WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,637
Date uploaded in London – 6 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Great Tamil poets from Appar 600 CE to Bharati (died in 1921) challenge God of Death. Since they were worshippers of Lord Siva and His son Skanda, they didn;t fear death. They knew what happened to Yama Dharman when he came to take the like of teenage boy Markandeya. Even Tiru Valluvar mentioned it in his Tamil Veda Tirukkural.
Tirumular and Arunagiri say they will cut Yama with the sword of wisdom. Bharati is the boldest of the poets, who says, Hey! come near me. I will crush you like the weeds. Here are some poems in English and Tamil:
****
Tamil Poet Bharati challenges Yamaa!
Kaalaa (Death)! I spurn as a piece of weed!
Come here. Let me crush you—Ha, Ha!
I meditate on the Vedic singers,
Velaayutaa (Skanda) guards the fort of my mind.
Do you forget what befell the crocodile
When Gajendra invoked the Lord?
Death (Kaalaa)! I spurn you…..
Failed you not when Markandeya
Fleeing from you, sought Siva’s refuge?
A thousand miles away, I order you
I confront you as Hari, himself!
Death (Kaalaa)! I spurn you…..
(Dr T N Ramachandran’s Translation. Bharati published his Tail poem in in the annual number of Swadesamitran newspaper in 1919)
Yamaa, Kaalaa= Lord of Death or death.
****
பாரதி, திருமூலர்,அப்பர், வள்ளுவர் பாடல்களில் எம தர்மன்
7. காலனுக்கு உரைத்தல்
ராகம் – சக்கரவாகம்
தாளம்-ஆதி
பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
[துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட,
[மூடனே?அட (காலா)
2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
[யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)
*****

Tirumular warns Yama
I will use Wisdom Sword and cut Yama into pieces- Tirumular
Their Thought Power
If God of Death comes,
I shall smite him with Sword of Jnana,
If Siva comes,
I am sure to go with Him;
Long back had I sundered Karma,
To birth leads;
Who can stand against Thought,
Of intense devotion born?
2927. நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதிராரே. – திருமூலர்
****

Tamil Veda author Tiru Valluvar says One can defeat Yama, like the teen age boy Markandeya
Ancient commentator of Tirukkural/ Tamil Veda says it is a reference to Markandeya Purana.
Those who have achieved the strength of penance
Could defat even the Lord of death- Kural 269
Or
Those who have acquired strength through asceticism have the power of overcoming death- 269
Or
The E’en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.- 269
Couplet Explanation:
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).-269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.–குறள் 269
****
Appar 600 CE
We are subject to none; we fear not Death; we will not
Suffer in hell; we are without falsity; we will ever be glad;
We know no illness; we do not bow; with us joy abides
For ever; never will we suffer sorrow; know what we are
The Bondsman – never to be manumitted..of Sankara
Who wears in one ear the Kuzhai of pure white shell
The Sovereign who is subject to none; Ha, we have
Attained His roseate flower fresh feet twain
Dr T N Ramachandran’s translation
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்
நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்
மலர்ச் சேவடி குறுகினோமே- அப்பர் தேவாரம் – அப்பர்
*******
கந்தரலங்காரம் பாடல்களில் குறைந்தது 7பாடல்களில் எம தர்ம னுக்கு அருணகிரி நாதர் எச்சரிக்கை விடுகிறார் ;பாடல்கள் :21, 25, 64, 69, 81, 86, 87
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே 25
69.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி
வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. 69
86.
வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. … 86
87.
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே.- கந்தர் அலங்காரம்
—subham—
Tags- Yama, God of Death, Arunagiri, Bharati, Tirumular, Appar, Challenge, காலா, யமன், பாரதி, திருமூலர், அப்பர், அருணகிரி, கந்தர் அலங்காரம்