ஒரு ஸம்ஸ்க்ருதப் புலவர் நமக்கு நல்ல அறிவுரை வழங்குகிறார் . கிளி போல வள வள என்று பேசுவதை விட, மெளனம் சாதிப்பதே நல்லது . இதோ அந்த ஸ்லோகம்
ஆத்மனோ முக தோஷேண பத்யந்தே சுக சாரிகாஹா
பகாஸ் தத்ர ந பத்யந்தே மெளனம் ஸர்வார்த்த சாதகம்
பொருள்
கிளிகள் அவற்றின் வாய்ச்சாலத்தால் கூண்டுக்குள் சிக்குகின்றன; கொக்குகள் அப்படி சிக்குவதில்லை ; மெளனமே சாதகமானது.
****
பரமஹம்சர் சொல்கிறார்
கிளி மூலம் ராம கிருஷ்ண பரமஹம்சர் நல்ல அறிவுரை வழங்கு கிறார் :
ஜீவனானது இவ்வுலத்தை விட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதை நினைத்துக்கொண்டிருக்கிறதோ அதற்குரிய உடலில் மீண்டும் வந்து பிறக்கிறது. இடையறாத நாம ஜபம் செய்தால் மரண நெருக்கடியிலும் அந்த நாமம் உதவும்.
பந்தப்பட்டப் மனிதர்கள் மரணம் நேரிடும் தறுவாயிலும் உலக விஷயங்களைப் பற்றியே பேசுகின்றனர். புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போவதிலும் கங்கை நதியில் ஸ்னானம் செய்வதிலும் ஜப தபங்கள் செய்வதிலும் பிரயோஜனமில்லை. மனதில் உலகப்பற்று இருக்குமானால் அது மரண காலத்தில் நிச்சசயமாக வெளிப்படும். அப்போது அவர்கள் கண்டபடியெல்லாம் பிதற்றுவார்கள். சாதாரணமாக ராதா கிருஷ்ணனின் திவ்ய நாமத்தைப் பாடும் கிளிகள் , பூனையால் பிடிக்கப்படும்போது கீ கீ என்று தனது சுபாவமான குரலெடுத்தக் கத்தும்”
****
வாழ்நாள் முழுதும் ராம ஜபம் செய்த மஹாத்மா காந்தி , சுடப்பட்டு நிலத்தில் வீழ்ந்தபோது ஹே ராம் என்று சொல்லிக்கொண்டு இறந்தார்.
****
சமண முனிவர் அருளுரை
நாலடியார் செய்யுள் ஒன்று, இதே கருத்தை பேய்ச்சுரைக்காய் எடுத்துக் காட்டின் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறது.
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்று () இடம் பட மெய் ஞானம் கற்பினும் என்றும்
மடங்காதா ரென்று மடங்கார்- தடங்கண்ணா ()அடங்காதார் என்றும் அடங்கார் – தடம் கண்ணாய்
யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் () உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்!
ச. நாகராஜன்
அறிவியல் முன்னேற்றத்தின் தாக்கம் அதிகம் ஆக ஆக அதற்கு ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் பெண்கள், தாங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று புரியாமல் இன்று தவிக்கின்றனர்.
பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இனிய மாலை நேரங்களில் பக்தர்களின் கேள்விகளுக்கு அன்னை பதில் அளிப்பது வழக்கம்.
ஒருநாள் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது லட்சியமாக இருக்க வேண்டும் என்ற வினா எழுப்பப்பட்டது.
“சாதாரண வாழ்க்கையில் பெண்களுக்கு உடல் நலமும், சீரிய லயமுமே லட்சியமாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.
ஆனால் வேகமயமான இன்றைய உலகில் பெண்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு பெரிய இழப்புகள் அவர்களின் உடல் நலமும், சீரிய லயமுமே! எதிலும் டென்ஷன்! எங்கும் டென்ஷன்!
தேவியே பெண்ணுருவம் கொண்டு இந்தியப் பெண்களுக்கு வழி காட்ட வந்தது என்று கருதப்படும் மா ஆனந்த மயி பெண்களைத் தம் அருகே இழுத்து அணைத்து வாழ்க்கையின் புதிய பரிணாமத்தைக் காட்டி புது அர்த்தத்தைத் தந்தவர்.
கமலா நேருவும் அவருடைய புதல்வி மறைந்த பாரதப் பிரதமர் இந்தியா காந்தியும் அடிக்கடி அவரை நாடி வருவது வழக்கம். அவர் மறைந்த போது ஹெலிகாப்டரில் டார்ஜிலிங் வந்து அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி. பெண்களை மிக நெருக்கமாகத் தம் அருகில் வரச்செய்வது, அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சரி சமமாக உயர முடியும் என்று உணர்த்துவது ஆகிய காரணங்களுக்காகவே அவர் பெண்ணாக உருக்கொண்டார் என்பது பக்தர்களின் எண்ணம்.
இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண்மணி என்ன ஆன்மீக சாதனையை மேற்கொள்ள முடியும் என்று ஒரு பெண் கேள்வி கேட்ட போது அவர் எளிமையாக இரண்டே வார்த்தைகளில் பதில் தந்தார் – “சேவையும், ஜபமும்”.
“தன்னலமற்ற சேவையைச் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் அர்ப்பண மனப்பான்மையுடன் செய்யுங்கள். இறைவனை நினைத்து ஒவ்வொரு பணியும் அவன் தந்த பல்வேறு வாய்ப்புகளே என்று நினைத்து அதில் ஈடுபடுங்கள்” என்றார் அவர்!
இயற்கையின் சூழலில் இன்பமாக ஒரு காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் இன்று காலையில் தண்ணீருக்காக மோட்டார் ஸ்விட்சைப் போட்டு, மாவு அரைக்க கிரைண்டரை இயக்கி, மிக்ஸியில் அரைத்து, டெலிபோனில் தான் கிளம்புவதை அறிவித்து, ஸ்கூட்டரில் ஏறி அலுவலகம் அடைந்து, லிஃப்டில் பரபரப்புடன் ஏறி, தன் இருக்கையில் கணினி முன்னே அமர்ந்து அதை டென்ஷனுடன் ஆன் செய்து இயக்க ஆரம்பிக்கிறார்கள்.
நாள் முழுதும் மெஷினுடன் போராடி மாலையில் வீடு திரும்பியவுடன் தொலைக்காட்சிப் பெட்டி முன்னே சீரியலுக்கு மீளாத அடிமை ஆகிறார்கள். கணவனுக்கு அடிமையாக இருப்பதா என்று ஒரு காலத்தில் போர்க்கொடி தூக்கிய இவர்கள் இன்று மெஷின்களுக்கும் டி.வி. சீரியல்களுக்கும் அடிமையாகி இருப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! இவர்களைப் பார்த்து மெஷின் வொர்ஷிப்பர்ஸ் என்று பிரபல கவிஞர் டி.எஸ். எலியட் கேலி செய்வதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை!
