தமிழ் பன்றிகளும் ஆங்கிலப் பன்றிகளும்-8 (Post No.13,723)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,723

Date uploaded in London – 29 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பன்றி – தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்- Part 8

மேலை நாட்டு மதங்களில் யூத (JEWS) மதத்தினரும் முஸ்லீம்களும் பன்றி மாமிசத்தை (PORK) சாப்பிடுவதில்லை. இந்துக்கள், மாட்டு மாமிசத்துக்குத் தடை விதித்துபோல, அவர்கள் பன்றிக்கறிக்குத் தடை விதித்துள்ளனர். 

தமிழ் நாட்டில் கண்ணப்ப நாயனார் போன்ற வேடுவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டை யாடியதை நாம் அறிவோம். தூய வெஜிட்டேரியங்களான சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் நூல் கூட பன்றிகளை கூழ் ஊற்றி வளர்த்த செய்தியை நமக்கு பாடல்களில் அளிக்கிறது!

இந்தியாவில் இப்போது ரோட்டில் திரியும் பன்றிகளையே காண்கிறோம் அந்த காலத்தில் பண்ணைகளில் பன்றிகளை வளர்த்தனர் போலும்; மேலை நாட்டினரும் இப்போது இம்முறைகளில் பன்றிகளை, பண்ணை வைத்து வளர்ப்பதால், அதை அசுத்தப் பிராணிகளாகப் பார்ப்பதில்லை. எல்லா சிறுவர் சிறுமியரும்  பன்றி பொம்மைகளை, உண்டியல்களை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதை (PIGGY BANKS) மேல் நாடுகளில் எல்லா வீடுகளிலும் காணலாம்.

சிவ பெருமான், பன்றிகளுக்கும் உதவியதை  திருவிளையாடல் புராணங்களில் காணலாம். பன்றிமலை போன்ற புவியியல் பெயர்களும் தமிழ் நாட்டில் உள்ளன.

ஆயினும் பொதுவாக பன்றிகள் கீழ்மட்ட பிராணிகள் என்பதில் எல்லோருக்கும் கருத்து ஒற்றுமை உளது.

****

ஷேக்ஸ்பியர் William Shakespeare (1564-1616)

யூத – கிறிஸ்தவ மத வேறுபாடுகளை மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் MERCHANT OF VENICE நாடகத்தில் கிண்டல் தொனியில் கொடுக்கிறார். இதோ அந்த சுவையான சம்பாஷணை

பன்றிகள் மீது ஷேக்ஸ்பியருக்குள்ள வெறுப்பினை உரையாடலில் படிக்கலாம் .

ஷைலாக் சொல்கிறான் :

Yes, to smell pork; to eat of the habitation which

your prophet the Nazarite conjured the devil into. I

will buy with you, sell with you, talk with you,

walk with you, and so following, but I will not eat

with you, drink with you, nor pray with you.

விளக்கம்

ஷைலாக் , யூத மதத்தினன் JEW.

பஸ்ஸானியோ, அந்தோனியோ ஆகிய இருவரும் CHRISTIANS கிறிஸ்தவர்கள்.

“பன்றி மாமிசத்தை PORK முகர்ந்து பார்ப்பதோ சாப்பிடுவதோ வெறுக்கத்தக்கது. பன்றிக்கறியில் சாத்தானை ஏற்றி மனிதனைப் பைத்தியமாக்குவதை அந்த நாசரேத் ஆசாமி  (ஏசு கிறிஸ்து) சொல்லியிருப்பதால் கிறிஸ்தவர்களும் யூதர்களைப் போலவே அதைப் பார்க்க வேண்டும்” – ஷைலாக்.

****

Some men there are love not a gaping pig;

Some, that are mad if they behold a cat;

And others, when the bagpipe sings i’ the nose,

Cannot contain their urine: for affection,

Mistress of passion, sways it to the mood

Of what it likes or loathes. Now, for your answer:

THE MERCHANT OF VENICE

இதுவும் ஷைலாக் வாயிலிருந்து வரும் வசனம் தான்

3000 டுகாட் DUCATS (தங்க காசு) கடனைத் திருப்பித் தாராவிடில் அந்தோனியோ ஒரு பவுண்டு எடைக்கு அவன் உடலை வெட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாயே ஷைலாக்!! இதற்கு என்ன காரணம்? என்று கேட்கிறான் பஸ்ஸானியோ.

