கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும்   விஷ்ணு கோவில் (Pot No.13,682)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,682

Date uploaded in London – 18 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும்  விஷ்ணு கோவில்

தேவுனி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் (Kadapa Devuni Sri Venkateswara Swamy Temple) கடப்பா நகரில் உள்ளது. தெற்கு ஆந்திர பிரதேசத்தில் ராயலசீமா பிரதேசத்தில் பெண்ணை ஆற்றிலிருந்து 5 மைல் தொலைவில் மூன்று மலைகளுக்கு இடையே கடப்பா அமைந்துள்ளது.

லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி  கோவிலுக்கு யுகாதி பண்டிகையின்போது முஸ்லீம்களும் வழிபாட்டுக்கு வருக்கின்றனர்  இது ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த வட்டாரத்தில் நிலவும் சமய நல்லிணக்கத்துக்கு இது எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

பர்கா அணிந்த முஸ்லீம் பெண்களுக்கு அர்ச்சகர்கள் சடாரி வைக்கும் காட்சியையும், முஸ்லீம் ஆடவர்கள் கியூ வரிசையில் நிற்பதையும் சர்வ சாதாரணமாகக் காணலாம். யுகாதி வருடப்பிறப்பு அன்று பெருமாளைத் தரிசிப்பது சகல செளபாக்கியங்களையும் , குறிப்பாக செல்வ வளத்தை சேர்க்கும் என்பது அவர்களது அபார நம்பிக்கை. இது நீண்ட காலமாக நடக்கிறது.

இது பற்றிய சுவையான கதை இந்தக்கோவிலை நிர்வகிக்கும் திருப்பதி – திருமலை தேவஸ்தான ஆவணங்களில் உள்ளதாம், பீபி நஞ்சாரி என்ற முஸ்லீம் பெண்ணையும் வெங்கடேஸ்வரர் கல்யாணம் கட்டியதால் முஸ்லீம்களுக்கு அவர் மாப்பிள்ளையும்  யாம்! .

(இது போல மதுரையிலும் ஒரு கதை உண்டு. பல லட்சம் மக்கள் பங்கு கொள்ளும் சித்திரைத்  திருவிழாவில் அழகர் கோவிலிலிருந்து வரும் சுந்தரராஜப் பெருமாளுக்கு ஒரு முஸ்லீம் பெண்மணியின் மண்டகப்படியும் உண்டு. இதன் பின்னுள்ள கதை என்னவென்றால் அந்தப் பெண்ணும் பெருமாளின் அருளைப் பெற்றார் என்பதே; காலப்போக்கில் சுவை   கூட்டுவதற்காக  பெருமாள்  முஸ்லீம் பெண் வீ ட்டுக்குப் போனார்  என்று கதை கட்டப்படுகிறது.. பெருமாளுக்கும் முஸ்லீம் மதத்துக்கும் பல ஆயிரம் ஆண்டு இடைவெளி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே; இதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தொழுகை;  தேவார, திவ்யப் பிரபந்    தத்தில் உள்ள தொழுதல் என்ற சொல்லை இன்று முஸ்லீம்கள் மட்டுமே தமிழில் பயன்படுத்துகின்றனர். யாராவது ஒருவர் இந்தச் சொல்லைத்  தமிழ் தெய்வப்  பாடல்களில் கண்டு முஸ்லீம் தொழுகை  என்று சொன்னால் நகைப்புக்கு உள்ளாவார்கள்; காலம் என்பது மாறுதலுக்கு உட்பட்டது; அதைக்கண்டு தவறான அர்த்தம் கொள்வது மடமை!.)

