நாய் வாலும், நாய்ப் பாலும்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No.13,663)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,663

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

நாய், ஈ, பன்றி, பாம்பு முதலிய விலங்குகள், பூச்சிகளைக் கொண்டு இந்துக்கள் நிறைய பாடம் கற்கிறார்கள்; பாடம் சொல்லித் தருகிறார்கள்.

ராம கிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் பாம்பு பற்றித்தான் அதிக உதாரணங்கள் வருகின்றன.

மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் தன்னை நாய் என்று அறுபது முறைக்கு மேலாகப் பாடியுள்ளார். அவர் மனிதனின் உச்ச  நிலையைத் தொட்டுவிட்டபோதும் நம்மைப் போன்றவர்களை பிரதிநிதித்துவம் காட்டுவதற்கு அப்படிப் பாடியுள்ளார். அவரைப் பார்த்து ஏனைய புலவர்களும், அடியார்களும் கூட  அப்படிப் பாடியுள்ளனர்.

நாயைத்  தமிழர்கள் இழிவான எடுத்துக்கட்டுகளாகவே பயன்படுத்துகின்றனர்  மஹாத்மா காந்தியும் தெருநாய்களை கொன்றுவிடுங்களென்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

One million dogs eaten in South Korea

There are about 1,150 farms, while 1,600 restaurants sell dog meat dishes, according to the agriculture ministry. Activists say as many as 1 million dogs a year are slaughtered in South Korea.19 Jan 2024

நமக்குத்தான் நாய் அசிங்கம்; தென் கொரியர்கள் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள். ஒரு ஆண்டில் பத்து லட்சம் நாய்கள் அவர்களின் வயிற்றுக்குள் போகின்றன; இப்போது புதிய சட்டம் இயற்றி 3 ஆண்டுகளுக்குள் நாய் மாமிசத்தை அறவே கைவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

Starving children in Syria drink dog@s milk.

அருமையான பல உவமைகளை நாலடியார், நீதி வெண்பா

முதலிய நூல்களில் படிக்கலாம்.

மதுரை பல்கலைக்கழகத்தில் மாலை நேரக் கல்லூரியில் நான் இதழியல் JOURNALISM சொல்லிக்கொடுத்தேன்  பத்திரிகைப் படிப்பில் / இதழியலில் முதல் பாடம் எது நியூஸ்? என்பதாகும். மனிதனை நாய் கடித்தால் அது நியூஸ் அல்ல ! ஆனால் மனிதன், நாயைக் கடித்தால் அது பெரிய நியூஸ். சில நேரங்களில் நடிகர் நடிகையரை நாய் கடித்தாலும் நியூஸ்த்தான் ! இது விதி விலக்கு

The phrase “When a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news” is often used in journalism school to illustrate the idea that news is defined as unusual and infrequent events. 

நாலடியார் எழுதிய சமண முனிவர்கள் நாய் நம்மைக் கடிக்கும் அதற்காக யாராவது நாயைக் கடிப்பார்களா என்று கேட்கிறார்கள்.

****

1.நாயைக் கடிப்பவன் உண்டா?

 கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்

பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.– நாலடியார்

     (இ-ள்.) நாய் – , கூர்த்து – கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் – (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் – எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் – அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை – இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் – அயோக்கியர், நீர்த்து அன்றி – குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் – ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் – யோக்கியர், மீட்டு – மறுபடியும், தம் வாயால் – , சொல்பவோ – (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று.

     நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து.

     வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள – இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து – நீரையுடையது, நீர் – சற்குணம், கீழாய – பலவின் பெயர். சொல்ப – பலர்பால் வினைமுற்று; ப – விகுதி. ஒ – எதிர்மறை.

XXXX

 2.பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்

மேவுசிவன் அன்பர்பால் மேவாதே – ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே

தூயவருக் காகுமோ சொல். 63– நீதி வெண்பா

பொருள்

நாயினுடைய  பால் எல்லாம் நாய்க்குத்தான்; தூயவர்களுக்கு அல்ல .அது போல தீயவர்களின் செல்வம் எல்லாம் அடித்து வாங்கும் தீயவர்களுக்கே போய்ச சேரும்; தூயோருக்குக் கிடைக்காது.

****

3.கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலுந் தங்காதே – சன்மமெலும்(பு)

உண்டு சமிக்கும்நாய் ஊண்ஆவின் நெய்யதனை

உண்டு சமிக்குமோ ஓது. 80– நீதி வெண்பா

தோலையும் எலும்பையும் சுவைத்து உண்ணும் நாய்க்கு, பசு நெய்யால் செய்யப்பட இனிப்புகள் பிடிக்குமா? பிடிக்காது. அது போல, தீயோரின் காதில் தர்ம நூல்களிலுள்ள அறிவுரைகள் ஏறாது.

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு &&&& யைத் தின்னத்தான் போகும் என்னும் பழமொழியை இது நினைவு படுத்தும்.

*****

4.குழந்தைகள் = நாய்கள் !!

ஆசையெனும் பாசத்தால் ஆடவர்தஞ் சிந்தைதனை

வீசுமனை யாந்தறியில் வீழ்த்தியே – மாசுபுரி

மாயா மனைவியரா மக்கள் மகவென்னும்

நாயாற் கடிப்பித்தல் நாடு. 88- நீதி வெண்பா

ஆசை எனும் பாசக் கயிற்றால் ஆண்களை  மாயா வேஷப் பெண்கள் இல்வாழ்க்கை எனும் தூணில் கட்டி , குழந்தைகளைப் பெற்று அந்த நாய்களால் கடிக்கச் செய்வதை ஆண்கள் சிந்திப்பார்களாகுக.

*****

5.உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க பசுவின்வால் – பற்றி

நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி

நதிகடத்தல் உண்டோ நவில். 11 —நீதி வெண்பா

பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஆற்று நீரைக் கடக்கலாம். நாயின் வாலைப் பிடித்துக்கொண்டு யாராவது நதியைக் கடப்பார்களா; கடக்கமாட்டார்கள். அது போல , வாழ்க்கை சிறக்க, சுற்றம்  புடைசூழ நல்ல மனைவியுடன் வாழ்வதே சிறந்தது  நாயின் வால் – மனைவி அல்லாத பெண்கள்.

****

 6.வேசியரும் நாயும் வித்நூல் வயித்தயரும்

பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! – பேசிலொரு

காரணந்தான் இன்றியே கண்டவுட னேபகையாம்

காரணந்தான் அப்பிறப்பே காண். 65- நீதி வெண்பா

பொருள்

வேசியர், டாக்டர், , பார்ப்பனர், கோழிகள்  நாய் , சட்ட நூல் ஆகியன காரணமே இல்லாமல் பகைவர் ஆவர். இதற்கு அவர்களது பிறப்பே காரணம்

(இந்தப் பாடலுக்கு பொருள் புரியவில்லை. சிலர் வியாக்கியானம் யூகமே )

—subham—#

tags- நாய், வால் , பால், பிள்ளைகள், நல்ல மனைவி, பசுவின் வால் , ஆற்றைக்கடக்க , நெய்  இனிப்பு , நாலடியார், நீதி வெண்பா 

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! (Post No.13,662)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,662

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

(எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல)

பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மஹாவிஷ்ணு என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசிய சொற்பொழிவினால் அவர் கைது செய்யப்பட்டார். சில பள்ளிக்கூடங்கள் அவரைப் பேச அழைத்ததால்  தலைமை  ஆசிரியைகள் மாற்றப்பட்டுவிட்டனர்.

ஆனால் பாவ புண்ணியம் பற்றியும்  பூர்வ ஜன்ம தீவினைப்பயனால் நோய்கள் வருகின்றன என்பதும் சங்க இலக்கியம் முதல்  பல நூறு தமிழ் நூல்களில் உள்ளன. சம்ஸ்க்ருத நூல்களிலும் அவ்வாறே.

 யார் பன்றியாகப் பிறப்பார்கள் என்று திருமூலர் சொன்னதும், யார் யார் என்ன,என்ன விலங்குளாகப் பிறப்பார்கள் என்று மனு ஸ்ம்ருதி தரும் பட்டியலையும் ஏற்கனவே எனது கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன் .

****

அலிகளாக யார் பிறப்பார்கள் ?

கணியன் பூங்குன்றனார் என்ற ஜோதிடர் புறநானூற்றிலேயே கர்மா தியரியைச் KARMA THEORY சொல்லி, தீதும் நன்றும்  பிறர் தர வாரா; உன்னுடைய கர்மாவுக்குத் தக்கபடியே அமையும் என்று சொல்லிவிட்டார். அவர் பக்கா இந்துஒருவேளை ஹிந்துத்துவாவை தமிழ் நாட்டில் துவக்கிவைத்தவராக இருக்கலாம் . ஏனெனில் இது எல்லாம் மனு நீதி நூலில் உள்ளது

****

புறநானூறு 192

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; KARMA THEORY

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

****

அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட போறவன் அலியாகப் பிறப்பான்!

5. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

     கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை

     வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை

     அலியாகி ஆடிஉண் பார்.

     (இ-ள்.) செம்மை ஒன்று இன்றி – ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் – அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் – திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ – தோளைச் சேரவிரும்பி, உம்மை – முற்பிறப்பில், வலியால் – வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே – பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி – இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் – கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று.

     முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து.

     செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை – உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.

****

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும் !

இந்த விஷயத்தை சமண முனிவர்கள் நாலடியார் என்னும் நூலில் சொல்கிறார்கள்

நாலடியார் பாடல்கள்

123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

     துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்

     அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற

     பழவினை வந்தடைந்தக் கால்.

     (இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று.

     தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.

     “அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்” என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது “உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்” என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.

****

பிச்சைக்காரர்கள் யார் ?

முன் ஜென்மத்தில் பிச்சை இடாதவர்கள் அடுத்த பிறப்பில் பிச்சைக்காரர்களாக பிறக்கிறார்கள்

94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்

     நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்

     கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

     அடாஅ அடுப்பி னவர்.

     (இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் – இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ – உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் – தினந்தோறும், கொடுத்து உண்மின் – யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து – ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் – சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை – முற்பிறப்பில், கொடாதவர் என்பர் – (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று.

     கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம்.

     அடா அடுப்பினவர் – துறவிகள், உம்மை கொடாதவர் – (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி.

     இம்மி – ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் – முற்றும்மை. இயைவ – பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ – இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.

–Subham—

Tags- பிச்சைக்காரர் , அலிகள், குஷ்ட ரோகம், பிறன்மனை, மறுபிறப்பு,  கர்மா,  வினை, நாலடியார், மஹாவிஷ்ணு பேச்சு, நண்டு ,

கேளுங்கள் கொடுக்கப்படும்! (Post No.13,661)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.661

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

கேளுங்கள் கொடுக்கப்படும்! 

ச.நாகராஜன்

 இன்றைய வாழ்க்கை முறையில் எங்கு போனாலும் கேள்விகள்! அம்மா, மகளிடம் கேள்வி! மகள் அப்பாவிடம் கேள்வி! கல்லூரியில் பேராசிரியர்களின் கேள்விகள்! இண்டர்வியூவில் கேள்விகள்!

கேள்விகள் கேட்காமலும் வாழ முடியவில்லை. கேட்பவர்களுக்கு பதில் சொல்லாமலும் வாழ முடியவில்லை. சொல்லப்போனால் நாம் கேட்கும் கேள்விகளிலும் நாம் கூறப் போகும் பதில்களிலும் தான் நமது வெற்றியே அடங்கி இருக்கிறது. இது இன்று ஆரம்பித்த ‘மாடர்ன் டெக்னிக்’ இல்லை.

ரிக் வேத காலத்தில் ரிஷிகள், “ஆஹா! பிரபஞ்சம் எப்படித் தோன்றியது” என்று பிரம்மாண்டமான கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து வேள்வி யுகத்திலேயே கேள்வி யுகம் தொடங்கி விட்டது!

மகாபாரதத்தில் யட்சன் தர்மரைக் கேட்ட கேள்விகளும் அதற்கு தர்மர் கொடுத்த பதில்களும் மாடர்ன் குருமார்கள் உற்று நோக்க வேண்டிய நுட்பமான கேள்வி-பதில் முறை! சிறிய சொற்களால் யட்சன் கேட்ட உயிர் எடுக்கும் அல்லது உயிர் கொடுக்கும் கேள்விகள் அவை.

ஆதி சங்கரர் தனது ப்ர்ச்னோத்தர ரத்ன மாலிகாவில் கொக்கி போன்ற கேள்விகளையும் நறுக்குத் தெறித்தாற் போன்ற பதில்களையும் தந்திருப்பது பிரமிப்பையும் வியப்பையும் தரும்.

இந்த நவீன யுகத்திற்கேற்ப கேள்வி கேட்பதை வாஷிங்டனில் வாழும் வாலெரி என்ற பெண்மணி ஆறு மட்டங்களாக வகுத்து புதிய அணுகுமுறையைத் தருகிறார். இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல அனுமதிக்கும் அவர் தன் பெயரை விட்டு விடக் கூடாது என்று வேண்டுகிறார். (நியாயமான வேண்டுகோள் தானே!)

கேள்விகளின் ஆறு மட்டங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கேள்வி கேட்பதை அலசி ஆராய்வோம்.

1)   எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்; ஆனால் சமமாக அல்ல.

(All Question; but not equally)

சிந்தனை செய்யாமலேயே கேள்வி கேட்பது சுலபம்; ஆனால் கேள்வி கேட்காமல் சிந்தனை செய்ய இயலாது. என்ன, ஏன், எப்படி போன்ற கேள்விகளே சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒரு விஷயத்தைத் தெரியாமல் அறிந்து கொள்ள கேள்வி கேட்பது, அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வி கேட்பது, சில சமயம் மற்றவர்களின் நம்பிக்கைக்குச் சவால் விட்டு கேள்விகளைக் கேட்பது என கேள்விகளைப் பல விதமாகக் கேட்கிறோம். கேள்வி கேட்பதற்கு ஏற்ப விடையும் வருகிறது.

2)   எல்லா கேள்விகளும் சமம் அல்ல!

(All Questions are not equal)

உண்மையான விஷயங்களைத் தரவும், நிலைமையைத் தெளிவு படுத்தவும் கேட்கப்படும் கேள்விகள் அந்த நிமிடம் நாம் அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக்குகிறது. ஆனால் எதிர்காலத்தை ஊடுருவி நம்மை விரிவு படுத்திக் கொண்டு,  நாம் அறிய வேண்டுவனவற்றை சிறந்த மேதைகள் கேட்கிறார்கள்.

3)   கேள்வியின் சக்தி

(The Power of Question)

ஒரு கேள்விக்கான இன்றைய பதில் நாளைக்கே பொருத்தமில்லாமல் போகலாம். நமது அறிவின் எல்லையைத் தொட்டுச் சோதிக்கின்றன கேள்விகள். நாம் நினைத்துப் பார்க்க முடிய அளவு சக்தி கேள்விகளுக்கு உண்டு. உதாரணமாக ‘எதிர்கால இயல்’ வல்லுநரான ஜோயல் பார்க்கரின் கேள்வியைப் பார்க்கலாம்.

எந்த ஒன்று செய்வதற்கு முடியாது? செய்ய முடிந்தால் நிலைமையை அடியோடு மாற்றக் கூடியது எது?

சிந்தனையை ஊக்கி விட்டு, கற்க வைத்து, மனதை ஒருமுகமாக ஈடுபடுத்தி வைப்பதே கேள்வியின் சக்தி!

சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிந்தால்.

1)      தேவையான தருணத்தில் அதிக தகவல்களைப் பெற முடியும்.

2)      எது தெரிந்து கொள்ள வேண்டியது, எது தேவையற்றது என்று பாகுபடுத்திப் பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

3)      தகவலைத் தெரிந்து கொண்டு அதைச் சீர் தூக்கிப் பார்த்து உங்களின் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4)      நீங்கள் அறிந்தவற்றின்  மூலம் புதிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

5)      பார்வையை பரந்த அளவில் விரித்துக் கொண்டு புதிய தொடர்புகள், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது ஆறு மட்டங்களில் உள்ள கேள்வி வகைகளைப் பார்ப்போம்.

இப்படிப் பார்க்கும் உத்தி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். உங்களை அருமையாகச் சிந்திக்க வைக்கும். அதிக சக்தியை உங்களுக்குத் தரும்.

இந்தப் புதிய முறை உங்களுக்குச் சரியான வழியைக் காட்டி, உங்களை இயக்கி, உங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும். மறைந்திருக்கும் உங்களின் ஆற்றல் பூரணமாக வெளிப்படுவதால் அதைத் திறமையாக உபயோகப்படுத்தி வெற்றி மேல் வெற்றி பெறலாம்.

1)      முதல் மட்டம் (Reflexive)

நேரடியானது. பதிலுக்குத் தானே இட்டுச் செல்வது. உரையாடலை உடனே முடிக்க வல்லது. இது தான் முதல் வகை. இது தற்போதுள்ள உங்களின் பார்வையை உறுதிப்படுத்துவதாகும். உதாரணத்திற்கு ஒரு கேள்வி:

இந்தப் புதிய வேலை உனக்குப் பிடித்திருக்கிறது, இல்லையா?  இதை அடிப்படை சிந்தனை அல்லது Reflexive  எனலாம்.

2)  இரண்டாவது மட்டம் (Framing)

அடிப்படைத் தகவலை அறியச் செய்வது இந்த வகைக் கேள்விகள்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: எந்த பொஸிஷனுக்கு நீ விண்ணப்பிக்கிறாய்?

இதை உருவாக்குதல் அல்லது Framing  எனலாம்.

3. மூன்றாவது மட்டம் (Planning)

கிடைத்த தகவலை வைத்து தன் கைவசம் உள்ள விஷயத்துடன் இணைத்து தனது வேலையை வெற்றிகரமாக முடிப்பது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: உனது முந்தைய வேலையின் அனுபவம், உனது இந்த வேலைக்கு எப்படி உதவும்?

இதை திட்டமிடல் Planning  எனலாம்.

