மயிலாப்பூர் பிராமணன் கதை, ஈரான் நாட்டுக்குப் போன சுவையான கதை! (Post No.13,711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,711

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?- PART-2

கட்டுரையின் முதல் பகுதியில் விஷ்ணு சேர்மன் என்ற 80 வயது கிழட்டுப் பிராமணன் பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியதையும் அதுதான் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகம் முழுதும் பரவிய முதல் சம்ஸ்க்ருத நூல் என்றும் கண்டோம்.

ஈ மஹிளா வேத  பூர்

அதை எழுதிய விஷ்ணு சர்மா வாஜ்பேயி சென்னையிலுள்ள மயிலாப்       போ ரைச் சேர்ந்த அக்கிரகார பிராமணன் என்று ரிக்வத்தை மொழிபெயர்த்த எச் எச் வில்சன் PROFESSOR H H WILSON  கூறுவதையும் கண்டோம். அந்தப் பிராமணன் அந்த இடத்தை மஹ்யாரூப்யம் என்று சொன்னதை பேராசிரியர் வில்சன் மட்டுமே அடையாளம் கண்டார்.

இது எப்படி ௧௫௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஈ இரான்  (பெர்சியா- பாரசீகம் ) நாட்டுக்குப் போய் அங்கிருந்து ஐரோப்பா முழுதும் பரவியதேது என்ற கதையைக் கேளுங்கள்

மூலிகை தேடிய கதை

இந்தியாதான் நிறைய வைர  வாரமும் தங்கமும் மூலிகைகளும் நிறைந்த நாடு என்பது உலகம் முழுதும் அறிந்த உண்மை. இதனால்தான் கொலைகார கொள்ளைக்காரன் கொலம்பஸ் இந்தியாவைத்த தேடித் புறப்பட்டு மேற்கைநிதியத் தீவுகளில் இறங்கி அதை இந்தியா என்று சொன்னானா.இன்றுவரை அமெரிக்க வரை அந்த இந்திய பெயர் ஒட்டிக்கொண்டது. நிற்க.

பாரசீகம் எனப்படும் ஈரான் நாட்டில் குஷ்ரோ அனு ஷ்ரவண  என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனிடம் யாரோ ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான். அதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மூலிகை பற்றி எழுதியிருந்தது. அது  இந்தியாவில் கிடைக்கும் என்று அறிந்து  முதலமைச்சர் புர்சொயியை இந்தியாவுக்கு அனுப்பினான்

CHIEF MINISTER BURZOE , KING KHOSRO ANUSHIRVAN (ANESTRES CASTRI, IN NORTH ) OF IRAN (EDON)  AROUND 570 CE .

இந்தியாவில் செலவுகளைச் சமாளிப்பதாற்காக தங்கம், வெள்ளிக் கட்டிகளையும் கொடுத்து அனுப்பினான்  அது மட்டுமல்லாமல் இந்திய மஹாராஜாக்களுக்கு கடி தங்களையும் கொடுத்து வைத்தான் .இந்தியாவிலுள்ள ரிஷி முனிவர்களும் அறிஞர்களும் அவனுக்கு எல்லாவித உதவிகளையும் நல்கினர். காடு மலை கழனிகளையெல்லாம் விடாமல் தேடினர். ஆனால் சாவா மருந்து அளிக்கும் மூலிகைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தப் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்கள் தவறு என்று எல்லோரும் ஒருமானதான முடிவுக்கு வந்தனர். அடக் கடவுளே!  நான், மன்னருக்கு என்ன பதில் சொல்லுவேன் என்று தவியா த் தவித்தார் அமைச்சர் புர்சொயி. ஒரு பிரபல இந்து தத்துவ அறிஞர் அவரைச் சந்த்தித்து “கவலை வேண்டாம் இந்தப் புஸ்தகத்தை உன் மன்னரிடம் காண்பி” போதும் என்றார்.

அதில் மூலிகை பற்றிய அரிய உண்மை பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : உயர்ந்த மலைகள் என்பன உயர் நிலையைடைந்த பேரறிஞர்கள் அதில் குறிப்பிடப்பட்ட மூலிகைகள் என்பன முனிவர்கள் எழுதிய புஸ்தகங்கள்  மற்றும் அதன் சாரமும் ஆகும்;

இறந்தோரை எழுப்புவது என்பது அறியாமையில் மூழ்கி புதைந்து கிடப்போரை உசுப்பி விடும்  ஞானம் ஆகும்

புர்சொயிக்கு பேரானந்தம் கிடைத்தது. எனக்கு புஸ்தகத்தின் காப்பி வேண்டுமே என்று கேட்டார். அது எல்லா இந்திய அரசர்களிடமும் இருந்த புஸ்தகம். உடனே நகலும் கிடைத்தது; அதைப் பாரசீக (பஹலவி) மொழியில் மொழிபெயர்க்க அனுமதியும் வாங்கி மொழிபெயர்த்தார்.

அதைக் கண்ட மன்னனுக்கு பிரம்மானந்தம்! உடனே இது போன்ற அறிஞர்களை நமது சபைக்கு அழையுங்கள் என்று ஆணையிட்டான். தனது அரண்மனையில் ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கினான்; அதில் அந்த புஸ்தகத்தை சிம்மாசனத்தில் வைத்தான்அந்தப் புஸ்தகம்தான் பஞ்ச தந்திரம் என்னும் ஸம்ஸ்க்ருதக் கதை புஸ்தகம்!

அராபிய மொழியில் இதன் பெயர் கலிலா வா திம்னா .

