Wonderful Cartoons from Deccan Chronicle until 3092024

Posted by London Swaminathan on 30-9-2024

Here are more informative and educative cartoons from Deccan Chronicle newspaper until 30-9-2024

—Subham—

Tags- Wonderful Cartoons,  Deccan Chronicle, 3092024

Sanskrit, Tamil Proverbs around the World!-1 (Post No.13,728)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,728

Date uploaded in London – 30  September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Great Men Think alike even in Proverbs It is very interesting to see that proverbs in Mahabharata and Panchatantra are found in different parts of the world; Tamil proverbs are also echoed in South East Asia, Japan and China. Like we have many stories behind proverbs Chinese and Japanese have stories. Chinese is older than to Tamil but younger than Sanskrit. Confucious and Lao Tse have contributed to Chinese culture.

A book titled European, Far Eastern and some Asian proverbs  compared about 200 proverbs. Though the author compared only ten Sanskrit, Tamil Proverbs I see more similarities. The reason is they did not look at Hindu proverbs in India. Their purpose was to compare South East Asian countries’ proverbs with Far Eastern countries proverbs.

Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.

Here are some interesting things I found in the book.

1.Constantdropping wears the stone

It is found in Far East and South East Asia.

Story

Zhang Guaia, the Magistrate of Chongyang , making a round of inspection  saw a junior keeper leaving the coffers building in a hurry  with a copper coin hidden under his turban. Taken to the court room, the keeper cried out:

What does a copper coin amount to?

Zhang Guaia picked up a red ink writing brush and wrote:

 A copper a day makes a thousand coppers in a thousand days.

A hemp rope can saw up wood and drips of water can penetrate a rock.

Then he killed the keeper.

This is in Tamil proverb book as

1678. எறும்பு ஊரக் கல் தேயும்.

By the continual creeping of ants a stone will wear away.

There is another saying

ஆனை கட்டின தறியும் தேய்ந்து போகும்

Even the pole where the elephant is tied with strong or rope makes it’s mark.

****

Strike the iron while it is hot

It is similar to Make hay while the sun shines.

Even Adi Shankara used this in his Viveka Chudamani .

In Tamil காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

उपाधिसंबन्धवशात्परात्मा
ह्युपाधिधर्माननुभाति तद्गुणः ।
अयोविकारानविकारिवन्हिवत्
सदैकरूपोऽपि परः स्वभावात् ॥ १९१ ॥

upādhisaṃbandhavaśātparātmā
hyupādhidharmānanubhāti tadguṇaḥ |
ayovikārānavikārivanhivat
sadaikarūpo’pi paraḥ svabhāvāt || 191 ||

191. Owing to Its connection with the super-impositions, the Supreme Self, even thou naturally perfect (transcending Nature) and eternally unchanging, assumes the qualities of the superimpositions and appears to act just as they do – like the changeless fire assuming the modifications of the iron which it turns red-hot. –Verse 191 in Viveka Chudamani.

****

Easier said than done

Tiru Valluvar said it in Tamil Veda Tirukkuraal.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.(குறள் 664)

Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one’s life by words they say!.

Or

To give advice is easy for all; but to act according to one’s advice  is indeed difficult.

Or

Easy to make a plan and speak about it, but a rare achievement is

To accomplish the plan as stated and then speak

Or

To break into noble maxims and sage counsels is easy;  to act up to them is difficult.

****

Do not do to others  what you do not want  to be done to you – Vidura Niti in Mahabharata and Confucius in Chinese

Thiruvalluvar, the great Tamil saint in his Thirukkural says:

When a man has experienced pain caused by harm done to him, how can he cause pain to others? (Couplet 318)

‘The best way to punish those who harm you is to make them feel ashamed by doing them well and thinking no more of it’ (couplet 314).

Na tath parasya sandhadyath pratikuulam yadatmana: 7-17


“Do not do unto others as you wish others not to do unto you – Vidura Niti

Mahabharata Santiparva 167-9 also repeats the same message in a positive way:

Tasmaad dharma praaadheenena bhavitavyam yataatmanaa
Tathaa cha sarvabhuutesu vartitavyam yathaatmani

Hence, by self control and by making right conduct (dharma) your main focus, treat others as you treat yourself- Mahabharata

Jesus Christ also said the same in the Bible,

Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)

–subham—

Tags– Sanskrit, Tamil Proverbs around the World!-1, Great Men Think alike even in Proverbs , Vidura Niti, Mahabharata, Tamil Veda, Tiru Valluvar, Confucius , Viveka Chudamani

ஐரோப்பாவில் முதல் சம்ஸ்க்ருத  புஸ்தகம் அச்சிட்ட ஜெர்மானியர் (Post No.13,727)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,727

Date uploaded in London – 30  September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய கட்டுரைகளில் சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியனையும் பகவத் கீதையை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்திய ஜெர்மானிய அறிஞரையும் கண்டோம்.

இன்று நாம் ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி முதலிய மொழிகளை  எழுதப் பயன்படுத்தும் தேவ நாகரிலிபியை  ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று, முதல் புஸ்தகத்தை தேவ நாகரி லிபியில், சம்ஸ்க்ருத மொழியில், அச்சிட்டவரின் பெயர் ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் AUGUST WILHELM VON SCHLEGEL (1767-1845) .

அவர் ஸம்ஸ்க்ருதத்துக்கு மட்டுமின்றி ஆங்கில மொழிக்கும் சேவை செய்தார்; ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். முதல் இந்தியவியல் – INDOLOGY இண்டாலஜி– துறையை ஐரோப்பாவில் ஏற்படுத்தினார்.

ராமாயணத்தை எட்டு தொகுதிகளாக வெளியிட அவர் திட்டமிட்டார் ஆயினும் முதல் இரண்டு  காண்டங்கள் மட்டுமே லத்தீன் மொழியாகத்துடன் வெளியாகின.

ஹிதோபதேசக் கதைகளை ‘எடிட்’ செய்து வெளியிட்டார் அவர்க்கு லஸ்ஸன் LASSEN என்பவர் துணையாக நின்றார்; லத்தீன் மொழியில் அவற்றைக் கொணர்கையில் மொழியியல் கொள்கைகளை பயன்படுத்தினார் .

இந்திய நூல்கள் INDISCHE BIBLIOTHEK என்ற இதழ்களைக் கொண்டுவந்து அதில் சம்ஸ்க்ருத நூல்கள் பற்றியும் எழுதினார்.

பாரீஸ் நகரிலிருந்து பான் நகருக்கு தேவ நாகரி அச்சுக்களைக் கொண்டுவந்து முதல் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தினார்  அவர் தேவநாகரி எழுத்தில் வெளியிட்ட முதல் புஸ்தகம் பகவத் கீதை; லத்தீன் மொழிபெயர்ப்புடன்!

ஐம்பது வயதில் !

இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைக் கற்றபோது அவருக்கு வயது ஐம்பது!

