WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,657
Date uploaded in London – 12 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி- ஷேக்ஸ்பியரும் பாரதியும்!

அதர்வண வேதத்தில் பூமி சூக்தத்தில் உலகிலேயே பழமையான தேச பக்தி பாடல் இருப்பதை பூமி சூக்தக் கட்டுரைகளில் கண்டோம் .தற்கால தமிழ் உலகில் தன்னிகரில்லாத கவிஞனா க விளங்கும் சுப்பிரமணிய பாரதியார் பாடிய நூற்றுக்கணக்கான தேச பக் திப் பாடல் களுக்கு அறிமுகம் தேவை இல்லை.
ஷேக்ஸ்பியரும் கூட பாரதியாரைப் போல தேச பக்தியைக் கொண்டாடுகிறார் .
*****
Shakespeare ஷேக்ஸ்பியர் சொல்கிறார்
Dear earth, I do salute thee with my hand.
Richard II 3-2-6
அன்புள்ள பூமியே , நான் என் கைகளால் உன்னை வணங்குகிறேன்
இரண்டாம் ரிச்சர்ட் நாடகம் .
****
Not that I loved Caesar less, but I loved Rome more.
Julius Caesar 3-2-21
சீசரை நான் குறைவாக நேசித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் ; ஆனால் எனது
ரோமானிய சாம்ராஜ்யத்தை அவரை விட அதிகமாக நேசிக்கிறேன்
ஜூலியஸ் சீசர் நாடகம்
****
Bleed, bleed, poor country
Macbeth 4-3-31
பரிதாபத்துக்குரிய (என்னருமை ) நாடே! ரத்தம் சிந்து! ரத்தம் சிந்து!
மாக்பெத் நாடகம்
*****
பாரதியார் பாடல்களை ஒப்பிடுவோம்
32. சத்ரபதி சிவாஜி
(தன் சைனியத்திற்குக் கூறியது)
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
………
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்
நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
*******
1. வந்தே மாதரம்
ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
******
வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்
சஸ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்
கோடி கோடி கண்ட கலகல நினாத கராலே
கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே
அபலா கெனோ மா நமாமி தாரிணீம்
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதல வாரிணீம் மாதரம் வந்தே மாதரம்
துமி வித்யா திமி தர்ம
துமி ருதி துமி மர்ம த்வம் ஹி ப்ராணா சரீரே
பாஹுதே துமி மா சக்தி
ருதயே துமி மா பக்தி
தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே மாதரம் வந்தே மாதரம்
த்வம் ஹி துர்கா தசப்ரஹண தாரிணீம்
கமலாம் கமலதல விஹாரிணீம்
வாணீ வித்யா தாயினீம்
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
சுஜலாம் சுபலாம் மாதரம் வந்தே மாதரம்
ச்யாமளாம் சரளாம்
ஸுஸ்மிதாம் புஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம் வந்தே மாதரம்
பாரத மாதா கீ ஜெய்
*****
வந்தே மாதரம் வந்தே மாதரம் -பாரதியார் பாடல் (தமிழில் பொருள்_
தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம்
இனிய நீர், இன்சுவைக்கனிகள்,
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய், தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய், சுகமளிப்பவளே, வரமருள்பவளே,
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள், உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள், உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள், பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள், எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ, அறம் நீ, இதயம் நீ, உணர்வும் நீ,
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்.
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே, மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே, எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே, பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே, பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்
B C CHATTERJEE WROTE VANDE MATARAM SONG.
இது போல ஏராளமான பாடல்களில் பாரதத்தாயை வணங்கி தேசபக்தியை பாரதியார் பரப்பினார்
—SUBHAM—
TAGS- தேச பக்தி,ஷேக்ஸ்பியர், பாரதியார்,பாரத நாடு ,பார்க்கெலாம் திலகம், வந்தே மாதரம், தேசிய கீதங்கள், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 3