தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-9 (Post No.13,738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,738

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கழுதை -தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்- Part 9

தமிழ் மொழியில் கழுதைகள் பற்றிய பாடல்கள் குறைவு ஆனால் பழமொழிகள் அதிகம் .ஸம்ஸ்க்ருத   மொழியில்  கழுதைகள் பற்றி பாடல்கள் உள்ளன  ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கழுதைகள் பற்றிய விஷயங்கள் அதிகம் இல்லை.

ஆயினும் நாய் போலவே கழுதையும் கீழ்ஜாதி பிராணிதான் ; ஆகையால் திட்டுவதற்கே அவை பயன்படுகின்றன . மூளையே இல்லாமல் சேவை மட்டும் செய்யும் சாதுவான பிராணி. ஆயினும் அதன் ‘பால்’ மிகவும் விலை மதிப்புடையது ; அதை பற்றி அந்தக் காலத்தில் யாருமே கதைக்கவில்லை . பாவம்தான் கழுதைகள்!

பாடகர்கள் கர்ண கடூரமாகப் பாடினால் கழுதையுடன் ஒப்பிட்டு அவமானப்ப டுத்துகிறார்கள்

நாயே! என்று திட்டினால் 100 சதவிகித வசவு; கழுதையே என்று திட்டினால் 50 சதவிகித வசவுதான்.  காரணம் நாய் போல கடிக்காது; அதற்காகப் பக்கத்தில் போய்விடாதீர்கள் எட்டி உதைத்து விடும்.. நீங்கள் மண்ணைக் கவ்வுவீர்கள்.

முதலில் ஷேக்ஸ்பியர் சொன்ன சில விஷயங்களைக் காண்போம் பின்னர் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழ்க் கழுதைப் பழமொழிகளையும் காண்போம் .

“I Find the Ass in Compound with the Major Part of Your Syllables” …Coriolanus

Act 2, Scene 1

கொரியலேனஸ் நாடகத்தில் ஆஸ் ASS  என்பதை ஷேக் கெட்டவார் த்தையாகப் பயன்படுத்துகிறார்  மனிதனின் மல வாய், buttocks , backside என்ற பொருளில் பயன்படுத்துகிறார் 

****

BOTTOM

Nothing, good monsieur, but to help Cavalery Cobweb to

scratch. I must to the barber’s, monsieur, for methinks

I am marvelous hairy about the face. And I am such a

tender ass, if my hair do but tickle me, I must scratch.

TITANIA

[Waking] My Oberon, what visions have I seen!

Methought I was enamored of an ass.

—–A Midsummer Night’s Dream

Act 4, Scene 1

மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் கழுதைத்தலை அணிந்த கதா பாத்திரம் வருகிறது  அதன் மீது காதல் கொண்டதாக ஒரு வசனமும்  முகம் முழுதும் முடி வளர்ந்ததால் அவை கிசுகிசு மூட்டுவதாகவும் அதனால் சொரிந்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் வசனம் வருகிறது

*****

DOGBERRY

74. suspect: malapropism for “respect.” 74   Dost thou not suspect my place? dost thou not

75-76. O that he were here to write me down an ass!: —Dogberry wishes that the Sexton had been there to record, in writing, that Conrade called him an ass, so that Conrade would be sure to be punished for that offense. 75   suspect my years? O that he were here to write me

 76   down an ass! But, masters, remember that I am an

 77   ass; though it be not written down, yet forget not

 78   that I am an ass. No, thou villain, thou art full of

79. piety: malapropism for “impiety.”

 79   piety, as shall be proved upon thee by good witness.

 80   I am a wise fellow, and, which is more, an officer,

 81   and, which is more, a householder, and, which is

82. as pretty a piece of flesh: i.e., as fine a mortal man.

83. go to: —This is an expression of scorn, like current expressions such as “go to hell” or “get out of here.” 84-85. a fellow that hath had losses: —Dogberry thinks he should be respected because he has known hardship. 86. handsome: fitting, impressive. 82   more, as pretty a piece of flesh as any is in

 83   Messina, and one that knows the law, go to; and a

 84   rich fellow enough, go to; and a fellow that hath

 85   had losses, and one that hath two gowns and every

 86   thing handsome about him. Bring him away. O that

 87   I had been writ down an ass!     

Much Ado About Nothing

Act 4, Scene 2

மச்  அடோ அபவுட் நத்திங் நாடகத்தில் கழுதை போல உழைப்பவன் என்ற பொருளில் வருகிறது . செருப்புத் தோலாக உழைத்தேன் நான் –என்று சொல்லுவது போன்ற வசனம் இது .

மொத்தத்தில் ஆசனவாய் என்றும்  பாரம் சுமப்பவன் போல உழைப்பவன் என்றும் மட்டமான பொருளில்தான் வருகிறது.

******

இதோ சில சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்

நாய், சேவல், தூக்கில் தொங்கவிடும் வெட்டியான்

மூன்றும் தீண்டத்தகாதன;

ஒட்டகமும் கழுதையும்  அப்படியே;

 ஆகையால் அவைகளைத் தொடாதே

பஞ்ச தந்திர ஸ்லோகம்

தெரிந்தும் கழுதையை ஒருவன் தொட்டால்

அறியாமல் தொட்டாலும் சரி

அவன் புண்ணிய ஸ்னானம் செய்தாக வேண்டும்;

ஆடையோடு குளித்தால்தான்

தீட்டு விலகும்– பஞ்ச தந்திர ஸ்லோகம்

*****

கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்

ருஷ்டஹ ச  பத்ப்யாம் மாம்  ஹந்தி  மூர்கபூஷா பலம் த்விதம்

கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.

To be continued………………………….

–subham–

Tags- தமிழ் ஸம்ஸ்க்ருதக் கழுதைகள், ஷேக்ஸ்பியர் கழுதைகள் –9, கழுதை ,தமிழ், சம்ஸ்க்ருத, நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன் மொழிகள்- Part 9,

Leave a comment

Leave a comment