4)  நான்காவது மட்டம் (Reflective)

கிடைத்த தகவலை ஒரு புதிய வழியில் உபயோகப்படுத்துவது அல்லது ஒரு புதிய நிலைக்குப் பயன்படுத்துவது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: குறிக்கோளை அடைய உனது தலைமைப் பண்புகளை நீ பயன்படுத்திய சமயத்தை விவரி. அது எப்படி உனக்கு வெற்றியைத் தந்தது? இதை பிரதிபிம்ப சிந்தனா முறை அல்லது Reflective எனலாம்.

5) ஐந்தாவது மட்டம் (Predictive)

பிரச்சினையைத் தீர்க்க படைப்பாற்றலை ஊக்குவித்து, சிந்திப்பது ஐந்தாவது வகை.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உற்பத்திப் பிரிவில் உள்ள தொழிலாளர்களையும் பொருள்களை எடுத்துச் செல்லும் பிரிவில் உள்ளவர்களையும் சேர்த்து விட்டால் அது உன் நிர்வாக உத்தியை எந்த விதத்தில் மாற்றும்?”

இதை முன்கூட்டி உணர்தல் அல்லது Predective எனலாம்.

6)    ஆறாவது மட்டம் (Gap)

வலிமையுடன் கூடிய சிந்தனை மற்றும் கற்பதை ஊக்குவிக்கும்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உனது வேலையில் முதல் 30 நாட்கள் செய்ய வேண்டிய மூன்று வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதிக மதிப்புடைய எந்த மூன்று செயல்களைத் தேர்ந்தெடுப்பாய்?”

இதை புதிய சிந்தனா முறை அல்லது Gap எனலாம்.

முதலில் ஆறாம் மட்டத்தில் உள்ள கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். பின்னர் அதையும் முதல் மட்டத்தில் உள்ள கேள்விகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிய வரும்!

நீங்கள் கேட்கின்ற கேள்விகளை இனி இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள். அதோடு உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளையும் இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள்.

கேள்வி கேட்பதில் உள்ள சூட்சுமம் தெரிய வரும்!

கேள்வி கேட்கத் தெரிந்து விட்டால் நீங்கள் தான் இந்த நாட்டு மன்னர்!

ஏனெனில் எப்படிப்பட்டவரையும் உங்களால் சமாளிக்க முடியும்; எப்படிப்பட்ட பதிலையும் உங்களால் அறிவியல் பூர்வமாகக் கொடுக்க முடியும்!

சிரித்துக் கொண்டே இண்டர்வியூக்களை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் அல்லது இண்டர்வியூக்களையே நடத்தலாம்.

பதில் வேண்டுவோருக்கு அனாயாசமாக நீங்கள் சொல்லக் கூடிய மந்திரம் :- “கேளுங்கள், கொடுக்கப்படும்!”

**

 ‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 1-11-2006 அன்று வெளியான கட்டுரை.

Learn Tirumanthiram through Pictures – Part 6 (Post No.13,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,660

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Hare in the Moon

There are many poems in English about the Hare in the Moon or Hare on the Moon. The black spot on the moon has been interpreted as Deer, Old Woman, Hare etc around the world. No one can miss it on a full moon day. Most of the people see only hare in the moon. The oldest reference is coming from the Hinu Scripture Vishnu Sahasranama. It is part of Mahabharata which is at least 5000-year-old. It came from the mouth of Bhisma, the grandest and the most venerable character in the epic. Unless Krishna, both Kauravas and Pandavas saluted him.

Sasa in hare in Sanskrit. Vishu Sahasranama says Lord Vishnu is Sasabindhu (meaning Moon with hare). So moon is worshipped as Vishnu. Throughout 2000 year Sangam Tamil literature we see Moon Worship, particularly crescent moon worship. Crescent moon is decorating the hair of Lord Shiva and many other goddesses.

Earlier to Tirumanthiram of 8th century CE, we find it in Jataka stories of 3rd century BCE and Panchatantra Stories.

*****

Stamp from Japan.

You Can See Lord Only if You Hold Him in Your Heart

“I shall smite the hare in the moon”

Thus saying

A man unsheaths his jewelled sword;

Unto him are they

Who say,

“We the blue-throated Lord will see,

We know the Way;”

Such shall never see,

As in their hearts they hold Him not -Tirumanthiram

 பிறையுள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்

நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

(புறங்கூறாமை  திருமந்திரம்)

In Tamil Veda Tirukkural and other didactic Tamil works it is described as a black spot. But Tirumular, author of 3000 verse Tiru Manthiram and Naladiyar (naaladiyaar) of Jain saints mentioned the moon and hare.

The hare in the moon is worshipped. Because it is in the bright-beamed moon the very hare in heaven’s lofty fair expanse is worshipped. Though scant their worthiness, men obtain worth who share friendship with those firm as a hill.

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;

குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,

குன்றன்னார் கேண்மை கொளின்.

****

2300 year old Buddhist Jataka Story

The story is from the Jataka Tales which tell the story of the Buddha’s previous lives. In the Śaśa Jataka the hare gives up his body for a staving man. In Jataka Tale 316, a monkey, an otter, a jackal and a rabbit try to find food for beggars on the day of Upwasa. In this story, the rabbit sacrifices himself for God.

—subham—

Tags- Hare in the Moon, Tirumular, Tirumanthiram, Naladiyar , Learn Tirumathiram 6, Jataka Story

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளில் சில ‘ஜோக்’குகளை படிக்கையில் எனக்கு வெடிச் சிரிப்பு வருகிறது . இது நேற்று அல்லது போன வாரம் மட்டும் இல்லை. 1971-ம் ஆண்டில் தினமணி பத்திரிகையில் சப் எடிட்டராக சேர்ந்ததிலிருந்து சிரிக்கிறேன். லண்டனில் இலங்கை கதாசிரியர்கள் எழுதும்  நூல் வெளியீட்டு விழாவில் தலைமை  தாங்கும்போதும் சிரிப்பேன்; ஆனால் வெடிச் சிரிப்பு இல்லை; வெறும் புன்சிரிப்பு மட்டுமே..

துக்ளக் பத்திரிக்கையில் தமிழே இல்லை என்பான் ஒருவன்; இன்னொருவன் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு  ர, ற  வேறுபாடே தெரியாது என்பான்; அவர்கள் கதைக்கும்போது எனக்கு மேலதிக சிரிப்பு வரும்; கூட்டத்தில் இதை எதிர்த்துக் கதைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று கருதி நூலை அங்குரார்ப்பணம் செய்வதை அனுமதிப்பேன்; அடுத்த கூட்டத்தில் வளமைபோல சந்திப்போம்; அப்போது இந்தத் தலைப்பில் (இந்தியத் தமிழா ? இலங்கைத் தமிழா ? எது சிறந்தது ?) என்று  ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யுங்கள். நான் என் பதிலைத் தருகிறேன் என்று சொல்லி தலைமை உரையை  முடித்து விடுவேன். 

மதுரை தினமணி அலுவலகத்தில் 16 ஆண்டுக்  காலம் சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்து பிபிசி என்னை லண்டனுக்கு அழைத்து வந்த பின்னரும் என் ஆராய்ச்சி நிற்கவில்லை. மதுரையில் வாரத்துக்கு ஒரு முறை நைட் ட்யூட்டி வரும்; இரவு 3 மணி வரை உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு நான் ஒருவனே பொ றுப்பு ; கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு டெலிப்ரிண்டரை பார்த்துக்கொண்டே இருப்பேன். பிளாஷ் பிளாஷ் பிளாஷ் பிளாஷ்  என்று டெலெய்ப்ரிண்டர் சப்தம் போட்டாலே ஏதோ முக்கியச் செய்தி வருகிறது என்று பொருள்; உடனே ஓடிச் சென்று அவசரம் அவசரமாக கடைசி செய்தி என்று எழுதிப்போடுவேன் ; விடுதலைப் புலிகள் சென்னை  விமான நிலையத்தில் குண்டு வைத்து 26 பேரைக்கொலை  செய்தபோது தினமணி முதல் பக்கத்தையே அடியோடு மாற்றும் தேவையும் ஏற்பட்டது.

இரவு எட்டு மணியிலிருந்து 3 மணி வரை முக்கியச் செய்தியே வராத போது , திராவிடக் கழக விடுதலை, தி.மு.கவின் முரசொலி பத்திரிக்கைகளை படித்து அதிலுள்ள ஜோக்குகளை அங்குள்ள சகாக்களுடன் பகிர்ந்து கொள்வேன் அப்போதுதான் வெடிச் சிரிப்பு; கருணாநிதியின் இத்யாதி இத்யாதி ஸம்ஸ்க்ருதச் சொற்கள் முதலியவற்றை பத்திரிகையில் UNDERLINE செய்வேன்; அடிக்கோடு போடுவேன் . விடுதலையிலும் முரசொலியிலும் எத்தனை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்று கணக்குப்போடுவேன் ; நாங்கள் எங்கள் தினமணியை அவர்களுக்கு இலவசமாக அனுப்புவோம். அவர்களும் EXCHANGE COPY    எக்ஸ்சேஞ்  காப்பி என்ற முறையில் எங்களுக்கு முரசொலி, விடுதலை பத்திரிக்கைகளை அனுப்புவார்கள்; ஆபீஸ் பையன் இவைகளை தினமும் கோப்பில் கோர்த்து வைப்பான்.

