WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,625
Date uploaded in London – 3 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்-47 ; திருமந்திரத்தில் முருகன்
சிவபெருமான் ஒருவனையே தெய்வமாகப் போற்ற வேண்டும் என்று திருமந்திரம் சொல்வதை நாம் அறிவோம்;அதில் முருகப்பெருமான் பற்றி திருமூலர் கூறுவதைப் பலரும் அறியார்.
சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை– என்பது அவர்தம் வாக்கு; முருகனைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
பொருள் :
அசுரர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்க முடியவில்லை என்று தேவர்கள் முறையிட்டனர்; உடனே சூர பத்மனை அழித்துவிட்டு வா என்று சிவபெருமான் முருகனை அனுப்பினார்.
Manifestation of Downward-looking Face
“Hail our Lord! Our God!
Deathly is might of Sura Padma asura
Save us, help, oh!”
Thus did Celestials to Primal Lord pray!
And the Primal Lord to the Six-faced God
Of coral hue beckoned;
And said, “Proceed and smite the enemy.”
****
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12
God Kanda Arose Out of Lord’s Fire
Out of my Father arose six orbs of Fire
The six Faces before Him appeared;
The God Kanda in Him is intermingled;
And so is He His Son;
Thus do you in understanding connect.
கந்தனின் தோற்றம்
முருகப்பெருமான் தோற்றம் பற்றிய கதைகளில் சிவபெருமானிடம் தோன்றிய ஆறு தீப்பொறிகளிலிருந்து கந்தன் அவதரித்தான் என்று அறிகிறோம். கந்த புராணமும் இதை உறுதி செய்கிறது.
கந்த புராணத்தில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாக முருகன், தோன்றுகிறான். ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றினான் . அவனை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்க்கின்றனர் . அவனுடைய நிறம் செம்பவளம் போல சிவந்த நிறம்.இதனால்தான் தொல்காப்பியமும் முருகனை சேயோன் என்று வருணிக்கிறது
கந்த புராணப். பாடல் :
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.
சேய் என்றால் மகன் என்ற பொருளும் உண்டு. .ஆகையால் சிவனின் மகன் என்றும் பொருள் சொல்லலாம். சிவ பெருமானின் நிறமும் செந்தீ வண்ணம் என்று வேதமும் , திருவாசகமும் பாடுகின்றன
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’- தொல்காப்பியம்
என்று நிலங்களின் தெய்வங்களாக வருணன், இந்திரன் திருமால், முருகன் என்று தொல்காப்பியர் பகர்ந்தார்.
****
அருணகிரி நாதர் பயின்ற திருமந்திரம்
திருப்புகழ் பாடல்களில் திருமந்திரத்தின் தாக்கத்தைக் காண முடிகிறது. அருணகிரிநாதர் திருமந்திரத்தையும் படித்ததை இதன் வாயிலாக அறியலாம். இதோ சில பாடல்கள் :
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே–. திருமந்திரம்
****
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட …… அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள …… மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட …… மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி …… வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி …… அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் …… மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.- திருப்புகழ்
Jnana-Ananda Dance
The Vedas danced, the Agamas danced;
The melodies danced, the seven universes danced;
The elements danced, and the worlds entire danced;
With Nada Sakti the Lord danced,
The Dance of Divine Knowledge-Bliss (Jnana-Ananda).
xxxxx
மேலும் ஒரு திருப்புகழைக் காண்போம்
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. — திருமந்திரம்
அபகார நிந்தைபட் …… டுழலாதே
அறியாத வஞ்சரைக் …… குறியாதே
உபதேச மந்திரப் …… பொருளாலே
உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ
இபமாமு கன்தனக் …… கிளையோனே
இமவான்ம டந்தையுத் …… தமிபாலா
ஜெபமாலை தந்தசற் …… குருநாதா
திருவாவி னன்குடிப் …… பெருமாளே— திருப்புகழ்
.*******
பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண் டாசனத் தேவர் பிரானே– திருமந்திரம்
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி …… அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக …… முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு …… மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் …… தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு …… முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் …… வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை …… யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு …… பெருமாளே.—திருப்புகழ்
******
மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.
******
. சிவமா கிய அருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே. — திருமந்திரம்
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் …… குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் …… நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென …… வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது …… புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் …… மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு …… விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் …… வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் …… பெருமாளே. —திருப்புகழ்
இவ்வாறு மேலும் பல பாடல்களை ஒப்பிடலாம். திருப்புகழையும் திருமந்திரத்தையும் பல முறை படித்த அன்பர்களுக்கு தேஜா வூ Deja vu உணர்ச்சி வந்து கொண்டே இருக்கும்.
DÉJÀ VU. [noncount] 1. : the feeling that you have already experienced something that is actually happening for the first time.
—subham—
Tags–—திருப்புகழ், திருமந்திரம், அருணகிரி நாதர், முருகன், ஆராய்ச்சிக் கட்டுரை எண் -47





















