WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,633
Date uploaded in London – 5 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
முதல் பகுதி நேற்று வெளியானது.
புதிய ஆத்திச்சூடியில் 110 பொன்மொழிகள் உள்ளன. அவற்றிலுள்ள மருத்துவச் செய்திகளை மட்டும் தொடர்ந்து காண்போம்.
17.குன்றென நிமிர்ந்துநில்
STAND ERECT LIKE A HILL
Or
Stand tall like a mountain
இது முக்கியமான மருத்துவ அறிவுரை
நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை; நிலத்தில் யாருக்கும் அஞ்சாத செருக்கு– என்று பாடியவர் பாரதி .
உங்களை ஒருவரை வீடியோ எடுக்கச் சொல்லி அதைப் பாருங்கள்; நீங்கள் எப்படி நடந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பெரும்பாலோர் கூனிக் குறுகி நடந்து வருவார்கள்; அல்லது ஒரு பக்கம் சாய்த்து சாய்து நடந்து வருவார்கள் . முன்பெல்லாம் அன்ன நடை, சின்ன இடை அழகிகளைப் புகழ்ந்து தமிழ்க் கவிஞர்கள் பாடினார்கள்; இப்பொழுது இரண்டும் இல்லை; தாடகி நடை ; அணுகுண்டு இடை–யையே பார்க்கிறோம்.
உடல் வலி BODY PAIN என்று பிஸியோதெரபிஸ்ட் இடம் வந்த பல நோயாளிகளுக்கு நான் லண்டன் ஆஸ்பத்திரிகளில் மொழிபெயர்க்கச் செல்வேன். முதலில் பிஸியோதெரபிஸ்ட் physiotherapist கொடுக்கும் அறிவுரை உங்கள் பாஸ்ட்சரை postures மாற்றுங்கள்.
நீங்கள் ஒரு ஆசனத்தில் உட்காரும் முறை, நீங்கள் நடக்கும் முறை இரண்டும் முக்கியம்; முறையாக நடக்க, உட்கார பயிற்சி செய்தால், 90 வயதானாலும் வாக்கிங் ஸ்டிக் Walking Stick தேவை இல்லை.
ஆண்களானால் ஆசனம், யோகம் பயிற்சி செய்யுங்கள்.
பெண்கள் ஆனால் பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் பயிலுங்கள்.
பாலிவுட் டான்ஸ் Bollywood Dance கூட உதவும்; ஆனால் மனமும் குணமும் கோணல் ஆகிவிடும் .எச்சரிக்கை.
*******
39.ஞிமிரென இன்புறு. – ENJOY LIFE LIKE A BEE
46.துன்பம் மறந்திடு.- FORGET MISERIES or Forget Agonies
53.தவத்தினை நிதம் புரி.-Meditate daily or DO TAPAS DAILY
54.நன்று கருது.- THINK GOOD ALWAYS or Have good intents
இவை நான்கும் மன நோய் வராமல் தடுக்கும் அறிவுரைகள் .
39. ஞிமிரென இன்புறு. எப்போதும் தேனீ போல சுறுசுறுப்பாக இரு; இன்பத் தேனை நுகர். அதாவது வாழ்வு முழுதும் இனிப்பை நுகரும் ஒரே பிராணி அது ஒன்றுதான்; வாழ் நாள் முழுதும் வேலை செய்யும் பிராணியும் அது ஒன்றுதான்; இத்தனையும் பிறருக்காக!! நாம் தேனைப் பிழிந்து எடுத்த பின்னரும் அதே கூட்டில் அது தேனைச் சேகரித்து நமக்கு வழங்குகிறது
40. துன்பம் மறந்திடு -பாரதி இன்னொரு பாடலில் இதை இன்னும் அழகாகப் புகல்வான் :
சென்றதினி மீளாது,மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,தி ரும்பி வாரா.- மகாகவி பாரதியார்.
