
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,667
Date uploaded in London – 14 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தாய்லாந்தில் ராமாயணம்


தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் மரகத புத்தர் கோவில் இருக்கிறது.அங்கு பிரகார சுவர்களில் ராமர், அனுமன் உள்ளனர். தாய் மொழி ராமாயணமான ராமகியன் அடிப்படையில் அவை செதுக்கப்பட்டுள்ளன. இந்த ராமாயணத்தில் பல வினோத விஷயங்கள் காணப்படுகின்றன. சேது பாலம் கட்டும்போது அனுமனுக்கும் என்ஜினீயர் நளனுக்கும் மோதல் ஏற்பட்டதாம். ராமன் அவர்களிடையே சமாதானம் செய்து வைத்தானாம். ராமபிரானை பாதாள லோகத்துக்கு மஹி ராவணன் கடத்திச் சென்றது போல பல புதிய கதைகள் தாய் ராமாயணத்தில் உண்டு . தனி புஸ்தகமே எழுதும் அளவுக்கு புதுக்கதைகள் உள்ளன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதால் , சுவையூயூட்ட பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அனுமன், நாரதரைச் சந்திக்கும், அனுமன் முகத்தில் அட்டைப் பூச்சி ஒட்டிக்கொள்ளும் சிற்பங்களும் கோவிலில் உள்ளன.
ஜப்பானில் எல்லைத் தெய்வமாக குரங்கு முக தெய்வம் உள்ளது எட்டாம் நூற்றாண்டு முதல் ஷிண்டோ மதக் கோவில்களிலும் இந்த தெய்வம் இருக்கிறது.
திபெத் , லாவோஸ் ஆகிய நாடுகளிலும் ஏழாம் நூற் றா ண்டு முதலே ராமாயணக் கதைகள் வழக்கில் இருக்கின்றன. மலேசியாவில் தோல் பாவைக்கூத்து ராமாயணம் உள்ளது தென்கிழக்காசிய நாடுகளில் ராமாயணம் இல்லாத இடமே இல்லை. இப்போது கிறிஸ்தவ நாடாகிவிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இரண்டு வகை ராமாயணங்கள் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக சீனாவில் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே ராம காதை பரவிவிட்டது.
சீனாவில் சன் வோ கிங் sun wukong என்ற அரசருடன் ஹனுமான் தொடர்பு உள்ளது. சிலர் அவர்தான் அனுமன் என்றும் பகர்வர் திபெத்திய புத்த மதம் பின்பற்றும் இடங்களில் அநுமானைக் காணலாம்.
இந்தோனேஷியாவில் சிவ பெருமானின் மகனாக அனுமனை வணங்குகின்றனர் . பதர குரு என்னும் சிவன் மகனாக அனுமார் வருகிறார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ஹனுமான் டோகா உள்ளது. அரண்மனை இருக்கும் இடத்தில் வாசலுக்கு அருகில் ஒரு அனுமன் சிலை இருக்கிறது.. அதனால் அந்த இடத்துக்கே ஹனுமான் டோகா என்று பெயர்.
இந்துக்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் விஷ்ணு கோவில்களில் அனுமார் வழிபாடும் நடை பெறு கிறது.
கம்போடியாவில் அங்கோர் வாட், , இந்தோனேஷியாவில் ஜாவாவிலுள்ள போரோபுதூர் ஆகிய இடங்களில் இராமாயண சிற்பங்களில் அனுமாரையும் பிற வானரங்களையும் காணலாம். அனுமனின் வீர தீரச் செயல்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன .
கும்பகோணம் ராமசாமி கோவில் சுவர்களில் ராமாயண சித்திரங்களில் அனுமார் நன்கு வரையப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அனுமார் சிலை !
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயரம் கொண்ட அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான அனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை ஆகும்
நியுயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும்.
டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகர் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட அனுமன் சிலையை நிறுவியுள்ளனர்
2024 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ விழாவில் ஹெலிகாப்டர் மூலம் சிலைக்கு மலர் தூவி, புனித நீர் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பித்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் மற்றும் அனுமன் நாமங்களை பக்தியோடு சொல்லி கோஷங்களை எழுப்பினர்.

இந்தியாவிலுள்ள முக்கிய ஹனுமார் கோவில்கள்
தமிழ் நாட்டிலுள்ள முக்கிய அனுமார் சிலைகள்
தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை ஆனது. ஸ்ரீரங்கம் அருகிலுள்ள மேலூரில் 37 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆஞ்சநேயருக்கு சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. , கும்பகோணம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன் கட்டிய கோவில்
நடிகரும் தீவிர ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவிலை 2021ம் ஆண்டில் கட்டியுள்ளார். நடிகர் அர்ஜுன் கூறுகையில் ” இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.
இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை.ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.
பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கும் வேலை 2023ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது.
***
கர்நாடகம் :
பஞ்சமுக அனுமன் சிலை அனுமன் குனிகல், தும்கூர் மாவட்டம்; கர்நாடகா 49 மீ ட்டர் ; 161 அடி உலகின் உயரமான பஞ்சமுக அனுமன் சிலை
***
ஆந்திர பிரதேசம் :
வீர அனுமார் சிலை அனுமன், விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் 41 மீ ட்டர்; 135 அடி உலகின் இரண்டாவது உயரமான அனுமன் சிலை.
***
மகாராஷ்டிரம் :
நந்துரா அனுமன் சிலை அனுமன் நந்துரா, புல்டாணா மாவட்டம், மகாராஷ்டிரம் 32 மீ ட்டர்; 105 அடி
***