ஹனோவர் நகரில் பிராட்டஸ்டண்ட் பிரிவு கிறிஸ்தவ பிரசாரகரின் நாலாவது மகனாக -8-9-1867 ல் பிறந்தார்; ஆம்ஸ்டர்டாம், பெர்லின் நகர்களில் வேலை பார்த்துவிட்டு பாரீஸ் நகரில் சுவீடன் நாட்டு தூதரின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தார். அவர்களுடன் இத்தாலிக்கும் ரஷ்யாவுக்கும்  சென்றார். பின்னர் தான் பிரான்சில், பிரான்ஸ் பாப் என்பவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றார்.

இண்டாலஜி துறையை ஜெர்மனியில் துவக்கியோர் முதலில் இவரை துறைத்தலைவர் GERMAN UNIVERSITY INDOLOGY DEPARRTMENT பதவியில் அமர்த்தினர்.

  ஸ்ஷ்லகல் முயற்சியில்தான் பான் நகரம் சம்ஸ்க்ருத மொழியின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது.  அவர் 12-5-1945–ல் இறந்தார். ஆயினும் அவருடைய மாணவர் கிறிஸ்டியன் லாசன் CHRISTIAN LASSEN  அவரது பணியைத் தொடர்ந்தார்

*****

இன்னும் ஒரு ஸ்லெகல் – பிரடெரிக் ஸ்லெகல் 1772- 1829

பிரெடெரிக் ஸ்லெகல் FRIEDRICH SCHLEGEL அகஸ்டஸ் ஸ்லெகலின்  சகோதரர். இவரை  இந்தியவியல்- சம்ஸ்க்ருத அறிஞர் பட்டியலில் சேர்க்கமுடியாது. ஆனால் இவர் செய்த பெரிய சேவை இந்தியவியல் படிப்புத் துறையை உண்டாக்கி அதில் தனது சகோதரர் வில்லியம் ஸ்லெகலை, துறைத்தலைவராக அமர்த்தியதாகும்.

இவரும் ஹனோவரில்தான் 10-3-1772– ல் பிறந்தார். இவருக்கு தத்துவத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆகையால் அண்ணனுடன் சேர்ந்து அத்தீனியம் என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையை நடத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு சம்ஸ்க்ருதம் பயின்றதால், பாரீஸ் சென்றபொழுது அந்த நூலகத்தில் சம்ஸ்க்ருத சுவடிகள் இருப்பதைக் கண்டார் . கிறிஸ்தவ மிஷனரிகள் அவைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அங்கே வைத்திருந்தனர்.

பிரெடெரிக், தனது சகோதரர் வில்லியத்துக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் நாலே ஆண்டுகளில் காளிதாசனின் சாகுந்தலத்தைப் படித்துவிடுவேன்; இப்போதைக்கு மொழிபெயர்ப்புடன் படித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். பிரெடெரிக் மூன்று புஸ்தகங்களை எழுதினார் 1. தத்துவம் , 2.இந்திய ஞானம், 3.வரலாற்று யோசனைகள்; இது மொழியியல் ஒப்பீட்டுக்கு வழிவகுத்தது. இந்திய மொழிகளையும் இந்திய தத்துவத்தையும் படிப்பது,  மனிதனின் சிந்தனைப்போக்கினை ஆழமாக அறிய உதவும் என்கிறார். பின்னர் பகவத் கீதை, ராமாயணம், சாகுந்தலம் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார். அவருக்கு அரசாங்க பதவிகள் கிடைத்ததால் இந்தியவியலைத் தொடரமுடியவியலை; ட்ரெஸ்டன் நகரில் சொற்பொழிவாற்றச் சென்ற அவர் 12-1-1829 — இல் இறந்தார்.

இரண்டு ஸ்லெகல் சகோதரர்களுக்கு மூத்த்தவர் கார்ல் ஆகஸ்ட் CARL AUGUST  ஆவார். . அவர் இந்திய ராணுவத்துடன் சென்றார். இந்திய  புவி இயல் பற்றி புஸ்தகம் எழுதினார். ஆனால் அது வெளியிடப்படவில்லை சர் ஜான் டார்லிங் என்பவருடன் சென்ற கார்ல்,1789 – ல் சென்னையில் இறந்தார்.

–சுபம்—

Tags- தேவ நாகரி லிபி, சம்ஸ்க்ருத மொழி    ,ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் , ஐரோப்பாவில். முதல் சம்ஸ்க்ருத  புஸ்தகம், ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் ,

யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில்- 35 (Post No.13726)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,726

Date uploaded in London – 30  September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -35 யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில் -35

கர்னூல் மாவட்டக் கோவில்கள்

யாகந்தி சிவன் கோவில் எங்கே இருக்கிறது ?

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் , கர்னூல் நகரிலிரிருந்து நூறு கி.மீ தொலைவில் யாகந்தி உமா மஹேஸ்வரர் ஆலயம் உள்ளது  கிழக்குத் தொடர்ச்சி மலையின் குன்றுகள் சூழ ஒரு கிராமத்தில் இது இருக்கிறது. பங்கனப்பள்ளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த ஆலயம் அகஸ்திய மஹரிஷியுடன் தொடர்புடையது. . ஐந்தாம் நூற்றாண்டு முதல் இதன் வரலாறு துவங்குகிறது ஆயினும் இப்போதுள்ள கட்டிடங்கள் 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின், சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹர புக்க ராயாரால் கட்டப்பட்டது.

கோவில் வரலாறு

முதலில் அகஸ்திய மகரிஷி இந்த இடத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார்.

ஆனால் சிலையில் ஒரு குறை ஏற்பட்டது . எத்தனையோ தடவை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. அகத்தியர் சிவனை வேண்டி தவம் செய்ததில் அவரும் தோன்றி இது கையிலை போல உள்ளதால் விஷ்ணுவுக்கு உகந்த இடம் இல்லை என்று கூறவே, முனிவரும் மகேஸ்வரரைத் தன் தேவியுடன் அங்கேயே தங்குமாறு வேண்டினார் . சிவனும் , உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக எழுந்தருளினார். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோயில் வைஷ்ணவ மரபின் கீழ் கட்டப்பட்டது.

ஒரு பக்தர் கதையும் இங்கே பிரசித்தமாகியிருக்கிறது.

சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர், இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனே  என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். ‘நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அதுதான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது.

ஆந்திரத்தில் புகழ்பெற்ற வீரபிரம்மேந்திர ஸ்வாமி,  இங்குள்ள குகையில்  சில காலம்  தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.

சிறப்புகள் என்ன ?

ஒரே கல்லில் உமா மஹேஸ்வரர் காட்சி தருகின்றனர். இது அர்த்த நாரீஸ்வர வடிவம் ஆகும்

‘புஷ்கரணி’ என்னும் சிறிய குளம் உள்ளது. நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.

ஆகாச தீபம்

கோவிலுக்குப் பின்புறமுள்ள பாறை உச்சியில் தினமும்  ஆகாச தீபம் ஏற்றப்படுவது இன்னும் ஒரு  சிறப்பு அம்சமாகும்.  இரண்டு மீட்டர் நீளமுள்ள திரியும் நாலு நான்கு லிட்டர் எண்ணெயும் நாள்தோறும் தேவைப்படுகிறது!

