325. If the mind ever so slightly strays from the Ideal and becomes outgoing, then it goes down and down, just as a play-ball inadvertently dropped on the staircase bounds down from one step to another.
Notes:
[Ideal—Brahman. Cf. Mundaka II. ii. 3-4.
What a terrible and graphic warning to happy-go-lucky aspirants! ]
xxxx
Adi Sankara was down to earth in explaining the greatest Hindu philosophy Advaita (Monism). Man is God is the ultimate truth. But the strangest thing is that he used even ball game in his hymn.
Hindu literature is full of ball games. But it is not the foot- ball that was invented by the ancient South American civilizations. Tamil and Sanskrit poems described the flower balls that were used as Volley Balls.
There is a genre in Tamil called அம்மானை Ammaanai, where women sit or stand in circles and play ‘throw and catch’ ball game. Another version is, they sit one against another and throw the pebbles or flower balls or big and light seeds skyward like a juggler.
Depending upon the skill of the person, the number of balls or round objects are used.
2000 year old Sangam literature has several references to flower balls used in games. It was a woman’s game in ancient India
xxxx
Here is a story from my old article:
There is another mystery in Indian literature. But I don’t think anyone can do it today. This art has disappeared long ago. The Brhatkatha translated into Tamil as Perunkatai has an anecdote. A person tells the features of a beautiful woman from her finger prints. Finger prints are used now in forensic investigation. Ancient Indians used it to identify people, draw pictures etc. if it is revived the criminal investigation will be much more easier. Following anecdote is in Perunkatai, Tamil adaptation of Bruhat Katha:–
A beautiful lady by name Madana Manjika was playing ball game on the terrace of her highly raised building. The ball jumped out and fell on Naravanan who was riding an elephant at that time. Naravanan looked at the girl and the ball and fell in love with her. Madana also looked at Naravanan and fell in love with him. But she did not collect he ball. Naravanan called his friend Gomukhan and asked him to find the owner of the ball.
Gomukhan simply looked at the ball and found out her finger prints in the sandal paste on the ball. He started giving the description of every part of her body . Then told him it must be Madana manjika. It may sound like fiction today. But in those days there were people who could draw the picture of a person by simply looking at the hand or the finger prints.
Even the finger print technology used in the modern criminal investigation had its beginning in India.
xxxx
செப்பும் பந்தும் போல. Like a box and a bal- is a proverb in Tamil. Both are children’s toys.
In Sangam Tamil literature ball game was also called கழங்கு Kazangu. Following are few references to ball games in Sangam corpus:-
Perumpaanaatruppadai- line 335
Nattrinai – 47, 79,
Pathitruppaththu – 15-5
Paripaatal- 8-106/7
Akanaanuuru – 17, 49, 66
Puranaanuuru – 36
xxxx
From Tamil Dictionary
ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.
—SUBHAM—
TAGS- ball game, Sankara, Viveka Chudamani, Sangam Tamil poems, Brhad katha, Madana manjika story Research Article on VC-42
பன்றியாய் பிறப்பாயாகுக ; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45
மனு ஸ்ம்ருதியில் பாவம் செய்வோர் எந்தெந்த விலங்குகளாகப் பிறப்பார்கள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. மாணிக்கவாசகர் போன்றோர் பெயர் சொல்லாமல் விலங்கு, பறவை, புழுவாகப் பிறந்த ஒரு பட்டியலைத் தருகிறார்கள் . ஆனால் திரு மூலர் ஒரே ஒரு விலங்கினை மட்டும் மறுபிறப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார். அது இந்தியர்கள் வெறுக்கும் பன்றி!
இதோ அந்தப் பாடல்
கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்
தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்
பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு
ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!
Those who ask others to kill animals (for meat)
Those who force others to eat meat
Will be born as pigs and suffer in seven types of hell
This is the order by Lord Siva! True indeed!
xxxx
மாமிசம் தின்பவன் நரகத்துக்குப் போவான் என்பதை வள்ளுவரும் அடித்துக் கூறுகிறார்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.–255
If flesh you eat not, life’s abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.-255
xxxx
இதோ வள்ளுவர் கிண்டல் !
வள்ளுவர் புத்த மதத்தினரைக் கிண்டல் செய்கிறார் ; ஏனெனில் அவர் தீவிர ஹிந்து; பெளத்தர்கள் மற்றவர்கள் அடித்துக்கொன்று கொடுத்தால் சாப்பிடுவார்கள் ; இலங்கையில் புத்த குருமார்கள் இதற்காகவே சாலை ஓரங்களில் காத்து நிற்பார்களாம்; மஹா பாவிகள் !
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
‘We eat the slain,’ you say, by us no living creatures die;
Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?
நான் ஹாங்காங் சென்ற பொழுது பய பக்தியுடன் புத்தர் கோவிலுக்குப் போனால், எல்லோரும் பன்றிக்குட்டியைத் தோலுரித்து பாலிதீன் கவர்களில் போட்டுக்கொண்டு வந்து படையல் செய்ததைப் பார்த்து திகைத்து நின்றேன் ; புத்தர் மட்டும் உயிரோடு இருந்தால் 100 முறை தற்கொலை செய்துகொள்வார்.
xxxx
நூறு அஸ்வமேதம் செய்யும் பலன் , மாமிசம் தின்னாத புண்ணியவானுக்குக் கிடைக்கும் என்று மனுவும் (5-53) செப்புகிறார்
वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः । मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥
varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ | māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||
If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(53.)
xxxx
நோய் ஏன் வருகிறது? ஏனெனில் அவர்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றியைக் கொன்று தின்ற பாவத்தால் வருகிறது என்கிறார் தமிழ்வேதம் தந்த வள்ளுவன்
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்-330
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.–330
xxxxx
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.குறள் 329:
(மாமிசம் தயாரிப்பவன் கீழ் ஜாதி.)
Whose trade is ‘killing’, always vile they show,
To minds of them who what is vileness know.
xxxx
இதனால்தான் மாமிசம் சாப்பிடாத பிராமண ஜாதியை தமிழ், ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் புகழ்ந்து முன்னிலையில் வைக்கின்றன. இதனால் சத்துவ குணம் அதிகரிக்கும். ஆன்மீகப் பாதையில் எளிதில் முன்னேற வழி பிறக்கும். வள்ளலார் முதலிய பெரியோரும் இதை வலியுறுத்துவது இதனால்தான்.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும், நாஸ்தீகர்களும் திருக்குறளைப் பரப்பாமல் இருப்பதற்கும் இதுவே காரணம் அவர்களால் மாமிசம் சாப்பிடாமல் வாழ முடியாது ; சில இருதய நோயாளிகள் மட்டும் கூடிய மட்டிலும் மாமிசத்தைத் தவிர்க்கிறார்கள்.
மீனாட்சி கோவில் போன்ற இந்துக் கோவில்களில் மட்டுமே திருக்குறளைக் காணலாம். தமிழ் வேத மாகிய திருக்குறள் சொல்லும் மறுபிறப்புக் கொள்கையையும் இந்தியாவில் தோன்றிய ம்தங்கள் மட்டுமே ஏற்கும். மத்தியக் கிழக்கில் தோன்றிய மூன்று மதங்களும் ஏற்காது .
xxxx
பாம்பு, பல்லி, பன்றி, நாய், கழுதையாக யார் பிறப்பர் ?- மநு தரும் பட்டியல் (Post.7945)
மநு நீதி நூல் – பகுதி51
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7945
Date uploaded in London – 9 May 2020
Contact – swami_48@yahoo.com
மனு ஸ்ம்ருதி 12-ஆவது அத்தியாயம்
மனு ஸ்ம்ருதி 12-ஆவது அத்தியாயம் Manu Chapter 12
54. Those who committed mortal sins (mahapataka), having passed during large numbers of years through dreadful hells, obtain, after the expiration of (that term of punishment), the following births.