ஶ்ரீ சத்ய சாயிபாபா, பெண்கள் தங்களின் லட்சியமாக உதயபாரதியைக் கொள்ள வேண்டும் என்று கூறி விளக்குகிறார்.
சங்கரருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடந்த விவாதத்தில் மண்டனமிஸ்ரரின் மனைவியான உதயபாரதியே நடுவராக இருந்தார். பாரபட்சமற்ற தீர்ப்பு கிடைக்கும் என்று சங்கரரும் அதற்குச் சம்மதித்தார்.
:இந்த மாலைகளை அணிந்து கொண்டு வாதிடுங்கள். தோற்றவரின் மாலை வாடி விடும் என்று கூறி உதயபாரதி ஆளுக்கு ஒரு மாலையை வழங்கினார். வாதத்தைக் கவனித்தவாறே, அவர் தனது சமையல் வேலைகளையும் இதர வீட்டு வேலைகளையும் செய்து கொண்டே இருந்தார்.
மண்டனமிஸ்ரரின் மாலை வாடியது. அவர் தோற்றார். ஆனால் உதயபாரதி விடவில்லை. “அவரில் பாதி நான். ஆகவே என்னையும் ஜெயித்தால் தான் மறு பாதியையும் ஜெயித்து முழு வெற்றி அடைந்ததாக அர்த்தம் என்று கூறி, தானே களத்தில் இறங்கினார்.
சங்கரரிடம் அவர் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்க, பதில் அளிக்க அவர் யோசிக்க வேண்டியதாக இருந்தது. இறுதியில் ஞான சரஸ்வதியாக இருந்த உதயபாரதியை சங்கரர், ‘சாரதை’யாக உணர்ந்து வணங்கினார்.
சீரியல் வொர்ஷிப்பராக இருப்பதை விட்டு விட்டு உடல் நலம், வாழ்க்கையில் சீரிய நலம், சேவை, ஜபம் என்ற லட்சியங்களை ஏற்று புதுமைப் பெண்கள் உதயபாரதிகளாக மாறினால் புதிய பாரதம் உருவாகும், இல்லையா?!
சினேகிதி மாத இதழில் 2003, நவம்பர் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை.
Ramakrishna Paramahamsa gives us a very good message though parrots. Hindus love parrots very much and all Brahmins in ancient India raised parrots as pets in their houses. Around 600 CE, the boy wonder of Tamil Nadu Tiru Gnana Sambandar sang about Brahmin houses where the parrots recited Vedas. The same message comes from Northern India. When Adi Shankara asked the women bathing in the Narmada river, the way to Mandana Mishra’s house in the city of Mahismati, they answered in Sanskrit verse thinking that the young man from Kerala would not understand anything. The ladies told him in verses go to the house where the parrots are reciting the Vedas; Shankara politely bowed and thanked them and went his way.
In Sangam Tamil Literature we see the great Brahmin poet Kabilan training the parrots to bring grains from faraway places, because the three mighty kings Chera, Choza, Pandyas laid a siege around Chieftain Pari’s kingdom.
Generally, parrots are always projected in good light. Women are named after parrots and Anjukam is a very common name. Women are compared to girls in Sangam Tamil Literature. But Ramakrishna Paramahamsa gives a good message:
Even at the time of death the ‘bound souls. speak of worldly matters only. There is no use in visiting places of pilgrimage, or bathing in holy Ganges or counting beads; if there are worldly attachments in the heart they are sure to manifest themselves at the dying moment. Hence ‘bound souls indulge in random talks even at that time. A parrot may ordinarily sing the holy name of Radha Krishna, but when it is attacked by a cat, it cries out Kang Kang – its natural cry.
( The moral is ‘always recite God’s name’)
Learn Silence; Don’t be a Parrot!
Another Sanskrit poet asks us to think why parrots are caged and not the Cranes. Because parrots always speak, people cage them and enjoy their talks. Cranes are very quiet, and they never talk but concentrate in its task of catching fish. If You learn silence, you will never be caught. It is very true. If you got jails, you can see many prisoners who came in to it because of their bad talk.
Here is the couplet
Atmano mukha doshena badhyante suka saarikaa
Bakas tatra na badhyante maunam sarvaartha saadakam
The parrots got caged because of their talkative nature; whereas the cranes/herons not caged; so silence is always an advantage.
இதற்கு முன்னர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் , கார்ல் கிரவுல் ஆகிய இரண்டு ஜெர்மானியர்கள், இந்தியாவில் தமிழ், சம்ஸ்க்ருதத் துறைகளில் ஆற்றிய பணிகளைப் பார்த்தோம் . இதோ மூன்றாவது ஜெர்மானியர்
பார்த்தலோமேயஸ் சீகன்பால்க்
BARTHOLOMAEUS ZIEGENBALG 1682-1719 PROTESTANT
பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் , கிறிஸ்தவ மத்ததை பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்த முதல் ப்ராட்டஸ்டண்ட்PROTESTANT பிரிவு கிறிஸ்தவ பாதிரியார் ஆவார் . அவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் அவர் பிரசாரம் செய்தார் அவர் தமிழ் மொழியைக் கற்று பல நூல்களை ஜெர்மன் மொழி மொழியில் கொடுத்திருப்பார். அவர் 10-7-1682ல் பிறந்த இடம் சாக்சனி வட்டாரத்திலுள்ள பல்சனிட்ஸ் Pulsnitz, Saxony, ஆகும்.
அவருடைய தந் தை பணக்கார தானிய வர்த்தகர். இதனால் நல்ல கல்வி கற்று ஹால் HALLE பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஆனால் உடல் நலம் குன்றியதால் படிப்பைத் தொடர முடியவில்லை. பின்னர் தனியாக ட்யூட்டர் வேலை செய்தார்.
அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜா, DANISH EAST INDIA COMPANY
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு தரங்கம்பாடி வட்டாரத்தை டென்மார்க் ராணுவம் தங்குவதற்கு குத்தகைக்கு விட்டிருந்தார். டென்மார்க்- நார்வே மன்னரான நாலாவது பிரெடெரிக் மன்னர் அங்கு கிறிஸ்தவ பிரசாரகர்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார் ; இளம் வயதினரான சீகன்பாலக்கை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார். அவர் 7 மாதங்களுக்கு கடற்பயணம் செய்து தரங்கம்பாடிக்கு வந்தபோது காலனி அதிகாரிகள் அவரை எதிர்த்துப் போராடினர். அவரை 4 மாதங்களுக்கு சிறை வைத்தனர். 1709 ம் ஆண்டில் விடுதலை ஆனவுடன் அனாதைச் சிறுவர் இல்லம் , பள்ளிக்கூடம் ஆகியவற்றைத் துவக்கினார். தமிழ் அச்சகம் ஒன்றையும் அமைத்தார் அப்போது போர்ச்சுகீசிய மொழி ஐரோப்பிய தொடர்பு மொழியாக இருந்ததால் அதைக் கற்றார்.
