
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,675
Date uploaded in London – 16 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 கருமி, கஞ்சன்
ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார் என்று முதலில் காண்போம் : ஷேக்ஸ்பியர் காலத்தில் நிக்கார்ட் NIGGARD என்ற ஆங்கிலச் சொல்லை மைசர் என்ற பொருளில் பயன்படுத்தினர். இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் இப்போது வேறு பொருள் .
வள்ளுவர் போல கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விடு என்று ஷேக்ஸ்பியர் சொல்லவில்லை. ஆயினும் கஞ்சன் , கருமி என்ற பொருளில் நிக்கார்ட் என்பதைக் கையாளுகிறார். இன்று இது கறுப்பர்களைத் திட்டும் சொல்லாக உபயோகப்படுகிறது.

மைடாஸ் MIDAS என்ற கிரேக்க புராணக்கதை எல்லோருக்கும் தெரியும். தொட்டதெல்லாம் தங்கம் ஆகவேண்டும் என்று வேண்டி சாப்பாடு, தண்ணீர் முதலியவற்றைத் தொட முடியாமல் தவித்த மைடாஸ் கதாபாத்திரத்தை MERCHANT OF VENICE மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகினறார் .அதே போல ஷைலாக் என்னும் பேராசை பிடித்த கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும் கருமிகளைத் திட்டவில்லை. அவர்கள் எல்லாவற்றிலும் சுஷ்டமானவர்கள் என்றே உவமையாகப் பயன்படுத்துகிறார். உன் பேச்சில் கருமித்தனம் வேண்டாம் என்பார்.
****
strait (adj.) Old form(s): straight=mean, niggardly, stingy= கருமித்தனம்
Brutus
The deep of night is crept upon our talk,
And nature must obey necessity,
Which we will niggard with a little rest.
There is no more to say.
ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸ் சொல்வதாவது: நம்முடைய பேச்சில் இரவு குறுக்கிடுகிறது ; கொஞ்சம் (கருமித்தனம் போல ) ஓய்வு எடுப்போம் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
****
மாக்பெத் நாடகத்தில் உன் பேச்சில் கருமித்தனத்தைக் காட்டாதே என்கிறார் .
No, they were well at peace when I did leave ’em.
MACDUFF
Be not a niggard of your speech. How goes ’t?
****
niggardly (adj.) –mean-minded, tight-fisted, miserly
My daughter! O, my ducats! O, my daughter! Fled with a Christian! O, my Christian ducats!
ஷைலாக் ஒரு யூதர். அவரிடம் கடன் வாங்கிய அன்டோனியோ ஒரு கிறிஸ்தவர். அவருடன் ஷைலக்கின் மகள் ஓடிப் போய்விடுகிறாள் உடனே ஷைலாக் கதறுகிறார் என் மகள் ! என் தங்க காசு! கிறிஸ்தவனுடன் ஓடிப்போய்விட்டாள் என்னுடைய கிறிஸ்தவ தங்கமே!.
*****
2.Rich honesty dwells like a miser, sir, in a poor house; as your pearl in your foul oyster. -As You Like It. Act v. Sc. 4.
பணக்காரன் ஒரு குடிசையில் வசிப்பது போல அவள் இருக்கிறாள் ; பளபள முத்து அழுக்கான சிப்பிக்குள் இருப்பது போல. –ஆஸ் யூ லைக் இட் நாடகம்
3.Sonnet 75 in modern English
நாடகங்களைத்தவிர 154 பாடல்களையும் ஷேக்ஸ்பியர் எழுதினார். அவைகள் எல்லா வற்றிலும் 14 வரிகள் இருக்கும் ; நாம் 2 வரிப்பாடலை குறள் என்றும் 4 வரிப்பாடலை வெண்பா என்று அழை போல 14 வரிப் பாடல்களை சான்னட் Sonnet என்று சொல்வார்கள்.
Sonnet 75: So Are You To My Thoughts As Food To Life
அதில் மைஸர் என்பதைக் கஞ்சன் என்றே வியாக்கியானம் செய்கின்றனர். முதல் சில வரிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: நீ எனக்கு உயிர் வாழ உணவு போலவும் பூமிக்கு வசந்த கால மழை போலவும் உள்ளாய்; ஒரு கருமி தன்னுடைய பணத்தைப் பாதுகாக்க எப்படி தவிக்கிறானோ அப்படி நான் தவிக்கிறேன்.