55. The slayer of a Brahmana enters the womb of a dog, a pig, an ass, a camel, a cow, a goat, a sheep, a deer, a bird, a Kandala, and a Pukkasa.
56. A Brahmana who drinks (the spirituous liquor called) Sura shall enter (the bodies) of small and large insects, of moths, of birds, feeding on ordure, and of destructive beasts.
57. A Brahmana who steals (the gold of a Brahmana shall pass) a thousand times (through the bodies) of spiders, snakes and lizards, of aquatic animals and of destructive Pisakas.
58. The violator of a Guru’s bed (enters) a hundred times (the forms) of grasses, shrubs, and creepers, likewise of carnivorous (animals) and of (beasts) with fangs and of those doing cruel deeds.
59. Men who delight in doing hurt (become) carnivorous (animals); those who eat forbidden food, worms; thieves, creatures consuming their own kind; those who have intercourse with women of the lowest castes, Pretas.
60. He who has associated with outcasts, he who has approached the wives of other men, and he who has stolen the property of a Brahmana become Brahmarakshasas.
61. A man who out of greed has stolen gems, pearls or coral, or any of the many other kinds of precious things, is born among the goldsmiths.
62. For stealing grain (a man) becomes a rat, for stealing yellow metal a Hamsa, for stealing water a Plava, for stealing honey a stinging insect, for stealing milk a crow, for stealing condiments a dog, for stealing clarified butter an ichneumon;
63. For stealing meat a vulture, for stealing fat a cormorant, for stealing oil a winged animal (of the kind called) Tailapaka, for stealing salt a cricket, for stealing sour milk a bird (of the kind called) Balaka.
64. For stealing silk a partridge, for stealing linen a frog, for stealing cotton-cloth a crane, for stealing a cow an iguana, for stealing molasses a flying-fox;
65. For stealing fine perfumes a musk-rat, for stealing vegetables consisting of leaves a peacock, for stealing cooked food of various kinds a porcupine, for stealing uncooked food a hedgehog.
66. For stealing fire he becomes a heron, for stealing household-utensils a mason-wasp, for stealing dyed clothes a francolin-partridge;
67. For stealing a deer or an elephant a wolf, for stealing a horse a tiger, for stealing fruit and roots a monkey, for stealing a woman a bear, for stealing water a black-white cuckoo, for stealing vehicles a camel, for stealing cattle a he-goat.
68. That man who has forcibly taken away any kind of property belonging to another, or who has eaten sacrificial food (of) which (no portion) had been offered, inevitably becomes an animal.
69. Women, also, who in like manner have committed a theft, shall incur guilt; they will become the females of those same creatures (which have been enumerated above).
–subham–
TAGS- பன்றி, திருமூலர் சாபம், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45, மறுபிறப்பு, புலால், மாமிசம், உண்ணுதல் நரகம் சிவன் ஆணை, மனு ஸ்ம்ருதி, 12-ஆவது அத்தியாயம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எங்களது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1998)
With Kamaraj and Bhaktavatsalam
With Sathya Sai Baba
With Rajaji
திரு வெ.சந்தானம் அவர்களின் லியோ டால்ஸ்டாய்எழுதிய ‘அன்னா கரீனா’ நாவல் மொழிபெயர்ப்பு
ச.நாகராஜன்
எமது தந்தையார் திரு வெ.சந்தானம் அவர்கள் நெடுங்காலம் தமிழ் பத்திரிகை உலகில் சேவை செய்தவர். ஆன்மீகம் வளர அவர் செய்த அளப்பரும் சேவையை தமிழ் உலகம் நன்கு அறியும்; குறிப்பாக தினமணி வாசகர்கள் நன்கு அறிவர்.
அவர் இலக்கிய உலகில் ஆற்றிய சேவையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. நூற்றுக் கணக்கான கட்டுரைகளும், கீர்த்தனைகளும் அவர் படைத்தார்.
முதலில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் அன்னா கரினினா நாவலை அவரே தமிழில் மொழி பெயர்த்தார்.
‘அன்னா கரீனா’ நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 1947-ம் வருடம் மார்ச் 22-ம் தேதி முதல் பதிப்பாக தமிழ்ச் சுடர் நிலையம் சார்பாக வெளியிடப்பட்டது.
அதற்கு தமிழ்ச் சுடர் நிலையம் உரிமையாளர் திரு அ.கி, கோபாலன் பதிப்புரை வழங்கினார்.
திரு ரா.ஶ்ரீ. தேசிகன் அவர்கள் அதற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கினார்.
முன்னுரையை எனது தந்தையார் அவர்கள் வழங்கினார்.
பதிப்புரையையும், முகவுரையையும் புத்தகத்தில் உள்ள படியே இங்கு வழங்குகிறோம்.
அவர் நினைவைப் போற்றுகிறோம்.
JAI HIND; VANDE MATARAM
—–subham—-
tags— லியோ டால்ஸ்டாய் , ‘அன்னா கரீனா’ , வெ.சந்தானம் மொழிபெயர்ப்பு ,
Through the realisation of one’s identity with Brahman, all the accumulated actions of a hundred crore of cycles come to nought, like the actions of dream-state on awakening –Viveka Chudamani Verse 447
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே
Tattva Jnanis Crush Karma
The Tattva Jnanis realize the Self;
The Gordian knot of Karma Past
They cut asunder;
Future Karmas they seize and crush,
By Grace of Siva,
Whom they hold,- Tirumanthiram of Tirumular
xxxx
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.– குறள் 620
Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.—Kural 620 of Tiru Valluvar
xxx
God will help you- says Tiru Valluvar
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.– குறள் 1023
‘I’ll make my race renowned,’ if man shall say,
With vest succinct the goddess leads the way.- Kural 1023
xxxx
Great Tamil Saint Manikkavasagar.
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்
—-Maanikkavaasagar in Tiruvaasakam
By reciting this Sivapuranam hymn ,let meclear all the previous Karma
Vinai in Tamil = Fate= Karma
xxxx
Every one of us is born with a bank account; saints can look at your bank statement through their third eye; they pity on some people and help the people to clear their bad debts; others are advised to clear their debts by following some methods; if they have huge debts, saints give them strength to run their lives with debts.
The debts I mentioned above is the past bad Karma (bad actions in their previous births; it is called PRAARABDA KARMA)
Here is a story to clear bad debts:
Great Tamil Hindu saints like Alvars and Nayanmars say that one’s fate can be changed to good by God. Manikkavasagar, Andal, Tirumular, Sambandar and Appar say it in very clear words that the previous Karma (action and reaction) will be powdered or will be burnt to ashes. Hindus generally believe that Karma/action done by one will have definite after effect. Good Karma (action) will bring good things and bad karma will bring bad things to the doer. But one’s intense devotion to God can change one’s fate.
There is a short story to illustrate this point.
It is similar to Pusalar Nayanar story who built a temple mentally.
There was a poor man in a village. All his efforts to earn his livelihood failed miserably. One day his close friend asked him to see an astrologer in a nearby village. When he went to see him, the astrologer looked at his horoscope and was shocked. But he did not show it to the customer. He asked the poor man to come tomorrow, ‘if it is possible’. The poor man told the astrologer that he would come next day. Astrologer was laughing inside and pitied that man.
When the villager was returning to his home town, heavy rains poured down. He ran to a dilapidated building and took shelter. To his surprise it was an ancient but disused temple. He felt very sorry to see the condition of the temple. Various thoughts ran into his mind. He thought, “If I win a lottery prize tomorrow, first I will build a huge hall and then I will build a tall tower on top of it. Then I will install the golden statues of the gods inside and celebrate the consecration. If there is money, I will do Anna Dhanam to all the poor people (Anna Dhanam= Food donation). When the rain stopped, he returned home and felt very happy. He slept thinking of the temple.
