
Post No. 13,704
Date uploaded in London – 24 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

வீரபத்ர சுவாமி கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -34
கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும் கோவில் (பகுதி 33 ) பற்றிப் பார்த்தோம் ; கடப்பா வட்டாரத்தில் இன்னும் ஒரு புகழ் பெற்ற கோவில் வீரபத்ர சுவாமி கோவில் ஆகும். இது ராயசோட்டியில் இருக்கிறது.
இந்த ஆலயம் கடப்பா நகரிலிருந்து 48 கி.மீ தொலைவில் இருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. ஆயினும் அண்மைக்காலத்தில் மீண்டும் கட்டப்பட்டதால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கிருஷ்ணதேவராயர், திருப்பதி பாலாஜி கோவிலுக்குப் போகும்போது ராஐசோட்டியில் தங்குவது வழக்கம்.
கோவில் வட்டாரத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஆயினும் வினோதம் என்னவென்றால் அதில் குறிப்பிடப்படும் மன்னர்கள் பெயர்களை வேறு எங்கும் காணமுடியவில்லை. அவை குறிப்பிடும் இடங்களும் இப்போது இல்லை; மன்னர்கள் நிசாங்க பிரதாப மற்றும் தொம்பா; அவர்கள் ஆண்ட இடம் காகட்டபுரம் ;அவர்கள் கோவிலுக்குத் தானங்கள் வழங்கியது பற்றி கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வேறு வேறு இடங்களில் உள்ள கல்வட்டுகளின் காலம் A.D. 1233.

கோவில் வரலாறு
தட்ச யக்ஞத்தை அழிக்க, சிவன் உருவாக்கிய கடவுள் வீரபத்ரர். தனது கணவனை அழைக்காத தந்தை தட்சனைக் கேள்வி கேட்கச்சென்ற பார்வதியை அவன் அவமானப்படுத்தவே அவள் தீக்குளித்தாள்;. கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரைப் படைத்து யாகத்தை துவம்சம் செய்தார். அந்த வீர பத்ரர் பெரிய உருவத்துடன் இந்தக் ஆலயத்தில் காட்சி தருகிறார். பத்ர காளி , கால பைரவர், சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகளும் உள..
கோவிலை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் 20 நிமிட யூ ட்யூப் வீடியோவை காணலாம்.
கோவிலில் பெரிய த்வஜ ஸ்தம்பம் உள்ளது.சிற்பக்கலை சிறப்புகள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.
ஆனால் பக்தர்களின் கூட்டத்துக்கு குறைவில்லை.
கார்த்திகை பெளர்ணமியும் சிவராத்திரி உற்சவமும் பக்கதர்களைக் கவரும் விழாக்கள்.; கர்நாடக மாநிலத்திலிருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள். ராய சோட்டி கடப்பா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகர்.

****
காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில்
கடப்பா வட்டாரத்திலுள்ள இன்னும் ஒரு பார்க்கவேண்டிய ஆலயம் காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில் ஆகும். பழமையுடைய கோவில்; ஆனால் நேரடி போக்குவரத்து வசதிகள் இல்லாமல் உள்ளடங்கிய கிராமப்பாகுதியில் இருக்கிறது கடப்பா வட்டாரத்தில் சென்னூரிலிருந்து ஒன்பது கி.மீ.
பெண்ணா நதியின் கரையில் நெல்வயல்கள் நிறைந்த வட்டாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் இருக்கிறது
இதுவும் புஷ்பகிரி கோவில் பிரதேசத்தில் உள்ளது. அங்குள்ள சென்னகேசவுலு கோவில் முதலியவை ஏழாம் நூற்றாண்டிலிருந்து வரலாறு உடையவை. வைத்யநாத சுவாமி கோவிலுக்கு முன்னர் சுமார் 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு உள்ளது.
ஆலய மண்டபங்களில் உள்ள தூண்கள் முழுதும் இந்துக் கடவுளரின் சிற்பங்கள்தான் .





இதே வட்டாரத்தில் மேலும் மூன்று சிவாலயங்களும் இருக்கின்றன
—SUBHAM—-
TAGS- வீரபத்ர சுவாமி கோவில், ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள், PART -34 ,காமாட்சி வைத்யநாத சுவாமி கோவில்