கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது! (Post No.13,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,696

Date uploaded in London – 22 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கொலைகார மஹாராணிகள் பெயர்கள் தெரிந்துவிட்டது! (Post No.13,696)

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைகார மஹாராணிகளைப் பற்றி சாணக்கியன் எச்சரிக்கை விடுத்ததை எழுதியிருந்தேன். இப்பொழுது ஒரு நூலில் யார் அந் கொலைகாரிகள் என்ற பட்டியல் கிடைத்துவிட்டது

இன்றும் கூட பல நாடுகளில் தலைவர்க ள்  மர்மமான முறையில் இறப்பதை பத்திரிக்கைகளில் படிக்கிறோம். இது 2500 ஆண்டுகளாக நடைபெறுவது சாணக்கியன் மூலமாக நமக்குத் தெரிந்தது.

சம்ஸ்க்ருத புஸ்தகம் தரும் தகவல்:-

நூலின் பெயர் – நீதி வாக்யாம்ருத்

இயற்றியவர் – சோமதேவ சூரி சமண மத அறிஞர்

மொழி – சம்ஸ்க்ருதம்

காலம் – 992 CE

அவர் எழுதிய புகழ்பெற்ற நூல் – யசஸ் திலக

சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதியது அரசியல்  குறித்த நூலாகும். நல்லாட்சி, அரசனின் குண நலன்கள், தூது, தர்மம், காமம், அர்த்தம் ( அறம், பொருள், இன்பம்), அரசனின் பாதுகாப்பு முதலியன பற்றிய பொன்மொழிகளை சோமதேவ சூரி உதிர்த்து இருக்கிறார்.

அவர் அள்ளித்தெளித்த பாதுகாப்பு விஷயங்கள் பெரும்பாலும் சாணக்கியன் சொன்னதுதான். ஆயினும் எந்த எந்த ராணிகள் மன்னர்களை எப்படி எப்படி தீர்த்துக் கட்டினர் என்ற உண்மைச் சம்பவங்களை நமக்கு அளிக்கிறார்.

இதோ அந்த விவரம்

யவன தேசத்தைச் சேர்ந்தவள் மணிகுண்டலா. அவள் நடத்தை கெட்ட பெண். தன்னுடைய மகனுக்கு அரசர் பட்டம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, வாயில் விஷ மதுபானத்தை  அருந்தி மன்னனைக் கொஞ்சினாள். மன்னன் கதை முடிந்தது

சூரசேன தேசத்து ராணி வசந்த மதி. அவள் உதட்டில் விஷம் நிரம்பிய லிப்ஸ்டிக்கைத் தடவிக்கொண்டு சுரதாவிலாச என்ற மன்னனை முத்தமிட்டாள்; மன்னன் மயங்கி விழுந்தான். கதையை முடித்தாள்.

பெண்கள் உதட்டில் சிவப்பு சாயம் பூசுவது காளிதாசன்  காவியங்களிலேயே வருகிறது  பிம்போ BIMBO/BIMBA என்ற ஆங்கிலச் சொல், லிப்ஸ்டிக் LIPSTICK  இவை எல்லாம் இந்துக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் பரப்பினர். கைகளுக்கு மருதாணி முதலிய சாயம் பூசுவதும் நாம் கற்பித்ததே!  

வ்ருகோதரிஎன்பவள்  தசார்ண  தேசத்து  ராணி ;  அவர் மதனாரவ நவ என்ற மன்னனைக் கொன்றது எப்படியென்றால், காலில் கிண்கிணி சதங்கையில் கூர்மையான பிளேடை/ கத்தியைப் பொருத்திக்கொண்டு  அதில் விஷத்தைத் தடவி இருந்தாள். மன்னன் கட்டித் தழுவிய பொழுது பரலோக சாம்ராஜ்யத்துக்குப் போய் விட்டான்

மகத நாட்டு ராணி மதிராராக்ஷி . அவள் கூர்மையான கண்ணாடியைத் தயாரித்தாள் மன்னா உன் அழகைப் பார்! என்று சொல்லிக் காட்டுவது போலக் காட்டி கழுத்தை சீவினாள் மன்னன் மன்மதவினோதன் மாண்டு விழுந்தான் .

