ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 3 (Post No.13,566)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,566

Date uploaded in London – 21 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமன் பற்றி,  ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் ,சொன்ன 2 சுவையான விஷயங்களை முதலில் காண்போம் :

1.ஞானம்பக்தி இரண்டினையும் ஒற்றுமைப்படுத்தும் புராணக் கதை ஒன்று உண்டு  ஸ்ரீ ராமத்சந்திர மூர்த்தி பக்தியின் சிறந்த ஹநுமானைப் பார்த்து ,

என் குழந்தாய்எந்த பாவனையோடு என்னைக் காண்கிறாய் எவ்விதம் என்னைத் தியானம் செய்கிறாய்?  என்று கேட்டார்.

சில சமயம் பின்னப்படாத பூரணனான உன்னைக் காண்கிறேன் . அப் போது பூரணமான தெய்வீகத்தின் ஒரு அம்சமாக ஒரு திவலையாக என்னைப்  பாவித்துக் கொள்கிறேன். உன்னைத் தேவநாயகனாகக் காணும்போது என்னை உன் அடித்தொண் டனாகக்  கருதி தியானம் செய்கிறேன். ஆனால் தத்துவ ஞானமாகிய  உண்மை ஞானத்தை அடையும்போது  நானே நீயாகநீயே நானாகக் காண்கிறேன்- என்று ஹனுமான் பதில் கூறினார். (பக் தியும் ஞானமும் முடிவில் ஒன்றே என்ற தலைப்பில் இது வருகிறது )

(பாரதியும் 23 பாடல்களில் கண்ணனையும்கண்ணம்மாவையும் எப்படிக் கண்டான் என்பதை இங்கே நினைவு கூறலாம் ).

xxx

2.உருவமுள்ளவாயினும் உருவம் இல்லாதவனாயும்  ஈசுவரன் ஹநுமானுக்குத் தரிசனம் தந்தருளினான் .என்றாலும் ஹனுமான் தான்   ஈசுவரதாசன்  என்ற அஹங்காரத்தைக் கொண்டவனாகவே இருந்தான்.நாரதர்ஜனகர்ஸநந்தனர் ஸனத்குமாரர் ஆகியவர்களுடைய விஷயமும் இப்படித்தான். அவர்கள் பிரம்மா ஞானத்தை அடைந்தவர்கள் என்றாலும் அவர்கள் ஆற்றோட்டத்தின் சப்தத்தைப்போல் ஈசுவரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றனர். இதனால் அவர்களிடத்தும் சிறிது  அஹங்காரம் இருந்தது என்று தெரிகிறது. உலகத்திற்கு தர்மப் பிரசாரம் செய்வதற்குத்தான் இந்த  அஹங்காரம்.

xxx

இரண்டாவது ஸ்லோகத்துக்கு வருவோம்

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

ராம தூதனே ; தங்கள் ஈடு இணையில்லாத பலம் உடையவர். அஞ்னையின் புத்திரர்; வாயுவின் புத்திரர்

கம்பனும் இப்படித்தான் நமக்கு அனுமனை அறிமுகப்படுத்துகிறான் ; இன்னுமொரு இடத்தில் வாயு குமாரன் என்பதை அழகாக காற்றின் மைந்தன் என்கிறான்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்). இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான்.

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ”

என்று பதில் தருகிறான்.

xxx

அனுமனை நினைத்தவுடனே நமக்கு ராமன் நினைவு வந்துவிடும்; நமக்கு பலமும் கிடைத்துவிடும் ஏனெனில் அனுமன் பலத்துக்கும், காற்றின் வேகத்துக்கும் , துணிவுக்கும் இலக்கணமாகத் திகழ்பவன்   இதோ அடுத்த ஸ்லோகம்.

xxx

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

பொருள்

தங்கள் மஹாவீரர் ; அளவற்ற வீரம் உடையவர். வஜ்ரம் போன்ற உடலுறுப்புகளைக் கொண்டவர் மனிதர்களின் கெட்ட புத்தியை நீக்கி நல்லறிவினை நல்குகிறீர்கள்.

புராதன இந்தியாவில் இரண்டே பேருக்குத்தான் மஹாவீரர் பட்டம்; ஏனெனில் இருவரும் புலன்களை  வென்றவர்கள் .சமண சமய 24-ஆவது தீர்த்தங்கரரும் அனுமனும் மஹாவீரர் என்ற பெயரால் துதிக்கப்படுகிறார்கள் . மற்ற நாடுகளில் ஏ கே 47 துப்பாக்கிகளால் அ தி கம் பேரை சுட்டுக் கொல்வோரை மஹாவீரன் என்பார்கள் .

அவ்வையார் சொல்கிறார் :

ஓன்றாகக் காண்பதே காட்சி; புலன் ஐந்தும் வென்றான்தன்  வீரமே வீரம் – என்று

கம்பன் , அவனது வீரத்தை யமனின் ஆற்றலுக்கு ஒப்பிடுகிறான் ; அழகில் மன்மதனாம்

“சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்”

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

XXXX

எல்லோரும் சொல்லவேண்டிய சம்ஸ்க்ருத ஸ்லோகம் இதோ :

புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால்  இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.

அனுமனின் தோற்றத்தை துளசிதாஸர் வருணிப்பதையும் காண்போம்.

தொடரும்  …………………………..

–subham—

Tags- மஹாவீரர், புத்திர் பலம் யசோ தைர்யம் ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் , Part 3 ,ராமக்ருஷ்ண பரமஹம்சர்

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –32 (Post No.13,565)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,565

Date uploaded in London – 21 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –32

நீர் நிலைகளும் கடலும் தெய்வம்

மரங்களுக்கும் விலங்குகள் பறவைகளுக்கும் விஷ்ணுவின் பெயர் சூட்டிய இந்துக்கள்கடல் முதல் குளம் வரையுள்ள நீர் நிலைகளையும் விஷ்ணுவின்– இறைவனின்– அம்சமாகவே கருதினர் . உண்மையில் நீர் இல்லாமல் இந்துக்கள்எந்தச் சடங்கினையும் செய்ய முடியாது இறப்பு முதல் பிறப்பு வரை நீர் தேவை.  மொஹஞ்சசதாரோவிலேயே பெரிய குளத்தை வெட்டியவர்கள்  வேத கால இந்துக்கள். உலகில் வேதத்தில் உள்ளது போல தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லைசொல்லப்போனால் அவர்கள் எல்லாம் பஞ்சத்தில் அடி பட்ட பரதேசிகள்!  நாமோ தண்ணீர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதத்திலேயே கங்கை துவங்கி சிந்துவரை முப்பதுக்கும் மேலான நதிகளின் பெயர்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளன.

xxxx

ஜகத ஸேதுஹு — நாம எண் 288–                           

உலகைக் கரையேற்றுபவர் அல்லது கரை போலக் காப்பவர்.

சங்கரர் சொல்கிறார் – ஸமுத்தாரண — ஹேதுத்வா தசம் பெத்த- காரணாத்  வா

உலகத்தில் நல்லவை- கெட்டவைகளைப் பிரிக்கும் அணையாக  இருப்பவர்;  புண்ணிய பாவ பலன்களை துல்லியமாக வழங்குபவர்

பிருஹத் ஆரண்யக உபநிஷத் சொல்கிறது

ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகானாமஸம் பேதாயா — இவ்வுலகங்க்கள் பிரிந்துபோகாமல் சேர்த்துப் பிடிக்கும் கரையாக இருப்பவர். ஸம்ஸாரம் என்னும் கடலைக் கடக்க உதவுபவர் .

திருக்குறளிலும் இது உளது :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.-10

இறைவனுடைய திருவடிகளை  நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

என் கருத்து

சேது  என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளதை மேலே கண்டோம்: கரை,  அணை , பாலம்

ராம சேது என்பது இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையே அனுமன் கட்டிய பாலம். அணை என்ற பொருளுக்கு ஆதாரமாக தமிழ் நாட்டிலுள்ள 2000 ஆண்டுப் பழமையான கல்லணை திகழ்கிறது. 400 ஆண்டு ஏரியின் வரலாற்றைக் கூறும் அற்புதமான ஒரு கல்வெட்டு குஜராத்தில் கிர்நாரில் இருக்கிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் , மெளரிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுதர்சன ஏரி பெருமழை வெள்ளத்தில் உடைந்ததை எப்படி எஞ்சினீயர்கள் செப்பனிட்டனர் என்று கல்வெட்டு செப்புகிறது .

பிறப்பு- இறப்பையும் கடலுக்கு ஒப்பிடுவதிலிருந்து அவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதும் தெரிகிறது ; இதற்கு ரிக் வேதத்தில் உள்ள பூஜ்யூ – அஸ்வினி குமாரர்கள் கதை சான்றாக இருக்கிறது.

