WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,686
Date uploaded in London – 19 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு நகைச் சவை படைபினைப் படித்தேன் ; அது மிகவும் உண்மை ; லண்டனில் கிழக்குப்பகுதிக்கு வந்தால் வெள்ளைகாரச் சிறுவர்களும்கூட F சொற்களை சர்வ சாதாரணமாய் பகர்வார்கள் ; வீட்டில் கணவனும் மனைவியும் பேசுவதன் எதிரொலி இது.
மனம், மொழி, மெய்
உபநிஷத்தில் எட்டு கோணல் என்ற பெயருடைய ரிஷியைச் சந்திக்கிறோம். வீட்டில் அப்பா, வேதத்தைத் தப்பும் தவறுமாக உச்சரித்ததால் அஷ்ட வக்ரத்துடன் பிறந்தார் அஷ்டா வக்ர மகரிஷி. ஆக நாம் பேசும் பேச்சுக்கள் சிறுவர்களின் மனோ , வாக், காயம் என்ற மூன்றையும் பாதிக்கின்றன இதனால்தான் கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்; அங்கே மாமியாரின் வசை மொழிகள் இரா. அம்மாவின் அன்பான அருள் மட்டுமே இருக்கும் மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம் என்ற பழமொழியை நாம் அறிவோம்.
****
இதோ நான் படித்ததில் பிடித்தது:
பையன் அப்பாவிடம் சொன்னான் : அப்பா! உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்; நீ ஸ்கூலுக்கு வரணும் .
எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?
கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க .
ஒன்பத ஏழால 9x 7 பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ;
நான் 63-னு சொன்னேன் .
சரி ……. அப்புறம் ?
ஏழ ஒன்பதால 7×9 பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க
அதே எழவுதானே வரும்னு சொன்னேன் உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க.
சரி சரி நாளைக்கு வரேன், போ .
****
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்
அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரை பார்த்தியா?
இல்லடா, நாளைக்கு வரேன்
சரி, நாளைக்கு கணக்கு டீச்சரை பார்த்துட்டு அப்படியே P.T. டீச்சரையும் பார்த்துடு.
எதுக்குடா?
ட்ரில்/ DRILL நடந்தது; முதல்ல வலது கையைத் தூக்கச் சொன்னாரு; அதைச் செஞ்சேன் ; அப்புறம் இடது கையைத் தூக்கச் சொன்னாரு; அதையும் செஞ்சேன் ; ரெண்டு கையையும் தூக்கிட்டு வலது காலையும் தூக்கச் சொன்னாரு; தூக்கினேன் அப்புறம் இடது காலத் தூக்கச் சொன்னாரு.
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசா அவன்? சரி நீ என்ன பண்ண ?
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசான்னு வாத்தியாரைக் கேட்டேன்
உங்க அப்பாவைக் கூட்டிட்டு வான்னு சொன்னார் ..
சரி சரி நாளைக்கு வந்து பாக்கறேன்.
****
அடுத்த நாள் அப்பாவிடம் கேட்டான்
அப்பா ஸ்கூலுக்கு போனியா?
இல்லடா நாளைக்கு வரேன் .
போக வேண்டாம்பா ; என்ன ஸ்கூலிலிருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.
என்னாச்சுடா ?
பிரின்சிபால் ரூமுக்கு வரச் சொன்னார்.
அங்கு கணக்கு டீச்சர் , பி.டீ. டீச்சர் , சயன்ஸ் டீச்சர் மூன்று பேரும் இருந்தாங்க.
சயின்ஸ் டீச்சரா! அந்த நாய் ஏன் அங்க வந்தான்?
அதேதான்பா நானும் கேட்டேன். டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க .
****
நீதி : குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை; கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.
–SUBHAM—
TAGS- அப்பாவைப் போல மகன், வீட்டில், ஜாக்கிரதை, பேசுங்கள்!! டிஸ்மிஸ், பையன்