ஒரு சமயம் அதைப்பார்த்து ஒரு கருமி மகிழ்கிறான். மற்றோர் சமயம் திருட்டு பயம் வாட்டுகிறது
So are you to my thoughts as food to life,
Or as sweet-season’d showers are to the ground;
And for the peace of you I hold such strife
As ‘twixt a miser and his wealth is found.
Now proud as an enjoyer, and anon
Doubting the filching age will steal his treasure;
Now counting best to be with you alone,
……………
****
அடி, உதை, கொல்! கருமிகளுக்கு எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்!

கருமிகளையும் கஞ்சர்களையும் கண்டால் இந்துக்களுக்குப் பிடிக்காது. வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை அவர்களைச் சாடியிருக்கிறார்கள். வள்ளுவர் கருமி களின் தாடையில் குத்துவிட்டு கரும்பு போலக் கசக்கிப் பிழி என்கிறார். வேத கால ரிஷிகள் கருமிகளைத் தீர்த்துக் கட்டுங்கள் என்கின்றனர். செல்வத்தின் பயனே ஈதல் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.
இதோ சில பொன்மொழிகள்:
கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!
தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:
அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)
பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
பரிதியார் உரை:கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்
காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.
இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)
ரிக் வேதம் சொல்கிறது:
இந்திரனுக்கு பரிசு கொடுக்காதவர்களை அவன் எப்போது தன் காலடியில் களைகளைப் போட்டு மிதிப்பது போல மிதிப்பான்? (1-84-8)
(இங்கே இந்திரன் என்பது கடவுள் என்ற பொருளில் வந்துள்ளது; தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கடவுளுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான்; நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு; இதோ ஒன்று மட்டும்; கோ= அரசன், கடவுள்; கோவில்= அரண்மனை, இறைவன் உறைவிடம்; வேதங்களில் இந்திரன் என்பது அரசனையும், இறைவனையும் குறிக்கும்; இன்றுவரை நாம் கூட ராஜேந்திரன், மஹேந்திரன் என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்; இந்திரன் என்ற பெயர் இல்லாத நாடே மனித குலமே உலகில் கிடையாது. ஆங்கிலத்தில் ANDREW ஆன்ரூ என்பர்; அயிந்திர= அண்டிர= ஆன்ருANDREW; ஆய் அண்டிரன் என்ற தமிழ் மன்னன்= அஜேந்திரன்; எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)
கருமிகளிடம் செல்வம் தங்காது/நிலைக்காது–RV 7-32-21
கருமிகளைக் கொல்லுங்கள்– 1-184-2
கொல்லச் சுரப்பதாம் கீழ் – என்ற வரிகள் மூலம் ரிக் வேத கருத்தை நாலடியாரும் ஆதரிக்கிறது (இரவலர் கன்றாக ஈவர்……..கொல்லச் சுரப்பதாம் கீழ்).
தொல்காப்பியரும் கருமிகளைத் திட்டுகிறார்:
கொடுப் போர் ஏத்திக் கொடா அர்ப்பழி த்தலும் -1036
கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!!
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–
த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்
தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்
–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60
அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்
அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை
த்வா- இருவரும்
கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி
அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.
வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.
AVVAIYAR CLASSIFICATION
உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
— “நல்வழி” ஔவையார்
உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு; தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி
XXX
Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!
க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி
ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி
“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”
இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!
xxx
Trees and Men; Three Types of Men
3 வகை மனிதர்கள் பாக்கு மரம், பனை மரம் தென்னை மரம்
தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
xxxx
ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர் போடும் Marks/ மதிப்பெண்!
அறப்பளீசுர சதகம் 38. இழிவு
இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை
என்னுமவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த
இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,
எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………
தேவனே!,
புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்
இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –
அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்
அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்
மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு
எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே
நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்
பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறி, பலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகே, இல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்
எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.
(வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,
‘இயல்வது கரவேல்’ ‘
ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.
xxx
1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,- 45 / 100 Marks
2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks
3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks
4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவது இழிவு—25/100 Marks
5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு- 15 /100 Marks
6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks
முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees
தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.
தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை
சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்
இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா
—subham—
Tags- கருமிகள் , ,ரிக் வேதம், தமிழ் வேதம், தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 , கருமி, கஞ்சன்