Next day he went back to the astrologer according to the plan. The astrologer was greatly surprised to see him. He asked what he did in the past 24 hours. he said that he went back home after taking shelter in the huge rain previous night. The astrologer was not satisfied with his answer; so he asked to relate minute by minute account. Then he told the astrologer he stayed in a temple. Even then astrologer wasn’t satisfied. He asked him whether anything happened like seeing a holy man or any miracle. The poor man said, N I was only thinking about renovating the temple.
At the point the astrologer got a grip over the matter and asked the poor man about everything he thought. Then the astrologer realised that he built a golden temple in his mind and that only saved him, because according to his horoscope he should have died already. That is why the astrologer told him the first place “to come tomorrow, if possible”.
Then the astrologer explained to him everything that should have happened to him astrologically, but God changed his fate. Even Yama would fail in his arithmetic if God interferes!
One can change his bad days into good days with good thoughts.
Purity in mind, word and deed (Three way purity= Mano, Vak, Kayam) is called Tri Karana suddhi. If one has it permanently one can do miracles.
279. Knowing for certain that the Prārabdha work will maintain this body, remain quiet and do away with thy superimposition carefully and with patience.
445. One who is constantly practising meditation is observed to have external perceptions. The Śrutis mention Prārabdha work in the case of such a man, and we can infer this from results actually seen.
Notes:
[External perceptions—such as satisfying the physical needs or teaching enquirers etc.
Srutis &c.—The reference is to Chhandogya. Upanishad VI. xiv. 2, “Thedelay in his (i. e. a Jnanin’s) case is only so long as his body lasts,, after which, he becomes one with Brahmam”
Prarabdha work—is the work done in. past lives which has engendered the present body (referred to in Sloka 451). The other two kinds of work are the ‘Sanchita’ or accumulated (mentioned in Sloka 447) and the ‘Agámi’ or forthcoming (mentioned in Sloka 449).
Results &c.—the continuance of the body after realisation, and its experiences during that period can only be explained by assuming that the Prárabdha continues to work. This is further explained in the next Sloka. ]
xxxx
सुखाद्यनुभवो यावत्तावत्प्रारब्धमिष्यते । फलोदयः क्रियापूर्वो निष्क्रियो न हि कुत्रचित् ॥ ४४६ ॥
sukhādyanubhavo yāvattāvatprārabdhamiṣyate | phalodayaḥ kriyāpūrvo niṣkriyo na hi kutracit || 446 ||
xxxx
446. Prārabdha work is acknowledged to persist so long as there is the perception of happiness and the like. Every result is preceded by an action, and nowhere is it seen to accrue independently of action.
447. Through the realisation of one’s identity with Brahman, all the accumulated actions of a hundred crore of cycles come to nought, like the actions of dream-state on awakening.
xxxx
यत्कृतं स्वप्नवेलायां पुण्यं वा पापमुल्बणम् । सुप्तोत्थितस्य किं तत्स्यात्स्वर्गाय नरकाय वा ॥ ४४८ ॥
448. Can the good actions or dreadful sins that a man fancies himself doing in the dream-state, lead him to heaven or hell after he has awakened from sleep?
320. Causing the external and internal universe, which are now perceived, to vanish, and meditating on the Reality, the Bliss Embodied, one should pass one’s time watchfully, if there be any residue of Prārabdha work left.
Notes:
[External and internal universes—the worlds of matter and thought. The former exists outside of man, whereas the latter he himself creates by the power of thought.
Causing……to vanish—through the eliminating
process, ‘Neti, Neti—Brahman is not this, not this, etc. ]
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் எல்லா கடவுளரின் பெயர்களும் வருவது ஒரு அதிசயமாகும் ; ஆகையால் இதனை ஒருமுறை படித்தால்- பாராயணம் செய்தால்-இந்து மதத்தின் முக்கியக் கடவுள் பெயர்கள் எல்லோரையும் நினைத்து வழிபட்ட பலன் கிடைக்கும் .
இதைப் பாராயணம் செய்யும் பலருக்கு சிவன், கந்தன், கணேசன், சாஸ்தா/ஐயப்பன், துர்கா, லெட்சுமி மற்றும் விஷ்ணுவின் அவதாரங்கள், வேதத்தில் சொல்லப்படும் கடவுளர்கள் பெயர்கள் வருவது தெரியாது. இதோ அந்தப் பட்டியல்
நாமத்தின் எண்கள் அடுத்தடுத்து இருக்கின்றன:
ஜ்யோதிர் கணேஸ்வரஹ – 327-கணபதியின் பெயர்
(இது தவிர கபில, சுமுக ஆகிய நாமங்களும் வருகின்றன; அவைகளும் பிள்ளையார் பெயர்களே)
கபில- 898- பிள்ளையார் பெயர்
ஸ்கந்தஹ – 327- முருகன் பெயர்
சிவஹ- 27- சிவன்
சிவஹ- 600- சிவன்
( இரண்டு இடங்களில் சிவ பெருமான் பெயர் வருவதோடு சம்பு , ஈஸ்வரன், மஹாதேவ , பரமேச்வர, ஈசானன் என்ற பெயர்களும் இருப்பதால் சிவன் பெயர்கள்தான் அதிகம் என்பது என் கணிப்பு )
ஆதித்யஹ- 39- சூரிய பகவான் Dhata- Word No.43- Brahma
விஸ்வ கர்ம – 50- சுவர்க்கத்தின் சிற்பி
த்வஷ்டா- 52- வேதத்தில் வரும் கடவுள்
ருத்ரன் -114- வேதத்தில் சிவபெருமானுக்கு கொடுக்கப்பட்ட பெயர்)
தமிழிலும் சிவன் என்ற சொல் சங்க காலத்துக்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னரே காணப்படுகிறது ; அதற்கு முன்னர் வேறு பெயர்களால் மட்டுமே சிவபெருமான் அழைக்கப்பட்டார் )
கவி – 132- சுக்ராச்சார்யார் , வேத கால கவிஞர் உஷனஸ்
யம – 162- மரணத்திற்கான வேத கால கடவுள்
சாஸ்தா- 206- தரம சாஸ்தா — ஐயப்பன்
அஜ ஹ- 204- பிரம்மா, விஷ்ணு, சிவன் – மூவருக்கும் உள்ள நாமம்
பவனஹ – 291- வேத கால காற்றுக் கடவுள்
பரமேஸ்வரஹ-377- சிவா பெருமானின் பெயர்
லட்சுமி – 943– லெட்சுமி தேவி Ravih – Word No.881- sun
சூர்யஹ- 883- சூரியன்
சவிதா- 884- சூரியன்
துர்கா- 779- துர்கா தேவி
பிரஹ்மனே – 881– பிரம்மா
பிரஹ்மா-663- பிரம்மா
விஷ்ணுஹு — 663- வேதத்தில் வரும் பெருமாள் பெயர்
குஹ்யஹ – 542- கந்தன், குகன்
வருணஹ – 553- வேத கால வருணன் – தொல்காப்பியத்திலும் உண்டு
வாருண – 554- வசிஷ்டர் அல்லது அகஸ்தியர்
பிரஜாபதி- 69- பிரம்மா அல்லது வேதத்தில் வரும் பிரஜாபதி.
இவை தவிர கடவுளைப் போற்றும் பொதுவான போற்றிகளும் உள்ளன அவைகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை
xxx
வ்ருஷ கபிஹி — நாம எண் 101-
இந்த வேத கால தெய்வத்துக்கு வெள்ளைக்காரர்கள் மனம் போன போக்கில் வியாக்கியானம் செய்துள்ளனர். சங்கரர் தரும் பொருள்:
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர்.
எல்லா விருப்பங்களையும் அளிப்பதால் தர்மம் – வ்ருஷ — எனப்படும்.
