இனிப்பு சாப்பிட்டால் இருமல் வரும்! நம்பிக்கை இருந்தால் நோய்கள் தீரும்!! (Post No.13,693)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,693

Date uploaded in London – 21 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நீதி வெண்பாவில் இரண்டு முக்கிய மருத்துவ அறிவுரைகள் உள்ளன.

பலருக்கு இனிப்புகள் சாப்பிட்டால் உடனே இருமல் வரும்; தொண்டையில் அரிப்பும் ஏற்படும். கசப்பு சாப்பிட்டால் அடங்கி விடும்.

இதை அந்தக் காலத்திலேயே நம்மவர்கள் பாடி வைத்துவிட்டார்கள் அதோடு, ஒரு அறிவுரையும் வழங்கினார்கள் . கெட்டவர்களும் இருமல் தான். இனிப்பான சொற்களால் அவர்களைத் திருத்த முடியாது கசப்பான மருந்து தேவை என்கிறார் புலவர்.

துன்னும் இருமலுந் துர்ச்சனரும் ஒக்குமே

மன்னும் இனிமையான் மாறாகிப் – பன்னுங்

கடுவும் கடுநேர் கடுமொழியுங் கண்டாற்

கடுக வசமாகை யால். 22

பொருள்

துன்னும் இருமலும் – மிகுந்து வரும் இருமல் நோயும்

துர்ச்சனரும் – தீயோரும்

மன்னும்- நீங்காத

இனிமையான் – இனிமைக்கு

மாறாகி – வேறாகி

பன்னும்- சொல்லப்படுகின்ற

கடுவும் –   நஞ்சு போன்ற கைப்பான மருந்தையும்

கடுநேர- அம்மருந்தையொத்த

கடுமொழியும்- வன்சொல்லையும்

கண்டால் –  பார்த்தால்

கடுக – விரைவாக

வசம் ஆகையால் – அடங்கி விடுதலால்

ஒக்கும் – அவ்விருமலும் தீயோரும் ஒன்றுக்கொன்று ஒப்பாகும்

கருத்து — இருமலை கசப்பான மருந்தால் தீர்ப்பது போல தீயோரும் கடுஞ் சொற்களாலேயே அடங்குவார்கள்

****

இது உண்மைதான்!

அறிவியலும் தமிழர் கண்டுபிடிப்பை ஏற்கிறது. ப்ரக்டொஸ் வகை இனிப்பு அதிகமாகவுள்ள பழரசங்கள் , பானங்கள் ஆஸ்த்மா அறிகுறிகளை உண்டாக்குகின்றன.  அதிகமாக இனிப்புகளைச்  சாப்பிட்டால் நீடித்த இருமல் நோய் வரும். நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அது பாதிப்பதால் இருமலும் எளிதில் போகாது   

Fruit drinks and soft drinks that contain high fructose corn syrup (HFCS) have been shown to trigger asthma symptoms. Eating a lot of high sugar foods may also contribute to developing or prolonging a cough. A high-sugar diet has been shown to impair immune system function, which could slow down your recovery.

உங்களுக்கு இருமல் இருந்தால், இனிப்புப் பண்டங்கள் உங்கள் இருமல் நோயை மேலும் அதிகரிக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை,  குறிப்பாக வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தியை இனிப்புகள் அகற்றிவிடுகின்றன. தடுமன் என்னும் ஜலதோஷம் வந்தால்கூட இனிப்புகளை நிறுத்திவிடுங்கள் .

Sugar consumption is a sure-shot way of making your cough worse. As per a study published in Frontiers in Immunology in 2017, increased sugar intake can suppress the immune system, especially when fighting viral infections. This applies to the common cold too, so make sure you stay away from those desserts.

****

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும்

மந்திரமும் தேவும் மருந்தும் குருஅருளும்

தந்திரமும் ஞானந் தருமுறையும் – யந்திரமும்

மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்

பொய்யெனிற் பொய்யாகிப் போம். 38

பொருள்:

மேதினியில்=உலகத்தில்

மந்திரமும் = மறை (வேத) மொழிகளும்

தேவும் = கடவுளும்

மருந்தும் = மருந்துகளும்

குரு அருளும் = ஆசார்யனின் அருளும்

தந்திரமும் = தந்திரம் பற்றிக்கூறும் நூல்களும்

ஞானம் தரும் முறையும் = வழிபாட்டு முறைகளும்

யந்திரமும் = மந்திர எழுத்துக்கள் எழுதிய தகடுகளும்

(ஆக இவ்வேழும்)

மெய்யெனில் = மெய்யென்று நம்பினால்

மெய்யாய் விளங்கும் = உண்மையாகவே பலன் கொடுக்கும்

பொய்யெனில் = பொய்யென்று நினைத்தால்

பொய்யாகிப் போம் = பலிக்காது

மந்திரம் என்றாலேயே “நினைத்தவரைப் பாதுகாப்பது” என்று பொருள். அப்படிப்பட்ட ஒன்றை நம்பிக்கை இல்லாமல் சொல்லவே முடியாது.

****

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும் என்பதை நான்கு வேதங்களும் சொல்லுகின்றன:-

நம்பினார் கெடுவத்தில்லை இதுநான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகம் வரம் பெறலாம்

-என்பது மஹா கவி பாரதியின் வாக்கு.

சம்சயாத்மா விநஸ்யதி (சந்தேகப் படுபவன் அழிவான்) என்பது கண்ண பிரானின் வாக்கு (பகவத் கீதை 4-40)

வள்ளுவனும் சொல்லுவான்:-

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து (குறள் 353)

பொருள்:-

முதலில் சந்தேகத்துடன் ஆரம்பித்து, பின்னர் ஐயம் தெளிந்து உண்மைப் பொருளை அறிந்தார்க்கு பூமியைவிட, தேவலோகம் மிக அருகில் வந்துவிடும்.

நோய்கள் தீருவது உண்மையா ?

இதுவரை அறிவியல்  பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் உலகிலுள்ள  எல்லா மதத்தினரும் சில புனிதத் தலங்க களுக்குச் சென்று  அங்குள்ள நீரில் மூழ்கினாலோ அல்லது தீர்த்தத்தைக் குடித்தாலோ நோய்கள் தீரும் என்று இன்றுவரை நம்புகின்றனர் . இந்த சந்தேகம் அந்தக்காலத்தில் இருந்ததால்தான் இது நம்பிக்கையைப் பொறுத்தது என்று சொல்லிவிட்டார்கள். 

—SUBHAM—

TAGS- நம்பிக்கை, நோய்கள், மந்திரமும் தேவும் மருந்தும், இனிப்பு , இருமல் , நீதி வெண்பா,coughing, sweets

Leave a comment

Leave a comment