
Post No. 13.710
Date uploaded in London – —26 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (7) விஷ்ணு பகவான் கச்யபருக்கு வரம் கொடுத்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் இருபத்திஒன்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘சித்தாஸ்ரமம் போவது’ என்ற ஸர்க்கம்.
தேஜஸ்வீயான விஸ்வாமித்திரர் ராமருக்கு சித்தாஸ்ரமத்தைப் பற்றிக் கூறலானார்:
“இது வாமனருடைய பூர்வாஸ்ரம இடம் ஆகும். இவ்விடத்தில் மஹா தபஸ்வி ஸித்தியை அடைந்தார். ஆகவே இது சித்தாஸ்ரமம் என்று பெயர் பெற்றது.
பெரும் முனிவரான கச்யபர் விஷ்ணுவை நோக்கி, “ பிரபுவே உம்முடைய சரீரத்தில் எல்லா ஜகத்தையும் பார்க்கிறேன். உம்மைச் சரணடைந்தேன்” என்றார்.
விஷ்ணு மனமகிழ்ந்து அவரை நோக்கிப் பின்வருமாறு சொன்னார்:
தமுவாச ஹரி: ப்ரீதி கச்யபம் தூதகல்மஷம் |
வரம் வரய பத்ரம் தே வரார்ஹோஸி மதோ மம |\
– பாலகாண்டம் 29-ம் ஸர்க்கம். ஸ்லோக எண் 14
தூதகல்மஷம் – பாவத்தை விட்டு நீங்கிய
தம் – அந்த
கச்யபம் – கச்யபரைப் பார்த்து
ப்ரீத: – மனம் மகிழ்ந்து
ஹரி: – விஷ்ணு பகவான்
உவாச – பின்வருமாறு
வரம் – வரத்தைச் சொன்னார்.
வரய – கேட்டுக் கொள்
தே – உமக்கு
பத்ரம் – சகல பாக்கியமும் உண்டாகட்டும்
மம – எனக்கு
மத: – இஷ்டனான
வரார்ஹ – வரத்துக்கு உரியவனாய்
அஸி – இருக்கிறாய்
இதைக் கேட்ட கச்யபர் கூறினார்:
அதித்யா தேவதானாம் ச மாம சைவானுயாசத: |
வரம் வரத சுப்ரீதோ தாதுமர்ஹஸி சுவ்ரத: ||
சுவ்ரத: – நல்ல விரதமுடையவரே
வரத – எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்ட பிரகாரம் அளிப்பவரே
அதித்யா: ச – அதிதிக்கும்
தேவதானாம் ச – தேவர்களுக்கும்
அனுயாசத: – வேண்டிக் கொள்ளும்
மம ஏவ – எனக்கும்
சுப்ரீத: – அன்புடையவராய்
வரம் தாதும் – வரத்தைக் கொடுக்க
அர்ஹஸி – உரியவராகிறீர்
புத்ரத்வம் கச்ச பகவன்னதித்யாம் மம சானக |
ப்ராதா பவ யவீயாம்த்வம் ஷக்ரஸ்யாசுரசூதன: ||
ஷோகார்தானாம் து தேவானாம் சாஹாய்யம் கருதுமர்ஹஸி ||
அனக – பாபரஹித
அசுரசூதன – அசுரர்களை அழிப்பவரே
பகவான் – பகவானே
த்வம் – நீர்
அதித்த்யாம் ச – அதிதிக்கும்
மம ச – எனக்கும்
புத்ரத்வம் – பிள்ளையாகப் பிறத்தலை
கச்ச – அடையும்.
ஷகஸ்ய – இந்திரனுக்கு
யவீவான் – இளைய
ப்ராதா பவ – தம்பியாக இரும்
ஷோகார்தானாம் – சோகத்தால் வருந்துகின்ற
தேவானாம் – தேவர்களுக்கு
சாஹாய்யம் – சஹாயத்தை
கர்தும் – செய்ய
அர்ஹஸி – உரியவராகிறீர்
அயம் ஸித்தாஸ்ரமோ நாம ப்ராஸாதாத்தே பவிஷ்யதி |
சித்தே கர்மணி தேவேஷ உத்திஷ்ட பகவன்னித: ||
பகவான் – பகவானே
தேவேஷ – தேவேசனே
தே – உம்முடைய
ப்ரஸாதாத் – அருளால்
கர்மணி சித்தே – யாகம் ஸித்தி பெற்ற பொழுது
அயம் சித்தாஸ்ரம: – இது சித்தாஸ்ரமம் என்று
நாம – பிரசித்தமாக
பவிஷ்யதி – ஆகப் போகிறது
இத: – இங்கிருந்து
உத்திஷ்ட – எழுந்திரும்
பாலகாண்டம் 29-ம் ஸர்க்கம். ஸ்லோக எண்கள் 15 முதல் 18 முடிய
இப்படி கச்யப முனிவர் வேண்ட மஹாவிஷ்ணு ‘ததா இதி’ அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து அதிதியிடத்தில் பிறந்தார். பின்னர் வாமன உருவத்தை அடைந்த்து பலி சக்கரவர்த்தியிடம் சென்றார்.
பின்னர் நடந்த கதை அனைவரும் அறிந்ததே!
**