தமிழ் அகராதிக்கான சொற்களை சேகரித்து, லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தைக் எழுதினார் 1716ஆம் ஆண்டில் GRAMMATICA DAMULICA நூல் வெளியிடப்பட்டது.
தென்னிந்திய கலை, கலாசாரத்தை அறிந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிடுவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தார்
இந்துமதத்தைப் பாராட்டிய சீகன்பால்க்
ஒரு கடிதத்தில் அவர் எழுதுகிறார்- “இந்துமத போதனைகளை அதிகமாகக் கற்கக்கற்க அவை என்னை மிகவும் கவர்ந்து வருகின்றன. அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர் நூல்களை கற்ற பலன்கள், இந்துமத நூல்களை கற்பதம் மூலம் கிடைக்கும்”.
உடனே ஜெர்மானிய கிறித்தவ அதிகாரி பதில் எழுதினார்
“உமது வேலை ஐரோப்பாவில் இந்து மததைதப் பரப்புவது அல்ல, உமது வேலை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே ; நினைவிற் கொள்க .”
இதன் காரணமாக சீகன் பால்க் எழுதிய புஸ்தகங்களையும் கட்டுரைகளையும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவர்கள் அச்சிடவில்லை. அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அவர் எழுதிய அரிய பெரிய உண்மைகளை அறிந்து வியப்புற்றனர் .
சீகன்பால்க்குக்கு சிறுவயது முதலே கடுமையான நரம்பு நோய் இருத்தது. இதனால் 36 வயதானபோதே 2-2-1719 ல் இறந்தார் சென்னையில் 1867-ல்தான் அவரது முக்கிய நூல் GENEALOGIE DER MALABARISCHEN GOETTER= GENEALOGY OF SOUTH INDIAN GODS: A MANUAL OF THE MYTHOLOGY AND RELIGION OF THE PEOPLE OF SOUTHERN INDIA வெளியிடப்பட்டது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1869-ல் வெளியானது
அவைகளில் சீகன்பால்க் சொல்கிறார்
எல்லாக் கடவுளரின் தோற்றம், அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களின் பல பெயர்கள், அவர்களுக்குள்ள பொறுப்புகள், கடவுளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் வசிக்கும் இடங்கள், அந்தக் கடவுளர் செய்யும் பணிகள் ஆகிய எல்லாவற்றையும் இந்துக்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவர்கள் குடிகொண்டுள்ள கோவில்கள், அவர்களை வணங்கிய சாது சந்யாசிகள், விழாக்கள் ஆகியவற்றையும் எழுதிவிட்டனர்.
இப்படி அவர் எழுதியதால் மேலை உலகத்துக்கு தமிழ் மொழியில் உள்ள இந்து மதத்தை, முதல் தடவையாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னர் சம்ஸ்க்ருத வேத உபநிஷத்துக்களைத் தான் மேலை உலகம் ஐந்தித்து இருந்தது.
மலபார் வட்டார கிறித்தவரல்லாத /இந்து உலகம் என்ற தலைப்பில் AUSFUEHELICHE BESCHREIBUNG DES MALABARISCHEN HEIDENTUMS = COMPLETE DESCRIPTION OF MALABAR HEATHENDOM .அது ஆங்கில த்தில் வெளியானது ஆனால் அது 1926 ஆம் ஆண்டில்தான் வெளியானது அதை டச்சு மொழி அறிஞர் காலண்ட் W. CALAND வெளியிட்டார். இதன் முதல் பகுதியில் தெய்வத்தமிழ் மொழியிலுள்ள தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன இரண்டாவது பகுதியில் இந்துமத சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் உள்ளன. வரலாறு, ஜாதி, சடங்குகள், சாப்பிடும் முறை, மருத்துவம் ரசாயனம், இரும்பைத் தங்கம் ஆக்கும் முறைகளை அவர் குறிப்பிடுகிறார்.
1930 ஆம் ஆண்டில் W.காலண்ட்/ W. CALAND வெளியிட்ட பதிப்பில் நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய அவரது மதிப்பீடுகள் கருத்துக்கள் ஆகியன அவரது கடிதங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் உள்ளன KLEINERE SCHRIFTEN= MISCELLANEOUS WRITINGS
அவைகளும் புஸ்தகமாக வெளிவந்துவிட்டது
மலபாரில் கிறிஸ்தவ மதம் இல்லாத சமயம் என்ற MALABAR HEATHENDOM அவரது புஸ்தகம் 1965ம் ஆண்டில்தான் கிடைத்தது
இந்திய மதம் பற்றிய அவரது அபார அறிவினை இதுவரை உலகம் போற்றவில்லை.
அவர் மாட்டும் ஜியூ பாப் போல 80 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து இருந்தால் தெய்வத்தமிழ் நூல்கள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் செய்திருப்பார்; நமது துரதிருஷ்டம் அவர் 36 வயதில் விண்ணுலகை அடைந்தார்.
அவரது ஜெர்மன் மொழி நூல்களை நாம் தமிழில் மொழிபெயர்த்து இந்துமதத்தின் பெருமையை மீண்டும் போற்றலாம்.
–SUBHAM—
TAGS – பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் ,BARTHOLOMAEUS ZIEGENBALG , W. CALAND, BOOKS, GERMAN, TAMIL SCHOLAR, ஜெர்மன் மொழி, தமிழ் நூல்கள்
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு நகைச் சவை படைபினைப் படித்தேன் ; அது மிகவும் உண்மை ; லண்டனில் கிழக்குப்பகுதிக்கு வந்தால் வெள்ளைகாரச் சிறுவர்களும்கூட F சொற்களை சர்வ சாதாரணமாய் பகர்வார்கள் ; வீட்டில் கணவனும் மனைவியும் பேசுவதன் எதிரொலி இது.
மனம், மொழி, மெய்
உபநிஷத்தில் எட்டு கோணல் என்ற பெயருடைய ரிஷியைச் சந்திக்கிறோம். வீட்டில் அப்பா, வேதத்தைத் தப்பும் தவறுமாக உச்சரித்ததால் அஷ்ட வக்ரத்துடன் பிறந்தார் அஷ்டா வக்ர மகரிஷி. ஆக நாம் பேசும் பேச்சுக்கள் சிறுவர்களின் மனோ , வாக், காயம் என்ற மூன்றையும் பாதிக்கின்றன இதனால்தான் கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்; அங்கே மாமியாரின் வசை மொழிகள் இரா. அம்மாவின் அன்பான அருள் மட்டுமே இருக்கும் மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம் என்ற பழமொழியை நாம் அறிவோம்.
****
இதோ நான் படித்ததில் பிடித்தது:
பையன் அப்பாவிடம் சொன்னான் : அப்பா! உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்; நீ ஸ்கூலுக்கு வரணும் .
எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?
கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க .
ஒன்பத ஏழால 9x 7 பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ;
நான் 63-னு சொன்னேன் .
சரி ……. அப்புறம் ?
ஏழ ஒன்பதால 7×9 பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க
அதே எழவுதானே வரும்னு சொன்னேன் உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க.
சரி சரி நாளைக்கு வரேன், போ .
****
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்
அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரை பார்த்தியா?
இல்லடா, நாளைக்கு வரேன்
சரி, நாளைக்கு கணக்கு டீச்சரை பார்த்துட்டு அப்படியே P.T. டீச்சரையும் பார்த்துடு.
எதுக்குடா?
ட்ரில்/ DRILL நடந்தது; முதல்ல வலது கையைத் தூக்கச் சொன்னாரு; அதைச் செஞ்சேன் ; அப்புறம் இடது கையைத் தூக்கச் சொன்னாரு; அதையும் செஞ்சேன் ; ரெண்டு கையையும் தூக்கிட்டு வலது காலையும் தூக்கச் சொன்னாரு; தூக்கினேன் அப்புறம் இடது காலத் தூக்கச் சொன்னாரு.
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசா அவன்? சரி நீ என்ன பண்ண ?
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசான்னு வாத்தியாரைக் கேட்டேன்
உங்க அப்பாவைக் கூட்டிட்டு வான்னு சொன்னார் ..
சரி சரி நாளைக்கு வந்து பாக்கறேன்.
****
அடுத்த நாள் அப்பாவிடம் கேட்டான்
அப்பா ஸ்கூலுக்கு போனியா?
இல்லடா நாளைக்கு வரேன் .
போக வேண்டாம்பா ; என்ன ஸ்கூலிலிருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.
என்னாச்சுடா ?
பிரின்சிபால் ரூமுக்கு வரச் சொன்னார்.
அங்கு கணக்கு டீச்சர் , பி.டீ. டீச்சர் , சயன்ஸ் டீச்சர் மூன்று பேரும் இருந்தாங்க.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகெங்கும் ஒலிக்கும் இன்னிசைக் குரல்!
பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 2
இசையே தெய்வம்
லதா மங்கேஷ்கருக்கு இசை ஒரு தொழில் அல்ல; அதுவே அவருக்கு தெய்வம்! இசையை கடவுளின் குரல் என்றார் அவர். அவரது அற்புதமான குரலைக் கேட்ட ரசிகர்கள் அவரது பாடல் இடம் பெற்ற படங்களை வெற்றிப் படங்களாக்கினர்.
ஒரு நாளைக்கு பத்துப் பாடல்களை ரிகார்ட் செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்தார்; அதற்கான கடும் உழைப்பையும் பயிற்சியையும் அவர் விருப்பத்துடன் மேற்கொண்டார்.
பஜனை, கஜல்கள் ஆகியவற்றுடன் சிக்கலான இசை அமைப்புகள் கொண்ட பாடல்களை அவர் அனாயாசமாகப் பாடினார். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அவர் தன் குரல்வளத்தால் மெருகேற்றினார்.
தொடர்ந்து பல பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
மராத்தி, ஹிந்தி மொழிகளில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்கிலம், ரஷிய மொழி உள்ளிட்ட இருபது மொழிகளில் அவர் பாடியுள்ளார்..
ஆகப் பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், சலில் சௌத்ரி, ஆர்.டி.பர்மன், சங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா உள்ளிட்ட அனைத்து இசை அமைப்பாளர்களும் அவரை விரும்பி வரவேற்றுப் பாட வைத்தனர். அதே போல சிறந்த பாடலாசிரியர்களான குல்ஜர், ஷகீல் பதாயுனி, ஆனந்த் பக்ஷி உள்ளிட்டோரும் அவர் திறமையை உணர்ந்து பாடல் வரிகளை அமைத்துப் புகழ் பெற்றனர்.
புகழ் பெற்ற பாடகர்களான மன்னா டே, முகேஷ், ஹேமந்த் குமார், முகம்மத் ரஃபி, கிஷோர் குமார் உள்ளிட்டோருடன் அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக ஆகி விட்டன!
லதாவே பாடல்களை இயற்றியுள்ளார்; இசைஅமைப்பாளராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குடும்பம்
லதா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். ஆனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்தார்.
ராஜ்ய சபா உறுப்பினர்
1999-ல் அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கென அவர் சம்பளத்தையோ டெல்லியில் தரப்படும் வீட்டையோ பெறவில்லை.
பாரத் ரத்னா
ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் அவர் பெற்றார். 1969-ல் பத்ம பூஷன் விருதையும் 1999-ல் பத்ம விபூஷன் விருதையும் அவர் பெற்றார்.
2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.
ஏழைகளுக்கு உதவி
2001-ல் அவர் புனாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை நிறுவி ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். காஷ்மீரில் 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டொருக்கு அவர் நிதி உதவி அளித்தார்.
எத்தனை பாடல்களை அவர் பாடினார்?
லதா எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பற்றிய தொடர் விவாதம் கின்னஸ் ரிகார்ட் 25000 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்று தெரிவித்ததை ஒட்டி எழ ஆரம்பித்தது.
லதாவோ தான் பாடிய பாடல்களுக்கான எண்ணிக்கை குறிப்பைத் தான் குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
சிலர் 20000 பாடல்கள் என்று சொல்ல இன்னும் சிலரோ 30000 பாடல்கள் என்று சொல்ல இந்த விவாதம் தொடர் விவாதமாக ஆகி விட்டது!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; ஏராளமான நாடுகளில் அவர் குரல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.
அவரது பாடல்களைக் கேட்டு தங்களின் அபிப்ராயத்தைத் தெரிவிப்போர் மிகுந்த மன நெகிழ்வுடன், “இது சிறு வயதில் நான் கேட்ட பாடல்; இன்னும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்து விட்ட எனது தாயாரின் நினைவு வருகிறது” “இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தமானது; இதைப் கேட்காமல் அவர் உறங்க மாட்டார்”, ‘எனக்கு பாடப்படும் பாடலின் மொழி தெரியாது, ஆனால் இந்த இனிய குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்’ என்பன போன்ற ஆயிரக்கணக்கான விமரிசனங்களைப் பதிவிடுகின்றனர் – இன்றும் கூட! (யூ டியூபில் காணலாம்)
பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வாழ்வில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இசை ராணி அவர் என்பதில் ஐயமே இல்லை!
மறைவு
2022-ல் ஜனவரி மாதம் 8-ம் தேதி அவருக்கு கோவிட் -19 நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
2022 பிப்ரவரி 6-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 92.
பல நாடுகளின் பிரதம மந்திரிகள்,மற்றும் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.
மும்பையில் அவரது இறுதிச் சடங்கை அவரது சகோதரர் செய்ய, அரசு மரியாதையுடன் உடல். எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி கோதாவரி நதியில் கரைக்கப்பட்டது.