XXXX

அபாம்நிதிஹி –நாம எண் 323–

கடலாக இருப்பவர்

கீதையில் கடல் வருணனை

நீர்நிலைகளுள் நான் கடல் என்று பகவத் கீதை 10-24 யில் கிருஷ்ணர் சொல்கிறார்

ஸரசானாம்  அஸ்மி ஸாகரஹ — 10-24

இன்னுமொரு கடல் வருணனையும்  கீதையில் உள்ளது :

आपूर्यमाणमचलप्रतिष्ठं

समुद्रमाप: प्रविशन्ति यद्वत् |

तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे

स शान्तिमाप्नोति न कामकामी ||2- 70||

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப ப்ரவிஶந்தி யத்வத் |

தத்வத்காமாயம் ப்ரவிஶந்த ஸர்வே ஸ ஶாந்திமாப்னோதி   ந காமகாமீ ||2-70||

எனது கருத்துக்கள்

ஆரியர்கள் பனிப்பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று மாக்ஸ்முல்லர் கும்பல் கூறுவதை நீர் பற்றிய ரிக் வேத விஷயங்கள் தவிடு பொடியாக்கிவிட்டது. இன்று வரை பிராமணர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தண்ணீரைப் பயன்படுத்தி சந்தியாவந்தனம் செய்கின்றனர் (நானும் லண்டனில் செய்கிறேன்); வேதங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிய வெளிநாட்டினர் இந்து மத சடங்குகளை நம்பியதும் இல்லை; செய்ததும் இல்லை ; கொட்டா ம்பட்டி  கொத்தனார், நியூயார்க்கிலுள்ள எம்பையர் ஸ்டேட் பில்டிங் அல்லது பாரிஸிலுள்ள ஐபல் டவர் பற்றி விமர்சனம் செய்தது போலச் செய்தனர் .

வடதுருவத்தில் வசிக்கும் எஸ்கிமோக்கள் பனிக்கட்டி பற்றி 100க்கும் மேலான சொற்களைப் பயன்படுத்தயது போல  வேத கால இந்துக்கள் தண்ணீர் பற்றி 120– சொற்களை பயன்படுத்தினர். ஏனெனில் அவர்கள் நீரோடும் கங்கை- சிந்து நதி தீரத்தில் பிறந்தவர்கள்.

xxxx

ரத்ன கர்பஹ  – நாம எண் 473–

ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடலாய் இருப்பவர்.

அல்லது அடியார்களை தன் வயிற்றில் வைத்துக் காப்பவர்.

பட்ட பாஸ்கரர் உரையில் சொல்கிறார் :

அர்த்தம்காமம் என்னும் இரண்டு பண்புகளை — சங்கு சக்கரங்களாகத் தம்மிடம் எப்போதும் இருக்கப் பெற்றவர்.

 முத்துக்களும் பவளங்களும் கடலில்  இருப்பதை ஸம்ஸ்க்ருத தமிழ் இலக்கியங்கள் எப்போதும் குறிப்பிடும்இதை இதிகாசங்களிலும் காணலாம் .

அது மட்டுமல்ல ப்ரவாள – பவள – பரல – பேர்ல் PEARL — என்பன எல்லாம் ஒரே மூலத்திலிருந்து உதித்த சொற்கள் என்ற மொழியியல் அதிசயத்தையும் காணலாம் .

xxxx

அம்போநிதி — நாமஎண் 517–

நான்கு அம்பஸுகள் என்று வேதங்களில்  சொல்லப்படும் தேவர்மனிதர்பிதிரர் அசுரர் ஆகியவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர்

அல்லது கடலாய் இருப்பவர்.

இதிலும் மாக்ஸ்முல்லர், கால்டு வெல்  கும்பலுக்கு செமை அடி விழுகிறது. ஆட்சியைப் பிடித்து மதத்ததை பரப்ப வந்த கும்பல்கள் ‘அசுரர்கள்’ என்போர் ஒரிஜினல் குடிகள் என்றும்  தேவர்கள் என்போர் வந்தேறு குடிகள் என்றும் கதை கட்டிவிட்டன ; ஆனால் மிகப்பழைய உபநிஷத்துக்களும்  அசுரர்கள்,  இந்துக் கடவுளரை வணங்கி வரம் பெற்றதையும் மனிதர்- தேவர்- அசுரர்- என்ற 3 குழுக்களும்  இறைவனிடம் உபதேசம் கேட்டபோது மூன்று முறை த, த, த ஒலி கேட்டதையும் அவர்கள் அதை ஆளுக்கு ஒருவிதமாக — தாம்யத- தத்த – தயா –என்று  பொருள் கொண்டதாகவும் கதை போகிறது.

இதை ஐ. நா. சபையில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய மைத்ரீம் புஜத  என்ற காஞ்சி சுவாமிகள் பாடலிலும் காணலாம். வெள்ளைக்காரன் சொன்னது பொய் என்பதை  நிரூபிக்கும் நிறைய  பாடல்களை தமிழ் அடியார்கள் பாடிச் சென்றுள்ளனர் .

xxxx

நாராயணஹ — நாம எண் 245–

இந்து மதத்தில் இரண்டு முக்கிய மந்திரங்களில் ஒன்று நாராயண ;காஞ்சி சங்கராசார்யார் போன்றோர் நாராயண என்றுதான் கையெழுத்து இடுவார்கள் ;நாராயண என்ற சப்த த்தினால்  துக்கங்கள் அனைத்தும் அழியும் என்று சொல்லி விஷ்ணு சகஸ்ரநாமம் முடிகிறது. பாவமே உருவான அஜாமிளன் , சாகும்போது நாராயணன் என்ற மகன் பெயரை அழைத்ததால் சுவர்க்கம் சென்றான் .

இரண்டாவது முக்கிய மந்திரம் ஐந்தெழுத்து – நமசிவாய

இதன் பொருள் — நாரா= நீரைஅயன= வசிப்பிடமாகக் கொண்டவர்

இது மொழியியல் ரீதியில் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் போலி திராவிட மொழியியல் கும்பலுக்கும் செமை அடி கொடுக்கும் சொல். நீர் என்பது ரிக் வேதத்திலேயே இருக்கிறது; “பாருங்கள் இதுவும் மயிலும் தமிழ் சொற்கள் ; ஆகவே ரிக் வேதம் மலர்ந்த சிந்து நதி தீரத்தில் தமிழே வழங்கியது” என்று முழங்கியது கால்டுவெல் கும்பல். ஆனால் நீர்த் தேவதைகளைக் குறிக்கும் நீரெய்ட்ஸ் NEREIDS முதலியன, தமிழுக்கும் முந்திய, ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தோன்றிய கிரேக்க மொழியில் இருப்பது இந்தக் கும்பல்களுக்குத் தெரியாது; அது மட்டுமல்ல ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதும் அந்தக் கும்பல்களுக்கு அப்போது தெரியாது ; உண்மை என்னவென்றால் ஒரே மூல மொழியிலிருந்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தோன்றின. அவை உலகம் முழுதும் பரவின.

நாராயணன் பாற்கடலில் உதித்தவர்; விஷ்ணுவின் முதல் அவதாரம் நீரில் உதித்த மீன்- மச்ச — அவதாரம்; நீரில்தான் உலகமே தோன்றியது – உயிரினங்களே தோன்றின  என்பதை இந்துமதமும் விஞ்ஞானமமும் மட்டுமே கூறின. நாராயணன் பள்ளி கொண்ட இடம் பாற்கடல் அதாவது தூய நீர் கொண்ட கடல்.

மநு ஸ்ம்ருதியும் (1-10) இதை சொல்கிறது:

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர சூனஹ

தா யதஸ்யாயனம் பூர்வம்  தேன நாராயணஹ  ஸ்ம்ருதஹ 1-10

தண்ணீரை நாரா என்று அழைப்பர் அது நரனிடமிருந்து வந்தது அந்த இறைவன் முதலில் உண்டாக்கியது நீர்; அதையே தனது வசிப்படமாகக் கொண்டதால் நாராயண என்று அவனை அழைக்கிறோம்.

முதலில் உண்டானது தண்ணீர் என்ற விஞ்ஞானக் கொள்கையை முதலில் சொன்னவர்கள் இந்துக்கள்

Says Manu 1-10

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥

āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ |

tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ || 1-10 ||

நாராயணின் புகழ் பாடும் நாராயண ஸூக்தம் என்ற மந்திரம், நாராயணின் முழுப் புகழையும் நமக்குச் சொல்கிறது.

இந்துக்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள்  என்பதை

விஷ்ணு ஸஹஸ்ரநாம நாமங்கள்பசுமரத்து ஆணி போலமனதில் பதிக்கின்றன.

ஆண்டாள் திருப்பாவை முதல் பாட்டு

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

 நீராடப் போதுவீர்! போதுமினோநேரிழையீர்!

 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

 நாராயணனே, நமக்கே பறைதருவான்,

 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

–subham—

விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் Part–32 , நீர், கடல், நாராயண

வளமான வாழ்க்கைக்கு நிர்வாக இயல் கதைகள் இரண்டு! (Post No.13,564)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.564

Date uploaded in London – 21 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வளமான வாழ்க்கைக்கு நிர்வாக இயல் கதைகள் இரண்டு!

 ச.நாகராஜன்

(பெண்களும் ஆண்களும் நிர்வாக இயலில் தூள் கிளப்பும் இந்தக் காலத்தில் இந்தக் கட்டுரை மகளிர்க்கு மட்டும் இல்லை; ஆண்களும் இதைப் படிக்கலாம்.)

நிர்வாக இயல் சம்பந்தமான கூட்டங்களில் வளமான வாழ்க்கைக்கான உத்திகளை, கதைகளோடு சொல்வது வழக்கம். இரண்டு கதைகளைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையொட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.

ராஜா அவர்களைப் பாராட்டிவிட்டுக் கூறினார்:- “அறிஞர் பெருமக்களே! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்து போகிறேன். ஆனாலும்

இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் வீணாகி விடக் கூடாது. ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்.”

அறிஞர்கள் கூடித் தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம், “ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றுமில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.

மனம் மகிழ்ந்த ராஜா, “அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்”” என்றார்.

அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.

ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன், “அரசர் பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்” என்று கூறு தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.

ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, “உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்” என்றார்.

அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

மகிழ்ந்து போன ராஜ மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார். “ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாதபடி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா? இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்” என்றார்.

அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர். அதைப் படித்துப் பார்த்த ராஜா, “ஆஹா! மிக மிக அற்புதம்! என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன? என்றார்.

அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலைநறுக்கில் எழுதித் தந்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார்.

“இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே! இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்” என்று மகிழ்ந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான். 

அந்த வாசகம் என்ன தெரியுமா? 

“இலவசமாக உணவு கிடைக்காது!” என்பது தான் அந்த வாசகம். 

இன்னொரு கதை பார்க்கலாமா? 

ஒரு ஊரில் ஒரு சிட்டுக்குருவி இருந்தது. அதற்கு விநோதமான பொழுதுபோக்கு இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல அது விநோதமான உணர்வுகளை மனித இனம் போன்ற இதர இனங்களிலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வுகளை கலெக்ட் செய்வது தான் அதனுடைய ஹாபி!

மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது விரும்பி கலெக்ட் செய்து கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால்  சிட்டுக்குருவிக்கு குஷி வந்து விடும். தன் பையில் பொறாமையைச் சேர்த்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான கலெக் ஷனாக அது விநோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.

மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!! பேராசைகளின் அடிப்படையிலான விநோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை.

தனது கலெக் ஷனை எண்ணி மகிழ்ந்து போனது அது! இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை விநோத உணர்வு கலெக்‌ஷனால் நிரம்பித் தளும்பப் போகிறது!

ஒரு நாள் அதற்குப் பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இதுவரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால் இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.

சோர்ந்துபோன் அது ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், “என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே. உடம்புக்கு என்ன?” என்றது.

“நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய்விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை” என்றது.

பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டது நாய்.

“அதுவா, என்னுடைய கலெக்‌ஷனான உணர்வுகளை வைத்திருக்கிறேன்” என்றது குருவி.

“அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்” என்றது நாய்.

“எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் கலெக்ட் செய்திருக்கிறேன்” என்றது குருவி.

“அப்படியா! இந்தப் பைதான் உன்னைப் பறக்கவிடாமல் செய்கிறது என்று நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்” என்றது நாய்.

“சே! புரியாமல் பேசுகிறாயே! இது. மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை” என்றது குருவி.

நாய் நண்பன் விடவில்லை. “எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்” என்றது அது.

ஒத்து கொண்ட குருவி தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது.

அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது.

அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம், இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.

ஒவ்வொன்றாக அது கீழே போடப்போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அது அதிக ஆற்றலுடன் பறக்க ஆரம்பித்து  விண்ணையே தொட்டு விட்டது.

சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தபோது சொன்னது:-

“நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்திவிட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை கலெக்ட் செய்யவே கூடாது.  அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அதுமட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட, கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு. மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது. மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால் அவர்களும் விண்ணைத் தொடலாமே!”

சிட்டுக்குருவியின் உரையைக் கேட்ட நாய் மகிழ்ந்தது. இருவரும் சிரித்த போது வானமே லேசாகி சிரித்தது போல இருந்தது.

இந்தக் கதைகள் கூறும் நீதி தான் வாழ்க்கையில் மேம்படுவதற்கான அஸ்திவாரமான உண்மைகள்!

**

மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, அக்டோபர் மாதம் வெளியான கட்டுரை.

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 1 (Post No.13,563)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,563

Date uploaded in London – 20 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 1 (Post No.13,563)

The amazing thing about the Himalayas is that it was mentioned in the oldest book in the word- The Rig Veda (RV). Prof. Wilson attacked Max Muller for giving a wrong date to RV and then Max Muller went back hurriedly and said that no one can date the Rig Veda. Prof. Wilson who translated the RV gave it a date around 2000 BCE. Others ,on geological grounds, gave up to 6000 BCE. Bharati, the greatest of the Modern Tamil poets mentioned Himalayas many times. He died in 1921. He said that there is nothing greater on earth than the Himalayas.

மன்னும் இமயமலை யெங்கள் மலையே

மாநில மீதிது போற்பிறி திலையே!

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?

பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே

பார் மிசை யேதொரு நூல்இது போலே?

பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே

போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.- Bharati

I wrote two articles in 2022 giving more details from 2000 year old Sangam Tamil Literature. Tamil poets translated mostly from Kalidasa’s Kumarasambhava. Again, Kalidas is dated from 2nd century BCE to 4th century CE. But most of the Sanskrit scholars placed him in the BCE period, latest being the Penguin Edition of Kalidasa by Chandra Rajan.

I argued that he lived before Sangam period since his 200 similes (out of 1500) are found in Tamil Sangam poems. Brahmin poets of Sangam period, who contributed more than other communities, translated Kalidasa’s lines verbatim (Please read my previous two parts for authentic references).

Rig Veda Mandala 10 Hymn 121-4


यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः |
यस्येमाः परदिशो यस्य बाहू कस्मै देवाय हविषाविधेम ||

Himalayas in the Vedas

His, through his might, are these snow covered mountains, and men call sea and Rasa his possession

His arms are these , his are these heavenly regions. What God shall we adore with our oblation” -RV.

10-121-4

From the Atharvana Veda (AV)

12-1-11 of Bhumi Sukta the poet used the word Himavanto again:-

“Pleasant be thy hills, O Earth,

Thy snow-clad mountains and thy woods

Earth – – brown, black, ruddy and multi coloured

the firm earth protected by Indra,

on this earth I stand , unvanquished, unslain, unhurt  (AV 12-1-11)

We have more references to Himalayan rivers including Ganga, Sindhu and Sarasvati.

xxx

Kalidasa’s Beautiful lines in Kumarasambhava

“There is in the northern quarter, the deity souled lord of mountains , by name Himalaya who stands like the measuring rod of the earth spanning the eastern and western oceans (Devataatma, earth’s Maanadandah)”

xxx

This is an addition to my two parts articles.

We will see more from Tamil sources such as

Tevaram by threeSaivite saints Tirumanthiram of Tirumular, Tiruvasagam of Manikkavasagar, Periya Puranam of Sekkizar etc

Kalhana, author of Rajatarangini (River of Kings) in Sanskrit referred to the great mountain in the following places:

Himalaya was under Tethys sea millions of years ago according to modern geologists. In fact Kalhana was the first one to report this scientific fact. Because he mentioned manu period/ manvantara which takes us back to geological ages.

Once upon a time there was the lake of Sati ; and from the beginning of the

Kalpas the land in the womb of the  Himalayas was filled with waters during the intervening period of six Manus 1- 25

xxx

Describing Paravarasena’s palace, the poet said

He was seen by the people   going in the direction of which Kailas is the ornament, occasioning the bright sky the rising of a second sun – 3-375

xxx

After the wont of animals those stupid monkeys who lived on the Himalaya, when their curiosity had died down, deposited the two gods in  uttara manasa – 3-448

(This is about the images of vishnu and linga worshipped by siva, later taken by Ravana to Lanka and lastly came in to the hands of Vanaras of Ramayana after the death of Ranana.)

xxx

Aryavarta

Between the chiefs of the Darads and the Turks he, who was placed between a lion  and a wild boar, was like Aryavarta  (aaryaavarta) beween the Himalaya and the Vindhya; in whose  city Uddabhaanda ruling princes became free from menace like the mountains in the ocean , when peril of cutting of their wings; whose mighty renown among the kings of the northern region was like the orb of the sum among the constellations in the heaven; that illustrious Lallia Saahi , the refuge of Alakhaana, did not have the privilege of serving Sankaravarman who in ager desired to oust him from sovereignty- 5–152 to 155, Rajatarangini of Kalhana

(here Kalhana uses many similes)

XXXX

MANU SMRITI ON HIMALAYA

हिमवद्विन्ध्ययोर्मध्यं यत् प्राग् विनशनादपि ।
प्रत्यगेव प्रयागाच्च मध्यदेशः प्रकीर्तितः ॥ 2-२१ ॥

himavadvindhyayormadhyaṃ yat prāg vinaśanādapi |
pratyageva prayāgācca madhyadeśaḥ prakīrtitaḥ || 21 ||

The country lying between the Himālaya and the Vindhya, to the east of Vinaśana and to the west of Prayāga, is called the ‘Madhyadeśa,’ the ‘Middle Country.’ (2-21)

Medhātithi’s commentary (manubhāṣya):

On the north lies the Himālaya and on the south the Vindhya. ‘Vinaśana’ is the name of the place where the Sarasvatī river has disappeared.—(20)

Prayāga’—is the confluence of the Gaṅgā and the Yamunā.

The region having these four as its boundaries is to be known by the name ‘Madhya-deśa.’ It is called ‘madhya’ or ‘middle,’ because it is neither very superior nor very inferior,—and not because it is located the centre of the Earth.—(21)

Explanatory notes by Ganganath Jha

Vināśana’—This is the name given to the place where the river Sarasvatī becomes lost in the sands. Buhler says it lies in the district of Hissar, in the Punjab.

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc145597.html

To be continued…………………..

