Three Brahmins who shattered Caste Barriers (Post No.13,556)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,556

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Lot of things are written and spoken about the caste differences in India; And Brahmins are blamed by politicians to get the votes of Non-Brahmins, because they are in majority. Newspapers give big publicity to Dalits (Harijans) when they are attacked or molested as if their body parts are different from the rest of the world! Again, this is to increase their sales. During the Struggle for Independence, those who were in the movement never considered the caste factor as a barrier. They had a common and bigger aim to achieve. These things hid a great fact that caste was not an issue even in ancient Tamil Nadu. If all the castes had the three basic needs of Food, Clothes and Shelter/House, they were all happy. Because after reading the Sangam Tamil literature and Devotional literature, I Did not find anything that affected the three basic needs of the people.

There are some amazing anecdotes which show the so-called higher caste Brahmins fell at the feet of Non Brahmins.

1.Kapilar was a Brahmin poet who lived 2000 years ago. He was a good friend of a local chieftain and philanthropist known as Pari (paari). Pari donated all his wealth to the deserving people. When the three great Tamil kings demanded that he should give his daughters in marriage to them and pay tribute, he refused. He was killed and his two daughters Sangavai and Angavai became orphans. The Brahmin poet who wrote highest number of poems in Sangam period took Pari’s daughters to various chieftains (to get them married) and introduced himself as their father. The relationship between Kshatria Pari and Brahmin Kapilan shattered all caste barriers. Pari was famous because he gave his Golden Chariot to support a jasmine climber. When he saw the plant struggling in wind without any supporting pole or a tree nearby, he became emotional and did this. He was one of the Seven Great Philanthropists of Last Tamil Sangam Period.

2. Thiru Gnana Sambandhar, the boy wonder of Tamil world, who composed poems from the age of three, fell at the feet of Appar alias Thiru Navukkarasar and called him Appar/Father. The wonder is that Appar belonged to the caste of Agriculturists (Vaisyas) and Sambandhar belonged to Brahmin caste. When the boy fell at his feet 80 year old Appar fell at his feet. In front of God, in the word of Bhakti (devotion),  there is no caste.

3. The third incident is the most amazing one. There lived a pure Brahmin in a village in Tamil Nadu. His name was Apputi (Apputhi)  Adigal He named all his sons, all the objects in the house, even the weights and measures, all his charitable works after Saint Thiru Navukkarasar, a man of Vaisya caste.

(Pronunciation Guide: Appuuti, Naavukkarasar, Paari)

Thank God, we know the date of this anecdote- 600 CE, the period of the greatest Pallava Emperor Mahendra Pallavan.

Here is how Saint Sekkizaar describes it in his Periya Puraanam written 1000 years ago. The book gives the stories of 63 Saivite Saints including Apputi Adigal..

xxxxx

One day after worshipping Lord Siva at Tiruppalanam, Appar went to nearby Thingaloor. By the side of the busy road, he came to a cool and shady thatched shed where water was distributed to all thirsty people.

(Giving water or butter milk to thirsty people during summer is a charitable work. We find it even in the oldest epic in the world Mahabharata. They erect special sheds and place pots of water and volunteers distribute water to the needy.)

Appar saw a curious thing in the charitable water sheds. He saw his name everywhere in bold letters.

Appar- Who built this and inscribed this name on it?

Bystanders –He is a Brahmin and a native of this town. He has just now gone to his house, which is close by.

At once, Appar went to Apputi’s house and stood by his gate.

When Apputi heard that a Siva devotee was waiting at the gate, he rushed there and fell at his feet. You are grace itself in human form! For you to come to my house, what endless penances must I have performed? (Apputi said this without knowing the identity of the person).

Appar- I was on my way from worshipping the Lord at Tirupplalanam and I saw the water shed built by you ; but tell me why have you inscribed on this shed SOMEONE ELSE’S name rather than your own?

At this the Brahmin (Apputi) burst into rage

What a thing to say? The one whose name is inscribed there is the noble servant of Lord (Siva). He overcame the wiles of the king and his confederates, the shameless Jains. Whose name could be more fitting than that of Thiru Naavukkarasar (Appar)? What you said was truly scandalous. When the rock was cast into the sea, it came floating to the shore with Appar seated upon it. Who is in the whole world who does not know what a great man he is?  To all appearances you look respectable enough and yet you say such things. Tell me, who are you, where do you come from?

(Mahendra Pallava, who was a Jain , gave lot of troubles to Appar and he survived all those by the grace of Lord Siva. That is what Apputi referred to. Later the king apologised to Appar and reconverted himself to Hindu faith)

When Appar heard these words, he said,

I am a mean fellow who knows nothing. I am the one who the Lord in his grace rescued from the religion of the Jains and made his own, by means of the stomach pain.

(The background story is, Appar also became a Jain and his sister Tilakavathy prayed to Lord Siva for his return. Siva gave Appar stomach pain that was not curable with Jain medicines; then he came to his sister who cured it with Siva’s holy ash Vibhuti; From that day,  he burst in to singing the glory of Lord Siva and visited hundreds of Siva shrines all over Tamil Nadu)

At once, Apputi recognised him, and put his hands together above his . tears down his face, his speech became incoherent, and his hairs stood on end. He fell to the ground and placed his head at the feet of Appar. He returned his greeting and raised Apputi to his feet. Like a beggar who has found a buried treasure, Apputi stood before him speechless with joy, then danced around him singing in jubilation.

Apputi was overwhelmed by this unexpected happening. There was big celebration in the house and the neighbourhood. Big feast was  arranged.

Suddenly a sad thing happened.

To be continued………………

Tags – Apputi Adikal, Appar, Thiru Navukkarasar, Water shed, Thingaloor, Caste barriers, Kapilar, Pari, Sambandhar, Brahmin, Vaisya, Tilakavathy, Mahendra Pallavan, Jain, Apputhi

திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46 (Post No.13,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,555

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46

முதலில் சுவையான அதிசய விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன் :

இந்துக்கள், 5000 ஆண்டுகளாக வணங்கும் சாஸ்தா , ஹரிஹர புத்ரன், ஆரியன், ஐயப்பன் , தர்ம சாஸ்தா எல்லாம் ஒரே கடவுளைக் குறிக்கும்.

முதல் முதல் குறிப்பு மஹாபாரதத்தில் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 206-ஆவது நாமமாக வருகிறது.

சிஸ்டம் SYSTEM என்ற ஆங்கிலச் சொல் ‘சாஸ்தா’-விலிருந்து வந்தது.

ஆரிய என்பது பிராக்ருதத்தில் (சம்ஸ்க்ருதத்தின் பேச்சு வடிவம் ) அஜ்ஜ ஆகி, தமிழில் ஐயர் என்று மாறியது; இது மொழி இயலாளர் (LINGUISTS) கண்ட உண்மை. ஜ என்ற எழுத்து உலகில் சம்ஸ்க்ருத மொழியைத் தவிர வேறு எந்த ஆதிகால மொழியிலும் கிடையாது. அதை பிற மொழியாளர்கள்  என்றே உச்சரித்தனர். இதனால் ஜ -வும்  ய- வும்  இடம் மாறின  அதனால்தான் யாழ்ப்பாணம், ஜாப்னா ஆகும் . ஜாவா, யவத் வீபம் ஆகிறது. யஹோவா , ஜெஹோவா ஆகிறது.

கேரளத்தில் 4 புகழ்பெற்ற அய்யப்பன் கோவில்கள் உண்டு – குளத்துப்புழை , ஆரியங்காவு , அச்சன்கோவில், சபரிமலை. இதில் ‘ஆரியன்’ காவு என்பது ‘ஐய’ப்பன் கோவில் உள்ள இடம் ; ஆரியன்= அய்யப்பன்

சிலர்  இதை  திராவிட தெய்வம் என்று உளறிக்கொட்டி இருக்கின்றனர்; வேலிக்கு ஓணான் சாட்சி என்ற பழமொழிக்கிணங்க வெளிநாட்டிலிருந்து மதத்ததை பரப்ப வந்தவர்கள் பெயர்களை வேறு ஆதாரமாகக் காட்டுகின்றனர் . அவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஆதி சங்கரர் கொடுத்த வியாக்கியானமும் தெரியாது, இந்தப் பெயர் முதல் முதலில் மிகப்பழைய சஹஸ்ரநாமத்தில் வருவதும் தெரியாது .

சாஸ்தா, சங்க இலக்கியச் சாத்தன் எல்லாம் பிராமண குடும்பங்களின் குல தெய்வம் என்பதும் பலருக்கும் தெரியாது.

சிலப்பதிகாரத்தில் கனாத் திறம் உரைத்த காதையில் அற்புதங்கள் செய்த சாத்தன், சாதவாகனன் கோவில் பற்றி வருகிறது .

