இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க் (Post.13,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,687

Date uploaded in London – 19 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்துமதத்தைப் பாராட்டிய பார்த்தலோமேயஸ் சீகன்பால்க்

இதற்கு முன்னர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் , கார்ல் கிரவுல் ஆகிய இரண்டு ஜெர்மானியர்கள்,  இந்தியாவில் தமிழ், சம்ஸ்க்ருதத் துறைகளில் ஆற்றிய பணிகளைப் பார்த்தோம் . இதோ மூன்றாவது ஜெர்மானியர்

பார்த்தலோமேயஸ் சீகன்பால்க்

BARTHOLOMAEUS ZIEGENBALG 1682-1719 PROTESTANT

பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் , கிறிஸ்தவ மத்ததை பரப்புவதற்காக  இந்தியாவுக்கு வந்த முதல் ப்ராட்டஸ்டண்ட் PROTESTANT பிரிவு கிறிஸ்தவ  பாதிரியார் ஆவார் . அவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் அவர் பிரசாரம் செய்தார்  அவர் தமிழ் மொழியைக் கற்று பல நூல்களை ஜெர்மன் மொழி மொழியில் கொடுத்திருப்பார். அவர் 10-7-1682ல் பிறந்த இடம் சாக்சனி வட்டாரத்திலுள்ள பல்சனிட்ஸ் Pulsnitz, Saxony, ஆகும்.

அவருடைய தந் தை பணக்கார தானிய வர்த்தகர். இதனால் நல்ல கல்வி கற்று ஹால் HALLE  பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஆனால் உடல் நலம் குன்றியதால் படிப்பைத்  தொடர முடியவில்லை. பின்னர் தனியாக ட்யூட்டர் வேலை செய்தார்.

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜா,  DANISH EAST INDIA COMPANY

டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு தரங்கம்பாடி வட்டாரத்தை டென்மார்க் ராணுவம் தங்குவதற்கு குத்தகைக்கு விட்டிருந்தார். டென்மார்க்- நார்வே மன்னரான நாலாவது பிரெடெரிக் மன்னர் அங்கு கிறிஸ்தவ பிரசாரகர்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார் ; இளம் வயதினரான சீகன்பாலக்கை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார். அவர் 7 மாதங்களுக்கு கடற்பயணம் செய்து தரங்கம்பாடிக்கு வந்தபோது காலனி அதிகாரிகள் அவரை எதிர்த்துப் போராடினர். அவரை 4 மாதங்களுக்கு சிறை வைத்தனர்.  1709 ம் ஆண்டில் விடுதலை  ஆனவுடன் அனாதைச் சிறுவர் இல்லம் , பள்ளிக்கூடம் ஆகியவற்றைத் துவக்கினார். தமிழ் அச்சகம் ஒன்றையும் அமைத்தார் அப்போது போர்ச்சுகீசிய மொழி ஐரோப்பிய தொடர்பு மொழியாக இருந்ததால் அதைக் கற்றார்.     

தமிழ் அகராதிக்கான சொற்களை சேகரித்து, லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தைக் எழுதினார் 1716ஆம் ஆண்டில் GRAMMATICA DAMULICA  நூல் வெளியிடப்பட்டது.

தென்னிந்திய கலை, கலாசாரத்தை அறிந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிடுவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தார் 

இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க்

ஒரு கடிதத்தில் அவர் எழுதுகிறார்- “இந்துமத போதனைகளை அதிகமாகக் கற்கக்கற்க அவை என்னை மிகவும் கவர்ந்து வருகின்றன. அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர் நூல்களை கற்ற பலன்கள், இந்துமத நூல்களை  கற்பதம் மூலம் கிடைக்கும்”.

உடனே ஜெர்மானிய கிறித்தவ அதிகாரி பதில் எழுதினார்

உமது வேலை ஐரோப்பாவில் இந்து ததைதப் பரப்புவது அல்ல, உமது வேலை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே ; நினைவிற் கொள்க .”

இதன் காரணமாக சீகன் பால்க் எழுதிய புஸ்தகங்களையும் கட்டுரைகளையும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவர்கள் அச்சிடவில்லை.  அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அவர் எழுதிய அரிய பெரிய உண்மைகளை அறிந்து வியப்புற்றனர் .