XXXX

MY OLD ARTICLES ON HIMALAYA

HIMALAYAS IN THE RIG VEDA AND TAMIL SANGAM …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2022/05/12 › himalayas-in…

12 May 2022 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. HIMALAYAS IN THE RIG VEDA AND TAMIL SANGAM …

HIMALAYAS IN RIGVEDA AND TAMIL LITERATURE- 2 …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2022/05/13 › Himalayas-in…

13 May 2022 — The Himalayas is described by the poet as a place “ where deer and their fawns sleep in the warmth of Brahmins Three Fires (Yaga, Yajnas) in the …

–SUBHAM—

TAGS- Himalaya, Manu Smriti, Raja Tarangini, Vedas, Sangam Tamil Literature,  Aryavarta

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 2 (Post No.13,562)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,562

Date uploaded in London – 20 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

2 ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 2

அனுமனுக்குக் கிடைத்த முத்து மாலை

ராமநவமி என்பது ராமனின் அவதார நாள். அது கோடை காலத்தில் வரும். அப்போதெல்லாம், பாபா கொடைக்கானலில் இருப்பது வழக்கம். ஒரு ராம நவமியின்போது ராமர் பட்டாபிஷேக தினத்தில் அனுமனுக்கு சீதை அளித்த முத்து மாலையை, பாபா, தனது அபூர்வ சக்தியால் வரவழைத்து எல்லோருக்கும் காட்டினார். அதன் விவரமாவது:

(இதை சத்திய சாய் பாபா சொன்னபடி தருகிறேன்).

ராமர் முடி சூட்டிக் கொண்ட நாளில், அவர்  எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். அங்கு வந்த எல்லோரும் பரிசுகளைப் பெற்றனர். ஆனால் அனுமார் பக்கமே ராமர் திரும்பவில்லை. சீதைக்கு ஒரே கவலை. எங்கேயாவது ராமர் மறந்து விடப் போகிறாரே என்று எண்ணி அவர் காதில் கிசுகிசுத்தார், “அனுமனை மறந்து விடாதீர்கள்” என்று. உடனே ராமரும் சீதை காதில் கிசுகிசுத்தார், “எனக்குத் தெரியும்; நான் மாருதியை (அனுமன்) மறக்கவில்லை. அவன் எதைக் கொடுத்தாலும் வாங்க மாட்டான். அவன் எவ்வளவு விலை உயர்ந்த பொருளானாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான்” என்றார்.

சீதைக்கு அந்த பதில் திருப்தி தரவில்லை. தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அனுமனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அனுமன் ஒரு சந்தேகப் பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டார்.

எல்லோர் முன்னிலையிலும் ஒவ்வொரு முத்தாகக் காதில் வைத்துக் கேட்பது, சில முத்துக்களைக் கடித்துச் சுவைப்பது – என்று மாறி மாறி செய்தார். சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. சரிதான்! குரங்கு புத்தியைக் காட்டிவிட்டது என்று நினைத்து, அனுமனே அது முத்து மாலை என்றாள்.

அனுமன் மிகப் பணிவுடன் சொன்னான்: அன்னையே எனக்குத் தெரியும். எனக்கு முத்து வைரம் எல்லாவற்றையும் விட ராம நாமமே உயர்ந்தது. சில முத்துக்களில் மட்டுமே ராமனின் திரு நாமம் ஒலிக்கக் கண்டேன். அவைகளைப் பத்திரமாக வைத்துவிட்டு, ஏனையவற்றைச் சுவைத்துப் பார்த்தேன்” என்றார்.

இந்த பதிலும் சீதைக்குத் திருப்தி தரவில்லை. சீதையின் முகக் குறிப்பால் எண்ணத்தைக் கண்டு பிடித்த சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன், அன்னையே, உங்கள் சந்தேகத்தை நீக்குகிறேன். இதோ பாருங்கள்; எனது முடிகளில் ஒன்று (ரோமம்). இதை ராமனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கீழே போட்டார். சீதை அதைத் தன் காதருகே கொண்டு சென்றபோது ராம நாமம் அதிலிருந்து ஒலிக்கக் கண்டு வியந்தாள்.

இந்தக் கதையைச் சொன்ன பிறகே சத்திய சாய் பாபா அந்த முத்து மாலையை வரவழைத்தார். அங்கிருந்த மாணவர்களிடம் அதைக் கொடுத்து பரிசீலிக்கச் சொன்னார். அவர்கள் பரிசோதித்ததில் பல முத்துக்களின் மீது அனுமனின் பல்தடம் தெரிந்தது. பின்னர் மாலையை வாங்கி அது வந்த வழியிலேயே மாயமாய் மறையும்படி செய்தார்.

–ரேடியோ சாய் வழங்கிய செய்தி.

இனி ஹனுமான் சாலீஸாவைக்  காண்போம்

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கேஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம்ஹரஹு கலேச விகார்

XXXX

1.ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

பொருள்

ஸ்ரீ குருவின் பாத கமலங்களில் உள்ள மகரந்தத் தூள் என் மன க்க கண்ணாடியிலுள்ள அழுக்கை அகற்றி தூய்மை செய்யட்டும்.அறம் , பொருள், இன்பம், வீடு என்ற  வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களையும் அளிக்கும் இராமபிரானின் மாசுமருவற்ற புகழை  வருணிக்கிறேன்.

ஹே காற்றின் மைந்தனே! உன்னைத் தியானம் செய்கிறேன் என்னுடைய அறிவும் பலமும் குறைவு என்பதை நீ அறிவாய். ஆகவே ஆற்றலையும் அறிவையும் நல்குவாயாகுக..அஞ்ஞானத்தையும் அறியாமையையும் அகற்ற வேண்டுகிறேன்

அனுமனே உனக்கு வெற்றி உண்டாகட்டும் .உன்னுடைய ஞானமும் குணங்களும் கடல் போலப் பரந்தவை ; ஆழம் காண முடியாதவை; வானரர் தலைவனே வாழ்க;உன்னுடைய புகழ் மூவுலகங்களிலும் பட்டொளி வீசப்பரவுகிறது .

xxxx

துளசிதாசர் முதல் ஸ்லோகத்திலேயே அனுமனை ஞானம் , குணம் ஆகியவற்றின் பெருங்கடல் — அறிவுக் கடல் என்று பாராட்டுகிறார் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் ஹனுமனை, வால்மீகி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அனுமனின் பேச்சைக் கேட்ட ராமன் அசந்தே போகிறார்.லெட்சுமணனிடம் சொல்கிறார்:

तमभ्यभाष सौमित्रे सुग्रीवसचिवं कपिम्।

वाक्यज्ञं मधुरैर्वाक्यैस्स्नेहयुक्तमरिन्दम।।4.3.27।।

நட்புறவுக்கு ஏற்ற சொற்களை மொழிந்தான்; ஆகையால் தம்பி இனிய சாந்தமான வார்த்தைகளால் அவனுக்கு மறு மொழி கொடு

xxx

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।

नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम्4.3.28।।

ரிக், யஜுர்,சாம வேதங்களில் வல்லவராக இருந்தால்தான் இப்படி பேச முடியும் (அனுமன் பிட்சு/சாது  வடிவத்தில் வந்து  ராமனிடம் பேசினான்)

xxx

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।

बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्4.3.29।।

இலக்கணத்தை முழுதும்  கற்றவன் என்பதும் தெளிவாகத் தெரிகிறது ; அவன் சொன்னதில் ஒரு இலக்கணப் பிழையையும் நான் காணவில்லை

xxx

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा।

अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्4.3.30।।


 அவன் முகத்திலோ கண்களிலோ, நெற்றியிலோ, புருவ மத்தியிலோ, உடலின் வேறு எந்த உறுப்பிலோ கோணல் ,நெ ளிவு சுழிவு விழவில்லை

xxxx

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम्।

उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे4.3.31।।

அவனுடைய வாக்கியங்கள் வள வள என்றுமில்லை; இழுத்து இழுத்துப் பேசவுமில்லை ; வேகமாகப்  பேசவில்லை; சொற்கள் மார்பு அல்லது தொண்டையிலிருந்து நடுத்தர ஒலி யில் வந்தன


xxx

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।

उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम्4.3.32।।

அவன் சொற்கள் மங்களம் தருவனவாக இருந்தன  தூய சொற்கள் வேகமாகவோ மெதுவாகவோ இல்லை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேச்சு அது.
xxxx

अनया चित्रया वाचा त्रिस्थानव्यञ्जनस्थया।

कस्य नाराध्यते चित्तमुद्यतासेररेरपि4.3.33।।


அவனது வண்ண மிகு சொற்கள் மனோ வாக் காயத்திலிருந்து (நெஞ்சு,குரல்வளை , மூளை ) வந்தன. அவன் கத்தியை கையில் ஏந்தி வந்து இப்படிப்பேசினாலும் எதிரி  அவனைப் புகழாமல் இரான்.


xxx

एवं विधो यस्य दूतो न भवेत्पार्थिवस्य तु।

सिद्ध्यन्ति हि कथं तस्य कार्याणां गतियोऽनघ4.3.34।।

இப்படிப்பட்ட தூதன் ஒருவன் அரசனுக்கு இருந்தால் அவன் லட்சியத்தை அடையாமல் இருப்பானா ? (நினைத்ததை முடித்துவிடுவான் )

xxxx

एवं गुणगणैर्युक्ता यस्य स्युः कार्यसाधकाः।

तस्य सिध्यन्ति सर्वाऽर्था दूतवाक्यप्रचोदिताः4.3.35।।


 நல்ல குணங்களை உடைய , கருமமே கண்ணாயிரமான தூதர்களை உடையோர் தூதரின் திறமை மூலமாகவே நினைத்ததை முடித்துவிடுவார்கள்.
xxx

இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே அனு மனை ராமன் வானாளாவ புகழ்கிறான்.

கம்பனும் அனுமனை நவ வியாகாரணம் கற்றவன் , தொல்காப்பிய பாயிரம் சொல்லும் ஐந்திர வியாகரணம் கற்றவன் என்றெல்லாம்  புகழ்கிறான்.

xxxx

Hanuman seen in Yaga Fire

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது.