புகழ் பெற்ற ஆஞ்சனேயர் கோவில்கள்
1.ஹனுமங்காதி, அயோத்தி
அயோத்தியில் உள்ள ஹனுமங்காதி கோயில், சரயு நதியின் வலது கரையில் உயரமான மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மக்கள் 76 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு நிறுவப்பட்டுள்ள அனுமன் சிலை 6 அங்குல நீளம் மட்டுமே உள்ளது, இது எப்போதும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
***
2.பாலாஜி ஹனுமான் கோவில், மெஹந்திபூர் (ராஜஸ்தான்)
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மெஹந்திபூர் என்ற இடத்தில், மிகப் பெரிய பாறை இருப்பதாக அறியப்படுகிறது. இது ஸ்ரீ ஹனுமான் என்று நம்பப்படுகிறது. புராணங்களின்படி, சிலையின் காலடியில் ஒரு சிறிய நீர் குளம் உள்ளது, அது ஒருபோதும் வற்றாது என்றும் கூறப்படுகிறது.
***
3.ஹனுமந்தரா, சித்ர கூடம்
சித்ர கூடம் அருகே ஹனுமந்திரா என்ற சிறிய இடம் உள்ளது. இங்கு, ஹனுமானின் ஒரு பழைய சிலை பல ஆண்டுகளாக மலைக்கு எதிராக நிற்கிறது மற்றும் ஒரு சிறிய நீர்நிலை இந்த சிலையைத் தொட்டு நதியை சந்திக்கிறது.
***
4.சங்கட மோச்சன் கோவில், காசி/ வாரணாசி (உ.பி.)
பெனாரஸ் என்பது அனுமனின் பெயருடன் தொடர்புடைய ஒரு பழமையான இடம். சங்கத்மோச்சன் என்று அழைக்கப்படும் இங்குள்ள பிரமாண்டமான ஆலயம் ஹிந்தியில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்தான் ஹனுமான் சாலீஸாவை இயற்றியவர்.
***
5.ஸ்ரீ ஹனுமான் கோவில், ஜாம்நகர் (குஜராத்)
1540 ஆம் ஆண்டில், ஜாம்நகருடன், இந்த ஹனுமான் கோயிலும் நிறுவப்பட்டது. 1964 முதல், ராம துனி இங்கு தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது, அதனால் தான் கின்னஸ் புத்தகத்தில் அதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
***
6.மகாவீர் ஹனுமான் கோவில், பாட்னா (பீகார்)
பாட்னா சந்திப்பிற்கு எதிரே, மகாவீர் கோயில் என்று அழைக்கப்படும் ஹனுமான் கோயில் உள்ளது. வட இந்தியாவில், வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அடுத்தபடியாக, இந்த கோவிலுக்கு அதிக பிரசாதம் கிடைக்கிறது.
***
7.ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி , கும்பகோணம்
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி சன்னதி உள்ளது. ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமியின் முதன்மைக் கடவுள் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி. ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை அவர் தியானித்த இடம் இப்போது பஞ்சமுகி என்று அழைக்கப்படுகிறது, அதில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ பஞ்சமுக அனுமனின் 40 அடி உயர ஒற்றைக்கல் பச்சை கிரானைட் மூர்த்தி தமிழ்நாட்டில் திருவள்ளூரில் நிறுவப்பட்டுள்ளது. பஞ்சமுக ஹனுமான் ஆசிரமம் வெங்கடேச பட்டர் என்ற துறவியால் நிறுவப்பட்டது.
***
8.சலாசர் ஹனுமான் கோவில், சலாசர் (ராஜஸ்தான்)
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், சலாசர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தாடி மற்றும் மீசையுடன் கூடிய அனுமன் சிலை உள்ளது. இந்த அனுமன் சிலை ஒரு விவசாயி வயல்வெளியில் நடந்து சென்றபோது கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது தங்க சிம்மாசனத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
***
9.ஸ்ரீ கஷ்டபஞ்சன ஹனுமான் கோவில், சரங்பூர் (குஜராத்)
குஜராத்தின் சரங்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹனுமான் மந்திர், சாரங்பூர் சுவாமிநாராயண் சம்பிரதாயத்தின் வத்தல் காடியின் கீழ் வருகிறது, மேலும் இது சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது கஸ்டபஞ்சன் (துக்கங்களை நசுக்குபவர்) வடிவில் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அனுமன் சிலையை சத்குரு கோபாலானந்த சுவாமி நிறுவினார். சத்குரு கோபாலானந்த ஸ்வாமிகள் அனுமன் சிலையை நிறுவியபோது, அவர் அதை ஒரு தடியால் தொட்டதாகவும், அந்த சிலை உயிர் பெற்று நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கதை இக்கோயிலில் நடைபெறும் நோய் தீர்க்கும் சடங்குக்கான சாசனமாகிவிட்டது. இங்குள்ள அனுமனின் சிலை கைப்பிடி மீசையுடன், ஒரு பெண் அரக்கனை தனது காலடியில் நசுக்கி, பற்களைக் காட்டி, நிற்கும் ஒரு திடமான உருவமாக அமைந்துள்ளது.
***
9.அனுமன் கோவில், அலகாபாத் (உ.பி.)
அலகாபாத் கோட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் அனுமன் சிலை உள்ளது. இந்த அனுமனின் சிலை 20 அடி நீளம் கொண்டது. அலகாபாத்தின் பழைய பெயர் பிரயாகை அல்லது திரிவேணி சங்கமம் ; கங்கை, யமுனை , சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்று சேரும் இடம்; இப்போது சரஸ்வதி இல்லா விடினும் பூமிக்கடியில் ஓடி அது கலப்பதாக ஐதீகம்.

—subham–
tags- உலகம் முழுதும் ஹனுமான், புகழ் பெற்ற, ஆஞ்சனேயர் கோவில்கள்