Post No. 13,731
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பழமொழிகள் விஷயத்தில் ஸம்ஸ்க்ருதத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது தமிழ்ப் மொழி. சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும் மேலான பொன் மொழிப் பாடல்கள் உள்ளன. இவைதவிர சாணக்ய நீதி, விதுர நீதி , மகாபாரத சாந்தி பர்வம், அனுசாசன பர்வம் முதலிய நூல்களில் பல்லாயிரக் கணக்கான நீதிகள் இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகார என்ற ஒரே நூலில் மட்டும் 16,000 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் உள்ளன.
சம்ஸ்க்ருத நீதி நூல்களின் காலம் மஹாபாரத காலம் வரை செல்கிறது. இதை விதுர நீதி முதலியவற்றிலிருந்து அறிகிறோம். தமிழ் மொழியும் சளைக்கவில்லை; மஹேந்திர பல்லவன் காலத்தில். (600 CE) அப்பர் பழமொழிகளை வைத்தே ஒரு தேவாரப் பதிகம் பாடிவிட்டார், பழமொழி 400 என்ற கீழ்க்கணக்கு நூலில் மட்டுமே, சம்ஸ்க்ருத சுபாஷிதம் போல, பாடல் வடிவில் 400 பழமொழிகள் உள்ளன. கம்பனும் ராமாயணத்தில், நூற்றுக்கணக்கில் பழமொழிகளை உதிர்த்த ள்ளான். மூன்று ஆங்கிலேயர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை நமக்கு நூல் வடிவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அச்சடித்துக் கொடுத்துவிட்டனர்.
ஒரு சுவையான விஷயம் என் கண்ணில் பட்டது. லண்டன் பல்கலைக் கழக நூலகத்துக்குச் சென்ற வரம் போனேன். ஐரோப்பிய தூரக்கிழக்கு நாடுகளின் ஆசிய நாடுகளின் பழமொழிகள் என்ற நூலைப் புரட்டினேன். தமிழ் மொழி, சம்ஸ்க்ருத தேவ நாகரி எழுத்துக்களையும் கண்டு, உடனே வீட்டிற்கு எடுத்து வந்தேன் தூரக்கிழக்கு என்பது ஜப்பான், கொரியா, சீனா முதலிய நாடுகள் ; அங்குள்ள சுமார் இரு நூறு பழமொழிகளை லத்தீன் உள்பட ஐரோப்பிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஐந்து மொழிகளுடன் ஒப்பிடுவதே நூலின் குறிக்கோள். ஆயினும் போகிற போக்கில் ,தமிழ்ப் பழமொழி தொகுப்பு நூல்களிலிருந்து தமிழ் பழமொழிகளையும் பஞ்ச தந்திரம் மஹாபாரதம் நூல்களிலிருந்து சம்ஸ்க்ருத பழமொழிகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். பெரியோர்கள் சிந்தனை ஒரே மாதிரி இருக்கும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நூலில் அப்பழமொழிகளின் பின்னாலுள்ள கதைகளும் சம்பவங்களும் நாலைந்து வரிகளில் சுருக்கமாக உள்ளன. அவர்கள் சொல்லாத தமிழ்ப் பழமொழிகளையும் நான் கண்டேன்.
இதோ உங்கள் பாவைக்கு பார்……..
நமது நாட்டில் மஹாபாரதம், ராமாயணம் முதலிய நூல்களுக்கு மிகவும் பின்னால் புத்தரும் மகாவீரரும் அவதரித்தனர். அவர்களின் காலமே 2600 ஆண்டுகளுக்கு முன்னர். அதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் லாவோ ட்சே மற்றும் கன்பூசியஸ் என்ற சீன தத்துவ ஞானிகள் அவதரித்தனர். அந்த சீன ஞானிகளும் பழமொழிகளை உதிர்த்துச் சென்றுள்ளதை இந்த நூல்களின் வாயிலாகக் காணலாம்.
Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,
நல்ல “கண் பூசி” மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
—–பாரதி பாடல்
*****
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
Strike the iron while it is hot
இதற்கு இணையான பழமொழி இரும்பினை சூடாக இருக்கும்போதே அடித்து வளை என்பதாகும். இது தூரக்கிழக்கு நாடுகள் முழுதும் ஒலிக்கிறது.