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)? 

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

To be continued……………………………

—subham—

Tags- ஹனுமான் சாலீஸா ,விளக்கக் கதைகள் – Part 2, பாபா, முத்துமாலை, சொல்லின் செல்வன், இலக்கணம், வேதம், கற்றவன்

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –31 (Post No.13,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,561

Date uploaded in London – 20 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மருத்துவ அதிசயங்கள் 

இனிமேல் விஷ்ணு சஹஸ்ரநாம (விச.)த்திலுள்ள மருத்துவம் தொடர்பான நாமங்களைக் காண்போம் .

 பேஷஜம் – நாம எண்  578–

மருந்து என்று பொருள்.

பிறவிப் பிணிக்கான மருந்து என்று ஆதி சங்கரர் பொருள் சொல்கிறார்.

சுற்றி வளைத்துப் பார்த்தால் அது உடல் நோய்க்கும் மருந்து. ஏனெனில் நோய்கள் ஒரு மனிதனுக்கு வருவதற்கு காரணமே பூர்வ ஜென்ம கர்மம்  தான் என்று ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் கூறுகின்றனர் ; அப்படிப் பிறப்பு வராமல் அறுக்கும் – மாயப்  பிறப்பறுக்கும்–  மருந்து இறைவனின் நாமமே!

மேலும் சில சுவையான விஷயங்கள்

1. சிவ பெருமானைப் போற்றித் துதிக்கும் யஜுர் வேத மந்திரமான ருத்ரத்திலும் பேஷஜம்’ என்று நாமம் வருகிறது.

2. இறைவன்தான் பிறவிப் பிணிக்கு மருந்து; இதை ஆழ்வார் நாயன்மார்  பாடல்களிலும் காண்கிறோம்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை

பிரிவிலா அடியார்க்கென்றும்

வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்

தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

  – அப்பர்

இங்கே இரு பொருள் தொனிக்க அப்பர் தேவாரம் பாடியுள்ளார் இது பாடிய தலம் உடல் நோய் களையும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் ஆகும்.

3.மனிதனின் உடலை வலுவாக, நோய் வராமல், வைத்துக்கொள்ளும் மருத்துவத் துறைக்கும் ஆயுர் வேதம் என்று வேதத்தின் பெயரையே சூட்டினர்; தமிழர்களும் சித்த மருத்துவம் என்று சித்தர்கள் கண்டதாகவே சொன்னார்கள். அதாவது ஆன்மீக, லெளகீக அகராதிகளில் இறைவனைவேதத்தை ஸம்பந்தப்படுத்தியே நம்மவர்கள் அணுகினார்கள். 

1600 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்தீஸ்வரனைப் பாடியதோடு மட்டும் நில்லாமல் சுந்தரர் போன்றோர் சிவனைப் பாடி கண் நோய்கள் நீங்கப்பெற்றார்கள்.

கேரளத்தில் நாராயண பட்டதிரி போன்றோர்  குருவாயூரப்பனைப் பாடிடியே உடல் நலம் பெற்றனர்.

நாராயணீயம் படித்து தன்னுடைய தோல் நோயைத் தீர்த்துக்கொண்டதை ஸ்ரீ அனந்த ராம தீட்சிதர் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

வைத்தீஸ்வரன் கோவில், சங்கரன் கோவில் போன்ற இடங்களில் மருந்து உருண்டை என்ற பெயரில் புற்று மண், மிளகு, உப்பு போன்றவைகளை  பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் இறைவன், நம்முடைய பவரோகத்தையும்  தீர்ப்பான். உடலில் வரும் நோயையும் தீர்ப்பான்.

இப்போதும் மக்கள் குறிப்பிட்ட கோவில்களுக்குப் போனால் குறிப்பிட்ட நோய்கள் போகும் என்ற நமபிக்கையுடன்  தீர்த்த யாத்திரை செய்வதைக் காணலாம்.

இதில் சில விஞ்ஞான உண்மைகளும் உள ; சில இடங்களில் உள்ள, தண்ணீர், கோவில்களில் தரும் துளசி தீர்த்தம்வில்வ மரங்கள் சூழ்ந்த சிவன் கோவில்கள் முதலியன மருத்துவ குணங்கள் உடையவை

xxx

ஒளஷதம் — நாம எண் 578– 

இங்கும் பிறவிப் பிணிக்கு- அதாவது ஜனன- மரண சுழலுக்கு — மருந்து என்றே சொல்லப்படுகிறது. உலகத்தில் இந்துக்களும் இந்தியாவில் தோன்றிய கிளை மதங்களும் மட்டுமே மறு  பிறப்பை நம்புகின்றன .பிறந்து, பிறந்து இறப்பதை ஒரு பிணி என்றும் சொல்லுகின்றன.காரணம் என்னவெனில் அவர்களுக்கு பழம்பிறப்புகளை அறியும் சக்தி இருந்தது; இதை மாணிக்கவாசகர் போன்றோர் தெளிவாகவே பாடுகின்றனர் ; நம்மில் எவருக்கும் நமது வாழ்வில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கும். அப்படி இருக்கையில் புழு வாகவும் பண்றியாகவும் பிறந்து கோடிக்கணக்கான பிறப்புகளுக்குப் பின்னர் மானுட ஜென்மம் கிடைத்து என்று ஆதிசங்கரரும் திருமூலரும் சொல்லுகின்றனர் ; இதை அறியும் சக்தி நமக்கிருந்தால் நாமும் பிறவாமை வேண்டாம் என்றே வேண்டுவோம்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் (சிவ புராணம்திருவாசகம்)

xxxxx

வைத்யஹ — நாம எண் 164-

பொருள் – டாக்டர், மருத்துவர் .

இன்னும் ஒரு  பொருள்: எல்லா வித்தை களையும் — அதாவது பல்வேறு ‘சப்ஜெக்ட்டு’க்களையும், துறைகளையும் அறிந்தவர்.

வேதத்தில் பிஷக் என்ற சொல்லினால் வைத்தியர் குறிப்பிடப்படுகிறார்.

ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு ஸ்லோகம் உண்டு :

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்.

யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.

பல ஊமைகள் தெய்வ சந்நிதியில் வாக்கு வண்மை பெற்றதை குமரகுருபரர் போன்றோர் வா க்கையில் அறிகிறோம் .

xxxx

வி.ச.வில் இயற்கை!


இந்துக்களின் வாழ்வு இயற்கையோடு இயைந்தது;  இயற்கையிலுள்ள எல்லப்  பொருட்களையும் வணங்குவர்; அவைகளைப்ப பயன்படுத்தும்போது மன்னிப்புக் கேட்டுவிட்டு, உரிய மரியாதை செலுத்திவிட்டு, பயன்படுத்துவர்; இவைகளை எல்லோரும் சொல்லி வந்த, இப்பொழுது ஆர் எஸ்.எஸ். ஷாகாக்களில் மட்டும் சொல்லி வரும், காலை வணக்கம்/ பிராதஸ்மரண ஸ்லோகங்களில் காணலாம் . படுக்கையிலிருந்து எழுந்து நிலத்தை மிதிக்கும்போதும் , கையை விரித்துப் பார்க்கும்போதும் இதைச் செய்வார்கள் . உழும் காலம் வந்தவுடன், முதலில் அரசன் தங்க ஏர் கொண்டு உழும்போது மன்னிப்புக் கேட்கும் மந்திரம், மரத்தை வெட்டும் போது மந்திரம் , துளசி வில்வம் இவைகளை பறிக்கும்போது மந்திரம் — இவ்வாறு நூற்றுக்கணக்கில் சொல்லலாம். தேவைக்கு அதிகமாக எதையும் அழிக்காதே ; அரச மரம் ஆனாலும், ஆல மரம் ஆனாலும் அதை வணங்கு; வாடி ய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் (வள்ளலார் பொன்மொழி) என்பது இந்துக்களின் கொள்கை.

காளிதாசன் எழுதிய பறவைப்பெண் (சாகுந்தலம்) என்ற உலகப் புகழ்பெற்ற நாடகத்தில் செடிக்குத் தண்ணீர் விட்டு, பறவைகளுக்கு உணவிட்ட பின்னர்தான் பறவைப் பெண் (சகுந்தலா ; சகுன= பறவை ; சகுனம் = பறவைகள் சொல்லும் செய்திகள்; சகுந்தலா = பறவை வளர்த்த பெண் ) வேறு பணிகளைச்  செய்வாள்.

ரிக் வேதத்திலேயே இமயத்தின் புகழும் ஆல மரத்தின் புகழும் (மஹா வ்ருக்ஷம்) இருக்கிறது

வி.ச.வில் ஆல , அரசு , அத்தி, சோம  மரங்களை விஷ்ணு என்று வணங்கும்  நாமங்கள் உள்ளன ; ஹம்ச/ அன்னம் , சுபர்ண கருடன் போன்ற பறவைகளும் சிங்கம் , வராஹம் போன்ற விலங்குகளும் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தில் ராமனை புலியே எழுந்திரு! காலைக் கதிரவன் உதித்துவிட்டான் என்று விச்வாமித்திரர் எழுப்பிவிடுவது வெங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாக வருகிறது (உத்திஷ்ட நரசார்தூல ).

