நெருங்கி விட்டது.
மறைவு
லமார் தனது இறுதி ஆண்டுகளில் யாருடனும் நேரில் பேசவில்லை. யாரானாலும் போனில் மட்டுமே பேசி வந்தார்.
2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தனது 85-ம் வயதில் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காஸல்பெர்ரி என்னுமிடத்தில் அவர் இதயநோய் காரணமாக இறந்தார். அவரது மகன் அவரது அஸ்தியின் ஒரு பகுதியை அவரது விருப்பப்படி ஆஸ்திரியா கொண்டு சென்று வியன்னா காடுகளில் தூவினார்.
2014-ல் அவரது நினவுச் சின்னம் வியன்னா சென்ட்ரல் கல்லறையில் நிறுவப்பட்டது. மீதமுள்ள அஸ்தியும் அங்கு புதைக்கப்பட்டது.
அனுபவ மொழிகள்
தனது வாழ்க்கையின் அனுபவ மொழிகளாக அவர் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அவற்றில் சில:
எந்தப் பெண்ணுமே கவர்ச்சியானவள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டாள் போல நின்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்!
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள்.
உண்மையான நல்ல கண்டுபிடிப்பு சமுதாயத்தின் மீது நலன் தரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் தொழில்நுட்பமோ என்றும் உள்ளது; சிரஞ்சீவியானது.
எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் எதையும் அறியும் ஆர்வமுமே உத்தரவாதங்களை விட மேலானவை. நம்மால் உணரமுடியாதவையே என்ன ஈர்த்தன. ஈர்க்கின்றன.
அடுத்த முறை செல்போனை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது அதற்கு வழிகோலிய லமாரை மனதாரப் பாராட்டலாம், இல்லையா!
Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 3 (Post No.13,571)
Himalaya as found in First Chapter of Periya Puranam (Translated by D r T N Ramachandran). I am giving stanzas where the mountain Himalya or Mount Kailas is referred to.
1. HE who is not to be comprehended by any one
For ever abides in the divine peak of the great Kailas
Which is atop the wide, snowy and awesome mountain
That bears on its golden frame white stripes
Like unto those of the holy ash. (11)
2. As the Lord is here enthroned
The triple worlds and the four Vedas
Have come hither to perform endless askesis;
So does it look like Piety’s own congregation. (12)
3. If with all the innumerable regions
As bright and shining leaves, the world is
Wrought into a lustrous liana
The awesome mount will be (like) its white bloom. (13)
4. There resound the chanting of the four lofty Vedas
The strumming of vinas by celestial musicians,
The trumpeting of tuskers as the clouds rumble
And the ever-glorious music of the celestial tuntupis. (14)
5. Behold here numberless billions of chaplets
To adorn the crown of the Lord
Worshipfully held by the immortals of cool skyey realms,
Garlands of golden blooms from the holy Karpaka
And garlands of prayer by saints galore. (15)
6. Billions and billions of Bhootas — small and short –,
Here sing and dance in sheer ecstasy;
These can, if they so desire, usher into existence
The five elements and fill the offices of Gods too. (16)
7. Unable to worship the Lord as the hour is not propitious
Brahma return and stands baffled.
He cannot discern his swan, totally lost
In the pure and white luster of the awesome mountain. (17)
8. He knows not that Vishnu is abiding his time
To adore the feet of Siva decked with white ear-rings;
He beholds in the slope of the dazzlingly white Kailas
A bandicoot — the mount of the Tusker-God –,
Surface up from a cavern.
Deeming that to be the primal boar that this day
Is out to bore the earth to reach the foot
Of the red column of fire now turned white,
Garuda wings his way to it. (18)
9. There dance the heavenly danseuses to the beat
Of muzhavu and the roar of cataracts;
With palms full of melliferous flowers of the divine tree
And with loving minds seeking boons
Indra and other gods ascend the ever-crowded steps
Of the long and lofty way dight with mantapams and vimanas,
Hymning all the while His divine praise. (19)
11. By the grace of the Lord of matted hair, Nandi
Is invested with the office of guarding Kailas;
He is the Chief of the great many who are forehead-eyed,
Four-shouldered and who wear the holy ash on their bodies,
Also the devotees of Lord Siva who rides the Bull
Decked with pinggnakam, and all others too;
He wields in his flowery hands
The sword and the divine cane. (21)
12. The Lord holds an antelope in His (left) hand
And a mazhu in His (right) hand.
His matted hair where courses Ganga, is decked
With the young crescent
And a chaplet of (Konrai) flowers.
By reason of His enthronement here,
The presence of measureless glory
And the flourishing of the sheer purity of truth’s luster,
The wide range of Kailas is like unto the mind divine
Of Anapayan of triumphant parasol white —
The fearless King that wields a righteous scepter. (22)
16. Before them all, gushed forth a growing light
With the great brilliance of a thousand suns;
The great tapaswis pure and others
Who sat encircling the Saint
Marvelling said: “What wonder is this!” (26)
—————-
Stanza Line
1 The mountain referred to is the Himalayas. The golden peak is
suggestive of Siva, and the snow, the stripes of the holy ash on
His divine frame.