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் ‘’திரு நகரம் கண்ட படலத்தில்’ மதுரை நகரை நிர்மாணித்த பாண்டிய மன்னன் கீழ்த் திசையில் ஐயனாரையும் தென் திசையில் சப்த மாதரையும் மேற்றிசையில் விஷ்ணுவையும் வடதிசையில் துர்க்கையையும் காவலாக நிறுத்தி நடுவில் சிவன் கோவிலை எழுப்பி, காசியிலிருந்து ஆதி சைவர்களை பூஜைக்கு அழைத்துவந்தான் என்று எழுதி இருக்கிறார். இதை இன்றும் மதுரையில் காணலாம்.

xxxx

திடீரென்று ஐயனார் கோவிலை மட்டும் திருமூலர் குறிப்பிட்டது நம்மைத் திகைக்க வைக்கிறது . ஆனால் அப்படிக்  கோவில் இருந்ததற்கான சான்று சிலப்பதிகாரம் முதலே நமக்குத் தமிழில் கிடைக்கிறது.

xxxx

இதோ திருமூலர் கூற்று!

975. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்

பாங்கு படவே பலாசப் பலகையிற்

காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் – கோவில். காங்கு அருமேட்டில் – வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு – கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு – கடுகு – கடு + கு – சிறுத்தவிடம்.

xxxx

ஆதி சங்கரர் என்ன சொல்கிறார் ?

பெரிய புராணம், தேவாரம் முதலியவற்றில் கிபி.-600 முதல் அய்யனார் பற்றிய குறிப்புகள் கிடைத்தாலும் காலத்தினால் முந்திய சங்கரர்  என்ன சொல்கிறார் என்பது முக்கியமாகிறது. அபி நவ சங்கரர் என்பவர் கி.பி 732-ல் வாழ்ந்ததாகவும் ஆதிசங்கரர் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும் ஒரு கருத்து உண்டு. ஆதி சங்கரரின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும் வருகின்றன. அவற்றை விஷ்ணுவின் பெயர்களாக மஹாபாரத பீஷ்மர் நமக்கு அளிக்கிறார்.

அதில், ஆதி சங்கரர் சாஸ்தா என்ற சொல்லுக்கு தரும் விளக்கம்:

கட்டளையிட்டு நடத்துகிறவர் SYSTEMATIC ;

ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிபிஹி சர்வேஷா மனுஷிஷ்டிம் கரோதீதி சாஸ்தா– என்கிறார்.

xxxx

சிலப்பதிகாரத்தை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதரும் கிராமங்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட சாஸ்தா, சாத்தன் எல்லாம் ஓன்றே என்று குறிப்பிடுகிறார். 1930-ம் ஆண்டில் வெளியிட்ட அசோகனின் மதங்கள் என்ற கட்டுரையையும் குறிப்பிடுகிறார். அதில் என்ன உள்ளது என்பதையும் காண வேண்டும் .

xxxx

ஐயனார் யார் ?

அரிகர புத்திரன் ,சாத்தன், ஆரியன், அறத்தைக் காப்போன், கருங்கடல் வண்ணன், கோழிக் கொடியோன் , சாத வாகனன், செண்டாயுதன், புட்கலை மணாளன் பூரணை கேள்வன், யோகி, வெள்ளையானை ஊர்தி , வாகனம் – காரிக் குதிரை என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது

ஐயன் பாழி – சாஸ்தா கோவில்

xxxx

சாத்தன் யார் ?

அருகன், ஐயன் , தண்டிப்பான், புத்தன், வயிரவன், சாஸ்தா, சீத்தலைச் சாத்தன், வணிகக் கூட்டத் தலைவன், ஐயனார், அரிகர புத்திரன் என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது

xxxx

பழைய தமிழ்க் கலைக் களஞ்சியமான ஆ.சிங்காரவேலு முதலியாரின்  அபிதான சிந்தாமணியிலும் ஏறத்தாழ தமிழ் அகராதியில் காணும் விஷயங்களே உள.

xxx

ஐயப்பன் மனைவிமார் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதையும் கவனிக்கவும். மேலும் குதிரை என்பது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் அவை வடக்கிலிருந்தும் கப்பல் மூலம் வெளிநாட்டிலிருந்தும் வந்ததையும்  கருத்திற் கொள்ள வேண்டும் ; ஐயனார் சிலை இருக்கும் இடமெல்லாம் பெரிய குதிரைகள் நிற்கும்.

இலங்கையிலும் அவரைக் காவல் தெய்வமாக வயற்புறத்தில் வைத்திருக்கிறார்கள் .

இந்து மதத்தைப் பின்பற்றாத வெளிநாட்டினர், இந்து மதத்தைக் குறைகூறியும் , கிறிஸ்தவ மதத்தை உயர்த்தியும் எழுதிய எல்லா புஸ்தகங்களிலும் இரண்டு முருகன்கள் இரண்டு சிவன்கள் , இரண்டு சாஸ்தாக்களை உண்டாக்கி இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். வட நாட்டு கந்தன், கார்த்திகேயன் தமிழ் முருகன் அல்ல; சிவபெருமானும் ரிக்வேத  ருத்ரனும் வேறு வேறு ; சாஸ் தாவும் ஐயனாரும் வேறு வேறு என்று கதை கட்டினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் அந்த வாதங்களைத் தவிடு பொடியாக்கினார்கள் .

ஐயனார் வேறு–சாஸ்தா வேறு  என்ற பொய்மை வாதத்தையும் நான் மேற்கூறிய காரணங்கள் தவிடு பொடியாக்கும் . பெரும்பாலான எழுத்தர்களுக்கு சம்ஸ்க்ருத அறிவும், மொழியியல் அறிவும் இல்லாததை நாம் எல்லோரும் அறிவோம்.

ஐயனார் பற்றி சங்க இலாக்கியத்திலோ திருக்குறளிலோ தொல்காப்பியத்திலோ குறிப்புகள் இல்லை என்பதால் இவர் தமிழ்த் தெய்வம் இல்லை என்பது தெளிவாகிறது ; அதே பழைய நூல்களில் வேத கால தெய்வங்களைப்  பற்றிய குறிப்புகளையும் இதிஹாச புராண புருஷர்களின் குறிப்புகளையும் மட்டுமே காண  முடிகிறது.

சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன் என்று பிற்காலக்கதைகள் சொல்கின்றன ; ஆகையால் இதை வடட்டாரக் கதை என்றே சொல்ல முடியும் ; இது போல மஹாராஷ்ட்ராவிலும் கண்டோபா முதலிய வட்டார தெய்வங்கள் உண்டு. சொல்லப்போனால் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு .

ஆகையால் இவரை திராவிட தெய்வம் என்று அக்மார்க் முத்திரை குத்தியவர்களுக்கு இலக்கியச் சான்றுகளே இல்லை. சங்க இலக்கிய புலவர்களில், சாத்தன்  பெயர்கொண்ட புலவர்கள் மட்டுமே உண்டு ; அந்தச் சொல்லை தெய்வங்களுடன் தொடர்பு படுத்தும் எந்தக் கதையும் இல்லை; அப்படிச் சம்பந்தப்படுத்த விரும்பினால் மஹாபாரத/ விஷ்ணு ஸஹஸ்ரநாம சாஸ்தாவுடன்தான் தொடர்பு ப டுத்தலாம் . அதில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும்  விஷ்ணு ரூபமாகக் காட்டப்படுகிறது .

திராவிட தெய்வம் என்று வாதிப்போர் ஆயிரக்கணக்கான கிராமங்களில் உள்ள கதைகளை– வாய்மொழிக் கதைகளை — ஓட்டுப்போட்டு புஸ்தககங்கள் எழுதியுள்ளனர்; அதில் ஒரு ஊர்க்கத்தை இன்னொரு கதையுடன் பொருந்தா . அதாவது அவியல்.

அப்படியானால் உண்மை என்ன?

இந்துக்கள் நான்கு திசைகளில்  நான்கு காவல் தெய்வங்களை நிறுவினார்கள்; அவர்களில் ஒன்று அய்யனார் என்று திருவிளையாடல் புராணம் கூறும்;  2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்த்திரப் பொருளாதார புஸ்தகத்திலும் இப்படி தெய்வங்களை நிறுவும் வழக்கத்தைக் காணலாம். அதில் சாஸ்தா /அய்யனார் பெயர் இல்லை ; ஆனால் அவர் எழுதியது பொருளாதார புஸ்தகம் ; புராணம் அல்ல. 