தமிழ் நாட்டில் 300 கோவில்களில் தல மரங்களை வணங்குகிறார்கள் ; மதுரை மீனாட்சி கோவிலில் கடம்ப மரத்தைச் சுற்றியே பக்தர்கள் செல்கிறார்கள்; எல்லா உபநிஷத்துக்களும் இயற்கை சூழ்ந்த இமயத்தில் உருவானது; சங்க இலக்கிய புலவர்கள் கங்கையையும் இமயத்தையும் விதந்து ஓதுகிறார்கள்; புராணங்கள் அனைத்தும் நைமிசாரண்யம் காட்டில் இயற்றப்பட்டன

xxxx

மஹீதரஹ- நாம எண் 369-

பூமியைத் தாங்குகிறவர்; பூபாரத்தைப் போக்குபவர்.

விஷ்ணு புராணம் சொல்கிறது:

வனானி  விஷ்ணுர் கிரயோ திஸாஸ்  ச — என்று விஷ்ணு போற்றப்படுகிறார்.

காடுகளும் மலைகளும் திசைகளும் விஷ்ணுவின் வடிவமே — என்பது பொருள்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா

உந்தன் கரிய நிறம் தோன்றுதையா  நந்த லாலா — என்ற பாரதி பாடலையும்

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்

      கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

      நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)–என்ற பாரதி பாடலையும்  இது நினைவுபடுத்தும் .

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0021.html

xxxx

லோக சாரங்கஹ — நாம எண் 783–

சாரங்க, என்பதற்கு, வில், தேனீ , மான் போன்ற நான்கு கால் விலங்குகள் ஆகிய பொருளும் உண்டு.

வி.ச.வில் தேனீ என்ற பொருளில் வருகிறது; அது பூவின் சாரத்தை எடுப்பது போல, விஷ்ணுவும் பூமியின் சாரத்தை கிரஹிக்கிறார்.

இந்து சமய சாஹித்ய   கர்த்தாக்களும் மஹான்களும் தங்களை இறைவனின் தாமரைப் பாதங்களைச் சுற்றிவரும் தேனீக்களாக வருணித்துப் பாடுகிறார்கள் – பிரமரி = வண்டு .

 க்ஷேமம் குரு கோபால – நாராயணதீர்தர் :–

क्षेमं कुरु गोपाल   संततं मम  க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம

क्षेमं कुरु गोपाल||                க்ஷேமம் குரு கோபால |

कामं तवपाद-कमल भ्रमरी भवतु      காமம் தவபாத-கமல ப்ரமரி பவது

श्रीमन् मम मानसं मधुसूदन      (क्षेमं….)   ஸ்ரீமன் மம மானஸம் மதுசூதன |

 –subham—

Tags: பேஷஜம், பிஷக், வைத்ய, மருத்துவர், டாக்டர், சித்த, ஆயுர்வேத, மருத்துவம், இயற்கை, கடவுள், பிராத்த ஸ்மரணம்  காக்கைச் சிறகினிலே, காக்கை, குருவி எங்கள் ஜாதி, பாரதி, பிரமரி

நீங்களும் நினைவாற்றல் ‘புலி’ ஆகலாம்! (Post No.13,560)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.560

Date uploaded in London – –20 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நீங்களும் நினைவாற்றல் ‘புலி’ ஆகலாம்! 

ச. நாகராஜன் 

போன் நம்பர் மறந்து போச்சே… பார்க்கிங் லாட்டில் வைத்த வண்டி நம்பர் மறந்து போச்சே…  உப்பு, புளி வாங்கணும்னுதான் நினைச்சேன், மறந்து தொலைச்சேனே…. என்ற கவலை இனி இல்லை உங்களுக்கு…

இதோ இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

மறதிக்கு ஒரு பை!

தகவல்களைப் பெற்று சேமித்து வைக்கும் திறனே நினைவாற்றல் என்று கூறப்படுகிறது. ஒரு கோப்பில் தகவல்களைச் சேமித்துத் தேவையான போது அதை எடுத்துப் பார்ப்பது போலத் தான் நினைவாற்றலும்! கணினியில் உள்ள கோப்பு அமைப்பை எடுத்துக் கொள்வோம். அதில் கோப்பு அமைப்பில் தகவல்கள் உள்ளிடப்பட வேண்டும். பிறகு தகவல் சிதையாமல் காக்கப்பட வேண்டும். தேவையானபோது அவற்றை எடுத்துப் பெற வேண்டும். இந்த மூன்றுமே என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களான

Registration, Retention, and Recall என்பனவற்றில் ஆரம்பிப்பதால் இதை மூன்று R’s என்று உளவியலாளர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

மனிதர்களின் நினைவாற்றல் திறன் பிரமிக்க வைக்கும் ஒன்று! வயதுக்கு வந்தோரால் 20,000 முதல் 1,00,000 சொற்கள் வரை நினைவில் வைத்திருக்க முடியும். இத்துடன் கூட ஒரு அன்னிய. மொழியைக் கற்கலாம். சிக்கலான திறமைகளைக் கைக்கொள்ளலாம். எல்லாத் தகவல்களை உள்ளடக்கியவாறே எங்கும் செல்லலாம். பாரத தேசத்தின் மிகப் புராதனமான புனிதமான வேதங்கள் நினைவாற்றல் வழியாகத்தான் பரம்பரை, பரம்பரையாக ஓதப்பட்டு தலைமுறைகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டு வந்தது.

நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்வது ஒரு வழி. நினைவாற்றல் அமைப்பு முறைக்கு நிமோனிக் சிஸ்டம்

 (Menmonic System) என்று பெயர்.

மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக போன் நம்பர்கள், கணித சூத்திரங்கள் போன்றவற்றில் வரும் எண்கலை எப்படி நினைவில் கொள்வது? இதற்கு ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் காணலாம். இதே போல தமிழிலும் நமக்கு நாமே நினைவு வாக்கியங்களை அமைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்தைப் பார்ப்போம்:

May I have a large container of coffee?

இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள எழுத்துக்களை எண்ணி அவற்றை வரிசையாக சொன்னால் வருவது கணிதக் குறியீடான ‘பை’க்கான மதிப்பு வரும்.

May – இதில் மூன்று எழுத்துக்கள்.  

– இதில் ஒரு எழுத்து

Have – இதில் நான்கு எழுத்துக்கள்.

இப்படியே தொடர்ந்தால் வருவது .    3.1415926

சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் இன்னொரு வாக்கியத்தை அமைத்துக் கொண்டு ‘பை’யின் மதிப்பை  14 இலக்கச் சுத்தமாகச் சொன்னார். அவர் அமைத்த வாக்கியம்:

How I want a drink, alcoholic of course, after the heavy chapters involving quantum mechanics‘பை’யின் மதிப்பு : 3.14159265358979.

இந்த நினைவாற்றல் உத்தியை நன்கு கற்று நிபுணராக ஆகிவிட்டால் எந்த இலக்கத்தையும் – போன் நம்பராக இருந்தாலும் சரி, கணித சூத்திரமாக இருந்தாலும் சரி, நினைவில் கொண்டு அனைவருக்கும் கூடக் கற்பிக்கலாம். இனி நமது கார், ஸ்கூட்டர் நம்பரை மறந்து விட்டோம் என்ற பேச்சே இருக்காது! 

இது போலப் பல வழிகள் உண்டு. அவற்றை கற்கும் முன்னர் நினைவாற்றலை எப்படிப் பிரிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 பீட்டர் ரஸ்ஸல் தனது நூலான ‘தி ப்ரெய்ன் புக்;-ல் நினைவாற்றலை எட்டு விதமாகப் பிரித்து விளக்குகிறார்.’

 நிகழ்வு நினைவு : ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும் பழைய கால நிகழ்வுகள் இந்த வகையைச் சார்ந்தவை.

 உண்மை நினைவு: ஆகஸ்ட் 15-ம் தேதி. இந்தியாவின் சுதந்திர தினம். இவை போன்ற ஏராளமான உண்மைத் தகவல்கள் இந்த வகையைச் சார்ந்தவை. 

பொருள் நினைவு : யானை ஒரு மிருகம். குயில் ஒரு பறவை. இது போல சாதாரண மனிதன் ஒருவன் ஆயிரக்கணக்கான வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறான்.

 புலன் நினைவு : உங்களுக்குப் பிடித்த சினிமா காட்சி எதையேனும் ஒன்றை நினைவுக்குக்கொண்டு வாருங்கள். அதில் உள்ள காட்சிகள் உறைய வைக்கப்பட்ட நிலையில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளியுடன் உங்கள் பார்வைக்குத் தரப்படுகிறது; ஆனால் நீங்கள் பார்ப்பதோ தொடர்ந்த ஒரு அசையும் சித்திரத்தைத் தான்! 

இந்த பார்வை உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள் மூளை அடுத்த சித்திரம் வரும் வரை முதல் சித்திரத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும். இதே முறை தான் நாம் எதையேனும் காதால் கேட்கும் போதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சின்ன வார்த்தையை எடுத்துக் கொண்டாலும் கூட அது பல்வேறு ஒலிகளின் கலவை தான்! அடுத்தது வரும் வரை முதல் ஒலி சேமித்து வைக்கப்படுகிறது! இந்த அனைத்துமே ஒரு வினாடியை பல சிறிய பகுதிகளாகப் பகுத்தால் அதில் சில பகுதிகளுக்குள் நடந்து விடுகிறது.

 திறமை நினைவு: எல்லாத் திறமைகளும் கூட நினைவாற்றலைக் கொண்டே உள்ளன. எப்படி காரை ஓட்டுவது, எப்படி கோப்பையில் உள்ள காப்பியைக் குடிப்பது – இவை எல்லாம் நினைவாற்றலில் அடிப்படையாலேயே சாத்தியமாகிறது.