தூண்களிலிலும் குளத்தின் சுவர்களிலும் புராண இதிஹாஸக் காட்சிகள் இருக்கின்றன.

விழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் இங்கு மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது,

மூன்று குகைகள்

கோவிலைச் சுற்றியுள்ள குன்றுகளில் அகஸ்தியர் குகை , வீர  பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரர் குகை என்று மூன்று குகைகள் இருக்கின்றன. செங்குத்தான படிகளில் எறிச் செல்ல முடிந்தவர்கள் மேலே செல்லலாம் .

வளரும் நந்தி !

இங்குள்ள நந்தியும் வளர்ந்து வருவதால் இந்த இடம் மேலும் பிரபலமடைந்துவிட்டது. சில வகைப் பாறைகள்  காலப்போக்கில் பெரிதாகும் தன்மை படைத்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் நந்தி வளருவது உண்மைதான் 

—subham—

Tags- ஆந்திர மாநில,  108 புகழ்பெற்ற,  கோவில்கள் -35,  யாகந்தி உமா மஹேஸ்வரர் கோவில்,  வீர பிரம்மேந்திர சுவாமி, Yaganti temple

உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 1 (Post No.13,725)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.725

Date uploaded in London – 30 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

18-9-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 1

ச. நாகராஜன்

உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார் தெரியுமா? முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்திற்குச் சென்று காயம்பட்ட போர்வீரர்களை தனது காரில் ஏற்றி சிகிச்சை அளிக்க உதவிய பெண்மணி யார் தெரியுமா? ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்த பெண்மணி யார்? கதிரியக்கத்தைக் கண்டுபிடித்து அணு யுகத்தை ஆரம்பித்து வைத்த பெண்மணி யார் தெரியுமா?

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் மேடம் க்யூரி என்பதே!

பிறப்பும் இளமையும்

1867ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி அப்போது ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த போலந்தில் உள்ள வார்ஸாவில் மரியா சலோமியா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Salomea Sklodowska) ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.

தந்தை பிரோநிஸ்லாவா ஒரு ஆசிரியர். தாய் வ்லேடிஸ்லாவா ஸ்க்லட்வ்ஸ்கியும் ஆசிரியை தான்.

போலந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் குடும்பம் ஈடுபட்டதால் ஏழ்மையை அனுபவிக்க நேர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக இவரது தாயார் மரியாவுக்கு 12 வயதாகும் போது காச நோயால் இறந்தார்.

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம்

செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள்

அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி

அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி

அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே

தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட

அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன

முட்டாள்தனமான காரியம் செய்திருக்கிறாய்’ என்பது தான்

அவரது ஒரே கமெண்ட்..

பிரான்ஸின் முதல் பெண் பேராசிரியை

பள்ளிப் படிப்பை முடித்தபின் மேல் படிப்பிற்காக 1891-ம் ஆண்டு மரியா போலந்தை விட்டு பிரான்ஸில் குடியேறினார்.

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் கல்லூரிப் படிப்பை அவர் ஆரம்பிக்க வேண்டி இருந்தது.

அதே ஆண்டில் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கணிதத்திலும் இயற்பியலிலும் மூன்றே ஆண்டுகளில் பட்டங்களைப் பெற்றார்.

பிரான்ஸில் முதலாவதாக பிஹெச்.டி பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே. அத்துடன் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படாத அந்தக் காலத்தில் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியராகவும் இவர் ஆனார். அறிவியலில் மேற்படிப்பை மேற்கொண்டதற்காகவும் ஆராய்ச்சி செய்ய முடிந்ததற்காகவும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டார்

திருமணம்

1894ம் ஆண்டு பியரி க்யூரியைச் சந்தித்த இவர் அவரது சோதனைச்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். வெவ்வேறு வகையான இரும்பு வகைகளின் இரசாயன கூறுகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார் இவர்.  அப்போது இருவருக்குமிடையே காதல் அரும்பவே 1895-ம் ஆண்டு பியரியை இவர் மணந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1906ம் ஆண்டு பாரிஸ் சாலை ஒன்றில் நடந்த விபத்தில் பியரி மரணமடைந்தார்.

கணவர் மீது பேரன்பு

தனது கணவரின் மீது பேரன்பு கொண்டவர் மேடம் க்யூரி

அம்மையாரின் கணவர் பியரி திடீரென இறந்து போனதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த இயற்பியல் துறையின் தலைமையை ஏற்குமாறு க்யூரி அம்மையாரை சார்போன் பல்கலைக் கழகத்தினர் கேட்டுக் கொண்டனர். க்யூரியும் ஒத்துக் கொண்டார்.

முதல் நாள் தனது உரையை ஆற்ற அவர் வருகை தந்த போது அரசியல்வாதிகள், பத்திரிகை நிருபர்கள், பிரபலங்கள் என ஹால் நிரம்பி வழிந்தது. க்யூரி அம்மையார் தொடக்க உரையில் முதலில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

சம்பிரதாயமான பதவியேற்பு வைபவத்தின் முடிவில் பெருத்த கரவொலி எழுந்தது. க்யூரி அம்மையார் பேச்சைத் தொடங்க எழுந்தார். அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்கையில் அவர் தன் கணவர் சில மாதங்களுக்கு முன்னால் எந்த இடத்தில் விட்டாரோ அந்த இடத்திலிருந்து தன் உரையை ஆரம்பித்தார்!

பொறி தெறிக்கும் அறிவுடையவர் என விஞ்ஞானி ஐன்ஸ்டீனாலேயே பாராட்டப்பட்டவர் உரையைத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த உரை இருந்தது!

நோபல் பரிசுகள்

வில்ஹெல்ம் ராங்டன் என்பவரே எக்ஸ்-ரேக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.

இந்த எக்ஸ்-ரே மற்றும் கதிரியக்கம் சம்பந்தமாக தீவிர ஆய்வை பியரி கியூரியுடன் மேடம் கியூரி மேற்கொண்டார். இதன் விளைவாக

இயற்பியலில் கணவருடன் இணைந்து 1903-ல் நோபல் பரிசைப் பெற்றார். இரசாயன இயலில் ஈடுபாடு கொண்ட மேடம் கியூரி, பின்னர் மீண்டும் 1911ல் நோபல் பரிசைப் பெற்றார்.

இரு வேறு இயல்களில் (இயற்பியல் மற்றும் இரசாயன இயல்) நோபல் பரிசைப் பெற்ற பெண்மணி இவரே. முதன் முதலில் நோபல் பரிசைப் பெற்ற பெண்மணியும் இவரே.

ரேடியம் மற்றும் பொலோனியம் என்ற இரு கதிர்வீச்சு மூலகங்களை இவர் கண்டுபிடித்தார். தனது தேசமான போலந்தை கௌரவிக்கும் விதமாகத் தான் கண்டுபிடித்த மூலகத்திற்கு பொலோனியம் என்று பெயர் சூட்டினார்.

இவரது புகழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன.

ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை.

லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்பட்ட டேவி மெடலை

தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள்

விளையாடுவதற்காகத் தந்தனர். அதை ஐரீன் – பிக் கோல்ட் பென்னி – பெரிய தங்கத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

அரசரை சந்திக்க விரும்பாத அம்மையார்

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள்

அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான

எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர்

அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம்,

‘கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க

விருப்பமா’ என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன

ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க

விரும்பவில்லை.

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி

உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த மேதை!

**

Marine Trade: Learn Tirumanthiram through Pictures- Part 8 (Post.13,24)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,724

Date uploaded in London – 29 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

It is very strange Tirumular of Tirumanthiram sings about marine trade and marine life in his book. But even before Tirumular, Andal of Tiruppavai and Appar of Tevaram 600 CE, also refer to Indian ocean as a sea of numerous ships. Both of them refer to the eastern sea of India (Vangam Mali Kadal in Tamil) , what is now known as Bay of Bengal.

The very word Bengal, proper pronunciation Vanga, means boat or ship. Since Asokan times Hindus have been travelling through the eastern sea to South East Asia and beyond. We have proofs in Satavahana coins and Borobudur sculptures. Sanskrit Inscriptions in Vietnam (Champa) also refer to Tamil King Tirumaran of second century CE.

Tamil literary evidence is available from2000 year old Sangam literature.  Karikal Choza is praised as one who use the wind power to drive the ships. So, monsoon power was used by Karikal Choza and Asoka before him. Without spending a penny, Buddhist monks and Asoka’s daughter and son were shuttling  between Sri Lanka and Bihar according to Mahavamsa. It is no wonder Tirumular uses these words. After Tirumular came Raja Raja and Rajendra Choza, who also went beyond Indonesia.

Here are the references to Marine trade in Tirumanthiram which is a book of Yoga and Hinduism.

2935. தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை

ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70

2935: When Pasas Leave Jiva Unites in Siva

A Boat there is in the River Ghat

The Five plant their feet and row;

Thus on the river route they trade;

If in the midst the Rudder wobbles,

That becomes This.

(No more the world trade.)

****

NEELI, the most dangerous Tamil Ghost!

2915. தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு

வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து

ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50

2915: Jiva’s Journey in Yoga Sea

He boarded a boat and launched into sea,

He traded well and flourished fast;

The goodly man,

To a She-devil gave his heart,

And in spirit lost droped;

To him as a rich fruit of nectar sweet

Is that Divine Water that flows.

Tirumular also refer to the She Devil of Tamil Nadu who killed 72 merchants as a revenge. Gnana Sambanadar of 600 CE refused to tread the town where the woman ghost killed 72 businessmen.

xxxx

2923. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்

புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது

அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58

2923: Give up Worldly Pursuits and Practice Yoga

Digging not the Earth,

The upland Kurava sails seas

And catches fatty fish;

Let him give it up;

(Rather let him the Earth dig)

There is a way of a Rich Catch,

That is Wealth and Food for all.

I interpret this stanza as they cut even canals like Suez canal and Panama canal in the seas.

*****

9. வீணையும் தண்டும் விரவி இசைமுரல்

தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்

காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64

Arouse Kundalini to Reach Cranium

Lute and Flute, their melody intermingling,

Siva marched ahead in Cranium within;

Even before the Bargain was struck,

The Land was up there for Him to possess.

****

2930. கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை

திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்

தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65

2930: Reaching the Moon Sphere-A Mystic Secret

The trade with the One in Ambrosia

None know about,

But those who the Secret Cavern entered;

They know not,

When the Moon rises

No more darkness will be;

Some did reach there and remained ever,

They truly, are the holy beings devout.

Here is the Neeli Story referred to by Tirumular:–

All posts tagged Pazaiyanur Neeli

Ghost that killed 72 Tamil People!

( Tamil version of this article has been posted already. Pictures are from various websites. Thanks: swami )

Posted by me in this blog on 23 December 2012

There are many ghost stories in ancient Indian literature. The most famous one is the Vetal and Vikramaditya. There are stories of Shiva Bhutas, the fore runner of Aladdin and the Magic Lamp stories. I have already written about them and showed those foreign stories are carbon copies of Tamil and Sanskrit stories. Sangam Tamil literature has got innumerable references to ghosts and ghouls, demons and devils.

Not many people know the Tamil Nili or Neeli ghost story that made a lasting impact in Tamil life. Tamils have proverbs and literary references about this ghost. This is a story that shook the ancient Tamil Nadu. Neeli in her second birth took revenge upon 72 people and killed all of them. If there is a Guinness Book of Records entry for a ghost killing large number of people then Neeli will get the first and foremost entry.

Hundred years ago, A Singaravelu Mudaliyar, who published the first Encyclopaedia of Tamil literature under the title Abithana Chintamani in Tamil, narrated the story of Pazaiyanur Neeli.

Tamils have a proverb “Don’t shed Neeli tears” equivalent to Don’t shed Crocodile tears. Neeli has a reference in a poem of Viveka Chintamani. The author famous for his anti women tirade says in one of the verses that we can even trust Neeli, but not the women who throws her charms on anyone.

The story of Neeli spans over her two births. A merchant of Tamil country travelled to the holiest city of Hindus, Varanasi (also known as Benares and Kasi). There he received the hospitality of a Brahmin. His daughter was Navanjani. The guest fell in love with her and married her. He never told them that he was already married in Tamil Nadu. The newly married travelled towards Tamil Nadu with Navanjani’s brother. As they reached Tiru Alankadu in Tamil Nadu, the merchant sent his brother in law to fetch some water and killed her new wife in the meantime. When her brother returned with water he saw the gory scene and hanged himself.

Now the story continues in her second birth:

The merchant was reborn as Darsana Chetty and Neeli and her brother were born as abnormal children. Darsana Chetty was forewarned by astrologers that he may be revenged by a ghost. So he received a magic sword which will protect him. The abnormal children Neeli and her brother killed the cattle in the night and left them with blood stained wounds. Parents of the abnormal children tied the ghostly children to an acacia tree and abandoned them. People from Palaiyanur came and cut the tree for wood when Neeli went for a revenge. Her brother who occupied the tree was left ‘homeless’ and later killed by another man at the instigation of a temple priest.

Neeli went in the guise of a woman with a child. The story goes that the child was created by her from the broken branch of a tree. She made a big scene in front of the village council which consists 70 elders from the Velala caste. She told the council that Darsana Chetty was her husband and the child in her hand was born to him. She pleaded to them to reunite her with her ‘husband’. He tried his best to tell the council that this woman was a fraud. But her cries and tears moved the council and they reached a compromise that he must live with her and the child.

Neeli tried one more trick now. Knowing the power of the magic sword she told the council that there was no need for a sword when there was a child with her. Village council also agreed with her. He told him that his life would be in danger without the sword. Village council promised him that all the 70 will sacrifice their lives in the fire if anything happened to him. The final piece of the gig saw puzzle fell into its place. Neeli killed Darsana Chetty in the night. Next day Neeli herself went in the guise of Darsana Chetty’s mother to the council and asked all of them to sacrifice their lives as promised. Out of the 70 elders, 69 immolated themselves. Neeli was very happy to take revenge upon those who cut the tree and took her brother’s life.