அனுபவ மொழிகள்
தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறிய பொன்மொழிகள் பல:
அவற்றில் சிலவற்றைக் காணலாம்:
ஒவ்வொரு பாடலிலும் எனது ஒரு துளி உள்ளது. எனது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள் ஆகியவற்றின் ஒரு சிறிய பகுதி உள்ளது.,
பாடுவது என்பது எனது தொழில் மட்டுமல்ல; அது எனது உயிர்; அது எனது வாழ்க்கை முறை!
இசைக்கு எல்லைகளே இல்லை; அது ஆன்மாவின் மொழி!
சூரியனுக்கு முன் அகல் விளக்கு பிடிப்பது போல!
ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான கிஷோர் குமார் லதாவைப் பற்றி மிகச் சரியாக இப்படிக் கூறினார்:
“லதா மங்கேஷ்கரைப் புகழ்வது என்பது சூரியனுக்கு முன் அகல் விளக்கைக் காட்டுவதைப் போலத் தான்!”
இந்த அவரது கூற்று பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரைப் பற்றிய சரியான விளக்கம் தான், இல்லையா!
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 6 நாய்
நாய் பட்டபாடு என்று கஷ்டபடுவோர் சொல்லும் வசனத்தைக் கேட்டுள்ளோம் ; தமிழர்களின் கைகளிலும் ஷேக்ஸ்பியர் கையிலும் நாய்க்கும் அந்த கதிதான். நாய் நன்றியுள்ள பிராணி ; அதைச் சொல்லாமல் அடச் சீ நாயே என்று நாயையே திட்டுகிறார் ஷேக்ஸ்பியர்; அவரது நாடகங்களிலும் அவர் எழுதிய 14 வரி SONNET பாடல்களிலும் 200 முறைகளுக்கு மேலாக இ;ப்படி திட்டுகிறார்; மட்டம் தட்டுகிறார். மாணிக்கக்கவாசகரோ தன்னைத்தான் நாயேன் என்று திருவாசகத்தில் அறுபதுக்கும் மேலான தடவை மட்டம் தட்டிக்கொண்டார். தென் கொரியர்களோ ஆண்டுக்கு பத்து லட்சம் நாய்களை அடித்து க்கொன்று டின்னர் டேபிளுக்கு கொண்டுவருகிறார்கள் . ஆனால் நாம் காந்திஜீ சொல்லியும் கூட அவரைப் புறக்கணித்து தெருநாய்களை இன்று வரை கொல்ல வில்லை. ஆனால் திட்டுவதை நிறுத்தவவில்லை.; நாலடியார், நீதிவெண்பா, திருமந்திரப்பாடல்களில் இதைக் காண்கிறோம் முதலில் ஷேக்ஸ்பியர் வசைமாரி பொழிவதைக் காண்போம்.
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாளர் 271 முறை நாய்களை அவர் பயன்படுத்தி இருப்பதையும் இருமுறை அவரது நாடகங்களில் மேடையில் நாய் தோன்றியதையும் எழுதியுள்ளார்
“Whoreson dog” (Cymbeline, King Lear, and Troilus and Cressida); இது நிந்தனைக்குரிய முறையில் நாயை அழைப்பதாகும்
“cut throat dog” (Merchant of Venice); to name just a few.கருணையற்ற நாய்!
****
மூன்றாவது ரிச்சர்ட் கொல்லப்பட்டபோது ,
“God and your arms be praised, victorious friends,/ The day is ours, the bloody dog is dead.”
கொலைகார நாய்ப்பயல் செத்தான்! என்ற வசனம் வருகிறது.
*****
:From Two Gentlemen of Verona Act 2
SCENE III. The same. A street.
Enter LAUNCE, leading a dog
LAUNCE: […] I think Crab, my dog, be the sourest-natured
dog that lives: my mother weeping, my father
wailing, my sister crying, our maid howling, our cat
wringing her hands, and all our house in a great
perplexity, yet did not this cruel-hearted cur shed
one tear: he is a stone, a very pebble stone, and
has no more pity in him than a dog: [… and on and ஒன
எல்லோரும் கதறி அழுகிகிறார்கள் ; இந்த நாய் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதா ? அது கல்லு சரியான கூழாங்கல்லு ; நாய்தானே
*****
அதே ஜென்டில்மேன் ஆப் வெரோனா நாடகத்தில் வரும் நகைச் சுவைக் காட்சியில் அந்த நாயை அடி; தூக்கில் தொங்க விட்டு என்று திரும்பத்திரும்ப பேசி மகிழ்கிறார்கள்; அதில் கிராப் / நண்டு என்பது நாயின் செல்லப்பெயர்
“all the chamber smelt him. ‘Out with the dog!’ says
one: ‘What cur is that?’ says another: ‘Whip him
out’ says the third: ‘Hang him up’ says the duke.
I, having been acquainted with the smell before,
knew it was Crab, and goes me to the fellow that
whips the dogs: ‘Friend,’ quoth I, ‘you mean to whip
the dog?’ ‘Ay, marry, do I,’ quoth he. ‘You do him
the more wrong,’ quoth I; ”twas I did the thing you
சக்தி என்பவள் சாதகனின் கடவுள்; முக்திக்கு வழிவகுப்பதும் அவள்தான். அதை அறியாமல் வழிபடும் பாவிகள், அடிபட்ட நாய் போல ஓலமிடுவார்கள்
****
பழமொழிகளோ நாய்களை மட்டம் தட்டுகின்றன
நாய்பற்றியபழமொழிகள்
…
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? …
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது (மலையாளப் பழமொழி)
நாய்த் தோல் செருப்பு ஆகுமா?
நாய் நன்றியுள்ள பிராணி
நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்
நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?
நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?
நாய் அடிக்க குறுந்தடியா?
நாய் விற்ற காசு குலைக்குமா?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்
நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?
நாய் பட்ட பாடு
நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு …….யைத் தின்னத்தான் போகும்
****
From my Old Post
கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி
கதை கேட்ட நாயை ……………. அடி!
Article No.1756; Date:- 29 March, 2015
Written by London Swaminathan
பழமொழிக் கதை!
ஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, மே மாதம்- 1900—ஆம் ஆண்டு
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து வெளியான பழைய பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்ததில் சில சுவையான கதைகள் கிடைத்தன. எனது சொந்த நடையில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகிறேன்
ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.
இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.
அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.
இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!
—subham—-
Tags- நாய் , ஷேக்ஸ்பியர், தமிழர்கள் , திருமூலர், கதை கேட்ட நாயை , பழமொழிகள் , வசைமாரி, தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 6 நாய்
Theodor Goldstucker (1821- 1872) was a Jew and a great Sanskrit scholar. His contemporary Max Muller proposed many absurd theories and contradicted himself even in writing. He was torn to pieces by Goldstucker. Prof. Wilson, another Sanskrit scholar, also opposed Max Muller’s dating of the Rig Veda. Then Max Muller went back on his statement.