3 The world, its demesnes and the Kailas are respectively the creeper,
Re-naming Harappan Civilization “Sindhu-Sarasvati” in NCERT textbooks is based on established scholarship: NCERT panel head Michel Danino
Amidst controversy over the new Class 6 social science textbook Exploring Society: India and Beyond for using names “Sindhu-Sarasvati” and “Indus-Sarasvati” for Harappan Civilisation, Michel Danino, the chair of the NCERT committee that drafted the textbook has defended the changes. The leftist ecosystem is claiming that these alternative names demonstrate the “Hindutva agenda” of the government.
Defending the alternative names used for Harappan Civilisation in NCERT textbook, Michel Danino told Indian Express, “The decision to include alternative names like ‘Sindhu-Sarasvati’ and ‘Indus-Sarasvati’ for the Harappan civilization is neither new nor driven by any political agenda. Archaeologists, such as Professor Jonathan Mark Kenoyer of Wisconsin University, British archaeologist Jane McIntosh, and the late Raymond Allchin, one of the foremost authorities on the Indian subcontinent, have used these terms in their work. Jean-Marie Casal, the French archaeologist, also speaks of the Sarasvati River in the context of the Harappan civilization. Gregory Possehl, the late American archaeologist, dedicates several chapters to the Sarasvati River in his book ‘The Indus Age.’”
Danino asserted that the new terminology used in the textbook is based on established archaeological scholarship and not any contemporary political influence. “This terminology is based on established archaeological scholarship, not on any recent political influence. So, this is not a Hindutva thing. Moreover, we have included all alternative names. To me, this is factual,” the visiting professor at IIT Gandhinagar said.
Moreover, Danino called the induction of alternative terminology a “good first step” and also added that more such steps will be taken in the coming days.
In July this year, it was reported that the new NCERT Class 6 Social Science textbook has undergone certain changes. This also included reference to the Harappan Civilisation as “Sindhu-Saraswati” and “Indus-Saraswati” civilisation. Amidst controversy over the new Class 6 social science textbook Exploring Society: India and Beyond for using names “Sindhu-Sarasvati” and “Indus-Sarasvati” for Harappan Civilisation, Michel Danino, the chair of the NCERT committee that drafted the textbook has defended the changes. The leftist ecosystem is claiming that these alternative names demonstrate the Hindutva agenda of the government. While earlier, there were distinct textbooks for History, Political Science, and Geography, the new textbook covers all the relevant subjects within the fold of Social Science.
The new textbook has been organised into five themes: ‘India and the World: Land and People’, ‘Tapestry of the Past’, ‘Our Cultural Heritage and Knowledge Traditions’, ‘Governance and Democracy’, and ‘Economic Life Around Us’.
Interestingly, it was reported last year that the researchers from Deccan College Pune and the Central Archaeological Survey of India (ASI) found that human remains unearthed at an ancient site of Rakhigarhi – a village in the Hisar district of Haryana – date back roughly 8,000 years
During the excavations, a large settlement of the largest ancient houses ever was found underground. A courtyard along with a drainage system were also found in it. Moreover, there were two to six-bedroom houses that were also available at that time. The clothing fashion of the people of that time is also known. The research team found a colourful worn piece of cloth, a shawl and a skirt.
“This research has found strong evidence that the Harappan civilisation is 7,000 to 8,000 years old. Scientists from the Department of Archaeology of India and Deccan College have worked together on the project. It is agreed that there was human habitation or civilisation in our country 8,000 years ago,” Deccan College Pune assistant professor Prabhodh Shirwalkar asserted adding that the people back then were as advanced as they are in present times.
FROM OP INDIA 20 AUGUST 2024
—SUBHAM—
TAGS- NEW NAME, NOT HARAPPAN, NOT INDUS VALLEY, CIVILIZATION, SINDHU SARASVATI, 8000 YEAR OLD
முதலில் ஒரு சுவையான விஷயத்தை காண்போம் ; 732 அனுமார் கோவில் கட்டியவர்
கர்நாடகத்தில் மைசூர் அருகில் அவதரித்தவர் வியாஸராஜ தீர்த்தர் Sri Vyasaraja (1460-1539) என்னும் மஹான்; அவர் மாத்வ சம்பிரதாயமான த்வைதத்தைப் பரப்பினார். வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்தவர்; கிருஷ்ண தேவராயரின் உயிரைக் காப்பாற்றியவர் ; திருவானைக்காவல்– திருவரங்ககம் எல்லையை நிர்ணயித்தவர். அவர் 732 அனுமார் கோவில்களைக் கட்டினார் அதில் முதல் அனுமார் கோவில் கர்நாடகத்தில் ஹம்பியில் உள்ளது. 732 அநுமார் கோவில்களையும் இன்று பட்டியலிட முடியாவிட்டாலும் அவர் உண்டாக்கிய அனுமார் கோவில்கள் குறிப்பிட்ட முத்திரையுடன் இருக்கும்; இவைகளில் பெரும்பாலானவை ஆந்திரத்தல் பெணு கொண்டா வட்டாரத்தில் இருக்கின்றன.