So far she killed 69+1. The story did not stop there. She went after the person who escaped from the council. He went to him in the guise of his daughter and trapped him. He became the 71st victim. Neeli knowing that he finished her job killed the child in her hand by crushing it under her feet. This was the Murder most foul. This story of death of 72 people+ Neeli and her brother made her notorious as Pazaiyanur Neeli. Now the village has got a ‘temple’ for her in the village.

Had it happened in a place like England it would have become a big tourist spot for Halloween day fans.

Silappadikaram, the most famous Tamil epic has another Neeli, which has no connection to Pazaiyanur Neeli.

 —subham—

Tags- Marine Trade, Tirumular, Tirumanthiram, Marine Trade: Learn Tirumanthiram through Pictures- Part 8, Neeli, Tamil ghost, She devil

தமிழ் பன்றிகளும் ஆங்கிலப் பன்றிகளும்-8 (Post No.13,723)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,723

Date uploaded in London – 29 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பன்றி – தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்- Part 8

மேலை நாட்டு மதங்களில் யூத (JEWS) மதத்தினரும் முஸ்லீம்களும் பன்றி மாமிசத்தை (PORK) சாப்பிடுவதில்லை. இந்துக்கள், மாட்டு மாமிசத்துக்குத் தடை விதித்துபோல, அவர்கள் பன்றிக்கறிக்குத் தடை விதித்துள்ளனர். 

தமிழ் நாட்டில் கண்ணப்ப நாயனார் போன்ற வேடுவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டை யாடியதை நாம் அறிவோம். தூய வெஜிட்டேரியங்களான சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் நூல் கூட பன்றிகளை கூழ் ஊற்றி வளர்த்த செய்தியை நமக்கு பாடல்களில் அளிக்கிறது!

இந்தியாவில் இப்போது ரோட்டில் திரியும் பன்றிகளையே காண்கிறோம் அந்த காலத்தில் பண்ணைகளில் பன்றிகளை வளர்த்தனர் போலும்; மேலை நாட்டினரும் இப்போது இம்முறைகளில் பன்றிகளை, பண்ணை வைத்து வளர்ப்பதால், அதை அசுத்தப் பிராணிகளாகப் பார்ப்பதில்லை. எல்லா சிறுவர் சிறுமியரும்  பன்றி பொம்மைகளை, உண்டியல்களை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதை (PIGGY BANKS) மேல் நாடுகளில் எல்லா வீடுகளிலும் காணலாம்.

சிவ பெருமான், பன்றிகளுக்கும் உதவியதை  திருவிளையாடல் புராணங்களில் காணலாம். பன்றிமலை போன்ற புவியியல் பெயர்களும் தமிழ் நாட்டில் உள்ளன.

ஆயினும் பொதுவாக பன்றிகள் கீழ்மட்ட பிராணிகள் என்பதில் எல்லோருக்கும் கருத்து ஒற்றுமை உளது.

****

ஷேக்ஸ்பியர் William Shakespeare (1564-1616)

யூத – கிறிஸ்தவ மத வேறுபாடுகளை மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் MERCHANT OF VENICE நாடகத்தில் கிண்டல் தொனியில் கொடுக்கிறார். இதோ அந்த சுவையான சம்பாஷணை

பன்றிகள் மீது ஷேக்ஸ்பியருக்குள்ள வெறுப்பினை உரையாடலில் படிக்கலாம் .

ஷைலாக் சொல்கிறான் :

Yes, to smell pork; to eat of the habitation which

your prophet the Nazarite conjured the devil into. I

will buy with you, sell with you, talk with you,

walk with you, and so following, but I will not eat

with you, drink with you, nor pray with you.

விளக்கம்

ஷைலாக் , யூத மதத்தினன் JEW.

பஸ்ஸானியோ, அந்தோனியோ ஆகிய இருவரும் CHRISTIANS கிறிஸ்தவர்கள்.

“பன்றி மாமிசத்தை PORK முகர்ந்து பார்ப்பதோ சாப்பிடுவதோ வெறுக்கத்தக்கது. பன்றிக்கறியில் சாத்தானை ஏற்றி மனிதனைப் பைத்தியமாக்குவதை அந்த நாசரேத் ஆசாமி  (ஏசு கிறிஸ்து) சொல்லியிருப்பதால் கிறிஸ்தவர்களும் யூதர்களைப் போலவே அதைப் பார்க்க வேண்டும்” – ஷைலாக்.

****

Some men there are love not a gaping pig;

Some, that are mad if they behold a cat;

And others, when the bagpipe sings i’ the nose,

Cannot contain their urine: for affection,

Mistress of passion, sways it to the mood

Of what it likes or loathes. Now, for your answer:

THE MERCHANT OF VENICE

இதுவும் ஷைலாக் வாயிலிருந்து வரும் வசனம் தான்

3000 டுகாட் DUCATS (தங்க காசு) கடனைத் திருப்பித் தாராவிடில் அந்தோனியோ ஒரு பவுண்டு எடைக்கு அவன் உடலை வெட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாயே ஷைலாக்!! இதற்கு என்ன காரணம்? என்று கேட்கிறான் பஸ்ஸானியோ.

அதற்கு ஷைலாக் தரும் பதில் :– “காரணம் எல்லாம் சொல்லமுடியாது; சிலருக்குப் பன்றிகளை பிடிப்பதில்லை; சிலருக்குப் பூனைகளைப் பிடிப்பதில்லை; சிலருக்குப் பேக் பைப் BAG PIPE ஊதல்காரர்களைப் பிடிப்பதில்லை” — என்று மட்டும் பகர்கிறான்.

இதிலும் பன்றி மீதான வெறுப்பு / HATRED தொனிக்கிறது

இவ்வாறு ஷேக்ஸ்பியர் தனது கருத்துக்களை யூத மதத்தினரின் வாய் வழியாகப் புகல்கிறார் என்று கொள்ளுவது பொருத்தமே.

The wretched, bloody, and usurping boar, —- The Tragedy of King Richard III, Act 5, Scene 2 (1593-3).

இவை தவிர காட்டுப் பன்னி BOAR, ஸ்வய்ன் SWINE என்றெல்லாம் இன்னும் ஒரு நாடகத்திலும் மொழிகிறார்.

****

மேலும் சில செய்திகள் !

அமெரிக்காவில் கார் ஓட்டும் இந்தியர்கள், சாலைகளில் ஆட்களைப் பிடிக்க போலீஸ்காரர்கள் நின்றால், டேய் மாமா இருக்கிறான் , ஜாக்கிரதை என்று அடுத்த கார் ஓட்டிகளுக்குத் துப்புத் TIPS தருவார்கள்  அதுபோல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கீழ்ஜாதிக்காரகள் போலீஸ்காரனை டேய் பன்னி /பண்ணி இருக்கு ஜாக்கிரதை! என்று எச்சரிப்பார்கள. அதாவது உளவாளி, போலீஸ் என்பதைத் திருடர்கள் பன்னி /பண்ணி என்று கொச்சை மொழியில் SLANG சொல்லுவார்கள்.