The mystery about Theodor Goldstucker is that his picture is NOT seen anywhere in the world though he worked in London for long. Another mystery is that he left some sealed matter to India Office Library ( now part of the British Library in London) and asked them open it after 1920. No one know where it is and what is inside it. It must be definitely about India. And the last mystery is still his Mahabharata translation with his critical notes is not published.
Did he deliberately erase his identity or someone erased all traces of him? We must find out. There should be someone, somewhere in the world with the family name Goldstucker. Why didn’t great scholars of India and abroad try to retrieve his sealed matter?
Here is what he contributed to the Sanskrit speaking world:
He was the first scholar in Europe who penetrated the Mahabhasya without the help of pundits. He stressed the importance of indigenous traditions and learning.
Theodor Goldstucker was born on 18-1-1821 in Koenigsberg ; he studied for two years at the university in his home town and later went to Bonn in 1838. He obtained his Ph.D. degree in 1840 in Koenigsberg. He studied Sanskrit manuscripts in Paris before going to London in 1850. A year later, he became Sanskrit professor at the university college in London. He held this post until his death on 6-3- 1872.
Goldstucker’s first work, published anonymously was the drama translation of Prabodha Chandrodaya . H H Wilson entrusted him with the task of preparing the third edition of the Sanskrit- English dictionary. It was planned on a grand scale but was never completed.
Following Goldstucker’s initiative, the Sanskrit Text Society was founded. Their first publication was Goldstucker’s Jaimininia nyayamala vistra, London 1865-67. The edition of the Mahabhasya, begun by Goldstucke,r was published in 1874 after his death.
In 1861, Goldstucker edited Manava Kalpasutra, being a portion of this ancient work on Vedic rites together with a commentary of Kumarila swamin. The preface of this work, Panini, His Place in Sanskrit literature appeared as a separate work, in London and Berlin 1861. This is one of the brilliant works on Sanskrit philology. Goldstucker discussed the great grammarian Panini and his relationship with other grammarians e.g. Katyayana, Patanjali and Yaska.
In his paper on the deficiencies in the present administration of Hindu Law 1871, Goldstucker advocated the idea that the Indian law should be administered according to Indian Law book. Goldstucker was often consulted on legal matters by the British Government.
After his death, two volumes of Literary Remains of the late Theodor Goldstucker appeared in London in 1879. His complete critical translation of the Mahabharata, was, unfortunately, not published.
Source book: German Indologists ,Dialogue 1990.
—Subham—
Tags- Theodor Goldstucker, Jewish Scholar, Mystery
தேவுனி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் (Kadapa Devuni Sri Venkateswara Swamy Temple) கடப்பா நகரில் உள்ளது. தெற்கு ஆந்திர பிரதேசத்தில் ராயலசீமா பிரதேசத்தில் பெண்ணை ஆற்றிலிருந்து 5 மைல் தொலைவில் மூன்று மலைகளுக்கு இடையே கடப்பா அமைந்துள்ளது.
லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு யுகாதி பண்டிகையின்போது முஸ்லீம்களும் வழிபாட்டுக்கு வருக்கின்றனர் இது ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த வட்டாரத்தில் நிலவும் சமய நல்லிணக்கத்துக்கு இது எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
பர்கா அணிந்த முஸ்லீம் பெண்களுக்கு அர்ச்சகர்கள் சடாரி வைக்கும் காட்சியையும், முஸ்லீம் ஆடவர்கள் கியூ வரிசையில் நிற்பதையும் சர்வ சாதாரணமாகக் காணலாம். யுகாதி வருடப்பிறப்பு அன்று பெருமாளைத் தரிசிப்பது சகல செளபாக்கியங்களையும் , குறிப்பாக செல்வ வளத்தை சேர்க்கும் என்பது அவர்களது அபார நம்பிக்கை. இது நீண்ட காலமாக நடக்கிறது.
இது பற்றிய சுவையான கதை இந்தக்கோவிலை நிர்வகிக்கும் திருப்பதி – திருமலை தேவஸ்தான ஆவணங்களில் உள்ளதாம், பீபி நஞ்சாரி என்ற முஸ்லீம் பெண்ணையும் வெங்கடேஸ்வரர் கல்யாணம் கட்டியதால் முஸ்லீம்களுக்கு அவர் மாப்பிள்ளையும் யாம்! .
(இது போல மதுரையிலும் ஒரு கதை உண்டு. பல லட்சம் மக்கள் பங்கு கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் அழகர் கோவிலிலிருந்து வரும் சுந்தரராஜப் பெருமாளுக்கு ஒரு முஸ்லீம் பெண்மணியின் மண்டகப்படியும் உண்டு. இதன் பின்னுள்ள கதை என்னவென்றால் அந்தப் பெண்ணும் பெருமாளின் அருளைப் பெற்றார் என்பதே; காலப்போக்கில் சுவை கூட்டுவதற்காக பெருமாள் முஸ்லீம் பெண் வீ ட்டுக்குப் போனார் என்று கதை கட்டப்படுகிறது.. பெருமாளுக்கும் முஸ்லீம் மதத்துக்கும் பல ஆயிரம் ஆண்டு இடைவெளி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே; இதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தொழுகை; தேவார, திவ்யப் பிரபந் தத்தில் உள்ள தொழுதல் என்ற சொல்லை இன்று முஸ்லீம்கள் மட்டுமே தமிழில் பயன்படுத்துகின்றனர். யாராவது ஒருவர் இந்தச் சொல்லைத் தமிழ் தெய்வப் பாடல்களில் கண்டு முஸ்லீம் தொழுகை என்று சொன்னால் நகைப்புக்கு உள்ளாவார்கள்; காலம் என்பது மாறுதலுக்கு உட்பட்டது; அதைக்கண்டு தவறான அர்த்தம் கொள்வது மடமை!.)
கடப்பாவின் வரலாறு என்னவென்றால் சிறிய கிராமத்தில் கோவில் இருந்த இடத்தில் கோல்கொண்டா சுல்தான்கள் ஒரு பெரிய நகரத்தை நிர்மாணித்தனர். அந்தக் காலத்திலிருந்து சுல்தான்கள் இந்துக் கடவுளுக்கும் வணக்கம் செலுத்துவது , நன்கொடை அளிப்பது நீடிக்கிறது
இந்த வட்டாரத்தில் மதனப்பள்ளி, Sri Prasanna Venkateswara Swamy temple at Madanapalle, கொத்தவரிப்பள்ளி, கட்டு (Gattu) கோவில்களிலும் வழிபாட்டுக்கு முஸ்லீம்கள் வருகின்றனர்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கோவிலுக்கு யுகாதி வருடப்பிறப்புக்கு வரும் முஸ்லீம் பக்தர்கள், அதற்கு சில நாட்களுக்கு முன்னரே மாமிசம் சாப்பி டுவதையும் நிறுத்திவைக்கிறார்கள். அவ்வளவு மரியாதை!
