ராமாயண சிற்பங்கள் உள்ள பச்சல சோமேஸ்வரர் கோவில்-28 (Post No.13,617)

Chaya Someswar Temple.

Pachala Someswar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,617

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

Pachala Temple Pictures

Mohini distributing Amrita 

Jatayu

பனகால் என்றும் பச்சல என்றும் அழைக்கப்படும் சிற்றூர் தெலுங்கானா மாநிலத்தில் நலகொண்டா நகருக்கு வெகு அருகில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 110 கி.மீ..

இங்குள்ளது சிவன் கோவில்; ஆனால் அற்புதமான ராமாயண ,சிற்பங்கள் நிறைந்த கோவில். சுமார் 900 ஆண்டுகள் பழமையானது.

முதலில் கொஞ்சம் சொல் ஆராய்ச்சியில் இறங்குவோம். பச்சல என்று ஏன் பெயர் வந்தது என்றால் அங்குள்ள சிவன் பச்சை நிறக் கல்லால் ஆனது; ஆனிக்ஸ் Green Onyx எனப்படும் இரத்தின வகைகைக் கல் ; மரகதத்தை வீட மதிப்பு குறைந்தது . நல கொண்டா என்றால் நீலகிரி– நீல மலை ; உண்மைதான் ! ஹைதராபாத்திலிருந்து காரில் சென்றால் ஒரு புறம் நீல மலையைப் பார்த்து ரசித்த வண்ணம் செல்லலாம்.

சிறப்புகள் என்ன?

கோவிலில் சிவன் பிரம்மா, விஷ்ணு மூவரும் இருந்தாலும் சிவன்தான் கர்ப்பக்கிரகத்தில் உள்ளார்; பூஜை புனஸ்காரங்கள் உண்டு . ஆயினும் ராமாயண சிற்பங்கள்தான் அதிகம் ; அவை தவிர சிவ லீலைகளும் , மகாபாரதக் காட்சிகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன ; சுமார் 70 தூண்களை அழகாகச் செதுக்கியுள்ளனர். கோவிலுக்குப் பின்புறத்தில் மியூசியம் உள்ளது. பெரிய ஏக்கர் கணக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடமே மியூசியம் ; வரலாற்று ஆய்வாளர்களுக்கு சொர்க்க பூமி.

கோதண்ட ராமன் வில்லை வளைக்கும் காட்சி, சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் காட்சி, ஜடாயுவின் உயிர்த்தியாகம் முதலிய காட்சிகள் உள ; இவைதவிர மணிகள் கட்டிய அலங்கார நந்தி, நடனமாடும் நங்கைகள், மிருதங்க வாத்யம் முழங்கும் காட்சிகள் , ஆகியனவும் புகைப்படம் எடுப்போருக்கு நல்ல விருந்து சமைக்கும் .

வரலாறு

வெளியிலிருந்து பார்த்தால் பாழடைந்த கோவிலாகவே தென்படும்; உண்மையில் பூர்த்தியாகாத கோவில்தான். மூன்று சந்நிதிகளை இணைத்து பிற்காலத்தில் சுவர்களை எழுப்பியுள்ளனர்; உள்ளே அழகிய சிற்பங்கள் உள்ளன ; வெளிப்புறச் சுவர்களிலும் இதிஹாச, புராண சிற்பங்களை அமைத்துள்ளனனர். விஷ்ணுவின் தசாவதாரங்களையும் சிற்பத்தில் காணலாம்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அருகிலேயே , சுமார் 2 கி.மீ. தொலைவில் அதிசயங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரர் கோவில் உளது ; அதன் விவரங்ககளை தனியே காண்போம்.

ஊரில் வெங்கடேசர் கோவிலும் இருக்கிறது.

காகதீய மன்னர்கள் சிவ பக்தர்கள்; அவர்கள் கட்டிய கோவில்தான் இது.