53. .தவத்தினை நிதம் புரி -தினமும் படுக்கப் போகும்போதோ அல்லது படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதோ ஒரு பத்து நிமிடம் உங்களுக்குப் பிடித்த மந்திரம் அல்லது தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த பாடலைச் சொல்லி, அதை சிந்தித்து வாருங்கள். அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்; மொபைல் போன் பக்கத்தில் இருந்தால் நீங்கள் தோற்றுப் போவீர்கள்.
54.நன்று கருது – நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அல்லது பொன்மொழிகள் பாசிட்டிவ் ஆக- வெற்றியையும் நம்பிக்கையையும் அளிப்பதாக இருக்க வேண்டும். முதலில் சொன்னதற்கு இது ஆதரவு கொடுக்கும். ஒழிக கோஷத்தை விட வாழ்க கோஷங்கள் உங்கள் வாழ்வில் இருக்கட்டும் எனக்குப் பிடிக்காத ஒன்றை ஒழிக என்று சொல்லுவதை விட , நல்லதை வாழ்க என்று கூவலாமே! உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாக பாரதியார் பாடல்களை தினமும் படித்தாலே போதும்.
இதோ இரண்டு பாடல்கள் :
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்! — பாரதியார்
****
தோகை மேல் உலவும் கந்தன் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவதே எமக்கு வேலை. – பாரதியார்
****
63 .நொந்தது சாகும்.- THE WORN OUT DIES or Anguished will die
டார்வின் எழுதிய பரிணாமக் கொள்கையில் என்ன சொன்னார்? பலவீனமானவை செத்துப்போகும் ; தகுதியுள்ளவை பிழைக்கும்; இதுதான் பரிணாமம்; 5000 ஆண்டுத் தாக்குதல்களையும் தாண்டி இந்து மதம் பிழைத்திருக்கிறதென்றால் என்ன பொருள்? அது வலுவான மதம்; இதே 5000 ஆண்டுகளில் எது எது பிழைத்திருக்கிறதோ அவைகளும் வலுவானவை; ஏனெனில் இயற்கை நியதி சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட்
“Survival of the fittest.” Also known as “natural selection,” it is a simple statement of the fact that in dangerous circumstances, only those individuals most adapted to their environment survive—and the world, with its limited food supply, fearsome predators, and devastating diseases is always a dangerous place
64. நோற்பது கைவிடேல்.- LEAVE NOT AUSTERITIES or Never lose endurance
பெண்கள்தான் அதிகமான நோன்புகளையும் விரதங்களையும் கடைப் பிடிக்கிறார்கள்; அவர்கள் சமுதாயத்தின் காவலர்கள்; கற்பு, தாய்ப்பாசம் , கருணையின் இருப்பிடங்கள்; இந்து மத புராணங்கள், தெய்வத் தமிழ் நூல்கள் முழுதும், நோன்பினைப் போற்றுகின்றன ; தவப் புதல்வர் என்ற சொல் இதனால்தான் பிறந்தது. வள்ளுவனும் நோன்பினை ஆதரிக்கிறான் :
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.–குறள் 70
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
இதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் ? மனம் திண்மை பெறும் ; உடல் வலுப்பெறும் . எப்போதோ நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையால் வாழ்க்கை வளம் பெறும் ; அசோக வனத்தில் நோன்பிருந்த சீதா தேவி தூக்குக் கயிற்றில் தொங்குவதற்கு எண்ணிய தருணத்தில் நம்பிக்கை என்னும் அனுமன் அவள் முன் குதித்து புத்துயிர் தந்தான். அதனால்தான் பாரதியும் நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு என்றான் .
To be continued……………………………..
Tags- பாரதியார்,புதிய ஆத்திச்சூடி, மருத்துவ செய்திகள் -2, நோன்பு, ஆசனம், நாட்டியம், நடக்கும் முறை, உட்காரும் முறை, தவம், தியானம், மன நோய்