பாண்டிய நாட்டுக் கொலைகார ராணியின் பெயர் சந்தர்ஷா. அவள் கொண்டையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மன்னன் படுக்கையில் மயக்கத்தில் இருந்த நிலையில் சதக்! சதக்! என்று குத்திக் கொன்றாள் இறந்த மன்னனின் பெயர் புண்டரீக பாண்டியன் .

பெரிய புராணத்தில் முத்தநாதன் கொன்றதும் இதே முறையில்தான் !முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். சிவனடியார் வந்திருக்கிறார் என்று பாடிகார்ட் BODYGUARD  சொன்னவுடன் உடனே அனுப்பு என்றான் மன்னன் மெய்ப்பொருள் நாயனார்  அவன் சிவனடியாரை வாங்கியபோது சதக் சதக்!!

மன்னன் சாகும் தருவாயிலும் ஊர் எல்லை வரை இந்த சிவனடியாரைப்  பாதுகாப்போடு கொண்டுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டு  செத்தான். சிவ வேடத்திற்கு அவ்வளவு மதிப்பு. இதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததே.

கடைசி மகத மன்னன் ஒரு யூஸ்லெஸ் கேஸ் USELESS CASE அவன் நாடகம் பார்க்க வந்தபோது புஷ்ய மித்ர சுங்கன் என்ற சேனாபதி அவனை சதக் சதக் என்று வெட்டிக் கொன்றான். பின்னர் சுங்க வம்சம் ஆளத்துவங்கியது. இதையெல்லாம் செய்பவர்கள்,  படைத்தளபதி அல்லது மந்திரிசபை உதவியுடன்தான் செய்வார்கள். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேனன் என்ற மன்னரையும் மந்திரிகள் கொன்று அவனைக் கடைந்து  பிருதிவி என்ற மன்னரைப் பெற்று ஆள  வைத்தனர் இதனால் பூமிக்குப் பிரிதிவி என்று பெயர். ஆகவே மோசமான மன்னர்களை அழிப்பதும் வேத காலத்தில் இருந்ததை மனுநீதி நூல் நமக்குக் காட்டுகிறது

மன்னரின் உடலைக் கடைந்து குழந்தை பெற்றது என்பதன் அர்த்தம் க்ளோனிங் CLONING  முறையில் குழந்தை பெறுவதாகும். இதை மஹாபாரதத்தில் கெளரவர் பிறப்பிலும், தேவி பாகவதத்தில் ரக்த பீஜாக்ஷரன் (CLONING FROM BLOOD) ஒவ்வொரு ரத்தத்துளியிலும்  தோன்றிய கதை மூலமும் நாம் அறிகிறோம்.

****

MY OLD ARTICLES :

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1 (POST NO.4929)

Date: 19 April 2018

உலகின் முதல் பொருளாதார நூல் அர்த்த சாஸ்திரம். இது பொருளாதாரம் அரசியல் பற்றி மிக விரிவாக விவாதிக்கும் நூல். இதை எழுதியவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு: சாணக்கியன், கௌடில்யன். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அர்த்தசாஸ்திரத்துக்கு அடுத்தபடியாகப் புகழ்படைத்தது சாணக்கிய நீதி.

ஒரு மன்னன் தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியன் விரிவாக கூறுகிறான். விஷம் வைப்பதிலிருந்து, படுக்கை அறைத் தாக்குதல் வரையுள்ள பல ஆபத்துகளை விரிவாக உரைக்கிறான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பல சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அதில் திடுக்கிடும் பல கொலைகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பெண்கள்பேய்களாகவும்– கொலைகாரப் பேய்களாகவும் மாற முடியும் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள். காளிதாசன் ரகு வம்சத்தின் முதல் அத்தியாயத்தில் வருணிக்கும் அற்புதமான குணங்களுக்கு நேர் மாறுபட்டது இது. அதாவது கிருத யுகத்துக்கும் கலியுகத்துக்கும் உள்ள வித்தியாசம்.

