திருமந்திரத்தில் குறளும் கீதையும்;  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 49 (Post No.13,640)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,640

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

திருமந்திரத்தில் குறளும் கீதையும்

திரு மந்திரத்தில் ஏராளமான பாடல்களில் தமிழ் வேதமான  திருக்குறள் மற்றும்  பகவத் கீதை  கருத்துக்களை திருமூலர் புதைத்து வைத்துள்ளார்; இந்த மூன்று நூல்களையும் கற்றவர்களுக்கு,  உடனே அவைகளை ஒப்பிட்டு மகிழத்  தோன்றும் . ஞேயம் , ஞாதுரு போன்ற சொற்களை நம்ம்மில் பலரும் கேட்டிருக்கமாட்டோம். பகவத் கீதை பயின்றோருக்கு உடனே இவை நினைவுக்கு வரும். திருமூலர் அவைகளை எடுத்தாள்கிறார்.

திருவள்ளுவர் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரை தங்கள் பாடல்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களை அள்ளித் தூவி இருக்கின்றனர். ஆகையால் எவரேனும் சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று கிளம்பினால் அவர்கள் தெய்வத் தமிழை அழிக்கப் புறப்பட்ட ராட்சதர்கள் , அரக்கர்கள் என்பதை அறிய வேண்டும். இந்த எல்லா நூல்களும் வேதங்களைப் புகழ்ந்து பேசுகின்றன  இந்து மதத்தைக் காப்பாற்ற 3000 திருமந்திரப் பாடல்கள் கூட வேண்டாம். திருக்குறளின் அறத்துப் பாலும் பொருட்பாலும் மட்டுமே போதும் அல்லது பாரதியார் பாடல்கள்  மட்டுமே போதும்.

திருமந்திரத்தில் குறளும் கீதையும் என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதால் பாடல் எண்களை மட்டும் கொடுக்கிறேன். ஆன்மீக அன்பர்களும் ஆராய்ச்சியாளர்களும் துருவி ஆராயலாம் .:-

திருக்குறள் ஒப்பீடு : 390, 429, 536, 484, 514, 568, 177, 983, 2046, 2264, 2119, 2265, 2409, 2219, 2996, 2397, 2409, 2400, 2279, 2071, 1985, 1996, 1839, 1754, 1437, 1103,

பகவத் கீதை ஒப்பீடு :528, 688, 876, 1439, 1449, 1611, 1603, 1629, 2927, 2167, 2292/93, 2299, 2277, 2285, , 2536, 2598, 177, 2264, 2119,2265, 2188, 2953, 2821, 2409,

ஆதி சங்கரர் பாடல்கள் ஒப்பீடு :422, 425, 433, 428, 2274, 527, 547, 2472, 2052, 2156, 2203, 2209, 2998, 2454, 2270, 2250/51, 1965, 970, 1503,

பாரதியார் பாடல் ஒப்பீடு: 2152

மாணிக்கவாசகர் தாக்கம்- 2762, 2715, 2697, 2531, 241, 2103, 2025/26, 1812, 1882, 181, 1747/56, 1665, 1580, 1310, 1055, 893,

மாணிக்கவாசகரின் காலம், திருமூலருக்கு முற்பட்டது. பிள்ளையார், சிவலிங்கம் போன்ற குறிப்புகள் திருமந்திரத்தில் அதிகம்; திருவாசகத்தில் அவை இல்லை. மாணிக்க என்ற சொல்லை  பல இடங்களில் திருமூலர் பயன்படுத்துவதும் ஆராய்ச்சிக்குரியது

திருப்பாவை தாக்கங்கள் –594, 806, 2316, 2893

இன்னும் நிறைய உள ; இவை மாதிரிக்கு மட்டுமே.

பயன்படுத்திய நூல் -தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் .

*****

ஒரு சில எடுத்துக்காட்டுகள்

ஆறாம் தந்திரம் திருமந்திரம்

3. ஞாதுரு ஞான ஞேயம்

ஞேயம் ஞாத்ரு

ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்

ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்

ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்

ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்

ஆயத்தின் நின்ற அறிவறி வாறே.

(ப. இ.) திருவருள் துணையால் ஞேயமாகிய திருவடிப்பேற்றில் உறைந்து நின்றோர்க்கு, முற்றுணர்வாகிய சிவஞான முதலியன நிலை பெறும்.. ஆண்டவனை அடையும் நன்னெறியினைப்பற்றி வாழும் அறிவினை நல்கும் வாயிலினைப் பயப்பதாகும் அவ் வறிவுடையவரே சிறந்த நிறைந்த அறிவராவர்.

(அ. சி.) ஞேயத்தே நின்றோர்க்கு – மெய்ப்பொருளை ஆராய்வோர்க்கு. ஞேயத்தின்….வீடாகும் – மெய்ப்பொருளை அறிந்த ஆன்மாவின் அறிவே முத்தியைப் பயக்க உதவியாகும்.

ஞேயம் ஞாதுரு

1587. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி

பாலித்த முத்திரை பற்றும் பரஞானி

ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற

மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

(ப. இ.) முன் ஓதிய காண்பன், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச்சிறப்பால் உள்ளங்கொள்கின்ற சிறந்த மெய்யுணர்வுடையோன் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட்கண்ணாற் கண்டு அம் மெய்ப்பொருளின் திருவடியிற் புகுவன்,

2340, 2341 பாடல்களையும் காண்க

*****

பகவத் கீதையில் இவை முதலில் வந்தன:

अर्जुन उवाच
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव || 13-1

அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||

அர்ஜுந உவாச கேஸ²வ = அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா
ப்ரக்ருதிம் புருஷம் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ச = பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச = ஞானம், ஞேயம் என்னும்
ஏதத் வேதி³தும் = இவற்றை அறிய
இச்சா²மி = விரும்புகிறேன்

अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥

அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||

ஜ்ஞேயம் தத் = அறியத் தக்க அது (பிரம்மம்)
பூ⁴தேஷு அவிப⁴க்தம் ச = உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல்
விப⁴க்தம் இவ ச ஸ்தி²தம் = பிரிவுபட்டதுபோல் நிற்பது.
பூ⁴தப⁴ர்த்ரு = பூதங்களைத் தாங்குவது
ச க்³ரஸிஷ்ணு = அவற்றை உண்பது
ச ப்ரப⁴விஷ்ணு = பிறப்பிப்பது

உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.

****

நான் 1994-ம் ஆண்டில் படித்தபோது எடுத்து எழுதிய குறிப்புகளே இதுவரை எழுத உதவின. ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை; எவ்வளவோ மந்திர,,தந்திர, எந்திரங்களை திருமூலர் குறிப்பிடுகிறார். அவைகளை உண்மையில் செய்வோர் இன்றும் இருப்பார்கள்; அவர்கள் அவைகளை விளக்குவதே முறை. எடுத்துக்காட்டாக அஷ்டமாசித்திகள், குண்டலினி சக்தி பற்றி எவர் வேண்டுமானாலும் எழுதலாம். அவைகளைச்  செய்யும் சக்தி படைத்தவர்கள் இருந்தால்தான் நாம் அதுபற்றிப் பேசலாம். அதுவரை அவைகள் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் பொருளே இல்லை.

அடுத்த கட்டுரையில் நிறைவு செய்வோம்!

–subham—

tags- ஞாதுரு, ஞானம், ஞேயம் திருமந்திரத்தில், குறளும் கீதையும் , திருக்குறள் ,பகவத் கீதை, திருமூலர், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 49

Leave a comment

Leave a comment