காத் = நீரிலிருந்து பூமியை, அபாத் = காப்பாற்றியதால் , வராகம் =கபி எனப்பட்டது இது மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் 352-24 உள்ளது என்கிறார் சங்கரர்.
இந்தப் பெயரையும் வேறு எங்கும் காண முடியாது; ஆகையால் வி.ச. மிகப்பழைய தோத்திரம் ஆகும்.
xxxx
சிபிவிஷ்டஹ — நாம எண் 273-
வேத கால தெய்வப்பெயர்- ஒளிக்கிரணங்களில் ஊடுருவி நிற்பவர்.
இந்தப் பெயரை தற்காலத்தில் மனிதர்களின் பெயர்களில் காண்பது அபூர்வமே; வி.ச. எவ்வளவு பழமையான துதி என்பதை அறிய இது உதவுகிறது . யாகப் பசுக்களில் யாக ரூபியாக உதவுபவர்
XXXX
மார்கோ –நாம எண் 365-
நானே வழி – இதை பைபிளில் ஏசு கூட எடுத்தாள்கிறார்.
XXXX
இந்திர – வேதங்களில் அதிக துதிகளில் பாடப்படுபவர் இந்த்ர ; ஆனால் இது ஒரே ஒருவரின் பெயர் அல்ல என்பதை காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் (1894-1994) தெளிவுபடுத்தியுள்ளார். இன்றுவரை இமயம் முதல் குமரி வரையிலும் இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் குழந்தைகளுக்கு இந்திர நாமம் சூட்டப்படுகிறது . வி.ச.விலேயே மகேந்திரன், உபேந்திரன், கபிந்திரன் முதலிய சொற்கள் உள்ளன
xxx
வி.ச.வில் வர்ணங்கள்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச.) உள்ள கலர் பற்றிய நாமங்கள் மாக்ஸ்முல்லர், கால்டுவெல் கும்பல்களின் முகத்திரையைக் கிழித்து எறிகிறது . ஆரியர்கள்= வெள்ளை , திராவிடர்கள்= கருப்பு என்று அவர்கள் எழுதியதை கருப்பு அழகி திரெளபதி, கறுப்புக் கடவுள் கிருஷ்ணன் , கருப்பு வேத வியாசர் முதலியோர் பொய் என்று காட்டிவிட்டனர். அது தவிர இறைவன் எல்லா வர்ணங்களிலும் வருவான் என்று காட்டும் மேலும் பல சொற்கள் வி.ச.வில் வருகின்றன இந்துக்கள் மீசை தாடி உள்ள கடவுளையும் (சிவன்), முழுக்க ஷேவ் செய்த கடவுள் களையும் (விஷ்ணு) மொட்டையடித்த கடவுள் களையும் (தண்டாயுதபாணி) வணக்க்குகின்றனர்.சிவா பெருமானையே ஆரிய ருத்ரன், திராவிட சிவன் என்று பிரித்து சூழ்சசி செய்தனர். சிவன் என்ற சொல்லே தமிழில் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆறாம் நூற்றா ண்டு முதலே சிவாய நமஹ உள்ளது. ஆனால் சங்கத் தமிழர்கள் ருத்ரனையும் சிவனையும் வேறு சொற்களால் சங்க காலத்தில் வணங்கினர் . வெள்ளைக்காரன் கட்டுக்கதை கட்டுபவன் என்பது தெளிவாகிறது. தொல்காப்பியத்திலேயே கலர்/ வர்ணம் உள்ள கடவுளரைக் காண்கிறோம்.
தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் துதி பாடியோர் வர்ணத்தினால் பேதம் கற்பிக்கவில்லை. எல்லோரும் ஒருவரே என்று முடிக்கின்றனர்.
ஹவிர் ஹரிஹி– நாம எண் 359–
சங்கரர் வியாக்கியானப்படி நீல மேக வர்ணன் (கிருஷ்ணன் / விஷ்ணு).
ரோஹிதஹ — நாம எண் 364–
நினைத்த மாத்திரத்தில் விரும்பும் வர்ணத்தை எடுப்பவன் – கொம்புள்ள சிவப்பு மீனாக பிரளய காலத்தில் வந்து உலகை காப்பாற்றியவன் ருத்ர என்பதிலிருந்தே ஆங்கில ரெட் /சிவப்பு வந்தது
கோபம் என்பதை சிவப்பு என்று வருணிப்பதை இந்து மத துதிகளில் காணலாம்
கிருஷ்ண — நாம எண் 57–
கிருஷ்ணன் நிறம் காக்கா கருப்பு அதனால் அவனை கருப்பன் (கிருஷ்ண) என்றழைத்தனர்
சுவர்ண வர்ண – நாம எண் 737 மற்றும் 800-
தங்க நிறத்தவன் .
கடவுளுக்கு ஒரே நிறம் என்பதல்ல; அவன் நிறமே இல்லாதா படிகம் போன்றவன்.
கபிலஹ — நாம எண் – 898–
கடலுக்கு அடியில் பொங்கும் தீயின் நிறத்தவன்; நீர்த்த சிவப்பு நிறம் –என்பது சங்கர வியாக்கியானம்– சாம்பல் வர்ணம் கலந்த கருப்பன் ; பிள்ளையாருக்கு/ யானைக்கு இப்படி ஒரு பெயர்.
புறநானூற்றில் — சங்க காலத்தில் அதிகம் புகழந்த புலவரின் பெயர் கபிலன்; அந்தப் பார்ப்பான் சங்க இலக்கியத்தில் அதிக செய்யுட்களைப் பாடியதால் மட்டும் அதிக புலவர்கள பாராட்டவில்லை. புலன் அழுக்கற்ற அந்தணாளன் – என்று சொல்லி மாசு மருவற்ற அந்தணன் என்கின்றனர். உலகத்தில் முதல் முதலில் ஜாதி வெறியை உடைத்து பாரியின் மகளான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் தன் மகளாக ஏற்று கல்யாணம் கட்டிக்கொடுத்த பிராஹ்மணன். வங்காளத்தில் கபிலர் விழா மிகப்பெரிய விழா. அது சகரர் புராணக்கதையை ஒட்டிய விழா. புராண, இதிஹாஸ காலத்திலிருந்து நிறைய பேர் இந்தப் புனித நாமத்தை சூட்டி இருந்தனர்.
ஆதித்யஹ — நாம எண் 39–
சூரிய ஒளி வட்டத்தில் தங்க நிறத்தில் ஜொலிப்பவன்
திருமந்திரத்தில் பல வர்ணங்களில் இறைவனையும், ஐந்து பூதங்களையும் வருணிக்கின்றனர். அது பற்றிய கட்டுரை தனியாக உள்ளது . அதையும் படிக்கவும் .—subham—
Tags- கடவுளரின், பெயர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் , சிவன், வர்ணங்கள் , பகுதி 29
ஆலம்பூர் அருகிலுள்ளது. கர்நூலிலிருந்து சுமார் 25.கிமீ
இது அமைந்துள்ள மாவட்டம்- ஜோகுலாம்பா மாவட்டம்,
(சங்கமேஸ்வர் என்ற பெயரில் மூன்று கோவில்களுக்கு மேல் உள்ளன. இவை ஆந்திரத்திலும் தெலுங்கானா மாநிலத்திலும் உள்ளன ஆந்திரத்திற்கு வெளியே கர்நாடகத்திலும் உண்டு. ஆகையால் இதை கூடல சங்கமேஸ்வர் என்றும் அழைப்பார்கள்) .
என்ன சிறப்பு ?
1500 ஆண்டு வரலாறு உடைய இடம் இது.