குறிப்பாக வெளிநாட்டினரும், க்ஷத்ரிய ஜாதி அல்லாதாரும் ஆட்சியைப் பிடித்தவுடன் இவை எல்லாம் நடந்தன என்று சொன்னால் தவறாகாது..

அரசர்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் தார்மீக நெறிக்கோ, பொருளாதாரத்துக்கோ பாதிக்காத வகையில் இதைச் செய்தல் வேண்டும். 16 வயது வரை பிரம்மசர்யம் காத்துவிட்டு பின்னர் கல்யாணம் முடிக்கலாம். அரசன் என்பவன் ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம். ராமனைத் தவிர மற்ற மன்னர்கள் இப்படிச்செய்ததை நாம் அறிவோம்.

சங்கத் தமிழ் இலக்கியம் கரிகாலன், ஆய் அண்டிரன், பேகன் போன்றோர் பல மனைவியருடன் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

அசோகனுக்கு இரண்டு மனைவியருக்கு மேல் இருந்தது இலக்கிய வட்டரத்தில் இருந்து தெரிகிறது. இதுதவிர அந்தப்புர அழகிகள் காமக்கிழத்திகள் உண்டு. அசோகனே தனது மற்றும் சகோதரர்களின் அந்தப்புரம் பற்றிப் பேசுகிறான்.

அசோகனின் இரண்டாவது மனிவியின் பெயர் காருவாகி. மஹாவம்சம் என்னும் நூல் வேதிசா நகரில் வாழ்ந்த அசோகன் மனைவி பற்றிக் குறிப்பிடுகிறது. திவ்யாவதான என்னும் நூல் அசோகனின் வேறு இரண்டு மனைவியரின் பெயரகளை மொழிகிறது:- திஷ்ய ரக்ஷிதா, பத்மாவதீ.

அசோகரின்  அரண்மனையிலுள்ள 16,000 பெண்களும் விருந்தினரை உபசரித்ததாக மஹாவம்சம் எனும் இலங்கை வரலாற்று நூல் செப்பும்.

16,000 மனைவியர் 60,000 மனைவியர் என்பதெல்லாம் மரபுத் தொடர் வாக்கியங்கள் (IDIOMS AND PHRASES). இங்கிலாந்தில் ‘அம்மா, இந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தால் உனக்கு மில்லியன் கிஸ் (ONE MILLION KISSES)  தருவேன்’ என்று சொல்லும். தமிழர்கள் நாலு பேர் என சொல்லுவார்கள். புத்த மத நூல்கள் “அவன் 500 விலைமாதர்களிடம் சென்றான்; அவன் 500 யோகியரைச் சந்தித்தான்” என்றெல்லாம் விளம்பும் இவை இலக்கிய மரபுத் தொடர்கள்.அப் படியே பொருள் கொள்ளலாகாது.

கௌடில்யன் என்னும் சாணக்கியனும் அந்தப்புரம், மற்றும் அரண்மனைக்கு வெளியேயுள்ள உல்லாச கேளிக்கை விடுதிகள் பற்றி விளக்குவான்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரம் எனும் நூல் இதை நன்கு விளக்குகிறது:

“அரசன் தினமும் மதிய வேளையில் அந்தப் புரத்துக்குச் செல்ல வேண்டும். நன்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அந்தப்புர அழகிகள் அனைவரையும் அலங்கரித்து ஒரே இடத்திற்கு வரவழைக்க வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப அரண்மனை வீடுகள், அந்தஸ்து, பரிசுகளை உரிய தருணத்தில் தர வேண்டும் அவர்களுடன் ஜோக் JOKE  அடித்து தமாஷாக பேச வேண்டும். அதே போல காமக்கிழத்திகளையும் (புனர்பூஸ்) கவனிக்க வேண்டும்; பிறகு விலைமாதர்களைச் (வேஸ்யா= வேசி) சந்திக்க வேண்டும். இவர்களை தனித் தனியே வீடுகள் கொடுத்து வைக்க வேண்டும். மதிய தூக்கத்தில் இருந்து மன்னன் விழித்தவுடன் மஹாராணிகள் , தோழிகள் புடைசூழ மன்னரைப் பார்க்க வேண்டும். எந்தப் பெண்ணின் மாத விலக்கு முடிந்தது. எந்தப் பெண்ணுடன் அரசன் துயில் கொள்ளலாமென்றும் தோழிமார்கள் மன்னனிடத்தில் செப்ப வேண்டும் (காம சூத்திரம் 4-2)

(ராஜ ராஜ சோழன் 400 ஆடல் அழகிகளுக்குக் கொடுத்த வீட்டு எண்கள், அவர்களுடைய அற்புதமான தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்களை டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற நூலில் காண்க).

