
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,668
Date uploaded in London – 14 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
அனுமனின் வால், திரவுபதியின் புடவை போல அற்புதமாக நீண்டு கொண்டே போக்கக்கூடியது என்று ராமாயணங்கள் பாடுகின்றன
ராமாயணங்கள் என்று பன்மையில் சொன்னதற்குக் காரணம் ௩௦௦௦ ராமாயண நூல்கள், கீர்த்தனைகள், பிற நூல் குறிப்புகள் உள்ளன . ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் புதிய தகவல் கிடைக்கிறது .
அனுமனுக்கு ராவணன் சபையில் உட்கார ஆசனம் கொடுக்கப்படவில்லை உடனே அவன் தனது வாலினை நீளமாக்கி அதைச் சுருட்டி ஆசனம் உண்டாக்கினான் ; இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் பல கோவில்களில் சிற்பமும் ஓவியங்களும் உள்ளன. இந்த அனுமன் இருக்கை விஷயம் பாவார்த்த ராமாயணத்தில் இருக்கிறது.
அனுமனின் வால் பற்றி ஆனந்த ராமாயணம் ஒரு சுவையான செய்தியை அளிக்கிறது . ராவணனின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய ராக்ஷஸ பட்டாளமே வந்தது. ஆனாலும் வால் எரிய மறுத்தது .அனுமனே ஒரு ஐடியா சொன்னான். ராவணனின் பத்து வாய்களால் காற்றினை ஊதினால் தீப்பிடிக்கும் என்றான் . ராவணன் பூ இவ்வளவுதானா என்று பத்து வாய்களால் ஊதினான் . உடனே தீப்பிடித்தது . ஆனால் அந்த தீ அங்கே மட்டும் பற்றவில்லை ; ராவணனின் தாடி. மீசை எல்லாம் பரவி அவன் முகத்தைக் கருக்கியது.

இந்தோனேஷிய மொழியில் உள்ள ராமாயணம் , விபீஷணன் விடுத்த எச்சரிக்கையை எழுத்தில் வடித்துள்ளது . அது என்னவென்றால் இந்தக் குரங்கினைக் கொல்லுங்கள் என்று ராவணன் கட்டளையிட்ட போது, கொல்லாதீர்கள்; குரங்கினால் இலங்கைக்கு ஒரு ஆபத்து வரும் என்று முன்பே சாபம் உள்ளது என்று விபிஷணன் நினைவுபடுத்துகிறான். அதற்குப் பின்னரே வாலுக்குத் தீ வைக்கும் கட்டளையை ராவணன் பிறப்பிக்கிறான்.
கிருத்திவாஸ ராமாயணம் என்னும் அஸ்ஸாமிய மொழி ராமாயணம் வால் பற்றிய மிகைப்படுத்திய வருணனையை அளிக்கிறது. அது ௧௦௦ யோஜனை நீளம் வளர்ந்ததாகவும் அதைத்தூக்க லட்சம் ராக்ஷஸர்கள் வந்ததாகவும் பகர்கிறது .ஆங்கில இலக்கியத்தில் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் நாவல் கும்பகர்ணன் அனுமன் விஷயங்களை கல்லி வரின் மீது ஏற்றிச் சொல்கிறது. இதைத்தான் ஈயடிச்சான் காப்பி என்கிறோம் .
தென் இந்திய மலைவாழ் பழங்குடி மக்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ராக்ஷன் ஒருவன் இரும்ப்புப்பட்டறையில் ஆயு தங்கள் செய்கையில் அனுமன் அங்கு கொதித்துக்கொண்டிருந்த இரும்பினைக் குடிக்கப் போனானாம். ; அப்படியும் அனுமனைத் தடுக்க முடியாததால் அனலாகத்தகித்த இரும்புக்கு குழம்பினை அனுமனின் வாலில் ஊற்றினானாம். அது தீப்பிடிக்கவே அனுமன் இலங்கை முழுதும் தாவிச்சென்று இலங்கையை தீக்கிரையாக்கினானாம். கற்பனைக்கு அளவுதான் உண்டோ !

இறுதியில் அனுமன் தன்னுடைய வாலில் இருந்த தீயைக் கடலில் முக்கி நடித்ததாக வால்மீகி ரா செப்புகிறது அனால் கிருத்திவாஸ ராமாயணம் மேலும் ஒரு kathaiyaik கூறுகிறது. தீயை எப்படி அணைப்பது என்று சீதா தேவியை மான் கேட்கவே உனது விசுவரூப வ்வாயில் வைத்தால் aal vaain தீ அவிந்து போகுமே என்றாளாம். அனுமனும் அவ்வாறே செய்ய முகம் karukirraam. கருகிப்போனதாம் ; எல்லோரும் nakaipparkale என்று எண்ணி மீண்டும் சீதையிடம் senru அனுமன் kamplaint seyyave கம்மபாய்ண்ட் பிழை
செய்யவே கவலைப் படாதே எல்லா குரங்குகளின் mukaththaiyum கறுப்பாக்கிவிடுகிறேன்; யாரும் உன்னைப் பார்த்து நகைக்கம்பமாட்டார்கள் என்று சீதாதேவி மறுமொழி பகnraalனரா
சிலர், அனுமன் நாரதரிடம் யோஜனை கேட்டதாகவும் அவர்தான் வாய் மூலமாக தீயை அணைக்கும் ‘ஐடியா’வை, முன் வைத்த தாகவும் விளம்புவர். அனுமன் பலத்தை மறந்தது பற்றியும் வெவ்வேறு ராமாயணம் வெவ்வேறு கதையை வழங்குகிறது கயிலாயத்தில் சேட்டைகள் செய்ததால் உன் பலத்தை நீ மறந்து போகக்கடவது என்று உமையம்மை சாபம் கொடுத்தாராம். . அனுமன் கெஞ்சிக் கூத்தாடியவுடன் இராமபிரான் கரம் பட்டவுடன் உன்னுடைய பலம் திரும்பி விடும் என்று உமா சொன்னாளாம். இன்னொரு கதை அனுமன் ரிஷி முனிவர்களின் ஜெப சாதனங்களை உடைத்ததால் அவர்கள் இப்படி சபித்ததாகவும் சொல்லுவர்.

–subham-
Tags- அனுமன் வால், சுவையான துணுக்குகள்