மிகப்பெரிய மொழியியல் வல்லுனரும் , சமயப் பெரியாருமான  காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு  முற்றுப்புள்ளி வைக்கிறார் . கிராமங்களில் வணங்கப்படும் எல்லா பெண்தெய்வங்களும் ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களில் உள்ள வேத கால தெய்வங்கள் என்பதையும் அவர் காட்டியுள்ளார்.

xxx

காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) சொற்பொழிவு

“ஈசுவரனின் அழகு மனத்தை அடங்கச் செய்கிற சாந்த ஸ்வபாவம் வாய்ந்தது. ஸ்ரீ மந் நாராயணனின் சௌந்தரியமோ மனத்தை மோகிக்கச் செய்து ஆனந்தக் கூத்தாடச் செய்வது. விஷ்ணுவின் திவ்விய ரூபத்திலிருந்து வைத்த கண்ணை வாங்க முடியாமல் எவரும் சொக்கிக் கிடக்க வேண்டியதாகிறது. ஸ்ரீ ராமனாகவும், கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்த போதும், இந்த ஜகன்மோகன சௌந்தரியம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது. இப்படிப்பட்டவர் மோஹினி என்றே ஓர் உருவம் கொள்ளும்போது எத்தனை அழகாக இருந்து, எல்லோர் உள்ளங்களையும் மோஹிக்க வைத்துக் கொள்ளை கொண்டிருப்பார்? பரம ஞானியாக, தபோமயமாக ஜ்வலித்துக் கொண்டிருந்த பரமேசுவரனின் மனத்தைக்கூட மகாவிஷ்ணுவின் மோகினி ரூபம் மயக்கிவிட்டது என்று புராணங்கள் சொல்கின்றன. மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும் பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு மகா தேஜஸ் – ஒரு பெரும் ஜோதி – பிறந்தது. இந்தத் தேஜஸே ஐயப்பனாக உருக் கொண்டது.

ஹரிஹர புத்திரன் என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்.

ஐயன் என்பது ‘ஆர்ய’ என்பதின் திரிபு. ‘ஆர்ய’ என்றால் ‘மதிப்புக்குரிய’ என்று பொருள். சாக்ஷாத் பரமேசுவரனுக்கும் நாராயணமூர்த்திக்கும் ஜனித்த குழந்தையைவிட மதிப்புக்குகந்தவர் எவருண்டு? ஞானமும் தபசும் கலந்த சிவனின் பிரம்ம அம்சம், கிருபையும் சௌந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் க்ஷத்ர அம்சம் இரண்டுமே நாம் உய்வு பெற அத்தியாவசியமாகும். ஹரிஹர புத்ரனாகிய ஐயப்பனிடம் இவையெல்லாமே ஒன்று சேர்ந்திருப்பதாகக் கொள்ளலாம். இதனால்தான் போலிக்கிறது, சிவபெருமானின் மற்ற இருபாலர்களைப் பிள்ளையார் என்றும் குமரன் என்றும் குழந்தைகளைக் குறிக்கிற சொல்லால் குறிப்பிட்டாலும், அவரது மூன்றாவது புத்திரான சாஸ்தாவை மட்டும் மதிப்புக்குரியவராக – ஆர்யராக – ஐயனாராகக் குறிப்பிடுகிறோம். ‘ஆர்ய’ என்பதுதான் ‘அய்யர்’ என்றாயிற்று. முதலி – முதலியார், செட்டி – செட்டியார் மாதிரி அய்யனுக்கு மரியாதைப் பதம் அய்யனார். இதிலே ஒரு வேடிக்கை. பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக – அய்யனாராக இருக்கிறார்! கொஞ்சம்கூட இப்போது பேசப்படுகிற இன வித்யாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.

சபரிமலையில் ஓரிடத்தை ‘ஆரியங்காவு’ என்று ஆரியனுடைய காடாகவே சொல்கிறார்கள். தேசத்தில் எத்தனையோ ஸ்வாமிகளுக்குக் கோயில் இருந்தாலும் சாஸ்தாவைத் தவிர எவருக்குமே அய்யர், ஆரியன் என்ற பெயர்கள் இல்லை.

சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன். தமிழ் நாட்டில் இருக்கப்பட்ட அநேக சாத்தனூர்களில் முக்கியமான தெய்வம் ஐயப்பன்தான்.

தமிழ் நாட்டில் கிராமத்துக்குக் கிராமம் ஐயனார் கோயில் உண்டு. கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்பன் வழிபாடு வெகுவாகப் பரவி வளர்ந்திருக்கிறது.

அவர் நம்மைக் காவல் புரிகிற தெய்வம். காற்று கருப்பு முதலான பலவித தீயசக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறவர். இதெல்லாவற்றுக்கும் மேலாக நாராயணனிடமிருந்து நம் வாழ்க்கையையே பரிபாலிக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறார். ஈசுவரனிடமிருந்து நமக்கு விமோசனம் தருகிற ஞானத்தை அளிக்கும் சக்தியும் பெற்றிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் ஐயப்பன் ரொம்ப ரொம்பக் கியாதி பெற்று வருகிறார். சுதந்திர சாஸனம் (Constitution) அளித்திருக்கிற பேச்சுத் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பக்கத்தில் நாஸ்திகப் பிரசாரம் தடபுடலாக நடக்கிறபோதே, மறுபக்கத்தில் அது எடுபடாத அளவுக்கு ஐயப்ப பக்தி நாளுக்கு நாள் அமோகமாக விருத்தியாக்கிக் கொண்டிருக்கிறது.

கேரளத்தில் எட்டாக் கையில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் நாடு, மற்ற ராஜ்யங்கள் மீதெல்லாம் கூடத் தம் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்!

இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.

அவரது கிருபையை நாடி, அதற்குப் பாத்திரர்களாக வாழ்ந்தோமானால் நாமும், நாடும், உலகமும் சிறப்புற்று விளங்குவது நிச்சயம்.”

xxxx

என்னுடைய  பழைய கட்டுரைகள்

ஐயனார் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No. 8373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8373

Date uploaded in London – 20 July 2020  

xxxx

ஐயனார் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,662

Date uploaded in London – –  –  1 November , 2023                 

xxxx

–subham—

திருமூலர், அதிசய ,ஐயனார் கோவில், திருமந்திர, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46, சாஸ்தா, ஆரியன், அஜ்ஜ, ஐயர் , ஆரியங்காவு ,சாத்தன், திருவிளையாடல் புராணம், காஞ்சி சுவாமிகள்

கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக்’ படியுங்கள்! (Post No.13,554)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.554

Date uploaded in London – –18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக் படியுங்கள்! 

ச. நாகராஜன்

 மனிதனுக்கு சிரிப்பு ரொம்ப முக்கியம். மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும், சிரித்து மகிழ்ந்தால் சிறப்புடன் நோயின்றி வாழ முடியும் என்பதை அறிவியலும் ஆதாரபூர்வமாகக் கூறுகிறது.

அமெரிக்காவை கடுமையான உள்நாட்டுப் போர்க்காலத்தில் வழி நடத்திச் சென்ற ஆபிரஹாம் லிங்கன் எப்போதும் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்.

கடுமையான கவலையூட்டும் செய்தி வந்தாலோ, யாராவது அவரைக் கோபமுறச் செய்தாலோ உடனடியாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் படித்து மனம் விட்டுச் சிரிப்பாராம்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் நான் இறந்திருப்பேன்” என்றார் அவர்.

இதே வாசகத்தை மகாத்மா காந்தியும் கூறினார்: “நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்றார் அவர்.

செலவில்லாமல் மனிதன் மகிழ்ச்சி பெற சிறந்த எளிய, வழி சிரிப்பது தான்! உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிப்பினால் அலுப்பையும், கவலையையும் போக்கிக் கொண்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் உடனடியாகப் பெற முடியும். நோயைப் போக்கி ஆரோக்கியத்தை அடைய முடியும். தொற்று வியாதியை விட வேகமாக, மிகச் சுலபமாக மகிழ்ச்சி என்னும் அரிய நிவாரணத்தை கவலையுற்றோருக்குப் பரப்ப முடியும்!

சிரிப்பு, வலியைக் குறைப்பதோடு டென்ஷனை நீக்கி நோயை விரட்டும் என்று மருத்துவர்கள் உறுதி கூறுகின்றனர்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் தி நேஷனல் கான்ஸர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை புதிய உண்மையைத் தெரிவிக்கிறது.

பத்து ஆரோக்கியமான மனிதர்களிடம் ஒரு மணி நேரம் சிரிப்பு வீடியோ காஸட் போட்டுக் காண்பிக்கப்பட்டபோது அவர்கள் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் உடலில் நோயைத் தீர்க்கும் ஒரு முக்கியமான இரசாயனப் பொருளான இன்டர்ஃபெரான் காமா அதிக அளவில் சுரந்ததாம். சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் இதர தொத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் கெமிக்கல்களும் அதிகமானதாம். அவர்கள் சிரிக்கச் சிரிக்க, மூளை இயற்கையான வலிக்கொல்லிகளை வெளியிட்டதாம். டென்ஷனை உருவாக்கும் ஹார்மோன்கள் அவர்கள் உடலில் மிகவும் குறைந்து கொண்டே போனதாம்!