கடப்பா என்றால் படிக்கட்டு ; இந்தக் கோவில் திருப்பதி பாலாஜி கோவிலுக்குத் செல்வதற்கான நுழை வாயில் என்றும் கருத்தப்ப டுகிறது; தெலுங்கு பேசும் மக்கள் இவ்விரு கோவில்களையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
XXXX
கடப்பா வட்டார புகழ்மிகு கோவில்கள்
ஒந்திமித்தாவில் Vondimitta இருக்கும் கோதண்ட ராமசாமி கோயில் பிரசித்திபெற்ற தலம். அங்கே சீதா, ராமர், லட்சுமணர் ஆகியோர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர். சோழர் , விஜயநகர கலை அம்சங்கள் நிறைந்த இடம் இது.
எங்கே உள்ளது ?
கடப்பா நகரிலிருந்து திருப்பதி நோக்கிச் சென்றால் 25 கி.மீ தூரத்தில் இந்தக் கோவிலை அடையலாம்
பெரிய நுழைவாயில், அலங்காரத் தூண்கள், சிற்பம் நிறைந்த மணடபம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. மத்திய ரங்க மண்டபத்தில் 32 தூண்கள் உள்ளன. சிறபங்களை ரசித்தவாறே கர்ப்பக்கிரகத்துக்குச் செல்லலாம். பிரெஞ்ச் யாத்ரீகர் டவர்னியர் the well-known French-traveller, Tavernier, இந்தக்கோவிலின் கலை அம்சங்களை புகழ்ந்து எழுதியுள்ளார்
தெலுங்கு மொழியில் பாகவதம் எழுதிய பொம்மென்ரா போத்தன்னா இந்த ஊரைச் சேர்ந்தவரே.
இந்த இடத்தில் ராம் தீர்த்தம், லட்சுமண் தீர்த்தம் என்ற இரண்டு வற்றாத ஊற்றுகள் இருக்கின்றன. சீதா தேவிக்குத் தாகம் எடுத்தபோது ராமர் வில்லால் உண்டாக்கிய தீர்த்தங்கள் என்பது மக்களின் நம்பிக்கை. (இது போல இலங்கை வரை பல தீர்த்தங்கள் ராமனால் உண்டாக்கப்பட்டுள்ளன. ஏழு மரங்களைத் துளைக்கும் வல்லமை படைத்த ராம பிரானுக்கு இது எல்லாம் கைவந்த கலை! .அவனுடைய வில்லாற்றலுக்கு ஈடு இணையில்லை.
கண்டி ஆஞ்சனேயர் கோவிலும் Gandi Veera Anjaneya Swamy – பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.
கடப்பா நகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் ஆலயம் இருக்கிறது
பாபாக்கினி என்னும் நதியின் மேற்குப்பகுதியில் குன்றின் மீது இயற்கை வனப்பு சூழ அமைந்த கோவில் இது. இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஸ்ரீ ராமர் , பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு சுற்றாத இடமே இல்லை
அனுமனின் தந்தையான வாயு பகவான் அவரை வரவேற்க பொன்னாலான மாலையை தொங்கவிட்டாராம். ராமரும் நன்றிக்கடனாக போவதற்கு முன்னர் அனுமன் சிலையை கல்லில் வடித்தாராம். மரணம் வரும் தருணத்தில் இவர் தரிசனம் தருவதாக மக்கள் நம்புகின்றனர் .
****
பிரம்மகிரி மடம் Brahmamgari Matham
வருங்காலம் உரைத்த வீர பிரம்மம்
கடப்பாவிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள மடத்துக்குப் போனால் சமாதி, கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
இந்த மடம் ஸ்ரீ போத்தலூரி வீரப்பிரம்மத்தால் பிரபலம் அடைந்தது ; அவர் எதிர்காலம் பற்றி தீர்க்க ரிசனத்துடன் பல விஷயங்களைக் குறி சொல்லியதால் மக்களால் மதிக்கப்பட்டார். கந்தி மல்லையா பள்ளி என்னுமிடத்தில் மடம் உள்ளது. 1693.ல் அவர் ஜீவ சமாதி அடைந்தார்.
*****
புஷ்பகிரி ஆலயங்கள்
கடப்பா நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் பிநாகினி நதிக்கரையில் புஷ்பகிரி உள்ளது. அங்கு பல கோவில்கள் இருப்பதால், வைணவர்கள் இதை மத்ய அ ஹோபிலம் என்றும் சைவர்கள் மத்திய கைலாசம் என்றும் அழைப்பர். இங்குள்ள அமிர்த சரோவர் குளம் பற்றியும் சுவையான கதை கள் உண்டு . அமிர்த்தத்தைக் கருடன் கவர்ந்து செல்கையில் ஒரு துளி விழுந்து அமிர்த சரோவர் குளம் உண்டானதாம்; ஒரு விவசாயி வாழ்க்கையில் வெறுப்புற்றுக் குதித்தபோது அவர் இளைஞர் ஆகிவிட்டாராம்.
மக்கள் எல்லோரும் இப்படிக் குதித்து புத்துரு பெ ற் றதைக்கண்டு பொறுக்காத பிரம்மா விஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிடவே ஆஞ்ச யரை அனுப்பினாராம் அவர் ஒரு குன்றினை சரோவர் குளத்தில் போட அது மிதந்ததாம். பின்னர் சிவனும் விஸ்ணுவுமே வந்து குளத்தை ஒரு மிதிமிதி மிதிக்கவே விஷ்ணு பாதம் ,ருத்ர பாதம் சின்னங்கள் உருவாயிற் றாம்.
இந்த நகரத்தை இரண்டாவது ஹம்பி என்றும் சொல்கிறார்கள். இங்கு ஒரு சங்கராசார்யார் மட்மும் நிறுவப்பட்டுள்ளது.
இங்குள்ள ஆலயங்களில் முக்கியமானது சென்னை கேசவர் கோவில். இதுதான் பெரியத்துக்கு வரலாற்றுச் சிறப்புடைத்து. 1298ம் ஆண்டு கல்வெட்டு முதல் வரலாறு கிடைக்கிறது. கோவிலில் உள்ள நர்த்தன கணபதி சிலையும் கிருஷ்ணனின் பகவத் கீதை சிலையும் கண்கவரும் சிற்பங்கள் ஆகும்.
மார்ச் = ஏப்ரல் மாத காலத்தில் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.
இதே புஷ்பகிரியில் மேலும் பார்க்க வேண்டிய கோவில்கள் – துர்கா, சிவன், திரிகூடேஸ்வரா, ருத்ரபாத , தேவி ஆலயங்கள் ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பான கலை அம்ஸங்களைக் கண்டு ரசிக்கலாம்.’
