Post No. 13,727
Date uploaded in London – 30 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய கட்டுரைகளில் சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியனையும் பகவத் கீதையை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்திய ஜெர்மானிய அறிஞரையும் கண்டோம்.
இன்று நாம் ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி முதலிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் தேவ நாகரிலிபியை ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று, முதல் புஸ்தகத்தை தேவ நாகரி லிபியில், சம்ஸ்க்ருத மொழியில், அச்சிட்டவரின் பெயர் ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் AUGUST WILHELM VON SCHLEGEL (1767-1845) .
அவர் ஸம்ஸ்க்ருதத்துக்கு மட்டுமின்றி ஆங்கில மொழிக்கும் சேவை செய்தார்; ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். முதல் இந்தியவியல் – INDOLOGY இண்டாலஜி– துறையை ஐரோப்பாவில் ஏற்படுத்தினார்.
ராமாயணத்தை எட்டு தொகுதிகளாக வெளியிட அவர் திட்டமிட்டார் ஆயினும் முதல் இரண்டு காண்டங்கள் மட்டுமே லத்தீன் மொழியாகத்துடன் வெளியாகின.
ஹிதோபதேசக் கதைகளை ‘எடிட்’ செய்து வெளியிட்டார் அவர்க்கு லஸ்ஸன் LASSEN என்பவர் துணையாக நின்றார்; லத்தீன் மொழியில் அவற்றைக் கொணர்கையில் மொழியியல் கொள்கைகளை பயன்படுத்தினார் .
இந்திய நூல்கள் INDISCHE BIBLIOTHEK என்ற இதழ்களைக் கொண்டுவந்து அதில் சம்ஸ்க்ருத நூல்கள் பற்றியும் எழுதினார்.
பாரீஸ் நகரிலிருந்து பான் நகருக்கு தேவ நாகரி அச்சுக்களைக் கொண்டுவந்து முதல் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தினார் அவர் தேவநாகரி எழுத்தில் வெளியிட்ட முதல் புஸ்தகம் பகவத் கீதை; லத்தீன் மொழிபெயர்ப்புடன்!
ஐம்பது வயதில் !
இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைக் கற்றபோது அவருக்கு வயது ஐம்பது!
ஹனோவர் நகரில் பிராட்டஸ்டண்ட் பிரிவு கிறிஸ்தவ பிரசாரகரின் நாலாவது மகனாக -8-9-1867 ல் பிறந்தார்; ஆம்ஸ்டர்டாம், பெர்லின் நகர்களில் வேலை பார்த்துவிட்டு பாரீஸ் நகரில் சுவீடன் நாட்டு தூதரின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தார். அவர்களுடன் இத்தாலிக்கும் ரஷ்யாவுக்கும் சென்றார். பின்னர் தான் பிரான்சில், பிரான்ஸ் பாப் என்பவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றார்.
இண்டாலஜி துறையை ஜெர்மனியில் துவக்கியோர் முதலில் இவரை துறைத்தலைவர் GERMAN UNIVERSITY INDOLOGY DEPARRTMENT பதவியில் அமர்த்தினர்.
ஸ்ஷ்லகல் முயற்சியில்தான் பான் நகரம் சம்ஸ்க்ருத மொழியின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது. அவர் 12-5-1945–ல் இறந்தார். ஆயினும் அவருடைய மாணவர் கிறிஸ்டியன் லாசன் CHRISTIAN LASSEN அவரது பணியைத் தொடர்ந்தார்
*****
இன்னும் ஒரு ஸ்லெகல் – பிரடெரிக் ஸ்லெகல் 1772- 1829
பிரெடெரிக் ஸ்லெகல் FRIEDRICH SCHLEGEL அகஸ்டஸ் ஸ்லெகலின் சகோதரர். இவரை இந்தியவியல்- சம்ஸ்க்ருத அறிஞர் பட்டியலில் சேர்க்கமுடியாது. ஆனால் இவர் செய்த பெரிய சேவை இந்தியவியல் படிப்புத் துறையை உண்டாக்கி அதில் தனது சகோதரர் வில்லியம் ஸ்லெகலை, துறைத்தலைவராக அமர்த்தியதாகும்.
இவரும் ஹனோவரில்தான் 10-3-1772– ல் பிறந்தார். இவருக்கு தத்துவத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆகையால் அண்ணனுடன் சேர்ந்து அத்தீனியம் என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையை நடத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு சம்ஸ்க்ருதம் பயின்றதால், பாரீஸ் சென்றபொழுது அந்த நூலகத்தில் சம்ஸ்க்ருத சுவடிகள் இருப்பதைக் கண்டார் . கிறிஸ்தவ மிஷனரிகள் அவைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அங்கே வைத்திருந்தனர்.
பிரெடெரிக், தனது சகோதரர் வில்லியத்துக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் நாலே ஆண்டுகளில் காளிதாசனின் சாகுந்தலத்தைப் படித்துவிடுவேன்; இப்போதைக்கு மொழிபெயர்ப்புடன் படித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். பிரெடெரிக் மூன்று புஸ்தகங்களை எழுதினார் 1. தத்துவம் , 2.இந்திய ஞானம், 3.வரலாற்று யோசனைகள்; இது மொழியியல் ஒப்பீட்டுக்கு வழிவகுத்தது. இந்திய மொழிகளையும் இந்திய தத்துவத்தையும் படிப்பது, மனிதனின் சிந்தனைப்போக்கினை ஆழமாக அறிய உதவும் என்கிறார். பின்னர் பகவத் கீதை, ராமாயணம், சாகுந்தலம் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார். அவருக்கு அரசாங்க பதவிகள் கிடைத்ததால் இந்தியவியலைத் தொடரமுடியவியலை; ட்ரெஸ்டன் நகரில் சொற்பொழிவாற்றச் சென்ற அவர் 12-1-1829 — இல் இறந்தார்.
இரண்டு ஸ்லெகல் சகோதரர்களுக்கு மூத்த்தவர் கார்ல் ஆகஸ்ட் CARL AUGUST ஆவார். . அவர் இந்திய ராணுவத்துடன் சென்றார். இந்திய புவி இயல் பற்றி புஸ்தகம் எழுதினார். ஆனால் அது வெளியிடப்படவில்லை சர் ஜான் டார்லிங் என்பவருடன் சென்ற கார்ல்,1789 – ல் சென்னையில் இறந்தார்.
–சுபம்—
Tags- தேவ நாகரி லிபி, சம்ஸ்க்ருத மொழி ,ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் , ஐரோப்பாவில். முதல் சம்ஸ்க்ருத புஸ்தகம், ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் ,