இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளில் சில ‘ஜோக்’குகளை படிக்கையில் எனக்கு வெடிச் சிரிப்பு வருகிறது . இது நேற்று அல்லது போன வாரம் மட்டும் இல்லை. 1971-ம் ஆண்டில் தினமணி பத்திரிகையில் சப் எடிட்டராக சேர்ந்ததிலிருந்து சிரிக்கிறேன். லண்டனில் இலங்கை கதாசிரியர்கள் எழுதும்  நூல் வெளியீட்டு விழாவில் தலைமை  தாங்கும்போதும் சிரிப்பேன்; ஆனால் வெடிச் சிரிப்பு இல்லை; வெறும் புன்சிரிப்பு மட்டுமே..

துக்ளக் பத்திரிக்கையில் தமிழே இல்லை என்பான் ஒருவன்; இன்னொருவன் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு  ர, ற  வேறுபாடே தெரியாது என்பான்; அவர்கள் கதைக்கும்போது எனக்கு மேலதிக சிரிப்பு வரும்; கூட்டத்தில் இதை எதிர்த்துக் கதைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று கருதி நூலை அங்குரார்ப்பணம் செய்வதை அனுமதிப்பேன்; அடுத்த கூட்டத்தில் வளமைபோல சந்திப்போம்; அப்போது இந்தத் தலைப்பில் (இந்தியத் தமிழா ? இலங்கைத் தமிழா ? எது சிறந்தது ?) என்று  ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யுங்கள். நான் என் பதிலைத் தருகிறேன் என்று சொல்லி தலைமை உரையை  முடித்து விடுவேன். 

மதுரை தினமணி அலுவலகத்தில் 16 ஆண்டுக்  காலம் சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்து பிபிசி என்னை லண்டனுக்கு அழைத்து வந்த பின்னரும் என் ஆராய்ச்சி நிற்கவில்லை. மதுரையில் வாரத்துக்கு ஒரு முறை நைட் ட்யூட்டி வரும்; இரவு 3 மணி வரை உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு நான் ஒருவனே பொ றுப்பு ; கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு டெலிப்ரிண்டரை பார்த்துக்கொண்டே இருப்பேன். பிளாஷ் பிளாஷ் பிளாஷ் பிளாஷ்  என்று டெலெய்ப்ரிண்டர் சப்தம் போட்டாலே ஏதோ முக்கியச் செய்தி வருகிறது என்று பொருள்; உடனே ஓடிச் சென்று அவசரம் அவசரமாக கடைசி செய்தி என்று எழுதிப்போடுவேன் ; விடுதலைப் புலிகள் சென்னை  விமான நிலையத்தில் குண்டு வைத்து 26 பேரைக்கொலை  செய்தபோது தினமணி முதல் பக்கத்தையே அடியோடு மாற்றும் தேவையும் ஏற்பட்டது.

இரவு எட்டு மணியிலிருந்து 3 மணி வரை முக்கியச் செய்தியே வராத போது , திராவிடக் கழக விடுதலை, தி.மு.கவின் முரசொலி பத்திரிக்கைகளை படித்து அதிலுள்ள ஜோக்குகளை அங்குள்ள சகாக்களுடன் பகிர்ந்து கொள்வேன் அப்போதுதான் வெடிச் சிரிப்பு; கருணாநிதியின் இத்யாதி இத்யாதி ஸம்ஸ்க்ருதச் சொற்கள் முதலியவற்றை பத்திரிகையில் UNDERLINE செய்வேன்; அடிக்கோடு போடுவேன் . விடுதலையிலும் முரசொலியிலும் எத்தனை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்று கணக்குப்போடுவேன் ; நாங்கள் எங்கள் தினமணியை அவர்களுக்கு இலவசமாக அனுப்புவோம். அவர்களும் EXCHANGE COPY    எக்ஸ்சேஞ்  காப்பி என்ற முறையில் எங்களுக்கு முரசொலி, விடுதலை பத்திரிக்கைகளை அனுப்புவார்கள்; ஆபீஸ் பையன் இவைகளை தினமும் கோப்பில் கோர்த்து வைப்பான்.

