Post No. 13,708
Date uploaded in London – 25 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்துமதக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தர்கள் காப்பி அடித்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மம் ;போதி சத்துவர் அவர்; என்று பொய்யுரை பரப்பினர். அவைகளை ஜாதகக்கதைகள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்தனர்; அதில் மஹாபாரதம், ராமாயணமும் உள்ளன. நிற்க.
இந்தியக் கதைகளை எகிப்திய அடிமை , கிரேக்க நாட்டு ஈசாப் காப்பி அடித்தார். மயில், காகம் முதலியன பற்றிப் பேசியதால் அவர் காப்பி அடித்தது அம்பலம் ஆனது
.பிரான்ஸ் நாட்டு லா பாந்தேன் பஞ்சதந்திரக் கதைகள்தான் தன்னை ஊக்குவித்தன என்று ஒப்புக்கொண்டார். பஞ்சதந்திரக் கதைகள் பற்றிய சுவையான வரலாறு நிறைய பேருக்குத் தெரியாது. திருவள்ளுவர் குறைந்தது ஏழு திருக்குறள்களில்
பஞ்சதந்திரக் கதைகளை பயன்படுத்தியுள்ளார். ஏராளமான கோவில்களில் இந்தக் கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்கள் பற்றி தனி புஸ்தகமே வந்துவிட்டது. ஆங்கிலத்தில் இதை எழுதியவர் பெயரை வாஜ்பேய் ( Vajpeyee = Vidyapathi=Bidpai=Piplai) என்று எழுதி வைத்துள்ளனர் .
****
கால வரிசைப்படி காண்போம்:
யார் இந்தக் கதைகளை எழுதியது ?
விஷ்னு சர்மா என்ற 80 வயதுப் பிராமணன் .
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ?
மயிலாப்பூர் , தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர்/ Madras! விஷ்ணு சர்மா சம்ஸ்க்ருதத்தில் எழுதியதால் இதை மகிழாரூப்யம் என்று எழுதியுள்ளார்
Source – The Pancatantra, Penguin Classics by Chandra Rajan, 1993
எவ்வளவு கதைகள் உள்ளன ?
எண்பதுக்கும் மேலான கதைகள் உள்ளன. அத்தனையிலும் மிருகங்கள், பறவைகள், மற்றும் அசட்டுப் பிராமணன்– கதா பாத்திரங்கள்
அவர் எழுதிய ஒரிஜினல் இருக்கிறதா?
இல்லை ; ஒருவேளை நாளந்தா நூலகத்தை முஸ்லீம்கள் எரித்தபோது கரியாக்கி இருக்கலாம்.
உலகம் முழுதும் பரவியது எப்படி?
பாரசீக மொழியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டது ; பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியவுடன் அராபிய வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது.
எத்தனை மொழிகளில் இந்தக் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டன ?
ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் இது வெளியாகியுள்ளது
வாஜ்பாயிக்கும் பஞ்ச தந்திரக் கதைகளுக்கும் என்ன தொடர்பு ?
ஆங்கிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் இதை பிட்பாய் என்று எழுதியுள்ளார் யார் அந்த பிட்பாய் ? இது வித்யாபதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் அல்லது வாஜ்பேயீ என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் என்று ஆராய்சசியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
( Vajpeyee = Vidyapathi=Bidpai=Piplai)
Source – The Pancatantra, Penguin Classics by Chandra Rajan, 1993
பாரசீக/ பஹலவி மொழியில் இதன் பெயர் என்ன ?
பஹ்லவி /மிடில் பெர்சியன் PEHLEVI/ MIDDLE PERSIAN
பஹலவி என்பது மத்திய கால பாரசீக மொழி; 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கிலிருந்து அழிந்தது.
ஆங்கிலத்தில் இந்தக் கதைகளின் பெயர் என்ன ?