இதய நோய் நிபுணர்களால் பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு நகைச்சுவை உணர்வுடன் சிரித்து மகிழ்வோருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் அந்தச் சிரிப்பே அவர்களைப் பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.

இந்த மையத்தின் டைரக்டரான மைக்கேல் மில்லர், “உங்கள் இதயத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் பழையகாலம் தொட்டு வழங்கி வரும் பொன்மொழியான நகைச்சுவையே சிறந்த மருந்து என்பது உண்மையாகி விட்டது” என்கிறார்.

நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மூளை மனநலம் நோய்த் தடுப்பியலில் பேராசிரியராக இருக்கும் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து நோயைத் தடுக்கும் இம்யூனோ க்ளோபுலின் ஏ என்ற ஆன்டிபாடிக்கும், சிரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் கண்டுபிடித்துள்ளார். ஹாப்பி ஹார்மோன் என்று செல்லமாக வழங்கப்படும் சிடோகின்ஸ் என்ற ஹார்மோனும் சிரிப்பினால் உருவாக்கப்படுகிறது.

உடல் மீது படையெடுக்கும் நோய்களைத்  தரும் பாக்டீரியாக்களையும் ,வைரஸ்களையும் விசேஷமாக எதிர்த்துத் தடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை செல்களின் எண்ணிக்கை சிடோகின் அளவு உடலில் கூடும்போது கூடுவதை கலிஃபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியரான லீ பெர்க் கண்டுபிடித்து உறுதிப்படுத்துகிறார். இவை ட்யூமர் செல்களைக் கூட அழித்து விடும் ஆற்றல் உடையதாம்!

அன்னி ஜாஷ்வே என்ற பிரபல நகைச்சுவையாளர் தனது ‘டோண்ட் கெட் மேட், கெட் ஃபன்னி’ என்ற புத்தகத்தில் சிரிப்பால் உளவியல் மற்றும் உடலியலில் ஏற்படும் நற்பலன்களைப் பெரிய பட்டியலாகவே தருகிறார்.

1.   சுவாசக் கோளாறுகளை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உமிழ்நீரில் அதிகப்படுத்துகிறது.

2.   கார்டிஸால் ஸீரத்தைக் குறைத்து டென்ஷனின் தீமைகளைக் குறைக்கும் ஆன்டிடோட்டாக அமைகிறது.

3.   அல்ஸர்களை வயிற்றில் உருவாக்கும் ஒரு என்ஸைமைப் பிரிக்கிறது.

4.   அடிவயிற்றுத் தசைகளை நிலைப்படுத்துகிறது.

5.   உடலில் உள்ள எல்லா தசைகளுக்கும் ஓய்வை அளிக்கிறது.

6.   பக்கவாதத்தையும், நரம்புக்கோளாறுகளையும் தடுக்கும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

7.   நமது பார்வையை மாற்றுகிறது.

8.   மனச்செயல்பாட்டை பாசிடிவ் நன்மைகளைத் தருவதாக அமைக்கிறது.

9.   தொடர்ந்து இருக்கும் சுவாசக் கோளாறுகளைக் குறைக்கும் விதமாக சுத்தக் காற்றை சுவாசிப்பதை அதிகப்படுத்துகிறது.

10. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு இதயத் துடிப்பையும் குறைக்கிறது.

இப்படி ஏராளமான நன்மைகளை நாளுக்கு நாள் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றன.

நாம் தினமும் சிரித்தே ஆக வேண்டும், ஞாபகம் இருக்கட்டும்!

***

மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2007, ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை

Cartoons Record Historical Events 1782024

Following are the cartoons published by Deccan Chronicle until 17-8-2024.

Enjoy them and if you don’t understand them, read currents affairs.

Posed by London Swaminathan on  17th August 2024.

–Subham—

tags-  Cartoons , Historical Events, 1782024

Following are the cartoons published by Deccan Chronicle until 17-8-2024.

Enjoy them and if you don’t understand them, read currents affairs.

Posed by London Swaminathan on  17th August 2024.

–Subham—

tags-  Cartoons , Historical Events, 1782024

London Swaminathan’s July 2024 Articles Index (Post No.13,553)

London Swaminathan in 1995

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,553

Date uploaded in London – 17 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Index No.140

MY Research Notes on Viveka Chudamani- 1(Post No.13,402) 2/7

Sangamam UK Annual Meeting, 29 June 2024 at Purley (Post No.13,397)1/7

Avvaiyar and Adi Sankara :My Research Notes on Viveka Cudamani-2 (Post No.13,405) 3/7

My Research Notes on V C -3 Three things are Rare! (Post No.13,408)4/7

Incredible Numbers – My Research Notes on VC 4 (Post No.13,411) 5/7

Money, Money, Money : My Research Notes on VC 5 (Post No.13,414)6/7Kamini- Kanchana :My Research Notes on VC- Part 6 (Post No.13,418)7/7

Guru is the ‘Bright Mask that God Wears’ –My Research Notes on V. C.– Part 7 (Post 13,420)

My Jokes at London University Tamil Class –My Research Notes on V. C.– Part 8 (Post.13,424)9/7

Ramana ,  Valluvar, Tamil Proverbs on Guru My Research Notes on V. C. Part 9 (Post.13,427)10/7

Yogaaruda State ; My Research Notes on V. C. Part 10 (Post No.13,433)12/7

London Swaminathan’s Article Index for June 2024 (Post No.13,431)11/7

My Research Notes on V. C. Part 11 (Post No.13,437)13/7

LONDON KAMBAN FESTIVAL JULY 2024 (Post.13,436)13/7

Rope or Snake : My Research Notes on VC- Part 12 (Post No.13,441)14/7

Time and Place -My Research Notes on VC – Part 13 (Post No.13,447)16/7

List of Sankara’s Imageries and Similes -My Research Notes on VC – Part 15 (Post No.13,454)18/7

Sankara, Tirumular, Ramana ,Socrates- My Research Notes on V. C.- Part 16 19/7

Sankara’s Famous Quotation- ‘Brahma Satyam Jagan Mithya’ -My Research Notes on VC – Part 14 (Post 13,450) 17/7

Beautiful Words in VC; My Research Notes -Part 17(Post No.13,460) 20/7

Interesting Comparisons -My Research Notes on VC- 18 (Post No.13,464)21/7

London Ratha Yatra 21 July 2024 Pictures (Post No.13,467) 22/7

Third Part of Pictures -London Ratha Yatra 21 July 2024 (Post No.13,467-3)

Sankara on Veena, Medicine, Oratory, Yoga:

My Research Notes on VC -19 (Post No.13,468)22/7

Sankara on Snakes, Treasure, Kingship -My Research Notes on VC- Part 20 (Post No.13,471)23/7

Sankara on Zoology- My Research Note on VC – Part 21(Post No.13,474)24/7

Who is Your Wife? Who is Your Son? My Research Notes on VC – Part 22 (Post No.13,477) 25/7

Gross Body and Subtle Body: My Research Notes on VC-Part- 23 (Post No.13,480)26/7

More Maxims of Chanakya- August 2024 Calendar (Post No.13,484) 27/7

Ego and Three Gunas in VC – Part 24 (Post.13,487) 28/7

Five Sheaths in our Body: My Research Notes on VC Part- 25 (Post No.13,490) 29/7

Jar and Air; Clay and Pot; My Research Notes on VC- 26 (Post No.13,493)30/7

Brahmam Okate; Sarvam Brahma Mayam; My Research Notes on VC- 27 (Post No.13,496) 31/7

XXXX

London Swaminathan in 2023

TAMIL ARTICLES

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள்-13 (Post No13,393)30/6

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14  (Post.13,404)3/7

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –24 (Post No.13,482)27/7

xxxxx

தாயுமானவர் பொன்மொழிகள்- ஆகஸ்ட் 2024 காலண்டர் (Post No.13,489)29/7

xxxxx

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)1 ஜூலை 2024

கனக துர்க்கை அம்மன் கோவில், விஜயவாடா (Post No.13,401)2/7

கோடி லிங்க கோவில், ராஜமஹேந்திரவரம்  (Post.13,415) 6/7

கீழத்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் கோவில் ஆந்திர மாநில கோவில்கள் -PART 15 (Post.13,495)31/7

காளஹஸ்தி சிவன் கோவில்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 12 (Post.13,370)23/7

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 8 (Post No.13,443) 15/7

அஹோபிலம் நரசிம்மர் கோவில்- ஆந்திர மாநில கோவில்கள் -PART 14 (Post No.13,486) 28/7

ஸ்ரீசைலம், ஜோதிர்லிங்க ஸ்தலம் -5 (Post.13,425) 9/7

ஹைதராபாத்தில் 20 கோவில்கள்; ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள்- 6  POSTED 13 JULY 2024

வர்கல் சரஸ்வதி கோவில் (Post No.13,446)16/7

ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி –7 (Post No.13,439)14/7

பத்ராசலம் ராமர் கோவில்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 11 (Post No.13,462)21/7

