
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.631
Date uploaded in London – —5 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (3)
ராமாயணத்தில் வரங்கள் (3) மஹாவிஷ்ணு தேவர்களுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் பதினைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ புத்திர காமேஷ்டியும் ராவண வத ப்ரதிக்ஞையும்’ என்ற ஸர்க்கம்.
கந்தர்வர்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகிய அனைவரும் பிரம்மாவிடம் சென்று, “பகவானே! ராவணன் என்ற ராக்ஷஸனுக்கு உம்மால் வரம் கொடுக்கப்பட்டது. அதனால் அவன் செய்த கொடுமைகளை இதுகாறும் சகித்து வருகிறோம். வரத்தால் தன்னை ஜெயிப்பவர்கள் யாரும் இன்றி அவன் அனைவரையும் கொடுமைப் படுத்துகிறான். ஆகவே அவனை வதம் செய்ய ஒரு உபாயத்தைச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.
பிரம்மா உடனே, “அவன் மனிதர்களைக் குறித்து வரம் வாங்கவில்லை. ஆகவே ஒரு மனிதனே அவனுக்கு மரணத்தை உண்டு பண்ண முடியும்” என்றார்.
அந்தச் சமயத்தில் விஷ்ணு பகவான் அங்கே வந்து சேர்ந்தார். அவரிடம் அனைவரும் “நீங்களே மனித ரூபம் எடுத்து ராவணனை வதம் செய்ய வேண்டும் என்று வேண்டினர்.
மஹாவிஷ்ணு இப்படிக் கூறலானார்:
பயம் த்யஜத பத்ரம் வோ ஹிதார்தே யுதி ராவணம் !
சபுத்ரபௌத்ரம் சாமாத்யம் சமித்ரஞாதிபாந்தவம் |\
ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவர்ஷீணாம் பயாவஹம் |
தச வர்ஷசஹஸ்ராணி தச வர்ஷசதானி ச ||
வத்ஸ்யாமி மானுஷே லோகே பாலயன் ப்ருத்வீமிமாம் ||
பாலகாண்டம், 15ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 28,29,30)
பயம் – பயத்தை
த்யஜத – விடுங்கள்
வ பத்ரம் – உங்களுக்கு மங்களம்
யுதி – யுத்தத்தில்
க்ரூரம் – கொடியவனான
துராத்மானம் – துராத்மாவான
தேவர்ஷீணாம் – தேவர்கள், ரிஷிகள் ஆகிய இவர்களுக்கு
பயாவஹம் – பயத்து உண்டு பண்ணுகிற
சபுத்ரபௌத்ரம் – பிள்ளை பேரன்களோடு கூடியவனாய்
சாமாத்யம் – மந்திரிகளோடு கூடீனவனாய்
சமித்ரஞாதி பாந்தவம் – மித்திரர்கள், ஞாதிகள், பந்துக்கள் இவர்களோடு
கூடினவனாய்
ஹிதார்தம் – நன்மைக்காக
ஹத்வா – கொன்று
மானுஷே லோகே – மனித உலகில்
இமாம் ப்ருத்வீம் – இந்த பூமியை
பாலயன் – பரிபாலித்துக்கொண்டு
தசவர்ஷசஹஸ்ராணி – பதினாயிரம் வருஷங்கள்
ச – அத்தோடு கூட
தச வர்ஷசதானி – ஆயிர வருஷங்கள்
வத்ஸ்யாமி – வாசம் செய்யப் போகிறேன்.
ஏவம் தத்வா வரம் தேவோ தேவானாம் விஷ்ணுராத்மவான் |
மானுஷே சிந்தயாமாஸ ஜன்மபூமிமதார்மன: ||
பாலகாண்டம், 15ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 31
ஆத்மவான் – தைரியமுடைய
தேவ: தேவரான
விஷ்ணு: – விஷ்ணு பகவான்
தேவானாம் – தேவர்களுக்கு
ஏவம் வரம் – இவ்வாறு வரத்தை
தத்வா அத – கொடுத்து, ஆகவே
மானுஷே – மனிதனிடத்தில்
ஆத்மன: – தன்னுடைய
ஜன்மபூமி – ஜன்மபூமியை
சிந்தயாமாஸ – ஆலோசித்தார்.
மஹாவிஷ்ணு இப்படியாக தேவர்களுக்கு வரத்தைக் கொடுத்தார். இது கேட்கப்பட்டு கொடுக்கப்பட்ட வரமாகும்.
**