ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் கொடுத்த வரம்! (Post.13,707)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.707

Date uploaded in London – 25 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் மலத மற்றும் கரூச நாடுகளுக்குக் கொடுத்த வரம்!

ச. நாகராஜன்

பாலகாண்டத்தின் இருபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகா வனத்திற்குப் போவது’ என்ற ஸர்க்கம்.

விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு சென்ற போது அவர்களுக்கு சரயு நதி, தாடகாவனம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார்.

அப்போது அவர் கூறும் ஒரு சரித்திரம் இது:

முன்பொரு காலத்தில் விருத்திராசுரனை இந்திரன் வதம் செய்தான். அப்போது ஏற்பட்ட அசுத்தத்தாலும் பசியாலும் இந்திரனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. அப்போது தேவர்களும் ரிஷிகளும் அவனை நீராட்டினார்கள். அவனது பாவத்தைப் போக்கினார்கள்.

இந்திரன் அதனால் சந்தோஷாமடைந்தான்.  அபோது அவன் இந்த தேசத்திற்கு செழிப்பாக ஆகும் வரத்தைக் கொடுத்தான் இப்படி:

நிர்மலோ நிஷ்கரூஷஸ்ச சுசீரிந்த்ரோ யதாபவத் |

ததௌ தேஷஸ்ய சுப்ரீதோ வரம் பரபுரனுத்தமம் ||

யதா – எப்பொழுது

இந்த்ர” – இந்திரன்

நிர்மல: – பாபமற்றவனாய்

நிஷ்கரூஷஸ்ச – பசியற்றவனாய்

சுசி: – பரிசுத்தனாய்

அபவத் ச – ஆனானோ, அப்போது

சுப்ரீத: – சந்தோஷமடைந்து

ப்ரபு: – பிரபு

தேஷஸ்ய – தேசத்திற்கு

அனுத்தமம் – உத்தமமான

வரம் – வரத்தைக்

ததௌ – கொடுத்தார்

இமௌ ஜனபதௌ ஸ்பீதௌ க்யாதிம் லோகே கமிஷ்யத: |

மலதாஸ்ட கரூஷாஸ்ச மமாங்கமலதாரிணௌ||

மம – என்னுடைய

அங்கமலதாரிணௌ – அவயவத்திலிருந்த பாவங்களைத் தரித்தவைகளான

இமௌ – இந்த இரண்டு

ஸ்பீதௌ – செழிப்பான

ஜனபதௌ – தேசங்களும்

மலதா: ச – மலத நாடுகள் என்றும்

கரூஷா: ச – கரூச நாடுகள் என்றும்

லோகே – உலகில்

க்யாதி – க்யாதியை

கமிஷ்யத: – அடையப் போகின்றன

– பால காண்டம்,  24-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண்கள் 21 & 22

இப்படி இந்திரனால் செய்யப்பட்ட ஆசீர்வாதத்தைக் கண்ட தேவர்கள் நன்று நன்று என்று கூறினார்கள்.

இப்படி இரு நாடுகளும் செழிப்பான பிரதேசங்களாக ஆயின.

இவ்வாறு விஸ்வாமித்திரர் அந்த பிரதேசங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

**

ராமாயணத்தில் வரங்கள் (6)

ராமாயணத்தில் வரங்கள் (6) ஸுகேதுவிற்கு பிரம்மதேவர் கொடுத்த வரம்!

பாலகாண்டத்தின் இருபத்திஐந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகையை கொல்லத் தூண்டுவது’ என்ற ஸர்க்கம்.

தாடகையைப் பார்த்த ராமர் ஒரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு அசாதாரணமான பலம் வந்தது என்று கேட்க அதற்கு பதிலாக மஹரிஷி விஸ்வாமித்திரர் ராமருக்கு தாடகையின் சரித்திரத்தைக் கூறுகிறார்.

முற்காலத்தில் மிகுந்த பராக்கிரமசாலியான ஸுகேது என்றொரு பெரிய யக்ஷன் இருந்தான். அவன் புத்திரர்கள் இல்லாதவனாய் இருந்தான். ஆகவே ஆசாரசீலனாய் கடும் தவத்தை மேற்கொண்டான்.

அதனால் சந்தோஷமடைந்த பிரம்மதேவர் அவனுக்கு தாடகை என்ற பெண் ரத்தினத்தை மட்டும் கொடுத்தார்.

வரதானக்ருதம் வீர்யம் தாரயத்யபலா பலம் |

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 4

வரதானக்ருதம் – வரதானத்தால் கிடைத்த

வீர்யம் – வீர்யமுள்ள

பலம் – பலத்தை

தாரயதி – தரிக்கிறாள்

வரதானத்தால் இவளுக்குக் கிடைத்த பலத்தை இவள் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு ஆரம்பித்த விஸ்வாமித்திரர் மேலும் தொடர்கிறார்:

 ததௌ நாகஸஹஸ்ரஸ்ய பலம் சாஸ்யா: பிதாமஹ:

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 7

பிதாமஹ: – பிரம்மதேவர்

அஸ்யா: – இவளுக்கு

நாகஸஹஸ்ரஸ்ய – ஆயிரம் யானைகளையுடைய

பலம் ச – பலத்தையும்

ததௌ – கொடுத்தார்

இவ்வாறு தாடகை தானே வரம் பெறாவிட்டாலும் கூட ஸுகேது பெற்ற வரத்தால் அவளுக்கு வரத்தின் பயன் கிடைத்துள்ளது என்று விஸ்வாமித்திரர் விளக்குகிறார்.

Leave a comment

1 Comment

  1. Athmanathan's avatar

    Athmanathan

     /  September 25, 2024

    மலத மற்றும் கரூச நாடுகள் தற்போது எவை, எஙகுள்ளன என்று தயவு செய்து கூறுங்கள். நன்றி.

Leave a comment