லண்டனுக்கு என்னை பிபிசி அழைத்துவந்து தமிழோசையில் வேலைக்கு அமர்த்தியபோது இலங்கைவாசிகள், மலேசியாவாசிகள் வருகையில் அவர்களிடமிருந்து வீர கேசரிதமிழ் நேசன் பத்திரிக்கைகளை வாங்கி இதே அடிக்கோடு போடும் வேலையைச் செய்வேன்; லண்டனில் வாரம் தோறும் குமுதம், துக்ளக் முதலிய ன வாங்கி இதே மொழி ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பகுதி நேர வேலை பார்த்த காலத்தில் தினமணி பத்திரிக்கையை வரவழைத்து தினசரி வாசக சாலையைத் தொடங்கினேன். நான் விலை கொடுத்து வாங்கிய பத்திரிக்கைகளையும் படிப்பதற்கு வைப்பேன் இவை அனைத்தும் எனது 50 ஆண்டு மொழி ஆராய்ச்சிக்கு உதவின .

****

ஐயா உங்க சுய புராணம் போதும்/ சப்ஜெக்டுக்கு வாங்க சப்ஜெக்டுக்கு வாங்க ! தலைப்புக்கும் உங்கள் சுய புராணத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. இதோ வந்துவிட்டேன்!

கடந்த சில மாதங்களில் “டமிள் பட்டிரிகைகழில்” இரண்டு துணுக்குகளைப் படித்ததால் இந்தக் கட்டுரை! கிருபானந்த வாரியார், கி.வா.ஜ போன்றோர் இலங்கைத் தமிழ் பற்றி புகழ்ந்த செய்திகள்  அவை; ஒரு கல்யாண வீட்டுக்குப் போனாலோ, விருந்துக்கு அழைத்தாலோ ஏ தாவது இரண்டு நல்லதைச் சொல்லி பாராட்டுவது இந்துக்களின் சம்பிரதாயம் . அதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் சொல்லுவது என்ன வென்றால்……………………..

1.உலகம் முழுதும் உள்ள POPULAR பாப்புலர் தமிழ் நாளேடுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு ஸம்ஸ்க்ருதச் சொற்களை பத்திரிகைகளில் பயன்படுத்துகின்றன சில்லறைப் பயல்கள் நடத்தும் நாளேடுகளைக் கணக்கில் சேர்க்காதீர்கள்;

2.ஒரு மொழியில் பிற மொழிக் கலப்பு இருப்பதைத் தவிர்க்கவே முடியாது.  இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு ஆங்கிலம்; அதில் ஆங்கில சொற்களை விட பிற மொழிச் சொற்களே அதிகம் ! ஆனால் இந்தக் கலப்பு அந்த மொழியின் உருவையே மாற்றி விடக்கூடாது.

3. தமிழில் சர்வகலாசாலை என்று எழுதிவந்ததை இன்று பல்கலைக்கழகம் என்றும், ஜலம் என்று எழுதிவந்ததை இன்று தண்ணீர் என்றும் எழுதுகிறோம்; யாரும் சிரிக்கவில்லை; இவ்வாறு காலேஜ் கல்லூரி ஆனது, கம்பியூட்டர் கணினி ஆனது; வரவேற்கத்தக்கதே; ஆயினும் அத்தனை விஷயங்களையும் தமிழில்தான் எழுத வேண்டும் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றும் ஜெர்மனியை செருமனி என்றும் எழுத வேண்டாம். ஏனெனில் உலகில் தமிழன் ஆங்கிலம் பேசும்போது அதிக தமிழ் ஆக்சென்ட் TAMIL ACCENT வருகிறது. வடக்கத்தி ஆட்களிடம் இது குறைவு.

