Post No. 13,730
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நலுங்குப் பாட்டு
அனுப்பியவர் திருமதி தயா நாராயணன் ,
Mrs Daya Narayanan from London.
எனது நல/லுங்குப் பாடல் தொகுப்புக்கு லண்டன் திருமதி தயா நாராயணன் கீழ்கண்ட பாடலை அனுப்பி இருக்கிறார். மேலும் நலங்குப் பாடல்கள் இருந்தால் எழுதி அனுப்பும்படி நமது வாசகர்களை வேண்டுகிறேன் ; இவைகள் அழிந்து வருகின்றன; நாம், எதிர்காலத்துக்கு அவைகளைப் பாதுகாத்து அளிப்போம்.
சம்பந்திப் பாட்டு
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்
யானை ரூபமும் எலி வால் பின்னலும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே
ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்
ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிகடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.
*****
நலங்குப் பாட்டு
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ராஜ கோபாலா
கனகாம்பரதாரா கெளஸ்துப ஹாரா
கவச குண்டல தாரா
வனமா தாரா வாசுதேவா காலி
வைகுண்ட ஜகன்னாதா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
பக்தவத்சல பரமதயாளா
பரிபூரணானந்தா நித்யானந்தா
உத்தம புருஷா
சித்தடி நலுங்கிடரே
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
நலுங்கு நிகழ்ச்சிகளில் பெண் வீட்டுக்காரர்கள் மணப் பெண்னைப் பாராட்டியும் மணமகனைக் கிண்டல், கேலி, பரிகாசம் செய்தும் பாடுவார்கள் .
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மணப் பெண்னைக் கிண்டல், கேலி, பரிகாசம் செய்தும் மணமகனைப் பாராட்டியும் உயர்த்தியும் பாடுவார்கள் .
அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18 வயதுக்குள்ளேயே திருமணங்கள் நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.
இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.
Previous Articles
நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி (Post No.7666)
Post No.7666
Date – 8 March 2020
.
நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . ரிக் வேதத்திலும் நலுங்குப் பாடல்கள் இருக்கின்றன. அது பற்றி தனியாக எழுதுகிறேன். இதோ லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்த பழைய நலுங்குப் பாடல் புஸ்தகம். வாசகர்களும் காமெண்ட் பத்தியில் நலுங்குப் பாடல்களையும் அது பற்றிய தகவல்களையும் கொடுத்தால் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்தரும்
நூலின் தலைப்பு – நூதன நலுங்குப் பாட்டு
ஆண்டு- 1937
வெளியிட்டவர்- சென்னை திருவொற்றியூர் நாக்கை சரவண முதலியார்
அவர்களது கலை மகள் பிரஸ்
மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம் (Post No.7688)
Post No.7688
Date– 13 March 2020
நலுங்குப் பாடல்கள் ஆராய்ச்சி என்ற தலைப்பில் மார்ச் எட்டாம் தேதி இங்கு ஒரு கட்டுரை வெளியிட்டேன். இதோ பிரிட்டி லைப்ரரியில் கிடைத்த மேலும் ஒரு நூல்
நூலின் பெயர் – கல்யாண கீதம் எழுதியவர் – குன்றத்தூர் அரங்காச் சாரியார்.
ஆண்டு -1906
மொத்த பக்கங்கள் 26
PLEASE SEND ME MORE NALANGU WEDDING SONGS.
—subham—
Tags– நலுங்குப் பாட்டு , நலங்கு, சம்பந்திப் பாட்டு , ஆராய்ச்சி