லண்டனுக்கு என்னை பிபிசி அழைத்துவந்து தமிழோசையில் வேலைக்கு அமர்த்தியபோது இலங்கைவாசிகள், மலேசியாவாசிகள் வருகையில் அவர்களிடமிருந்து வீர கேசரிதமிழ் நேசன் பத்திரிக்கைகளை வாங்கி இதே அடிக்கோடு போடும் வேலையைச் செய்வேன்; லண்டனில் வாரம் தோறும் குமுதம், துக்ளக் முதலிய ன வாங்கி இதே மொழி ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பகுதி நேர வேலை பார்த்த காலத்தில் தினமணி பத்திரிக்கையை வரவழைத்து தினசரி வாசக சாலையைத் தொடங்கினேன். நான் விலை கொடுத்து வாங்கிய பத்திரிக்கைகளையும் படிப்பதற்கு வைப்பேன் இவை அனைத்தும் எனது 50 ஆண்டு மொழி ஆராய்ச்சிக்கு உதவின .

****

ஐயா உங்க சுய புராணம் போதும்/ சப்ஜெக்டுக்கு வாங்க சப்ஜெக்டுக்கு வாங்க ! தலைப்புக்கும் உங்கள் சுய புராணத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. இதோ வந்துவிட்டேன்!

கடந்த சில மாதங்களில் “டமிள் பட்டிரிகைகழில்” இரண்டு துணுக்குகளைப் படித்ததால் இந்தக் கட்டுரை! கிருபானந்த வாரியார், கி.வா.ஜ போன்றோர் இலங்கைத் தமிழ் பற்றி புகழ்ந்த செய்திகள்  அவை; ஒரு கல்யாண வீட்டுக்குப் போனாலோ, விருந்துக்கு அழைத்தாலோ ஏ தாவது இரண்டு நல்லதைச் சொல்லி பாராட்டுவது இந்துக்களின் சம்பிரதாயம் . அதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் சொல்லுவது என்ன வென்றால்……………………..

1.உலகம் முழுதும் உள்ள POPULAR பாப்புலர் தமிழ் நாளேடுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு ஸம்ஸ்க்ருதச் சொற்களை பத்திரிகைகளில் பயன்படுத்துகின்றன சில்லறைப் பயல்கள் நடத்தும் நாளேடுகளைக் கணக்கில் சேர்க்காதீர்கள்;

2.ஒரு மொழியில் பிற மொழிக் கலப்பு இருப்பதைத் தவிர்க்கவே முடியாது.  இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு ஆங்கிலம்; அதில் ஆங்கில சொற்களை விட பிற மொழிச் சொற்களே அதிகம் ! ஆனால் இந்தக் கலப்பு அந்த மொழியின் உருவையே மாற்றி விடக்கூடாது.

3. தமிழில் சர்வகலாசாலை என்று எழுதிவந்ததை இன்று பல்கலைக்கழகம் என்றும், ஜலம் என்று எழுதிவந்ததை இன்று தண்ணீர் என்றும் எழுதுகிறோம்; யாரும் சிரிக்கவில்லை; இவ்வாறு காலேஜ் கல்லூரி ஆனது, கம்பியூட்டர் கணினி ஆனது; வரவேற்கத்தக்கதே; ஆயினும் அத்தனை விஷயங்களையும் தமிழில்தான் எழுத வேண்டும் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றும் ஜெர்மனியை செருமனி என்றும் எழுத வேண்டாம். ஏனெனில் உலகில் தமிழன் ஆங்கிலம் பேசும்போது அதிக தமிழ் ஆக்சென்ட் TAMIL ACCENT வருகிறது. வடக்கத்தி ஆட்களிடம் இது குறைவு.

4. தமிழ் ஒரு குறையுள்ள மொழி. இந்தியாவில் ஸ ஷ ஜ ஹ க்ஷ இல்லாத பழைய மொழி இது ஒன்றுதான்; சம்ஸ்க்ருத மொழி ஒன்றில் மட்டுமே உலகிலுள்ள 95 சதவிகித மொழி உச்சரிப்பைக் கொண்டுவர முடியும். ஜ என்னும் எழுத்து உலகில் எந்தப் பழைய மொழியிலும் இல்லை. ச  என்பது பாரசீகத்தில் இல்லாததால் நம்மை எல்லாம்  ஹிந்து ன்று சொல்லிவிட்டார்கள். தமிழிலும் ச கிடையாதுசம்ஸ்க்ருதத்தில் எ ஒ ழ தவிர எல்லா ஒலிகளும் உண்டு.

அப்படியும் கூட புகழ்பெற்ற HARRYPOTTER ஹாரி/ ஹேரி பாட்டர் உச்சரிப்பை எழுத்தில் கொணர முடியாது. ஆகையால் நம்மவர் வெளி நாடுகளில் பேசும்போது நகைப்புக்குரியவர்கள் ஆகாமல் தடுக்க கம்ப்யூட்டர். மொபைல் போன் போன்றவற்றை அதே மொழியில் புழங்குவது நல்லது.. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களிடையே ஒரு சர்வே நட்த்தினால் நான் சொல்வது சரி என்பதை உணரலாம்.

5.எல்லா பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதம் (தின) ஏன் மாற்றவில்லை ?

எல்லா திராவிட கழிசடைகள் பெயரும் சம்ஸ்க்ருதம்; (நிதி) ஏன் மாற்றவில்லை ?

லண்டனில் எனக்கு இலங்கையர்கள், மலேசியர்கள் நண் பர்களாக உள்ளனர்; அவர்களுடன் கதைக்கும்போது நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை காண்கிறேன்.

*****

உங்களுக்கு ஒரு டெஸ்ட் / சோதனை

ஒரே நாளில் வெளியான இலங்கை, இந்திய, மலேசிய பத்திரிக்கைகளை எடுங்கள்; முதல் பக்கச் செய்திகளை மட்டும் பாருங்கள். ஹைலைட்டர் பேனா அல்லது சிவப்பு நிற பேனா மூலம் தமிழ் இல்லாத மொழிச் சொற்களை அடிக்கோடு இடுங்கள் ; எல்லா பாப்புலர் பத்திரிக்கைகளிலும் ஏறத்தாழ ஒரே விகிதத்தில் வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள் .

இன்னும் ஒரு சோதனை

உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பத்து நிமிடம் ரிக்கார்ட் செய்யுங்கள்; அதிசயிக்கத்தக்க அளவுக்கு வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக்  காண்பீர்கள்!

(நான் எழுதிய இந்தக் கட்டுரைக்கும் அதே கதிதான்! தமிழ் மொழி (???? !!!!!) வாழ்த்து எழுதிய மனோன்மணீய சுந்தரம் பிள்ளை போலத்தான்; அவரைப் பார்த்து சிரிப்பது போல என்னைப் பார்த்தும் சிரிக்கலாம்.)

****

கடைசியாக

நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று ஐந்து  நாட்களுக்கு நால் திசையிலும் பயணம் செய்தேன் ; 5 நாட்களிலும் தினகரன், வீர கேசரி வாங்கிப் படித்தேன்; செய்திகளைவிட நான் ஆகக் கூடிய மேலதிக அவதானம் (கவனம்) செலுத்தியது மொழிப பிரயோகம்தான்./ என் கருத்து சரியே என்பதை அவை காட்டின.

****

முடிவுரை

எல்லா நாளேடுகளும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை, ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகின்றன. அதில் தவறு இல்லை. ஆனால் பாலில் தண்ணீர் கலக்கலாம்; தண்ணீரில் பாலைக் கலக்காதீர்கள் .

இலங்கைத் தமிழ் எந்த விதத்திலும் இந்தியத் தமிழ் மொழியைவிட உயர்ந்தது இல்லை. சில நல்ல பழந் தமிழ்ச் சொற்களை கன்னடம், மலையாளம் , இலங்கை, மலேசியாவில் காணலாம். (எ .கா. அவன், இவன்,உவன் ) அதையே அளவுகோலாகக் கொண்டு அதுதான் சிறந்தது என்று சொல்லுவோரை அரை வேக்காடுகள் என்று கணக்கிற் கொள்ளுங்கள். இதற்கு மேலும் சம்சயம்/ சந்தேகம்/ஐயப்பாடு எழுந்தால் என்னுடன் கதையுங்கள் !

(கதைத்தல்– என்பது வால்மீகி ராமாயணத்தில் அடிக்கடி வரும் ஸம்ஸ்க்ருத வினைச் சொல் என்பது பலருக்கும் தெரியாது !)

******

இன்னும் கொஞ்சம் கதைக்கலாமா ? விளங்குமா ?

லண்டனில் நான் தினமும் பஸ்ஸில் கேட்கும் இலங்கைத் தமிழ் :- எங்க நிக்கற ; இதோ பஸ்ஸில் நிக்கறேன் ; வெம்பிளிலே நிக்கரென் ( ஆனால் பேசும் ஆள் பஸ்ஸில் உட்கார்ந்து இருப்பார்!! நிக்கல்ல !!!)

