
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,690
Date uploaded in London – 20 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஒரு ஸம்ஸ்க்ருதப் புலவர் நமக்கு நல்ல அறிவுரை வழங்குகிறார் . கிளி போல வள வள என்று பேசுவதை விட, மெளனம் சாதிப்பதே நல்லது . இதோ அந்த ஸ்லோகம்
ஆத்மனோ முக தோஷேண பத்யந்தே சுக சாரிகாஹா
பகாஸ் தத்ர ந பத்யந்தே மெளனம் ஸர்வார்த்த சாதகம்
பொருள்
கிளிகள் அவற்றின் வாய்ச்சாலத்தால் கூண்டுக்குள் சிக்குகின்றன; கொக்குகள் அப்படி சிக்குவதில்லை ; மெளனமே சாதகமானது.
****

பரமஹம்சர் சொல்கிறார்
கிளி மூலம் ராம கிருஷ்ண பரமஹம்சர் நல்ல அறிவுரை வழங்கு கிறார் :
ஜீவனானது இவ்வுலத்தை விட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதை நினைத்துக்கொண்டிருக்கிறதோ அதற்குரிய உடலில் மீண்டும் வந்து பிறக்கிறது. இடையறாத நாம ஜபம் செய்தால் மரண நெருக்கடியிலும் அந்த நாமம் உதவும்.
பந்தப்பட்டப் மனிதர்கள் மரணம் நேரிடும் தறுவாயிலும் உலக விஷயங்களைப் பற்றியே பேசுகின்றனர். புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போவதிலும் கங்கை நதியில் ஸ்னானம் செய்வதிலும் ஜப தபங்கள் செய்வதிலும் பிரயோஜனமில்லை. மனதில் உலகப்பற்று இருக்குமானால் அது மரண காலத்தில் நிச்சசயமாக வெளிப்படும். அப்போது அவர்கள் கண்டபடியெல்லாம் பிதற்றுவார்கள். சாதாரணமாக ராதா கிருஷ்ணனின் திவ்ய நாமத்தைப் பாடும் கிளிகள் , பூனையால் பிடிக்கப்படும்போது கீ கீ என்று தனது சுபாவமான குரலெடுத்தக் கத்தும்”
****
வாழ்நாள் முழுதும் ராம ஜபம் செய்த மஹாத்மா காந்தி , சுடப்பட்டு நிலத்தில் வீழ்ந்தபோது ஹே ராம் என்று சொல்லிக்கொண்டு இறந்தார்.
****

சமண முனிவர் அருளுரை
நாலடியார் செய்யுள் ஒன்று, இதே கருத்தை பேய்ச்சுரைக்காய் எடுத்துக் காட்டின் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறது.
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்று () இடம் பட மெய் ஞானம் கற்பினும் என்றும்
மடங்காதா ரென்று மடங்கார்- தடங்கண்ணா ()அடங்காதார் என்றும் அடங்கார் – தடம் கண்ணாய்
யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் () உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய். (06) கைப்பு அறா பேய் சுரையின் காய் (௬).

பதவுரை
தடம் கண்ணாய்= விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!
உப்பொடு= உப்புடன்,
நெய்= நெய்யும்,
பால்= பாலும்,
தயிர்= தயிரும்,
காயம்= பல காயங்களும்,
பெய்து= இட்டு,
பேய்ச்சுரையின் காய்= பேய்ச்சுரைக்காயை,
அடினும்= சமைத்தாலும்,
கைப்பு அறா= (அதன்) கசப்பு நீங்காது; (அதுபோல),
மெய் ஞானம்= உண்மை ஞான நூல்களை,
என்றும்= எந்நாளும்,
இடம்பட= விரிவாக,
கற்பினும்= கற்றாலும்,
அடங்கார்= அடங்காதவர்கள்,
என்றும்= எந்நாளும்,
அடங்கார்= அடங்கார்.
கருத்துரை
பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
–subham—
Tags- பேய்ச்சுரைக்காய், நாலடியார், செய்யுள், கிளி , கொக்கு, ராம கிருஷ்ண பரமஹம்சர், பூனை, மஹாத்மா காந்தி, ஹே ராம்