சீகன்பால்க்குக்கு சிறுவயது முதலே கடுமையான நரம்பு நோய் இருத்தது. இதனால் 36 வயதானபோதே 2-2-1719 ல் இறந்தார் சென்னையில் 1867-ல்தான் அவரது முக்கிய நூல் GENEALOGIE DER MALABARISCHEN GOETTER= GENEALOGY OF SOUTH INDIAN  GODS: A MANUAL OF THE MYTHOLOGY  AND RELIGION OF THE PEOPLE OF SOUTHERN INDIA வெளியிடப்பட்டது  அதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு 1869-ல் வெளியானது

அவைகளில் சீகன்பால்க் சொல்கிறார்

எல்லாக் கடவுளரின் தோற்றம், அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களின் பல பெயர்கள், அவர்களுக்குள்ள பொறுப்புகள், கடவுளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் வசிக்கும் இடங்கள், அந்தக் கடவுளர் செய்யும் பணிகள் ஆகிய எல்லாவற்றையும் இந்துக்கள் எழுதி வைத்துவிட்டார்கள்.  அவர்கள் குடிகொண்டுள்ள கோவில்கள், அவர்களை வணங்கிய சாது சந்யாசிகள், விழாக்கள் ஆகியவற்றையும் எழுதிவிட்டனர்.

இப்படி அவர் எழுதியதால் மேலை உலகத்துக்கு தமிழ் மொழியில் உள்ள இந்து மதத்தை, முதல் தடவையாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னர் சம்ஸ்க்ருத வேத உபநிஷத்துக்களைத் தான் மேலை உலகம் ஐந்தித்து இருந்தது.

மலபார் வட்டார கிறித்தவரல்லாத /இந்து உலகம் என்ற தலைப்பில் AUSFUEHELICHE BESCHREIBUNG DES MALABARISCHEN  HEIDENTUMS = COMPLETE DESCRIPTION OF MALABAR HEATHENDOM .அது ஆங்கில த்தில் வெளியானது ஆனால் அது 1926 ஆம் ஆண்டில்தான் வெளியானது அதை டச்சு மொழி அறிஞர் காலண்ட் W. CALAND   வெளியிட்டார். இதன் முதல் பகுதியில் தெய்வத்தமிழ் மொழியிலுள்ள தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன  இரண்டாவது பகுதியில் இந்துமத சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் உள்ளன. வரலாறு, ஜாதி, சடங்குகள், சாப்பிடும் முறை, மருத்துவம் ரசாயனம், இரும்பைத் தங்கம் ஆக்கும் முறைகளை அவர் குறிப்பிடுகிறார்.

1930 ஆம் ஆண்டில் W.காலண்ட்/ W. CALAND    வெளியிட்ட பதிப்பில் நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய அவரது மதிப்பீடுகள் கருத்துக்கள் ஆகியன அவரது கடிதங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் உள்ளன  KLEINERE SCHRIFTEN= MISCELLANEOUS WRITINGS

அவைகளும் புஸ்தகமாக வெளிவந்துவிட்டது

மலபாரில் கிறிஸ்தவ மதம் இல்லாத சமயம் என்ற MALABAR HEATHENDOM அவரது புஸ்தகம் 1965ம் ஆண்டில்தான் கிடைத்தது

இந்திய மதம் பற்றிய அவரது அபார அறிவினை இதுவரை உலகம் போற்றவில்லை.

அவர் மாட்டும் ஜியூ பாப் போல 80 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து இருந்தால் தெய்வத்தமிழ் நூல்கள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் செய்திருப்பார்; நமது துரதிருஷ்டம் அவர் 36 வயதில் விண்ணுலகை அடைந்தார்.

அவரது ஜெர்மன் மொழி நூல்களை நாம் தமிழில் மொழிபெயர்த்து இந்துமதத்தின் பெருமையை மீண்டும் போற்றலாம்.

–SUBHAM—

TAGS – பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் ,BARTHOLOMAEUS ZIEGENBALG , W. CALAND, BOOKS, GERMAN, TAMIL SCHOLAR, ஜெர்மன் மொழி, தமிழ் நூல்கள்

Leave a comment

Leave a comment