தமிழ் நாய்களும் ஷேக்ஸ்பியர் நாய்களும் பட்டபாடு! –6

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,684

Date uploaded in London – 18 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

தமிழ்சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- நாய்

நாய் பட்டபாடு  என்று கஷ்டபடுவோர் சொல்லும் வசனத்தைக் கேட்டுள்ளோம் ; தமிழர்களின் கைகளிலும் ஷேக்ஸ்பியர் கையிலும் நாய்க்கும் அந்த கதிதான். நாய் நன்றியுள்ள பிராணி ; அதைச் சொல்லாமல் டச் சீ நாயே என்று நாயையே திட்டுகிறார் ஷேக்ஸ்பியர்; அவரது நாடகங்களிலும் அவர் எழுதிய 14 வரி SONNET  பாடல்களிலும் 200 முறைகளுக்கு மேலாக இ;ப்படி திட்டுகிறார்; மட்டம் தட்டுகிறார். மாணிக்கக்கவாசகரோ தன்னைத்தான் நாயேன் என்று திருவாசகத்தில் அறுபதுக்கும் மேலான தடவை மட்டம் தட்டிக்கொண்டார். தென்  கொரியர்களோ ஆண்டுக்கு பத்து லட்சம் நாய்களை அடித்து க்கொன்று டின்னர் டேபிளுக்கு கொண்டுவருகிறார்கள் . ஆனால் நாம் காந்திஜீ சொல்லியும் கூட அவரைப்  புறக்கணித்து தெருநாய்களை இன்று வரை கொல்ல வில்லை. ஆனால் திட்டுவதை நிறுத்தவவில்லை.; நாலடியார், நீதிவெண்பா, திருமந்திரப்பாடல்களில் இதைக் காண்கிறோம் முதலில்  ஷேக்ஸ்பியர்  வசைமாரி பொழிவதைக் காண்போம்.

ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாளர் 271 முறை  நாய்களை அவர் பயன்படுத்தி இருப்பதையும் இருமுறை அவரது நாடகங்களில் மேடையில் நாய் தோன்றியதையும் எழுதியுள்ளார்

 “Whoreson dog” (Cymbeline, King Lear, and Troilus and Cressida); இது நிந்தனைக்குரிய முறையில் நாயை அழைப்பதாகும்

****

“Slave, soulless villain, dog” (Anthony & Cleopatra); அட அடிமையே ஆத்மா இல்லாத எதிரி நாயே!!

****

“egregious dog? O viper vile!” (Henry V); மட்டமான ஐந்துவே , பாம்பே !

****

“cut throat dog” (Merchant of Venice); to name just a few.கருணையற்ற  நாய்!

****

மூன்றாவது ரிச்சர்ட் கொல்லப்பட்டபோது ,

“God and your arms be praised, victorious friends,/ The day is ours, the bloody dog is dead.”

கொலைகார நாய்ப்பயல் செத்தான்! என்ற வசனம் வருகிறது.

*****

:From Two Gentlemen of Verona Act 2

SCENE III. The same. A street.

Enter LAUNCE, leading a dog

LAUNCE: […] I think Crab, my dog, be the sourest-natured

dog that lives: my mother weeping, my father

wailing, my sister crying, our maid howling, our cat

wringing her hands, and all our house in a great

perplexity, yet did not this cruel-hearted cur shed

one tear: he is a stone, a very pebble stone, and

has no more pity in him than a dog: [… and on and ஒன

எல்லோரும் கதறி அழுகிகிறார்கள்  ; இந்த நாய் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதா ? அது கல்லு சரியான கூழாங்கல்லு ; நாய்தானே

*****

அதே ஜென்டில்மேன் ஆப் வெரோனா நாடகத்தில் வரும் நகைச் சுவைக் காட்சியில் அந்த நாயை அடிதூக்கில் தொங்க விட்டு என்று திரும்பத்திரும்ப பேசி மகிழ்கிறார்கள்; அதில் கிராப் / நண்டு என்பது நாயின் செல்லப்பெயர்

“all the chamber smelt him. ‘Out with the dog!’ says

one: ‘What cur is that?’ says another: ‘Whip him

out’ says the third: ‘Hang him up’ says the duke.

I, having been acquainted with the smell before,

knew it was Crab, and goes me to the fellow that

whips the dogs: ‘Friend,’ quoth I, ‘you mean to whip

the dog?’ ‘Ay, marry, do I,’ quoth he. ‘You do him

the more wrong,’ quoth I; ”twas I did the thing you

இவ்வாறு பல நூறு முறை நாயை இகழ்கிறார்  .

****

நம்ம திருமூலரும் சளைக்கவில்லை

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

பிரணவ மந்திரத்தைக் கற்பித்த குருவை அவமதிப்போர் 100 முறை நாயாகப் பிறந்து புலையணைக்கப் பிறந்து அழிவார்கள்

****

 சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 43

சக்தி என்பவள் சாதகனின் கடவுள்முக்திக்கு வழிவகுப்பதும் அவள்தான். அதை அறியாமல் வழிபடும் பாவிகள்அடிபட்ட நாய் போல ஓலமிடுவார்கள்

****

பழமொழிகளோ நாய்களை மட்டம் தட்டுகின்றன

நாய் பற்றிய பழமொழிகள்

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? …

அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது (மலையாளப் பழமொழி)

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு …….யைத் தின்னத்தான் போகும்

****

From my Old Post

கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி

கதை கேட்ட நாயை ……………. அடி!

Article No.1756; Date:- 29  March, 2015

Written by London Swaminathan

பழமொழிக் கதை!

ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, மே மாதம்- 1900—ஆம் ஆண்டு

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து வெளியான பழைய பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்ததில் சில சுவையான கதைகள் கிடைத்தன. எனது சொந்த நடையில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகிறேன்

ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.

ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.

அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.

பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.

இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.

இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.

அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.

இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!

—subham—-

Tags- நாய் , ஷேக்ஸ்பியர், தமிழர்கள் , திருமூலர், கதை கேட்ட நாயை , பழமொழிகள் , வசைமாரி, தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 6 நாய்

Leave a comment

Leave a comment