 உள்ளுணர்வு நிகழ்வு : அநேக நினைவுகள் நமது மரபணுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமக்கு ஜீன் மூலமாக வந்துள்ளன. பிறந்த குழந்தை தாயின் மார்பில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சுகிறது! இது மரபணுவால் வந்த நினைவாற்றல்!

 சென்ற ஜென்ம நினைவு : சிலர் தங்கள் பூர்வ ஜென்மங்களிலிருந்து அப்படியே பல சம்பவங்களைக் கூறுகின்றனர்.

 நினைவுகளை அதிகரிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் பார்வையை உபயோகப்படுத்துவது தான்! எதையும் காட்சியாக மாற்றிக் கொண்டால் அது உங்கள் நினைவை விட்டு லேசில் நீங்காது.

 ஏதேனும் முக்கியமான ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குப் பழக்கப்பட்ட இடமான வீடு அல்லது உங்கள் தோட்டம் ஆகியவற்றோடு நினைவில் கொள்ள வேண்டியதை தொடர்புபடுத்தி காட்சியாக ஆக்குங்கள். நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாக உங்கள் வீட்டின் பல பகுதிகளிலும் வைத்து விடுங்கள். லேசில் அது மறக்காது.

 காய்கறி வாங்க வேண்டும், ஃபேனை ரிப்பேர் செய்ய வேண்டும், சினேகிதி பத்திரிகை வாங்க வேண்டும் – அவ்வளவு தானே. கறிகாயை முன்னறை டி.வி. மேல் வைத்து விடுங்கள். ஃபேனை உட்காரும் நாற்காலியில் வைத்து விடுங்கள். சினேகிதியை ஃபேனோடு சுற்ற விடுங்கள். இந்த மூன்றுமே இனி மறக்காது! வீட்டின் பல பகுதிகளிலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இவற்றை வைத்து அதை நினைவுக்கும் கொண்டு வரலாம்! மனச்சித்திர நினைவு உங்கள் நினைவாற்றலைக் கூட்ட எளிய ஆனால் சிறந்த வழி!

 அப்புறம் எல்லோரும் உங்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் நினைவில் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு வியந்து கூறும் அளவு நீங்கள் நினைவாற்றல் நிபுணராக ஆகி விடுவீர்கள்.

**

மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2007, மே மாதம் வெளியான கட்டுரை

Three Brahmins who shattered Caste Barriers -2 (Post No.13,559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,559

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Apputi (appoothi or apputhi) asked his wife to cook rice with vegetables in six different flavours. It is a Tamil tradition to give ‘Aru Suvai Undi’/ six flavoured dishes. Then he summoned his eldest son, whose name also is Tiru Navukkrasar, and sent him into the garden to cut a suitable plantain (banana) tree leaf. The boy hurried into the garden with great enthusiasm and cut one leaf. A snake bit him on the hand, causing him to faint away with the pain. He was determined to deliver the leaf to his parents before the snake poison spread to other parts of the body. After delivering the leaf, he fell and died. But the family did not want to cancel the lunch and hid the matter completely. They wrapped the body of the boy in a mat.

Appar was ready to sit on the floor and eat. But he wanted to give the Vibhuti Prasad- holy ash from Siva temple first and so he said:

Please point out to me your eldest son, so that I can give him the ash first.

Apputi never spoke an untruth, and he said,

He will not be of any use to us here just now.

Appar felt something had gone wrong and wanted to know what happened. He bowed before his guest and with grieving heart explained what happened to his son.

Appar got up and went into the courtyard, where the body was lying. Then he sang a hymn- a decad with ten stanzas—beseeching the lord to act in his grace. The hymn had numbers one to ten in words. When he counted number ten the boy came alive as though he had woken up from sleep. We see such things in wrestling or boxing match. The victim has to get up before the referee finish ten. But this hymn has more than numbers, magical words in praise of Lord Siva.

All were happy. Appar wanted to change the gloomy atmosphere and so he sat with them and ate the dinner. He stayed in the brahmin’s house for many days.  When he returned to Tiruppalanam and composed a hymn in honour of Apputi. No one else had such a long praise from the saint’s mouth. It is a rare piece among thousands of hymns in praise of the Lord.

Earlier poet Sekkizaar said Apputi washed the feet of Appar, a Vaisya by caste man, and drank it, sprinkled it on his head and family members. This happened 1400 years ago in Tamil Nadu. Apputi’s wife, his sons all acted in unison. She was a great woman who saw eye to eye with her husband.

G Vanmikanathan, who translated Periapuranam (Year 1985) says about Apputi’s wife:

What a woman! What a wife! What a mother! What a devotee! Any other woman in her place would have raised such a hue and cry that the guest would have rushed out of the house in dismay. Many a woman would not have been above cursing the devotee as being the cause of her son’s death. But here is a loving mother who sees her eldest son fall at her feet and mindful of the over-riding duty  as a house wife towards a guest , particularly a renowned guest whose spirit ruled the household even before they had set eyes on him, she calmly rolls up the still warm body of her first born and cheerfully goes along with her husband to announce that the meal is ready.

J N Nallaswami Pillai, who translated Periyapuranam in 1955 says,

“Though Appudhi Adigal had not seen Saint Appar, yet from what he had heard of his great love to God and God’s grace manifested towards him, he had become his great devotee and named all his charities, the Mutts where he fed the poor and the Water pandals etc., after him, in utter contrast to modern day philanthropists, who would blazon forth their own names with suitable inscriptions, even to water troughs and whose subscriptions to the charities could be measured by the amount of public notice it would get and in newspapers, and by the amount of appreciation in high quarters.

Nallaswami gives us a correct picture of modern day “philanthropists”. I have seen fluorescent lamps in temples with big and bold name on them which blotted out the light!

xxxx

Used book: The History of The Holy Servants of the Lord Siva, Alastair McGlashan, 2006. ( I was one of the speakers in the Book Launch event in London). It is a very good book with verbatim translation of Periya Puranam.

–Subham—

Tags- Apputhi, Apputi Adikal, Periya Puranam, Appar, Brahmins, shatter, caste barriers, part- 2

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 1 (Post No.13,558)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,558

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

ஹனுமான் சாலீஸா யார் எழுதியது?

துளசிதாஸ் கோஸ்வாமி என்ற மஹான் எழுதியது .

எந்த மொழியில் எழுதினார்?

ஹிந்தி மொழியின் கிளை மொழியான அவதி மொழியில் எழுதினார்

துளசிதாஸ் யார் ?

காசி நகரில் வாழ்ந்து உலகப்புகழ்பெற்ற ராம சரித மானச என்ற ஹிந்தி ராமாயண நூலை இயற்றிய பிராமணர் .

அவர் எப்போது எழுதினார் ?

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்.

ஹனுமான் சாலீஸா என்றால் என்ன?

ஹனுமான் என்றால் அனுமன், ஆஞ்சனேயன் , மாருதி, வாயு குமாரன், அஞ்சனை மைந்தன் என்பது எல்லோருக்கும் தெரியும்

சாலீஸா என்றால் தமிழிழ்  நாற்பது; தமிழிலும் நாம் கார் நாற்பது, களவழி நாற்பது என்று நூல்களுக்குப் பெயரிட்டது போல அவர்களும் இப்படிப் பெயர் சூட்டினார்கள். இது துளசி ராமாயணத்தில் இல்லை; தனியான துதி  வழக்கம்போல பல ஸ்ருதி முதலியவை சேர்ந்து நாற்பதுக்கும் மேலாக ஸ்லோகங்கள் இருக்கின்றன.

xxxx

எனக்குத் தெரிந்த ஹனுமான் சாலீஸா

எனக்கு 65 வயது ஆன வரை ஹனுமான் சாலீஸா பற்றி எதுவுமே தெரியாது.. லண்டனிலுள்ள சிந்தி மந்திரில் நான் அடிக்கடி கூட்டங்களை ஏற்பாடு செய்வேன்; பெரிய ஹால்; பெரிய கிச்சன்/சமையலறை ; அவர்கள்  நடத்தும் கூட்டத்துக்கும் அழைப்பிதழ் வரும்; ஒரு முறை ராம் பாபாவின் 108 முறை ஹனுமான் சாலீஸா சொல்லும் நிகழ்சசியை ஏற்பாடு செய்திருந்தார்கள் . நானும் சென்றிருந்தேன்; ராம் பாபா செல்லுமிடமெல்லாம் இது நடக்கும். பின்னர் என் வீட்டிற்கு அருகிலுள்ள  NORTHWICK PARK HOSPITAL நார்த்விக் பார்க் ஹாஸ்ப்பிட்டலில் புதன் கிழமை தோறும் ஹிந்து பிரார்த்தனை நடத்த அனுமதி கிடைத்தது. கடந்த சுமார் 7 ஆண்டுகளாக கிறிஸ்தவ சாப்பலில் CHAPEL  பிரம்மாண்ட  சிலுவைச் சினத்தின் கீழ் இந்துக் கடவுளர் படங்களை வைத்து பிரார்த்தனை செய்வோம். 11 முறை காயத்ரீ, 11 முறை திரயம்பக மந்திரம் (ம்ருத்யுஞ் ஜய மந்திரம்) ஹனுமான் சாலீஸா , ஒன்றிரண்டு நாமாவளிகள், பகவத் கீதை சொல்லி முடிப்போம். விழா நாட்களில் பிராத்தனையை 2 மணி நேரம் நீடிப்போம்.

