ரேகையில் கனி கொள்; புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள்- 3 (Post No.13,636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,636

Date uploaded in London – 6 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

LAST PART

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள் 3

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில்  மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.

ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுயரை )

நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம். நெல்லிக்காய் லேகியம்- சியவனப் பிராஷ் — உடலுக்கு நல்லது என்பதை ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா உலகம் முழுதும் பரப்பினார். அவருக்கு முன்னர் அவ்வையார், ஆல்பிரூனி ஆகியோரும் கரு நெல்லிக்காய் மஹிமையை புறநானூறு மூலமும் ஆல்பிரூனி நூல் மூலமும் நமக்கு உணர்த்தினர் . பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.

ரேகையில் கனி கொள் 94

CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY

OR

SEEK OUT VEINS OF LOVE

அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.

பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.

Be composed when exasperated என்பது இன்னும் ஒருவர் மொழிபெயர்ப்பு; களைப்பிலும் கவலையிலும் அன்றலர்ந்த செந்தாமரை போல நீ இருப்பாயாகுக ; இடுக்கன் வருங்கால் நகுக என்ற வள்ளுவன் குறளை நினைவிற்கொள்க

****

மூப்பினுக்கு இடங்கொடேல். 80

GIVE NO ROOM FOR AGEING

****

யௌவனம் காத்தல் செய்.88

CONSERVE YOUTH

****

ரூபம் செம்மை செய்.(93)

PERFECT THE FORM

OR

Be elegant in your shape  

****

மூன்று வாக்கியங்களிலும் ஒரே செய்திதான் இருக்கிறது .இதற்கு குச் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன .

நரை திரை இல்லாமல் வாழ நமது சுற்றுப்புறச் சூழல் நமக்கு கவலை இல்லாத வாழ்வினைத் தரவேண்டும் ; இது புறநானூற்றுப் புலவர் பிசிராந்தையாரின் கண்டுபிடிப்பு

‘உங்கள் வயது பலவாகியும் இன்னும் நரையில்லாம லிருக்கின்றீர்களே! இது எப்படி முடிந்தது? என்று கேட்பீர்களானால் காரணங் கூறுகிறேன் கேளுங்கள்! என் மனைவி சிறந்த குணங்களையுடையவள்; என் மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் மேற்பார்வையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என் உள்ளம் போல் ஒத்துழைக்கின்றனர். எனது நாட்டு மன்னவனும் குடிகளுக்குக் கொடுமை செய்யாமல் காப்பாற்றுகின்றான். நான் வாழும் ஊரிலே அறிவும் அடக்கமும் உள்ள ஆன்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் சிறந்த கொள்கையை உடையவர்கள். இதனால்தான் நான் கவலையின்றி, நரை திரையின்றி நன்றாக வாழ்கின்றேன்’’ என்று பட்டென்று பதில் கொடுத்தார்.

யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்கு ஆகியர்; என வினவுதிர் ஆயின்,

மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளைஞரும்; வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.                             (பா. 191)

இன்னொரு எடுத்துக்காட்டு பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்; நாட்டின் பிரதர் ஆனாலும் காலை 4 மணிக்குப் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சிரசாசனம் போடுவார்; இதனால் இறக்கும் வரை அவரது முகம் இளமைப் பொலிவுடன் திகழ்ந்தது.

மூன்றாவது வழியும் உண்டு; அதற்கு பொருட்செலவு அதிகம். மேலை நாடுகளில் டாக்டர் சர்ஜரிக்குகள், கிளினிக்குகள் ஆகியவற்றில் உட்கார்ந்தால் அங்குள்ள டெலிவிஷன் திரையில் ஓ டும் விளம்பரங்களைக் காணலாம்; உங்கள் பல்லினை,முத்துப் பல்லாக்குவேன் ; உங்கள் முகத்தை 16 வயது இள நங்கை ஆக்குவேன், உங்கள் சிறுத்த முலைகளை பருக்கச் செய்வேன் என்றெல்லாம் படிக்கலாம்.

சுருங்கச் சொன்னால் மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடலாம்; ஒய்  கொண்டையும் போடலாம்!