The Fables of Bidpai (or Pilpai in various European languages, Vidyapati or Vajpeyee in Sanskrit)
ஆங்கிலத்தில் அண்மைக்காலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
ஆர்தர் W. ரைடர் / Arthur W. Ryder, , டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை சந்திரா ராஜன்
லா பாந்தேன் 400ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துறவி பிப்லாய் Bidpai or Piplai எழுதியது என்கிறார். அதை ஐரோப்பியர்கள் பிட்பை என்றும் மொழிபெயர்த்தனர்
இவைகளும் மேலும் இது பாரசீகத்துக்குச் சென்ற விஷயங்களும் மிகவும் சுவாயான கதைகள் அடங்கியது
முதல் கதை இதோ
முன்னொரு காலத்தில் அமரசக்தி என்ற அரசனுக்கு மூன்று மகன்கள் ; மூன்றும் ‘தறுதலை’, காலிப்பயல்கள்; அடங்காப்பிடாரிகள்! மன்னனுக்கு நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலை. பெரிய பெரிய அமைச்சர்கள் அறிஞர்கள் எல்லாரும் வந்து மகன்களைத் திருத்தப் பார்த்தனர். முடியவில்லை. மன்னன் பெரிய பரிசு அறிவித்தான்; ஒரு ௮௦ வயது கிழட்டுப் பிராமணன் நான் திருத்துகிறேன் அரசே என்று முன்வந்தான்; ஓஹோ இது பணத்தாசைபிடித்த கிழடு போல என்று எண்ணி மன்னன் ஆறே மாதம் கெடு விதித்தான். மகா அற்புதம் நடந்தது ! ஆறே மாதங்களில் மூன்று மகன்களும் வைரக்கட்டிகலாக மாறிவிட்டனர். கதைகள் மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும் என்பதை உலகிற்குக்காட்டினான் அந்தக் கிழட்டு பிராமணன் இவ்வளவுக்கும் வயது80. இப்போது இருந்தால் உலகிலுள்ள அதனை புஸ்தக, இலக்கிய விருதுகளும் , பரிசுகளும் அவருக்குப் போயிருக்கும்.
ஐந்து தந்திரங்களை அரசர்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஐந்து பிரிவுகளாக சம்ஸ்க்ருத மொழியில் கவிதை மழை பொழிந்தார். விலங்குகள், பறவைகள் பற்றிய கதைகளுக்கு இடையே ஏராளமான பொன் மொழிகள்– திருவள்ளுவர் தோத்துப்போவார்- அப்படி கவிமழை அத்தனையும் பொன் மொழிகள் !! நிறைபேருக்கு இது தெரியாது அவர்களுக்கு குரங்கு- முதலை- நவாப் பழக்கதை, குரங்கு- – தூக்கணாங்குருவி கதை மட்டும்தான் தெரியும்; தமிழில் பஞ்சதந்திரக் கதை பொன்மொழிகளை நான் அரிதாகவே காண்கிறேன்
அடுத்த பகுதியில் இந்தக் கதைகள் எப்படி, ஏன் பாரசீக மொழியில் ஆக்கப்பட்டன என்ற சுவையான ஒரு கதையைக் காண்போம்
இதிலுள்ள நரிகளின் — விலங்குளின் — பெயர்களை எப்படியெல்லாம் மாற்றியுள்ளனர் என்ற சுவையான விஷயத்தையும் காண்போம்.
THE PANATANTARA, VISNU SARMA, MAHILAROPYA, 570 CE,
LA FONTAINE, FIFTY LANGUAGES, PEHLEVI
—subham—
Tags- வாஜ்பாயி ,பஞ்சதந்திரக் கதைகள் ,உலகம் முழுதும் ,பரவியது , எப்படி? மயிலாப்பூர் , பிட் பாய்
Athmanathan
/ September 25, 2024வாஜ்பாய் என்ற பெயரில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் வாஜபேய யாகம் செய்த பரம்பரையை சேர்ந்தவர்கள்