.ஸ்ரீ வியாச தீர்த்தர் தினமும் ஹம்பியில் உள்ள கோயிலுக்கு எதிரே உள்ள சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படும் துங்கபத்திரை ஆற்றின் பகுதியில் ஸ்நானம் செய்து,அங்குள்ள சிறிய குன்றில் உட்கார்ந்து ஜபம் செய்வது வழக்கம். தியானம் செய்ய கண் மூடியதும் அவருக்கு அனுமானின் தரிசனம் கிட்டும். ஆனால் ஒர் நாள் தியானம் செய்யும்போது அவ்வாறு ஆகவில்லை; .மறுநாள் வியாசதீர்த்தர் அவ்விடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்யும் போது மனதில் அனுமாரின் ஒரு உருவத்தை நினைத்துக் கொண்டு அவருடைய சித்திரத்தை வரைந்து அதற்கு நாமங்களை இட்டார். நெற்றியில் பொட்டிட்ட உடன் அந்த உருவம் மறைந்தது. மீண்டும் எழுத எழுத அவ்வாறே ஆயிற்று. இவ்வாறு பலமுறை ஏற்பட்டது. பிறகு வியாஸதீர்த்தர் அந்த அனுமாரின் உருவத்தை வரைந்து மந்திரத்தினால் திக்பந்தனம் செய்து, நாமமும் திலகமும் இட உருவம் அப்படியே நின்றது. அன்றே அதை பிரதிஷ்டை செய்து பூஜை முதலியவைகளைச் செய்தார். அது தானாகவே தெளிவாக உருவம் பெற்றது. இதுவே அவர் முதலில் பிரதிஷ்டை செய்த ஹனுமார் ஆகும். பின்னர் அங்கு கோயில் கட்டப்பட்டது. யந்த்ரோத்தாரக ஹனுமார் என்று புகழ் பெற்றது. இந்த ஹனுமார் மீது, வியாசராஜர் மிகவும் புகழ்பெற்ற ஸ்லோகத்தை இயற்றியுள்ளார். இவர் நாடெங்கும் 732 வீர ஹனுமார் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார். இவையனைத்தும் ஹனுமாரின் தலைக்கு மேலே,வாலில் மணியுடன் ஒரே மாதிரியில் அமைந்தவை.. வியாச ராஜர் ஏன் 732 ஹனுமான் வடிவங்களை ஏற்படுத்தினார் என்பது ஆராய்ச்சியாளருக்குப் புரியாத புதிராகவே உள்ளது அவர் 732 வேற்று மத அறிஞர்களை , குறிப்பாக , கர்நாடகத்தில் பரவி இருந்த சமண மத அறிஞர்களை வாதங்களில் தோற்கடித்ததால் இவ்வாறு 732 அனுமார் கோவில்களை ஏற்படுத்தியதாக சிலர் சொல்கிறார்கள்.
வியாச ராஜர் அனுமார் கோவில்களைக் கண்டுபிடிக்க ஒரு வழிகாட்டிக் குறிப்புப் பட்டியலும் இருக்கிறது ; அவர் அமைத்த ஆஞ்சனேயர் கோவில்களில் மாருதிராயனுக்கு — அனுமாருக்கு —
வாலில் மணி தொங்கும் ;
கையில் மலர் இருக்கும்;
குடுமியில் முடிச்சு இருக்கும்;
வலது கை தலைக்கு மேலே அபய ஹஸ்தமாக இருக்கும்;
ராவணனின் மகன் அட்சயகுமாரனை துவம்சம் செய்வதாக அமைந்து இருக்கும்;
இரண்டு புறங்களில் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும் ;
வால் , தலைக்கு மேலே சென்று அரை வட்ட வடிவில் நிற்கும் ;
மேலே சூரிய -சந்திரன் சின்னங்கள் காணப்படும் ;
ஒரு பல் கோரமாக இருக்கும்
கண்களை வைத்தும் கண்டுபிடிக்கலாம்
XXXX
Sri Vyasa Raja Tirthar
இப்போது ஹனுமான் சாலீஸாவின் 4, 5 ஸ்லோகங்களைக் காண்போம்
கீழ்கண்ட ஸ்லோகங்களில் அனுமனின் வருணனையைப் பார்க்கையில் அவன் நம்மைப்போல ஒரு உருவம் கொண்டவனே என்பது விளங்கும்.