இந்த சூடான இரும்பை அடிக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டினை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பயன்படுத்தியுள்ளார்.
****
இதோ ஒரு சுவையான கதை
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Constant dropping wears the stone
இதற்கு இணையான பழமொழி– சொட்டுச் சொட்டாக தண்ணீர் கொட்டினால் பாறையும் பிளக்கும் என்பதாகும் இது ஐரோப்பிய, தூரக்கிழக்கு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் உள்ளது
இதற்குப் பின்னால் சீனாவில் ஒரு கதையும் உள்ளது.
சொங்கியாங் என்ற இடம் சீனாவில் இருக்கிறது அதன் நீதிபதி சாங் குவையா அங்கு நடக்கும் கஜானா வேலைகளைக் கண்காணிக்க வந்து கொண்டிருந்தார் . அப்போது ஒரு ஊழியர் டர்பனில் (தலைப்பாகை) ‘டக்’ கென்று ஒரு செப்பு நாணயத்தை மறைத்து வைத்துக் கொண்டார். இதை பார்த்த நீதிபதி சாங் குவையா அவனை நீதி மன்றத்தில் நிறுத்தினார்.
டேய் நீ என்ன செய்தாய் தெரியுமா?
உடனேயே அவன் கத்தினான்–
ஐயா, ஒரு செப்புக்காசில் என்னய்யா வந்தது?
உடனே நீதிபதி எழுந்தார்; சிவப்பு மையில் ஒரு பிரஷ்ஷைக் தோய்த்தார் ; அவர் எழுதினார்
நாள் ஒன்றுக்கு ஒரு செப்புக்காசு !
ஆயிரம் நாளில் ஆயிரம் காசு !!
அவ்வளவுதான் அந்த ஊழியருக்கு மரண தணடணை !
இந்தியாவிலும் குப்தர் ஆட்சியில் திருட்டுக் குற்றங்களுக்கு மரண தணடனை இருந்தது இதனால் திருடர்களே இல்லை; மக்கள் வீட்டில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்குகின்றனர் என்று சீன யாத்ரீகன் பாஹியான் எழுதி வைத்துள்ளான். அதிலிருந்து வந்ததே இந்த சொட்டு நீர் பாறையையும் பிளக்கும்; எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பதாகும்.
*****
Easier said than done
சொல்லுதல் எளிது செய்வது கடினம்
வாய்ச்சொல் வீரர்கள்தான் உலகில் அதிகம். இதை இன்றும் பேஸ்புக், ட்விட்டர் ,டிக் டாக முதலிய சமூக தொடர்பு மேடைகளிலும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் காண்கிறோம். இதை நம் வள்ளுவர் தமிழ் வேதத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டார்:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்–குறள் 664
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்..
****
Do not do to others what you do not want to be done to you
மற்றவர்கள் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீயும் பிறருக்குச் செய்யாதே
மஹாபாரத விதுர நீதி யிலுள்ள இந்த ஸ்லோகம் பைபிளில் மத்தேயு சுவிசேஷத்திலும் காணப்படுகிறது
ந தத் பரஸ்ய சந்தத்யாத் ப்ரதிகூலம் யதாத்மன: — 7-17, விதுர நீதி
தஸ்மாத் தர்ம ப்ராதீனேன பவிதவ்யம் யதாத்மனா
ததா ச சர்வபூதேஷு வர்திதவ்யம் யதாத்மனீ
–மஹாபாரதம், சாந்தி பர்வம், 167-9
வள்ளுவனும் தமிழ் வேதத்தில்
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் – குறள் 318
xx
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.–குறள் 96:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமையான சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.
xx
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் – குறள் 314
This book is full of Tamil proverbs
TO BE CONTINUED…………………………………
TAGS- மஹாபாரதம், விதுர நீதி, குறள், பாரதி பாடல் , உலகம் முழுதும் , தமிழ்ப் பழமொழிகள் -1, சம்ஸ்க்ருத பழமொழிகள், சுபாஷிதம்