அவர் அப்பா மோசம் போயிட்டாரு (இறந்து விட்டார்)

நீ வெளிக்கிட்டயா ? இல்ல . வெளிக்கிடல (இந்தியத் தமிழனுக்கு கக்கூஸ் நினைவுக்கு வரும்)

ரொம்ப மணக்குது ? தள்ளிப்போ (நாற்றம் அடிக்குது)

அதான் சொன்னேனே ! குசினி அறைல இருக்கு (போர்ச்சுக்கீசிய சொல்- கிச்சன்- சமையல் அறை)

காலையில் தினமும் பான் (ரொட்டி) சாப்பிடுவேன்

அவர் என்ன பேசிட்டாரு ! (கோபத்தில் என்னை  திட்டிவிட்டார் )

அவர் (சின்னக் குழந்தை) நல்லா கதைக்கிறார் ; பொடியன் ( பெரியவன் ) வரமாட்டான் (குழந்தைகளுக்கு அவர், இவர் போடுவார்கள்; பெரியவனுக்கு அவன், இவன் போடுவார்கள்; இந்தியாவில் அப்படி அல்ல ).

*****

எல்லோரும் கிரியா CREA TAMIL DICTIONARY அகராதி வாங்குங்கள் . சுமார் 17, 000 இலங்கைத் தமிழ் சொற்கள் அதில் உள்ளன. எல்லோரும் சங்கத் தமிழ் சொல்லடைவு வாங்குங்கள் ; சங்க காலத்தில் , 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியத் தமிழன் நல்ல தமிழ் பேசினான் என்பது விளங்கும். (புரியும் என்றால் இந்தியன்; விளங்கும் என்றால்- இலங்கையன் .இயலுமா என்றால் இலங்கையன் .; முடியும் என்றால் இந்தியன்.இம்பெர்சனல் வெர்ப்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது இதையும் கற்பித்தேன் .

நான் 20 ஆண்டுகளுக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது இலங்கைத் தமிழன் கேட்ட முதல் கேள்வி:

நீங்கள் எந்தத் தமிழ் சொல்லிக் கொடுப்பீர்கள் ?

இந்தியத்  தமிழா ? இலங்கைத் தமிழா ?

என் பதில் :


தமிழ் ஒரே தமிழ்தான்; பிரிட்டனில் ஸ்காட்லாந்த்து அயர்லாந்து வேல்ஸ், இங்கிலாந்தில் பேசும் ஆங்கிலத்தில் என்ன வேறு பாடு உண்டோ அது தமிழிலும் உண்டு; எப்படி ஆங்கில எழுத்து ஒரே மாதிரி உலகம் முழுதும் உள்ளதோ அதே போல் தமிழுக்கும் எழுத்து ஒன்றே; கவலைப்படாதீர்கள்; நான் கற்பிப்பது பேச்சுத்  தமிழ் இல் லை; இலக்கியத் தமிழ்; இந்த அ டிப்படையைக்  கற்றால் உலகம் முழுதும் உள்ள தமிழ் உங்களுக்கு விளங்கும் !

–சுபம் —

 இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், கதைக்கிறேன்,

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 கோபம், சினம்(Post.13,658)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,658

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 கோபம், சினம்(Post.13,658)

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் கோபம், சினம் (க்ரோதம்) பற்றிப் பாடாத புலவர்கள் யாரும் இல்லை. நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம்/ க்ரோதம் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லிவிட்டார்; சிறைக்குச் செல்லுவோர் எல்லோரையும் வகைப்படுத்திப் பார்த்தால் காமம்க்ரோதம்லோபம் (பேராசை) என்ற மூன்றில் ஒன்றைக் காணலாம்.

கோபம் பற்றி ஷேக்ஸ்பியரும் நிறைய பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார்; அவர் அள்ளித்தூவிய தங்க மொழிகளை 37 நாடகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம் .

Come not between the dragon and his wrath –

King Lear1-1-123

சீறும் ராட்சத மிருகத்துக்கும் அதன் கோபத்துக்கும் இடையே வராதே.– கிங் லியர் நாடகம்

****

Let grief convert to anger; blunt not the heart, enrage it-

Macbeth 4-3-22

உன்னுடைய துக்கம் கோபமாக மலரட்டும்; சாணைக்கல்லில் கத்தியைத் தீட்டு; பழி வாங்கு– மாக்பெத் நாடகம்

****

I understand a fury in your words. But not the words- Othello 4-2-32

உனது சொற்களில் தீப்பொறி பறக்கிறது; ஆனால் சொற்களை புரிந்துகொள்ள முடியவில்லை – ஒதெல்லோ நாடகம்

****

Who is man that is not angry ?

Timon of Athens

கோபப்படாத மனிதன் உண்டா ?

அல்லது கோபப்படாதவான் மனிதனா?- டிமோன் ஆப் ஏதென்ஸ்

****

Come not within the measure of my wrath

The gentlemen of Verona 5-4-125

என் கோபத்துக்கு ஆளாகிவிடாதே- ஜென்டில்மேன் ஆப் வெரோனா  நாடகம்

****

My tongue will tell the anger of my heart, or else my heart concealing it will break.–The Taming of the Shrew

கொதிக்கிறது என் இதயம் ; இதோ சொல்லால் சுடுவேன் அல்லது என் இதயமே வெடித்துவிடும். —டேமிங் ஆப் தி ஷ்ரூ நாடகம்

****

Heat not a furnace for your foe so hot that it do singe yourself.

‘Henry VIII’  act 1, sc. 1, l. 140

உன் எதிரியைப் பொசுக்க, கோபப்படாதே ; அது உன்னையே சுட்டுவிடும் – ஏழாவது ஹென்றி நாடகம்

****

Anger’s my meat. I sup upon myself,

And so shall starve with feeding.

– Coriolanus, act 4, sc.2, l.53-4.

கோபம்தான் எனக்கு உணவு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவேன். பட்டினியும் சாப்பிடுவதும் மாறி  மாறி வரட்டும் (கோபத்தில் சாப்பிடாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்ளல் ) – கொரியாலனஸ் நாடகம்

****

Be wise as thou art cruel, do not press ,My tongue-tied patience with too much disdain: Lest sorrow lend me words and words express, The manner of my pity-wanting pain.-. “Sonnets”,

புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள் ; உன்னை நிந்திக்கும் எனது பொறுமையைச் சோதிக்காதே  ஒருவேளை, உள்ளத்தில் உள்ள தாங்க முடியாத துயரத்தை துக்கத்தில் கொட்டிவிடுவேன்.- தனிப் பாடல்

****

She speaks poniards, and every word stabs: if her breath were as terrible as her terminations, there were no living near her; she would infect to the north star. I would not marry her, though she were endowed with all that Adam bad left him before he transgressed.

‘Much Ado About Nothing, act 2, sc. 1, l. [257]

அவளது பேச்சு கத்தி போல என்னைக் குத்துகிறது  அவளது மூச்சு போலவே அவள் பேச்சும் இருக்குமானால் அவளுடன் வாழ்வதே கஷ்டம்;  அவளது சொற்கள் வட துருவம் வரை விஷத்தைப் பரப்பவல்லன. ஆதாமிடம் கெட்டுப்போவதற்கு முன்னால் இருந்த தூய்மை இருந்தாலும் கூட  அவளைக் கல்யாணம் கட்ட மாட்டேன்– மச் அடோ அபவுட் நத்திங்

****

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

……

“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

 செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் “

சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

அதே பாடலில் பாரதி,

“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”

. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப்  புணையைச் சுடும் — திருக்குறள் 306

பொருள் —

உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305

****

கோபம் என்னும் தீ  ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.

****

அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support

கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306

****

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.-129

****

அனுமனும் கூட கோபத்தில் இலங்கைக்குத் தீ வைத்த பின்னர் கோபத்தில் செய்த காரியத்தை எண்ணி வருந்துகிறான் . வால்மீகி அழகாகச் சொல்கிறார்:

தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்

நிருந்தந்தி  மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா

எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.

*****

க்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி

க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்

கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,

****

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்

நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்

கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,

*****

ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி

யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே

எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.

(பெங்களூர் எஸ். நாகராஜன் தொகுத்தது)

*****

அதர்வண வேதப் பாடல்

காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான்  உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே

இதற்குப் பழைய விளக்கம்:

இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

–subham—

Tags- தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 ,கோபம், சினம்.

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி—3 (Post.11,657)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,657

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி- ஷேக்ஸ்பியரும் பாரதியும்!

அதர்வண  வேதத்தில்  பூமி சூக்தத்தில் உலகிலேயே பழமையான தேச பக்தி பாடல் இருப்பதை பூமி சூக்தக் கட்டுரைகளில் கண்டோம் .தற்கால தமிழ் உலகில் தன்னிகரில்லாத கவிஞனா க விளங்கும் சுப்பிரமணிய பாரதியார் பாடிய நூற்றுக்கணக்கான தேச பக் திப் பாடல் களுக்கு அறிமுகம் தேவை இல்லை.

ஷேக்ஸ்பியரும் கூட பாரதியாரைப் போல தேச பக்தியைக் கொண்டாடுகிறார் .

*****

Shakespeare ஷேக்ஸ்பியர் சொல்கிறார்

Dear earth, I do salute thee with my hand.

Richard II 3-2-6

அன்புள்ள பூமியே , நான் என் கைகளால் உன்னை வணங்குகிறேன்

இரண்டாம் ரிச்சர்ட் நாடகம் .

****

Not that I loved Caesar less, but I loved Rome more.