****

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2 (Post No.4933)

Date: 20 April 2018

அந்தப்புர ஆபத்துகள்!

மன்னரின் அரண்மனையில் உள்ள அந்தப்புரம் ஒரு ஆபத்தான இடம் என்று சாணக்கியன் எச்சரிக்கிறான். அது சதித்திட்டங்களின் உறைவிடம் . ஆகையால் முன் எச்சரிக்கை அவஸியம் என்று சாணக்கியன் நுவல்கிறான். அந்தப்புரம் என்பது அகழி, மதில் சுவர் ஆகியவற்றால் பாதுக்காக்கப்பட வேண்டும்; பாம்பு,தீ, விஷம் ஆகியன வராத இடமாக இருக்க வேண்டும். ( பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து தீயினால் கொலை செய்ய துரியோதணன் முயன்றது சாணக்கியனுக்கும் தெரியும்)

அந்தப்புரத்தில் பல ரஹஸிய அறைகள், கதவுகள், மருந்து மூலிகைகள் இருத்தல் நலம்; தாதியர் இருக்க வேண்டும்;   அந்தப்புர அதிகாரியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும். அசோகன் இதற்கென ஒரு அதிகாரியை நியமித்ததும் அவர் பெயர் ‘ஸ்த்ரீ அத்யக்ஷ மாஹாமாத்ரா’ என்றும் அறிகிறோம்.

அந்த அதிகாரி காதல் பரீக்ஷையில் (தேர்வில்) தேறியவராக இருக்க வேண்டும் என்பான் கௌடில்யன்.

அதிகாரிகளின் சம்பளம்

அந்தர்வம்ஸிகா என்ற அந்தப்புர அதிகாரிக்கு அதிக சம்பளம் கொடுக்க கௌடில்யன் யோஜனை கூறுகிறான். அவருக்கு 24,000 பணம். அதாவது பிரதம மந்திரி, மஹாராணி, இளவரசர்,  ராஜாவின் அம்மா, தலைமைக் குருக்கள் ஆகியோருக்கு அடுத்த நிலை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 48,000 பணம் சம்பளம் (அர்த்த சாஸ்திரம் 5-3)

அந்தப்புரத்தை காவலர்கள், அலிகள், உளவாளிகள் , வயதானவர்கள் கண்காணிக்க வேண்டும். துறவிகள், கோமாளிகள், பொது மகளிர் உள்ளே செல்லக்கூடாது. குளித்துவிட்டு, சுத்தமாக வரும் பொது மகளிர் உள்ளே அனுமதிக்கப்படலாம். மஹாராணியின் உறவினர்களுக்குக் கூட அனுமதி கிடை யாது. யாரேனும் நோய்வாய்ப்பட்டால மட்டும் அனுமதி உண்டு. (அர்த்த சாஸ்திரம் 5-3)

மன்னரைச் சந்திப்பதற்கு முன்னர் மன்னரின் தோழியர்கள் மஹாராணியை உடல் பரிசோதனை (Body Search) செய்ய வேண்டும் விமான நிலயத்தில் கத்தி, வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை சோதிப்பது போன்ற Body Search  பாடி செர்ச்.

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் இதை எழுதி இருப்பதைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்டு (007 James Bond Films) திரைப்படம் எல்லாம் தோற்றுவிடும் போலத் தோன்றுகிறது. மஹாராணிகள் உடல் சுத்தமும் பரிசீலிக்கப்படும்.