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா
கானன குண்டல குஞ்சித கேசா
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
பொருள்
4.தங்க வர்ண உடல்; காதில் குண்டலம் ; சுருண்ட சிவப்பு நிற முடி/கேசம் உடையவன்.அழகாகக் காட்சி தருபவன் .
5.கையில் வஜ்ராயுதம், கொடி ; தோளில் தர்ப்பைப் புல்லால் ஆன பூணூல் அணிந்தவன்
XXX
அனுமனை வருணிக்கும் கம்பனும் பொன் குண்டலங்களைக் குறிப்பிடுகிறான்
கம்பன் சொல்கிறான்- சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.
வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா
—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:
ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?
(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது).
நவ வியாகரணம்
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.
அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் :– வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.
‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அனுமன் என்பவன் குரங்கு அல்ல; குரங்கு இனத்தைச் சேர்ந்தவன்; ஆதிகாலத்தில் ஒவ்வொரு இனமும் உடலில் அல்லது முகத்தில் ஒரு அடையாளத்தை அணிந்துகொண்டு அதை வைத்து தங்களை அழைத்துக்கொண்டனர். அவர்கள் பின்பற்றிய சட்ட விதி முறைகளும் நாகரீக மனிதர்களிடமிருந்து வேறுபட்டவை; ராமாயணம் நடந்து சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தமையால் குரங்கு இனம் என்பதை குரங்கு போலவே சித்தரிக்கத் துவங்கினர் நம் உபன்யாசகர்கள். மேலும் சில பழங்குடி மக்கள், உடலின் சில உறுப்புகளை சிதைத்துக்கொண்டனர். நான் சொல்லுவதை எல்லாம் உலகின் பழங்குடி மக்கள் இடையே இன்றும் காணலாம். முஸ்லிம்கள் கூட ஜனன உறுப்புகளை சிதைத்துக் கொள்வதை நாம் இன்றும் காண்கிறோம். மேலை நாடுகளில் சோமாலிய பெண்கள் இப்படிச் செய்வதைத்த தடுக்க பெரிய இயக்கமே நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் காது கிழியும் அளவுக்கு குண்டலங்கள் அணியும் கிழவிகளைப் பார்க்கலாம். அமேசான் காடுகளில் வாயைச் சிதைத்து தொங்கும்படி செய்கின்றனர். பூடான் / பூத ஸ்தானம் , இலங்கை முதலிய நாடுகளில் ராட்சத முகமூடிகள் அணிந்து நடனம் ஆடுவதை இன்றும் காணலாம்..
சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 26
கோவில் எங்கே இருக்கிறது ?
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டிண துறைமுக நகரிலிருந்து 15 கி.மீ.
(Sri Varaha Lakshmi Narasimha temple)
என்ன சிறப்புகள் ?
பிரகலாதனுடன் தொடர்புடைய ஸ்தலம். நாஸ்தீகனான ஹிரண்ய கசிபுவை பெருமாள் சிங்க முக வடிவில் வந்து (நரஸிம்ம ) கிழித்தெறிந்த கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார்.
இங்கு வராஹ நரசிம்மர் என்று அழைப்பதற்கான காரணம் அவர் காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் செதுக்கப்பட்டுள்ளார். பெருமாளை சாதாரண மனித வடிவிலும் அமைத்துள்ளதால் மொத்தம் மூன்று வடிவங்ககளில் (வராஹ மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி , மனித உருவம் ) சேவிக்கலாம் ;சிம்மாசலம் என்ற குன்றின் மேல் அமைந்துள்ளதால் சிம்மாசலம் கோவில் என்றும் சொல்லுவார்கள் .
என்ன அதிசயம் ?
கருவறையில் உள்ள மூலவரை — பெருமாளை ஒருசில நாட்கள் மட்டுமே சந்தனக் காப்பில்லாமல் காண முடியும்; தமிழ்நாட்டில் உத்தர கோச மங்கை நடராஜரை சந்தனக் காப்பால் ஆண்டு முழுதும் சார்த்தி வைப்பது போல இங்குள்ள லட்சுமிநரசிம்மரையும் ஆண்டு முழுதும் சந்தனத்தால் காப்பிடுகின்றனர். காரணம் என்ன வென்றால் உக்கிர நரசிம்மரை குளிர்விப்பதற்காக ; அவரின் கோபம் தணிந்து சாந்தமாக, ஆண்டுதோறும் 500 கிலோ சந்தனத்தைப் பூசுகின்றனர் .
மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார்.
இது தவிர , கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவராக லட்சிமி நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தனக் காப்பு விலக்கப்பட்டு வராக லட்சுமி நரசிம்மர் தன் உண்மை உருவத்துடன் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் . இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். இருக்கிறார்கள்
கையில் தாமரையுடன் ஆண்டாள் , லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன. கோவிலின் மூலவர் சந்தனக் காப்பிட காலங்களில் சிவலிங்கத்தைத் தரிசிப்பது போல இருக்கும்.