4. தமிழ் ஒரு குறையுள்ள மொழி. இந்தியாவில் ஸ ஷ ஜ ஹ க்ஷ இல்லாத பழைய மொழி இது ஒன்றுதான்; சம்ஸ்க்ருத மொழி ஒன்றில் மட்டுமே உலகிலுள்ள 95 சதவிகித மொழி உச்சரிப்பைக் கொண்டுவர முடியும். ஜ என்னும் எழுத்து உலகில் எந்தப் பழைய மொழியிலும் இல்லை. ச  என்பது பாரசீகத்தில் இல்லாததால் நம்மை எல்லாம்  ஹிந்து ன்று சொல்லிவிட்டார்கள். தமிழிலும் ச கிடையாதுசம்ஸ்க்ருதத்தில் எ ஒ ழ தவிர எல்லா ஒலிகளும் உண்டு.

அப்படியும் கூட புகழ்பெற்ற HARRYPOTTER ஹாரி/ ஹேரி பாட்டர் உச்சரிப்பை எழுத்தில் கொணர முடியாது. ஆகையால் நம்மவர் வெளி நாடுகளில் பேசும்போது நகைப்புக்குரியவர்கள் ஆகாமல் தடுக்க கம்ப்யூட்டர். மொபைல் போன் போன்றவற்றை அதே மொழியில் புழங்குவது நல்லது.. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களிடையே ஒரு சர்வே நட்த்தினால் நான் சொல்வது சரி என்பதை உணரலாம்.

5.எல்லா பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதம் (தின) ஏன் மாற்றவில்லை ?

எல்லா திராவிட கழிசடைகள் பெயரும் சம்ஸ்க்ருதம்; (நிதி) ஏன் மாற்றவில்லை ?

லண்டனில் எனக்கு இலங்கையர்கள், மலேசியர்கள் நண் பர்களாக உள்ளனர்; அவர்களுடன் கதைக்கும்போது நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை காண்கிறேன்.

*****

உங்களுக்கு ஒரு டெஸ்ட் / சோதனை

ஒரே நாளில் வெளியான இலங்கை, இந்திய, மலேசிய பத்திரிக்கைகளை எடுங்கள்; முதல் பக்கச் செய்திகளை மட்டும் பாருங்கள். ஹைலைட்டர் பேனா அல்லது சிவப்பு நிற பேனா மூலம் தமிழ் இல்லாத மொழிச் சொற்களை அடிக்கோடு இடுங்கள் ; எல்லா பாப்புலர் பத்திரிக்கைகளிலும் ஏறத்தாழ ஒரே விகிதத்தில் வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள் .

இன்னும் ஒரு சோதனை

உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பத்து நிமிடம் ரிக்கார்ட் செய்யுங்கள்; அதிசயிக்கத்தக்க அளவுக்கு வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக்  காண்பீர்கள்!

(நான் எழுதிய இந்தக் கட்டுரைக்கும் அதே கதிதான்! தமிழ் மொழி (???? !!!!!) வாழ்த்து எழுதிய மனோன்மணீய சுந்தரம் பிள்ளை போலத்தான்; அவரைப் பார்த்து சிரிப்பது போல என்னைப் பார்த்தும் சிரிக்கலாம்.)

****

கடைசியாக

நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று ஐந்து  நாட்களுக்கு நால் திசையிலும் பயணம் செய்தேன் ; 5 நாட்களிலும் தினகரன், வீர கேசரி வாங்கிப் படித்தேன்; செய்திகளைவிட நான் ஆகக் கூடிய மேலதிக அவதானம் (கவனம்) செலுத்தியது மொழிப பிரயோகம்தான்./ என் கருத்து சரியே என்பதை அவை காட்டின.

****

முடிவுரை

எல்லா நாளேடுகளும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை, ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகின்றன. அதில் தவறு இல்லை. ஆனால் பாலில் தண்ணீர் கலக்கலாம்; தண்ணீரில் பாலைக் கலக்காதீர்கள் .

இலங்கைத் தமிழ் எந்த விதத்திலும் இந்தியத் தமிழ் மொழியைவிட உயர்ந்தது இல்லை. சில நல்ல பழந் தமிழ்ச் சொற்களை கன்னடம், மலையாளம் , இலங்கை, மலேசியாவில் காணலாம். (எ .கா. அவன், இவன்,உவன் ) அதையே அளவுகோலாகக் கொண்டு அதுதான் சிறந்தது என்று சொல்லுவோரை அரை வேக்காடுகள் என்று கணக்கிற் கொள்ளுங்கள். இதற்கு மேலும் சம்சயம்/ சந்தேகம்/ஐயப்பாடு எழுந்தால் என்னுடன் கதையுங்கள் !