****

ருசிபல வென்றுணர்.92

MASTER MANY A TASTE

OR

Win over your sensory perception

****

வருவதை மகிழ்ந்துண்.103

ACCEPT WHATEVER COMES

சாப்பாடு, உணவு பற்றி பாரதியார் அதிகமாகவே சொல்கிறார் ; இங்குள்ள அறிவுரைக்கும் இரு பொருள் உண்டு ; ஆறு சுவை உணவையும் சாப்பிடப் பழகு அல்லது நாக்கு ருசியைப் பற்றி கவலைப்படாமல் அதை வென்று மேலே செல் . ஏனெனில் அடுத்து வருவதை மகிழ்ந்துண்.103 என்றும் சொல்லிவிட்டார் ; கிடைத்ததை வைத்து திருப்தி அடை ; இதைத்தான் மஹாத்மா காந்தியும் நமது உபநிஷத்துக்களை இயற்றிய ரிஷிகளும்  நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தார்கள் .

ஏனெனில் ஆசைக்கு அளவில்லை. ஆசை வளர வளர துன்ப ங்களும் வளரும் ; உடல் நலத்தையும் மன நலத்தையும் பேணிக் காக்க,வருவதை ஏற்பதே சிறந்தது

****

மொய்ம்புறத் தவஞ் செய்.83

DO TAPAS TO ACQUIRE PROWESS

பாரதியார் மீண்டும் தவம், தியானம் பற்றிப் பேசுகிறார்; அவரே வேத மந்திரங்களை காசியில் அத்தை வீட்டில் தங்கியபோது கற்றார்; இதற்கு முன் மந்திரம் பற்றியும் ஒரு வாக்கியம் உள்ளது. ஆகையால் தவத்தின் மூலம் ஆன்மீக பலம் பெற வேண்டும் என்பதே அவரது போதனை ; புத்தரையும் ஆதிசங்கரரையும் வேதங்களையும் போற்றிப் பல பாடல்களைப்  பாடியிருப்பதால்  இரு வேறு  கருத்துக்கு இடமேயில்லை.

*****

மோனம் போற்று.84

HAIL SILENCE

மெளனம் இருப்பதை இந்துமத நூல்கள் போற்றுகின்றன. ரமண மஹரிஷி, மெளனம் முலமே தனது போதனைகளை வழங்கினார் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) அடிக்கடி மெளன விரதம் இருந்து பேசாமல் இருந்து விடுவார் . இது ஆன்மீக பலத்தை அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல; வாயினால் கெட்டுப்போகும் வாய்ப்புகளைக் குறைக்கும். கத்திப் பேசி சக்தியை வீணடிக்காமல் இருக்கலாம். பாரதியும் வேறு ஒரு கவிதையில் இதைப்போற்றுகிறார் 

மெளனம் பற்றி  பாரதி பாடல்

எனக்கு வேண்டும் வரங்களை

     இசைப்பேன் கேளாய் கணபதி.

மனத்திற் சலனமில்லாமல்,

     மதியி லிருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

     நிலைவந் திடநீ செயல்வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறுவய   

     திவையுந் தரணி கடவாயே.

****

வீரியம் பெருக்கு. 106 INCREASE VIRILITY

இதையும் இருவிதமாக வியாக்கியானம் செய்யலாம்;

பெரும் பாலும்  வீரியம் என்பதை பாலியல் நூல்களில் ஆண்மை, விந்து என்ற பொருளில் பயன்படுத்துவர்; அதாவது அலிகளுக்கு இது இல்லை. ஆகவே அலி போல இராதே; ஆண்மகன் போல இரு என்பாதே பொருள்.

இரண்டாவதாக ஆண்மை= வீரத்தைப் பெருக்கு என்றும் சொல்லலாம் .

நமது காலத்தில் வாழ்ந்த பாரதியாரே சில சொற்களால் பல பொருட்களளைத் தருகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த , ஒலித்த  வேதங்களுக்குப் பொருள் கண்டுபிடிக்க முயல்வோரை  எண்ணி வியப்பதா ? சிரிப்பதா ?

–சுபம்–

TAGS- ரேகையில் கனி கொள் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மருத்துவ செய்திகள் 3,

Leave a comment

Leave a comment