KALILAH WA  DIMNAH IN ARABIC, EIGTH CENTURY CE

என்ன துரதிருஷ்டம் என்றால் அந்த பஹலவி   மொழி ஒரிஜினல் இப்போது இல்லை ;மைலாப்பூர் பிராமணன் எழுதிய ஒரிஜினல் — மூலப் புஸ்தகமும் இல்லை; இந்தியாவில் 200 பேர் படி (COPIED)  எடுத்து வைத்திருந்தனர் அவையும்  பஹலவி  மொழியில் எழுதியதை அராபிய மொழியில் ஆக்கிய புஸ்தமும்தான் இப்போது நம்மிடம் புழங்கி வருகின்றன.

யார் யார் இந்துக்களைக் காப்பி அடித்தனர் ?

முதல் முதலில் பெளத்தர்கள் இந்துமதக்க கதைகளை ஜாதக்கதைகளை என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்கள்.  ராமன், தசரதன் போன்றோரையும் போதிசத்துவர் என்று புளுகினார்கள் இன்று கிறிஸ்தவர்களும், கர்நாடக பாடகிகளும், திராவிடர்களும் இதே போல புளுகு மூட்டைகளைக் கட்டி இலவசமாக வழங்குவதைக் காண்கிறோம். வள்ளலார் , வள்ளுவர்  ஆகியோர் நெற்றியில் இருந்த விபூதியை அழித்தையும் நாம் காண்கிறோம் .

ஐரோப்பாவில் இது எப்படி உருவெடுத்தது என்ற புள்ளிவிவரம் இதோ:-

THE ARABIAN NIGHTS .  THE GESTA ROMANORUM , BOCCASIO’S DECAMERON CHAUSER’S CANTERBURY TALES, THE FABLES OF LA FONTAINE

SOME STORIES OF GRIMM

BRE’ER RABBIT STORIES OF NORTH AMERICA

இந்தக் கதைகளை அராபிய இரவுகள் , பொக்காஸியோ எழுதிய டெக்கமரான் சாசர் எழுதிய கான்டர்பரி கதைகளில் காணலாம்  எல்லோரும் ஈயடிச்சான் காப்பி அடிக்காமல் தங்கள் நாட்டுக்கு ஏற்றவாறு கதைகளை மாற்றி எழுதினார்கள்

லா பாந்தேன் (1678)  என்ற பிரெஞ்சுக்காரர் மட்டும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  கதைகளில் பஞ்ச தந்திர புஸ்தகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவை, ஈசாப் கதைகளுக்கும் முந்தியவை என்று திட்டவட்டமாக்க கூறுகிறார்

இந்துக்கள் தங்கள் நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரப்பியதற்கு கிடைத்த முதல் வலுவான ஆதாரம் இந்த சம்ஸ்க்ருத நூல்தான் .

வட அமெரிக்கா வரை இந்தக் கதைகள் பரவிவிட்டது

இந்தியாவிலேயே தண்டி எழுதிய தச குமார சரித்திரம், சுக சப்ததி, ஹிதோபதேசம் , திருக்குறள் முதலிய நூல்களில் இதன் தாக்கத்தை காணலாம்.

THE ART OF STORY TELLING

உலகில் கதை சொல்லும் கலையை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்கள்! எல்லா இதிகாசங்களும் புராணங்களும் வாய்மொழியாக முதலில் சொல்லப்பட்டதாவே நமது நூல்கள் செப்புகின்றன. வால்மீகி அல்லது வியாசர் அல்லது நைமிசாரண்ய முனிவர்கள் உருவாக்கிய சம்ஸ்க்ருத இலக்கியத்துக்குப் பக்கத்தில் கூட உலகின் வேறு எந்த மொழியும் நெருங்க முடியாது!  இவை அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை .

சங்க இலக்கியத்தில் கிருஷ்ணன் கோபி கதையும் கூட வந்துவிட்டது இந்திரனை திருவள்ளுவரும் தொல்காப்பியரும் பத்து இடங்களுக்கு மேல் குறிப்பிடுகின்றனர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நூல்களை சம்ஸ்க்ருதத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காளிதாசன் மேகதூத நூலில் சொல்கிறான்-

கிராமங்களில் ஆல மரத்துக்கடியில் கிராம முதியோர்கள் பிரமாதமாக உதயணன் கதைகளை சொல்லுவதைக் கேட்டுக்கொண்டே போ மேகமே1” என்று மேகத்தைத் தூது விடுகிறான். அதுதான் உலகின் முதல் தூத இலக்கியம் .

இதைப் படிக்கும்போது பாரதியார் சொன்ன சத்தியமான வாக்கு நினைவுக்கு வருகிறது :

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் –

ஆம் இந்தியா உலகிற்களிக்கும் –

ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க” – –பாரதியார் பாடல்.

திருக்குறளில் பஞ்சதந்திரக் கதை வரும் குறள்கள்: 273, 274, 277, 481, 495, 500, 633

ஒவ்வொரு கதைத் தழுவலிலும் மிருகங்களின் பெயர்களை குறிப்பாக, முக்கிய கதா பாத்திரங்களான இரண்டு நரிகளின் பெயர்களை எப்படியெல்லாம் எழுதினார்கள் என்பது ஒரு பெரிய கதை; மொழியியலை ஆராய்வோருக்கு அவை பெரும் விருந்து!

****

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

 Date: 10 January 2017

Post No.3531

ஒரு குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 –SUBHAM–

TAGS- மயிலாப்பூர் ,பிராமணன் கதை, ஈரான் நாடு, சுவையான கதை, வாஜ்பாயி, பஞ்சதந்திரக் கதைகள் பரவியது எப்படி?- PART-2, திருக்குறளில்,  பஞ்சதந்திரக் கதை குறள்கள்:

Leave a comment

Leave a comment