What does pig mean in British slang?

In 1874, a slang dictionary published in London listed the definition of pig as “a policeman, an informer. The word is now almost exclusively applied by London thieves to a plain-clothes man, or a ‘nose.

சம்ஸ்க்ருதத்தில் வராஹ அவதாரம் என்னும் போற்றுதலைத் தவிர பன்றிகள் குறித்து அதிகம் பாடல்கள் இல்லை. வராஹ/ பன்றி அவதாரம் எல்லோராலும் வணங்கப்படுகிறது.

*****

இனி தமிழ் பன்றிகளைக் காண்போம்:

நீதி வெண்பா பாடல்கள்

பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறியன்றோ – காதுமத

மாகரத்த யானை வழிவிலகல் புன்மலம்தின்

சூகரத்துக்கு அஞ்சியோ சொல்.

யானை போகும் வழியில் அசிங்கமான பன்றிகள் வந்தால் யானை விலகிச் செல்லும். அதுபோல அறிவிலிகளைக் கண்டால் அறிவாளிகள் ஒதுங்கிப் போவார்கள். அதுதான் பன்றிக்கும் யானைக்கும் – அறிஞர்களுக்கும் மூடர்களுக்கும்– உள்ள வித்தியாசம்.

*****

பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலின்ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே – பொற்கொடியே

பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன்

ஒன்றமையாதோ கரிக்கொன்று ஓது.

பல இன மக்கள் பன்றிக்குட்டிகளைப்போல பெற்றுத்துத் தள்ளுகிறார்கள் ; அவை உதவாக்கரைகள்; ஆனால் யானை ஒரே ஒரு குட்டியைத்தான், தன்  வாழ்நாளில் ஈனும் ; அதுவோ இருந்தாலும் ஆயிரம் பொன்  இறந்தாலும் ஆயிரம் பொன்! அது போல நல்ல பிள்ளைகளைப் பெறுக.

4618. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.

The sow has many young ones at a time, the lioness only one.

***

4619. பன்றி பல குட்டி போட்டு என்ன?

What, if a sow has a numerous litter?

****

887. ஆனை ஒரு குட்டி போட்டும் பயன்; பன்றி பல குட்டிப்போட்டும் பயன் இல்லை.

It is of value though an elephant brings forth a single young one but the many young ones of a pig are of no value. One good thing is better than ten bad ones.

***

நாலடியார் பாடல்கள்

257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;

     நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;

     குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து

     சென்றிசையா வாகும் செவிக்கு.

     (இ-ள்.) நன்று அறியா மாந்தர்க்கு – நன்மை தெரிந்து கொள்ள மாட்டாத மனிதருக்கு, அறத்து ஆறு – தருமத்தின் விழியானது, உரைக்குங்கால் – சொல்லுமளவில், பன்றி கூழ் பத்தரில் – பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில், தேமா – மதுரமான மாங்கனியை, வடித்தற்று – பிழிந்தாற் போலும்; குன்றின் மேல் கொட்டும் தறி போல் – மலைமேல் அடிக்கிற கட்டுத்தறி போல், தலை தகர்ந்து – (அத்தருமவழிகள்) தலை சிதறி, செவிக்கு – காதுக்கு, சென்று இசையா ஆகும் – போய்க் கேளாதவைகளாய் விடும், எ-று.

     பன்றிக்குக் கூழுருசி தெரியுமல்லது தேமாவி னுருசி தெரியாது அதுபோல் கீழ் மக்களுக்குத் தருமவுபதேசம் இனியாது ஆதலின் அவ்வுபதேசம் மலைமேல் அடிக்குந்தறி உள்ளிறங்காமல் தலைபிளந்து போவதுபோல் சிதறிப் போய் காதிலேறாது; அதனால் அது வீண் என்கிறபடி.

*****

358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன

     மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை

     வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி

     செயிர்வேழம் ஆகுதல் இன்று.

     (இ-ள்.) வாள் கண்ணாய் – வான் போன்ற கண்ணுடையவளே!, இல் பிறந்தார் – நற்குடிப்பிறந்தவர், ஏட்டை பருவத்தும் – தளர்ச்சியான காலத்திலும் [தரித்திரத்திலும்], செய்வன – செய்கிற நற்காரியங்களை, முழு மக்கள் – மூடர்கள், மோட்டிடத்தும் – உயர்வான காலத்திலும் [செல்வப்பெருக்கிலும்], செய்யார் – செய்யமாட்டார்கள்; கோட்டை – கொம்பில், வயிரம் செறிப்பினும் – பூணைப் பூட்டினாலும், பன்றி – பன்றியானது, செயிர் வேழம் ஆகுதல் – வீரங் காட்டும் படியான யானை ஆகுதல், இன்று – இல்லை, எ-று.

     பன்றிக் கொம்புக்கு யானைக் கொம்புக்குப் போடுவது போலப் பூண்கட்டினாலும் அது யானையாகாதது போல், மூடர் மிகுந்த செல்வம் பெற்றாலும் நற்குடிப் பிறப்பாளர் தரித்திரத்திற் செய்யுமளவும் விருந்து பாராட்டல் முதலாகிய நற்காரியஞ் செய்யமாட்டார்கள், என்றால் மேலோரியற்கையும் கீழோரியற்கையு மாறா என்பது கருத்து.

     பிறந்ததற்பின் படிப்பு முதலியவைகளாலே கிஞ்சித்தும் தளராதிருப்பது பற்றி மூடரை முழுமக்கள் என்றது. கோட்டை – வேற்றுமை மயக்கம்.

Tamil Proverbs தமிழ்ப்பழமொழிகள்

3777. தான் தின்னத் தவிடு இல்லை. வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?

He has no bran to eat, why seek a young pig to rear for hire ?

****

4515. பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?

Does a young pig observe fasts?

***

4516. பன்றிக்குட்டி ஆனை ஆமா?

Will the young pig become an elephant?

***

4617.பன்றி பட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.

If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

***

4620. பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.

A calf that goes with a pig will eat excrement.

—subham—-

Tags- பன்றி , தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில்,  ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்,  part 8, தமிழ் பன்றி, ஆங்கிலப் பன்றி, நீதி வெண்பா, நாலடியார் பாடல்கள்

அக்டோபர் 2024 காலண்டர்- பாரதியார் பொன்மொழிகள் (Post No.13,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,722

Date uploaded in London – 29 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பண்டிகை நாட்கள் : அக்டோபர் 2- மஹாளய அமாவாசை, காந்தி ஜெயந்தி; 3-நவராத்திரி ஆரம்பம்,11- சரஸ்வதி பூஜை, 12- விஜயதசமி;   31- தீபாவளி.

அமாவாசை– 2; பெளர்ணமி-17; ஏகாதசி விரத நாட்கள்–13, 28 சுபமுகூர்த்த நாட்கள்–21,31

****

பாரதியார் பாடல்களிலிருந்து நிறைய பொன் மொழிகளைக் கண்டோம். அவர் எழுதிய கதை கட்டுரை உரை நடை நூல்களிலிருந்து 31  பொன் மொழிகளைக் காண்போம்.