கௌடில்யன் சொல்கிறான்:-

மஹாராணியின் அறையில் மறைந்திருந்த  சொந்த சஹோதரனே  பத்ர சேனன் என்ற மன்னரைக் கொன்றதை அறிக .

அன்னையின் படுக்கைக்குக் கீழே ஒளிந்திருந்து மகனே தந்தையும் மன்னனும் ஆன  காருசாவைக் கொன்றதை மறவாதே.

பொறியுடன் தேன் கலந்து தருவதாகச் சொல்லி காசி ராஜனை மஹாராணியே விஷம் வைத்துக்  கொன்றதையும் அறிக.

காற் சிலம்பு, ரத்தினக் கல், கண்ணாடி ஆகியவற்றில் தடவிய விஷத்தால் மன்னர்களைக் கொலை செய்த செய்திகளையும் மறவாதே.

தலை முடியில் மறைத்து வைத்த கத்தியால் மன்னர்களைக் கொலை செய்த மஹாரணிகளையும் வரலாறு சொல்கிறது– அர்த்த சாஸ்திரம்1-20, காம சுத்திரம் 7-51/54

கீழ்ஜாதி நந்த வம்சம்

சாணக்கியன் இவ்வளவு விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம், அவர் தூக்கி எறிந்த நந்த வம்சத்தினர் மஹா அட்டஹாசம் செய்துவிட்டனர். ஒர் மஹாராணிகீழ் ஜாதி அம்பட்டனுடன் தொடர்புகொண்டதால் அந்தப் பேரரசு தோன்றியது என கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்களுடைய பெயர்கள்

கிரேக்கர் டயடோரஸ் சிகுலஸ் Diodoros Siculus (கி.மு. முதல் நூற்றாண்டு);

ரோமானியர் கர்டியஸ் ரூபஸ் Curtius Rufus (கிபி. முதல் நூற்றாண்டு)

சமண மாத நூல்கள் நந்த வம்ச மன்னன் ஒரு வேசிக்கும் அம்பட்டனுக்கும் பிறந்தவன் என்று எழுதிவைத்துள்ளன.

அசோகன் தனது அந்த்ப்புரத்தை மிகவும் கண்காணித்தானாம். ஒரு இளவரசனும் அந்தப்புர அழகியும் அரட்டை அடித்ததை அறிந்து இருவரையும் அடித்தே கொன்றதாக ‘திவ்யாவதானா’ சொல்கிறது.

‘முத்ராராக்ஷசம்’ என்ற ஸம்ஸ்க்ருத நாடகமும் அரண்மனைச் சதித் திட்டங்களை எழுதியுள்ளன.

நம்பத்தகுந்த, பாதுகாப்புச் சோதனைக்களுக்கு உடப்பட்ட பெண்களைக் கொண்டே அரசனைக் குளிப்பாட்ட வேண்டும். எண்ணெய்  மஸாஜ் Oil Massage  செய்ய வேண்டும்; சாமரம் வீசச் செய்யவேண்டும் என்று மநுஸ்மிருதியும் இயம்பும் (7-219)

பொய்க்கதைகள் மூலம் காதல் டெஸ்ட்

ராணிக்கும்   மற்றொரு மந்திரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக உளவாளி மூலம் வதந்தி பரப்புதல் முதலியன பற்றி கௌடில்யன் பேசுகிறான். மற்றொரு வழிமுறையையும் கௌடில்யன் விவாதிக்கிறான். அதாவது உளவாளி ஒருவன் வணிகன் போல வந்து மஹாராணியின் நெருங்கிய தோழியுடன் காதல் கொள்ளுதல்; அவளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி வீசுதல்; பெண்கள் எப்போதுமே பரிசு, நகை என்றால் மயங்கி விடுவார்கள். மற்றொரு உளவாளி அந்தப் பெண்ணுக்கு காதல் குளிகை தர வேண்டும் அதை அவள் பிரயோகித்தால், அந்த வணிகன் அவளுக்கு அடிமையாகி விடுவான் என்று சொல்ல வேண்டும். அதை அவள் நம்பி வாங்கி விட்டால் அந்த வணிகன் அவளுக்கு வசப்பட்டது போல நடிக்க வேண்டும்.