நரசிம்மசுவாமி கோவில் , உருகொண்ட (Post No.13,452) 18/7

திருச்சானூர் கோவில்:ஆந்திரத்தின் புகழ்பெற்ற கோவில்கள் -Part13 (Post13,479)26/7

தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் (Post No.13,409) 4/7

xxxxxxxxxxx

திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக்  கட்டுரை- 33 (Post No.13,417)7/7

திருமூலரும் தீர்க்கரேகையும்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -31 (Post No.13,400)2/7

திருமூலரும் ஆதிசங்கரரும்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 36 (Post No.13,449) 17/7

திருமூலரின் அற்புதச் சொல்லாக்கம் – திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-34 (Post.13,427)10/7

திருமந்திரத்தில் ஜோதிடம்- ஆராய்ச்சிக்  கட்டுரை எண்- 39 (Post No.13,466) 22/7

திருமந்திரத்தில் கலர்கள் நிறங்கள்  ஆராய்ச்சிக்  கட்டுரை எண்- 41 (Post No.13,483)27/7

திருமந்திரத்தில் ஓம்,  மஹாவாக்கியம்; ஆராய்ச்சிக் கட்டுரை -35 (Post.13,435) 13/7

திருமந்திரத்தில் 51 எழுத்து மர்மம் ! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-37 (Post.13,456) 19/7

திருமந்திரத்தில் 18 பாஷை  மர்மம்; ஆராய்ச்சிக் கட்டுரை-38 (Post No.13,459) 20/7

வடக்கில் அடங்கிய வையகம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 32 (Post.13,407)4/7

பாரதி, திருமூலர், பரமஹம்சர்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 40 (Post No.13,476) 25/7

XXXX

London Swaminathan in 2024

BORROWED ITEMS

14 instances of ancient idols being unearthed since last 2 years in Bharat;July 3, 2024; from Hindu Post

CARTOONS ARE MIRRORS OF HISTORY JULY 28 2024 (cartoons from Deccan Chronicle Newspaper)

CARTOONS ARE RECORDS OF CURRENT AFFAIRS 13 JULY 2024

கயா ஸ்ரார்த்தம்.. GAYA 5 JULY 2024 posted in our blog (Facebook Item)7/7

Majority population of Bharat will become minority one day-High Court Warning 4/7 from Hindu Post

RARE STATUE UNEARTHED IN ANDHRA PRADESH 12/7 NEWSPAER ITEM

—subham—

Tags- London Swaminathan’s July 2024 Articles Index , Index No.140, swaminathan images

லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும் –Part 25 (Post No13,552)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,552

Date uploaded in London – 17 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25

லெபாக்ஷி  எங்கே இருக்கிறது?

லெபாக்ஷி  என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கிறது கதிரியிலிருந்து 82 கி.மீ; பெங்களூரிலிருந்து 120 கிமீ. புட்டபர்த்தியிலிருந்து 64 கி.மீ ; பெனுகொண்டாவிலிருந்து 50 கிமீ.

என்ன சிறப்புகள்?

சிறிதும் பெரிதுமாக மொத்தம்110 கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை – சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனியான கோவில்கள் உள்ளன.  விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன   கூர்மசைலம் என்று அழைக்கப்படும் சிறிய குன்றுமீது [ஆமை மலை] பாபனதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர்,வீரபத்ரர் ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள வீரபத்ரர் ஆலயம்தான் கலைமுக்கியத்துவம் கொண்டது.மற்றவை  சிறிய சன்னிதிகள்

என்ன அதிசயங்கள் ?

இங்குள்ள மாபெரும் நந்தி ஒரு பெரிய அதிசயம் கோவிலுக்கு வெளியே சாலையோரமாக நம்மை இது வரவேற்கிறது.

ஒற்றைக் கல் நந்தியின் உயரம் 20 அடிநீளம் 30 அடிகள்!

ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்பதால் ராமாயணத் தொடர்புடையதுஜடாயு சிலையும் ஒரு அதிசயப் படைப்பு.

சித்தன்னவாசல்அஜந்தா குகை ஓவியங்களைப் போல இங்குள்ள ஓவியங்களும் அற்புதப் படைப்புகள்.

கோவில்களும் ஓவியங்களும் சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உடையவைதான்.

இங்குள்ள தரையைத் தொடாத தொங்கும் தூண் பொறியியற் கலையின் அற்புதப் படைப்பு எனலாம் . கோவிலில் உள்ள 70 தூண்களில் ஒன்று தரையைத் தொடவில்லைஅதற்கு அடியில் துணி அல்லது காகிதத்தை விட்டு வெளியே இழுக்கலாம்.

வெளியே இயற்கையான பாறை ஒன்றை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் நாகர் சிலை சிவலிங்கத்துடன் காட்சி தருகிறது; லெபாக்ஷியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிலை இதுதான். அந்தப்பாறையின் பக்கவாட்டில் உள்ள பெரிய புடைப்புப் பிள்ளையார் சிலை மிகவும் அழகானது.

ஓவியங்கள் இயற்கை  வண்ணக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன அவைகள் சிவன் விஷ்ணுபார்வதி தொடர்பான புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன

xxxx

அனுமனின்மிகப்பிரிய காலடி

அனுமனின் காலடி என்று பக்தர்கள் நம்பும் மிகப்பெரிய கால் சுவடு வீரபத்ர சுவாமி கோவில் வளாகத்துக்குள் இருக்கிறது சுமார்  மூன்று அடிகள் நீளமுள்ள கால் தடம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். இதற்குக் காரணம்  பாறை யின் அடியிலுள்ள நீரூற்று ஆகும். இதுவும் நிறைய பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும்  ஈர்க்கின்றன.

கோவிலில் உள்ள வீரபத்ர சுவாமிக்கும், சிவலிங்கத்துக்கும் தினமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

xxxx

சுவையான கதை

இந்தக் கோவில்கள் பெனுகொண்டாவின் ஆளுநர்களாக் இருந்த வீரண்ணா விரூபண்ணா சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை ; விருபண்ணா இங்கே  குகைக்குள் இருந்த வீரபத்ரர் சிலையைக் கண்டவுடன் அதை அங்கே பிரதிஷ்டைசெய்து பெரும் ஆலயம் கட்டினார் . நம்முடைய தமிழ்நாட்டின் மாணிக்க வாசகரைப் போல, ஆந்திர மாநிலத்தின் பத்ராசல ராமதாசரைப் போல இவரும் கோவிலைக்  கட்டுவதற்கு அரசாங்க பணத்தைப் பயன்படுத்தினார் ; புகார்கள் பறந்தன விஜயநகர மன்னன் ஓடோடி வந்தான்; உண்மை என்று அறிந்தான்; உமக்கு நீரே தண்டனை கொடுத்துக் கொள்ளவும்; உ ம் கண்களை நீரே குத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான் விரூபண்ணாவும் அப்படியே செய்தார். லெபாக்ஷி என்ற பெயர் இதனால்தான் வந்ததாம் லோப + அக்ஷி என்றால் குருட்டு விழி என்று பொருள். லே +பட்சி என்றும் பொருள் சொல்லுவார்கள்; சீதையை இராவணன் கடத்தியதை ஜடாயு என்ற பறவை தடுத்தது; ராவணன் அதன் சிறகினை வெட்டினான் அது கீழே விழுந்தது; எழுந்திரு பறவையே  என்று ராமன் சொன்னதால் லே +பக்ஷி (பறவை) என்ற பெயர் ஏற்பட்டது

கோவில் வேலை முழுமை அடையாமலேயே நின்றுவிட்டது.

இது நூற்றெட்டு சைவத் தலங்களுள் ஒன்று என்று ஸ்கந்த புராணத்தில் குறிப்பு இருக்கிறது . இதை அகத்தியர் நிறுவியதாக ஐதீகம் உள்ளது.

xxxx

வீரபத்ரசாமி கோவில் 

வீரபத்ரசாமி கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. முக்த  மண்டபம் அல்லது ரங்க மகால் ,பின்னர் அர்த்தமண்டபம். அதற்கு அப்பால் கருவறையும் அதன்முன் கல்யாணமண்டபமும். இருக்கின்றன  கல்யாண  மண்டபத்தில் சிற்பப்   பணிமுடிவடையாத  முப்பத்தெட்டு ஒற்றைக் கல்தூண்கள்  கூரையைத்  தாங்கி நிற்கின்றன.

இந்த தலத்தில்தான் சிவபார்வதி திருமணம் நிகழ்ந்தது என்பது ஸ்தலபுராணம். அதற்கேற்ப எங்கும் அழகு ததும்பி நிற்கும் தூண்கள். நாட்டிய மண்டபத்தில் இசைக்கலைஞர்களும் நடனமாதர்களும் பிரமித்து நிற்கின்றார்கள். கல்யாணமண்டபம் பணிமுடிவடையாத நிலையில் உள்ளது. தும்புரு- நாரத நடனம், அனந்த சயனம், தத்தாத்ரேயர் ,நான்முகன், ரம்பா போன்ற சிலைகள் மனதைக் கவர்கின்றன.