Julius Caesar 3-2-21

சீசரை நான் குறைவாக நேசித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் ; ஆனால் எனது

ரோமானிய  சாம்ராஜ்யத்தை  அவரை விட  அதிகமாக நேசிக்கிறேன்

ஜூலியஸ் சீசர்  நாடகம்

****

Bleed, bleed, poor country

Macbeth 4-3-31

பரிதாபத்துக்குரிய (என்னருமை ) நாடே!  ரத்தம் சிந்து! ரத்தம் சிந்து!

மாக்பெத் நாடகம்

*****

பாரதியார் பாடல்களை ஒப்பிடுவோம்

 பாரதியாரின் தேசிய கீதங்கள்

32. சத்ரபதி சிவாஜி

(தன் சைனியத்திற்குக் கூறியது)

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!

ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

………

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்

பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!

வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை

ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;

நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;

நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

*******

பாரதியாரின் தேசிய கீதங்கள்

1. வந்தே மாதரம்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி

பல்லவி

வந்தே மாதரம் என்போம் – எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

******

வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்

சஸ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்

கோடி கோடி கண்ட கலகல நினாத கராலே

கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே

அபலா கெனோ மா நமாமி தாரிணீம்

பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்

ரிபுதல வாரிணீம் மாதரம் வந்தே மாதரம்

துமி வித்யா திமி தர்ம

துமி ருதி துமி மர்ம த்வம் ஹி ப்ராணா சரீரே

பாஹுதே துமி மா சக்தி

ருதயே துமி மா பக்தி

தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே மாதரம் வந்தே மாதரம்

த்வம் ஹி துர்கா தசப்ரஹண தாரிணீம்

கமலாம் கமலதல விஹாரிணீம்

வாணீ வித்யா தாயினீம்

நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்

சுஜலாம் சுபலாம் மாதரம் வந்தே மாதரம்

ச்யாமளாம் சரளாம்

ஸுஸ்மிதாம் புஷிதாம்

தரணீம் பரணீம் மாதரம் வந்தே மாதரம்

பாரத மாதா கீ ஜெய்

*****

வந்தே மாதரம் வந்தே மாதரம் -பாரதியார் பாடல் (தமிழில் பொருள்_

தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம்

இனிய நீர், இன்சுவைக்கனிகள்,

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய், தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய், சுகமளிப்பவளே, வரமருள்பவளே,

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள், உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள், உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள், பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள், எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ, அறம் நீ, இதயம் நீ, உணர்வும் நீ,

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்.

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே, மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே, எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே, பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே, பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

B C CHATTERJEE WROTE  VANDE MATARAM SONG.

இது போல ஏராளமான பாடல்களில் பாரதத்தாயை  வணங்கி தேசபக்தியை பாரதியார் பரப்பினார்

—SUBHAM—

TAGS- தேச பக்தி,ஷேக்ஸ்பியர், பாரதியார்,பாரத நாடு ,பார்க்கெலாம் திலகம், வந்தே மாதரம்,  தேசிய கீதங்கள், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 3

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! (Post No.13,656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.656

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! 

ச. நாகராஜன்

1907-ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் How to live 24 Hours a Day!

எழுதி நூறாண்டுகள் ஆன பின்னரும் பயன் தரக் கூடிய விதத்திலே அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலம் அறிந்தோர் நிச்சயம் படிக்காமல் இருக்கக் கூடாது.

இதை எழுதியவர் ஆர்னால்ட் பென்னட்.

80 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர் பென்னட். அவரது ‘The Old Wive’s Tale ‘ என்ற நாவல் மிகவும் பிரசித்தமானது.

மிக்க நட்புடன் நம்முடன் உரையாட ஆரம்பிப்பது போல ஆரம்பித்து வாழ்வாங்கு வாழ வழி காண்பிக்கிறார் பென்னட்.

அவர் இதோ உங்களுடன் உரையாட விழைகிறார்:-

காலை எழுந்தவுடன் உங்கள் பர்ஸில் 24 மணி நேரங்கள் போடப்படுகிறது. கூடவும் இருக்காது; குறையவும் குறையாது! அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்கவும் முடியாது. உங்களுக்கே சொந்தமானது! உலகில் உள்ள மற்ற யாருக்கும் கூட இதை விட அதிகமாகவோ அல்லது குறைத்தோ இது தரப்படுவது இல்லை!!

இதை வீணாக ஆக்கி விட்டால் உங்களுக்குத் தண்டனையும் இல்லை; வீணாக்கினாலும் கூட மறு நாள் அதே அளவு தரப்படுகிறது.

இந்த 24 ,மணி நேரத்தால் அழிவற்ற உங்கள் ஆத்மாவை பரிணமிக்க வைக்கவும், ஆரோக்கியத்தை மேம்பட்ட நிலையில் அடையவும், இன்பம் துய்க்கவும், பணம் பெறவும், திருப்தி அடையவும் செய்ய முடியும்!

ஒரு நாளைக்கு உள்ள 24 மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற கடினமான காரியத்தில் உள்ள சிரமங்களை முதலில் நீங்கள் உணர வேண்டும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய தியாகங்களையும், முடிவற்ற முயற்சியையும் முதலில் அறிய வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். 24  மணி நேரத்தின் செலவுத் திட்டம் என்ன?

எட்டு மணி நேரத் தூக்கம்! எட்டு மணி நேர வேலை! ஓய்வு பெற்று புத்துணர்ச்சி பெற தூக்கம்! வயிற்றுப்பாடுக்கு வேலை!!

மீதி இருக்கும் மூன்றில் ஒரு பங்கான எட்டு மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் ஒரு வெறி உங்களுக்கு இல்லை என்றால் உங்களால் எப்படி முன்னேற முடியும்?

சைனா பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் இன்னொரு பெட்டியைப் போடுவது போல ஒரு நாளைக்குள் இன்னொரு நாளை அடைக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்!

போகட்டும். காலையில் எழுந்து அலுவலகம் செல்ல புகைவண்டியில் அமர்ந்து நீங்கள் செய்தித்தாளை ஒரு நாளைக்கு 124 மணி நேரம் இருக்கும் இன்னொரு கிரகவாசி போல மிக மெதுவாக ஓய்வாகப் படிக்க முனைகிறீர்கள். இந்தக் காலை நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட என்னால் முடியாது! ஒரு அரை மணி நேரத்தை இதில் ஒதுக்கி விடுங்கள். அப்படி என்றால் எப்போது பேப்பர் படிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். மதியம் உணவு இடைவேளையின் போது அதை வைத்துக் கொள்ளலாமே!

சரி, மாலை வீடு திரும்பியவுடன் களைத்துப் போய் நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் மனைவி, ‘என்ன வெளுத்துப் போய் வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி உங்களுக்குக் கொறிக்க ஏதேனும் தருவதை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.

நீங்கள் நிஜமாகவே வெளுத்துப் போய் வரவில்லையென்றாலும் அவள் அப்படிச் சொல்வது இதமாகத் தான் இருக்கும்!

அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வான அரட்டை, நண்பர்களுடன் பேச்சு!

அட, கனவு போல நேரம் கரைந்து விட்டதே! இதில் என்ன தப்பு என்கிறீர்களா? தப்பே இல்லை.

ஆனால் இந்த மாலை நேரத்தில் இப்படிப்பட்ட மணிகளில் ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா என்ன?

வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஏழாம் நாள் முற்றிலும் உங்கள் கேளிக்கைக்காக ஒதுக்கி விடுவோம்.

ஆக, காலை வேளைகளில் ஆறு நாட்களில் ஒரு அரை மணி நேரம் வீதம் மூன்று மணி நேரமும் மாலை நேரங்களில் மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் வீதம் நான்கரை மணி நேரமும் கொஞ்சம் ஒதுக்கி விடுங்களேன்!

இந்த 450 நிமிடங்கள் தான் உங்களின் வாராந்திரக் கோட்டாவாகத் தரப்படும் 10080 நிமிடங்களில் முக்கியமானவை!

உங்கள் நேரக் காட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முனைவதே ஒரு பெரிய விஷயம் தான்!

இதை வைத்து என்ன செய்வது என்கிறீர்களா? சொல்கிறேன், பொறுங்கள்.

காலை அரை மணி நேரம் இருக்கிறதே, அதை  முதலில் பார்ப்போம். வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது எதையேனும் பற்றி ஒருமுகப்பட்ட மனதுடன் நினையுங்கள். பத்தடி தூரம் நடக்கும் முன்னரே உங்கள் மனம் இன்னொரு பொருளுக்குத் தாவி விடும். கவலை வேண்டாம். அதை மீட்டுக் கொண்டு வந்து முதலில் நினைத்த பொருளுக்குத் திருப்புங்கள். எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், தீர்மானித்ததைப் பற்றி ஒருமுகப்பட்டு சிந்தியுங்கள். இந்த மனப்பழக்கம் எங்கே நீங்கள் இருந்தாலும் சரி, மனதின் மீது உங்கள் ஆதிக்கத்தை நாள் முழுவதும் செய்ய வைத்து விடும். மனம் தளரவே தளர வேண்டாம்!