THANKS TO Project Madurai website .

அக்டோபர் 1 செவாய்க் கிழமை

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

****

அக்டோபர் 2 புதன் கிழமை

பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.

****

அக்டோபர் 3 வியாழக் கிழமை

வட ஹிந்துஸ்தானத்தில் சில இடங்களில் ராமன் கக்ஷி, கிருஷ்ணன் கக்ஷி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்து சிலர் பரஸ்பரம் பகையைச் செலுத்துகிறார்கள். இஃதெல்லாம் மடமையின் லக்ஷணம்.

****

அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை 

அக்னியை இரண்டு ரூபமாக்கி, ஒரு ரூபம் குமாரனாகவும் தேவசேனாதிபதியாகவும், மற்றொரு ரூபம் தேவகுரு வாகவும் சொல்லப்படுகிறது. அக்னியை ருத்ரனுடைய பிள்ளை என்று வேதம் சொல்லுகிறது. அக்னியே ருத்ரனென்றும் சொல்லப்படுகிறது.

***

அக்டோபர் 5 சனிக் கிழமை

கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிடவேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

****

அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை

இது தான் வேதத்தின் கடைசியான கருத்து. ”தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்? என்பது முன்னோர் கொள்கை.

****

அக்டோபர் 7  திங்கட் கிழமை

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை – எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.

****

அக்டோபர் 8 செவாய்க் கிழமை

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய “பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

****

அக்டோபர் 9 புதன் கிழமை

ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.

****

அக்டோபர் 10 வியாழக் கிழமை

சிவன் நீ; சக்தி உன் மனைவி.

விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.

பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.

****

அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை 

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.

****

அக்டோபர் 12 சனிக் கிழமை

கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

****

அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை

இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை.

****

அக்டோபர் 14  திங்கட் கிழமை

பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது.ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். “அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.

****

அக்டோபர் 15 செவாய்க் கிழமை

காலம் பணவிலை உடையது” ( TIME IS MONEY  )என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது.

****

 அக்டோபர் 16 புதன் கிழமை

இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக்கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.

****

அக்டோபர் 17 வியாழக் கிழமை

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல் வேறு பட்டார் தொடர்பு”

என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது-என்பதேயாகும்.

****

அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை 

ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர்” என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.

****

அக்டோபர் 19 சனிக் கிழமை

(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில்,”சாக்தன்” என்றால் “ரஹஸ்யமாகக் குடிப்பவன்” என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை! )

****

அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை

வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மணஸ்பதி; அவரே ப்ருஹஸ்பதி

****.

அக்டோபர் 21  திங்கட் கிழமை

விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவமந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி ‘கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே’ என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்தில் பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து “கொள்ளுக.

****

அக்டோபர் 22 செவாய்க் கிழமை

தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

****

அக்டோபர் 23 புதன் கிழமை

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

****

அக்டோபர் 24 வியாழக் கிழமை

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது

****

அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை 

க்ஷவரத்துக்குக் கூட இப்படியென்றால், இனிக்கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது.

****

அக்டோபர் 26 சனிக் கிழமை

சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது.

****

அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை

இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.

****

அக்டோபர் 28  திங்கட் கிழமை

கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன்.

****

அக்டோபர் 29 செவாய்க் கிழமை

குருவி, காக்கை, புழு, எறும்பு – ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், “ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி” என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும்.

****

அக்டோபர் 30 புதன் கிழமை

பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை;

****

அக்டோபர் 31 வியாழக் கிழமை

ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை.

—SUBHAM—

Tags- அக்டோபர் 2024,  காலண்டர், பாரதியார், கட்டுரைகள்,   பொன்மொழிகள்

உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 2 (Post.13,721)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.721

Date uploaded in London – 29 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 2

ச. நாகராஜன்

அவரது படங்களில் சுமார் 90 படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. அவற்றில் சில:

தி சர்கஸ் (1928)

சாப்ளினுக்கு முதல் அகாடமி அவார்ட் வாங்கித் தந்த படம் இது. அப்போது ஆஸ்கார் பரிசு என்ற பெயரை இந்த விருது பெறவில்லை.

இந்தப் படத்தை எடுக்கும் போது அவர் பெரிதும் துன்பப்பட்டார். மனைவி லிடா க்ரேயுடன் விவாக ரத்து; சாப்ளினை எல்லா விதத்திலும் மட்டம் தட்ட லிடா க்ரே செய்த செய்கைகள் – இவற்றால் அவர் கஷ்டப்பட்ட போதிலும் படம் வெளியாகி பெரும் வெற்றியைத் தந்தது.

சிடி லைட்ஸ் (1931)

இந்தப் படத்திற்காக சாப்ளின் மிகவும் கடுமையாக உழைத்தார். 32 மாதங்கள் இதற்காக அவர் உழைக்க வேண்டியதாக இருந்தது. 190 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தக் காலத்தில் பேசும் படம் உருவாகி விட்டது. ஆனால் சாப்ளினுக்கோ அவரது பாத்திரம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் அதை உலகம் வரவேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. துணிந்து வழக்கம் போல பேச்சே இல்லாத மௌனப் படமாகவே எடுத்தார். பத்திரிகை உலகம்  போற்றியது. பொது மக்கள் படத்தைப் பார்த்து பிரமித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸில் ஐன்ஸ்டீன் இதைப் பார்த்தார் என்றால், லண்டனில் பெர்னார்ட் ஷா  சாப்ளின் பக்கத்தில் உட்கார்ந்து இதைப் பார்த்தார்.

தி க்ரேட் டிக்டேடர் (1940)

1939-ல் இதை சாப்ளின் எழுதியபோதே ஹிட்லர் உலக அரங்கில்  பெரிதும் பேசப்பட்டவராக ஆகி விட்டார். அவரது பாத்திரம் ஹிட்லரின் அதே மீசையைக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு பாத்திரத்தில் யூத நாவிதராகவும் இன்னொரு பாத்திரத்தில் ஒரு சர்வாதிகாரியாகவும் நடித்தார்.

கதையில் வரும் யூதருக்கு ஒரு விமான விபத்தில் நினைவாற்றல் போய் விடுகிறது. இறுதியில் அவர் வந்து சேரும் நாடு டோமானியா. அதை ஒரு சர்வாதிகாரி ஆள்கிறார்.

இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய படமாக ஆனது.

அமெரிக்க வாசமும் தங்க அனுமதி மறுப்பும்

இரு முறை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட அவருக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகவே அங்கேயே தங்க நிச்சயித்தார். 1914 முதல் 38 ஆண்டுகள் அங்கேயே வசித்தார்.