அவள் மஹாராணிக்கு மிக நெருக்கமானவள் என்பதால் மஹாரணிக்கும் செய்தி எட்டும். தோழி மூலம் அவளுக்கும் காதல் குளிகை தரவேண்டும்; ஆனால் அதில் பயங்கர விஷம் இருக்கும். மஹாராணி அதை நம்பி மன்னனுக்கு படுக்கை அறையில் கொடுத்தால் மன்னன் சாவான்.இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதால்தான் மன்னர்களை எச்சரிக்கிறான் சாணக்கியன்.

அரண்மனைச் சதி நடந்த, ‘குனாலா- அவனது மாற்றாந்தாய் திஷ்ய ரக்ஷிதா சம்பவத்தை’ திவ்யாவதான என்ற நூல் காட்டுவதால் அக்காலத்தில் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாகவே தோன்றுகிறது.

சந்திர குப்தனின் நெருங்கிய நண்பனான பர்வதக, ஒரு விஷ கன்னிகை மூலம் இறந்ததை ‘முத்ராராக்ஷசம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நாடகமும், ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண மத நூலும் காட்டுகின்றன. மாற்றாந்தாய் தனது மகனுக்குப் பட்டம் வேண்டி இப்படிச் செய்ததாக அறிகிறோம்.

சாணக்கியன் கொடுத்த விஷம்

விஷத்துக்கு விஷமே முறிவு- என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் சாப்பிட்டால் நாளடைவில் விஷத்தை முறிக்கும் சக்தி வந்துவிம். ஹோமியோபதியும் இதே அடிப்படையில்தான் சிகிச்சை கொடுக்கிறது  மௌர்யப் பேரரசனான சந்திர குப்தனுக்கு சாணக்கியன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்தானாம். அப்போதுதான் அவன் விஷத்தினால் இறக்கமாட்டான் என்று.

ஆயினும் துர்தரா என்ற மஹாராணி கர்ப்பமாக இருந்தபோது இது நடந்ததால் அவள் உடம்பில் விஷம் ஏறி இறக்கும் தருவாய் வந்துவிட்டது. உடனே கருவில் இருந்த சிசுவை caesarean operation சிசேரியன் ஆபரேஷன் மூலம் சாணக்கியன் எடுக்க வழி செய்தான். அப்படியும் அந்த குழந்தையின் உடலில் ஒரு சொட்டு (பிந்து) விஷம் ஏறியதால் அவனுக்கு பிந்துசாரன் என்று பெயர் வந்ததாக ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண நூல் சொல்லும்.

மனுவும் கூட மனுதர்ம சாஸ்திரத்தில் விஷம் பற்றி எச்சரிக்கிறான்.

நம்பத் தகுந்த பரிசாரகர் செய்த உணவை, மற்றவர்களைச் சாப்பிடச் செய்து பரிசோதித்த பின்னரே மன்னன் சாப்பிட வேண்டும். மந்திரம் ஜபித்து விஷம் போனவுடன் சாப்பிட வேண்டும். விஷ முறிவு மூலிகைகளை உணவுடன் சேர்க்க வேண்டும். விஷத்தை முறிக்கும் ரத்தினக் கற்களை எபோதும் அணிந்திருக்க வேண்டும்.-மநு 7-217/218

மன்னர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அழிவார்கள் என்பதையும் சாணக்கியன் விளம்புவான். ஒரு பிராஹ்மணப் பெண் மீது கை வைத்த மன்னன் போஜ தண்டக்யா கூண்டோடு அழிந்தான். காமத்தினால் கரால வைதேஹன் என்ற அரசன் ஒழிந்தான் (அர்த்த சாஸ்திரம் 1-6)

மநுவும், அடக்கமில்லாது ஆட்டம்போட்டு அழிந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறான்- வேனன்நஹுஷன், பிஜாவன் மகனான சுதாஸ்; மநு 7-41/42)

—subham—

Tags- கொலைகார மஹா ராணிகள், List, பட்டியல் , லிஸ்ட் நீதி வாக்யாம்ருத்

Leave a comment

Leave a comment