1000 படிகள்
கோவிலை அடைய கொஞ்சம் சிரமப்பட வேண்டும் ஏனெனில் 1000 படிகள் ஏறினால்தான் அவர் தரிசனம் தருவார். ஆனால் வண்டிகளிலும் போகலாம் தென்னாட்டிலுள்ள பெரும்பாலான நரசிம்மர் கோவில்கள் குன்றின் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கம் மலைக் குகைகளில் தானே இருக்கும் ! கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் கோவில் அமைந்துள்ளது.
இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (???) மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் ஏற வேண்டும்.
கோவில் வரலாறு
ஹிரண்யகசிபு மற்றும் அவன் தம்பி ‘ஹிரண்யாட்சன் ஆகிய இருவரும் கடவுள் இல்லை; இல்லவே இல்லை’ என்று நாஸ்தீக வாதம் பேசினார்கள் . அவனது மகன் பிரகாலதானோ ஸநாதன ஹிந்து; கடவுள் உண்டு அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்; அணுவிலும் இருப்பான் மலையிலும் இருப்பான் என்று முழங்கினான் ; எங்கே? இந்தத் தூணில் இருக்கிறானோ , பார்ப்போம் என்று சொல்லி அரண்மனைத் தூணை எட்டி உதைத்தான் முட்டாள் ஹிரண்யகசிபு; பெருமாள், பிரஹலாதன் என்னும் சிறுவனை — ஹிரண்யகசிபுவின் மகனைக் காப்பாற்ற– சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவின் வயிற்றை இரு கூறாகக்கிழித்து துவம்சம் செய்தான். நாத்தழுழும்பு ஏறிய நாத்திகர் என்று மாணிக்க வாசகர் பாடிய, கெட்டுப்போன நாத்தீகர்களுக்கு, என்னே நேரிடும் என்பதே, நரசிம்ம அவதாரம் நமக்குப் போதிக்கும் பாடம்.
தல புராணத்தின்படி, பிரகலாதன் கட்டிய கோவில் இது ; காலப்போக்கில் அது அழியவே , அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் ,சிலையைக் கண்டெடுத்து மீண்டும் கோவிலை எழுப்பினான் அப்போது வானிலிருந்து எழுந்த அசரீரி ஒலி இட்ட கட்டளைப்படியே சந்தனக் காப்பு இடுகிறார்கள் இது ஐதீகம் , அதாவது செவிவழி வந்த நம்பிக்கை
வரலாற்றுச் சிறப்புகள்
குலோத்துங்க சோழனின் பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இந்தக் கோவில் பற்றிய தகவலைத் தருகிறது பின்னர், 13 ஆம் நூற்றாண்டு கீழைக் கங்க மன்னர்கள் கோவிலை விரிவாக்கினர். சிற்பங்களும், கட்டிடக் கலையும் ஒரிஸ்ஸா பாணியைக் கொண்டவை .
கருவறைக்கு இடப் பக்கம் கப்பஸ்தம்பம் என்ற தூண். மணிகளாலும் பட்டு துணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கீழே சந்தான கோபாலரின் யந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதைக் கட்டிக்கொள்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
1268 ஆம் ஆண்டு கல்வெட்டு தரும் செய்தி
விஜய நகர பேரரசன் கிருஷ்ண தேவ ராயரின் தலைமைத் தளபதி நரசிம்மன் கோவிலின் விமானம், முக மண்டபம், நாட்டிய மண்டபங்களைக் கட்டினான். ஆதிகாலத்தில் விமானத்துக்குத் தங்கக் கவசம் இட்டான்
கோவிலில் ஒரு கல்ரதமும் உள்ளது இது உலகப் புகழ்பெற்ற கொனார்க் சூரியன் கோவில் ரதம் போல இருக்கும்.
குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காலம் 1098-99; அவன் கலிங்க நாட்டினை வென்றான்
வௌ நாடு சிற்றரசன் கொங்காவின் ராணி Velanadu Chief Gonka 111(AD 1137-56) நரசிம்ம சுவாமிக்குத் தங்கக் காசம் விட்டதா இன்னொரு கல்வெட்டு சொல்கிறது.
கல்யாண மண்டபத் தூண்களில் காகதீய வம்ச அரசர் கால சிற்பிகளின் கைவண்ணம் தெரிகிறது கல்யாண மண்டபத்தில் 96 தூண்கள் பதினாறு (16X6) வரிசையில் உள்ளன
கோவில் மாடங்களில் மூன்று திசைகளில் காணப்படும் வராஹம், நரசிம்மர், த்ரிவிக்ரமன் ஆகியன உருவத்தில் பெரியவை.