அதற்கு ஷைலாக் தரும் பதில் :– “காரணம் எல்லாம் சொல்லமுடியாது; சிலருக்குப் பன்றிகளை பிடிப்பதில்லை; சிலருக்குப் பூனைகளைப் பிடிப்பதில்லை; சிலருக்குப் பேக் பைப் BAG PIPE ஊதல்காரர்களைப் பிடிப்பதில்லை” — என்று மட்டும் பகர்கிறான்.

இதிலும் பன்றி மீதான வெறுப்பு / HATRED தொனிக்கிறது

இவ்வாறு ஷேக்ஸ்பியர் தனது கருத்துக்களை யூத மதத்தினரின் வாய் வழியாகப் புகல்கிறார் என்று கொள்ளுவது பொருத்தமே.

The wretched, bloody, and usurping boar, —- The Tragedy of King Richard III, Act 5, Scene 2 (1593-3).

இவை தவிர காட்டுப் பன்னி BOAR, ஸ்வய்ன் SWINE என்றெல்லாம் இன்னும் ஒரு நாடகத்திலும் மொழிகிறார்.

****

மேலும் சில செய்திகள் !

அமெரிக்காவில் கார் ஓட்டும் இந்தியர்கள், சாலைகளில் ஆட்களைப் பிடிக்க போலீஸ்காரர்கள் நின்றால், டேய் மாமா இருக்கிறான் , ஜாக்கிரதை என்று அடுத்த கார் ஓட்டிகளுக்குத் துப்புத் TIPS தருவார்கள்  அதுபோல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கீழ்ஜாதிக்காரகள் போலீஸ்காரனை டேய் பன்னி /பண்ணி இருக்கு ஜாக்கிரதை! என்று எச்சரிப்பார்கள. அதாவது உளவாளி, போலீஸ் என்பதைத் திருடர்கள் பன்னி /பண்ணி என்று கொச்சை மொழியில் SLANG சொல்லுவார்கள்.

What does pig mean in British slang?

In 1874, a slang dictionary published in London listed the definition of pig as “a policeman, an informer. The word is now almost exclusively applied by London thieves to a plain-clothes man, or a ‘nose.

சம்ஸ்க்ருதத்தில் வராஹ அவதாரம் என்னும் போற்றுதலைத் தவிர பன்றிகள் குறித்து அதிகம் பாடல்கள் இல்லை. வராஹ/ பன்றி அவதாரம் எல்லோராலும் வணங்கப்படுகிறது.

*****

இனி தமிழ் பன்றிகளைக் காண்போம்:

நீதி வெண்பா பாடல்கள்

பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறியன்றோ – காதுமத

மாகரத்த யானை வழிவிலகல் புன்மலம்தின்

சூகரத்துக்கு அஞ்சியோ சொல்.

யானை போகும் வழியில் அசிங்கமான பன்றிகள் வந்தால் யானை விலகிச் செல்லும். அதுபோல அறிவிலிகளைக் கண்டால் அறிவாளிகள் ஒதுங்கிப் போவார்கள். அதுதான் பன்றிக்கும் யானைக்கும் – அறிஞர்களுக்கும் மூடர்களுக்கும்– உள்ள வித்தியாசம்.

*****

பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலின்ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே – பொற்கொடியே

பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன்

ஒன்றமையாதோ கரிக்கொன்று ஓது.

பல இன மக்கள் பன்றிக்குட்டிகளைப்போல பெற்றுத்துத் தள்ளுகிறார்கள் ; அவை உதவாக்கரைகள்; ஆனால் யானை ஒரே ஒரு குட்டியைத்தான், தன்  வாழ்நாளில் ஈனும் ; அதுவோ இருந்தாலும் ஆயிரம் பொன்  இறந்தாலும் ஆயிரம் பொன்! அது போல நல்ல பிள்ளைகளைப் பெறுக.

4618. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.

The sow has many young ones at a time, the lioness only one.

***

4619. பன்றி பல குட்டி போட்டு என்ன?

What, if a sow has a numerous litter?