கடப்பாவின் வரலாறு என்னவென்றால் சிறிய கிராமத்தில் கோவில் இருந்த இடத்தில் கோல்கொண்டா சுல்தான்கள் ஒரு பெரிய நகரத்தை நிர்மாணித்தனர். அந்தக் காலத்திலிருந்து சுல்தான்கள் இந்துக் கடவுளுக்கும் வணக்கம் செலுத்துவது , நன்கொடை அளிப்பது நீடிக்கிறது

இந்த வட்டாரத்தில் மதனப்பள்ளி, Sri Prasanna Venkateswara Swamy temple at Madanapalle, கொத்தவரிப்பள்ளி,  கட்டு (Gattu)  கோவில்களிலும் வழிபாட்டுக்கு முஸ்லீம்கள் வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கோவிலுக்கு யுகாதி வருடப்பிறப்புக்கு வரும் முஸ்லீம் பக்தர்கள்,  அதற்கு சில நாட்களுக்கு முன்னரே மாமிசம் சாப்பி டுவதையும் நிறுத்திவைக்கிறார்கள். அவ்வளவு மரியாதை!

கடப்பா என்றால் படிக்கட்டு ; இந்தக் கோவில் திருப்பதி பாலாஜி கோவிலுக்குத் செல்வதற்கான நுழை வாயில் என்றும் கருத்தப்ப டுகிறது; தெலுங்கு பேசும் மக்கள் இவ்விரு கோவில்களையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

XXXX

கடப்பா வட்டார புகழ்மிகு கோவில்கள்

ஒந்திமித்தாவில் Vondimitta இருக்கும் கோதண்ட ராமசாமி கோயில் பிரசித்திபெற்ற தலம். அங்கே சீதா, ராமர், லட்சுமணர் ஆகியோர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர். சோழர் , விஜயநகர கலை அம்சங்கள் நிறைந்த இடம் இது.

எங்கே உள்ளது ?

கடப்பா நகரிலிருந்து திருப்பதி நோக்கிச் சென்றால் 25 கி.மீ தூரத்தில் இந்தக் கோவிலை அடையலாம்

பெரிய நுழைவாயில், அலங்காரத் தூண்கள், சிற்பம் நிறைந்த மணடபம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. மத்திய ரங்க மண்டபத்தில் 32 தூண்கள் உள்ளன. சிறபங்களை ரசித்தவாறே கர்ப்பக்கிரகத்துக்குச் செல்லலாம். பிரெஞ்ச் யாத்ரீகர் டவர்னியர் the well-known French-traveller, Tavernier, இந்தக்கோவிலின் கலை அம்சங்களை புகழ்ந்து எழுதியுள்ளார்

தெலுங்கு மொழியில் பாகவதம் எழுதிய பொம்மென்ரா போத்தன்னா இந்த ஊரைச் சேர்ந்தவரே.

இந்த இடத்தில் ராம் தீர்த்தம், லட்சுமண் தீர்த்தம் என்ற இரண்டு வற்றாத ஊற்றுகள் இருக்கின்றன. சீதா தேவிக்குத் தாகம் எடுத்தபோது ராமர் வில்லால் உண்டாக்கிய தீர்த்தங்கள் என்பது மக்களின் நம்பிக்கை. (இது போல இலங்கை வரை பல தீர்த்தங்கள் ராமனால் உண்டாக்கப்பட்டுள்ளன. ஏழு மரங்களைத் துளைக்கும் வல்லமை படைத்த ராம பிரானுக்கு இது எல்லாம் கைவந்த கலை! .அவனுடைய வில்லாற்றலுக்கு ஈடு இணையில்லை.

****

கண்டி ஆஞ்சனேயர் 

கண்டி ஆஞ்சனேயர்  கோவிலும் Gandi Veera Anjaneya Swamy   – பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.

கடப்பா நகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் ஆலயம் இருக்கிறது

பாபாக்கினி என்னும் நதியின் மேற்குப்பகுதியில் குன்றின் மீது இயற்கை வனப்பு சூழ அமைந்த கோவில் இது. இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஸ்ரீ ராமர் , பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு சுற்றாத இடமே இல்லை

அனுமனின் தந்தையான வாயு பகவான் அவரை வரவேற்க பொன்னாலான மாலையை தொங்கவிட்டாராம். ராமரும் நன்றிக்கடனாக போவதற்கு முன்னர் அனுமன் சிலையை கல்லில் வடித்தாராம். மரணம் வரும் தருணத்தில் இவர் தரிசனம் தருவதாக மக்கள் நம்புகின்றனர் .