இந்த இடம் காடுகளுக்கு இடையே இருப்பதால் கங்காதர என்ற நீர்வீழ்ச்சியும் உளது இதனால் தெலுங்கு மொழியில் ஒரு வாசகம் உளது
சிம்மாசலத்துக்கு மிஞ்சிய மலையும் இல்லை
நரசிம்மருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
கங்காததாரத்துக்கு மிஞ்சிய அருவியும் இல்லை
xxxx
விழாக்கள்
ஆண்டுக்கு ஒரு முறை கல்யாண உற்சவம் நடக்கிறது. அட்சய திருதியை நாளில் சந்தனக்காப்பு நீக்கப்படுவதால் அப்போது பக்தர்கள் யாத்திரையாக வருகின்றனர் ; இது வட இந்தியாவில் நடக்கும் பெரும் யாத்ரா (ஜாத்ரா) போல நடக்கிறது .
கிரிப் பிரதட்சிணம்
32 கி.மீ., தூரம் உள்ள சிம்மாசலம் மலையை ஏராளமான பக்தர்கள் வலம் வருவார்கள் சிம்ஹாசலம் ஸ்ரீ வராஹ லட்சுமி ஸ்வாமியின் வருடாந்திர ‘கிரி பிரதக்ஷிணம் கோடை காலத்தில் நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் 32 கிமீ நீள மலைப்பாதையை வலம் வருவார்கள் பக்தர்கள் ‘தோளி பவஞ்சாவில்’ தேங்காய் உடைத்து பிரதக்ஷிணத்தைத் தொடங்குவார்கள். ஸ்ரீ ஸ்வாமி வாரி ரதம் தோளி பவஞ்சில் இருந்து தொடங்கும்.
—subham—
Tags- சிம்மாசலம், வராக லட்சுமி நரசிம்மர் கோவில், ஆந்திர மாநிலம், 108 புகழ்பெற்ற கோவில்கள் –, Part 26, சந்தனக்காப்பு, கிரிப் பிரதட்சிணம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 1
ச. நாகராஜன்
ஹலோ! நல்லா இருக்கீங்களா?
இன்று கையில் செல் போனை வைத்துக் கொண்டு இப்படி பேசாதவர் யாருமே உலகில் இல்லை எனலாம். எதற்கெடுத்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எல்லோரிடமும் செல் போன் – தகவல் தொடர்புக்கு இன்றியமையாத சாதனமாகத் திகழும் இதைக் கண்டுபிடிக்க வழி வகுத்தவர் ஒரு நடிகை என்றால் ஆச்சரியமாக இல்லை – ஆ,ம், அந்த பேரழகியான நடிகை ஒரு விஞ்ஞானியும் கூட என்றால் இன்னும் வியப்பு அதிகமாகும்!
அவர் பெயர் ஹெடி லமார்! (Hedy Lamarr)!
பிறப்பும் இளமையும்
ஆஸ்திரியாவில் லிவிவ் என்ற இடத்தில் (இப்போது உக்ரேனில் உள்ள இடம் இது) 1914-ம் ஆண்டு ஹெடி லமார் என்ற ஈவா மேரி கியஸ்லர் பிறந்தார். தந்தை ஜெர்ட்ருட் ட்ரூட் கியஸ்லர் ஒரு உயர் அதிகாரி. யூதரான தாயார் எமில் கியஸ்லர் பியானோ வாசிப்பவர்.
ஐந்து வயதிலேயே புதிதாக எதையும் செய்யும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. பழைய மியூஸிக் பாக்ஸ் ஒன்றை எடுத்து அதைப் பிரித்துப் போட்டு விட்டு, திருப்பியும் அதை அப்படியே அசெம்பிள் செய்தார் அவர். படிக்கும் போது அவருக்கு இரசாயனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானதால் கெமிக்கல்களை ஒன்றுடன் ஒன்று கலந்து பார்ப்பது அவரது வழக்கமானது. அதே சமயம் தந்தையாருடன் நடைப்பயிற்சி செய்யும் போது, அவர் எப்படி நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவார்.
திரைப்பட வாய்ப்பு
12-ம் வயதில் வியன்னாவில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசைத் தட்டிச் சென்றார் அவர்.
முதன் முதலாக 1933-ல் அவரது 19-ம் வயதில் செக்கோஸ்லேவிகிய, ஆஸ்திரிய தயாரிப்பான எக்ஸ்டஸி என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த பிரதான நடிகை ஒரு யூதர் என்பதால் அதை ஹிட்லர் தடை செய்தார்.