நாட்டிய மண்டபத்தையும் கல்யாண மண்டபத்தையும் பார்த்து முடிக்கவே முடியாது. மிக அற்புதமான சிலைகள் வரிசையாக இருக்கின்றன. குறிப்பாக ஒரே தூணில் உள்ள யட்சனும் புஷ்ப யட்சியும் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

நாட்டியமண்டபத்திலும் கல்யாணமண்டபத்திலும் மேலே கூரையில் உள்ள சுவரோவியங்களும் புகழ்பெற்றவை. மகாபாரத ராமாயண காட்சிகளுடன் வீரண்ணா, விரூபண்ணா ஆகியோர் தங்கள் பக்கவாட்டில் கட்டிமுடிக்கப்படாத ஒரு மண்டபம் சிற்பங்கள் மண்டிய தூண்களாக மட்டும் நின்று கொண்டிருக்கிறது. முகப்பில் அகத்தியர் முதலிய ரிஷிகளின் அற்புதமான சிலைகள் வரிசையாக நிற்கின்றன. உள்ளே, நின்ற திருக்கோலத்தில் விஷ்ணுவின் சிலை உள்ளது.   

—Subham–

Tags- சிவன் கோவில், லெபாக்ஷி , ஓவியங்கள் ,  பெரிய நந்தி , ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25, வீரபத்ர சுவாமி, நாகத்தின் கீழ் சிவலிங்கம், தொங்கும் தூண், அனுமன் காலடி

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்! (Post No.13,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.551

Date uploaded in London – 17 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்! 

ச. நாகராஜன் 

பதினைந்து வருட வாழ்வு!

மனிதராய்ப் பிறந்தோரின் சராசரி ஆயுள் எண்பது வருடங்கள் என்று இந்த அறிவியல் யுகம் நிர்னயித்து விட்டது. இதில் முதல் பத்து வருடங்கள் பால பருவத்திலும், கடைசி பத்து வருடங்கள் உடல் தளர்ந்த முதுமைப் பருவத்திலும் கழிந்து விட,, மீதி இருப்பது அறுபது வருடங்கள்.

இதில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி வேலை மற்றும் படிப்பிலும் போய் விட, மீதி இருப்பது இருபது வருடங்கள். இதில் உணவு உண்ணுதல், மற்றும் உணவு தயாரித்தல், பயணம், டிரைவிங் என்று ஒரு ஐந்து வருடங்கள் கழிந்தது போக மீதி இருப்பது பதினைந்து வருடங்கள் தாம்.

 வாழ்வதற்காக உள்ள வருடங்கள் பதினைந்து வருடங்களே! இதில் ஆனந்தமாக வாழ்கிறோமா என்பது தான் கேள்வி.

 மன்னர் ஷவன் ஷி கேட்கும் கேள்வி

க்விங் என்ற சீன வம்ச அரசரான ஷவன் ஷி சக்ரவர்த்தி (கி.பி. 1638- 1697) ஒரு பாடலை எழுதியுள்ளார்:-

 “எதற்காக என்று தெரியாமல் பூமிக்கு மனிதர்கள் வருகிறார்கள்! எங்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் மனிதர்கள் பூமியை விட்டுப் போகிறார்கள்! இங்கு  வருவதற்கு முன்னர் நான் யார்? இங்கிருந்து போன பின் நான் யார்?”

 இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாததால் சக்ரவர்த்தி ஷவன் ஷி அரசைத் துறந்து விட்டு சந்நியாசி ஆனார்.

 உண்மை ஆனந்தத்தைத் தேடி ஆன்ம மார்க்கத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, உண்மையில் வாழ்கின்ற பதினைந்து வருடங்களில் ‘மனித ஆனந்தத்துடனாவது’ வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ வழிகள் உண்டா? உண்டு! அவற்றில் சில வழிகளைப் பார்க்கலாம்:

 உள்ளங்கைகளைத் தேய்த்தல் 

உடனடி ஆனந்தத்தை வரவழைக்கை ஒரு சுலபமான வழி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று ஏழு முறைகள் வேகமாகத் தேய்ப்பது தான்! வேகமாகத் தேய்த்து அதில் வரும் ஆனந்தம் உடலெங்கும் பரவுவதை உணரலாம். இப்படி ஏழு முறை தேய்ப்பதை ஏழு முறை செய்தால் உற்சாகமான ஆனந்தம் ஆரம்பமாகும். ‘டல்லாக’ உணரும் தருணங்களிலும் உள்ளங்கைகளைத் தேய்த்து ஆனந்தம் ஆரம்பமாக வைத்து நம் நேரத்தை மகிழ்ச்சி நேரமாக மாற்றிக் கொள்ளலாம்!

கிடைமட்ட எட்டு எண்ணை மனதில் இருத்தல்

அடுத்து எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் அடையாளமான கிடைமட்டமாக உள்ள எட்டு எண்ணை ((8 ஐ கிடைமட்டமாக்கினால் வருவது ∞ ) கண்களை மூடி மனதில் இருத்துங்கள். இதில் உள்ள இரண்டு பூஜ்யங்கள் இடது பக்க மூளையையும், வலது பக்க மூளையையும் இணைக்கும் பாலமாக அமையும். இரண்டு பூஜ்யங்களும் இணையும் இடமானது கார்பஸ் கலோஸம் என்ற மூளையின் பகுதியைக் குறிக்கும். அந்த இணையும் புள்ளியே ஆனந்த சக்தி ஆரம்பமாகும் இடம். அதையே ஆனந்தத்தின் ஊற்றாக எண்ணுங்கள். இந்த இரண்டு பூஜ்யங்களின் வழியே ஆனந்த சக்தியை ஓட்டமாக ஓட வைத்து அதை மனதில் அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் ஆனந்த சக்தியை ஓட்ட விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் ஓட விடுங்கள். அபரிமிதமான ஆனந்தப் புத்துணர்ச்சி உடலெங்கும் அலை பாயும்.

 மினி மெடிடேஷன்

 கண்களை மூடி ஒரு மினி மெடிடேஷன் செய்வது அடுத்த டெக்னிக்!

 கண்களை மூடி முகத்தை நிமிர்த்தி வையுங்கள். கண்களைக் கீழே தாழ விடுங்கள்.  பத்து வினாடிகள் கழித்து கண்களை மேலே பார்க்கச் செய்யுங்கள். பத்து வினாடிகள் புருவ மத்தியைப் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி உணர்வை உணருங்கள். உடல் முழுவதும் மின்காந்த அலைகள் பாயும். 

தீப தியானம் 

ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ள தீப தியான முறையும் சிறப்பான ஒன்று.

ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதன் மூலம் உங்களிடமிருந்து ஆரம்பித்து உங்கள் உறவினர், நண்பர்கள், சமுதாய மக்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாகக் கண்களை மூடி மனதில் தியானிப்பது தீப தியான முறை. உங்களிடமிருந்து ஆரம்பமாகும் ஆனந்தம் வெள்ளமாகப் பெருகி உலகெங்கும் பரவும்.

 ஆக இப்படி எளிய இனிய வழிகள் இருக்கும்போது ஆனந்தத்திற்கு ஏது குறை? குறை ஒன்றும் இல்லை சீர் கோவிந்தா!!

மஞ்சுளா ரமேஷ் ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, ஜூலை மாதம் வெளியான கட்டுரை

Sankaraya Sankaraya Sankaraya Mangalam; My Research Notes on VC-43 (last part) Post.13551

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,551

Date uploaded in London – 16 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Sixty years ago, I used to attend Sunday Bhajans conducted by Swami Sivananda’s DLS (Divine Life Society) inside the world famous Madurai Meenakshi Temple in Madurai. We used to finish the Bhajan (group singing prayer) with

Sankaraya Sankaraya Sankaraya Mangalam

Sankari manoharaya saswataya Mangalam

(more lines are there)

Today I wanted to repeat it when I finish my Research Notes on VC .

580 slokas in VC (Viveka Chudamani) are a vast resource of Advaita (monism) Vedanta.

It has lot of repetitions which Sankara himself admits.

In Bhagawad Gita , Lord Krishna took the role of a FRIEND and in VC, Sankara took the role of a FATHER.

