WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,653
Date uploaded in London – 11 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பாரதியின் கருத்தில் மனித மிருகங்கள்
ஒரு புதிய உண்மை வெளிவரும்போது அதை ஆசையோடு ஏற்காமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக்க கண்டும் அஞ்சும்) ஆந்தை
தன் காரியத்தில் விருப்பம் இல்லாமல் பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு , அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்
கண்ட விஷயங்களுக்கெல்லாம் திடீர் திடீரென்று கோபம் அடைகிறவன் வேட்டை நாய் .
பிறன் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும் அக்கிரமத்தை ஹாரி முடியாமல் மந்தமாகப் பொறுத்திருப்பவன் கழுதை
வஞ்சனையாலும் , தந்திரத்தாலும் சமயத்துக்கேற்பப் பலவித கபடங்கள் செய்து வாழ்பவன் நரி .
ஆர்வம் இல்லாமல் எதையாவது நினைத்து ஏங்கிக் கொண்டு , மனஞ்சோர்ந்து , தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. —பாரதி
தொகுத்தவர் மரியா ஜான்
நன்றி – மஞ்சரி , நவம்பர் 1968
xxxx

தமிழபிமானி யார் ?
தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்திலேஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.
பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும் , தமிழராகப் பிறந்தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும் , இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.
தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி தமிழபிமானி ஹிந்து தர்மத்தைக் கைக்கொண்டு நிற்பவன். தேவாரத்திலும், திருவாய் மொழியிலும், அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை.– பாரதி
நன்றி- மஞ்சரி டிசம்பர் 1968
xxxxxx

தீபாவளி
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்.
“தற்காலத்திலே ஹிந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.”
“நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாம் எ ல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.”
ஆனால் “சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையானது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்வதாக வேண்டும்.”
“எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராக்ஷஸர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.
அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை ஐந்து
அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது. “தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் ப்படி அ ழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?”
மகாவீரத்தன்மை பெற்று அஷ்டலக்ஷ்மிகளுக்கும் இருப்பிடமாக விளங்குவதற்குரிய வழிகளைத் தேடுங்கள் உங்களுக்கெல்லாம் சர்வாபீஷ்டமும் சித்தியடைவதாக.— பாரதி
வந்தே மாதரம் (இந்தியா )
நன்றி மஞ்சரி, 1968T
—subham—
AGS- தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி, சுப்பிரமணிய பாரதி