இது ஒரு சிவன் கோவில். சங்கமம் என்றால் கூடும் இடம்; நதிகள் சந்தித்து கலக்கும் இடம்; அருகில் குடவெளி கிராமத்தில் துங்க பத்திரா நதியும் கிருஷ்ணா நதியும் இணைகின்றன ; (தமிழ்நாட்டிலும் இவ்வாறு நதிகள் கூடும் இடத்தை நாம் முக்கூடல் என்று அழைக்கிறோம்).
இறைவன் பெயர்- சங்கமேஸ்வரர்’
அதிசய சிற்பங்கள்
கோவிலின் வெளிப்புறச் சுவரின் முன் பக்கம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளன. மன்மதன் , யமன், ஆகியோரை சிவபெருமான் கொல்வதை அழகாகச் செதுக்கியுள்ளனர் (பாதாமி குகைகளில் காணப்படுவது போன்றது) .கோவிலின் நான்கு மூலைகளிலும் முதலை சிற்பங்கள் உள்ளன. ஒரு மூலையில் முதலை வாய்க்குள் ஒரு மனித உருவம் காணப்படுகிறது. ( ஒருவேளை சுந்தரமூர்த்தி நாயனார் , முதலை விழுங்கிய பிராமணப் பையனைக் காப்பாற்றிய கதையாக இருக்கலாம். அவர் காலப் பயணம் செய்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த சிறுவனை மீட்டு வந்து ஐன்ஸ்டைன் கொள்கை தவறு என்று நிரூபித்தார்; இதே போல நம்மாழ்வாரும் செய்தது பாகவத புராணத்தில் உள்ளது.)
நுழைவாயிலுக்கு நேர் எதிரே நந்தி மண்டபமும் த்வஜ ஸ்தம்பமும் உள்ளன நந்தி மண்டபத்திற்கு அருகில் கல்வெட்டுகளுடன் கூடிய தூண் உள்ளது.
முக்கிய நுழைவாயிலின் வலது பக்கத்தில் வெங்கடேஸ்வரரின் சிறிய சன்னதி உள்ளது. . இறைவன் தனது துணைவிகளான ஸ்ரீதேவி & பூதேவி மற்றும் அவரது பாதங்களுக்குக் கீழே கருடன் ஆகியோரால் சூழப்பட்டுள்ளார். வினோத ஹனுமான் உருவம் உள்ளது. அனுமனின் வால் முனையில் திரிசூலம் உள்ளது.
தசாவதாரத்தின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீசைலம் நீர்மின்சாரத் திட்டத்தின் காரணமாக கோவில் இடமாற்றம் செய்யப்பட்டது. இது தொல்பொருள் துறையின் கீழ் இருக்கிறது. அதிலிருந்தே இதன் வரலாற்றுச் சிறப்பினை அறியலாம்.
இந்த கோவில் முதலாம் புலிகேசியால் (540 முதல் 566 CE வரை) கட்டப்பட்டது. அருகிலுள்ள கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகள் சங்கமேஸ்வரர் கோவிலைக் குறிக்கும் லிங்கத்துடன் கூடிய மகாதேவயாதனம் அல்லது பிரதான கோவிலைக் குறிப்பிடுகின்றன. வட இந்திய பாணியில் கட்டப்பட்ட கோவில் இது .
சாளுக்கியர் கோவில்களில் காணப்படும் பெரிய நாகராஜாவின் சிற்பம் கூரையில் உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் விஷ்ணு, குமாரசாமி மற்றும் தம்பதிகளின் நல்ல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. சிற்பங்கள் மற்றும் சிலைகள் சிதிலமடைந்துள்ளன.
ஆலம்பூர் துவங்கி பாபநாசி வரை ஓரே கோவில்கள் மயம் . சங்கமேஸ்வர் இடத்திலேயே 5 கோவில்கள் இருந்தன. துங்க பத்திரா நதிக்கரையில் பஞ்ச லிங்கம் என்னுமிடத்திலுருந்து ஆலம் பூர் வரை 22 கோவில்களும் 64 தீர்த்தக்கட்டங்களும் — புனித நதி படித்துறைகள் — இருக்கின்றன
ஆலம்பூரில் ஆதிகாலத்தில் பிரம்மபுரி யூனிவர்சிட்டி இருந்தது. அங்குள்ள கல்வெட்டுகள் தெலுங்கு மொழியின் பிரபல அறிஞர்களின் பெயர்களை நமக்குத் தெரிவிக்கின்றன. 12-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு கவிஞர் பல்குற்கி சோமநாத இந்த இடத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஆலம்பூரில் ஒரு மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பிராமி எழுத்து கல்வெட்டு, தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள் சிற்பங்கள் முதலியன கால வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் அறிஞர்களும் பக்தர்களும் வரும் இடமாக ஆலம்பூர் திகழ்கிறது. வரலாற்றில் ஆர்வம் உடையோர் இந்த இடங்களையெல்லாம் பார்க்க கர்னூலில் தங்கி சில நாட்களை செலவிடுவது அவசியம்.
—subham—
சங்கமேஸ்வரர் கோவில் (தெலுங்கானா) ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 24
பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் என்ற புலவர் அருமையான ஒரு கருத்தை நம் முன் வைக்கிறார்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது அவரது வாக்கு (புறநானூறு 18)
உணவை அளித்தவர் உயிரை அளித்தவரே என்று அவர் போற்றுவதை கருத்தில் கொள்ளும் போது 24.5 கோடி பேர்களுக்கு உணவை அளித்த ஒரு மாமனிதரை என்னவென்று சொல்லிப் போற்றுவது? தன் வாழ்வு முழுவதையும் மக்களின் பசிப்பிணி தீர்க்கும் நல்ல பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் விஞ்ஞானி நார்மன் போர்லாக் ஆவார்.
மணிமேகலை கூறும் ஆருயிர் மருந்து!
பழம் பெரும் தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலையிடம் அள்ள அள்ள அன்னம் வரும் அமுதசுரபியைக் கொடுப்பதையும் அதை வைத்து புகாரிலும் கச்சி மாநகரிலும் மணிமேகலை அனைவரின் பசிப்பிணியைப் போக்குவதையும் பார்க்கிறோம்.
“ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்”
என்ற காப்பிய வரிகளில் உணவே உயிர் காக்கும் மருந்து என்ற பொருளில் ஆருயிர் மருந்து என்று எடுத்துரைக்கப்படுகிறது. தொலைவு இல்லாமல்’ அதாவது குறையாமல் வழங்கும் அமுதசுரபியின் மகிமையையும் அதனால் தான் அறிகிறோம்.
பழைய காலக் கதை என்று விட்டு விடாமல் இதில் இருக்கும் அறநெறி தமிழர் தம் நெறி என்பதை நினைத்து உள்ளம் பூரிக்கும் வேளையில் இப்படி வாழ்வு முழுவதையும் பசிப்பிணி தீர்க்கும் நலப்பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் நார்மன் போர்லாக்
பிறப்பும் இளமையும்
நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் ஐயோவாவில் சௌடே என்ற இடத்தில் ஹென்றி ஆலிவர் என்பவருக்கும் க்ளாரா போர்லாக்கிற்கும் மகனாகப் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இவரே முத்தவர். மற்ற மூவரும் பெண்கள்.
இவரது முன்னோர்கள் நார்வே நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்கள்.
இவர் தனது பாட்டனாரின் 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பண்ணையில் வளர்ந்தார். ‘ஒற்றை ஆசிரியர் ஒரே ஒரு அறை’ என்ற ரீதியில் இருந்த பள்ளியில் அவர் படிப்பு ஆரம்பித்தது.
அவரது தாத்தா, “இப்போது நீ படிக்கப் போ. உன் மூளையை இந்த வயதில் நன்கு நீ நிரப்பி விட்டால் உன் வயிறைப் பின்னால் நன்கு நிரப்ப முடியும்” என்றார்.