Vondimitta Kothandaramaswami Temple
–subham—
Tags- புஷ்பகிரி, ஆலயங்கள், கடப்பா, முஸ்லீம்கள், வணங்கும், விஷ்ணு கோவில், கண்டி ஆஞ்சனேயர் , வருங்காலம், வீர பிரம்மம், பிரம்மகிரி மடம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 21-8-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
உலகெங்கும் ஒலிக்கும் இன்னிசைக் குரல்!
பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 1
எப்போதும் ஒலிக்கும் ஒரு குரல்!
உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வருடத்திற்கு 365 நாட்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்தியக் குரல் யாருடையது தெரியுமா? நைட்டிங்கேல் என்று பாராட்டப்படும் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரின் குரல் தான் அது!
இவரது வாழ்க்கை கடும் உழைப்பால் உயர்ந்து பாரத் ரத்னா பட்டத்தைப் பெற்ற ஒருவரின் வாழ்க்கை!
பிறப்பும் இளமையும்
லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதியன்று இந்தூரில் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் தீனநாத் மங்கேஷ்கர் மராத்திய மொழியிலும் கொங்கணி மொழியிலும் சிறந்த பாடகர். ஒரு நாடக நடிகரும் கூட. கோவாவில் உள்ள மங்கேஷ் என்ற தனது புராதன கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு மங்கேஷ்கர் என்பதைத் தன் பெயரில் அவர் வைத்துக் கொண்டார் தாயார் செவந்தி என்ற சுதாமணி குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்திய நாட்டுப்புறப் பாடல்களில் வல்லவர்.
லதாவிற்கு சூட்டப்பட்ட பெயர் ஹேமா. ஆனால் பின்னால் அவரது தந்தை தனது நாடகத்தில் வரும் பாத்திரமான லதிகா என்பதை ஒட்டி அவருக்கு லதா என்று பெயரை மாற்றினார்.
குடும்பத்தில் லதாவே மூத்த குழந்தை. அவருக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு.
வறுமையில் வாட்டம்
தந்தையாரிடமிருந்து இசையைக் கற்ற லதா ஐந்தாம் வயதிலிருந்தே தந்தையாருடன் கூட இருந்து அருமையாகப் பாட ஆரம்பித்தார். லதாவிற்கு 13 வயதே ஆகும் போது அவர் தந்தை மரணமடைந்தார். குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.
1942-ல் ஒரு மராத்தியத் திரைப்படத்தில் (கிதி ஹஸால் என்ற படம்) அவர் ஒரு பாடலைப் பாடினார். ஆனால் இறுதியில் அது ‘வெட்டப்பட்டது; படத்தில் இடம் பெறவில்லை.
தொடர்ந்து ஆறு வருடங்கள் கடும் போராட்ட வருடங்களாக அமைந்தன. ஏராளமான எதிர்மறை விமரிசனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் தன் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்த லதா விடவில்லை; வெற்றியே பெற ஆரம்பித்தார்.
1945ல் லதா மும்பைக்குக் குடி பெயர்ந்தார்.
ஹிந்தி திரையுலகத்தில் நுழைவு
லதாவிற்கு இசை அமைப்பாளர் குலாம் ஹைதர், ‘மஜ்பூர்’ (1948) என்ற படத்தில் ஒரு வாய்ப்பை அளித்தார். ஹிந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்பு கிடைக்கவே கெம்சந்த் ப்ரகாஷ் இசை அமைத்த மஹால் (1949) உள்ளிட்ட படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. லதாவின் குரல் மிகவும் சன்னமாக இருக்கிறது என்ற ஒரு இசையமைப்பாளரின் ஆக்ஷேபணைக்கு குலாம் ஹைதர் கூறிய பதில்: “ஒரு நாள் லதாவின் காலில் விழுந்து என் படத்தில் பாடுங்கள் என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள்’ என்பதே. பின்னால் தனது 84வது பிறந்த நாள் விழாவில்
லதா கூறியது: “உண்மையில் என்னை ஆதரித்து உருவாக்கியவர் குலாம் ஹைதரே”!
திலிப்குமாரின் சந்தேகம்
ஹைதர் எடுத்த படத்தில் லதாவின் இசையை இசையமைப்பாளர் நௌஷத் கேட்டார். உடனே தனது அடுத்த படத்தில் அவரைப் பாட வைக்கலாம் என்று யோசனை கூறினார். அப்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்த திலிப்குமார் இதற்கு ஆக்ஷேபணை தெரிவித்தார். ஒரு மராத்தியப் பெண்ணுக்கு உருது உச்சரிப்பு எப்படி சரியாக வரும் என்பதே அவரது கேள்வி. இந்த கடுமையான விமரினத்தைக் கேட்ட லதா மனம் தளரவில்லை. கடும் உழைப்பை மேற்கொண்டார். உருது உச்சரிப்பை தக்க ஒருவரிடம் கேட்டு முறையாகப் பயின்றார்.
1949-ல் அந்தாஸ் படம் வெளியானது. அதில் ஹிட்டான பாடலைப் பாடியவர் லதா தான்! அந்தப் பாடலில் உருது மொழி உச்சரிப்பைக் கேட்ட திலிப்குமார் அசந்து போனார். பாடியவர் யார் என்றால் அவர் விமரிசித்த அதே லதா தான்! உடனே தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார் அவர்.
அந்த வருடம் வெளியான அவர் பாடல் இடம் பெற்ற ஐந்து படங்களும் ஹிந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டின. திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. மஹால் படத்தில் வந்த ஆயகா ஆனேவாலா என்ற பாடல் எங்கும் ஒலித்தது!
பாடகர்களுக்கு லதாவின் பேருதவி
அந்தக் காலத்தில் கிராமபோன் இசைத்தட்டில் பாடியவர் பெயர் இடம் பெறாது. ஒன்று திரைப்படத்தில் அந்தப் பாடலைப் பாடிய கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெறும் அல்லது அதைப் பாடிய நடிகையின் பெயர் இடம் பெறும்.
இது லதாவிற்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. பாடியவர் பெயரைப் போடுமாறு அவர் வேண்டினார்.
ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
ஆனால் மஹால் படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேட்ட ரசிகர்கள் சும்மா இருக்கவில்லை.
ஆல் இந்தியா ரேடியோவில் ‘ஆயகா’ பாடலைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இதைப் பாடியது யார் என்று திரும்பத் திரும்பக் கேட்க வானொலி நிலையம் படத்தின் தயாரிப்பாளரை நாடி லதாவின் பெயரைக் கேட்டு ஒலிபரப்ப ஆரம்பித்தது. காமினி என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருந்த இசைத்தட்டுகள் இனி அப்படி பெயரைப் போடாமல் பாடியவரின் பெயரைப் போட ஆரம்பித்தன.
லதாவிற்கு கிடைத்த பெரும் வெற்றி இது. பாடியவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து பாடகர்களின் பெயரை இசைத்தட்டுகளில் போட வைத்தவர் அவரே!