யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம் (Post No.13,671)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,671

Date uploaded in London – 15 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் , மாக்ஸ்முல்லரின் பரம எதிரி, யூத மத அறிஞர்  தியோடர் கோல்ட்ஸ்டக்கர் (1821- 1872)   பற்றி  பல கட்டுரைகள் எழுதிவிட்டேன் இன்னும் மர்மம் துலங்கவில்லை.

அவருடைய படம் எங்குமே இல்லை. அவரே அதை அழித்தாரா அல்லது மாக்ஸ்முல்லர் கும்பல் அவர் படத்தை அழித்தனரா? அவரது நூல்கள் ஏன் வெளியாகவில்லை ? அவர் பிரிட்டிஷ் லைப்ரரியிடம் (அப்போது இந்தியா ஆபீஸ் லைப்ரரி ) வெளியிடச் சொல்லி கொடுத்த விஷயங்கள் என்னவாயிற்று  ?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டன்  பல்கலைக்கழக லைப்ரரிக்குச் சென்று 130  ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர்கர்கள் பற்றிய ஆங்கில நூலை எடுத்தேன். அவசரத்துடனும் ஆர்வத்துடனும் வேகமாக பொருளடக்கத்தைப் பார்த்து THEODOR GOLDSTUCKER 1821-1872 தியோடர் கோல்ட்ஸ்டக்கர் பெயர் இருப்பதைப் பார்த்தேன். எனது எக்ஸைட்மென்டு EXCITEMENTக்கு அளவே இல்லை என் முகம் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல பிரகாசித்தது. புரட்டினேன்புரட்டினேன் புரட்டினேன் கோல்ட்ஸ்டக்கர்   பக்கத்துக்கு  வந்தேன். 1000 வாட் பல்பு பியூஸ் ஆயிற்று. அவர் படம் அந்தப் புஸ்தகத்தில் இல்லை!!! 130 சம்ஸ்க்ருத அறிஞர்களில் பெரும்பாலோர் படங்கள் உள்ளன. ஆனால் எனது அருமை கோல்ட்ஸ்டக்கர் (1821- 1872)  படம் இல்லை  அவ லண்டன் பலக்லைக்கழக் கழக ஸம்ஸ்க்ருத்ப் பேராசிரியர் .

முதலில் அவரது வரலாற்றைப் படித்துவிட்டு மீண்டும் மர்மக் கதைக்கு வருவோம்.

பாணினி  எழுதிய இலக்கண நூல் அஷ்டாத்யாயீ, இலக்கிய உலக அதிசயங்களில் ஒன்று; 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி,  அதற்கு எழுதிய மஹாபாஷ்யம் என்னும் உரை அதைப்போலவே இன்னுமொரு அதிசயம்.  பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கணம்தான் உலகின் முதல் இலக்கண நூல்மஹாபாஷ்யம்தான் உலகின் முதல் இலக்கண உரைநூல்!

பாணினி 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  நூலை இயற்றியதாக கோல்ட்ஸ்டக்கர் நிரூபித்துள்ளார். அவர் ஒரு யூதர். ஆனால் கிறிஸ்தவ மத அறிஞர்கள் எல்லோரும் உலகம் தோன்றியதே 6000 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற வாதத்தை ஏ ற்  றதால் இந்துமத நூல்கள் சொல்லும் காலத்தை நம்பவில்லை. அவர்கள் 6000 ஆண்டுக்கு முன்னர்தான் பூமி தோன்றியது என்று  சொன்னபோது தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் பூமியும் மனிதனும் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பகர்ந்தன.

சம்ஸ்க்ருத பண்டிதர்கள் உதவி இல்லாமல் ஐரோப்பாவில் மஹாபாஷ்யத்தை ஆராய்ந்தவர் இவர் ஒருவர்தான். குரு குலக் கல்வியை அவர் ஆதரித்தார்.

***

18-1-1821-ல் ஜெர்மனியில் கோநிஸ்பர்க் KOENIGSBERG என்னுமிடத்தில் பிறந்தார்.

பாரிஸ் நகரில் சம்ஸ்க்ருத நூல்களை பயின்ற பின்னர் 1850 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு வந்தார். ஓராண்டுக்குப் பின்னர் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் ஸம்ஸ்க்ருதப் பேராசியர் ஆனார். 6-3-1872 ல் இறக்கும் வரை அந்தப் பதவியை வகித்தார்.