தாத்தா சொல்லைத் தட்டாத பேரன் தன் மூளையை நன்கு நிரப்பி விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார். பல கோடி பேர்களின் பசியைப் போக்கி அவர்களின் வயிறை நிரப்ப வழியையும் கூறினார்.
மல்யுத்த வீரர்
போர்லாக் பள்ளியில் மல்யுத்தத்தை ஆர்வத்துடன் கற்றார். “அது என்னை வலுவுள்ளவனாக ஆக்கியது” என்று அவர் கூறினார்.
வனவளத்தில் 1937-ல் ஒரு பட்டத்தைப் பெற்ற போர்லாக், , மின்னஸோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியலிலும் தாவர இயலிலும் பிஹெச்.டி பட்டத்தைப் பெற்றார். விவசாயத்தில் விளைச்சலை மேம்படுத்துவதில் அவர் மனம் ஈடுபட்டது.
மெக்ஸிகோ அழைப்பு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து இவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. தங்கள் நாட்டில் கோதுமை விளைச்சல் குறைவாக இருப்பதோடு விளையும் கோதுமையும் தரமானதாக இல்லை என்று மெக்ஸிகோ தெரிவித்தது. உடனே தன் கர்ப்பிணியான மனைவியையும் 14 மாத பெண் குழந்தையையும் விட்டு விட்டு மெக்ஸிகோ சென்று இவர் அதை ஆராய ஆரம்பித்தார்.
அங்குள்ள கோதுமை, நோய்களை எதிர்க்கும் தடுப்பு சக்தி உள்ள ஊட்ட சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தார்.
பத்து ஆண்டுகள் கடினமாக உழைத்து விளைச்சல் நிலம் தோறும் சோதனைகளை மேற்கொண்டார். அதன் பலனாக மிக அதிக விளைச்சலைத் தரும் நோய் பீடிக்காத கோதுமைப் பயிரை உற்பத்தி செய்து விளைச்சலை அமோகமாக ஆக்கினார். தனது மெக்ஸிகோ வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் கடினமான வாழ்க்கையாக இருந்தது என்பதைப் பின்னால் குறிப்பிட்ட அவர், “அங்கு பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளோ சாதனங்களோ ஒன்றும் இல்லை. உள்ளூர் விவசாயிகளோ தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்” என்றார். கடுமையான எதிர்ப்புகளைச் சமாளித்து ஆயிரக்கணக்கான சோதனைகளைச் செய்து இறுதியில் வெற்றியைக் கண்டார் அவர்.
நிபுணர்களின் அபாய அறிவிப்பு பொய்யானது
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆசியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் மிகப் பெரிய அளவிலிருந்தது. ஜனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயிகளால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால் லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். உடனே போர்லாக் அழைக்கப்பட்டார்.
பஞ்சம் வந்து பசி பட்டினியால் நிச்சயம் ஆயிரக்கணக்கானோர் அவதியுற நேரிடும் என்ற நிபுணர்களின் வாக்கை தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர் பொய்யாக்கினார். 1968ஆம் ஆண்டு அமெரிக்க முகமையான இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் டைரக்டர் வில்லியம் காட் என்பவர் போர்லாக்கின் பணியை “பசுமைப் புரட்சி” என்ற வார்த்தைகளால் புகழ்ந்தார்.
ஊட்டச்சத்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் கடும் நோய்களால் பீடிக்கப்பட்டு எட்டு மடங்கு அதிகமாக இறக்கும் அபாயம் உள்ளவையாக ஆகின்றன. குழந்தைகளின் மென்மையான உடல் கடும் நோய்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்காது.
போர்லாக் புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார். போர்லாக் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை உலகின் மொத்த ஊட்டச்சத்து கலோரிகளில் 23 சதவிகிதம் என்ற அளவு இருந்தது.
1980இல் ஆரம்பித்த பெரும் பசுமைப் புரட்சி உலகில் எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக்கணக்கான குழந்தைகளை நோய் அபாயத்திலிருந்து தடுத்தது. 2000ஆம் ஆண்டில் இதன் பலன் வெளிப்படையாக அனைத்து நாடுகளிலும் தெரிய வந்தது. அமி பியர்ஸ் என்ற புள்ளியியல் நிபுணர் சுமார் இருபத்திநாலரை கோடிப் பேர் இதனால் வளம் பெற்ற ஊட்டச் சத்தைப் பெற்றதாகக் கூறுகிறார்.
ஏராளமான தனியார் நடத்திய ஆய்வுகள் போர்லாக்கினால் உயிர் காப்பாற்றப்பட்டோர் நூறு கோடிக்கும் அதிகமாகவே இருப்பர் என்று தெரிவிக்கின்றன!
எதிர்ப்புகள்
இவர் உரங்களை உபயோகிப்பது பற்றி சில விஞ்ஞானிகள் கடுமையாக விமரிசித்தபோது அவர்களை நோக்கி, “அறுபது ஆண்டுகளாக மண்ணில் காலை ஊன்றி பணி செய்து வருகிறேன். வீட்டில் அமர்ந்து இதை விமரிசிக்கிறீர்களே” என்று பதிலடி கொடுத்தார்.
கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், “நான் பூட்ஸ் காலுடனேயே (அதாவது வயல்வெளியில் வேலை செய்தவாறே_ இறக்க விரும்புகிறேன் என்று தனது 90வது வயதிலும் கூறிக் கொண்டிருந்தார்.
Ocean of Nectar; Sea of Bliss; Sankara ,Manikkavasagar , Tirumular ; Notes on VC – Part 40 (Post.13,541)
If one says that the best Masala Dosa is available in a particular restaurant, we trust him and go there
If NASA says man has landed on Moon, we believe it.
If a Medical magazine says particular Vitamin or chemical is good, we take it and the same magazine says after ten years that it causes cancer. And we believe it again.
If our saints say that there is one ocean full of nectar (of bliss), we turn a blind eye. We hesitate to understand it or pretend we don’t listen to him.
All Tamil and Sanskrit hymns say it from the top of the mountain.
Sri Ramakrishna Paramahamsa says that there are two types of saints: One group sees the amazing, incredible, gigantic, vast Ocean of Bliss and immediately jumps into it. Like a salt doll that went to the sea to measure the depth of it dissolved in it a few metres down, saints merge with God/Brahman.
Another group ,wonder struck, amazed, runs back and come back to the mundane world and shout
Oh My God; Please come, Please come; I want to show you some amazing incredible source of Joy, Happiness, Bliss.
கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்
தொண்டீர் எல்லோரும் வாரீர்
xxxx
சேரவாறும் ஜகத்தீரே
xxxx
எல்லாரும் அமர நிலையை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும், வாழ்க – பாரதியார்
Tamil saint Ramalinga Swamikal even regrets saying
I HAVE OPENED THE SHOP BUT FIND NO BUYERS(கடை விரித்தேன் கொள்வாரில்லையே!)
VC 580. For those who are afflicted, in the way of the world, by the burning pain due to the (scorching) sunshine of threefold misery, and who through delusion wander about in a desert in search of water – for them here is the triumphant message of Shankara pointing out, within easy reach, the soothing ocean of nectar, Brahman, the One without a second – to lead them on to Liberation.
484. In the ocean of Brahman filled with the nectar of Absolute Bliss, what is to be shunned and what accepted, what is other (than oneself) and what different?
A salt doll went to measure the depth of the ocean. It wanted to tell others how deep the water was. But this it could never do, for no sooner did it get into the water than it melted. Now, who was there to report the ocean’s depth? What Brahman is cannot be described in Samadhi one attains the knowledge of Brahman – one realises Brahman. In that state reasoning stops altogether, and man becomes mute. He has no power to describe the nature of Brahman.- Sri Ramakrishna Paramahamsa
முஸ்லீகள் அழித்த ஆலம்பூர் நவ (9)பிரம்மா கோவில்கள்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23
ஆலம்பூர் எங்கே இருக்கிறது ?
தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா நதியும், துங்க பத்திரை ஆறும் கூடும் இடத்தில் அமைந்துள்ளது; மாவட்டத்தின் பெயர் ஜோகுலாம்பா. ஹாலம்புரம், ஹேம லாம்புரம் என்பது ஊரின் பழைய பெயர். கர்நூல் நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. அங்கிருந்து பஸ் அல்லது ஆட்டோ மூலம் செல்ல வசதிகள் உண்டு.
மேலைச் சாளுக்கிய மன்னனான விஜயாதித்யன் , கோவிலுக்குள் நதி நுழையாமல் தடுக்க 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பெரிய மதில் சுவர்களை எழுப்பினான்; இந்தக் கோவில்கள், சாளுக்கிய, ஹொய்சாள , கங்க வம்ச சிற்பிகளின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன
கிராம தேவதையின் பெயர் எல்லம்மா. அதுவே மருவி ஆலம்பூர் ஆனதாகவும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் குண்டுர் மாவட்ட குருஸாலா கல்வெட்டு ஹாலம்புர சுவாமி கோவில் என்றே குறிப்பிடுகிறது.
சிறப்புகள் என்ன ?
கோவில்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை; வட இந்திய பாணி கோபுரங்கள் ; சாதவாஹனர் காலம் முதல் கோல்குண்டா சுல்தான்கள் காலம் வரை வரலாறு உடையவை. முஸ்லீம் படையெடுப்பினால் அழிந்த கோவில்களை 1980-களில் தொல்பொருட் துறையினர் சீரமைத்துள்ளனர்.
சாளுக்கிய மன்னர்கள் கட்டிய கோவில்களை ராஷ்டிரகூட மன்னர்கள் விரிவாக்கினர். இங்கு முக்கியமான தெலுங்கு, கன்னட கல்வெட்டுகள் இருப்பதால் நமக்குத் தொடர்ச்சியான வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன.
அதிசயங்கள் என்ன ?
நவ பிரம்மா என்று பெயர் இருந்தாலும் இவை சிவன் கோவில்கள். இங்குள்ள ஜோகுலாம்பா தேவியின் நீண்ட கூந்தலில் பல்லி , தேள் உருவங்கள் இருக்கின்றன.
இது ஒரு சக்தித் தலமும் ஆகும்.
இரண்டாம் புலிகேசி மன்னனுடன் தொடர்புடைய கோவில்.
யோகாம்பா என்பதே ஜோகாம்பா என்று திரிந்தது ; யோகினி என்பதும் யோக என்ற சொல்லில் பிறந்ததே ; அது ஜோகுலா ஆனது
ஒரு சடலத்தின் மீது நாக்கு வெளியே தெரிய அன்னை அமர்ந்து இருக்கிறாள். இது அன்னையின் உக்கிர ரூபம்.அவள், கிராம மக்களின் வீடுகளைக் காப்பதால் கிருஹ சண்டி என்றும் பெயர். அன்னையின் முடியில் பலல்லி , தேள் மனித மண்டை ஓடு, வெளவால் ஆகியன சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை வீடுகளில் தீமையைக் கொண்டுவருவதால் தேவி அவைகளைக் கட்டுக்குள் வைக்கிறாள் .
ஆந்திர பூமியில் உள்ள 18 சக்தி தலங்களில் ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவியும் ஒன்று
தக்ஷ யக்ஞம் கதை எல்லா இந்துக்களுக்கும் தெரியும். கணவனை அவமானப் படுத்தியதால் தந்தை தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிர் நீத்தாள் பத்தினி பார்வதி; கோபம் கொண்ட சிவபெருமான், மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடி தட்சனுக்கு முடிவு கட்டினார். அப்போது தேவியின் உடற்பகுதிகள் விழுந்த இ டம் எல்லாம் இமயம் முதல் குமரி வரை சக்தி வழிபபாட்டுத் தலங்கள் ஆயின.. தேவியின் மேல் பல் விழுந்த இடம் ஜோகுலாம்பா தேவி கோவில் ஆயிற்று .
1390 ஆம் ஆண்டில் முஸ்லீம் படைகள் தேவியின் கோவிலை உடைத்து சின்னாபின்னமாக செய்தன; அதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டிய கோவில்தான் இப்போதுள்ளது
ஸ்ரீ சைலம் சிவன் கோவிலுக்குச் செல்லுவோர் அன்னையையும் தரிசித்து அருள் பெறுகின்றனர்
12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிருஷ்ணா நதி புஷ்கரம் லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுவருகிறது. அருகிலேயே துங்கபத்திரையும் பவானியும் இருப்பது இதன் சிறப்பு
14ஆம் நூற்றாண்டில் நாடு முழுதுமுள்ள கோவில்களை டில்லி சுல்தானகளின் படைகள் சிதைத்து கோவில்களிலுள்ள தங்க வைர இரத்தின நகைகளை எடுத்துக்கொண்டு, சிலைகளை உடைத்து அழி த்துவிட்டுச் சென்றதை மாநிலம் தோறும் உள்ள எல்லாக் கோவில்களின் தல வரலாற்றிலும் படிக்கலாம். முஸ்லீம்கள் கைவைக்காத கோவில்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..
பிரதான நுழை வாயிலின் இரு புறமும் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரி சந்நிதிகள் உள்ளன. இவை நமக்கு தமிழ் நாட்டின் காஞ்சீபுரத்தை நினைவுபடுத்தும்.
சூரிய நாராயணர் , நரசிம்மர் ஆகிய இருவருக்கும் துணைக்கோவில்கள் உள்ளன.
பால பிரம்மா கோவிலில் தான் தினசரி பூஜைகள் நடக்கின்றன.
ஸ்வர்க்கப் பிரம்மா கோவில், கலை சிறப்புகள் மிக்கது; சாளுக்கிய வம்ச அரசர் கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம்
பத்ம பிரம்மா கோவிலின் கர்ப்பக் கிரகம்தான் அளவில் பெரியது.. அங்குள்ள லிங்கம் பளபளக்கும். பக்தர்களின் முகத்தையே அதில் காணலாம்
தாரக பிரம்மா கோவிலில் லிங்கம் இல்லை.
அர்க, வீர பிரம்மா கோவில்கள் சிதிலம் அடைந்துள்ளன.
குமார பிரம்மா கோவில்தான் மிகவும் பழைய கட்டிடம்.
கோவில்களைச் சுற்றியுள்ள கோட்டையும் மதகும் பாழடைந்ததுவிட்டன.
முக்கிய சந்நிதியான பால பிரம்மா கோவிலில் தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கிறது; கூரையில் சிவ லீலைகளும் சுற்றியும் சப்த மாத்ரிகா சிலைகளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
பிரகாரங்கள் மிகவும் பெரியவை .நட்சத்திர வடிவில் சாளரங்கள் இருப்பது ஒரு புதுமை. நல்ல வெளிச்சமும் காற்றும் வருவதற்கு இவை உதவுகின்றன. மஹாபாரத ராமாயணக் காட்சிகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. கார்த்திகேயனின் – முருகனின் — உருவம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
நவ பிரம்மா என்ற பெயர் ஏன்?
கந்த புராணத்தில் கோவில் பற்றிய குறிப்பு உனது. பிரம்மா இங்கு தவம் செய்ததாகவும் அவருக்கு முன்னர் சிவபெருமான் தோன்றியதால் ஒன்பது (நவ) கோவில்களை அமைத்ததாகவும் கூறுகிறது.
நாம் செய்த அட்டூழியம்
ஸ்ரீ சைலம் நீர்மின்சார அணை கட்டியபோது கோவிலின் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் இருந்ததால் கோவில்களை வேறு இடங்களுக்கு அகற்றி மீண்டும் கட்டினார்கள் . இப்படிச் செய்கையில் நிறைய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.