****

887. ஆனை ஒரு குட்டி போட்டும் பயன்; பன்றி பல குட்டிப்போட்டும் பயன் இல்லை.

It is of value though an elephant brings forth a single young one but the many young ones of a pig are of no value. One good thing is better than ten bad ones.

***

நாலடியார் பாடல்கள்

257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;

     நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;

     குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து

     சென்றிசையா வாகும் செவிக்கு.

     (இ-ள்.) நன்று அறியா மாந்தர்க்கு – நன்மை தெரிந்து கொள்ள மாட்டாத மனிதருக்கு, அறத்து ஆறு – தருமத்தின் விழியானது, உரைக்குங்கால் – சொல்லுமளவில், பன்றி கூழ் பத்தரில் – பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில், தேமா – மதுரமான மாங்கனியை, வடித்தற்று – பிழிந்தாற் போலும்; குன்றின் மேல் கொட்டும் தறி போல் – மலைமேல் அடிக்கிற கட்டுத்தறி போல், தலை தகர்ந்து – (அத்தருமவழிகள்) தலை சிதறி, செவிக்கு – காதுக்கு, சென்று இசையா ஆகும் – போய்க் கேளாதவைகளாய் விடும், எ-று.

     பன்றிக்குக் கூழுருசி தெரியுமல்லது தேமாவி னுருசி தெரியாது அதுபோல் கீழ் மக்களுக்குத் தருமவுபதேசம் இனியாது ஆதலின் அவ்வுபதேசம் மலைமேல் அடிக்குந்தறி உள்ளிறங்காமல் தலைபிளந்து போவதுபோல் சிதறிப் போய் காதிலேறாது; அதனால் அது வீண் என்கிறபடி.

*****

358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன

     மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை

     வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி

     செயிர்வேழம் ஆகுதல் இன்று.

     (இ-ள்.) வாள் கண்ணாய் – வான் போன்ற கண்ணுடையவளே!, இல் பிறந்தார் – நற்குடிப்பிறந்தவர், ஏட்டை பருவத்தும் – தளர்ச்சியான காலத்திலும் [தரித்திரத்திலும்], செய்வன – செய்கிற நற்காரியங்களை, முழு மக்கள் – மூடர்கள், மோட்டிடத்தும் – உயர்வான காலத்திலும் [செல்வப்பெருக்கிலும்], செய்யார் – செய்யமாட்டார்கள்; கோட்டை – கொம்பில், வயிரம் செறிப்பினும் – பூணைப் பூட்டினாலும், பன்றி – பன்றியானது, செயிர் வேழம் ஆகுதல் – வீரங் காட்டும் படியான யானை ஆகுதல், இன்று – இல்லை, எ-று.

     பன்றிக் கொம்புக்கு யானைக் கொம்புக்குப் போடுவது போலப் பூண்கட்டினாலும் அது யானையாகாதது போல், மூடர் மிகுந்த செல்வம் பெற்றாலும் நற்குடிப் பிறப்பாளர் தரித்திரத்திற் செய்யுமளவும் விருந்து பாராட்டல் முதலாகிய நற்காரியஞ் செய்யமாட்டார்கள், என்றால் மேலோரியற்கையும் கீழோரியற்கையு மாறா என்பது கருத்து.

     பிறந்ததற்பின் படிப்பு முதலியவைகளாலே கிஞ்சித்தும் தளராதிருப்பது பற்றி மூடரை முழுமக்கள் என்றது. கோட்டை – வேற்றுமை மயக்கம்.

Tamil Proverbs தமிழ்ப்பழமொழிகள்

3777. தான் தின்னத் தவிடு இல்லை. வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?

He has no bran to eat, why seek a young pig to rear for hire ?

****

4515. பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?

Does a young pig observe fasts?

***

4516. பன்றிக்குட்டி ஆனை ஆமா?

Will the young pig become an elephant?

***

4617.பன்றி பட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.

If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

***

4620. பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.

A calf that goes with a pig will eat excrement.

—subham—-

Tags- பன்றி , தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில்,  ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்,  part 8, தமிழ் பன்றி, ஆங்கிலப் பன்றி, நீதி வெண்பா, நாலடியார் பாடல்கள்

Leave a comment

Leave a comment