பிரபோதய சந்திர என்ற நாடகத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து  பெயரை வெளியிடாமல் அச்சிட்டார். சம்ஸ்க்ருத — ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் மாபெரும் திட்டத்தை எச் எச் வில்சன் , இவரிடம் ஒப்படைத்தார். ஆனால் அந்த நூல் அரைகுறையாக நின்றுவிட்டது.

அவரது முயற்சியில் சம்ஸ்க்ருத நூல் கழகம் உருவானது. அதன் சார்பில் ஜைமினீய நியாய  மாலாவிஸ்த்ரா 1867-ல் வெளியிடப்பட்டது . அவர் எழுதிய மஹாபாஷ்யப் பேருரை அவர் இறந்த பின்னர் 1874-ஆம் ஆண்டில் வெளியானது .

வேத கால சடங்குளைப் பற்றிய MANAVA KALPASUTRA மானவ கல்ப சூத்திரத்தை குழாயில் குமாரில சுவாமி உரையுடன் வெளியிட்டார். லண்டன் பெர்லின் ஆகிய இரண்டு நகரங்களிலும் 1861 ஆம் ஆண்டில் சம்க்ருத இலக்கியத்தில் பாணினியின் பங்கு என்ற ஆங்கில நூல் வெளியானது சம்ஸ்க்ருத மொழி குறித்த அருமையான நூல் இது என்று உலகமே போற்றியது. யாஸ்கர்,  காத்யாயனர், பதஞ்சலி, ஆகியோரின் படைப்புகளுடன் பாணினி நூலை ஒப்பிட்ட பெரும் ஆராய்சசி நூல் இது.

ஆங்கிலேய கருத்துக்களை புகுத்தாமல் இந்தியாவில் இந்திய சட்டப் புஸ்தகங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவில் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் ON THE DEFICIENCIES IN THE PRESENT ADMINISTRATION OF HINDU LAW, LONDON 1871 எழுதினார். பிரிட்டிஷ் அரசாங்கமே சட்ட விஷயங்களில் கோட்ஸ்டக்கரை கலந்தாலோசித்தது. இலக்கணத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினாரோ அவ்வளவு நேரத்தை சட்ட விஷயங்களுக்கும் ஒதுக்கினார். பந்து = சொந்தக்காரர் என்ற பெயரில் அவைகளை வெளியிட்டார்.

அவர் இறந்த பின்னர் 1879-ம் ஆண்டில் லண்டனில் LITERARY REMAINS OF THE LATE THEODOR GOLDSTUCKER  என்ற நூல் வெளியானது. இதில் கோல்ட்ஸ்டக்கரின் முழு படைப்புகளும்  இல்லை. இதையே இன்று வரை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர்.

மர்மம் என்ன ?

இவ்வளவு பெரிய அறிஞரின் படம் ஏன் எங்கேயும் இல்லை ? அவரது குடும்பத்தினர் எங்கே ? அவர்களாவது படத்தை வெளியிடலாமே !

அவர் நான் இறந்த பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட வேண்டும் என்று லண்டனிலுள்ள  இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் கொடுத்த விஷயங்கள் என்ன ஆயிற்று ? ஏன் இன்று வரை யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை ?

அதில் ஸம்ஸ்க்ருதத்தையும் இந்து மதத்தையும் போற்றும் விஷயங்கள் இருப்பதால் அமுக்கிவிட்டார்களா?

மகாபாரதம் குறித்து ஆராய்ச்சி நோட்ஸ்களுடன் அவர் எடுத்திய இரண்டு தொகுதிகளை ஏன் இன்று வரை வெளியிடவில்லை ?

ஆதார நூல் GERMAN INDOLOGISTS ஜெர்மன் இண்டாலஜிஸ்ட்ஸ் 1990

****

இந்தக் கட்டுரையைப் படிப்போர் ஏதேனும் புதிய விஷயங்களையோ அல்லது அவரது புகைப்படத்தையோ கண்டாலோ தயவு செய்து எழுதுங்கள் . நானும் லநாதனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி மற்றும் பல்கலைக்கழக் லைப்ரரியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.  அவரது ஆங்கிலப் புஸ்தகங்களில் பாணினி பற்றிய நூலைப் படித்து நான் ஏற்கனவே தமிழிலும் ,ஆங்கிலத்திலும் ஏற்கனவே கட்டுரைகளை எழுதியிருக்கிறன்.

—subham—

Tags- ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் , யூத மத அறிஞர்,  தியோடர் கோல்ட்ஸ்டக்கர்  , படம், மர்மம் என்ன ?

Leave a comment

Leave a comment