மனதை ஒருமுகப்படுத்துவது என்ற இந்த வித்தை பியானோவின் கீ போர்ட் மீது கை வைப்பது போலத் தான். நாள் செல்லச் செல்ல அதன் விஸ்தீர்ணம் எங்கெங்கோ நீங்கள் சஞ்சாரம் செய்யும் போது தான் புரியும்!

இனி மாலை நேரத்திற்கு வருவோம். இருக்கும் நான்கரை மணி நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.

இலக்கியம் பிடிக்கவில்லை என்பதனால் அதனுடைய சிறந்த மாற்று, சோம்பேறித்தனமாக சும்மா இருப்பது தான் என்று நினைத்து விடாதீர்கள்!

கலைகளில் எவ்வளவோ இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் கச்சேரிப் பிரியர் என்று வைத்துக் கொள்வோம். கச்சேரியில் பீத்தோவனின் சிம்பனியை ஒருவர் இசைப்பதை நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள்! ஒருவேளை ‘நன்கு கச்சேரியை ரசிப்பது எப்படி’ என்ற நூலை மட்டும் நீங்கள் படித்துக் கற்றுக் கொண்டால் சங்கித ஞானத்தை மேம்படுத்திக் கொண்டால் – உங்களின் அடுத்த கசேரி விஜயம் எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்! உங்கள் ரசனையே மாறி விடும். இதே போலத் தான் நீங்கள் ஓவியப் பிரியர் என்றால் நல்ல ஓவியத்தைப் பார்ப்பது எப்படி என்பதையும் அல்லது நீங்கள் கட்டிடப் பிரியர் என்றால் கட்டிடக் கலை நுட்பங்களை எப்படிப் பார்ப்பது என்பதையும் கற்கலாமே!

கலை பெரிது தான்; ஆனால் அத்தோடு காரண- காரிய விளைவு அதை விடப் பெரியது! அதை நீங்கள் சற்று ஆழ்ந்து படிக்க முயல வேண்டும்.

நீங்கள் வங்கியில் ஒரு க்ளார்க் தான்! அதனால் இலக்கியமோ அல்லது இசையோ பிடிக்காமல் இருக்கலாம்! ஆனால் முழு வாழ்க்கை என்னும் நிலைக்களம் தனது ஏராளமான சீன்களில் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. அதை உற்றுப் பார்த்து அனுபவிக்கலாமே!

நீங்கள் இலக்கியப்பிரியரா? நல்ல கவிதையை அனுபவிக்கலாமே!

கவிதை வேண்டாம் என்றால் சரித்திரமும் தத்துவமும் இருக்கவே இருக்கின்றன!

ஆனால் எவ்வளவோ பேர் எத்தனையோ மணி நேரங்களில் எவ்வளவோ பக்கங்களைப் படித்துக் குவிக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டுவது படித்ததைப் பற்றி ஒரு 45 நிமிடங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! படிப்பது மெதுவாக ஆகி விடுமே என்று பயப்படாதீர்கள்!

இலட்சியத்தை விட்டு என்னவோ செய்கிறோமே என்று நீங்கள் எண்ணும் போதே திடீரென்று ஒரு நாள் அழகிய மலை உச்சி நகரத்தில் இருப்பதைக் காண்பீர்கள்!

இப்படி அற்புதமான நேரங்களிலே அதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னும் சில இருக்கின்றன!

சற்று நகைச்சுவை உணர்வு, சேணை பூட்டிய குதிரை போல ஒரே பக்கமே பார்க்காமல் பரந்து விரிந்த பார்வை, அதிக வேகமாக போகாமல் இருப்பது இவற்றையும் நீங்கள் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

கடைசியாக ஒன்றே ஒன்று! எல்லாம் சரி என்று ஆரம்ப சூரத்தனமாக இவற்றை வெறியோடு ஆரம்பித்து அப்புறம் பாதியில் விடாதீர்கள்! மெதுவாக ஆரம்பித்தாலும் தளர் நடை பயின்றேனும் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.

உங்கள் லட்சியம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ வேண்டும் என்பது தானே!

**

நிலாச்சாரல்’ இணைய தள இதழில் வெளியான கட்டுரை.

Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)

Picture of Shakespeare 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,655

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)

It is true Great Men think alike! Here are some comparative poems on Patriotism.

Shakespeare

Dear earth, I do salute thee with my hand .

Richard II 3-2-6

****

Not that I loved Caesar less, but I loved Rome more.

Julius Caesar 3-2-21

****

Bleed, bleed, poor country

Macbeth 4-3-31

****

Bharati on Patriotism

Let us compare it with the great poet Bharati

Vande Mataram we will sing!

These words throughout our land shall ring!

Vande Mataram we will say! Motherland ,hail!  To you we pray!

****

This is the nation  whence wafted  to the  world

The fame of heroes through minstrels matchless!

This is the nation where flourished mighty kings

And saints blemishless, dharma incarnate!

this nation dubbed the ignoble women

who bore not heroes, as nullipara! Ancient is Bharat

and you her children

Forget not Bharat is the tilak of earth

You her children ; forsake this thought .

****

Vande Mataram, Vande Mataram

Vande Mataram Vande Mataram Vande Mataram!

In Arya land men and women

Invoke this brave mantra ! Amen

Mother Bharat Mayou Flourish

You are our refuge and our life

Jaya Jaya Bharat! Jaya Jaya Bharat!

Jaya Jaya Bharat! Jaya Jaya ! Jaya Jaya !

xxx

There are scores of patriotic poems in Bharati Songs Book

Vande Mataram! =  Worship Our Motherland.

(Muslims refused to sing these lines giving a severe blow to Mahatma Gandhi)

****

Oldest Patriotic Song in the Vedas

One would be wonderstruck to read the world’s oldest and longest patriotic song in the Atharva Veda. Atharva Veda’s date is only conjectural and it was compiled earlier than 1000 BC. It is amazing to find a very long patriotic song in praise of motherland (earth) in the Veda. Greeks have not even started writing their first book then. Tamil’s oldest book came 1000 years after Atharva Veda. Moses started issuing Ten Commandments around that date. In such a remote period Hindu thinking has reached its pinnacle!

“ Sacred is the earth (motherland). It not only nurtures that which is past and all the objects of the present, it bears the seed of the future as well. Such is our great motherland.

“ Our earth (motherland) is populated with learned men. It is populated by those who are inferior, those who are average and those who are superior. But all such people forget their differences and live together in unity and friendship. This is the land where we will perform deeds and attain fame. This is the land where our intelligence prospers.

“ In our motherland can be found enterprising and hard working farmers and artisans. In every direction that one glances, one finds fields of rice, wheat and other grains. Our motherland nourishes different forms of life. It provides us with cows, food grains and other forms of sustenance.

“The famous warriors of yore performed valorous deeds here. In this land the learned and the brave ones conquered the violent demons.

 “Our earth/motherland is the nurturer. In it can be found gold, silver, diamonds, emeralds and other gems. Nuggets of gold and all sorts of objects, all forms of vegetation, and all forms of living beings can be found in our motherland. Our motherland is the best country of all.

“ In the beginning, this land was immersed in the water of the ocean. Vast is the expanse of this land. Its heights reach up to heaven.

“ In this land to be found learned mendicants who roam in every direction.  Just as the water attains same level everywhere, these hermits look upon all with equal favour.

“ The Ashvinis look after this land of ours. Brave warriors have measured the length and breadth of our motherland

“O my earth/ Motheland! May the mountains and the snow clad peaks that can be found here NOT bring you unhappiness.

“You are my mother. I am the son of the earth.  The water which rains down and nourishes is my father. My I be preserved.

“ In this land the Vedas are revered in every direction. The righteous ones are worshiped here and the land is uplifted through the performances of sacrifices. Wonderful are the words of wisdom that have been uttered in this land.

“ O my Motherland! All of us are your subjects. May all of us be gifted with sweet speech. May we live together in harmony. May trees and plants grow on you in abundance.

 “This land is the mother of all trees, shrubs, plants and creepers. It is here that truth, learning, bravery and righteousness flourish. This land will bring us welfare and happiness. May we always serve our motherland.

“O, Motherland! This is the place where we all live in harmony. May you be great and firm. May brave warriors protest you with their valour and intelligence from enemies. May we be enriched. May we prosper.


May we not cause unhappiness to others when we are travelling on this land.

This is the land where the search for the god is made. This is the land that the god has blessed.

May my motherland grant us the riches that we desire. The inhabitants of this land sing and dance. The cities in my motherland have been built by the gods.

“ O  earth (my Motherland)! Grant us wisdom so that we can ensure our welfare. May we be learned all the time. May we prosper in your midst.

 ****

Atharva Veda Kanda 7 also got a hymn on the motherland.

“Heaven is in the motherland. The motherland is our mother. it is our father and son”.

(I have given only half of the verses. It goes on and on about the glory of our holy land. It is full of positive thoughts. It praises nature at length. We must replace our National Anthem “Jana Gana Mana” with the abridged version of this Vedic hymn!!)