He says,

सकलनिगमचूडास्वान्तसिद्धान्तरूपं
परमिदमतिगुह्यं दर्शितं ते मयाद्य ।
अपगतकलिदोषं कामनिर्मुक्तबुद्धिं
स्वसुतवदसकृत्त्वां भाव्यित्वा मुमुक्षुम् ॥ ५७५ ॥

sakalanigamacūḍāsvāntasiddhāntarūpaṃ
paramidamatiguhyaṃ darśitaṃ te mayādya |
apagatakalidoṣaṃ kāmanirmuktabuddhiṃ
svasutavadasakṛttvāṃ bhāvyitvā mumukṣum ||VC 575 ||

VC 575. I have today repeatedly revealed to theeas to one’s own son, this excellent and profound secret, which is the inmost purport of all Vedanta, the crest of the Vedas – considering thee an aspirant after Liberation, purged of the taints of this Dark (Kali) Age, and of a mind free from desires.

xxx

We know that teachers and parents repeat messages so that the listener would never forget them.

Sankara took his Snake/Rope, Pot/sky similes till the end. They are his favourite imageries.

Snake- rope gave us the picture of Maayaa (illusion)

Pot broken- sky merged with sky- meant man’s soul merges with Brahman, the God.

Towards the end he repeated umpteen times his messages: ‘Ekam EvA dviteeyam’
(There is one without two (brahman)

and

‘Brahma satyam, jagat mithya’ “Brahman is the real reality, the world is deceptive”. 

सर्वाधारं सर्ववस्तुप्रकाशं
सर्वाकारं सर्वगं सर्वशून्यम् ।
नित्यं शुद्धं निश्चलं निर्विकल्पं
ब्रह्माद्वैतं यत्तदेवाहमस्मि ॥ ५१३ ॥

sarvādhāraṃ sarvavastuprakāśaṃ
sarvākāraṃ sarvagaṃ sarvaśūnyam |
nityaṃ śuddhaṃ niścalaṃ nirvikalpaṃ
brahmādvaitaṃ yattadevāhamasmi || 513 ||

513. I am verily that Brahman, the One without a second, which is the support of all, which illumines all things, which has infinite forms, is omnipresent, devoid of multiplicity, eternal, pure, unmoved and absolute.

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144947.html

The reason I wrote this series is , I have made marginal remarks from Tamil poems and Sri Ramakrishna Stories when I first read it in 1994. Normally they are not available in many English commentaries by great scholars.

I missed some more similes, analogies, metaphors such as building castle in air, soldiers, mirage, shade, corpses, cockroach, eclipse, thief, sandal etc in the VC. Hope you read VC in full and enjoy them.

I made more comparisons with Tamil Veda Tirukkural and Bharati Poems which will suit Tamil audience. So I avoided them as well.

Somewhere I read that Sri Ramana Maharishi has chosen ten important slokas/ couplets from the VC. Those who want the gist may read it.

If one reads this or the simplified version –his Bhaja Govindam, that will provide immense knowledge of Vedanta (end of Veda; the conclusion of Vedas).

Please go to wisdomlib.com for anything in Sanskrit and go to Project Madurai websites for any poem in Tamil. They are free and No Cookies.

–subham—

Tags- VC 43, Sankaraya Mangalam, last part, Father, Sankara.

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –30 (Post.13,550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,550

Date uploaded in London – 16 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30

உண்மை என்பதை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. ஏனெனில் குருகுலத்தில் ஐந்து வயதுப் பையன் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லித் தரும் முதல் வாக்கியம் சத்யம் வத, தர்மம் சர ஸ்வாத்யாயான் மா ப்ரமதஹ என்பதாகும்.தைத்ரீய உபநிஷத்தில் உள்ள இந்த மந்திரத்தின் பொருள்:

‘सत्यं वद। உண்மையே பேசு;

घर्मं चर। தர்மத்தைக் கடைப்பிடி;

 स्वाध्यायान्‌ मा प्रमदः।’ ‘சோம்பேறித்தனத்துக்கு இடம் கொடுக்காதே

அடுத்ததாக மாணவர்கள் கற்றுக்கொள்வது :

. ‘मातृदेवो भव- மாத்ரு தேவோ பவ – தாயார் தெய்வம்

। पितृदेवो भव। – பித்ரு தேவோ பவ – தந்தை  தெய்வம்

आचार्यदेवो भव। – ஆசார்ய தேவோ பவ — ஆசிரியர்/ வாத்தியார் தெய்வம்

अतिथिदेवो भव।’ – ‘அதிதி தேவோ பவ – விருந்தாளி தெய்வம்

இதுவும் தைத்ரீய உபநிஷத் மந்திரம் (1-11) ஆகும்

இதை அப்படியே தமிழிலும்  நம்மவர்கள் மொழி பெயர்த்தனர்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே-

என்று திருமந்திரத்தில் திருமூலர் செப்புகிறார்.

விருந்தோம்பல் (அதிதி தேவோ பவ ) என்பதை உலகில் எங்கும் சிறுவர்களுக்கு கற்பித்ததில்லை. திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களில் இதற்கென ஒரு அத்தியாயமே ஒதுக்கியது உபநிஷத்  மந்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸத்ய / உண்மை  என்ற சொல் குறைந்தது எட்டு நாமாக்களிலாவது வருகிறது.

SATHYAMEVA JAYATE- INDIAN EMBLEM

1.சத்யஹ – நாம எண் 106-

கடவுள் என்பவர் ஸத்யம் / உண்மை வடிவானவர்.

தைத்ரீய உபநிஷத் சொல்கிறது

சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம .= இறைவனே  உண்மையின் வடிவம்;அறிவின் வடிவம்; எல்லையற்ற பரம்பொருளின் வடிவம் ; பிரம்ம = கடவுள் – இறைவன்- ஆண்டவன்

மீண்டும் 2-6-1 மந்திரத்தில்

ஸச்ச த்யச்சா பவேத் = அருவமும் உருவமும் ஆனவர்;

ஐதரேய ஆரண்யகம் 2-1-56 சொல்வதாவது

ஸதிதி  ப்ராணாஹா  தீத்யன்னம்  .  யமித்யஸா வாதித்யஹ = ஸத் -பிராணன் /உயிர் , ; இதி -அன்னம் ; யம் – சூரியன்  ஆகையால் ஆண்டவன்  என்பவன் உயிர்உணவுஒளி ரூபத்தில்  உள்ளான்

xxxx

2. சத்யஹ – நாம எண் 212-

உண்மையின் ஒட்டு மொத்த வடிவமாக உள்ளவர்.

தஸ்மை சத்யம் பரமம் வதந்தி — ஆகையால் சத்யமே உயர்ந்தது

அல்லது பிருஹதாரண்யக உபநிஷத் 2-3-6 சொல்கிறது:

ப்ராணா வை சத்யம் தே ஷாம் ஏஸ ஸத்யம் – பரமாத்மனே சத்யம்

(உண்மையை கடவுள் என்று சொல்லும் ஒரே மதம் இந்துமதம் . ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் என்ன நிகழும்? அரசியல்வாதிகளும், ஆளும் அரசாங்கமும் சொன்ன சொல்லக் காப்பாற்றாவிடில் என்ன நிகழும் ? சூரியனும் சந்திரனும் கிரகங்களும் அவைகள் ஏற்றுக்கொண்ட பாதைகளை பின்பற்றாவிடில் என்ன நிகழும்? என்று யோசித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.

ஸத்ய வ்ரதம் ஸத்யபரம் த்ரி ஸத்யம் ஸத்யஸ்ய யோனிக்கு நிஹிதம் ச ஸத்யே .

ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்யநேத்ரம் ஸத்யாத்மகம் த்வாம்  சரணம் ப்ரபந்நாஹா — என்று பாகவதம் 10-2-26 சொல்கிறது

xxxx

3. சத்ய பராக்ரமஹ–நாம எண் 213–

வீண் போகாத பராக்ரமம் உடையவர்

xxxx

4.ஸத்ய தர்ம பராக்ரமஹ –நாம எண் 289–

பொய்க்காத ஞானம் முதலிய குணங்களும் வீரச் செயல்களும் உடையவர் தர்மங்கள் எனப்படும் தமது கல்யாண குணங்களும்பராக்கிரமம் எனப்படும் திவ்ய சேஷ்டிதங்களும் வீண் போகாமால் உலகத்தை உய்விக்கும்படி இருப்பவர் என்பது பட்ட பாஸ்கரர் உரை.

xxx

5.ஸத்ய ஸந்தஹ- நாம எண் 510-

சங்கல்பம் தவறாதவர் .

.ஸத்ய வ்ரதம் .ஸத்ய பரம் த்ரி.ஸத்யம்  .ஸத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச .ஸத்யே

ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்யநேத்ரம் ஸத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னாஹா

–பாகவதம் 10-2-27

ஸத்யகாமஹ  ஸத்யஸங் கல்பஹ — சாந்தோக்ய உபநிஷத் 8-1-5

சீதையே ! நான் உயிரையும் விடுவேன் ; உன்னையும் விடுவேன் ; லெட்சுமணனையும் விடுவேன் ; பிரதிக் ஞை

செய்தபின் அதை விட்டேன் –ஸ்ரீ ராமாயணம்

6.ஸத்ய ஸங்கல்பகஹ  –

அவருடைய ஸங்கல்பம் நிறைவேறியே தீரும்

xxxx

ஞானானாம்  உத்தமம் – நாம எண் —454–

உத்தம ஞான வடிவினர்.

ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம -தைத்ரீய உபநிஷத் 2-1

பிரம்மம் என்பது  உண்மை; அறிவு மயமானது; வரம்பற்றது/ எல்லையிலாதது  .

என் கருத்து

இந்த சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம — சத்ய சாய்ப்பாபா பஜனைகளில் பாடப்படுவதால் மிகவும் பிரபலமாகிவி ட்டது . அவரே இதை பாடு வதும்  உண்டு

xxxx

ஸத்ய தர்ம — நாம எண் — 529-

உண்மையான தர்மம் ஞானம் இவற்றை உடையவர்.

பட்டபாஸ்கரர் சொல்கிறார்-   தன்னை வந்ததடையும் மக்களுக்கு , சரணாகதி  கொள்கையை  ஆரம்பம் முதல் கடைசிவரை கடைப்பிடிப்பவர். (விபிபீஷண சரணாகதி  முதலியன )

xxxx

8.ஸத்யஹ — நாம எண் 869–

நல்லோர்க்கு நல்லவர். ஸத்யத்திற்கு ஆதாரமாய் இருப்பவர்

பட்ட பாஸ்கரர் சொல்கிறார்- ஸத்யத்தில் அவர் நிலை பெற்றிருக்கிறார் ; அவரிடத்தில் ஸத்யம்   நிலை பெற்றிருக்கிறது.

xxx

ஸத்ய தர்ம பராயணஹ — நாம எண் –870-

ஸத்தியத்தையும்  தர்மத்தையும் முக்கியமாக்க கொண்டவர்

xxxx

ஓம்

இந்தியாவில் உதித்த எல்லா மதங்களும் ஓம் என்னும் பிரணவத்தைப் போற்றித் துதிக்கின்றன. இதுவும் கர்மாமறுபிறப்புக் கொள்கையும் இந்துபுத்தசமணசீக்கிய மதங்களுக்குப் பொதுவானவை.

தமிழில் திருவாசகம் முதல் பாடல் ஓம் என்னும் மந்திரத்தில் துவங்கி ஓம் என்னும் ஓரெழுத்தில் கடைசி பாடல் முடிகிறது .திரு மந்திரத்தில் 300 பாடல்களுக்கு மேல் ஓம் என்னும் ஏகாக்ஷரம் பற்றியவை.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச)

பிரணவ – நாம  எண் 409-

ஓம் என்று ஒலிப்பவர் ஓம் என்ற மந்திரத்தால் வணங்கப்படுகிறவர்.

கருவினைச் சிதைத்த பாவமும் கூட ஒரு மாதத்துக்கு 16 பிராணாயாமம் செய்யும்போது ஓம் என்னும் பிரணவத்தை உச்சரிப்பதன்  மூலம் அகலும் என்று மனு கூறுகிறார்.

सव्याहृतिप्रणवकाः प्राणायामास्तु षोडश ।

अपि भ्रूणहनं मासात् पुनन्त्यहरहः कृताः ॥ 11-२४८ ॥

savyāhṛtipraṇavakāḥ prāṇāyāmāstu ṣoḍaśa |

api bhrūṇahanaṃ māsāt punantyaharahaḥ kṛtāḥ ||Manu 11- 248 ||

Sixteen ‘Breath-Suppressions’ with the Vyāhṛtis and the Praṇava, performed daily, purify, in a month, even the ‘murderer of the embryo’ (Brāhmaṇa).—(248)

பிரணாம் (வணங்குதல்) செய்யும்போது வேதங்கள் ஓம் சொல்லுவதால் இதைப் பிரணவம் என்று அழைப்பதாக  ஸநத்குமார சொல்கிறார்.

வேதங்கள் அவரை வணங் குவதால் பிரணவம் எனப்படுகிறது என்று சங்கரர் சொல்கிறார்.

—subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30, ஓம் பிரணவம், மனு

பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2 (Post.13549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.549

Date uploaded in London – 16 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2

ச. நாகராஜன்

31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு உதவி

1963 மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கு வந்தார்.  டெல்லி. லூதியானா, கான்பூர், பூனே, இந்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கி தனது கோதுமை விளைச்சல் உத்தியை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். 1975 வரை இந்தியாவில் இருந்து இந்திய கோதுமை விளைச்சலில் வெற்றியைக் கண்டார் அவர்.

அவருக்கு இந்திய அரசு 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை அளித்துச் சிறப்பித்தது. அவருக்கு 2013-ல் டெல்லியில் ஐ.சி.ஏ.ஆர். கட்டிட வளாகத்தில் ஒரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நோபல் பரிசு

1970-ல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வேயிலிருந்து அவர் நோபல் பரிசு பெற்ற செய்தியானது அவருக்கு மெக்ஸிகோவில் காலை நான்கு மணிக்கு அவரது மனைவியிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர்லாக்கோ அதற்கு முன்பேயே நாற்பது மைல் தள்ளி உள்ள டோலுகா பள்ளத்தாக்கு என்ற தனது சோதனை வயல்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மனைவி விரைந்து சென்று அவரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். போர்லாக் இதை நம்பவில்லை. அனைவருமாகச் சேர்ந்து ஒரு புரளியைக் கிளப்பி தன்னைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்றே நினைத்தார்.

டிசம்பர் 10-ஆம் தேதி பரிசைப் பெற்ற பின் தனது உரையில், “ பசியால் வாடும் உலகம் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் போது விவசாயமும் உணவு உற்பத்தியும் எவ்வளவு முக்கியமானது என்பதை அடையாளப்படுத்த ஒரு தனிமனிதனான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது” என்று எளிமையாகக் குறிப்பிட்டார்.

உலகின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அவர் போற்றிப் புகழப்பட்டார்.

எஸ்.ஏ.ஏ

சஸகாவா ஆப்ரிக்கா சங்கம் (எஸ்.ஏ.ஏ.) என்ற சங்கத்தை உருவாக்கி 1989 முதல் 2009 முடிய அதன் தலைவராக அவர் இருந்தார். 15 ஆப்பிரிக்க நாடுகளில் 80 லட்சம் விவசாயிகளுக்கு அவர் அமோக விளைச்சலுக்கான பல உத்திகளைக் கற்றுக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்தார். அதனால் விளைச்சல் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் ஆனது. அனைவரும் மகிழ்ந்தனர்.

குடும்பம்

கல்லூரியில் படிக்கும் போது டிங்கிடவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு காப்பி விற்கும் பெட்டிக் கடையில் மார்கரெட் ஜிப்ஸன் என்ற பெண்மணியைச் சந்தித்த போர்லாக் அவரை 1937-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள், ஐந்து பேரக் குழந்தைகள் ஆறு  கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. 69 வருட மண வாழ்க்கை நீடித்த பின்னர் 2007-ல் மார்கரெட் தனது 95-ம் வயதில் தடுக்கி விழுந்ததால் மரணமடைந்தார்.

விருதுகள்

வாழ்நாள் முழுவதும் அவர் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை. 2004-ல் 18 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு 49 கௌரவ பட்டங்களை அளித்துக் கௌரவித்தன.  அமெரிக்காவில் நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவரின் பதக்கப் பரிசு மற்றும் அமெரிக்க காங்கிரஸின் தங்கப் பதக்கம்  ஆகிய மூன்றையும் இதுவரை பெற்றவர் ஐவர் மட்டுமே. அதில் போர்லாக்கும் ஒருவர்.

புத்தகம்

போர்லாக்கைப் பற்றி ஏராளமான புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நார்மன் போர்லாக் இருபத்திநான்கரை கோடி பேரைக் காப்பாற்றியதை விவரிக்கும் புத்தகமான “நார்மன் போர்லாக் – ஓவர் 245 மில்லியன் லைவ்ஸ் சேவ்ட்” என்ற புத்தகம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

மறைவு

இறுதி வரை உழைப்பை மேற்கொண்ட போர்லாக் பழுத்த 95-ம் வயதில் 2009, செப்டம்பர் 12-ம் நாளன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மரணமடைந்தார்.

அவரது கல்லறையில் பொருத்தமான ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது இப்படி:

“உலகிற்கு உணவளித்த மனிதர் இவர்.”

சமூக நீதியின் முக்கிய அம்சம்!

ஏராளமான அவரது பொன்மொழிகளில் முக்கியமான கூற்று இது தான்:

“சமூக நீதியின் முக்கியமான முதல் அம்சம் மனித குலம் முழுவதற்கும் போதுமான உணவை வழங்குவது தான்!”

அமெரிக்காவில் பிறந்தாலும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்ற குறளின் அடிப்படையில் (குறள் எண் 322) வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய போர்லாக்கை உலகம் மறக்க முடியுமா என்ன?

***