என்றாலும் இடதுசாரி சிந்தனையாளரான அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டதோடு அங்கு தங்கவும் தடை விதிக்கப்பட்டது. 1952 செப்டம்பரில் தனது அமெரிக்க வாசத்தை ஒரேயடியாக முடித்துக் கொண்ட சாப்ளின் ஸ்விட்சர்லாந்து வந்து அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

அவருக்குப் பிடித்த இடம் ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடம். அங்கேயே அடிக்கடி சென்று தங்குவார். இதில் விசித்திரம் என்னவென்றால் பிரபல நகைச்சுவை நடிகரான அவரைப் பற்றி நார்னில் உள்ளோர் அறியவில்லை. என்றாலும் கூட அவர்களுடன் பழகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்கேயும் உருவாக்கினார் சாப்ளின்.

நிதி உதவி

முதல் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமான் அரசில் (துருக்கியர்களால் ஆளப்பட்டது) ஆர்மீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டனர். உடனே சார்லி சாப்ளின் 150 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமமான அளவில் பெரும் நிதியைத் திரட்டி ஆர்மீனியக் குழந்தைகள் வாழ வழி வகை செய்தார். அவரே நேரில் சென்று குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அளித்தார். இதே காலத்தில் தான் அவரது ‘தி கிட்’ என்ற பிரபலமான படம் வெளியிடப்பட்டது.

பிரபல டைம் பத்திரிகையில் அட்டைப் படம்

பிரபலமான டைம் பத்திரிகையில் வெளியான முதல் நடிகர் படம் அவருடையதே. 1925, ஜூலை 6ம்தேதியிட்ட இதழில் அவரது படம் வெளியாகவே உலகமே வியந்தது. இது அவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

1972-ல் அவர் விசேஷ அகாடமி விருதைப் பெற்றார். 20 வருடங்கள் அமெரிக்காவிற்கே செல்லாமல் இருந்த சாப்ளின் இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.

சாப்ளின் மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1981 அக்டோபர் நான்காம் தேதி உக்ரேன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மிலா கரக்கினா ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்த போது அதற்கு 3623 சாப்ளின் என்று சாப்ளினை கௌரவப்படுத்தும் விதமாக பெயர் சூட்டினார். அவர் அவரது ரசிகை.

மறைவு

1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மறைந்தார். 1978, மார்ச் மாதத்தில் அவரது சடலத்தை ஒரு கும்பல் திருடிக் கொண்டு போனது. ஆனால் அவர்கள் அடுத்த பதினோரு வாரங்களில் பிடிக்கப்பட்டனர். சடலம் மீட்கப்பட்டது.

புத்தகங்கள்

அவர் தனது வாழ்நாளில்  ‘மை ட்ரிப் அப்ராட்’, ‘எ காமடியன் சீஸ் தி வோர்ல்ட்’, ‘மை ஆடோபயாகிராபி’, ‘மை லைஃப் இன் பிக்ஸர்ஸ்” ஆகிய நான்கு புத்தகங்களை எழுதினார்.. எல்லா இசைக்கருவிகளிலும் தேர்ந்தவரான அவர் பல பாடல்களையும் புனைந்ததுண்டு.

தனது படங்களுக்குத் தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராகவும் அவர் திகழ்ந்தார்.

அனுபவ மொழிகள்

தனது அனுபவ மொழிகளாக அவர் அவ்வப்பொழுது உதிர்த்த பொன்மொழிகள் ஏராளம். அவற்றில் சில:

நீங்கள் பயப்படவில்லை என்றால் வாழ்க்கை என்பது அருமையான ஒன்று தான். வேண்டுவதெல்லாம் கொஞ்சம் தைரியம், கற்பனை அப்புறம் கொஞ்சம் பணம்!

சிரிப்பு என்பது வலியை நிறுத்தி ஆறுதலைத் தரும் ஒரு டானிக்.

கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு நாளும் உங்களால் வானவில்லைப் பார்க்க முடியாது!

***

October 2024 Good Thoughts Calendar with Sanskrit Quotations (Post No.13,720)



WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,720

Date uploaded in London – 28 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Festivals -Oct.2-Mahalaya Amavasai, Gandhi Jayanti, 3-Navaratri begins,11- Sarasvati Puja, 12- Vijaya dasami, 31- Diwali (deepaavali)

New moon day – oct.2;  Full moon day -17;

Ekadasi fasting days- 13, 28

Auspicious days- 21,31

Following are quotations from Niti vakyamritam by Somadeva Suri, Jain Saint,990 CE.

October 1 Tuesday

He who being born brightens his lineage is a son.

****

October 2 Wednesday 

Modesty is indeed an ornament of prowess.

****

October 3 Thursday

There is no animal greater than an ignorant man.

****

October 4 Friday 

Instruction polishes only the worthy persons and not the unworthy.

****

October 5 Saturday 

Hearing is listening to the scriptures.

****

October 6 Sunday 

What is the use of that nectar which is mixed with poison?

****

October 7 Monday 

Disciples generally follow the conduct of teachers.

****

October 8 Tuesday

Like fire wicked persons singe even those who give shelter.

****

October 9 Wednesday 

Like a forest elephant,, greedy of immediate pleasures fall a prey to misfortune.

****

October 10 Thursday

As a lion earns demerit by killing an elephant, so does a person transgressing the tenets of righteousness becomes sharer in sins.

****

October 11 Friday 

There is no therapy for the lustful.

****

October 12 Saturday 

The nature of brahmins is generally meek and pious.

****

October 13 Sunday 

The nature of warriors is aggressive.

****

October 14 Monday 

Simplicity and crookedness are inborn in peasants.

****

October 15 Tuesday

The wrath of brahmins lasts till the receipt of gifts.

****

October 16 Wednesday 

The wrath of teachers and elders ends on salutations.

****

October 17 Thursday

The anger of warriors lasts till the end of life.

****

October 18 Friday 

The anger of traders ends with the utterance and listening of sweet words.

****

October 19 Saturday 

All perish who are indifferent to injustice.

****

October 20 Sunday 

What is the use of that man, whoever he be, who does not stand by another in distress?

****

October 21 Monday

Parasites are abundant in the world.

****

October 22 Tuesday

Affection for one’s country is the greatest of all affections.

****

October 23 Wednesday 

It is heard that at some time the secret deliberation was divulged by a pair of parrots and other animals.

****

October 24 Thursday

That article alone is eaten that which is digested.

****

October 25 Friday 

Conversation with the great yields fruit like a milk yielding tree.

****

October 26 Saturday 

Low minded persons yield fruit and those trees are difficult to climb.

****

October 27 Sunday 

A lazy man is not worthy of any official duty and undertaking.

****

October 28 Monday 

Sensible words spoken even by a child should be accepted.

****

October 29 Tuesday

He who showers affection even in distress just as he does in prosperity, is a friend .

****

October 30 Wednesday 

Bribe is verily the door for the advent of all evils

****

October 31 Thursday

Those living on bribes cut even the breast of their mother.

****

Bonus quotes

There is no greater friend than milk.

There is no greater friend than water which as soon as it mixes with milk increase and protects it even by his own destruction.

–subham—

Tags- October 2024, Calendar, Somadeva Suri, Nitivakyamrut, Quotations, Raja niti, Jain Saint, Sanskrit,