****

பிரம்மகிரி மடம் Brahmamgari Matham

வருங்காலம் உரைத்த வீர பிரம்மம்

கடப்பாவிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள மடத்துக்குப் போனால் சமாதி, கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

இந்த மடம் ஸ்ரீ போத்தலூரி வீரப்பிரம்மத்தால் பிரபலம் அடைந்தது ; அவர் எதிர்காலம் பற்றி தீர்க்க   ரிசனத்துடன் பல விஷயங்களைக் குறி சொல்லியதால் மக்களால் மதிக்கப்பட்டார். கந்தி  மல்லையா பள்ளி என்னுமிடத்தில் மடம் உள்ளது. 1693.ல் அவர் ஜீவ சமாதி அடைந்தார்.

*****

புஷ்பகிரி ஆலயங்கள்

கடப்பா நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் பிநாகினி நதிக்கரையில் புஷ்பகிரி உள்ளது. அங்கு பல கோவில்கள் இருப்பதால், வைணவர்கள் இதை மத்ய  அ ஹோபிலம் என்றும் சைவர்கள் மத்திய கைலாசம் என்றும் அழைப்பர். இங்குள்ள அமிர்த சரோவர் குளம் பற்றியும் சுவையான கதை கள் உண்டு . அமிர்த்தத்தைக் கருடன் கவர்ந்து செல்கையில் ஒரு துளி விழுந்து அமிர்த சரோவர் குளம் உண்டானதாம்; ஒரு விவசாயி வாழ்க்கையில் வெறுப்புற்றுக் குதித்தபோது அவர் இளைஞர் ஆகிவிட்டாராம்.

மக்கள் எல்லோரும் இப்படிக் குதித்து புத்துரு பெ ற் றதைக்கண்டு பொறுக்காத பிரம்மா விஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிடவே ஆஞ்ச யரை அனுப்பினாராம் அவர் ஒரு குன்றினை சரோவர் குளத்தில் போட அது மிதந்ததாம். பின்னர் சிவனும் விஸ்ணுவுமே வந்து குளத்தை ஒரு மிதிமிதி மிதிக்கவே விஷ்ணு பாதம் ,ருத்ர பாதம் சின்னங்கள் உருவாயிற் றாம்.

இந்த நகரத்தை இரண்டாவது ஹம்பி என்றும் சொல்கிறார்கள். இங்கு ஒரு சங்கராசார்யார் மட்மும் நிறுவப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆலயங்களில் முக்கியமானது சென்னை கேசவர் கோவில். இதுதான் பெரியத்துக்கு வரலாற்றுச் சிறப்புடைத்து. 1298ம் ஆண்டு கல்வெட்டு முதல் வரலாறு கிடைக்கிறது. கோவிலில் உள்ள நர்த்தன கணபதி சிலையும் கிருஷ்ணனின் பகவத் கீதை சிலையும் கண்கவரும் சிற்பங்கள் ஆகும்.

மார்ச் = ஏப்ரல்  மாத காலத்தில் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

இதே புஷ்பகிரியில் மேலும் பார்க்க வேண்டிய கோவில்கள் – துர்கா, சிவன், திரிகூடேஸ்வரா, ருத்ரபாத , தேவி ஆலயங்கள் ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பான கலை அம்ஸங்களைக் கண்டு ரசிக்கலாம்.’

Vondimitta Kothandaramaswami Temple

–subham—

Tags- புஷ்பகிரி, ஆலயங்கள், கடப்பா, முஸ்லீம்கள், வணங்கும்,  விஷ்ணு கோவில், கண்டி ஆஞ்சனேயர்  , வருங்காலம், வீர பிரம்மம், பிரம்மகிரி மடம்

Leave a comment

Leave a comment