(கதைத்தல்– என்பது வால்மீகி ராமாயணத்தில் அடிக்கடி வரும் ஸம்ஸ்க்ருத வினைச் சொல் என்பது பலருக்கும் தெரியாது !)

******

இன்னும் கொஞ்சம் கதைக்கலாமா ? விளங்குமா ?

லண்டனில் நான் தினமும் பஸ்ஸில் கேட்கும் இலங்கைத் தமிழ் :- எங்க நிக்கற ; இதோ பஸ்ஸில் நிக்கறேன் ; வெம்பிளிலே நிக்கரென் ( ஆனால் பேசும் ஆள் பஸ்ஸில் உட்கார்ந்து இருப்பார்!! நிக்கல்ல !!!)

அவர் அப்பா மோசம் போயிட்டாரு (இறந்து விட்டார்)

நீ வெளிக்கிட்டயா ? இல்ல . வெளிக்கிடல (இந்தியத் தமிழனுக்கு கக்கூஸ் நினைவுக்கு வரும்)

ரொம்ப மணக்குது ? தள்ளிப்போ (நாற்றம் அடிக்குது)

அதான் சொன்னேனே ! குசினி அறைல இருக்கு (போர்ச்சுக்கீசிய சொல்- கிச்சன்- சமையல் அறை)

காலையில் தினமும் பான் (ரொட்டி) சாப்பிடுவேன்

அவர் என்ன பேசிட்டாரு ! (கோபத்தில் என்னை  திட்டிவிட்டார் )

அவர் (சின்னக் குழந்தை) நல்லா கதைக்கிறார் ; பொடியன் ( பெரியவன் ) வரமாட்டான் (குழந்தைகளுக்கு அவர், இவர் போடுவார்கள்; பெரியவனுக்கு அவன், இவன் போடுவார்கள்; இந்தியாவில் அப்படி அல்ல ).

*****

எல்லோரும் கிரியா CREA TAMIL DICTIONARY அகராதி வாங்குங்கள் . சுமார் 17, 000 இலங்கைத் தமிழ் சொற்கள் அதில் உள்ளன. எல்லோரும் சங்கத் தமிழ் சொல்லடைவு வாங்குங்கள் ; சங்க காலத்தில் , 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியத் தமிழன் நல்ல தமிழ் பேசினான் என்பது விளங்கும். (புரியும் என்றால் இந்தியன்; விளங்கும் என்றால்- இலங்கையன் .இயலுமா என்றால் இலங்கையன் .; முடியும் என்றால் இந்தியன்.இம்பெர்சனல் வெர்ப்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது இதையும் கற்பித்தேன் .

நான் 20 ஆண்டுகளுக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது இலங்கைத் தமிழன் கேட்ட முதல் கேள்வி:

நீங்கள் எந்தத் தமிழ் சொல்லிக் கொடுப்பீர்கள் ?

இந்தியத்  தமிழா ? இலங்கைத் தமிழா ?

என் பதில் :


தமிழ் ஒரே தமிழ்தான்; பிரிட்டனில் ஸ்காட்லாந்த்து அயர்லாந்து வேல்ஸ், இங்கிலாந்தில் பேசும் ஆங்கிலத்தில் என்ன வேறு பாடு உண்டோ அது தமிழிலும் உண்டு; எப்படி ஆங்கில எழுத்து ஒரே மாதிரி உலகம் முழுதும் உள்ளதோ அதே போல் தமிழுக்கும் எழுத்து ஒன்றே; கவலைப்படாதீர்கள்; நான் கற்பிப்பது பேச்சுத்  தமிழ் இல் லை; இலக்கியத் தமிழ்; இந்த அ டிப்படையைக்  கற்றால் உலகம் முழுதும் உள்ள தமிழ் உங்களுக்கு விளங்கும் !

–சுபம் —

 இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், கதைக்கிறேன்,

Leave a comment

Leave a comment