மேலும் 23 கோவில்கள் !
இரண்டே மைல் தொலைவிலுள்ள பாபநாசி கிராமத்தில் மேலும் 23 கோவில்கள் இருக்கின்றன.
அருகிலுள்ள பாபநாசியின் 23 கோவில்களையும் கிருஷ்ணா- பவானி சங்கமிக்கும்- கூடும் – இடத்திலிருக்கும் சங்கமேஸ்வரர் கோவில்களையும் தொடர்ந்து காண்போம்
–தொடரும்
—SUBHAM—
TAGS- முஸ்லீகள் அழித்த ,ஆலம்பூர், 9 நவபிரம்மா கோவில்கள் , ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள் , Part 23
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 2
ச. நாகராஜன்
ஐ.நா. இசை நிகழ்ச்சி
1966-; அக்டோபர் மாதம் 23-ம் நாளன்று எம்.எஸ்.ஸின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிகழ்ந்தது. உற்சாக பரவசத்துடன் அதைக் கேட்ட அனைவரும் இந்தியாவின் புகழை உயர ஏற்றி விட்டார் அவர் என்றனர். பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை “என்றும் நினவில் இருக்கும் நிகழ்ச்சி” என்று வானளாவப் புகழ்ந்து எழுதியது. காஞ்சிப் பெரியவர் இயற்றி அருளிய ‘மைத்ரீம் பஜத’ என்ற கீதம் உலகமெங்கும் அன்பையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவோம் என்ற செய்தியை உலகிற்கு நல்கியது. அதை எம்.எஸ். பொருத்தமான இந்த இடத்தில் தன் அற்புத இசை மூலம் நல்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.
திருப்பதி ஏழுமலையானின் அருள் விளையாடல்
காலத்தின் கோலமாக விதி வசத்தில் எம்.எஸ்.ஸுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியேறி எப்போதும் வாழும் எளிமை வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்கு நிதி உதவி அளிக்க ரசிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பயமாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கச்சேரி மூலம் திரட்டி அளித்த அவர் ஒரு போதும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.
திருப்பதி பாலாஜியின் அருள் விளையாடல் ஆரம்பித்தது. காஞ்சி மஹாபெரியவரும் சத்யசாயிபாபாவும் திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களை தக்க காரியத்தை உடனே மேற்கொள்ள வேண்டுமாறும் இதை மிகுந்த நளினமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் முன்னால் நின்று அருள் புரியுமாறு வேண்டினார். பின்னர் கோவிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு ஆச்சரியமான ஒரு அனுபவம் ஏற்பட்டது. கோவிலுக்கு வெளியே பல பக்தர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்களைக் கேட்ட அவருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. திருப்பிப் பார்த்தால் அந்த பக்த குழாத்தைக் காணவே காணோம். இது என்ன அதிசயம் என்று நினைத்த அவர் நேரடியாக சென்னை வந்து எம்.எஸ்,ஸை சந்தித்து திருப்பதி எழுமலையானின் படத்தைக் கொடுத்தார். என்ன விஷயம் என்று கேட்டார் எம்.எஸ். ஏராளாமான கீதங்களை அவர் இசைத்து விட்டாலும் அன்னமாசார்யா பாடல்கள் இதுவரை இசைத்தட்டு வடிவில் அவர் மூலம் வராதது ஒரு பெரும் குறையே என்று பிரசாத் மெதுவாகத் தெரிவித்தார். ஆனால் அதில் எனக்கு பயிற்சி இல்லையே என்றார் எம்.எஸ். “எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் பிரசாத். எம்.எஸ். சம்மதித்த மறுகணமே எல்லையிலா மகிழ்ச்சி பொங்க வெளியிலே கிளம்பிய பிரசாத், ஒரு கணம் நின்று எம்.எஸ்.ஸைப் பார்த்தார். “ஒன்றுமில்லை, இந்த இசைத்தட்டுகளை குறிப்பிட்ட விலை வைத்துத் தான் தேவஸ்தானம் பக்தர்களுக்கு விநியோகிக்கப் போகிறது. அதில் வரும் தொகையில் ராயல்டி தொகை உங்களுக்கு வரும்” என்று சொல்லியவாறே விடைபெற்று விட்டார்.
அன்னமாசார்யார் கீர்த்தனை அமோகமாக வெளிவந்தது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அதை வெளியீட்டார். ஆயிரக் கணக்கில் விற்ற இசைத்தட்டுகள் நல்ல வருமானத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. எம்.எஸ். மூலமாக இன்னொரு அரிய படைப்பு என்று அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.
திருப்பதி பாலாஜியுடன் அருளாசியுடன் ராயல்டி தொகை அவரை அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா?
உலகின் ஆகப் பெரும் அறிஞர்களும், நிபுணர்களும், அரசின் மிக மிக உயரிய பதவியில் இருப்பவர்களும் அவரைச் சந்திப்பது வழக்கமானது.
உஸ்தாத் படே குலாம் அலிகான் அவரது இசையைக்கேட்டு மெய்மறந்தார். அவர் கூறினார் “நீங்கள் சுப்புலட்சுமி மட்டுமல்ல; சுஸ்வர லட்சுமியும் கூட!”
லதா மங்கேஷ்கர் அவரை தபஸ்வினி என்று அழைத்தார்.
விருதுகள்
வாழ்நாளில் ஏராளமான விருதுகளை அவர் பெற்றுக் கொண்டே இருந்தார். 1954-ல் பத்ம பூஷண் விருதையும், 1975-ல் பத்ம விபூஷண் விருதையும் பெற்ற அவர் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னாவை 1998-ல் பெற்றார். நாடே மகிழ்ந்தது.
குறிப்பிடத்தகுந்த ஒரு விருதான மக்சேசே விருதை அவர் 1974-ல் பெற்றார்.
மறைவு
விடுதலைப் போராட்ட வீரரும், பாடகரும், சிறந்த பத்திரிகையாளருமான எம்.எஸ்ஸின் கணவர் திரு தி. சதாசிவம் 1997-ல் மறைந்தார். (தோற்றம் 4-9-1902 மறைவு 22-11-1997) அதன் பிறகு எம்.எஸ். பாடுவதையே நிறுத்தி விட்டார்.
எம்.எஸ். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குழுமினர். குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெற்றது.
எம்.எஸ். வாழ்கிறார்
அன்றாடம் கோவில்களிலும் ஆயிரக்கணக்கான இல்லங்களிலும் அவர் குரல் சுப்ரபாதமாகவும், ஆதி சங்கரரின் பஜகோவிந்தமாகவும், அனுமன் துதியாகவும் இன்னும் ஏராளமான பக்தி கீர்த்தனைகளாகவும் ஒலித்துக் கொண்டே இருப்பதால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
எம்.எஸ். அர்ப்பணிப்பு மொழிகள்
தன் வாழ்நாள் முழுவதும் இசையையே சுவாசித்து வந்த அவர் கூறினார் இப்படி:
“எனக்குள்ள பெரும் பயம் கச்சேரிகளை நிகழ்த்துவது தான். எனது ரசிகர்கள் அனைவருக்கும் நானே பொறுப்பு. அவர்களைப் பார்த்து நான் பயப்படவும் செய்கிறேன்.(இப்படி ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் தன் ரசிகர்களை மதித்து வந்தார் அவர்)
“இந்திய இசை என்பது தெய்வீகத்துடன் தொடர்பைக் கொள்வதையே முடிவாகக் கொண்டது. இதில் நான் ஏதேனும் சிறிதளவு செய்திருக்கிறேன் என்றால் அது இறைவன் இந்த சிறியவளை தனது கருவியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த கருணை தான் காரணம்.”