WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.627
Date uploaded in London – —4 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (2)
ராமாயணத்தில் வரங்கள் (2) முனிவர்கள் குச, லவர்களுக்கு வரங்களை அளித்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் நான்காவது ஸர்க்கமாக அமைவது ‘ஶ்ரீ ராமஸதஸ்ஸில் குச லவர்களுடைய வரவு’ என்ற ஸர்க்கம்.
அற்புதமான ராம காவியத்தை வால்மீகி முனிவர் இயற்றி விட்டார்.
இதை நல்ல விதமாக யார் பிரசங்கிக்கப் போகிறார்களோ என்ற கவலை அவருக்கு வந்தது.
ஒரு நாள் எல்லா முனிவர்களும் அவரது ஆசிரமத்தில் கூடினர்.
அப்போது வால்மீகி குச, லவர்களை அழைத்து ராமாயணத்தை கானம் செய்யச் சொன்னார்.
அவர்களும் அதை இசைக்க ஆரம்பித்தனர்.
கூடியிருந்த முனிவர்கள் அனைவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் பொழிந்தது.
உற்சாகம் மேலிட ஒவ்வொருவரும் அவர்களைப் புகழ்ந்ததோடு ஆளுக்கு ஒரு பொருளை குச லவர்களுக்குத் தர ஆரம்பித்தனர்.
ஒருவர் கவசத்தைத் தந்தார். இன்னொரு முனிவர் மரவுரிகள் இரண்டைத் தந்தார். இன்னொருவர் கிருஷ்ணானஜினத்தைத் தந்தார்.
இப்படியாக மௌஞ்ஜி, ஆஸன பீடம், கோடாரி, சாய வஸ்திரம் என இப்படி பல பொருள்களை அவர்கள் அனைவரும் வழங்கினர்.
கையில் தர ஒன்றுமில்லாதவர்கள் நல்லாசிகளை நல்கினர்.
தீர்க்காயுளாய் இரு என்ற ஆசீர்வாதத்தை அனைவரும் நல்கினார்கள்.
ஸாமம் சொல்லும் முனிவர்கள் அனைவரும் வரங்களை அளித்தார்கள்.
அதை பின்வரும் ஸ்லோகம் கூறுகிறது”
ஆயுஷ்யமபரே ப்ராஹுர்முதா தத்ர மஹர்ஷய: |
ததுஸ்சைவ வரான் ஸர்வே ,முனய: ஸாமவாதின: ||
– பால காண்டம் நான்காம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24
தத்ர – அங்கு
அபரே – வெறு சில
மஹர்ஷய: – மஹரிஷிகள்
முதா – சந்தோஷத்தினால்
ஆயுஷ்யம் – “தீர்க்காயுசாய் இரு” என்னும் ஆசீர்வாதத்தை
ப்ராஹு: – உச்சரித்தார்கள்
ஸாமவாதின: – ஸாமம் சொல்லுபவர்களான
முனய: – முனிவர்கள்
ஸர்வே ச ஏவ – எல்லோருமே
வரான் – வரங்களை
தது: – அளித்தார்கள்
இப்படியாக சந்தோஷமடைந்த ஏராளமான முனிவர்களிடமிருந்து அநேக வரங்களை குச லவர்கள் பெற்றனர்.
**