ஆனால் படிப்படியாக அவரது நடிப்பு மக்கள் மனதை ஈர்க்கவே அவர் புகழ் பெறலானார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஜிக்ஃபீல்ட் கேர்ள் (1941) மற்றும் சாம்ஸன் அண்ட் டிலைலா (1949) அவரை புகழேணியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அதிக சம்பளத்தைத் தைரியமாகக் கேட்டவர்
நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் அனைத்து யூதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிய காலம் அது! ஆகவே பிரபலமான எம்ஜிஎம் உரிமையாளரான லூயிஸ் பி. மேயர், ஜெர்மனியிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கும் நல்ல நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்யலாம் என்று அங்கு வந்தார். மெட்ரோ கோல்ட்வின் மேயரைப் பார்க்கவே தவம் செய்வார்கள் எல்லா பிரபலங்களும்! அவர் எப்போது தம்மைக் கூப்பிடுவார் என்று அனைவரும் ஏங்கியிருந்தனர். மேயர் லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார். “உனக்கு வாரத்திற்கு 125 டாலர் சம்பளம் தருகிறேன். ஹாலிவுட் வருகிறாயா?“ என்று கேட்டார். “சாரி! அந்தச் சம்பளத்திற்கு என்னால் வர முடியாது” என்று டக்கென்று பதில் சொல்லி விட்டார் லமார்.
மேயர் மட்டுமல்ல, அனைவருமே திகைத்துப் போனார்கள். கூடுதல் சம்பளத்திற்கு வழி என்ன என்று யோசித்தார் லமார். ,மேயர் திருப்பி அமெரிக்கா செல்லும் கப்பல் எது என்று அறிந்து அதிலேயே தனக்கும் ஒரு டிக்கட்டை பதிவு செய்தார் அவர்.
ஒரு நாள் கப்பலில் மேல்தளத்தில் அவர் அமர்ந்திருந்த போது பளபளக்கும் ஆடையை அணிந்து அவர் டேபிளின் அருகே அவர் தன்னைப் பார்க்கிறாரா என்று நன்கு கவனித்து ஒய்யாரமாக அன்ன நடை நடந்தார் அவர்.
மேயர், லமாரை அழைத்து வாரத்திற்கு ஐநூறு டாலர் தருகிறேன் என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதிய பெயர்
ஹாலிவுட்டில் நடிக்க அவருக்கென பிரத்யேகமாக ஒரு பெயர் தேவை என்று கோல்ட்மேயர் நினைத்தார். கோல்ட்மேயரின் மனைவி மார்கரெட் மௌனபட காலத்தில் பிரசித்தமாக விளங்கிய நடிகையான பார்ப்பாரா லமார் பெயரில் உள்ள ‘ல மார்’ என்பது பிரெஞ்சு வார்த்தை போல இருப்பதால் அதை அவருக்குச் சூட்டலாம் எனக் கூறினார். அது முதல் அவர் ஹெடி லமார் ஆனார். டிஸ்னியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரமான ஸ்நோ ஒய்ட்டும், பேட்மேனில் வரும் கேட் உமனும் அவரைப் பார்த்து பெற்ற உத்வேகத்தால் அமைக்கப்பட்டவையே.
தொடர்ந்து அவரது திரை வாழ்க்கையில் ஏராளமான படங்களில் அவர் நடித்துப் புகழ் பெற்றார். வானொலி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்றார். தானே ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஆனார்.
விருதுகள்
ஏராளமான விருதுகளை அவர் வாழ்ந்த போது பெற்றார். அவர் மறைந்த பிறகு இன்னும் பல விதத்தில் அவரது நினைவு போற்றப்படுகிறது.
வியன்னா பல்கலைக்கழகத்தில் 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட க்வாண்டம் டெலஸ்கோப்பிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2019, ஆகஸ்ட் 27-ம் தேதி ஒரு விண்கல்லுக்கு “32730 லமார்” என்று அவரை கௌரவிக்கும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டது.
உலகப் போரில் சேவை
இரண்டாம் உலகப் போரின் போது அவர் சேவை செய்ய முன்வரவே அவர் போர் பத்திரங்களை விற்க உதவி செய்யுமாறு கோரப்பட்டார். ரசிகர்கள் முன்னிலையில் அவர் நின்று இந்தப் பத்திரங்களைத் தர ஏராளமானோர் இந்த பத்திரங்களை வாங்கி நிதி உதவி செய்தனர்.
குடும்பம்
லமாரைப் பாராட்ட வந்த ஏராளமானோரில் ப்ரெடெரிக் மாண்டில் என்பவரும் ஒருவர். அவர் ராணுவத்திற்கு ஆயுதம் விற்கும் வியாபாரி. அவர் லமாரை விடாது தொடரவே அவரை 1933-ல் லமார் மணந்தார். ஆனால் அவர் முஸோலினிக்கு மிக நெருங்கியவராக இருந்ததோடு ஹிட்லருக்கும் வேண்டியவராக இருந்தார். ஆகவே திருமணம் நிலைத்திருக்கவில்லை. பாரிஸுக்கு விரைந்தார் அவர். இதன் பிறகு ஐந்து முறை மணந்தார் அவர். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 1955-ல் நடந்த கடைசி திருமண முறிவுக்குப் பின்னர் 35 வருடங்கள் அவர் தனியாகவே வாழ்ந்தார்.
Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 2 (Post No.13,567)
Let us look at what Tamil poet Tirumular says about the Himalaya mountain in his work Tirumanthiram. He lived about 1200 years ago. By his time, Tamils knew North India very well. But they have no connection with the Indus -Sarasvati Valey. They mentioned Ganga from the Sangam days. But they never knew River Sindhu ( Indus). They never mentioned the river until eighth century. But Chozas said that they came from Sibi, ruler of North West India. According to Sangam Tamil literature, Chozas came from the North West of India, where Sibi was ruling. Sibi tribe is in Panini and Rig Veda.
Two amazing things struck me. Kalidasa of second century BCE mentioned the 1500 mile long Himalayan range as the Measuring Rod of the earth. How did he see it? There was no map of that area 2200 years ago. Did he go up in space and looked at the Big Blue Marble (earth) like our modern space travellers?
Tirumular made an amazing description of Himalaya/Kailash, Chidambaram in Tamil Nadu and Sri Lanka are in the same longitude. These longitudes and latitudes are our own modern inventions. But Tirumular knew that these three places are in straight line! (see the last poem given here). He used them symbolically to describe Yoga matter.
Here are some poems from Tirumanthiram (meaning Holy Mantras):
Meru/மேரு, Vadavarai/வடவரை, Kailash/கயிலை, Himalaya/இமையம் are found in the hymns
Tirumular came from the Himalaya
வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1
Seven Holy Orders
Seven are the Holy Order, spiritual and true;
Mula, of the first, from the Himalayas sprung,
In the Tantras Nine and Hymns Three thousand
Propounds the Word of Agama in beauty dight.
(but in the poem Himalaya is not mentioned; Tirumular came from Kashmir in the Himalaya range)
xxxx
Kailash
. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19
From Siva’s Seat To Earth Thus expounding I bore His Word Down Kailas’s unchanging path, The Word of Him, the Eternal, the Truth Effulgence, The Limitless Great, Nandi, the Joyous One, He of the Blissful Dance that all impurity dispels.
Xxxx
Himalaya used as a simile
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1
Who Attained Divine Tranquility
The Heavenly Beings, immortal as the mountain Himalayas,
Received the Darshanas that are Six;
“We learned them all and attained the Other World”
-Thus quote they;
But, in sooth,
The Primal Lord is in intimacy within
Of those that have Divine Tranquility attained.
xxxxx
Kailash again
தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5
Siva is the Light Resplendent
With His peerless rays
He dispelled my darkness;
And the divine fruit’s honey within flowed;
Beaming with benevolent rays
As Lord of Kailas, He stood;
Within me too He stood aloft
As Light Resplendent.
xxx
. போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4
Praise Lord and Spurn Death
Praise the benevolent Lord,
He of Mount Kailas;
He as central stood,
In cardinal directions four, our Lord;
With the precious body
That Prana’s vital breath holds
Praise the Lord and be redeemed,
The Lord,
Who with His Feet the God of Death spurned.
xxxx
Meru Mountain
. செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4
Jiva’s Purification
In contact with color red
White, too, becomes red;
Unto it it is,
When Jiva purified (white)
Reaches Siva (that is red);
In Jnana’s Void
That absorbs universes so unreal,
Siva stands high aloft
As a flag planted on Meru Mountain top.
Here Tirumular speaks about Hindu chemistry and alchemy; white is mercury and red is sulphur. They are only used as similes.
It also refers to a popular Tamil proverb: Even a crow will become a golden bird when it reaches Meru.
Symbolic meaning is a sinner as black as crow will become a saint looking like gold.
Gold before processing looks dirty.
xxxx
மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14
Contemplate in Yogic Way
To the Yogis of intense Tapas,
Contemplating on Mystic Meru Mount
In the radiant Sphere within,
In their rare Tapas
Siva’s Grace, of itself, appears;
Move not from this way;
There is none other too.
xxxx
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுரை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10
Siva’s Five Letter Mantra is the Final Refuge
Think of Him in your heart,
Praise Him as “My Lord”
When Death approaches you, say:
“Lord, You alone are my Refuge;”
Then will you receive
The Grace of Lord in Letters Five seated,
The Lord who resides
In the snow-clad mountain of North (Kailas).
xxxx
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26
Siva’s Spheres of Dance Within
The central spinal column that is Meru
The Nadis, Ida (Left) and Pingala (Right),
The Jiva’s delta-shaped Muladhara
The Sushumna Cavity that is unto Tillai Forest
Where the cool (southerly) breeze from Mount Malaya wafts
All these alike are Siva’s Spheres of Dance
to be continued……………………………
—subham—
Tags- Tirumular, Tirumanthiram, Mount Kailash, Meru, Himalaya, Northern range, Rig Veda to Bharati, Part 2