1982- ம் ஆண்டில் கோவிலுக்குப் பின்புறம் மியூஸியத்தை அமைத்தனர். சுமார் மூன்று  ஏக்கர் பரப்பில் 640 பொருட்களைக் காணலாம். அவை அந்தப் பகுதியின் 2000 ஆண்டு வரலாற்றை  நம் கண் முன்னே கொண்டுவரும்.

xxxx

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

சாயா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிழல் என்று பொருள்; அங்கே விஞ்ஞானிகளுக்கும் விளங்காத அளவுக்கு நிழல் விழுகிறது; இதுவும் ஒரு சிவன் கோவில்தான்.

நல்கொண்டாவிலிருந்து 4 கி.மீ தூரத்திலும், ஐதராபாத்திலிருந்து 107 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.  உதயசமுத்திரம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள லிங்கம் பொதுவாக முழங்கால் அளவு ஆழமான நீரில் உள்ளது.

சாயா சோமேஸ்வரர் கோவிலில் சிவன், விஷ்ணு, சூரிய பகவான் ஆகிய மூவருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன  அவைகளை மண்டபத்தால் இணைத்திருப்பதால் இதை திரிகூட வகை கோவில் என்பார்கள் ; கோபுரம் பிரமிடு போல காட்சி தரும்; அதுவும் ஒரு புதுமைதான்  மூன்று பிரமிடு வடிவ கோபுரங்களைக் காணலாம்.

கோவிலின் தூண்களில் ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகளை காணலாம் குண்டூர் தெலுங்குச் சோழர்களின் கைவண்ணம் இது.

இந்தக் கோவிலுக்கான சாசனங்கள் தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காகதியர்கள் கி.பி. 1290ல் ஆட்சிக்கு வந்த காலத்தில் எழுதப்பட்டன. அப்போது கோவில் திருப்பணிகளும் நடைபெற்றது. குண்டூர் சோழர்கள் மற்றும் காகதியர்கள் கால கலைகள் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளன. டெல்லி சுல்தானின் காலத்தில் முஸ்லீம் படைகள் கோவிலை இடித்து நாசம் செய்தன.

நிழல் அதிசயம் என்றால் என்ன ?


Churning the Milky Ocean in Pachala Temple

ஒரு பொருளுக்கு முன்னால் இருந்து சூரிய வெளிச்சம் வந்தால் பின்புறத்தில் நிழல் விழும்; இது இயற்கை நியதி. சூரியன் மேலே போகப்போக நிழலும் மாறிக்கொண்டே வரும்; ஆனால் இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் பின்னால் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், சூரியன் மலவாயில் விழுந்த பின்னரும் நிழல் நீடிக்கிறது. இதனால்தான் சாயா / நிழல் என்ற அடை மொழி.

பகல் நேரம் முழுதும் சிவலிங்கத்தின் மீது ஒரு தூணின் நிழல் விழுகின்றது. இந்த தூணின் நிழல் ஒரே இடத்திலேயே இருக்கிறது .  கருவறைக்கு முன்பாக மொத்தம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை..

தூண்களில்  ராமாயணம், மகாபாரத  நிகழ்சசிகளை சிற்பங்களாக சித்தரித்துள்ளனர் ;மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லும் காட்சி, மானின் தலை விழுந்ததும், மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளன.

தலை வெட்டப்பட்ட நிலையில்,  பல நந்திகள் கம்பீரமான தோற்றத்துடன் ஆலய வளாகத்தில்  காட்சி அளிக்கின்றன.  இது முஸ்லீம் படைகளின் அழிவு வேலை என்பதை சொல்லத்  தேவை இல்லை. காலத்தால் மன்னிக்கமுடியாத ஈனச் செயல்கள் அவை .

–subham—

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part 28, ராமாயண சிற்பங்கள், ,பச்சல சோமேஸ்வரர் கோவில், சாயா சோமேஸ்வரர் கோவில், நிழல் அதிசயம்

Leave a comment

Leave a comment