அப்போது வாரம்தோறும் ஹனுமான் சாலீஸாவை புஸ்தகம் வைத்துக்கொண்டு  படித்த ஒரே ஆள் நான்தான். ஏனைய வடக்கத்தி ஆட்களுக்கு அது அத்துபடி . பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை எல்லாம் கண்டேன். சின்மயா  மிஷனின் தலைவர் சுவாமி தேஜோ மயானந்தாலண்ட னுக்கு வந்தபொழுது ஹனுமான் சாலீஸா பற்றி பல நாட்களுக்குச் சொற்பொழிவு ஆற்றினார்; அது புஸ்தகமாகவும் வந்துவிட்டது. ஆனால் தமிழில் மொழிபெயர்பைத் தவிர விளக்கவுரை, வியாக்கியானம் எதுவும் என் கண்ணில் தென்படவில்லை. ஆகையால் நான் அனுபவித்த ஹனுமான் சாலீஸா வை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்ற முயற்சியில் இறங்குகிறேன் . சொல்லின் செல்வன் அனுமன் துணை புரிவானாகுக.

சிறு வயதில் கற்ற சில துதிகள்

லண்டனுக்கு 1987ஆம் ஆண்டு குடியேறியதற்கு முன்னால் மதுரையில் சுமார் 35 ஆண்டுகள் வசித்தேன் ; அங்கு இரண்டு குடும்பங்கள் மார்கழி மதம் தோறும் எல்லோருக்கும் திருப்பாவை , திருவெம்பாவைப் பாடல்களை மாணவிகளுக்குக் கற்பித்து வந்தன ; அவர்களில் திருமதி ராஜம்மாள் சுந்தர்ராஜன் என்பவர் சுமார் 1000 பள்ளி, கல்லூரி மாணவிகளை திருப்பாவையில் ஈடுபடுத்தினார். நல்ல நடிப்புத் திறனும் குரல் வளமும் கண்ட மாணவிகளை வைத்து ஆழ்வார், கிருஷ்ணன் நாடகங்களை ஊர் தோறும் சென்று நடத்தினார் . தற்காலத்தில் நடக்கும் தமிழ்ப் பத்திரிகைகளில் தெய் வீகச் செய்திகளை  வெளியிடும் வழக்கத்தை என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம்தான் துவக்கிவைத்தார் . அந்த வகையில் எந்த கடவுள் நடவடிக்கை நடந்தாலும் அது மதுரை தினமணியில் மட்டுமே வெளிவரும்.

இதனால் அவர் செல்லும் விசேஷ பஸ்களில் ஈங்கள் குடும்பத்திற்கு சிறப்பிடம் உண்டு. அந்த பஸ்களில் நானும் பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை வரை சென்றது இன்றும் நினைவில் நிற்கிறது ; இவ்வளவு கதை எதற்கு என்று கேட்கிறீர்களா ? பஸ் புறப்படும்போது எல்லோரும் கோஷ்டியாகப் பாடுவது ஆஞ்சாசனேயர் துதிதான் . அதுவும் சிறு வயதிலேயே மனப்பாடம் ஆகிவிட்டது

இதோ எல்லோரும் அறிந்த அந்த துதி

ஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|

பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||

யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||

இதற்குப்பின்னர், ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் :

மனோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்|

வாதாத் மஜம் வானரயூதோ  முக்யம்

ஶ்ரீராமதூதம் சிரஸா நமாமி||

(பாடல்களின் பொருளை பின்னால் தருகிறேன்)

xxxx

அதே போல ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் பட்டி மன்றங்களை நட்த்தி பட்டி தொட்டி தோறும் பட்டை மன்றங்களையும் பரப்பினார். என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம். எல்லாம் பாரதி அல்லது கம்பனை ஒட்டிய தெய்வீக தலைப்புகளே . மதுரை தினமணி,  கொள்ளிடம் கரை வரையும், கோவை நீலகிரி வரையும், தெற்கே குமரி வரையிலும் சென்றதால் தினமணி ‘வேன்’ VANகளில் ஒட்டப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பட்டி மன்ற செய்திகளும் முழு அளவில் வெளியாகின; இதன் மூலம் கம்பன் பெருமையும் பாரதி பெருமையும் தமிழ் நாடெங்கிலும் பரவின

xxxx

கம்பராமாயணத்தில் அனுமன்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

இப்பாடலில் கம்பர் அனுமனையும் பஞ்சபூதங்களையும் சம்பந்தப்படுத்தி பாடுகிறார்.

கம்பர் படவில்லை என்ற ஒரு கருத்தும் உண்டு. அதனால் பாடலின் மகிமை ஒரு சிறிதும் குறையாது! இது  அற்புதமான பாடல்.

அஞ்சிலே  ஒன்று  –  காற்று;  அஞ்சிலே  ஒன்றை  –  கடலை;

அஞ்சிலே  ஒன்று   ஆறு  ஆக  –  வான்  வழியாக; ஆருயிர்  –

சீதாபிராட்டியின்  உயிர்;  அஞ்சிலே ஒன்று பெற்ற – நிலமகள் பெற்ற;

அணங்கு – சீதை; அயலார் – பகைவர்; அஞ்சிலே ஒன்று – நெருப்பு.

அனுமனைப் பற்றிய நல்ல சித்திரம் இது.

To be continued……………..

–subam—

Tags- ஹனுமான் சாலீஸா, துளசிதாஸ், விளக்கக் கதைகள் , பகுதி 1 அஞ்சிலே ஒன்று பெற்றான்.

ராமாயணத்தில் வரங்கள் – 1 (Post No.13,557)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.557

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் – 1

ச. நாகராஜன் 

வால்மீகி ராமாயணத்தில் கதை ஓட்டத்தில் ஏராளமான வரங்களைப் பற்றிய விவரங்களைக் காண்கிறோம். 

வரங்களைப் பற்றி சுமார் 81 விவரங்கள் தரப்படுகின்றன. 

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கும் தொடர் இது. 

பால காண்டத்தின் இரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘பிரம்மதேவரின் வரவு’ என்ற ஸர்க்கம்.

 வேடன் ஒருவன் கிரௌஞ்ச மிதுனத்தில் காமத்தால் மயங்கி இருந்த ஒன்றை கொன்று விட்டான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி முனிவார்

“மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம:  சாஸ்வதீ: சமா |

யத் க்ரௌஞ்சமிதுனாதேக,அவதீ: காம மோஹிதம் ||

என்று கூறுகிறார்.

மாநிஷாத – ஶ்ரீநிவாஸ!

க்ரௌஞ்ச மிதுனாம் – ராக்ஷஸ மிதுனத்தில்

காம மோஹிதம் – காமத்தால் புத்திகெட்ட

ஏகம் – ஒருவனை

அவதீ: – கொன்றீர்

யத் – அதனால்

த்வம் – நீர்

சாஸ்வதீ – நீடித்த

சமா: – ஆண்டுகளில்

ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை

அகம: – அடைந்தீராக

–    பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 4

இது என்ன, என் வாயில் சாபம் போல இது வந்துள்ளதே என்று சிந்திக்கிறார் அவர். ஆனால் அதே சமயம் பாதங்களோடமைந்த எழுத்து ஒத்த ஸ்லோகமாக அமைந்துள்ளதே என்றும் அவர் நினைக்கிறார்.

பிரம்மா அவரை நேரில் பார்த்து, “ நீர் செய்தது ‘ஸ்லோகமே. ஶ்ரீ ராமரது சரித்திரத்தை முழுதுமாக செய்யும்” என்று கூறி அருள்கிறார்.

அத்தோடு மேலும் கூறுகிறார்:

குரு ராமகதாம் புண்யாம் ஸ்லோகேஷு மனோரமாம் |

புண்யாம் – புண்ணியமான

ராமகதாம் – ஶ்ரீ ராம கதையை

மனோரமாம் – மனதிற்கு இனிமையான

ஸ்லோகபத்தாம் – ஸ்லோகங்களால் அமைந்ததாக

குரு – செய்வீர்

யாவத் ஸ்வாஸ்யந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே |

தாவத்ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி |\

மஹீதலே – உலகத்தில்

கிரய: – மலைகளும்

சரிதஸ்ச – நதிகளும்

யாவத் – எதுவரை

ஸ்தாஸ்யந்தி – இருக்குமோ

தாவத்- அது வரை

ராமாயண கதா – ராமாயண கதை 

லோகேஷு – உலகத்தில்

ப்ரசரிஷ்யதி  – விளங்கப் போகிறது

யாவத்ராமஸ்ய ச கதா த்வத்க்ருதா ப்ரசரிஷ்யதி |

தாவத்தூதர்வமதஸ்ச த்வம் மல்லோகேஷு நிவத்ஸ்யஸி ||

ச – மேலும்

த்வத்க்ருதா – உம்மால் சொல்லப்பட்ட

ராமஸ்ய – ஶ்ரீ ராமருடைய

கதா – கதை

யாவத் – எதுவரையில்

ப்ரசரிஷ்யதி – விளங்குகிறஹோ

தாவத் – அதுவரையிலும்

மல்லாகேஷு – என்னுடைய உலகங்களில்

அத: ஊதர்வ: – கீழே மேலே

ச – எங்கும்

த்வம்  நிவத்ஸ்யஸி – நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர் 

பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 36,37,38 

இவ்வாறு பிரம்மா வால்மீகி முனிவரைப் பார்த்துக் கூறுகிறார். 

இந்தக் கூற்று வரமாக அளிக்கப்படவில்லை என்றாலும் கூட ஆசீர்வாதமாக அளிக்கப்படும் ஒரு வரமாகக் கருதலாம்.

 பிரம்மாவின் இந்த வசனத்தைக் கேட்டு ராமாயணத்தை வால்மீகி இயற்றினார்.

**