****

Swami Vivekananda on Patriotism

·         I believe in patriotism, and I also have my own ideal of patriotism. Three things are necessary for great achievements. First, feel from the heart. What is in the intellect or reason? It goes a few steps and there it stops. But through the heart comes inspiration. Love opens the most impossible gates; love is the gate to all the secrets of the universe. Feel, therefore, my would-be reformers, my would-be patriots! Do you feel? Do you feel that millions and millions of the descendants of gods and of sages have become next-door neighbours to brutes? Do you feel that millions are starving today, and millions have been starving for ages? Do you feel that ignorance has come over the land as a dark cloud? Does it make you restless? Does it make you sleepless? Has it gone into your blood, coursing through your veins, becoming consonant with your heartbeats? Has it made you almost mad? Are you seized with that one idea of the misery of ruin, and have you forgotten all about your name, your fame, your wives, your children, your property, even your own bodies? Have you done that? That is the first step to become a patriot, the very first step. I did not go to America, as most of you know, for the Parliament of Religions, but this demon of a feeling was in me and within my soul. I travelled twelve years all over India, finding no way to work for my countrymen, and that is why I went to America. Most of you know that, who knew me then. Who cared about this Parliament of Religions? Here was my own flesh and blood sinking every day, and who cared for them? This was my first step.

·         Our sacred motherland is a land of religion and philosophy — the birthplace of spiritual giants — the land of renunciation, where and where alone, from the most ancient to the most modern times, there has been the highest ideal of life open to man.

·         The only religion that is fashionable is patriotism.

·         The present enthusiasm is only a little patriotism, it means nothing. If it is true and genuine, you will find in a short time hundreds of heroes coming forward and carrying on the work. Therefore, know that you have really done all, and go on.

·         Whether you believe in spirituality or not, for the sake of the national life, you have to get a hold on spirituality and keep to it. Then stretch the other hand out and gain all you can from other races, but everything must be subordinated to that one ideal of life; and out of that a wonderful, glorious, future India will come — I am sure it is coming — a greater India than ever was. Sages will spring up greater than all the ancient sages; and your ancestors will not only be satisfied, but I am sure, they will be proud from their positions in other worlds to look down upon their descendants, so glorious, and so great.

·         You must not depend on any foreign help. Nations, like individuals, must help themselves. This is real patriotism. If a nation cannot do that, its time has not yet come. It must wait.

–Subham—

Tags:- Bharati, Tamil Poet, Patriotism, Shakespeare, Swami Vivekananda, Oldest Patriotic song, Atharva Veda, Bhumi Suktam, Vande Mataram

London Swaminathan Article Index for August 2024 (Post No.13,654)

London Swaminathan in India; April 2024 at Thiruvananthapuram Temple , Kerala.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,654

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Index No.141

Mirror in Viveka Chudamani Tirumular, R K Paramahamsa, Tolkappiar; Research Notes -28 (Post.13,499) 1/8/2024

Mysterious Light from Body: Sankara, Ramakrishna, Tirumular Confirm; My Research Notes on VC -37 (Post No.13,532)10/8

Ocean of Nectar; Sea of Bliss; Sankara ,Manikkavasagar , Tirumular ; Notes on VC – Part 40 (Post.13,541)13/8

Adi Sankara on Sea Mystery ; My Research Notes on VC 30 (Post.13,507)3/8

True Devotees act like Mad Men, Children, Beggars -says Sankara; My Research Notes on VC – Part 32 (Post.13,514) 5/8

Shakespeare, Ramakrishna and Sankara on Actors; My Research Notes on VC- Part 33 (Post.13,517) 6/8

Tamil Saint Tirumular is not a Siddha! He salutes Adi Sankara!! (Post No.13,521) VC-34 /8/8

Three Robbers and Three Gunas Story; My Research Notes on VC -36 (Post No.13,529) 9/8

Tiger Story in Ramakrishna, Tamil Veda Tirukkural and Tirumular; My Research Notes on VC- 38 (Post.13,535)11/8

Three Brahmins who shattered Caste Barriers (Post No.13,556) 18/8

Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42- Post.13548- 15/8

Desire is like Fire- My Research Notes on V C 29 (13,502) 2/8

Don’t talk Sankara’s Advice; My Research Notes on VC-39 (Post No.13,538)12/8

Sankara and the Most Famous Sangam Tamil Poet ; Research Notes on- VC 35 (Post No.13,525)8/8

Sankara, Valluvar, Tirumular on Fate;  My Research Notes on VC -41 (Post No.13,545) 14/8

Sankara, Tirumular and Ramakrishna on a Knotty Problem; Research Notes on VC-31 (Post. 13,511)4/8

Sankaraya Sankaraya Sankaraya Mangalam; My Research Notes on VC-43 (last part) Post.1355116/8

September 2024 Good Thoughts Calendar; Quotations on Mind (Post No.13,603) 29/8

Hanuman Worship in Assyria (Post No.13,610)30/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 1 (Post No.13,563) 20/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 2 (Post No.13,567) 21/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 3 (Post No.13,571) 23/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- Part- 4 (Post No.13,579)24/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- Part 5 (Last Part)-Post 13,585 25/8

Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)27/8

    Learn Tirumanthiram through Pictures- 1 (Post No.13,588) 26/8

   Learn Tirumanthiram through Pictures- 2 (Post No.13,600)28/8

Learn Tirumanthiram through Pictures – 3 (Post No.13,606)29/8

Learn Tiru manthiram through Pictures – Part 4 (Post No.13,614) 31/8

List of Indologists (German) 1 to 6 PDF- 23/8

London Swaminathan’s July 2024 Articles Index (Post  No.13,553)17/8

xxxxxx

Cartoons are Mirrors of Current Affairs 22 August 2024

CARTOONS ARE RECORDS OF CURRENT AFFAIRS 1182024 (11/8)

CARTOONS KEEP YOU UPTO DATE ON CURRENT AFFAIRS2882024

Cartoons Record Historical Events 1782024

CARTOONS REFLECT CURRENT AFFAIRS 582024

xxxx

President to open Hindu Conference in Guyana 2/8

Re-naming Harappan Civilization “Sindhu-Sarasvati” in NCERT textbooks is based on established scholarship: NCERT panel head Michel Danino 22/8

xxxx

Ramayana Sculptures from Indonesia- Batch 1 (Post No.13,375)

Ramayana Sculptures from Indonesia- Batch 2 (Post No.13,580) 24/8

to

Ramayana Sculptures from Indonesia- Batch 7 (last) Post No.13,604 29/8

******

TAMIL ARTICLES

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 1 (Post No.13,558) 18/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 2 (Post No.13,562) 20/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 3 (Post No.13,566) 21/8ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6 (Post No.13,578) 24/8

அனுமார் மூலம்  எனக்குக் கிடைத்த நண்பர்; ஹனுமான் சாலீஸா

விளக்கக் கதைகள் – Part 11 29/8

அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும்! கும்பகோணத்தில் அற்புத சிற்பம்! (Post No.13,583)25/8

அனுமன் சிவனின் அவதாரம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5 (Post.13,573)23/8

அனுமன் செய்த அற்புதம்- எட்டு நட்சத்திர தொகுதிகளைக் கடந்து பறந்தார் -10 (Post No.13,598)28/8

அனுமன் பறந்த வேகம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9 (Post No.13,593)2/8

காந்திஜி ஒரு ஹனுமான்:ரமணர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 8 (Post.13,587)26/8

திருமந்திரத்தில் ஓம்- ஆராய்ச்சிக் கட்டுரை எண்-42 (Post.13,503)2/8

திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44(Post No.13,537)12/8

திருமந்திரத்தில் காயத்ரீ மந்திரமும் ஓம்காரமும்  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 43 (Post No.13,519)/8

திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46 (Post No.13,555) 18/8

பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45 (Post.13,547)15/8

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் -1 (Post.13,592)27/8

to

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;PART-3 (LAST PART)- Post No.13,602

பாலம்பேட் சிவன் கோவில்- Part 22 (Post No.13,528)9/8

சங்கமேஸ்வரர் கோவில் (தெலுங்கானா) – Part 24 (Post.13,543) 14/8

சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்லுவது என்ன ?

இதோ 4 கதைகள் (Post No.13,582) 25/8

ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு செய்த அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16 (Post.13,498)1/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் நிறைவு -12 (last part) Post No.13,608 30/8

முகலிங்கம் கோவில் – Part 19 (Post No.13,509) 4/8

யதாத்ரி நரசிம்மர் கோவில் – Part 21 (Post No.13,516) 6/8

முஸ்லீகள் அழித்த, அதிசய ஆலம்பூர் நவபிரம்மா (9) கோவில்கள்– Part 23 (Post.13,540)13/8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -1 (Post 13,520) /8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)9/8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை (Post No.13,591)27/8

சிம்மாசலம் வராக லட்சுமி  நரசிம்மர் கோவில்-26 (Post No.13,569)22/8

மனம் பற்றிய 31 பொன்மொழிகள்;செப்டம்பர் 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.13,612)31/8

திராக்ஷாராம சிவன் கோவில்- Part 18 (Post.13,505)3/8

அமராவதி சிவன் கோவில்- Part 17 (Post No.13,501)2/8

ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் – Part 20 (Post No.13,513)5/8

லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும் –Part 25 (Post No13,552) 17/8

வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்;ஆந்திர கோவில்கள் – Part 27 (Post No.13,609)30/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 4 (Post No.13,570)

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்  அருமையான மருத்துவ அறிவுரைகள்-1 (Post No.13,613)31/8

—subham—

Tags- London Swaminathan, Article Index, August 2024 , Index No.141